Skip to content
Post Views: 2,664
மின்னல் ஒரு கோடி
அத்தியாயம் – 9
Advertisement
கமலமும் , இராஜாசெல்வமும் கௌசியை அதிர்ச்சியாக பார்த்து நிற்க.
சிவா தான் அப்பா இரத்தம் நிறைய போயிருக்கு கையில் கீறல் ஆழமா இருக்கு என்றவன்.அம்மா ஒரு காட்டன் துணியை எடு என்று கௌசிக்கு கையில் கட்டு போட்டுக்கொண்டே அப்பா ஹாம்புலன்ஸ்க்கு போன் போடுக்க என்றவன்.கௌசி , கௌசி என்று கௌசியின் கன்னத்தை தட்ட. ஒரு அசைவும் இல்லாமல் இருக்க.
Advertisement
Advertisement
சிவா கமலத்திடம் அம்மா எல்லாருடைய போனை எடுமா, காசும் , ஏடியம் கார்டையும் எடுமா. என்றவன் கௌசியை கீழே தூக்கி வந்தான்.
சிவா கௌசியை தூக்கி வரவும். ஹாம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது.
Advertisement
கமலம் வீட்டை பூட்டி வர.கௌசியை ஹாஸ்பெட்டலில் சேர்த்தனர்.
டாக்டர் வந்து கௌசியை பார்த்து எப்படி அடிபட்டுச்சு.
காய் வெட்டும் போது கத்தி பட்ருச்சு டாக்டர் என்றான் சிவா.
டாக்டர் இல்லை ஏதோ கையை கிழிச்ச மாதிரி இருக்கு என்றவர்.தையல் போடனும். இரத்தம் ஒரு யுனிட் ஏத்தனும் என்றவர்.கௌசிக்கு ட்ரிட்மென்டை ஆரம்பித்தார்.
கௌசிக்கு தையல் போடும் போது மெல்ல விழிப்பு வர.
டாக்டர் கௌசியிடம் எப்படிமா அடிபட்டது என்று கேட்க.
கௌசி டாக்டரிடம் வளையலை கழட்டும் போது.கண்ணாடி வளையல் கையை கிழிச்சுருச்சு என்று சொல்ல.
பக்கத்தில் இருந்த சிவாவுக்கு கௌசி சொல்லவும் தான் மனம் நிம்மதி அடைந்தது. இவ்வளவு நேரமும் கௌசி தற்கொலைக்கு முயற்சி பண்ணி இருப்பாள் என்று முழு குடும்பமும் வருத்தத்தில் இருக்க.
கௌசி சொல்லியதும் தான் அவர்களுக்கு உயிரே வந்தது போல இருக்க.
கௌசி டாக்டரிடம் எனக்கு ஒன்னும் வேண்டாம் என்று தையல் போட்டுக் கொண்டு இருந்த கையை இழுக்க.
டாக்டர் கௌசியின் கையில் தையல் பாதி மட்டும் போட்டு இருக்க இன்னொரு கையில் இரத்தம் ஏறி கொண்டு இருந்தது.
டாக்டர் நர்ஸ்சிடம் சொல்ல. கௌசியை அடம் பண்ணாம படுமா என்று கௌசியை நர்ஸ் படுக்க வைக்க.
கௌசி அடிப்பட்ட கையால். இரத்தம் ஏறிக்கொண்டு இருந்ததை பிய்த்து எறிந்தாள். கௌசியின் கையில் போடப்பட்டு இருந்த ட்ரிப்ஸ் போடப் பட்ட ஊசி வெளியில் வந்து. அந்த கையில் இருந்து இரத்தம் தெறிக்க.
டாக்டர் என்னம்மா உனக்கு பிரச்சனை.இரண்டு கையிலும் இரத்தம் வருது என்றவர் .இரத்தம் வருவதை நிருத்தி விட்டு. நர்ஸ் என்று நர்ஸ்சிடம் ஏதோ சொல்லி விட்டு வெளியில் சென்றார்.
கௌசி கட்டிலில் இருந்து எழுந்து கொள்ள முயற்சி பண்ண.
நர்ஸ் ஏய் படுமா இரத்தம் ரொம்ப போயிருக்கு மயக்கம் வந்துரும் என்று சொல்ல.
நான் போறேன், நான் போறேன் என்று சொல்ல.
எங்கே போறமா சும்மா இருமா என்றவர் சிவாவை அழைக்க.
சிவா உள்ளே வந்தவன் .என்ன கௌசி படுமா கையில் இரத்தம் வருது பாரு என்றவன். கௌசியின் கையை பிடித்து இரத்தம் வராமல் தடுக்க.
கௌசி சிவாவின் கையை தட்டி விட்டாள் . நீ போ வெளியில் போ என்றாள்.
கௌசி பொறுமையா இரும்மா. அண்ணா பார்த்துக்குறேன்.
என்ன பாத்துப்ப கொடிஸ்வரன் சார்ரோட அம்மா வந்து என்ன பேசுனாங்க தெரியுமா.அதை நினைக்க, நினைக்க என் மேலே எனக்கு கோபம் வருது. நான் அப்படி இல்லை என்று கத்தனும் போல் இருக்கு என்று கூறியவள்.
கமலம் சிவாவிடம் என்னடா சொல்லுறா .
அம்மா டிரிப்ஸ் போட்ட ஊசிய பிச்சுட்டா.
ஏன் கௌசிம்மா இப்படி பண்ணுற, கொஞ்சம் அமைதியா இருடா.
இராஜாசெல்வம் கௌசியிடம் வந்து. ஏன்டா கௌசி கையில் அடிப்பட்டவுடன் சொல்ல மாட்டியா என்று கேட்க.
சொல்லி என்ன பண்ண .வேணும் முன்னுதான் சொல்லல்ல.
ஏன்டாம்மா என்று கமலம் கேட்க.
கௌசி எனக்கு வாழவே பிடிக்கல .நீங்க எல்லோரும் வெளியில் போங்க, வெளியில் போங்க என்று கத்த.
ஒரு நர்ஸ் வந்து அவளுக்கு மறுபடியும் டிரிப்ஸ் போட ஊசி எடுத்து . சிவாவை உன் தங்கச்சி கையை பிடிப்பா என்று சொல்ல.
கௌசியோ எனக்கு ஒன்னும் வேண்டாம் என்று சிவாவின் கையை தட்டி விட.
சிவா , சொன்னா கேளு கௌசி.அமைதியா இரு வீட்டுக்கு போனதும் அப்பறம் பேசிக்கலாம்.
என்ன பேசுவ அவங்க. வந்து பேசுனது இல்லன்னு ஆகிறுமா.
நர்ஸ் கௌசியின் கையில் ஊசியை செலுத்த.
கௌசி எனக்கு இந்த ஊசி எல்லாம் வேண்டாம்.ஏதாவது வெஷ ஊசி இருந்தா போடுங்க நான் நிம்மதியா போய் இர்றேன் என்று நர்ஸ்சிடம் கேட்க. கௌசியின் மொத்த குடும்பமும் அவளை வேதனையுடன் பார்க்க. தன் மகள இப்படி பேசுகிறாள்.
சிவாவுக்கு தான், தான் காரணம் என்று நினைக்க.
நர்ஸ் கௌசிக்கு ஊசியை செலுத்த. வேண்டாம் சிஸ்டர் ஊசியை போடாதீங்க என்று கௌசி நர்ஸை தடுக்க.
சும்மா இருமா ,என். வேலையை பார்க்க விடு . நீ அமைதியா இரு. இல்ல மயக்க ஊசி போட்டு இருவேன். இராஜாசெல்வத்தை பார்த்து சார் இவங்களுக்கு கோபத்துல ப்பிரசர் ஏறி இப்படி பேசுறாங்க கொஞ்சம் தூங்குனா கம்மி ஆகும். மயக்க ஊசி போடவா தூங்கட்டும்.
இராஜாசெல்வம் அந்த நர்ஸிடம் போடுங்க என்று சொல்ல.
கௌசி எனக்கு மயக்க ஊசி வேண்டாம் என்றவள். கட்டிலில் இருந்து வெளியில் போக முயற்சி பண்ண.
இராஜாசெல்வம் கமலமும் ்ஒருபக்கம் பிடித்து கொள்ள.மறுபக்கம் சிவாவும் நர்ஸ்சும் சேர்ந்து மயக்க ஊசி போட வர.
அவளோ இவர்களிடம் இருந்து திமிரியவள்.எனக்கு வேண்டாம் என்று கையில் கிடைப்பதை தூக்கி எறிய . எனக்கு மயக்க ஊசி வேண்டாம் . ஏதாவது விஷ ஊசி போடுங்க . எனக்கு வாழவே புடிக்கல என்று கத்த.
அங்கே கோடீஸ்வரன் வாசலில் வந்து நிற்க.
அவனை பார்த்து வாயை முடியவள் தலையை குனிந்து கொண்டாள்.
கௌசி அமைதியை கண்ட நர்ஸ் சிவாவை பார்த்து யாரு இந்த ஆளு என்று கேட்க.
கௌசியை காட்டி இன்னும் 10 நாள்ளுல இவங்களுக்கு கல்யாணம் என்று சொல்ல.
கோடியை பார்த்தவர் தம்பி இந்த பொண்ணுகிட்ட அமைதியா இருக்க சொல்லுங்க.இல்லன்னா ட்ரிட்மென்டு பாக்க முடியாது என்று சொல்லி சென்றார்.
இராஜாசெல்வம் கோடியை பார்த்து . தன் மகள் அமைதியாக இருக்க. நம்ம வெளியில் போகலாம் என்றவர்.கோடியை பார்த்து நீ பேசு என்று கண்களாலே சொல்லி சென்றார்.
எல்லோரும் சென்றவுடனே கதவை சாத்தியவன்.கௌசியின் பக்கத்தில் உள்ள சேரில் அமர்ந்தான்.
கோடி கௌசியை பார்க்க அவள் குனிஞ்ச தலையை நிமிறவே இல்லை .கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருக்க.
இந்த கண்ணீருக்கு காரணம் நீ . இவளை இப்படி ஆக்கவா நீ இவ குடும்பத்துக்கு உதவி செஞ்ச என்று மனதில் கேட்க.
அவளை எப்படி இதில் இருந்து கொண்டு வருவது என்று யோசித்தவன்.என்ன கௌசி இது ஏன் இப்படி பண்ணுற.
அவள் அவனிடம் ஏதும் பேசவில்லை.
சரி நீ போய் சேர்ந்துட்டா எல்லாம் சரி ஆகிடுமா. நீ செத்து பொய்யுடேன்னு வச்சுக்கோ சிவா என்னா ஆவான். தன் தங்கை இறந்ததற்கு தான் காரணம் என்று நினைத்து அவனும் செத்துடுவான் பரவாயில்லையா?
உங்க அம்மாவை நினச்சு பாத்தியா, இப்பாதான் ஹாஸ்பெட்டலுக்கு போய் பொழச்சு வந்து இருங்காங்க. உன் அப்பா உன் மேல எவ்வளவு பாசம் வச்சு இருப்பாரு. என்ன நெனச்சு பாத்திய படிக்குற பிள்ளைய கல்யாணமுன்னு சொல்லி உன்ன கொல்ல பார்த்துட்டேன் . நானும் உன் கூடவே வந்துருவேன் . நீ எங்கே போனலும் நான் வரவேன் நியாபம் வச்சுக்கோ. இங்கே நாலும் சரி . வானத்துல நாலும் சரி. உன்னையா எங்கையும் விட மாட்டேன் . என்னை விட்டு எங்கு நீ போக முடியாது பேபி. அத மனசுல வச்சுக்கோ.
யாரோ ஏதோ சொன்னா உடனே செத்துடுவீயா. செத்துட்டா எல்லாம் சரியாகிறுமா, வாழனும், வாழ்ந்து காட்டணும் . நீ சொன்னா மாதிரி நான் இல்லட அதுக்கு மேல . வாழ்ந்து காட்டனும். அப்பதான் உன்ன பத்தி பேசுனவங்க .நீ அப்படி. இல்லன்னு புரிஞ்சுப்பாங்க .அத விட்டுட்டு என்ன பழக்கம் இது.
உனக்கு என்ன பிரச்சனை என்கிட்ட சொல்லு என்றான்.
அவளோ பேசாமல் இருக்க.
பேசு கௌசி என்ன கோபம் உனக்கு .எங்க அம்மா பேசுனத்துக்கு நான் உன்க்கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன் போதுமா.
அவங்க படிக்காதவங்க யாரோ பணம் வாங்கியதை தப்பா சொல்லி இருக்காங்க. அவங்களுக்கு பேச தெரியல ஏதோ கோபம் ,சரியா புரிஞ்சுகலை, உன்ன பேசுனாங்கன்னா. நீயும் பதிலுக்கு பேச வேண்டியது தானே.அதவிட்டுட்டு இப்படி பண்ணிட்டு இருக்க என்றவன்.
நீ படிச்ச பொண்ணு தானே. அவங்க கிராமத்துல இருந்தவங்க. என் மேல ரொம்ப பாசம் . நான் ஏதோ தப்பான போண்ணு கிட்ட பணம் கொடுத்து மாட்டி கிட்டேன் . நெனச்சு இருக்கலாம். உன்ன பத்தி அவங்களுக்கு தெரியல, தெரிஞ்ச. இப்படி நடந்து இருக்க மாட்டாங்க இனிமே உன்ன யாரும் எதுவும். சொல்ல மாட்டாங்க . நான் பார்த்துகிறேன் போதும்மா நான் இருக்கேன். என்றவன் .அவளின் கையை. பிடித்து பார்க்க.
இரத்தம் கன்றி போய் , பாதி தையல் போட்டு போடமல் இருக்க . நர்ஸ்சை கூப்பிட்டு தையல் போட சொல்லுறேன். அமைதியா இருக்கனும் சரியா என்று கோடி சொல்ல.
சரி என்றவள் தலையையாட்ட.
சரி சொல்லு ஏன் கையை இப்படி வெட்டிக் கிட்ட .
நானா! நான் ஒன்னும் கையை வெட்டல.
நீங்க எனக்கு பொண்ணு பார்க்க வந்த போது அத்தை எனக்கு கண்ணாடி வளையல் வாங்கி வந்து இருந்தாங்க.அத கையில் போட்டு இருந்தேன். அத்தை மேல உள்ள கோபத்துல வளையலை கழட்டுனேன்.ஒரு வளையல் சரியா சாயின் ஆகாமல் இருந்துருக்கு போல. அது தான் நான் வேகமாக கலட்டுனேனா. வளையல் கையை கிழிச்சுருச்சு .இரத்தம் வந்துச்சு ஏதோ கோபம் ,அப்படி விட்டுட்டேன்.
சரி கை கிழிச்சவுடனே சொல்லி இருக்கனுமுல ஏன் கௌசி சொல்லல்ல.
கௌசி நிமிர்ந்து கோடியை பார்க்க. அந்த கண்ணில் உள்ள வலியை பார்த்தவன். அவளின் பக்கத்தில் சென்று உங்கார்ந்து சொல்லு கௌசி, உன்மனசுல, என்ன இருக்கு சொல்லுமா என்றான்.சொன்னா தான் உன் மனசு லேசாகும்.
அவளோ உங்க அம்மா பேசினப்பா கூடா எனக்கு கஷ்டம் இல்ல. ஏதோ கோபத்துல சொல்லிட்டாங்க அப்படியின்னு நெனச்சேன். கொஞ்சம் நேரம் கழிச்சு அவங்க பேசுனது என் காதில் கேட்டு கிட்டே இருக்கு அதில் இருந்து என்னால வெளியில் வர முடியல என்று அழுதவளை.
சரி உன் காதில் என்ன கேட்குது சொல்லு.
எனக்கு சொல்ல முடியல.அவங்க திட்டியது.உனக்கு என்ன அவசரம். காலேஜ் தானா படிக்குற,என் பையன வெல்ல தோலை காட்டி மயக்கிட்ட அப்படியின்னு என்று சொல்லி தேம்ப.
நீ சொல்ல வேண்டியது தானே நான் மயக்கல . உங்க பையன் தான் என் மேல மயங்கி இருக்காருன்னு.
நீங்க போங்க காமெடி பண்ணிகிட்டு.
ஏய் கௌசி நான் காமெடி பண்ணலம்மா உண்மையை தான் சொன்னேன்.
ஒன்னும் சொல்ல வேண்டாம்.
கோடிஸ்வரன் கௌசியிடம் உன் காதில் ஏதோ கேக்குதுன்னு சொன்னாலே. இனிமே கேக்காது வா என்றவன். கௌசியை மெல்ல அனைத்து அவளின் காதில் ஒரு ஐந்து நிமிசம் அமைதியா இரு .உன் கண்ணை மூடு. நான் சொல்லுறத மட்டும் கேளு சரியா என்றவன்.
நீ என் மின்னல் தெரியுமா என்றான் மென்மையாக . உன் பேர் முதல்ல எனக்கு தெரியாது. நான் உனக்கு வச்ச பேரு மின்னல். என் வாழ்வில் வந்த என் மின்னல் நீ. நீ என் தேவதை என்று கூறியவன்.அவளை முதல் முதலில் பார்த்ததை கூற.
கௌசி அவன் சொல்வதை கேட்க ஆரம்பித்தாள்.
கோடி அவள் அன்று குடையை பிடிக்க ஓடியதும்.மின்னல் வெட்டியதும், கௌசி இரண்டு கைகளையும் விரித்து சுற்றியதையும் சொல்லியவன்.மறுநாள் அவளை பார்த்ததும் .அவளை நந்துக்கு அக்கா என்று நினைத்ததையும்,அவளுக்கு கல்யாணம் என்று திருப்பதிக்கு 5 நாள் சென்றதையும் சொல்ல.
மெல்ல சிரித்தவள்.நான் நந்துக்கு அக்கா மாதிரியா இருக்கேன் என்றாள்.
ஆமாம் என்றான் கோடி.
போங்க என்றவள் .தன் அடிபட்ட கையால் அவனை அடித்தவள்.ஐயோ வலிக்குது என்று கூற .
நர்ஸ்சை வர சொல்லவா.
ம்ம் என்றாள்.
நர்ஸை அழைத்தவன் .அவங்க அமைதியா இருப்பாங்க . நீங்க ட்ரிட்மென்டை பாருங்க.
முதலில் கௌசிக்கு கையில் உள்ள காயத்தை கீளின் பண்ண.
பக்கத்தில் இருந்த கோடிஸ்வரனை வலி தாங்காமல் பிடித்து கொண்டாள் கௌசி.
மெதுவா மேம் என்றான் கோடி. அந்த நர்ஸை பார்த்து.
நர்ஸ்சோ கௌசியை பார்த்து ஏன்மா இவ்வளவு நேரம் பாம்பு மாதிரி சீறுன.இப்போ பூனை குட்டி மாதிரி கம்முனு இருக்க. உன் வருங்கால ஹஸ்பென்ட் மேல அவ்வளவு பாசமா என்று கேட்க.
சிரித்த கோடி ஆமாம் என்றான் .
கௌசிக்கு வலி மறத்து போற மருந்து கையில் செலுத்தி இருந்தாலும்.தையல் போடும் போது வலி எடுக்க கொடியின் இடுப்பை பிடித்து கொண்டவள்.அவனின் இடுப்பில் தன் முகத்தை மறைத்தவள். கையை மட்டும் நர்ஸ்சிடம் நீட்டியவள்.கோடியை நகர விடவில்லை.
கௌசிக்கு ஊசி என்றாலே பயம். தையல் போட இன்னும் பயந்தவள் கோடியை இரும்பாக பிடித்து கொண்டாள்.
கௌசியின் குடும்பம் வாசலில் இருந்து பார்க்க கோடியின் இடுப்பை பிடித்து கொண்டு அமைதியாக இருந்த மகளை பார்த்தவர். கௌசி நல்ல படியா இதில் இருந்து வெளியில் வந்தாள் போதும் என்று இருந்தனர்.
நர்ஸ் தையல் போட்டு . மருந்து வைத்து கட்டு போட்டவள்.
கௌசியின் அடிப்பட்ட கையை கோடி மெதுவாக வருடி விட.தூங்கி விட்டாள்.
நல்ல தூங்கட்டும் என்று நர்ஸ் கிளம்பி விட்டாள்.
சிவா ,கமலம் இராஜாசெல்வம் வந்து கௌசியை பார்க்க. சிறு அசைவு இல்லாமல் இருந்தவளை தூக்கிவிட்டாள் என்று நினைத்தவர்கள் . அந்த ரூம்பில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டனர்.
கோடி. கமலத்தை பார்த்து எழுந்து கொள்ள பரவாயில்லை தம்பி அவ தூங்கட்டும்.
கமலத்துக்கு மகள் கோடிக்கு எவ்வளவு முக்கியதுவம் கொடுக்கிறாள் என்று நினைத்தவர்.கௌசிக்கு கோடி தம்பியை பிடிக்குமோ.
இராஜாசெல்வம் கமலத்திடம் கௌசிக்கு மயக்கம் தெளிஞ்சவுடன் கிளம்பலாம் என்று டாக்டர் சொல்லியதை சொல்லியவர் . நாளைக்கு காலையில வந்து காயத்துக்கு மருந்து போட வர சொன்னாங்க என்று கௌசிக்கு கொடுத்த மாத்திரைகளை கமலத்திடம் கொடுக்க அதை வாங்கியவர். வேற ஒன்னும் இல்லல்ல கௌசிக்கு. ஒன்னும் இல்லம்மா என்றார் இராஜாசெல்வம்.
கோடியின் போன் ஒலிக்க . குருவம்மாள் தான் கோடியை போனில் அழைத்தார்.
என்னம்மா என்றான் கோடி.
நீ எங்கே இருக்கன்னு தெரியும் இன்னும் பத்து நிமிசத்துல வீட்டுக்கு வர்ர.
மெல்ல கௌசியின் தலையை தலையனையில் வைத்தவன்.
சிவாவிடம் நம்ம கார் வெளியில் நிக்குது அதில் வீட்டுக்கு போயிருக்க . எனக்கு ஒரு சின்ன வேலை என்று கூற.
சரி என்றான் சிவா.
கமலத்திடம் கௌசியை பாத்துக்கோங்க என்றவன் கௌசியை பார்த்துக்கொண்டே கிளம்பி விட்டான்
error: Content is protected !!