Skip to content
Post Views: 3,135



நயம் – 2 



அரவிந்த் அச்சுதன் கிருஷ்ணன், பிரமிளா தம்பதியின் ஏகபோக சொத்துக்களின் ஒற்றை வாரிசு. அவனின் சிறு வயதிலேயே தொழில் நிமித்தமாக அவன் தந்தை லண்டன் சென்று விட்டார்.
ஆனால் அங்கே சம்பாதித்த பணத்தை எல்லாம் இந்தியாவில் சொத்துக்களாய் வாங்கி குவித்தார். அவர்கட்கு சொந்தமாக திருமண மண்டபம், அடுக்கு மாடி குடியிருப்புகள் என வாடகைக்கு விட்டார்.
Advertisement
பின்னாளில் தொழில் நொடித்த நிலையில் உள்ள சிறு நிறுவனங்கள் விற்பனைக்கு வரும் போது அதனை வாங்கி விடுவார். அந்த நிறுவனத்தின் பழைய முதலாளிகளே சம்பளத்தில் வேலைக்கு வைத்து கொண்டு, லாபத்திலும் சிறு பங்கை தந்து விடுவார்.
வெளியுலகத்திற்கு அவர்கள் தான் முதலாளி போல் தெரிவதால் பெரும்பான்மையோர் இந்த திட்டத்திற்கு ஒத்து கொள்வர்.ஆண்டில் ஒரு மாதம் மட்டும் இங்கே வந்து அனைத்தையும் மேற்பார்வையிட்டு லாப பங்கை கொடுத்து விடுவார்.அப்படிபட்ட நிர்வாக வேலையால் தான் இந்த வருடம் அரவிந்த் இங்கே வந்தது.
இன்றுதான் மதுரையில் இருக்கும் தன் தொழில்களை மேற்பார்வையிட முதன் முதலில் செல்ல இருப்பதால் கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்ய வந்தான். லண்டனில் பட்டம் பெற்று அங்கேயே தொழில் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றுவிட்டான்
Advertisement
தன் தந்தையின் முதல் தொழிற்சாலை மதுரையில் தான் விருட்சமாய் வளர்ந்து நிலைத்து உள்ளதால் இங்கு தானும் தொழில் வளர்ச்சியை மேற்பார்வையிட எண்ணியே ஒருமாதம் விசாவில் வந்துள்ளான். எனவே மனதில் நினைத்த மனையாளோடு தன் தொழிலையும் பார்த்து விட்டு ஊருக்கு திரும்பி செல்ல முடிவு எடுத்து விட்டான்.
Advertisement
ஆடி காரில் சென்று கொண்டிருந்தவன் FM – இல் ஒலித்த
” என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
கனவினிலும் நினைவினில் காக்க வைத்தாய் நீதான்
Advertisement
என ஜீவன் பருகிடும் ராகம் நீ ….”
பாடலை உணர்வோடு கலந்தவளை எண்ணியே பாடினால் இவனும்.
AK INDUSTRIES உள் நுழைந்த கார் நின்றது. மதுரையில் புகழ்பெற்ற இரும்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகும்.
தன் அலுவலக பணியாளராய் பூங்கொத்தோடு நின்றிருந்த அபியை கண்டு சிரித்தபடியே இறங்கினான்.
காரிலிருந்து இறங்கி தன் முன் நின்ற MDயின் முகம் பார்த்து அதிர்ந்து நின்றாள் அபி. ஆனாலும் முன் சென்று பூங்கொத்தை நீட்டினாள். அங்கிருந்த மேனேஜர் அவனுக்கு மாலை அணிவித்து வெல்கம் சார் என கைகுலுக்கி வரவேற்றான்.
இவனும் எண்ணியது கண் முன் கண்டு என் செய்வது என அறியாது அவருடன் சென்றான். தங்கள் அலுவலக அறையின் உள் நுழைந்து அவன் இருக்கையில் அமர்ந்தான். மேனேஜர் அவனிடம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டே அங்கிருந்த அபியை பார்த்து , சார் இவங்கதான் உங்கள் பர்சேஸ் மேனேஜர் Miss . அபிநயா என அறிமுகம் செய்தார். அதை கேட்டவுடன் மலர்ந்து சிரிப்புடன் அவளிடம் கைநீட்டினான். இனி என்றும் என்னுடன் தான் நீங்கள் இருக்க வேண்டும் என்று.
பதில்கூற முடியாத நிலையில் அவள் முகம் காட்ட மறுத்து திரும்பி நின்றாள். ஆனாலும் முதலிய நிற்பவனிடம் புன்னகை முகம் மட்டுமே காட்டினாள். அவளின் சிறு அசைவும் அவன் கண்ணிலிருந்து தப்பவில்லை.
பின் அலுவல் பணியில் முற்றும் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்தி கொண்டான். அவளிடம் பேசினாலும் கண்களைத் தவிர்த்து வேறெங்கும் அவள் முகம் பதியவில்லை . அவள்தான் அவஸ்தையை உணர்ந்தாள்.
பணியில் சேர்ந்த இத்தனை நாட்களில் போன் வழி மட்டுமே அவள் CEO விடம் பேசி உள்ளாள். தன் திறமையால் அவள் அனைத்தையும் பார்த்து கொண்டாலும் எப்போதுமே வருகை தராத முதலாளியால் வேறு எவ்வித சங்கடங்களையும் அவள் உணர்ந்ததில்லை. இன்றோ இவன் வந்துள்ளான் என்றாலும் அவன் முதன் முதலில் பேசிய திருமணப்புடவை விஷயம் மட்டுமே அவள் மனதில் ஆழ பதிந்ததால் , அவன் பார்வையில் தவறில்லை என்றாலும் இவள் நிலை குழைந்தாள்.
அந்த மாத கொள்முதல், விற்பனை, இருப்பு, லாப நட்டம் என அனைத்தையும் மேற்பார்வை இட்டான். அவனுக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் அவளிடமே கேட்டு தெளிவுப்படுத்தி கொண்டான்.
போன மாதம் விட இந்த மாதம் விற்பனை கூடி இருக்கு. ஆனால் கொள்முதல் அப்படியே தான் பண்ணி இருக்கீங்க. எக்ஸ்ட்ரா பண்ணலை. திடிர்னு யாராவது அதிகமாக ஆர்டர் கேட்டா என்ன பண்ணுவீங்க?
அது ஒன்னும் பிரச்சனை இல்லை சார். கொட்டேசன் எல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன். ஓரலா அவங்க கிட்டயும் சொல்லி இருக்கின்றேன்.
சப்போஸ் யாராவது திடிர்னு சேல்ஸ் ஆர்டர் கேட்டா கூட ஒரு நாள் அரேஞ்ஸ் பண்ணி கொடுத்து விடுவேன். எக்ஸ்ட்ரா இப்போவே வாங்கி வச்சு ஸ்டாக் விற்கலைன்னா நமக்கு தான் லாஸ் ஆகும். அதான் இப்படி பண்ணிருக்கேன்.
அவளை மெச்சுத்தலாய் பார்த்தப்படி, குட் அழகா எல்லாமே மேனேஜ பண்ண கத்துக்கிட்டு இருக்கீங்க.
ஆமாம் இவ்ளோ நல்லா மேனேஜ்மென்ட் ட்ரைனிங் எடுத்து என்ன பண்ண போறீங்க. வேற எதுவும் ஆபீஸ் ஓபன் பண்ண போறிங்களா?
புதுசா எல்லாம் ஒன்னும் பண்ண வேண்டியதில்லை சார். அப்பாவோட ஆபீஸ் அடுத்து நான் தான் பார்த்து கொள்ள போகின்றேன். அங்க இருந்தா என்னால் பேசிக் எல்லாம் கத்துக்க முடியாது. இங்கன்னா எல்லாமே கத்துக்க ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.
ம்ம். பார்ப்போம். இங்கேயே எப்போவும் இருக்க போறீங்களா இல்லை என்ன பண்ண போறீங்கன்னு என சிரிப்புடன் கூறினான்.
ஏன்னா பொண்ணுங்க மேரேஜ்க்கு அப்புறம் அவங்க வீட்டுக்காரர் சொல்றததை தானே கேப்பாங்க. அதான் சொன்னேன்.
நீங்க கவலைப்படாதீங்க சார். இப்போதைக்கு என் மேரேஜ் இல்லை.
ஓ, அப்படியா, பார்ப்போமே என புன்னகை பூத்தான்.
இவன் நமக்கு பாஸ்ஸா. இல்லை லூஸ்ஸா. எப்போ பாரு கல்யாணம் பத்தியே பேசுறான். பேசாம புரோக்கர் வேலை பார்க்க போகலாம். ஏன் இங்கே வந்து இம்சை பன்றானோ?
எப்படா ஆறு மணியாகும் ஓடலாம்னு இருக்கு. ஆனால் நல்ல பையனா நேத்து மாதிரி சேட்டை பண்ணாம இருக்கானே. அதுவே போதும்டா சாமி என மனதில் நினைத்து கொண்டே அவன் அறையை விட்டு வெளியே சென்றாள்.
அவளின் கண்களை மட்டும் பார்த்து கொண்டிருந்தவன் தானே அறிவான் அவள் விழிகளின் நாட்டியங்களை. ஆனால் அவளோ அதை அறியாது இருக்கின்றாள்.
அன்று வேலைகளை முடித்து விட்டு அவனிடம் சொல்லிவிட்டு செல்ல வந்து நின்றாள் போன் பேசி கொண்டு இருந்தவன் சற்று பொறு என சைகையில் கூறினான். அவன் கூறிய அனைத்து பணிகளையும் செய்து முடித்தவள் வேலை நேரம் முடிந்ததும் அவன்முன் நின்றாள்.
பத்து நிமிடங்கள் அலுவலக விஷயமாய் பேசி விட்டே இவள் முகம் பார்த்து, நேற்று நான் கேட்டதற்கு இன்னும் பதில் சொல்லாம இருக்குற. அன்சர் மீ என்றான்.
அவளுக்கோ கண்ணை கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. இப்ப தான் உன்னை நல்லவன்னு நினச்சேன். அதுக்குள்ள என்ன ஆச்சி? என எண்ணியவளாக அதை மறைத்து கொண்டு என்ன சார் கேட்டிங்க? என்றாள்.
நம்ம மேரேஜ் பத்தி தான் கேட்கின்றேன். சீக்கிரம் சொன்னா தானே வேகமா எல்லாம் ரெடி பண்ண முடியும். டைம் இல்லமா. என்ன பண்றது சொல்லு?
தோடா நீங்க சொன்னா உடனே சரி சொல்லனுமோ? உங்க எண்ணம் பலிக்காது. ஏன்னா எங்க வீட்டில் ஆல்ரெடி மாப்பிள்ளை பார்த்து ரெடியா இருக்காங்க . மேலும் என் வாழ்க்கையின் முக்கிய முடிவை என் பெற்றோர்கள் எடுப்பார்கள். தன்னிச்சையாய் முடிவெடுத்து கூறும் அளவு நம் பழக்கமும் இல்லை. மேலும் என் மனதில் என் மாமா மட்டுமே சிறுவயதிலிருந்து வாழ்கிறார். அவரை தவிர வேறு யாரையும் நான் திருமணம் செய்ய போவதில்லை. எனவே நீங்க வேறு பெண்ணை பாருங்கள் என கூறினாள்.
ஓ ..உங்க மாமா பெயரென்ன? என்ன செய்கிறார்?
அவர் பெயர் க்ரிஷ். பாரினில் இருக்கிறார். திரும்ப வந்தவுடன் திருமணம் என்றாள்.
அவர் அழகாக இருப்பாரா? என்ன படித்திருக்கிறார்?
அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவரை சிறு வயதில் மட்டுமே பார்த்துள்ளேன் . என் அச்சு மாமா பையன் என்பது மட்டுமே நான் திருமணம் செய்ய காரணம். அவர் எப்படி இருந்தாலும் அவர் மட்டுமே என் கணவர். இது சிறு வயதிலேயே முடிவு செய்த திருமணம் ஆதலால் நீங்கள் உங்கள் மனதை மாற்றி கொள்ளுங்கள் . சாரி சார்.
எதுவும் கூறாமல் இறுகிய முகத்துடன் தலையசைத்து அந்த அறையை விட்டு வெளியே சென்றுவிட்டான்.
கலங்கிய மனதுடன் எப்படியோ ஸ்கூட்டியை ஒட்டி கொண்டு இவளும் வீடு வந்து சேர்ந்தாள்.
வீட்டின் உள்ளே எதுவும் பேசாது சென்ற மகளை கண்ட பிரியா குழம்பினார்.காலையில போகும் போது ரொம்ப டென்ஷனா போனா, இப்பவும் ஏன் ஒன்னும் பேசாம போறாள், இவை இப்படி இருக்க மாட்டாளே? என்ன ஆச்சி? ஒரு வேலை ஆபீஸ்ல ரொம்ப பிரச்சனை போல அதன் எதுவும் பேசாம இருக்கா என அவரும் குழம்பினார்.
இரவு உணவு நேரத்திலும் அவள் தந்தையோடு அரட்டை அடித்து சாப்பிடுபவள் எதுவும் பேசாமலே இருந்தாள். சரி காலையில் என்ன என கேட்டு கொள்வோம் என விட்டு விட்டனர்.
அந்தி சாயும் நேரம் .. பீச் ஓரத்தில் இருந்த ரெசார்ட்டில் அவர்கள் இருந்தனர். மையலாய் பார்த்தபடி ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்த கதிரவனை ஆனந்தமாய் அனுப்பிவைத்தபடி நிலவுமகள் வெளிவர காத்திருந்தனர். ஆரஞ்சும் மஞ்சளும் ஒருங்கிணைந்த வானில் சூரியன் மறைவதை காண அவனுக்கு மிக பிடிக்கும்.
வானில் ஓர் நிலா. அருகினில் ஓர் நிலா என அவள் மடியில் சாய்ந்து விரல்களை பிடித்து கொண்டு விளையாண்டான். சிரித்தபடி அவன் செய்கையில் விரல்கோதி முகம் நாணி நின்றாள் பேதையவள். தன் திருமண நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டே சற்றும் அவள் எதிர்பாரா நேரம் இதழ் முத்தத்தை நிகழ்த்தி விட்டான்.
“ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து
வெண்ணிலாவில் விருந்து
அங்கு போவோம் பறந்து
விண்ணின் மீனை தொடுத்து
சேலையாக உடுத்து “
என எஸ்.பி.பி கொஞ்சும் இசை பாட நொடிகள் நிமிடங்களாயின..
மூச்சுக்கு தடுமாறி கட்டிலில் இருந்து கீழே தவறி விழுந்த பின்னே அரவிந்த் கனவில் முத்தமிட்டதையே உணர்ந்தாள் அபி. ஆனாலும் வியர்வை ஆறாய் வழிய நெஞ்சில் தகதிமிதா என தாளம் போட தவித்து விட்டாள் உணர்வு குவியலில்.
தன் ஆழ்மன ஆசைகளே கனவாக வரும் எனில் அரவிந்த் ஏன் தன்னை முத்தம் கொடுப்பது போல கனவு வந்தது என புலம்பினாள். அவள் எண்ண போக்கில் விடிந்ததை அறியாது விழித்தும் விழியா நிலை நின்றாள்.
அபி ..சீக்கிரம் ..நேரமாச்சு ..ஆபீஸ் கிளம்பலையா ..என அன்னையின் உரக்க குரல் கேட்டபின்பே குளியல் அறையில் ஓடி வேகமாக வேலைக்கு கிளம்பினாள்.
கருநிற சட்டையில் வெள்ளை பாண்ட் – யிலும் அலை மோதும் தேகத்தை கோதியபடி , நிமிர்வாய் அட்டகாசமாய் நடந்து வருபவனை விழியகல பார்த்தாள்.
ஆனால் அவனோ அவளை கண்டுகொள்ளாது தன் பணியினை செய்தவாறே வீடியோ காலில் லண்டன் ஆபீசையும், தன் மற்ற பிற அலுவலக வேலைகளையும் முடித்துவிட்டு நிமிர, மணி இரண்டினை கடந்தது. லஞ்ச் சாப்பிட்டுவிட்டு அறைக்கு திரும்பியவள் கண்டது விசிலடித்தபடி பாடியவனேயே .
” என்ன விலை அழகே !
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன் !
இந்த அழகை கண்டு வியந்து போகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் “
அவளை கண்டவுடன் பாடுவதை நிறுத்தி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டான். எப்போதும் போல அவளே குழம்பி நின்றாள். தான் கனவு கண்டோமா இல்லை உண்மையா என தன்னிடம் ஏதேனும் பேசினால் பதில் கூறலாம் ஆனால் இவனோ கல்லூரி மங்கனாய் சேட்டை செய்கிறானே என நொந்தாள்.




















என் கண்களில் கண்ட நேசம்
மீண்டும் என் கை சேருமா?
உன்னை நினைத்து வாழும்
ஒவ்வொரு நொடியிலும் என்னில் நீ
உணர்வுகளை தொலைத்து விட்டு
உயிரற்ற கூடாய் அலைகின்றேன்
என் சிந்தை நிறைந்தவனே
சற்று சிந்திக்க மாட்டாயா?
வீசும் தென்றலில் உன் வாசத்தை
தேடும் என் மனம் புரியாதா?
உன் விரல் தொடும் நாளில் தான்
என் இமைகள் சுவர்க்கம் காணும்
விட்டு சென்றவனே! என்னை மீட்க வருவாயோ! உன் மடி சாயும்
சிறு குழந்தையாய் ஆர்ப்பரிக்கும்
உள்ளத்தை அணை போட்டு
தடுத்துள்ளேன், வெள்ளம் வரும் முன்
மீண்டு வா! மீண்டும் வா!








error: Content is protected !!