Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Abinayangalin Vizhigalil

Abinayangalin Vizhigalil 1

அன்பு நெஞ்சங்களே!

                                       உங்கள் பத்மா சுப்பிரமணியனின் முதல் படைப்பு.  படித்திடுங்கள்.  படித்ததில் பிடித்ததை பகிர்த்திடுங்கள் பிடித்தாலும் பிடித்தமின்மையையும் கூறுங்கள். உங்கள் கருத்துக்கள் என் கற்பனையை செதுக்க உதவும். தவறுகளை திருத்திட உதவும். இதோ என்

                  💞💞💞💞அபிநயங்களின் விழிகளில் 💞💞💞💞

கூடல் மாநகரமான மீனாட்சியின் மதுரை கோட்டையில் பகலவன் தன் செங்கதிர்களால் சுட்டெரித்து சென்ற வழியில் நிலவு மகள் துயில் கலைந்து எழும் நேரம். ஆரஞ்சும் மஞ்சளும்  கலந்த மேக பெண்ணின் ஆடை விளக்கி வெண் பட்டு சேலையுடுத்தி இரவின் குளுமையில் ஆகாயமே அற்புதமாய் அழகாய் காட்சி தரும் நேரத்தில் விளக்கு தூண் பகுதியில் காற்றை கிழித்து கொண்டு ஒரு ஸ்கூட்டி தேவதை வலம் வந்தாள்.



Advertisement

அவளின் பின்னே இரு அழகு செல்லங்கள். கும்மாளமாய் கொண்டாட்டம் கூடி கையில் லாலி பாப்பை  சப்பி கொண்டே  வந்தனர்.

ஓரமாய் வண்டியை நிறுத்தி விட்டு ஜிகர்தண்டா கடைக்கு அருகே சென்று நின்றாள். கடல் பாசியில் செய்யப்படும் இந்த குளுகுளு பானம் மதுரையின்  இன்னோர் சிறப்பு. வயிற்றை குளிர்விப்போதோடு சுவையில் மனதையும் குளிரவைக்கும்.

பத்து நிமிடம் கழித்த பிறகு அவள் கேட்ட பானம் கையில் வந்தது. எங்கு பார்க்கிலும் மக்கள் கூட்டம். எந்த நாளிலும் இப்படி தான் இருக்கும். வருடம் முழுவதும் விழா நடைபெறுவதால் எப்போதும் எந்த நேரத்தில் சென்றாலும் கடைகள் திறந்து விற்பனையில் சூடு பறக்கும். தூங்கா நகரம் என அதனால் தான் கூறுகின்றனரோ.

Advertisement

வரிசை கட்டி நிற்கும் கடைகளில் விரும்பியதை வாங்கி கொண்டு ஊர் கோலம் சென்றனர். அப்போது தான் அவளுக்கு ஞாபகம்  வந்தது. அடுத்த மாதம் குட்டிக்கு பிறந்தநாள் வருவது. சரி இன்றே சென்று அவனுக்கு ஆடைகள் வாங்கலாம் என அருகில் இருந்த கடையில் நுழைந்தாள்.

Advertisement

மதுரையின்  பிரதான ஜவுளிக் கடையின் மூன்றாம் தளம் சிறுவர்களின் ஆடையகப் பிரிவில் நம் நாயகி அபிநயா நின்றிருந்தாள். பெயருக்கேற்றபடி அபிநயம் பிடிக்கும்  மீன் விழிகள், சிறு குடை ஜிமிக்கிதனில் முகம் நிலவினைப் போல பிரகாசிக்க, எலுமிச்சை நிறத்தழகி தன் இடைவரை பரந்த கூந்தல் காற்றில் அசைந்தாட , கொடியிடையினை சுற்றிய ஆகாய வர்ண அனார்கலி சுடியில் ஓவியமாய் துணிகளை அலசி ஆராய்ந்து ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்த்து கொண்டிருந்தாள்.

அழகிய சிறுபூக்களால் எம்பிராய்டரி செய்யப்பட்ட சிறு குர்தா ஒன்றினை எடுத்தால் பெண்ணவள். குழந்தையின் நிறத்திற்கு அந்த இளவண்ண ரோஜா நிற குர்தா மிகப் பொருத்தமாய் இருக்குமென ஆசையாய் அதனை வருடிக் கொண்டிருந்தாள்.

அப்போது யாரோ தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உள்ளுணர்வால் திரும்பி பார்த்தாள். அங்கே அவள் கண்டது நம் நாயகன் அரவிந்த் கிருஷ்ணனைத்தான்.

Advertisement

” ஆறு அடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போலே இருப்பான் ” என்ற வரிகளுக்கேற்ப கோதுமை நிறத்தில், ஜெல் வைத்து வாரியும் அடங்காத சிகையழகில், சிகரட் அறியா சிவந்த இதழில் புன்னகை மலர, கண்களின் சிரிப்புடன் காந்தமாய் அவளை கண்டு மெய் மறந்து நின்றிருந்தான்.

இமை சிமிட்டா பார்வைதனில் தன்னை கண்டவனை உஷ்ண முறைப்புடன் கோபமாய் விழிகளை உருட்டினாள் அபி.

அவள் கோபமுகத்தை கண்டவுடன் உணர்வு பெற்று சிறுமுறுவலுடன்

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னை பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என்  உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களை கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும்
திருடி கொண்டு
உறங்க சொல்வதில்
நியாயமில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
ஏன் ஏன் ஏன்
தன் மனதில் பாடி கொண்டே அவளை நோக்கி சென்றான்.

தன் கைகளில் எடுத்த ஆடையுடன் பில் பிரிவினை நோக்கி சென்ற அபியின் பின் வரிசையில் சென்று இவனும் நின்றான். அவன் கைகளிலும் துணிவகைகள் பில் போட இருந்ததைக் கண்டு எதுவும் சொல்ல முடியாமல் பாவையவள் நின்றாள்.

ஹாய் நெக்ஸ்ட் மன்ந்த் 3 ம் தேதி நான் லண்டன் போயிருவேன் , சோ நம்ம கல்யாணத்த இந்த வாரத்திலேயே வைத்து விடலாமா ? உனக்கு ஓகே தானே என்றான் அரவிந்த்.

அவன் கூறியதை கேட்டு யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறான் போல என்று அபி நினைத்தாள். ஆனால் அவனோ இந்த டிரஸ் பில் போட்டுவிட்டு முதல் தளத்தில் சென்று முகூர்த்த புடவை எடுத்துச் செல்லலாம் என அவள் கையினை பிடித்தான்.

விக்கித்து பார்த்து விதிர்வித்து நின்றுவிட்டாள்  பெண்ணவள். ஹலோ நீங்க யாருனே எனக்கு தெரியாது என் கையை விடுங்கள் என பில்லை போட்டாச்சா  என கூறிக்கொண்டு உதறி தள்ளினாள்.

பிடித்த கைகளை விடாது பற்றியவன் அவர்களின் துணிகளுக்கு அவனே பணத்தை செலுத்தி விட்டி அவளை இழுத்துக்கொண்டு சென்றான்.

சேரில் அமர்ந்து இருந்த இரு குழந்தைகள் அவளை நோக்கி அபிம்மா என ஓடோடி வந்தனர்.

இப்போது திகைத்து நிற்பது அவன் முறையானது. அவன் கைகளை உதறிவிட்டு கோபத்துடன் அவனை அடிக்க கை ஓங்கினாள் அபி.

ஆனால் இருக்கும் சூழல் உணர்ந்து வீண் பார்வைகளைத் தவிர்க்க விரல் நீட்டி எச்சரித்து சென்றுவிட்டாள் அவ்விடத்தை விட்டு.

ஆனாலும் சுதாரித்து அவள் துணிகளை விட்டுவிட்டு சென்றதை உணர்ந்து பில்லில் அவள் அலைபேசி எண் இருப்பதைக் கண்டு அழைத்து கொடுத்துவிடலாம் என முடிவு எடுத்தான்.

அவனை முறைத்து கொண்டே வந்து குழந்தைகளை அழைத்து கொண்டு எப்படி வீட்டிற்கு வந்தால் என்றே அவள் அறியாள்.

ஞாயிறுக்கிழமை எப்போதும் அபியின் அக்கா பவித்ரா தன்           குழந்தைகளோடு தாய் வீட்டிற்கு வந்து விடுவாள். அவளுக்கு இரு குழந்தைகள் , மூத்தவன் சிவா ஒன்றாம் வகுப்பு படிக்கின்றான் , இளையவன் விஷ்ணு லக்க் படிக்கின்றான் . படு சுட்டி இருவரும். எந்நேரமும் விளையாட்டாய் பொழுதை போக்கி சேட்டை செய்வதில் வல்லவர்கள். தாயினை விட சித்தியிடம் அதிக ஒட்டுதல் ஆதலால் அவளை அபிமா என்றே அழைத்தனர்.

வீட்டிற்கு வந்தவள் கண்டது தன் அக்கா அம்மாவின் மடியில் படுத்து கொண்டு கதை பேசி கொண்டு இருந்ததை தான்.

ஏன் கா இப்படி பண்ற, நான் தான் அம்மா மடியில் படுக்கணும் . ரெண்டு பிள்ளைகளை பெத்துட்டு இப்படி இருக்கியே ? உனக்கே இது நியாயமா இருக்கா  என  படுத்தவளை எழுப்பி உட்கார வைத்தாள்.

வீட்டுக்கு வந்து படுக்க சென்றவள் எண்ணம் முழுவதும் அவனே. யாரிவன் ? எங்கோ கேட்ட குரல் போல் உள்ளதே ? எத்தனை தைரியமாய் என்னிடம் திருமணத்தைப் பற்றி பேசுவான். புடவை வாங்கி தர கைப்பிடிக்கின்றான். பெரிய மன்மதன். இவன் கூப்பிட்டா நாங்க உடனே வந்துருவோம் பாரு. புடிச்ச கையை கடித்து வைத்திருக்க வேண்டும் , ஏன் ஒன்றும் பண்ணலை. அவன் பழகினவன் போல் பக்கத்தில் வந்து நின்றதும் எதுவும் யோசிக்க தோணலை. கடவுளே ஏன் இப்படி எனக்கு நடக்குது ? நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம். விட்டா புடவையை கட்டி கையோடு இழுத்து போயிருப்பான் போல. பசங்க அபிம்மான்னு கூப்பிட்டதால் தப்பிச்சேன். அவனை ஏன் கண்ணுலயே இனி காட்டிவிடாதப்பா. நினைத்து பார்த்தாலே கதி கலங்க வைக்கின்றான்.

நடந்த குழப்பத்தில் இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்தாள். என்னவென்று புரியா உணர்வுடன் காலையில் எழுந்ததும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்தாள்.

காலையில் எழுந்து வேகமாய் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு, பச்சை வர்ண சுடியில்  ரெடியாகி, நீண்ட கூந்தலை பின்னலிட்டு, அழகாய் தொடுத்து வைத்த முல்லை சரம்  சூடி , புன்னகை முகமாய் தாயிடம் கூறிவிட்டு பக்கத்திலுள்ள கோவிலுக்கு கிளம்பினாள்.

பூஜை தட்டை வாங்கி கொண்டு பெருமாளின் முன் சென்று நின்றவள், இமைகள் மூடி தன் மன குமுறல்களை கூறி வேண்டி நின்றாள்.

எதிரே நின்றவள் பூசாரியிடம் அபிநயா கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் என்றவுடன் விழி உயர்த்தி பார்த்தாள்.

அவளின் நாயகனே எதிரில் நின்றான். அரவிந்த் கிருஷ்ணா , கடக ராசி , பெட்ரோலிய நட்சத்திரம் என்றவுடன் பூசாரி முழித்தார். அது வேறொன்றுமில்லை என்ன ஆயில் என்று குழம்பக்கூடாது இல்லையா . அது தான் பெட்ரோலியம் என கூறினேன் என்றவனை பார்த்து, விளையாட்டு பிள்ளையாண்டான் நீ என சிரித்துக்கொண்டே சென்று விட்டார்.

அர்ச்சனை செய்த தட்டினை இருவர் கையிலும் கொடுக்க கொண்டுவந்தார்.

அவனிடம் நீட்டும் முன், பூவை அவங்களுக்கே கொடுத்திடுங்கோ. எங்க வீட்டில் பொண்ணுங்க யாருமில்லை என்றான்.

அவரும் அவளிடம் பூவையும் தட்டையும் கொடுத்துவிட்டு சென்று விட்டார்.

பூசாரி கொடுத்து சென்றதால் வேறு வழியின்றி அதனை கூந்தலில் வைத்து கொண்டாள்.

அப்பாடா ! பூ வெச்சாச்சு என்றவுடன் ஏற்கனவே குழப்பத்துடன் இருந்தவள் கோவிலுக்கு சென்றால் மனதுக்கு அமைதி கிடைக்கும் என்று நினைத்து சென்றவள் மீண்டும் குழப்பம் உண்டாக்குனவனே வந்து எதிரில் நின்றதை பார்த்து முறைத்தாள்.

ஹலோ யார் நீங்க? நேத்தே என்னை கலாட்டா பண்ணீங்க. பசங்க இருந்ததால் எதுவும் சொல்ல முடியவில்லை. முன்ன பின்ன தெரியாத பொண்ணுட்ட இப்படித்தான் பேசுவீங்களா? மேனர்ஸ் இல்லையா? புடவை வாங்கி தரேன்,  பூ வைக்கிறேன்னு எதாவது பேசிட்டு இனி பின்னாடி வந்தீங்க,   அவ்வளவு தான்.

ஒகே. அப்போ முன்னாடி வந்து நிற்கின்றேன். அப்ப தப்பில்ல தானே.

சே. உங்க வீட்டுல பொண்ணுங்களே இல்லியா?

இப்பதானே யாரும் இல்லைனு சொன்னேன். திருப்பி அதையே கேட்டா என்னமா செய்வது?

உன்னை எல்லாம்…. எப்படி தான் வீட்டுல வச்சிருக்காங்களோ? இனி என் பின்னாடி நீ வந்தே நேராய் போலீஸ்ட போய் கம்பளைண்ட் பண்ணிருவேன். கேர்புல்லா இருந்துக்கோ என திட்டிவிட்டு வந்து ஸ்கூட்டியை எடுத்து கொண்டு பறந்தாள்.

பறந்தவளை பாய்ந்து சென்று பிடித்தானா, பம்மினானா அடுத்த பதிவில் காண்போம்.
    ********************************
நித்தமும் இரவில்
நித்திரையை தழுவும் போதும்
உன்  பெயரினை கூறுகின்றேன்
அந்த இரவே என் கடைசி இரவானால்
நான் இறுதியாக உச்சரித்ததும்
உன் பெயராக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!