Skip to content
Post Views: 12,310
பொழியும் மேகம்!…
அத்தியாயம் 9
நர்மதவால் கணவன் செய்த காரியத்தை ஏற்று கொள்ளவே முடியவில்லை. அத்தோடு தன் வலியை அவன் புரிந்து கொள்ளவும் இல்லை என்பது இன்னும் வேதனையை கொடுத்தது.
அவன் போனில் இருந்த அனைத்தையும் அவசரமாக அழித்தாள். அது நிரஞ்சனுக்கு அவ்வளவு கோபத்தை கொடுத்தது. படித்து முட்டாளாக இருந்து கொண்டு, தன் செயலையும் குற்றம் சொல்கிறாளே…
Advertisement
“நர்மதா… முட்டாள்…” கத்தினான்.
“முட்டாள் தனம் பண்ணியது நீங்க தான். கீழ இருக்குற கமென்ட்ஸ் பாருங்க ரொம்ப அழகா இருக்குன்னு போட்டு இருக்காங்க. அதோட வரையறை என்ன?… நான் போட்டு இருக்குற ட்ரெஸ் தான…”
“அந்த ட்ரெஸ்ல என்ன அசிங்கத்தை பார்த்த? அப்படி ஒன்னும் கவர்ச்சி கிடையாது…”
Advertisement
“அது உங்க பார்வை. என் பார்வைக்கு அது அசிங்கமா தான் தெரியுது…” என்றவள் மீண்டும் தன் போனை எடுத்து பார்க்க, தன் தந்தை பார்த்து இருக்கிறார் என்று தெரிந்ததும் கண்களில் நீர் கொட்டியது.
Advertisement
முப்பது கடந்த நிலையில் இரு குழந்தைகளின் தாய், தன்னை பெற்ற தந்தையிடம் நிற்கும் கோலமா அது. மனது வேதனையாக இருந்தது. தந்தை தன்மை தவறாக நினைத்து விடுவாரோ என்ற பயம் அழுத்தியது.
அவர்கள் மகளாக இருக்கும் பொழுது இருந்த கட்டுப்பாடு இப்போது இல்லை தான். ஆனாலும், வளர்ந்த விதம் தந்தை குறித்த பயத்தை கொடுத்தது. இது என்ன என்று இப்போது யாரும் கேட்க போவதில்லை தான். தற்கால நாகரீகம் என்று எடுத்து கொள்ளும் சூழலில் தாங்கள் வளர வில்லையே.
என்னவோ பெரிய கொலை குற்றம் மாதிரி மனைவி ரியாக்ட் செய்வது எரிச்சலை கொடுக்க,
Advertisement
“டோன்ட் ஆக்ட் நர்மதா…” என்ற கணவன் மேல் அவ்வளவு கோபம் வந்தது.
மனைவியின் விருப்பம் இன்றி அவள் புகை படத்தை சமூக வலைத்தளத்தில் போட்டது தப்பு. அதை உணராவிட்டாலும் போகுது… ஆனால், இவள் எதோ டிராமா பண்ணுவது போல நிரஞ்சன் பேச்சு கோபம் தான் வரும். ஆனால், அந்த கோபத்தை கொட்டி விட்டால், தன் நிலைப்பாட்டை உறுதியாக வைக்க முடியாதே…
வீணற்ற கோபம், பொருளற்ற விவாதம். அது எதற்கு…
“இங்க பாருங்க, நீங்க உங்களுக்கு புடிச்ச வேலையை பாக்குறீங்க. ஆனா நான்… டீச்சிங் எனக்கு பிடிச்சு இருக்குன்றதை, அதை நான் மதிக்கிறேன். ரொம்ப பெருசா அதை நான் மதிக்கிறேன். நான் கிளாஸ் எடுக்கிறது பதினஞ்சு வயசு பொண்ணுங்களுக்கு, சோசியல் மீடியா பத்தின அவர்னஸ் கொடுக்குற நானே, இப்படி ஒரு போட்டோ போட்டா, அதை எப்படி எம் பிள்ளைக புரிஞ்சுப்பாங்க…”
“எல்லாரும் உன்னை மாதிரி கூமுட்டைகளா இருக்க மாட்டாங்க… நாகரிகம் தெரியாத ஆள கொண்டு போய் கிளாஸ் எடுக்க விட்டு இருக்காங்க… பிள்ளைக உருபட்ட மாதிரி தான்.ஒரு போட்டோ அதுவும் கட்டுன பொண்டாட்டி கூட, அதுக்கு எவ்வளவு ஆர்கியுமெண்ட். சரியான கிரிஞ்சு…” நக்கலாக விழுந்தது நிரஞ்சன் வார்த்தை..
“நீங்க அப்படியே ரொம்ப பொறுப்பானவர் தான். என்ன மிச்சம் பண்ணி வச்சு இருக்கீங்க. பெருசா பந்தாவா பேச மட்டும் தான் தெரியும். லட்ச கணக்கில் சம்பளம் வாங்குறீங்க. ஆனா, ஏதாவது உருப்படியா சேர்த்து இருக்கீங்களா?… எல்லாம் பைசா புரோஜனமில்லாத ஆடம்பர செலவு. அதுக்கு உங்க அண்ணனை சொல்லுங்க, பொறுப்பானவர், புத்திசாலி…” கோபத்தில் வார்த்தை வந்தது நர்மதாவுக்கு…
“வாய மூடு. யாரோடவும் என்னை கம்பேர் பண்ணாத…” கத்தினான் நிரஞ்சன்.
“நல்லது சொன்னா ஏன் கத்துறீங்க… உண்மைய தான் சொன்னேன். உங்க கூட பொறந்தவர் தான, எவ்வளவு சிக்கனமா ஒரு மகனுக்கும் சொத்து சேர்த்து வைக்கிறார். நீங்களும் ரெண்டு பிள்ளைக வச்சு இருக்கீங்க. என்ன சேர்த்து வச்சு இருக்கீங்க…” தன் பங்குக்கு நர்மதாவும் கத்தினாள்.
எங்கோ ஆரம்பித்த பிரச்சனை எங்கோ போய் கொண்டு இருந்தது. பொறுமையாக, அமைதியாக கணவனுக்கு எதிர்காலத்தை புரிய வைக்க வேண்டும் என்று நினைத்தவள். பொறுமை இழந்து கத்தி கொண்டு இருந்தாள்.
அமைதியாக சொல்லும் போதே கேட்காத நிரஞ்சன், இப்படி அவனை குறைத்து சொல்லும் போதா கேட்க போகிறான்.
“கட்டுன பொண்டாட்டி மேல கை வைக்க கூடாதுன்னு நினைக்கிறேன். அது எனக்கு அழகு இல்லை. என்னை அதை செய்ய வைக்காத…” கடுமையாக வந்தது வார்த்தை.
கணவனின் முகம் பார்த்து பயம் வந்தாலும்,
“ரொம்ப அழகு தான். அதுதான் செருப்பால அடுச்ச மாதிரி காரியம் பண்ணிட்டீங்களே… ஒரு கோவிலுக்கு போன மாதிரி, சாப்பிட்ட மாதிரி, சேர்ந்து நிக்கிற மாதிரி கூட போட்டோ வைங்க. அப்படி நிறைய பேர் வைக்கிறாங்க தான். அது ஒரு மரியாதையா இருக்கும். அதை விட்டு முட்டி வரைக்கும் கவுன் போட்டு கால் தெரியிற மாதிரி, கட்டி பிடிச்சு, கன்னம் ஒட்டி வைக்கிற போட்டோ போடுவாங்களா…” முனங்கி கொண்டாள்.
திரும்பவும் அந்த போட்டோ எடுத்து பார்க்க, “உங்க ஹப்பி ஹன்ட்ஸ்சம்” என்று மெசேஜ் வந்து இருந்தது. அவள் மாணவிகள் ஹார்ட் போட்டு இருக்க, இன்னும் டென்ஷன் கூடியது.
நர்மதாவுக்கு சோசியல் மீடியா வழக்கம் எல்லாம் கிடையாது. நடுராத்திரி ஏன் சுடுகாட்டுக்கு போகணும். கண்ட மாதிரி போட்டோ போட்டு, தப்பாக பேச கூடாது என்றால் எப்படி எனும் ரகம். நம் பாதுகாப்பு நம் கையில்…
ஏதேதோ கற்பனை செய்து கொண்டு வந்து ஹனி மூன் படு மோசமாக தோல்வி அடைந்தது. திரும்பி ஊருக்கு போகும் வரை இருவரிடையே பேச்சு வார்த்தையே கிடையாது.
தான் எவ்வளவு செலவு செய்து, சர்ப்ரைஸ் கொடுத்து மனைவியின் பிறந்த நாளை கொண்டாட, பொறுப்பு அற்றவன், ஆடம்பர செலவாளி என்று பெயர் கொடுத்து விட்டாளே மனைவி என்ற ஆதங்கம் நிரஞ்சனுக்கு…
நர்மதா வளர்ந்த சூழல், கணவனின் செயலை தப்பாக தான் காட்டியது. திருமணமான புதிதில் அம்மா வீட்டுக்கு போகும் போது நிரஞ்சன் உடன் ஒட்டி கொண்டு திரிய மாட்டாள். பத்து மணி வரை பாலமரத்தான் டீவியில் நியூஸ் பார்ப்பார்.
கூடம் தாண்டி தான் படுக்கை அறை செல்ல வேண்டும். அப்பா, தம்பியை கடந்து படுக்கை அறைக்கு சென்று கதவடைக்க சங்கடமாக உணர்வாள். வீட்டின் அரவம் அடங்கும் வரை அடுப்படியில் தான் உருட்டி கொண்டு இருப்பாள்.
“மாப்பிள்ளை அப்பவே ரூம்க்கு போயிட்டார். இங்க வேலையை நான் பாக்குறேன். இந்த பாலை கொண்டுட்டு நீ போ…” என்று அம்மா தள்ளினாலும், நகரமாட்டாள் நர்மதா. அவ்வளவு வாய் பேசும் பிருந்தாவே, கல்யாணம் ஆன புதிதில் தாய் வீடு வந்தால் மற்றவர் கண் உறுத்தாத வகையில் தான் நடப்பாள்.
கல்யாணம் ஆகாத தம்பி, தங்கை இருக்கும் வீடு என்பதால் பிருந்தா ஒட்டி கொண்டு இருக்க மாட்டாள். தன் கணவன் தான். அதில் தவறு ஒன்றும் இல்லை என்ற வகையில் அவர்கள் வளர்க்க படவும் இல்லை.
ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ளாமல், ஒருவர் நிலைப்பாட்டை மற்றவருக்கு புகுத்த முயன்றதில் முட்டி கொண்டார்கள். பயணம் முழுவதும் அமைதியில் கழிய, வீடு வந்த பின்னும் முகத்தை தூக்கி கொண்டு தான் இருந்தார்கள்.
இதில் இவர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக நிரஞ்சன் அண்ணன் குடும்பம் ஊர் வந்து இருந்தது. முறையாக நலம் விசாரித்தாள். நர்மதா. பிள்ளைகள் இன்னும் அக்கா வீட்டில் தான். மறுநாள் தான் சென்று அழைத்து வர வேண்டும்.
“என்ன திடீர் விசிட்…” என்று நிரஞ்சன் கேட்க.
“திடீர்னு எல்லாம் இல்லடா. புரோஜேட் முடிஞ்சது, சொந்த ஊருக்கே வந்துட்டேன். இனி இங்க சென்னைல தான் வேலை…” என்று அண்ணன் சொல்ல,
“சூப்பர்டா…” என்றான் நிரஞ்சன்.
ஆரம்பகட்ட விசாரிப்போடு நர்மதா, முகுந்தன் மனைவி வித்யா இருவரும் அமைதியாகி கொண்டார்கள். ஒத்து வராது என்றெல்லாம் இல்லை. இருவரது உறவு நிலையும் அவ்வளவு தான். ஒரே வீட்டிற்க்கு திருமணமாகி வந்தாலும், இருவரும் ஒரே வீட்டில் தங்காததால் பெரிதாக பழக்கம் கிடையாது. சின்ன சிரிப்பு, சில வார்த்தை பேச்சு மட்டும் தான். இனி தான் சுபாவம் தெரியும்.
அன்று மாலையே பிள்ளைகளை கூட்டி கொண்டு வர நர்மதா கிளம்ப, நிரஞ்சன் கண்டு கொள்ள வில்லை. பழிவாங்குகிறான் போல…
இவன் தானே பிருந்தாவை வலிய அழைத்து பிள்ளைகளை பார்த்து கொள்ள சொன்னது. அப்போ இவனும் சேர்ந்து வந்து பிள்ளைகளை அழைத்து கொண்டே, ரெண்டு வார்த்தை இருந்து பேசி வந்தால் தான் மரியாதை. நமக்குள் என்ன சண்டை என்றாலும் வெளியில் காட்டி கொள்ள கூடாது அல்லவா…
ஆனால் நிரஞ்சன் இப்படி தான். முகத்தை தூக்கி கொண்டு இறங்கி வர மாட்டான். அதற்கு தான் கணவனிடம் மல்லு கட்டாமல் விட்டு கொடுத்து போவது. பிருந்தா சொல்லுவது போல பல நாள் அழுத்தம் சண்டையாக வெளி வந்து விட்டது போல.
கடைசியில் நர்மதா மட்டும் பிருந்தா வீடு சென்றாள். கணவனை முறைத்து கொண்டு தான். இவன் மட்டுமா குடும்பமே அப்படி தான். கோபம் வந்தால் முகத்தில் முழிக்காதது போல நடந்து கொள்வது. பின் எதுவும் நடக்காது போல சேர்ந்து கொள்வது. நமக்கெல்லாம் அப்படி முகத்திலடிப்பது போல பேச வராது.
ஒரே குடும்பமாக, உறவாக இருக்கையில் கொஞ்சம் தணிந்து தான் பேச வேண்டும். வெடுக்கென்று வெட்டி கொண்டு, அப்புறம் எப்படி சிரித்து பேச வரும். புலம்பி கொண்டு தான் அக்கா வீடு சென்றாள்.
பிருந்தாக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு… முகம் மலர வரவேற்க, தனியே வந்து நிற்கும் தங்கையை பார்த்து புருவம் சுருக்கி யோசித்தாள்.
“என்ன நம்மு, உம் புருசன் கூட எதுவும் சண்டையா?…”
“ஹனி மூன் போய் யாராவது சண்டை போடுவாங்களா?… முக்கியமான வேலைக்கா, நிறைய லீவ் போட்டார். அவசரமா முடிக்கணுமா, வீக் எண்ட் பார்க்கலாம்னு சொல்லி என்னை மட்டும் போக சொன்னார். பாரு நிறைய வாங்கி கொடுத்து இருக்கார்…” என்று அங்கு வாங்கி வந்ததை பிள்ளைகளுக்கு, அக்கா, மாமா என்று எல்லோருக்கும் கொடுத்தாள்.
“நான் கூட சண்டையேனு பயந்துட்டேன். நீ வாங்கி வந்ததை பார்த்ததும் நம்புறேன். ஏன்னா என் தங்கச்சி சரியான கஞ்சம். அவ்வளவு காசு போட்டு வாங்க மாட்டா…” என்று பிருந்தா கேலி செய்ய,
அக்காவை போலியாக முறைத்தாள் நர்மதா. உண்மை தான் நிரஞ்சன் தான் எல்லாம் வாங்கியது. விலை கூடுதலாக போட்டு தரமாக வாங்கினான். ஆனால், என்ன பலன். அவ்வளவு காசு போட்டு வாங்கி, நல் முறையில் கொடுத்தால் தானே மரியாதை. பெருமூச்சு விட்டு கொண்டவள், அக்காவிடம் சண்டை பத்தி மூச்சு கூட விடலை.
“நீ போட்ட ஸ்டேட்டஸ் எல்லாம் உங்க மாமா தான் எனக்கே சொன்னார். அவருக்கு ஆச்சர்யம் நம்ம நர்மதாவ இதுன்னு என் கிட்டவே கேட்கிறார். நீ மாறிட்டையாம்…” சிரித்து கொண்டு கேலியாக தான் பிருந்தா சொன்னாள்.
ஆனால், நர்மதாவுக்கு தான் தர்ம சங்கடமாக இருந்தது. கணவனை விட்டு கொடுக்காமல் அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு, பிள்ளைகளை கூட்டி கொண்டு வந்து விட்டாள்.
பிள்ளைகளை பார்த்து நிரஞ்சனுக்கு ஒரே கொண்டாட்டம். அவர்களை தூக்கி கொஞ்ச,
ரொம்ப பாசம் தான் முனங்கி கொண்டாள் நர்மதா.
நாளை முதல் மச்சான் மனைவியோடு ஒன்றாக வேலையை பகிர்ந்து செய்ய வேண்டும். பெரிதாக முட்டும் என்றெல்லாம் தோன்ற வில்லை. பழக்கவழக்கம் கொஞ்சம் இடிக்கும். இவள் மட்டுமே முழுதாக புழங்கிய கிட்சன், கார்டன் எல்லாம் இனி ரெண்டு பேர் நிற்கும் போது லேசாக உரச தான் செய்யும். நாம் கொஞ்சம் அனுசரிக்க வேண்டும் நினைத்து கொண்டாள்.
அதற்கு தக்க அன்று இரவு உணவின் போது என்ன செய்யலாம் என்பதை வித்யாவிடம் கேட்டு தான் செய்தாள். நர்மதா தோசை வார்க்க, வித்யா சட்னி அரைத்து எல்லோருக்கும் பரிமாறினாள்.
சுசீலா பார்வை எல்லாம் சின்ன மகன் மேல் தான். என்னவோ சரியில்லை, மூச்சுக்கு முன்னூறு முறை நர்மதா என்று கூவுபவன், மூச்சு விடாமல் அமர்ந்து இருக்கிறான் என்றால்…
“டேய் நிரஞ்சா, உன் முகம் ஏன் சுண்டி போய் கிடக்கு. அவ கூட எதுவும் சண்டையா? நல்லா தானே ஊருக்கு போனீங்க…” என்று தாய் கேட்க.
தோசை ஊற்றி கொண்டு இருந்த நர்மதா, “கேட்கட்டும் கேள்வி. நான் சொல்லும் போது என்னென்னமோ சொன்னான். அவங்க அம்மா கிட்ட என்ன சொல்லுவான். அவங்களாவது தப்புன்னு புரிய வைக்கட்டும்…” என்று நினைத்து கொண்டாள்.
“உன்னை தான்டா கேக்குறேன். நர்மதா கூட சண்டை போட்டையா?…” அழுத்தமாக கேட்க.
எல்லோர் கவனமும் அவன் மீது தான். நர்மதா வெளியவே வர வில்லை.
“ஏன்ம்மா என்னை பார்த்தா சண்டை போடுற மாதிரியா இருக்கு…” கடுப்பாக கேட்டான்.
“பின்னே மருமக அமைதி. அந்த பொண்ணு சண்டை எதுவும் போடாது. இவன் தான் ஏதாவது சொல்லி இருப்பான் சுசீ…” என்று தந்தையும் சொல்ல, கடுப்பாகியது நிரஞ்சனுக்கு…
“ஆமா, நான் தான் தப்பு. அம்மா, அவளுக்கு சொத்து வேணுமாம். எங்க அண்ணன் தான் அமைதி, பொறுப்பாவனாம். உங்க அண்ணன் நாலு வீடு கட்டிட்டான், நீ என்ன வச்சு இருக்கான்னு கேக்குறா….” என்று போட்டு கொடுக்க.
நர்மதாவுக்கு மூச்சே நின்று போனது. அட பாவி, இப்படி எல்லோர் முன்னும் சொல்லி விட்டானே… மிகுந்த தர்ம சங்கடமாகி விட்டது. நிமிர்ந்து அருகில் நிற்கும் வித்யா முகத்தையே பார்க்க முடியவில்லை. தான் ஏதோ கெட்டவள் போலவும், பொறாமையில் சொல்லியாதாவும் வார்த்தை மாறும்.
மெல்ல தயங்கி தன் அருகில் நிற்கும் வித்யா முகம் பார்க்க. அவள் வெடுக்கென்று திரும்பி கொண்டாள். ஆரம்பம் முதலே வித்யா தன் ஓரப்படி உடன் ஒட்ட மாட்டாள். காரணம், நார்மதாவை முதலில் முகுந்தனுக்கு தான் பெண் பார்த்தார்கள்.
error: Content is protected !!