Skip to content
Post Views: 2,430
மின்னல் ஒரு கோடி
அத்தியாயம் -11
Advertisement
Advertisement
கோடிஸ்வரன் திருப்பதி சென்று வந்ததில் இருந்து திருமணவேலைகளை பார்த்து கொண்டு இருந்தான்.
Advertisement
நடுவில் ஒரு நாள் கௌசியை பார்க்க வர அவளோ. அவளின் அக்கா கூட அழகு நிலையம் சென்று இருந்தாள்.
Advertisement
இப்படி என்று நாட்கள் வேகமாக ஓடியது. கல்யாணத்துக்கு மூன்று நாட்களே இருக்க. கோடியின் திருமணத்துக்காக குருவம்மாள் வீட்டில் முகூர்த்த கால் நட்ட.
இங்கே கமலம் வீட்டில் முகூர்த்த கால் நட்டினார்கள்.
இருவருக்கும் பார்த்து கொள்ள ஆசையாக இருக்க.கோடிக்கு வேலைகள் அதிகம் இருப்பதால்.கௌசியை பார்க்க வர முடிய வில்லை.
நந்தினியும் , கௌசியும் கைகளுக்கு மருதாணி வைக்க ப்பியுட்டி பார்லர் வந்து இருந்தனர்.அவர்கள் வந்து இருந்தது . கோடியின் காம்புளக்ஸ்சில் உள்ள கடையில். கௌசிக்கு எப்படியாவது கோடியிடம் பேச வேண்டும் என்று நினைத்து இருக்க.
முதலில் கௌசிக்கு மருதாணி கைநிறைய வைத்து இருக்க. கௌசியின் அடிபட்ட இடத்தை மட்டும் விட்டு மற்ற இடங்களில் மருதாணி டிசைன் போட்டு இருந்தனர்.
பின்பு நந்தினிக்கு கையில் போட ஆரம்பித்தார்கள் எப்படியும் 1 மணிநேரத்துக்கு மேல ஆகும் . ஒருவருக்கு கையில் மருதாணி போட.
கோடி காம்புளக்ஸ்சில் உள்ள அவனின் ரூம்பிற்க்கு செல்லவதை பார்த்த கௌசி. நந்துவிடம் அக்கா நான் கோடி சாரை பார்த்துட்டு வந்துருறேன் என்று கிளம்ப.
சிரித்த நந்தினி 1 மணி நேரம் உனக்கு டைம் சீக்கிரம் வா.அம்மா தேடுவாங்க நான் இங்கேயே வைட்டு பண்ணுறேன்.
தாங்யூ அக்கா என்றவள். தன் இரண்டு கைகளிலும் மருதாணி போட்டு இருக்க .இரண்டு கைகளையும் நீட்டிய வாரே. கோடியின் அறை நோக்கி சென்றாள். கோடியின் அறை திறந்தே இருந்தது. வாசலில் நின்று கொண்டே கோடி சார் என்று சத்தம் கொடுக்க.
கோடி ஓய்வு அறையில் இருக்க. யார்ரது கௌசி மாதிரியே குரல் கேட்குதே என்றவன்.வேகமாக வெளியில் வர.
கௌசி தனது இரண்டு கையை நீட்டியவாரே கோடியை பார்க்க.
கோடிக்கு மிகவும் சந்தோஷம். வேலை ,வேலை என்று செய்து கொண்டே இருந்தவனுக்கு ஓய்வு எடுக்க தன் ரூம் வந்தான்.அத்தனை களைப்பும் தன்னை விட்டு போனது போல இருந்தது கௌசியை பார்த்ததும்.
கௌசியிடம் வேகமாக சென்றவன்.அவளிடம் பேசாமல்
வெளியில் சென்று பார்த்தவன். தனியா வா வந்த.
ஆமாம் என்றவளை.
கதவை சாத்தியவன்.கௌசியை அலேக்காக தூக்கி இருந்தான்.
கௌசி ஐயோ சார் கையில் மருதாணி அழிஞ்சுரும் என்று சொல்ல.
அது எல்லாம் அழியாது. நீ கையை கொஞ்சம் தள்ளி வச்சுக்கோ என்றவன். அவளை தூக்கி தன் மடிமீது வைத்து கொண்டான்.
என்ன சார் ஆச்சு என்றாள்.தன் மீது சாய்ந்து கண்முடி இருக்கும் கோடியிடம்.
அது ஒன்னும் இல்லம்மா ரொம்ப வேலை.உடம்பும் , மனசும் ரொம்ப டையடா ஆகிறுச்சு. உன்ன பார்த்தாச்சுல இனிமே எல்லாம் சரியாகிரும்.
கௌசி இரண்டு கையை மேலே தூக்கி இருக்க.
கோடிஸ்வரன் கௌசியை அனைத்து வாரே சோபாவில் அமர்ந்து இருந்தான்.
கௌசி ஏதோ பேச வர.
கொஞ்ச நேரம் அமைதியா இரு கௌசி என்றவன்.அவளை அணைத்த வாரே .
அவளோ நெளிந்து கொண்டே இருக்க.
என்ன கௌசி என்றான்.
அது என்றவள், கைவலிக்குது என்றாள்.
சரி கையை கீழே இறக்கு என்றவன்.கௌசியின் கையை பார்க்க மிகவும் அழகாக இருந்தது .
நான் போகட்டா என்றாள் கௌசி.
தனியாவா வந்த .
இல்ல அக்கா கீழே இருக்கா.அவளுக்கு மருதாணி டிசைன் கைக்கு போடுறாங்க.அந்த டைமுல உங்கல பாக்க வந்தேன்.
தாங்யூ கௌசி உன்ன பாக்க உன் வீட்டுக்கு ரெண்டு வாட்டி வந்தேன் . உன்ன பாக்க முடியலடா என்றவன்.
இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்கம்மா என்றவன்.அவளின் கன்னத்தில் முத்தமிட.
கௌசி வேண்டாம் சார் என்றவள். அவளின் கன்னத்தை அவளின் தோள் பட்டையை வைத்து துடைத்தவள். நான் போறேன் என்றாள்.
என்ன வேண்டாம் ,இன்னும் ஒன்னே ஒன்னு கௌசி என்று அவளிடம் கேட்க.
நோ என்றவள் . அவனிடம் இருந்து எழுந்து ஓட.
ஒரு கையால் கௌசியின் பின் இடுப்பை பிடித்து தூக்கியவன். ஒரே ஒரு கிஸ் மட்டும் கொடுத்துட்டு போ .நான் வேற எதுவும் கேட்க மாட்டேன் என்றவன். அவளுக்கு எண்ணில் அடங்கா முத்தங்களை கொடுத்தே விட்டான் அவளை.
கௌசி கோடியை தன்னிடமிருந்து தள்ளி விட்டவள். கோடியின் தோளில் ஒரு அடி வைத்து பேட் பாய் என்றாள்.
நான் உன் கிட்ட மட்டும் இந்த விசயத்துல எப்பையும் பேட் பாய் என்று அவளின் நெத்தியில் முத்தம் மிட.
நான் போறேன் என்றவளை.
போ , போ இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு. நம்ம கல்யாணத்துக்கு என்றான் ஆசையாக.
ம்ம்..என்றவள் கிளம்ப.
என்ன கௌசி உடனே போற.
நான் உங்க கூட பேசலாமுன்னு ஆசையா வந்தேன். நீங்க கிஸ் யெல்லாம் பண்ணி பேட் பாய்யா பிகேவ் பண்ணுறீங்க. நான் போறேன் என்றவளை.
ஓகே , ஓகே நான் குட் பாயா இருக்கேன் நீ இருமா. என்க்கிட்ட ஏதாவது பேசனுமா என்றான்.
ஆமாம் என்றாள் கௌசி.
சொல்லும்மா என்றான்.
அது என்ற கௌசி .எங்க அம்மா சொன்னாங்க நம்ம கல்யாணம் உங்க வழக்க படிதான் நடக்குமாம். அத பத்தி கேக்க வந்தேன். உங்க வீட்டு கல்யாணம் எப்படி நடக்கும்.
அது ரொம்ப சிம்பிள் தான் இரு என்றவன். சுந்தரின் கல்யாண வீடியோவை ,கௌசிக்கு காட்டினான்.
ஏய் … ரொம்ப நல்லா இருக்கு சார் என்றவள். நான் போறேன் சார் நேரம் ஆச்சு என்றவள் கிளம்ப.
கோடியின் முகம் வருந்துவதை பார்த்தவள் .என்ன சார் முகம் டல்லா ஆகிருச்சு.
நீ தான் என்னை விட்டு போகிறதுலயே குறியா இருக்க போ என்று முகம் திருப்ப.
கௌசி கோடியிடம் இன்னும் இரண்டு நாள் தானே இருக்கு நம்ம கல்யாணத்துக்கு கோடி சார். அப்புறம் எப்போவும் உங்க கூட தான் இருக்க போறேன். நீங்களே இவ டார்சர் தாங்க முடியல அப்படியின்னு சொல்ல போறீங்க பாருங்க .
கோடிஸ்வரன் நான் அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன் கௌசி என்றான்.
கௌசி அப்போ நான் ஒரு வழி சொல்லுறேன் .நீங்க இன்னும் இரண்டு நாள் என்னை நெனச்சு சிரிக்கிற மாதிரி ஏதாவது பண்ணவா.
பண்ணு என்றான் கோடி.
சரி நீங்க நான் என்ன பண்ணாலும் அசையாமல் இருக்கனும் .நின்ன எடுத்த விட்டு அசைய கூடாது .
என்ன பண்ண போற கௌசி என்றான்.
அமைதி ,அமைதியோ,அமைதி என்று கௌசி சொல்ல. அமைதியாக நின்று கொண்டான் கோடிஸ்வரன்.
கோடியை விட்டு கொஞ்ச தள்ளி வந்தவள். நீங்க கருப்ப அழகா இருக்கீங்க மாமா சார். அப்பறம் கொஞ்சம் நீங்க சிரிச்சு நல்ல இருக்கும் , ஆனா சிரிக்காத ஹீரோ என்றவள். கொஞ்சம் வில்லன் லுக் என்றவள். கோடியின் இடுப்பை கிள்ளி விட்டு ஓடியவள்.எப்படி என்று சிரிக்க. அமைதியா இருக்கனும் சரிய என்றாள்.
கோடி அவள் செய்யும் செயலை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவன்.இருடி கடைசியில் இருக்கு உனக்கு என்று மனதில் நினைத்து அமைதியாக இருந்தான்.
கௌசி நந்துவின் போனை எடுத்து வந்து இருந்தாள். கௌசிக்கு என்று தனி போன் கிடையாது. கௌசி போனை சோபாவின் மேல் வைத்தவள்.போனில் இருந்து வி, ஐ, பி படத்தில் இருந்து .ஒரு பாடலை ஒலிக்க விட்டாள். அதில் இருந்து மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே என்ற பாடல் ஆரம்பிக்க.அதற்கு அழகாக கௌசி நடனம் ஆடினாள் கௌசி.
கோடி இதை கனவிலும் எதிர் பார்க்க வில்லை.ஒவ்வொறு வார்த்தைகளுக்கும் அழகாக பாடி நடனம் ஆடியவளை ரசித்து பார்த்தவன்.
கௌசிக்கு இவ்வளவு அழகாக ஆட வரும் என்று கோடி நினைக்க வில்லை.
கௌசியிடம் அன்று ஹாஸ்பெட்டலில் வைத்து கோடி என் மின்னல் நீ என்று சொன்னதை நியாபகம் வைத்திருந்தவள்.
இன்று அதே பாட்டிற்க்கு நடனம் ஆட. மருதாணி கொஞ்சம் காய்ந்து இருக்க .கோடியை தொட்டு ஆடியவள். பாடலின் கடைசி வார்த்தையில். மௌனம் பேசியதே , குளிர் தென்றல் வீசியதே, ஏழை தேடிய ராணி நீ காதல் தேவதை என்று சொல்லி கோடியின் அருகில் கௌசி வர.
கோடிஸ்வரனின் கை கௌசியை வாரி சுருட்டி இருந்தது. கௌசி, கௌசி, என்று முத்த மழை பொழிந்து விட்டான் .முத்தத்தில் இப்படி அன்பை காட்ட முடியுமோ. அப்படி காட்டி கொண்டு இருந்தான்.
அவளோ என்ன நடக்குது என்று தெரியாமல் இருக்க. நீண்ட இதழ் முத்தத்திற்கு பின் விட்டான் கௌசியை. நீ கிளம்பு இன்னும் கொஞ்ச நேரம் நீ இருந்தால்.என்னை நானே கன்ரோல் பண்ண முடியாது என்றவன்.
கௌசியின் கலைந்து இருந்த கூந்தலை சரி செய்து . அவளை கை பிடித்து கீழே அழைத்து வர நந்து வெளியே வர சரியாக இருந்தது. நந்தினியின் போனை அவளிடம் கொடுத்தவன் நல்ல இருக்கீயா மா என்றான் கோடி.
நந்து நல்ல இருக்கேன் என்று தலையை ஆட்ட. நம்ம காருல போங்க என்றவன். இருவரையும் வீட்டிற்க்கு காரில் அனுப்பி வைத்தான்.
இருவரும் வீட்டிற்கு வந்தனர் . கமலம் என்னடி இரண்டு பேரும் மருதாணி போட்டாச்ச என்றவர் இருவரின் கையை பார்த்து அழகாக இருக்கு. கொஞ்ச நேரம் போய் படுங்க என்றவர் . நந்தினியிடம் ஒரு சூசை குடுத்து குடி என்றவர். மாசமா இருக்குற பொண்ணு கீழ என் ரூமுல படு என்றவர் . கௌசியிடம் சூஸ் குடிக்கிறீயா என்று கேட்க . நான் என் ரூம்போறேன் மா என்றவள் கிளம்ப.
கமலத்தின் போன் ஒலித்தது.
கோடி தான் போன் பண்ணி அக்கா கௌசி இருக்காளா என்றவன் . கௌசி கிட்ட கொடுக்க என்றான்.
இதோ தம்பி என்றவர்.கௌசியிடம் இந்த கோடி தம்பி பேசுறாரு என்றவர் அவளிடம் போனை குடுத்து செல்ல.
கௌசி போனை வாங்கியவள். பேசாமல் இருக்க.
ஹலோ கௌசி என்றான் கோடி.
லைனில் இருக்கீயா என்று கேட்க.
ம்ம் … என்றவள் அவளின் ரூம் சென்று கதவை மூட.
என்ன பொண்டாட்டி உன் ரூம் வந்துட்டியா.
அதற்கும் ம்ம்… என்று சொல்ல.
என்ன வெறும் வும் ..ம்ம் தான். பேசு கௌசி என்றான் கோடி.
நான் என்ன சொன்னேன் உங்க கிட்ட அமைதியா இருக்க தானே சொன்னேன். நீ ரொம்ப பேடா நடந்துகிறீங்க.
ஹலோ கௌசி மேடம் இதுவே உங்க இதுல பேடா. சரியான பாப்பாவா இருக்கியே.
நானா பாப்பா?.
ஆமாம் நீ தான் பாப்பா மாதிரி இருக்க. ஒரு முத்தம் கொடுத்தது தப்பா,அப்படி சாக்கடிச்ச மாதிரி இருக்குற உன்ன வச்சு மெய்ன்டேன் பண்ணுறது கஷ்டம் போலியே.
அதெல்லாம் எனக்கு எல்லாம் தெரியும் .
என்ன தெரியும் மேடம் சொல்லுங்க.
அதெல்லாம் சொல்ல முடியாது.எங்க அம்மா கல்யாணத்துக்கு அப்பறம் எப்படி நடந்துக்கனுமுன்னு சொல்லி இருக்காங்க.
கௌசியிடம் கோபம் போச்ச என்றான்.
அதெல்லாம் போகாது.
அம்மனிய கூல் பண்ண என்ன பண்ணனும்.
நீங்க என் கிட்ட வராமலே இருந்த போதும்.
நானா உன்ன பாக்க வந்தேன் நீ தானா வந்த.
பாக்க வந்த கிஸ் பண்ணுவீங்கலா.
ஒரு முத்தம் கொடுத்து குத்தமா.
ஹலோ கோடி சார் உங்க மனச தொட்டு சொல்லுங்க . நீங்க ஒரு முத்தம் மட்டுமா கூடுத்தீங்க.
கவ்ன்ட்டு பண்ண முடியாத அளவுக்கு முத்தம் குடுத்துட்டு .
கோடிஸ்வரன் உன்னை யாரு என்னை தேடி என் ரூமுக்கு வர சொன்ன. வந்த அப்படி தான் நடந்துக்குவோம். அது மட்டுமா பாட்டு பாடி , ஆடி செம்ம சந்தோஷம் .உன்ன பாக்கனுமுன்னு நெனச்ச எனக்கு. நீ வந்து அல்வா மாதிரி சிக்கிட்ட விடுவேனா . நீ பாக்க வந்ததுக்கு ரொம்ப நன்றி.
நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம். உங்கள பாக்க தோனுச்சு வந்தேன்.
கோடிஸ்வரன் கௌசியிடம் என்னுடைய அன்பை எப்படி சொல்லனுமுன்னு எனக்கு தெரியல கௌசி உன்ன கஷ்ட படுத்தியிருந்த சாரி .
அடி வாங்குவீங்க என் கிட்ட ஏன் சாரி கேக்குறீங்க.
பார்ர என் பொண்டாட்டிக்கு கோபம் எல்லாம் வருது. சரிமா நல்ல ரெஸ்டு எடு நாளைக்கு பாக்கலாம் என்று போனை வைத்தான்.
ஆர ,வாரத் தோடு கௌசி மண்டபத்துக்குள் நுழைந்தாள். பெண் அழைப்பு நடந்துக் கொண்டு இருந்தது.மாடியில் இருந்து கோடிஸ்வரன் கௌசியை பார்த்து கொண்டு இருந்தான்.
கௌசியின் கண்கள் தன்னை தேடுவதை பார்த்தான்.
கோடியின் வீட்டின் முறைப்படி நிச்சயத்துக்முன் , பொண்ணும், மாப்பிள்ளையும் பார்க்க கூடாது.
நிச்சயம் முடிந்த பின் சிறிது நேரம் பார்க்கலாம்.பின்பு கல்யாணம் தான்.
கோடிக்கோ வேலைகள் நெட்டி முறித்தது. வந்தவர்களை வாங்க என்று கேட்டு. அவர்களை உணவு உண்ண அனுப்பி வைக்கவே நேரம் சரியாக இருக்க.
கௌசியை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டான்.
கௌசி முகத்தில் அத்தனை மகிழ்ச்சி ,சிரிப்பு அவளிடம் வந்து பேசுபவரிடம் கை கூப்பி பதில் சொல்வது என்று தூள் கிளப்பினாள்.
கோடியின் நண்பர்கள் என்ன மச்சான் ஒன் சைடு லவ்வுன்னு தானே சொன்ன. இப்போ சிஸ்டர பார்த்த அப்படி தெரியல என்று கேலி பேச.
கோடிஸ்வரன் கௌசியை வச்ச கண் வாங்கமால் பார்த்து இருந்தான். கோடியிடம் நிறைய பேர் வந்து தங்கமான பொண்ணு, சூப்பர் பொண்ணு , உனக்கு ஏத்த பொண்ணுன்னு என்று சொல்லி செல்ல.
நிச்சயத்துக்காக கௌசியை அழைக்க தென்றலும் மணிமொழியும் கௌசியின் ரூம் வந்தனர் . கௌசி தென்றல் பார்த்து வாங்க அண்ணி என்று அழைக்க.
தென்றல் என்னை தெரியுமா என்று கௌசியிடம் கேட்க.
தெரியுமே கோடி சார் போன்ல உங்களை காட்டினார்.என் அக்கான்னு அப்போ பார்த்தேன்.
தென்றலின் பக்கத்தில் இருந்த அவளின் மாமியாரையும் , மாமானாரையும் கௌசிக்கு அறிமுகம் செய்ய .
வாங்க என்ற கௌசி அவர்களின் காலில் விழ.
இருவருமே இதை எதிர்பார்க்கவில்லை, நல்ல இரும்மா என்னவர்கள். தென்றலிடம் கோடிக்கு ஏத்த பொண்ணு . மருமகளை பார்த்து மெதுவா நட, பாத்து இருந்துக்கோ என்று சொல்லி சென்றனர்.
கௌசி தென்றலிடம் எத்தனை மாதம் அண்ணி.
4 மாதம் கௌசி ,நீ ரொம்ப அழகா இருக்க .
தாங்யூ அண்ணி , அண்ணா வரலீயா. ( அவன் தான் உனக்கு வில்லனே என்று விதி இவளை பார்த்து சிரிக்க).
அவங்க பாரின்ல இருக்காங்க கௌசி இப்போ தான் வந்துட்டு போனாங்க.
தென்றலின் சொந்த காரர் ஒருவர் வந்து பொண்ணை கீழே கூட்டிட்டு வர சொன்னாங்க என்று சொல்லி செல்ல.
வா கௌசி என்று தென்றல் மணமேடைக்கு அழைத்து சென்றாள்.
கௌசி மேடையில் நின்று எல்லோரும் வணக்கம் வைத்து . குருவம்மாளின் காலிலும் , பழனியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க. நிச்சய புடவையை விரித்து கௌசியின் தோளில் போட்ட குருவம்மாள், தன் மகளையும் , மருமகளை அழைத்து புடவை கட்டி அழைத்து வர சொன்னார்.
இதை எல்லாவற்றையும் கோடீஸ்வரன் தூரத்தில் தன் நண்பர்களுடன் நின்று பார்த்து
கொண்டு இருந்தான்.
கௌசிக்கு புடவை கட்டி அலாங்காரம் பண்ணி அழைத்து வந்தனர்.
எல்லோருடைய பார்வையும் கௌசியின் மீது தான்.நல்லா படித்த பெண், கலரா இருக்க, கோடிக்கா என்றே வாய் பிழந்து பார்த்து இருந்தனர்.
கோடிஸ்வரன் கருப்பாக இருக்க. கோடியின் வீட்டில் அனைவரும் கருப்பு தான்.தென்றல் மட்டும் பொது நிறத்தில் இருப்பாள்.
கௌசி லைட் நீல நிற புடைவையில் , கல் வைத்த நகைகளை அணிந்து இருந்தாள். இரவு நேர வெளிச்சத்தில் கௌசி மின்ன, அதை விட மலர்ந்த முகம், சிரிப்பு , கோடியின் அனைத்து சொந்தங்களும் கௌசி பார்த்து பொறாமை படும் அளவிற்கு மிக அழகாக இருந்தாள்.
கோடியின் சொந்தங்கள் கௌசிக்கு குங்குமம் சந்தனம் இட்டு, பூ வைத்து , நிச்சயம் பண்ண. கமலமும் இராஜாசெல்வமும் , குருவம்மாளிடத்தில் இருந்த நிச்சய தாம்பூல தட்டை மாற்றி கொண்டனர்.
நிச்சயம் முடிய கோடிஸ்வரன் மணமேடைக்கு வந்தான்.
கௌசியை பார்த்து மெல்ல சிரித்தவன். அவளின் அருகில் நின்று கொள்ள. இருவருக்கு மாலை அணிவித்தனர். பெரியவர் எல்லோரும் கோடியை, கௌசியை வாழ்த்த. கோடீஸ்வரன் கௌசிக்கு வைர மோதிரம் போட, கௌசி கோடிக்கு தங்க மோதிரம் போட்டாள். இரண்டு மூன்று போட்டோக்களை எடுத்தவன்.
கூட்டம் அதிகமா இருக்கு நான் போய் எல்லாரையும் பார்க்குறேன் என்று கிளம்ப.
எங்கே போறீங்க ? கொஞ்சம் நேரம் என் கூட இருங்க என்றாள் கௌசி.
எங்க முறைப்படி மாப்பிள்ளை ரொம்ப நேரம் இங்க இருக்க கூடாது. இப்போ எங்க ஆளுங்க உனக்கு வளையல் போட வருவாங்க பார்த்து போடு. கையில் வழியிருக்கா.
இல்லை என்றவள்.என்ன பார்த்து ஒன்னும் சொல்லலியே என்றாள்.
என்ன சொல்லனும் என்றான் கோடி.
போங்க என்று கோபம் கொள்ள.
தேவதை மாதிரி இருக்க போதுமா என்றவன்.நாமா நைட்டு சாப்பிடரப்போ பேசுவோம் என்று மேடையில் இருந்து கீழே இறங்கினான்…..
error: Content is protected !!