Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மௌனமாய் ஒரு காதல் செய்வோம்

காதல் ❤️ 8

அருளை துரத்தி கொண்டு இருவர் ஓட அவர்கள் பிடிக்காமல் இருக்க மீதி இருவர் ஓட அரை மணிநேர ஓட்டத்திற்கு பிறகு அருள் வானதி கையில் மாட்டினான்மற்ற மூவரும் போங்க டா என்று போய் விட்டனர்அதுவும் அருள் விரும்பியே அவளிடம் மாட்டிக்கொண்டான்…..வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்தின் ஓரத்தில் அவன் நிற்க அவனை பிடிக்க ஓடிவந்தவளும் நின்று இருந்தவனை பிடித்து முதுகில் நான்கு ஐந்து அடி அடித்துவிட்டு அப்படியே அவனை பின்புறமாக அணைத்து கொண்டு அவன் முதுகில் சாய்ந்து நின்றுவிட்டாள்….

முதலில் சிரித்து கொண்டு இருந்தவன் அதன் பிறகு தன் முதுகில் ஈரத்தை உணர்ந்தான்… “குட்டிமா என்ன ஆச்சு ஏன் அழடேய் முன்னாடி வாதேவிமா என்ன ஆச்சு ஏன் டா அழ…” என்று அவளை தன் முன் அழைத்தான்ஆனால் அவளோ அவனுடன் இன்னும் ஒன்றினாள்….

சிறிது நேர முயற்சிக்கு பின்பு தான் அவனுக்கு முன் வந்தாள்…. அவனுக்கு முகத்தை காட்டாமல் மார்பில் சாய்ந்து கொண்டாள்அவளை தன்னிடம் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்த அருள் வானதியின் முகத்தை தன் கையில் ஏந்திஎன்ன ஆச்சு குட்டிமாஎதுக்கு இந்த அழுகையாரோ உன்னை எதோ சொல்லிட்டாங்களா டாஎதுவா இருந்தாலும் மாமா கிட்ட சொல்லு டாஅவளின் கண்ணை துடைத்தவாறு கேட்டான்….



Advertisement

அவனின் அலைபேசியை எடுத்துமாமா சீக்கிரம் துபாய் போய்ட்டு வந்துடுநீ சொல்லும் போது சரினு சொல்லிட்டேன்ஆனா திரும்பியும் உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியும்னு தோணல மாமாநாம வேணும்னா வீடு என்னோட நகை எல்லாத்தையும் வித்து கூட சூப்பர் மார்க்கெட் வைக்கலாம் தானே அதுக்கு அப்பறம் நீ எனக்கு நகை வாங்கி குடேன்துபாய் நீ போகாத மாமாகண்டிப்பா துபாய் போய் தான் ஆகனுமா“…. என்று டைப் செய்து காட்டினாள்….

அதை படித்து பார்த்து விட்டுகுட்டிமா இங்க பாருநமக்கு நிறைய செலவு இருக்கு டா இன்னும்கேஸ் நம்ம பக்கம் வர மாதிரி இருந்தாலும் கேஸ் எல்லாம் முடிஞ்சி சொத்து எல்லாம் கைக்கு வர ஆறு மாசம் மேல ஆகிடும்நாம ரஞ்சி கல்யாணத்துக்கு அஞ்சு பவுன் மட்டும் தாம் போட்டோம்அதுவே அத்த மாமா வீரா மூனு பெரும் வேண்டாம்னு சொன்னாங்கஆனா போட வேண்டியது நம்ம கடமை…. தம்பிக்கு காலேஜ் பீஸ் கட்டனும் டா.. நீ வரதுக்குள்ள வீட்டை சரி பண்ணனும்இப்படி நிறையா வேலைகள் இருக்கு டா…. ப்ளீஸ் மாமாவை புரிஞ்சிக்கோவேன் குட்டிமாகண்டிப்பா ரெண்டே வருஷம் டா அதுக்கு அப்பறம் உன்னை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன் டா

மனதே இல்லாமல் மீண்டும் அலைபேசியில்சரி மாமா ஆனா நீ ரெண்டு வருஷத்துல வரணும்…. எனக்கு தினமும் வீடியோ கால் பண்ணனும்காலைல நைட் ரெண்டு நேரமும் மெஸேஜ் பண்ணனும்என்று டைப் செய்து காட்டினாள்….

Advertisement

அவனும்கண்டிப்பா குட்டிமாபோய் ரெடி ஆகு ரெண்டு பேரும் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு போயிட்டு வரலாம்” என்று கூறினான்

Advertisement

ஆனால் அவளோ எல்லாரும் வந்தா தான் வருவேன் என்று சைகையில் கூறினாள்எனவே அவனும் அனைவரையும் அழைத்தான்பெரியவர்கள் அனைவரும் வரவில்லை என்ன ஒன்றுபோல் கூறிவிட்டனர்எனவே சிறியவர்கள் மூவரையும் அழைத்துக்கொண்டு வேலன் ரஞ்சியுடன் காரில் செல்ல அருளும் வானதியும் அருளின் யமஹா rx 100 பைக்கில் அவர்களை பின் தொடர்ந்தனர்

ஞாயிற்றுகிழமை கோவிலில் கூட்டமாக இருந்ததுஇருந்தும் கோவிலுக்கு சென்று முனியப்பனை மனதார வேண்டிவிட்டு சாமி பதத்தில் வைத்து பூஜை செய்த கயிறை வாங்கி வானதி அவன் கையில் கட்டிவிட்டாள்

பின் தேவா யுகேன் பாரதி மூவரும் பார்க்கு செல்லலாம் என கூறியதால் அனைவரும் அங்கு சென்றனர்….யுகேன் பாரதி இருவரும் ஒரே கிளாஸ் வகுப்பு தான்… தேவதரண் இருவரை விட இரண்டு வருடம் பெரியவன்தேவா முதலாம் ஆண்டு சேலத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து கொண்டு இருக்கிறான்

Advertisement

யுகேன் பாரதி இருவரும் சிறுபிள்ளை போல் அங்கிருக்கும் ஊஞ்சல் சீசா என அனைத்திலும் விளையாட தேவா இருவருக்கும் துணையாக இருந்தான்காதல் ஜோடிகள் இரண்டும் ஆளுக்கு ஒரு பெஞ்சை பிடித்து அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்

ரஞ்சனிக்கு ஜாதகம் சரி இல்லாமல் சீக்கிரம் கல்யாணம் செய்து வைத்து இருந்தனர்.. வேலனுக்கு அவள் இன்னும் மேலே படிக்க வேண்டும் என்று ஆசைஎனவே அவளை படிக்க கூறினால் அவள் ரொம்ப தூரம் முடியாது என கூறிக்கொண்டு இருந்தாள்… ug அங்கு தானே படித்தாய் இப்போதும் போய் படி என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்..

அவனின் பெற்றோர்களிடம் சென்று சொன்னால் அவன்சரியா தான் சொல்றான் போய் ஒழுங்கா படிஎன்று அவளின் மாமியார் கூறிவிட்டார்…. எனவே தற்போது முதல் வருட கடைசியில் உள்ளாள் அவள்

எனவே இருவருக்கும் இது போன்ற தனிமையான பொழுதுகள் எப்போதாவது தான் கிடைக்கும் எனவே இருவரும் அதை ரசித்து கொண்டு உள்ளனர்…. இங்கு அருளும் வானதியும் சிறிதுநேரம் பேசிக்கொண்டு இருந்தனர்பார்க் ஆறு மணிக்கு மூடி விடுவதால் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியதுஎனவே இருவரும் சிறுபிள்ளைகள் போல் சீசா விளையாடி கொண்டு இருந்தனர்

பின் ஐந்தே முக்கால் ஆகியதால் அனைவரும் வீட்டிற்கு கிளம்பினர்…. மீண்டும் அனைவரும் வேலன் வீட்டிற்கே சென்றனர்

பத்மினியையும் ரஞ்சனி அவளின் மாமியார் வற்புறுத்தலின் படி அழைத்தாள்அவர் வரவில்லை என கூறியதால் அவருக்கு உணவு தேவாவிடம் குடுத்து  அனுப்பி வைத்துவிட்டாள்….

இரவு உணவு அனைவரும் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து கதைகள் பேசியவாறு சாப்பிட்டனர்இரவு மேலே மொட்டை மாடியில் தூங்கலாம் என முடிவு செய்து பெரியவர்கள் அனைவரும் கீழே தூங்க மற்றவர்கள் அனைவரும் மேலே சென்றனர்.. முதலில் வானதி படுக்க அடுத்து பாரதி படுத்தாள் அவளுக்கு அடுத்து ரஞ்சனி தூங்க அடுத்து தூங்க வந்த வேலனை தள்ளி விட்டுவிட்டு யுகேன் அவளருகில் தூங்கினான்…. யுகேனுக்கு எப்போதும் வேலனிடம் வம்பு வளர்ப்பது பிடிக்கும்….

அவனை திட்டிக்கொண்டே அவனுக்கு அடுத்து படுக்க அவனை தொடர்ந்து தேவாவும் கடைசியாக அருளும் படுத்தனர்… அந்த நாள் அனைவர் மனதிலும் பதிந்து விட்டது

மேலும் இரண்டு வாரம் சென்று இருக்க அருள் துபாய்க்கு கிளம்பும் நாளும் வந்ததுஅவன் பத்மினியிடம் கூறவே இல்லைரஞ்சனி தான் வேலுவின் ஆலோசனை படி கூறினாள்.. அவர் எதுவும் கூறவில்லைகேட்டுக்கொண்டார் அவ்வளவு தான்

அன்று முனியப்பன் கோவிலுக்கு சென்றபோது பத்மினியும் சென்று இருந்தார் மனதே சரி இல்லை என…. அவர் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சாமி கயிறு வாங்க முற்படும் போது வானதி யுகேன் தேவா அருள் மூவருக்கும் கட்டிவிட்டு கொண்டு இருந்தாள்

எனவே அவர் அவர்களுக்கு தெரியாமல் சாமி கும்பிட்டுவிட்டு சென்றுவிட்டார்…. அவர்கள் காணாதவாறு அவர்களை பின்தொடர்ந்தார்அருள் வானதியுடன் எவ்வாறு சந்தோசமாக உள்ளான் என கண்டுவிட்டு கேட்ககூடாதவர்கள் பேச்சை கேட்டு என்ன காரியம் செய்ய துணித்துவிட்டேன் என நினைத்து மீண்டும் வீட்டுக்கு சென்றுவிட்டார்….

அதன்பிறகு மிக அமைதியாகிவிட்டார்மகன்கள் மூவரும் அவரிடம் பேசவே இல்லைரஞ்சனி தான் அவரிடம் பேசிக்கொண்டு இருப்பாள் தினமும்துபாய் செல்லும் நாளில் சென்று வருகிறேன் என்று மட்டும் கூறிவிட்டு வேலுவின் காரில் ஏறிக்கொண்டான் அருள்

காரில் வேலு வானதி அருள் மூவர் மட்டுமே இருந்தனர்அவன் ஏறியதும் கார் சென்னையை நோக்கி சென்றதுமுதலில் சேலத்தில் இருந்து சென்னை அங்கிருந்து துபாய்க்கு செல்லலாம் என முடிவு செய்தனர்திடீரென அதை வேண்டாம் என முடிவு செய்து இங்கிருந்து காரில் சென்னை சென்று அங்கிருந்து துபாய் செல்லட்டும் என முடிவு செய்து தற்போது காரில் புறப்பட்டு உள்ளனர்

முன் சீட்டில் வேலு கார் ஓட்ட அவனுக்கு அருகில் அருள் அமர்ந்தான்…. பின் இருக்கையில் வானதி அமர்ந்து வந்தாள்அரை மணிநேர பயணத்திற்கு பிறகு காரை நிறுத்திய வேலு அருளிடம்டேய் இறங்கி பாப்பா பக்கத்துல உட்காந்து பேசிட்டு வாதிரும்பியும் ரெண்டு வருஷம் கழிச்சி தான் பாக்க போறஎன்று அவனை வற்புறுத்தி பின் பக்கம் அமர் வைத்தான்

அவன் உட்காந்த நொடி வானதி அவனின் தோள் சாய்ந்து கொண்டாள்அடுத்து சென்னை செல்லும் வரை பயணம் மௌனமாகவே சென்றது இடையில் மத்திய உணவு மட்டும் உட்கொண்டனர்சென்னையில் அவனுக்கு இரவு ஒன்பது மணிக்கு தான் பிளைட்எனவே பொறுமையாகவே சென்றனர்

பிளைட்டுக்கு செல்லும் நேரமும் வந்ததுஅருள் இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு செக் இன் செய்ய உள்ளே செல்ல அவன் செல்வதை பார்த்து வந்த அழுகையை அடக்கி கொண்டு நின்று இருந்தாள்….அவன் பிளைட் ஏறியவுடன் இவர்கள் சிறிது நேரம் ஏர்போட்டிலேயே ஓய்வு எடுத்துவிட்டு மேட்டூரை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்…. வானதிக்கும் கார் ஓட்ட தெரியும் என்பதால்  டிராபிக் இல்லாத இடத்தில் வேலுவை கார் நிறுத்த சொல்லிவிட்டு அவள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து அவனை தூங்க சொல்லிவிட்டு அவள் மேலூர் வரை ஓட்டி வந்து இருந்தாள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!