Skip to content
Post Views: 2,031

வானதி தோட்டத்துக்கு ஓடி சென்று இருக்க பின்னாடியே துரத்தி கொண்டு ஓடியவன் ஒரே எட்டில் அவளை பிடித்து தன்னுடன் சேர்த்து அணைத்து கொண்டான்… அவளும் அவனுடன் ஒன்றி நின்று கொண்டாள்….
“சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் குட்டிமா… எனக்கு உன்கூடயே இருக்கனும்” என்று ஏக்கமாக கூறினான்…
Advertisement
அவளுக்கும் அதுதான் ஆசை இனிமேல் அவளின் மாமனை விட்டு அவளால் இருக்க முடியாது…. அவளும் அவனை இறுக்கி அணைத்து அவளுடைய சம்மதத்தை கூறி இருந்தாள் வானதி…
Advertisement
Advertisement
மருத்துவமனை சென்றுவிட்டு வீட்டுக்கு ரஞ்சியை அழைத்து கொண்டு வந்து இருந்தனர்…. வானதி வேகமாக கமலா அருகில் சென்று “டாக்டர் என்ன சொன்னாங்க ம்மா” என்று சைகையில் கேட்டாள்….
அவரும் “உறுதி பண்ணிட்டாங்க தங்கம்… ஆனா இவ தான் கொஞ்சம் உடம்பு தேத்தணும்னு சொன்னாங்க… குழந்தை நல்லா இருக்காம்… இப்போ மூனு மாசம்னு சொன்னாங்க…” என்று கூறினார்…. ரஞ்சியை வானதி சந்தோசத்துடன் அணைத்து கொண்டாள்…..
Advertisement
வானதி கல்யாணத்திற்கு சரி என்று கூறினாலும் அருளிடம் ரஞ்சிக்கு குழந்தை பிறந்த பின் செய்து கொள்ளலாம்.. அதுவரை சூப்பர் மார்க்கெட் வைக்க ஏற்பாடு செய் என்று கூறிவிட்டான்….
அவன் இரண்டு வருடம் முன்பு வந்த போதே சூப்பர் மார்க்கெட் கட்ட இடம் பார்த்து பேசி முடித்து அந்த நிலத்தை வாங்கி இருந்தான்… அதை வானதி பெயரில் தான் வாங்கி இருந்தான் அவளுக்கே தெரியாமல்….
சென்னைக்கு செல்லும் வானதி பிறந்தநாளுக்கு வரும் போது ஏற்கனவே பேசி வைத்த என்ஜினீயரிடம் சூப்பர் மார்க்கெட் வைக்க கட்டிடத்தை கட்ட ஆரம்பிக்க சொல்லிவிட்டான்…. அதை வாஞ்சிநாதன் இருந்து மேற்பார்வை பார்த்து கொள்ள வேலு காலை மாலை என இருவேளையும் பார்த்துகொள்வான்….
அந்த கட்டிடமும் முடிவடையும் நிலையில் இருந்தது… பொருட்கள் வாங்க ஆட்களிடம் சென்னையில் இருக்கும் போதே பேசி வைத்து இருந்தான்….
மீண்டும் அவர்களிடம் பேசி வைத்தான்…. அவன் சென்னையில் இருந்து வந்து ஒரு மாதம் முடிந்து இருக்க யுகேன் மற்றும் பாரதிக்கு தேர்வு முடிவு வரும் நாளும் வந்து இருந்தது…..
இருவரும் ஜாலியாக சுற்றிக்கொண்டு இருந்தார்கள்….. மற்றவர்கள் தான் ஆர்வமாய் பார்த்து கொண்டு இருந்தனர்… தேர்வு முடிவும் வந்தது….
பாரதி மாநிலத்தில் மூன்றாம் மதிப்பெண் எடுத்து இருக்க யுகேன் மாவட்ட அளவில் இரண்டாவது மதிப்பெண் எடுத்து இருந்தான்… அனைவருக்கும் அளவில்லா சந்தோசம்…..
இருவரிடமும் அருள் “அடுத்து என்ன பண்ண போறீங்க… முடிவு எடுத்து வெச்சு இருக்கீங்களா…” என்று கேட்டான்….
இருவரும் ஆம் என தலையசைத்து கூறினர்…. யுகேன் முதலில் “அண்ணா நான் நீட்க்கு பிரேபேர் பண்ணிட்டு இருக்கேன்…. ஸ்கூல்ல இருந்தே பண்ணிட்டு தான் இருக்கேன்….” என்று கூறினான்…. அவனின் முடிவை கேட்டு அனைவருக்கும் சந்தோசம்…..
பாரதி “அத்தான் நான் லா படிக்க போறேன்…. எனக்கு லாயர் ஆகணும்னு ஆசை” என்று கூறினாள்…. அவள் கூறியதை கேட்டு அதிர்ந்து நின்றுவிட்டனர்….
“பாரதி கண்டிப்பா சொல்றியா… உனக்கு அது தான் ஆசையா…. டாக்டர் ஆக ஆசை இல்லையா….” என்று கேட்டான்….
“ஆமா அத்தான் எனக்கு அது தான் ஆசை” என்று கூறினாள்… அனைவருக்கும் சந்தோசம் தான் அதில்….
சேலத்தில் உள்ள சட்ட கல்லூரியிலேயே சேர்ந்து கொண்டாள்… அதே போல் யுகேனும் நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்து இருந்தான்…. இன்று அவனுக்கான நீட் தேர்வு முடிவு வரும் நாள்…. முடிவும் வந்து இருந்தது…. மாநில அளவில் இரண்டாவது கட் ஆப் எடுத்து இருந்தான்….
அவனுக்கான கவுன்சிலிங் எல்லாம் முடிந்து சென்னையில் உள்ள கல்லூரியில் அவனுக்கு இடம் கிடைத்தது…..அவன் எடுத்த கட் ஆப்பிற்கு சேலம் கல்லூரியில் கேட்டு இருந்தாலே கிடைத்து இருக்கும்… ஆனால் அவனோ “கொஞ்சம் நான் வெளியுலகம் தெரியணும் கண்டிப்பா மாசம் ஒரு தடவ வந்துட்டு போவேன்” என்று கூறி அனைவரையும் சமாதானம் படுத்தினான்…
இதற்கிடையில் சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்க அனைத்து வேலைகளும் பார்த்து இருந்தான்…. இன்னும் இரண்டு நாட்களில் சூப்பர் மார்க்கெட்டின் திறப்பு விழா….. கடையின் பெயர் அவன் இதுவரை வானதியிடம் கூறவில்லை….. மற்றவர்களுக்கு தெரியும்…. அனைவர்க்கும் சந்தோசம் தான்….
அவன் சென்னையில் இருந்த போதே கோர்ட்டில் கேஸ் முடிந்து இவர்களுக்கான சொத்து கைக்கு வந்து இருந்தது…. அதை வைத்து ரஞ்சிக்கு செய்ய வேண்டிய சீர் அனைத்தும் செய்து இருந்தான்… வேலுவின் குடும்பத்தினர் எவ்வளவு மறுத்தும் சீர் செய்து இருந்தான் அருள்…..
தற்போது ரஞ்சிக்கு ஏழு மாதம் திறப்பு விழா முடிந்து இரண்டு நாட்களில் அவளுக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்து இருந்தனர்…. யுகேன் பாரதி இருவருக்கும் இன்னும் கல்லூரி திறக்கவில்லை…. செப்டம்பர் மாதம் தான் இருவருக்கும் கல்லூரி…..
திறப்புவிழா காலை கோலகலமாக விடிந்தது…. அனைவரும் கிளம்பி கடைக்கு சென்றனர்…. இன்று தான் வானதி முதன்முதலில் வருகிறாள்…. அவளை இங்கு அனுமதிக்கவே இல்லை யாரும்… அவள் நினைத்து இருந்தால் சென்று பார்த்து இருக்கலாம்… ஆனால் அவள் மாமன் வேண்டாம் என சொன்ன காரணத்தினால் அவள் சென்று பார்க்கவில்லை….
கடையின் பெயரை பார்த்து அவளின் முகமே மாறிவிட்டது….. இருந்தும் தன்னை கட்டுப்படுத்தி கொண்டு கடையை பத்மினியுடன் சேர்ந்து திறந்து வைத்தாள்….. ரஞ்சி கமலா பாரதி மூவரும் குத்துவிளக்கு ஏற்ற பாட்டிகள் இருவரும் கடையின் முதல் வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தனர்….
அதன்பின் மக்கள் திறப்புவிழா சலுகைகள் வாங்க அலைமோதினர்…. அனைத்தும் நல்ல முறையில் முடிந்தது… ஆனால் வானதியின் முகம் மட்டும் எதோ ஒரு சிந்தனையில் இருந்தது….
அவள் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாள் என்று அறிந்தும் அருள் அமைதியாக வேலை செய்து கொண்டு இருந்தான்…. அவள் முக மாறுதலை பத்மினியும் கவனித்து கொண்டு தான் இருந்தார்…
அவர் ரஞ்சியிடம் இதை பத்தி கேட்டார்… “ரஞ்சி வானதிக்கு இந்த பேருல விருப்பம் இல்லையா” என்று கேட்டார்….
அவளோ “அம்மா அவ அவளோட பேரை ஏன் போட்டு இருக்காங்கனு கோவத்துல இருக்கா…. அண்ணன் அவ கிட்ட மாட்டுனா அவளோ தான்” என்று கூறிவிட்டு சென்றாள்….
அருளும் வானதியிடம் மாட்டாமல் தான் சுற்றி கொண்டு இருந்தான்… ஆனால் எப்படியோ அவளிடம் சிக்கி கொண்டான்….
அவள் கை கட்டி அவனை முறைத்து கொண்டு நின்றாள்… அவனோ குழந்தை போல் முகத்தை வைத்து கொண்டு நின்று இருந்தான்…
கோவமாக அவனின் போனை எடுத்து “கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா மாமா…. என் பேரையும் சேர்த்து ஏன் வெச்சீங்க….” என்று கோவமாக டைப் செய்து காட்டினாள்….
அவனோ “PVD Super Market நல்லா இருக்குல குட்டிமா…. Pனா பத்மினி, VDனா வானதி தேவி கரெக்ட்டா இருக்குல” என்று கேட்டான்….
அவனின் புஜத்தில் சப்பென்று ஒன்று வைத்து “டேய் அறிவுகெட்ட மாமா… இந்த வீட்டுல நான் மட்டும் தான் இருக்கேனா…. ரஞ்சி இருக்கா…. தேவ் யுகேனுக்கு கல்யாணம் ஆனா அவங்க பொண்டாட்டி வருவாங்க….. அப்போ என் பேரு மட்டும் நம்ம கடையில இருந்தா என்ன நினைப்பாங்க…. கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா…..” என்று டைப் செய்து காட்டினாள்… அவள் முகத்தில் கோவம் டஜன் கணக்கில் இருந்தது….
அவனோ “என்ன குட்டிமா பொசுக்குன்னு டேய்னு சொல்லிட்ட மாமாவை” என்று அப்பாவியாக கேட்டான்…. அவள் பேசியதை அனைத்தும் விட்டு அவளை பேச்சை மாற்ற பார்த்தான்… அவளோ அழுத்தமாக அவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள்….
இதற்கு மேல் மறைக்க முடியாது என நினைத்து “குட்டிமா யாரும் உன்னை எதுவும் நினைக்க மாட்டாங்க…. ரஞ்சி தேவா யுகேன் மூனு பேரும் உன் பேரை மட்டும் தான் வைக்க சொன்னாங்க…. நான் தான் அம்மா பேரையும் சேர்த்து இப்படி வெச்சேன்… அதுக்கே அவங்க மூனு பேரும் அண்ணி பேரை மட்டும் போட வேண்டியது தானு திட்டுனாங்க….” என்று கூறினான்…
அதை கேட்டு அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் சட்டென்று கீழே வந்துவிட்டது… அவள் மேல் இவர்கள் கொண்ட பாசம் அவளை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது….
“அச்சோ குட்டிமா ஏன் இப்போ எல்லாம் பொசுக்குன்னு அழுக ஆரம்பிச்சிடுற…..” என்று கண்ணீரை துடைத்து விட்டாவாறு கேட்டான்…..
அவளோ “என் மேல ஏன் மாமா இவளோ பாசம் வெச்சு இருக்காங்க… இவங்களுக்குகாக நான் என்ன பண்ணேன்… அவங்க பாசத்துல உன்னோட காதல்ல எனக்கு மூச்சு முட்டுது…. அதுவும் வேலு அண்ணா நாதன் அப்பா கமலா ம்மா… பாட்டிங்க ரெண்டு பேரு… பாரதி என் மேல காட்டுற பாசம் என்னால அந்த பாசத்தை தாங்க முடியல மாமா…” என்று கண்ணீருடன் டைப் செய்து காட்டினாள்….
அவன் அவளை “டேய் குட்டிமா இங்க பாரு…. அழுக கூடாது…. உன்னோட பாசம் கிடைக்க நாங்க தான் குடுத்து வெச்சு இருக்கோம்… எங்க மேல நீ காட்டுற பாசம்… அம்மா எங்க மேல வெச்ச பாசத்தை விட அதிகம்…. அத்த மாமாவுக்க்கு நீ தான் பெண் குழந்தை இல்லாத ஏக்கத்தை தீர்த்து வெச்சு இருக்க.. வேலுவுக்கு ரஞ்சி கிடைக்க காரணமே நீ தான்…. பாரதி உன் மேல வெச்ச பாசம் எங்களை மாதிரி தான் நீ தான் அவளுக்கு அம்மா மாதிரி… பாட்டிங்க ரெண்டு பேரையும் எவ்வளோ பத்திரமா பாத்து இருக்க… இதுக்கு மேல நீ என்னடா பண்ணனும்…” என்று கேட்டான்….
அவள் அமைதியாக நிற்க அவளின் உச்சியில் முத்தமிட்டு “டேய் எந்த கவலையும் இல்லாம இரு…. உனக்காக நாங்க இருக்கோம்….” என்று கூறி அனுப்பி வைத்தான்….
அந்த நாள் அப்படியே முடிய வளைகாப்பு நாளும் வந்தது….. வளைகாப்பும் எந்த பிரச்சனை இன்றி நல்ல படியாக முடிந்தது….
இவர்கள் அனைவரும் சந்தோஷத்தில் நன்றாக உறங்க இரண்டு பேர் உறங்காமல் இவர்கள் வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்வுகளை நினைத்து வயிறு எரிந்து கொண்டு இருந்தனர்… அது வேறு யாரும் இல்லை நாயகியும் தேவிகாவும் தான்….
ஒவ்வொன்றாக அருளின் வீட்டில் நடைபெறும் நல்ல நிகழ்வுகளை நினைத்து அதை கெடுக்க நினைத்தாலும் அது தோல்வியில் தான் முடிகிறது…. அதுவும் வானதி பேரையும் சேர்த்து கடை ஆரம்பித்ததை நினைத்து தேவிகா எல்லாம் நாயகியிடம் “அம்மா அந்த ஊமைச்சிய விட எந்த விதத்துல அம்மா குறைஞ்சு போயிட்டேன்…. நான் இருக்க வேண்டிய இடம் அவ இருக்கா… நல்லா இருப்பாளா அவ” என்று சாபம் விட்டு கொண்டு இருந்தாள்…..
கண்ணப்பனை அவர்களால் வெளியே எடுக்கவே முடியவில்லை….
அருளின் குடும்பத்தை பழி வாங்க துடித்து கொண்டு இருந்த இருவருக்கும் அருள் வானதியின் நிச்சய நிகழ்வு பெரிய வாய்ப்பை தேவாவின் மூலம் இவர்களுக்கு குடுத்து இருந்தது….
அந்த நாளில் தேவாவை அருள் அடித்து இருக்க வானதி அருளை முறைத்து கொண்டு நின்று இருந்தாள்…. அங்கு ஒரு பெண் அழுது கொண்டு நின்று இருக்க… மற்றவர்கள் என்ன அடுத்து என யோசித்து நின்று இருந்தனர்…. பாரதி தேவாவையே கண்ணீர் வழிய பார்த்து கொண்டு நின்று இருந்தாள்….
error: Content is protected !!