Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விலகாதே உயிரே

Vilagaathae Uyirae 3

ரம்யா படித்து முடித்து மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் இப்பொழுது அவள் கம்ப்யூட்டர் கிளாஸ் தினமும் சென்று கொண்டு வருகிறாள் ..

அந்த இடத்தில் தான் அவள் வேறொரு ஆணுடன் பேசுவதை இவன் பார்த்தான் தேவா இதையெல்லாம் தன் அப்பாவிடம் கூறலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டே வண்டியில் வந்தான்…..

சரி எதற்கும் தங்கை ரம்யாவிடம் கேட்போம் அவள் என்ன கூறுகிறாள் என்று அப்படி யோசித்து விட்டு இரவு வீடு வந்து சேர்ந்தான்….

மொட்டை மாடியில் தீபாவின் அழைப்பிற்காக அவன் காத்துக் கொண்டிருந்தான். அப்போது அவள் தங்கை வந்தாள்…



Advertisement

என்ன அண்ணா….??

இன்னைக்கும் அண்ணி போன் பண்ணுவாங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கியா?? அப்படி என்று கேட்டாள்

இல்லை உன்னிடம் தான் பேச வேண்டும் ரம்யா என்று தேவா சொன்னான்…

Advertisement

சொல் அண்ணா என்ன ஆச்சு ???

Advertisement

இன்று நீ பஸ் ஸ்டாப்பில் யாருடன் பேசிக்கொண்டிருந்தாய்?? யாரது?? என்று தேவா கேட்கவும் ரம்யா திருத்திரு என்று முழிக்க அவள் முழி சரியில்லை…

அண்ணா அது வந்து  எங்க ஜூனியர் காலேஜில் படித்தார்கள்….

அப்புறம் சொல் ஏன் நிறுத்தி விட்டாய் என்ற தேவா கேட்டான்…

Advertisement

ம்ம்….. ஜஸ்ட் பிரண்ட்ஸ் அண்ணா என்றாள்

நடு ரோட்டில் ஒரு ஆணுடன் கையைப் பிடித்து பேசிக் கொண்டிருக்கிறாய் கேட்டால் ஃபிரண்ட்ஸ் என்கிறாய் என்ன ரம்யா இதெல்லாம் இன்று கோபமாக கத்தினான்….

ரம்யா அழுதுவிட்டாள்…..

சரி அழாதே ரம்யா போ என்று தேவா கூறினான்…

சரி தங்கையின் நடவடிக்கைகள் ஏதோ மாற்றத்தை கண்டுபிடித்தான் தேவா..ஆனால் அதை அவளிடம் நேரில் கேட்டால் அழுகிறாள் என்று பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்..

பிறகு அவன் சிறிது நேரம் தீபாவிற்கு ஃபோன் பண்ணி பேசிக்கொண்டு இருந்தான்…

அப்போது தீபா கேட்டான் இவ்வளவு நேரம் எனக்காக வெயிட் பண்ணு நீங்களா நான் கால் பண்ணுவேன் என்று????

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று தேவா கூற அவள் கோபித்துக் கொண்டாள்…

போங்க… உங்களுக்காக நான் இன்னும் சாப்பிட கூட இல்ல உங்க கிட்ட பேசிட்டு தான் சாப்பிடணும்னு கால் பண்ணி இருக்கேன்.. நீங்க இப்படி சொல்லிட்டீங்க இல்ல நான் கோபமா போன வைக்கிறேன்..

😏😏😏😏…..

ஏய் சாரி செல்லம் நான் சும்மாதான் அப்படி சொன்னேன்

இமைக்காத நொடியெது..
உன்னை நினைக்காத பொழுதெது???
காதலுக்கு காரணம் கேட்பவளே
காத்திருப்பின் கவலை உனக்கு புரியுமா ??

நீ அழைப்பாய் என்று இவ்வளவு நேரம் உனக்காக தான் நான் காத்துக் கொண்டு இருந்தேன் அது புரியுமா உனக்கு என்று தேவா தீபாவிடம் கேட்டான்….

சாரிங்க அண்ணன் இருந்தான் ..அவன் முன்னாடி போன் ரொம்ப யூஸ் பண்ண மாட்டேன் அப்படி என்று தீபா கூறினாள்….

அண்ணனுக்கு அவ்வளவு பயமா என கேட்க???

இல்லை என் அண்ணன் மிகவும் நல்லவன் ஆனால் அவனுக்கு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை வைத்திருப்பான் அவன் கூறுவதும் சரிதான் …

யாரும் என்னை தப்பாக கூறி விடக்கூடாது என்று அவன் அப்படி சொல்லுவான் அவன் சொல்வது எனக்கு பழகிப்போச்சே சிறுவயதில் இருந்து என்று தீபா கூறினாள்….

அண்ணனுக்கும் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்… நமது திருமணம் முடிந்தவுடன் அண்ணனுக்கு முடிக்க வேண்டும் என்று அப்பா கூறியிருக்கிறார்கள் என அவள் சொன்னாள்…

சரி நல்ல அண்ணன் வந்து சேர்ந்தான் உனக்கு நான் எல்லாம் உன்னை எப்படி கண்டிஷன் போட்டு அடக்க மாட்டேன் என்று சொன்னான்…

உடனே தீபாவுக்கு கோபம் வந்துவிட்டது.. எங்க அண்ணனை பற்றி எதுவும் பேசாதீர்கள் அவன் என்னை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தான். அவனும் எனக்கு இன்னொரு அப்பா மாதிரி தான் இன்னொரு முறை அவனைப் பற்றி நீங்கள் தப்பா பேசினால் நான் உங்களுடன் பேசவே மாட்டேன் என்று கோபமாக கூற….

சரி மா அமைதியா இரு…
நீ
கோபப்பார்வை வீசினாலும் !
கோபப்பட்டு திட்டினாலும் !
என்னை குழந்தையாய்
மாற்றிக்கொள்கிறேன் !

அம்மாவின் கோபம்
அழகு மழலை
அறியாது அல்லவா !

அது போல் நீ கோவப்பட்டாலும் நான் உன் மீது கோபப்பட மாட்டேன் உன்னை அன்பாக பார்த்துக் கொள்வேன் என்று தேவா சொன்னான்………

அப்படியே தேவா அவளுடன் நேரம் போனது தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தான்… பிறகு தீபா நாளை பேசுகிறேன் என்று என்று சொல்லி மொபைலை கட் பண்ண போனாள்…

ப்ளீஸ் பேசு இன்னும் கொஞ்ச நேரம்…

உன்னை நேரில் பார்த்தாலே எனக்கு உன் கண்ணை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது…

நீ உன் பார்வையால் பேசும் வார்த்தைகளை என் மனதில் ஈட்டி போல் குத்தி கிழிக்கின்றது…..

வளைகுடா கடல் பயணம்
கள்வர்களால் ஆபத்தானது தான் ..
ஆனால் உன் கடை விழியை கடக்கும் ஆபத்தில் ஒப்பிட்டால் அது பத்தில் ஒரு பகுதியே இல்லை….

காந்தம் போல் என்னை இழுத்து உன்னிடம் கொண்டு வந்தது உன் கண்களே…..

என்று தேவா கூறிக்கொண்டே போக….

போதுங்க நாளை பேசுகிறேன்…. அப்படி என்ற தீபா கூறினாள்….

சரி போ உனக்கு என்னிடம் பேச வேண்டும் என்று ஆசையே இல்லை…😡😡😡😡

அப்படி என்று கோபித்துக் கொண்டான்….

உடனே தீபா….

தேவா…

நாட்குறிப்பின் நடுவில் இருக்கும் மயிலிறகைப்போல உங்கள் நினைவுகள்,

அழகான அடையாளமாக இருக்கிறது என் குறிப்பில்……

நான் எப்படி உங்களிடம் பேச பிடிக்கவில்லை என்று சொல்லுவேன் ரொம்ப நேரம் ஆகிவிட்டது அதனால் தான் பார்க்கிறேன் என்று சொன்னேன்….

நாளை என்னை பார்க்க வராதீர்கள் தினமும் வந்தால் யாராவது பார்த்து தவறாக நினைப்பார்கள் என்று அவள் கூறினாள்…..

உன்னை பார்க்காமல் நான் எப்படி இருப்பேன்…..

பாரதியார் மட்டும் உன்னை பார்த்திருந்தால்,

பார் “ரதி” யார்
என்று வினவி இருப்பார்…..

அவ்வளவு அழகு நீ…..என்று அவன் கூற…..

அவளுக்கோ வெட்கம் கலந்த புன்னகை……😚😚😚😚

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!