Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Oru Kodi

Minnal Oru Kodi 10

மின்னல்   ஒரு  கோடி

  அத்தியாயம் – 10



Advertisement

   குருவம்மாள்  அவரின்  வீட்டின்  வாசலில் அமர்ந்து  இருக்க.

Advertisement

கோடிஸ்வரன்  குருவம்மாளை  பார்த்துக்  கொண்டே  வீட்டினுள்  சென்றான்.

Advertisement

சுந்தர் , கோடியை பார்த்து   என்ன  ஆச்சுடா .நீ கல்யாணம்  பண்ண  போற  பொண்ணுக்கு.

Advertisement

 ஒன்னும் இல்லண்ணா  சின்ன  காயம்  தான்   சரியாகிறும்.

சின்ன  விஜயத்துக்க  அப்படி. பதறியடிச்சு  போனீயா.

ஆமா! அண்ணிக்கு  ஒன்னுன்னா நீ போவீய  மாட்டீயா.அது மாதிரிதான்.

மணிமொழியும் , அவளும்  ஒன்னா  என்றார்  குருவம்மாள்.

ஏன்மா  இரண்டு பேரும்  ஒன்னு தான்.

அப்படி  சொல்லாத என்றார் குருவம்மாள்.

வேற  எப்படி  சொல்லனுமுன்னு , சொல்லுங்க  சொல்லுறேன்.

 எதுக்கு நீ  ஹாஸ்பெட்டல்  போன .

கௌசிக்கு  அடி பட்டு  ஹாஸ்பெட்டல  சேர்த்துருக்குறத   சொன்னாங்க  அதான்  நான்  போனேன்.

அடிப்பட்டத  நீ  பாத்தீயா. சும்மா  சொல்லுவாளுக.

குருவம்மை பார்த்து  என்ன  உனக்கு  இப்ப  பிரச்சனை . ம்மா  என்றான்  கோடி.

 அவளும் அவ ஆத்த  கமலமும் உன்கிட்ட பொய்  சொல்லி  உன்ன  ஹாஸ்பெட்டலுக்கு   வர  வச்சுருக்காளுக.

கோடிஸ்வரன்  அமைதியாக  இருக்க.

சுந்தர்  தான்,  என்னட  சித்தி  ஏதோ  சொல்லுறாங்க.

கோடி  குருவம்மாளிடம்  நீ  சொல்லும்மா , இன்னும்  நீங்க  என்ன  கேட்கனுமோ  எல்லாத்தையும்   கேளுங்க  மொத்தமா  பதில்  சொல்லுறேன்.

என்னட  என்ன  சொன்னாளுக அவளுக .என்னைய  எதுத்து  ஒரு  பேச்சு  பேச  மாட்ட  இப்போ  பாரு  என்ன  மொறச்சுட்டு  இருக்க. அப்போ  நான்  சொன்னது  தானே.

என்ன  நீ  சொன்னது தானே.

அவளுக   பொய்  சொல்லி  தானே  உன்னை  ஹாஸ்பெட்டலுக்கு  கூப்பிட்டாளுக.

கொடிஸ்வரனுக்கு  கோபம் . என்ன சொல்லி புரியவைக்க தனது  சட்டையில்  இருந்த   இரத்த  கரையை காண்பித்தவன். இதோ பாருமா நீ  நாடகமுன்னு  சொன்னல அவளோட  இரத்தம்.  இப்போ  நம்புவீயா. இல்ல மறுபடியும்  வேற  ஏதாவது  சொல்லுவீயா.

உண்மையா  கோடி  அந்த. பிள்ளைக்கு அடிபட்டு இருக்கு.

நீ வாங்கிட்டு போனல அந்த  வளையலை  அவ கையில் இருந்து கழட்டும்   போது கையை  கிழிச்சுருச்சு  போதுமா.

அது எப்படி வளையல்  கையை கிழிக்கும்  என்றார்  குருவம்மாள்.

உன்கிட்ட  சொல்லி  புரிய வைக்க  முடியாது.

சுந்தரிடம் வந்தவன்  நான் என்னுடைய  காசை  தான்  சிவாவுக்கு  குடுத்தேன். சிவா திருப்பி  கொடுத்தால்  வாங்கிப்பேன்.

 குருவம்மாளிடம் வந்தவன். உன் பையனுக்கு நல்ல  படியா  கல்யாணம்  நடக்கனுமுன்னு  நெனச்ச . கௌசி  குடும்பத்தை பத்தி இனி நீ பேச கூடாது. அப்படி இல்ல நான் அப்படி  தான் பேசுவேன்னு  சொன்ன  கல்யாணத்த  நானே  நிருத்திருவேன்.

 கௌசி  ஒன்னும்  இல்லாதவ  இல்ல. சொத்து ,காசு , எல்லாம் இருக்கு  அதுக்கு  மேல  படிப்பு இருக்கு. என் கிட்ட  என்ன  இருக்கு  காசு  மட்டும் தான் இருக்கு.  எனக்கு  பிடிச்ச  பொண்ண   கல்யாணம்  பண்ணி  நல்ல வாழனுமுன்னு  ஆசை  படுறேன்.அது உங்க கையில் தான்  இருக்கு. என் கல்யாணத்தை  எல்லோரும் சேர்ந்து  நல்ல  படியா  நடத்தனுமுன்னு  ஆசைபடுறேன்  என்றான்  கோடி.

குருவம்மாள்   நான்  ஒன்னும்  பேசல  போதுமா. இனிமேல்  வாயை  திரக்க மாட்டேன்.நீ ஆச்சு உன்  வாழ்க்கை ஆச்சு. கல்யாணத்துக்கு வருவேன்  அவ்வளவு தான்  என்றவர் சாப்பாடு  எடுத்து வைக்குறேன்.சாப்பிட்டு  போ என்றார்.

கோடிஸ்வரன்  குருவம்மாளின்  கழுத்தை  பின் இருந்து  அணைத்து கொண்டான். என்  அம்மால  , சாரிமா  கோபமா  பேசிட்டே.

ஒன்னும் வேண்டாம்  போடா  என்றார்.

சுந்தர் தான்  ஏன்டா சித்தி  கிட்ட கோபமா  பேசுற.   அவங்க உன் மேல  எவ்வளவு  பாசம் வச்சுருக்காங்கன்னு  உனக்கு தெரியாத.  இங்கே  பாரு என்று குருவம்மாள்  கல்யாணத்துக்கு வாங்கி வந்த  உடைகளை  காண்பித்தவன். மணிமொழியை அழைத்து  கௌசி  சாரியை  எடுத்துட்டு வா என்றான்  சுந்தர்.

மணிமொழி  கோடியிடம் புடவை கவரை  குடுத்துவிட்டு செல்ல.

குருவம்மாள்  4 புடவை இருக்கு கோடி நீ போய் குடுத்துடு  பிளவுஸ்  தைக்கனுமுல  அவங்க புடிச்ச மாதிரி  தச்சுகட்டும் .

சரிமா என்றான். அப்பறம் கோடி உனக்கு நான் ட்ரெஸ் எடுக்கல.அளவு தெரியாது.

நான் எடுத்துக்கிறேன்மா.

குருவம்மாள் கோடியை ஒரு வாட்டி  தென்றல் வீட்டுக்கு  போய்  எல்லாரும்  ஒரு வாரம் முன்ன  கல்யாணத்துக்கு  வந்துருங்க  அப்படி சொல்லியிட்டு  வா. மாப்பிள்ளை கிட்டையும்  போன் போட்டு  பேசு .

சரிமா அப்பறம்.

 அது  நான் உன் கல்யாணத்து  தாலி  வாங்கிட்டேன். அந்த  பொண்ண   நகை  கடைக்கு கூட்டிட்டு போய் .தாலி செயின்  வாங்கிகிட்டு  வந்துரு  காலேஜ் போற பொண்ணு  நான் எடுத்த  பிடிக்குமோ , பிடிக்காதோ.

 நீங்கலே  எடுங்கமா  அவளுக்கு. பிடிக்கும்.

 வேண்டாம்  அந்த பிள்ள தான் போட போகுது. பிடிச்ச  மாதிரி எடுத்து கொடு என்றவர். நைனா உன்கிட்ட   பேச  வர சொன்னார்  போ  என்றாள் .

 கோடி  பழனியின்  அறைக்கு  சென்றான். மகனை  எதிர்பாரத்து  இருந்தார் பழனி.

எப்படி இருக்க  ஈஸ்வரா   என்றார் பழனி.

நான்  நல்ல  இருக்கேன்பா.

மருமக  போட்டோ இருக்க  என்றார்.

இதோ பா  என்று கௌசியின்  புகைபடத்தை  காண்பிக்க.

நல்ல  இருக்க  என் மருமக  என்றவர். அம்மா  கிட்ட  என்ன  பிரச்சனை கோடி.

 அது  ஒன்னும்  இல்லப்பா  சமாதானம்  பண்ணிட்டேன் . சரி நைனா   மாத்திரை எல்லாம்  சரியா  போடுறீயா , சுகர்  கன்ரோல்லுல  இருக்க  என்று  தந்தையிடம்  விசாரித்து  விட்டு . அவன்  வீட்டுக்கு   கிளம்பினான்.

மறுநாள்  காலையில்  கமலத்திடம்  புடவையை  கொடுத்தவன்.10  மணிக்கு  வந்து  கௌசியை  ஹாஸ்பெட்டலுக்கு  அழைத்து  செல்வதாக  சொல்ல.

கமலம்   தம்பி  உங்களுக்கு  கல்யாண  வேலை  அதிகம்   இருக்குமே.

கோடிஸ்வரன்  எல்லாம்  உள்ளுர் தான்  அக்கா . பாத்துக்கலாம்.

சரியாக  10  மணிக்கு . கௌசியின்  வாசலில்   காருடன்  வந்து நின்றான் கோடி.

சிவா  கோடிஸ்வரன்   வந்ததை பார்த்து  கௌசியை அழைத்து  வெளியில் வர.

 கோடி  நான்  கௌசியை  ஹாஸ்பெட்டலுக்கு   கூப்பிட்டு  போறேன் என்றான்.

சிவா  நீங்க  கூட்டிட்டு  போங்க  சார்.எனக்கு  ஒரு வேலை  இருக்கு  முடிச்சுட்டு வரேன்.அப்பறம் சார்  உங்களுக்கு  அம்மா  மோதிரம் , செயின்  வாங்க  சொன்னாங்க. நீங்க  ஹாஸ்பெட்டலுல  வேலை  முடிச்சுட்டு சொல்லுங்க. நான்  வரேன் என்றான்.

சரி சிவா  என்றவன். கௌசியை முன்  சீட்டில்   மெதுவாக அமர வைத்து விட்டு.கோடி  காரில்  ஏறி  கிளம்ப.கௌசி  கோடியை  பார்த்த  வாறு  திரும்பி  அமர்ந்து  கொண்டாள்.

கோடிஸ்வரன்  இப்படி  என்னைய நீ  பார்த்த.   நான்  எப்படி  வண்டி  ஓட்டுறது.

நான் பார்த்த  உங்களுக்கு என்ன.நீங்க  ரோட்ட  பார்த்து  காரை  ஓட்டுங்க.. நீங்க  காரை எப்படி  ஓட்டுறீங்கன்னு  பார்த்தேன்  நல்ல  தான் ஓட்டுறீங்க. கார்  கூட  சூப்பர  இருக்கு சார்.

கௌசியை பார்த்து  சிரித்தவன். கையில்  வலி  எப்படி  இருக்கு.

வலி  ஒன்னும்  இல்லை .பெய்ன்  கில்லர்  மாத்திரை  போட்டு  இருக்கேன்.

காலையில் சாப்பிட்டீயா  கௌசி  என்றான்  கோடி.

ம்ம்..  சாப்பிட்டேன் . நீங்க.

இன்னும்  இல்ல. என்றான்  கோடி.

ஏன் மணி  10  க்கு  மேல  ஆச்சு.

அது காலையில  கொஞ்சம் வேலை அது தான். மதியம் உன் கூட சேர்ந்து சாப்பிடுறேன்.

அப்படி எல்லாம் சேர்ந்து சாப்பிட  கூடாது  அல்சர்  வந்துரும்.நீங்க  முதல்ல  ஒரு  ஹோட்டல்ல  நிப்பாட்டுங்க .நீங்க  சாப்பிட்ட பிறகு ஹாஸ்பெட்டல்  போகலாம் என்றவள். கோடியை  காலை  உணவு  உண்ண  வைத்து  விட்டு  ஹாஸ்பெட்டல்  சென்றனர்.

ஹாஸ்பெட்டல்  சென்று  காயத்துக்கு  மருந்திட்டு . 5  நாள்  கழித்து வாருங்கள்  தையலை  பிரிச்சிடலாம்  என்று  சொன்னார்கள்.

கோடியும்  கௌசியும்  ஹாஸ்பெட்டலில்  இருந்து வெளியில்  வர. சிவா  இவர்களுக்காக  காத்திருந்தான்.

மூன்று  பேரு சேர்ந்து  நகைகடைக்கு  சென்றனர். முதலில்  கோடிக்கு தான்  செயின்  வாங்கினார்கள்.கௌசிதான்  கோடிக்கு செயினை   செலக்ட்  பண்ணினாள்.பின்பு  கோடிக்கு மோதிரம்  வாங்க  கௌசி   இது நல்ல  இருக்க என்று கோடியில்  கைவிரலில்  போட்டு  பார்க்க.  இது  நல்ல  இல்ல . இது  ஓகே என்று கோடிக்கு  ஒன்று , ஒன்றாக  போட்டு  பார்க்க.

 கோடி  கௌசியை  ஆசையாக  பார்த்து  இருந்தான். தனக்கு ஒவ்வொரு  மோதிரமாக பார்த்து செலக்ட்  பண்ணும்  கௌசியை அவனுக்கு அவ்வளவு  பிடித்தது.

கௌசி  அவனுக்கு  கைக்கு பொருத்தமான  மோதிரத்தை  ஒன்றை  செலக்ட் பண்ணியவள்.கோடியிடம்  கேட்க .

உனக்கு  பிடிச்ச ஓகே  என்றவன்.

கௌசி சிரித்து கொண்டே அண்ணா  இது ஓகே என்றாள்.

சிவா அதை வாங்கி பில் போட சென்றான்.

கோடி  சிவாவிடம்  நான்  கௌசிக்கு  தாலி  செயின்  வாங்க அவளை  கூப்பிட்டு  போறேன்  என்றவன். ஒரு  புகழ் பெற்ற  கடையின்  பெயரை  சொல்ல .

சரி  சார் கூப்பிட்டு போங்க  என்றான்.

என்ன  சிவா  இப்பையும்  சார்  கூப்பிடுறீங்க. மாமான்னு  கூப்பிடங்க,இல்ல  மச்சான்னு கூப்பிடுக  என்க.

சரி  மச்சான் என்றான்  சிவா.

கோடி  நானே  கௌசியை  வீட்டில் விட்டுடுறேன்  என்றவன்  கௌசி  அழைத்து  கொண்டு  அவன் எப்போதும்  வாங்கும்  கடைக்கு  சென்றான்.

அது  ஒரு பெரிய  நகைகடை.

கௌசி   ரொம்ப  பெரிய  கடைய. இருக்கே  என்றான்.

வா  கௌசி  என்றவன் .தாலி  செயின்  இருக்கும்  இடத்துக்கு  அழைத்து  சென்றான்.

  11 பௌவுன  தாலி செயின்  எடுக்க என்றான் கோடி  கௌசிக்கு.

அவளோ  கோடியிடம்  அவ்வளவு  பௌவுனுல   வேண்டாம்  சார்.  5 இல்ல 7 ல போதும்.

 நீ சும்மா இரு கௌசி 11 பௌவுன  போட்ட  தான்  பார்வையா  இருக்கும்.

சார் என்றவள். கோடி  மாமா  பிசிஸ்  சின்னதா  போதும்  என்று  கை  பிடித்து கொண்டு  கொஞ்சி கேட்க.

 உனக்கு பிடிச்ச  மாதிரியே  எடுக்கலாம் என்றவன்.11 பௌவுனின்  பார்க்க  பெருச  இல்லாம   கொஞ்சம்   மெல்லியதாக   செயினை  கோடி  எடுக்க  சொல்ல. அவன் சொல்லியது போலவே  கடைகாரர்   எடுத்து  காண்பிக்க.

கௌசிக்கும்  கோடிக்கு  மிகவும்  பிடுக்க  அதனையே எடுத்தனர்.

கடைகாரர்   செயினை  போட்டு  பாருக்க  சார் என்க.

கௌசிக்கு   கையில்  அடிபட்டதினால்.  கோடியே  செயினை  எடுத்து  கௌசியின்  கழுத்தில்  ஆசையாக  போட்டு பார்க்க. கண்ணாடி  முன் நின்று பார்த்தவள். நல்ல  இருக்க  என்ற  கோடியிடம்  கேட்க.

தலையாட்டி  சூப்பர் என்றான். இதை  பில் போடுங்க  என்றவன். அவளின் கழுத்தில்  இருந்து கழட்டி  விட்டான்.

கோடிஸ்வரன்  கௌசியை  அழைத்து  அவளுக்கு  ஒரு நகை செட்  வாங்க சொல்ல.

அவளோ வேண்டாம் சார் என்றாள்.

ஏன் கௌசி வாங்கிங்கோ என்றான்.

வேண்டாம் என்று மறுபடியும் சொல்ல.

கோடீஸ்வரன்  அவனுக்கு  பிடித்த  இரண்டு   நகை  செட்டை செலக்ட்  பண்ணியவன்  அவளிடம்

 காண்பிக்க. அதில் கம்மல், நெத்தி சூட்டி, ஆரம் என்று  அழகாக  இருக்க அதில் ஒன்றை  இது  நல்ல  இருக்க  என்று  கோடி  காண்பித்ததை  சொல்ல.அதையே  வாங்கியவன்.

 கௌசிக்கு  தங்க வளையலும் வாங்கி  தந்தான்.

கௌசி  போதும்,மாமா  ,சார் என்று அவள்  சொல்லியும் அவன் விட  வில்லை.

கௌசியை    நகை  அளவு  எடுக்கும்  இடத்துக்கு  அழைத்து. சென்றவன். கௌசியை  அளக்க  சொல்லி  அவன்   போனில். உள்ள  பில்லை  காட்ட  ஓகே  சார்  என்ற  ஒரு  பெண் மணி  கௌசியின் இடுப்பை  சுற்றி  அளவு  எடுக்க .

கௌசி  கோடியை  பார்த்து   ஒட்டியாணமா  என்றாள்.

இல்லை என்றான்  கோடி.

வேற என்ன என்றாள் கௌசி.

 அதை   நமக்கு  கல்யாணம்  ஆகுமுல. அன்னைக்கு நைட்டு  காட்டுறேன்.

 அவளோ  அது என்ன மாமா  சொல்லுங்க என்று கேட்க.

நோ என்றான்  கோடி.

 கௌசிக்கு வாங்கிய  நகைகளுக்கு பில்லை கட்டியவன். தாலியை மட்டும் அவன் எடுத்து கொண்டு.மற்ற  நகைகளை கௌசியிடம் கொடுத்தான்.

கௌசி  என்க்கிட்ட  ஏன்  கொடுக்குறீங்க.

உனக்கு வாங்குனது  நீ கொண்டு போ.

 இல்ல  கல்யாணம் நடக்குறப்போ  அத்தை கிட்ட சொல்லி  என்க்கிட்ட  கொடுக்க.

இங்கே  பாரு கௌசி  உனக்கு வாங்குனது. எனக்கு தெரிஞ்ச  போதும் . எல்லாருக்கும்  தெரியனுமுன்னு  ஒன்னும் இல்ல. எனக்கு  உனக்கு  நகை வாங்கி கொடுக்கனுமுன்னு  ஆசை  வாங்கி கொடுத்தேன்.

சாப்பிட போலமா  என்றான்.கௌசியும் அவனும் சென்று மதிய  உணவு உண்டனர்.

கௌசியை   கோடீஸ்வரன் லால்பார்க்  அழைத்து வர.

இங்கேய  போறோம் என்றாள் கௌசி.

ஆமாம் ஏன் கௌசி உனக்கு டையடா இருக்க.  உனக்கு கஷ்டம இருந்த  சொல்லு  திரும்பி போய்யிடலாம்..

அப்படி  ஒன்னும் இல்ல சார்  போலாம்.

 கோடிஸ்வரன்   கௌசியின்  கைபிடித்து   பார்க்கின்னுள்  நடந்து வர.

கௌசி  கோடியை பார்த்து  உங்க முகம்  ரொம்ப  மகிழ்ச்சியா  இருக்கே  என்ன  விசயம் என்றாள்.

கௌசியின்  தோள்மீது  கைபோட்டு  நடந்தவன். என்னுடைய  எந்தன  நாள் கனவு  தெரியுமா  என்றான்.

என்ன கனவு?

 அது  என் பிரெண்ட்ஸ்  எல்லாம்  நான் எப்போ  போன்  போட்டாலும். நான்  என்  லவ்வர்கூட  லால்பார்க் வந்துருங்கேன்  டா  கோடி என்று என்னை  வெறுப்பேத்துவானுங்க. அப்போ நான் நெனச்சுப்பேன்  வாழ்க்கையில  ஒரு வாட்டியாவது  நம்ம  லவ்வர   இந்த பார்க்கிற்கு  கூட்டிட்டு  வரனுமுன்னு  இப்போ தான்  என் ஆசை  நிறைவேறியது என்று  சொல்லி கௌசியுடன் ஒரு சேரில் அமர்ந்தான்.

கௌசி  கோடிஸ்வரனை   பார்த்து புதுசு ,புதுச  ஏதாவது  சொல்லுறீங்க  கேட்க  ரொம்ப நல்ல  இருக்கு என்றாள். இரண்டு  பேரும்  கொஞ்ச  நேரம்  அமைதியாக  இருக்க.

கௌசி  கோடியின்  தோளில்  சாய்ந்து  கொண்டு பார்க்கை  வேடிக்கை பார்த்து கொண்டே கோடி சார் என்றாள் .

என்ன சொல்லு கௌசி என்றான் கோடி.

நான்  கல்யாணத்திற்க்கு  பின்பும்  படிப்பேன். உங்களுக்கு ஒன்னும்  கஷ்டம் இல்லையே.

 கோடிஸ்வரன்  நீ  படி வேலைக்கு  போ  எனக்கு  ஒன்னும்  பிரச்சனை இல்லை  ஆனா  ஒன்னு .

என்ன  என்றாள் கௌசி.

குழந்தை  மட்டும் உடனே  வேணும். எனக்கு  ஏற்கனவே வயது ஏறிட்டே போகுது  என்று  சொல்ல .

சரி என்றாள்  கௌசி.  அவளின்  முகத்தை கோடியின்  தோளில்  வைத்து  மறைத்து கொண்டே.

நீ வேலைக்கு போ நான் நம்ம பிள்ளைகளை பாத்துக்குறேன் என்றான்  கோடி  ஆசையாக.

அவளோ  கோடியின்  முகத்தை பார்த்து  இன்னும்  கல்யாணமே ஆகல.

ஆன பிறகு இது எல்லாம் நடக்கும் தானே.

 ஆமாம்  என்று கௌசி சிரிக்க.

இப்படி  இரு  எப்போதும்  சிரிச்ச மாதிரியே  என்றவன்  கௌசியை  பார்த்து. அப்பறம்  கௌசி நான்  திருப்பதி  போறேன்.

  சுவாமிக்கு   நம்ம கல்யாண பத்திரிக்கை வச்சுட்டு , அவருக்கு  நன்றி சொல்லிட்டு  வர்ரேன்.

எதுக்கு நன்றி என்றாள் கௌசி.

 உன்னை  எனக்கு கொடுத்து இருக்காருல  அதுக்குதான். நான் வர  இரண்டு, மூனுநாள் ஆகும்.

வந்தவுடன்  கல்யாண வேலை இருக்கும். உன்ன   பார்க்க  நேரம்  இருக்காது. உடம்ப  பாத்துக்கோ என்றவன்.

கௌசியை வீட்டில்  விட்டு  திருப்பதிக்கு  கிளம்பிவிட்டான்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!