Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விலகாதே உயிரே

Vilagaathae Uyirae 6

தேவா வழக்கம் போல் தீபாவிடம் போன் செய்து பேச ஆரம்பித்தான்……

தீபா நீ எப்போது என் வீட்டில் விளக்கு ஏற்ற வரப்போகிறாய் என்று கேட்டான்…..

மீனின் வருகைக்காக பல மணி நேரம் காத்திருக்கும் கொக்கு….

அதுபோல உன் வருகைக்காக என் காதல் அரண்மனை காத்திருக்கிறது …



Advertisement

சீக்கிரமாக வந்துவிடு….

நம் இருவருக்கும் இடையில் தூரங்கள் எவ்வளவு இருந்தாலும் நம்முடைய அன்புக்கு முன்னாள் அவை பெரிதல்ல….

என்ற தேவா சொல்லிக் கொண்டே போனான்….

Advertisement

பிறகு தீபா நீங்கள் இதுவரை வேறு பெண்ணை பார்த்திருக்கிறீர்களா???

Advertisement

இல்லை உங்களுக்கு வீட்டில் பார்த்த முதல் பெண் நான் தானா??.

என்று அவனிடம் கேட்டாள்…

பல்லாயிரம் அழகிகளை கடந்து சென்றாலும்,…
என் தேவதை உன்னைஇன்றி
யாரையும் என் கண்கள்
பார்ப்பதும் இல்லை,
தேடுவதும் இல்லை!…..

Advertisement

சரிங்க……அப்படி என்று சிரித்துக் கொண்டே சொன்னா….

இவர்கள் ஒருபுறம் பேச….

மற்றொருபுறம் பிரபு நம்பரை பார்த்து ரம்யாவிற்கு போன் செய்தான்….

ரம்யாவின் போன் வெயிட்டிங் இல் இருந்தது….

பிரபு திரும்பத் திரும்ப அழைத்துக் கொண்டே இருந்தான்….

ஒரு வழியாக ரம்யா பேசி முடித்துவிட்டு அப்போதுதான் போனை எடுத்துப் பார்த்தாள் அதில்  12 மிஸ்டு கால்…

அச்சோ…

பிரபு இத்தனை தடவை போன் பண்ணி இருக்கிறார்கள்…..

நாம் கவனிக்காமல் பேசி விட்டிருந்தோமே….

ரம்யா அவள் தோழி கூட இந்த மாப்பிள்ளை பார்த்ததை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தாள்…

சரி நாம் போன் பண்ணுவோம் என்று பிரபுவிற்கு ஃபோன் பண்ணி பேசத் தொடங்கினாள்…

ஹலோ…

எக்ஸ்ட்ரீம்லி சாரி….

அப்படி என்று சொல்லி பேச ஆரம்பித்தாள்…

உடனே பிரபு சாரி நான் நீங்க போன் பண்ணும் போது கொஞ்சம் வேலையாக இருந்தேன் அடுத்து திரும்பத் திரும்ப அழைத்துப் பார்த்தேன் நீங்கள் பேசிக் கொண்டு இருந்தீர்கள் போல என்றான்….

இந்த நேரத்தில் இவ்வளவு நேரம் போன் பேசினால் உங்கள் வீட்டில் எதுவும் சொல்ல மாட்டார்களா ???என்று கேட்டான் .

அதன் பிறகு நான் வெயிட்டிங்கில் வருவது பார்த்தும் கூட நீங்கள் பேசிக் கொண்டே இருந்தீர்களா என்ற ரம்யாவை பார்த்து கேட்டுக் கொண்டே போனான்…

அவளுக்கும் என்ன சொல்ல வருவது என்று தெரியாமல் என் தோழியிடம் உங்களைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தேன் என்று கூறினாள்…..

தோழியிடம் பேசுவதற்கு இரவு தான் நேரம் கிடைத்ததா என்று கேட்டான்…..

இல்லை அவள் வேலைக்கு செல்கிறாள் இரவு தான் வீட்டிற்கு வருவாள் அதனால் தான் இந்த நேரத்தில் போன் பண்ணி பேசிக் கொண்டு இருந்தேன்…..

ஏன் என்னாச்சு ???

நான் இந்த நேரத்தில் போன் பேசுவது உங்களுக்கு என்ன பிரச்சனை என்று ரம்யா கேட்க…

உடனே பிரபுவோ சரிங்க எனக்கு வேலை இருக்கு அப்படி என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்….
பிரபு ஃபோனை வைத்ததும் ரம்யா நாம் அவரிடம் பேசியது தவறாக புரிந்து விட்டார் போல என்னை நினைத்துக் கொண்டிருந்தாள்…

நாம் அவரிடம் ஒன்று சொல்ல நினைத்து போன் பண்ணினால் கடைசியில் இந்த மாதிரி ஆகிவிட்டதே என்று எண்ணி சரி நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று மொபைலை வைத்து விட்டாள்….

அடுத்த நாள் தேவா ஆபீஸ்க்கு கிளம்பும்போது ரம்யாவும் கம்ப்யூட்டர் கிளாஸ் கிளம்பிக்கொண்டிருந்தாள்…

அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்….

சரி அம்மா நான் போய்விட்டு வருகிறேன் இன்னும் ஒரு மாதத்தில் கோர்ஸ் முடிந்து விடும் அதன் பிறகு நான் போக மாட்டேன் என்ற அவள் அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்….

அண்ணா பாய் ….

என்ற தேவாவிடம் சொல்லிவிட்டு கிளம்ப தேவா இரு நான் உன்னை கொண்டு போய் விடுகிறேன் என்று சொன்னான்…

இவளும் மறுப்பு எதுவும் சொல்லாமல் அவள் அண்ணனுடன் சரி அண்ணா நீயே என்னை கொண்டு போய் விடு என்று சொல்லி வெளியில் நின்று கொண்டிருந்தாள்….

அவன் அம்மாவும் சரிப்பா நீயே அவளை கொண்டு போய் விட்டுவிடு எதுக்கு வேஸ்டா பஸ்ல எல்லாம் அனுப்பிக்கிட்டு அப்படி கூறினாள்….

இப்போது தேவா அவள் தங்கையை வண்டியில் அழைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருந்தான்…

என்னாச்சு ரம்யா??

எதுவுமே பேசாம அமைதியா வர …

என்ற தேவா கேட்க..

ஒன்றுமில்லை அண்ணா என்று சொல்லிக் கொண்டு அமைதியாக இருந்தாள்…

அவளது கம்ப்யூட்டர் சென்டர் வந்தது …

அவள் வண்டியில் இருந்து இறங்கி சரி அண்ணா நான் உள்ளே போகிறேன் நீ போ என்று சொன்னால் இவனும் வேகமாக கிளம்பினான்….

தேவா கிளம்பி போகும்போது அவன் எதிரில் அந்த பையனை பார்த்தான்…

இது அந்த பையன் தானே??? ராஜேஷ் …

ரம்யா இவனுடன் தான் நின்று கொண்டு அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாள் என்று தனக்குள்ளேயே கேட்டவன் வேகமாக வண்டியில் யு டன் போட்டு அவனை பாலோவ் பண்ணினான்….

ராஜேஷ் வண்டி ரம்யாவின் அருகில் போய் நின்றது…

தேவா எதுவும் பேசாமல் நடப்பதை ஒரு ஓரமாக மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தான்….

ரம்யா அவனிடம் கையைப் பிடித்துக் கொண்டு ராஜேஷ் எங்க வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டாங்க மாப்பிள்ளை கிட்ட நான் உன்னை பற்றி எப்படியாவது சொல்லி விடுகிறேன்..

இந்த கல்யாணத்தை நிறுத்துமாறு சொல்லுகிறேன் என்று அவனிடம் பேசியதை தேவா கேட்டு விட்டான்…

ராஜேஷ் ரம்யாவிடம் சரி அழாதே நான் வேணா உங்கள் வீட்டில் வந்து பேசட்டுமா???

என்று கேட்டான்…

இல்ல நீ இப்ப பேசினா சரியா இருக்காது ..

நான் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி இன்னும் இரண்டு வருடம் படிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன் .அந்த இரண்டு வருடத்தில் நீயும் கொஞ்சம் செட்டில் ஆயிரு.. அதன் பிறகு வந்து என் குடும்பத்தில் பேசு என்று ரம்யா அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்….

சரி அந்த மாப்பிள்ளை என் போன் நம்பர் குடு நான் பேசட்டுமா என்று கேட்டான்…

இல்லை மாப்பிள்ளை நம்பர் என்னிடமே உள்ளது ..

நானே அவரிடம் எப்படி நமது சொல்லி திருமணத்தை நிறுத்த சொல்கிறேன் நான் திருமணம் வேண்டாம் என்றால் என் வீட்டில் அம்மா அப்பா ஏதாவது பிரச்சனை பண்ணுவார்கள்…

அதனால் அந்த மாப்பிள்ளை திருமணத்தை வேண்டாம் என்று சொல்ல வைக்கலாம் என்று ரம்யாவும் ராஜேஷும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்…

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தேவா சரி இப்போது நான் போய் இப்போது ரம்யாவிடம் பேசினால் தேவையில்லாமல் நடுரோட்டில் வைத்து அவளை நாமே அசிங்கப்படுத்திய மாதிரி ஆகிவிடும்…

வீட்டிற்கு போய் இரவு பேசிக்கொள்ளலாம் ஆனால் இந்தப் பிரச்சினையை இன்றே பேசி முடித்து ஆக வேண்டும் …

இதை வளர விடக்கூடாது என்று தனக்குள் எண்ணியவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்…

ரம்யாவும் கம்ப்யூட்டர் கிளாஸ் போய்விட்டாள்…

தேவாவிற்கு அலுவலகத்தில் வேலை பார்க்க முடியவில்லை அவன் மனதெல்லாம் தங்கையை பற்றிய சிந்தனை….

இந்த ராஜேஷ் பற்றி முதலில் விசாரிக்க வேண்டும் இவன் எப்படிப்பட்டவன் என்று….

தீபாவிடம் இதைப் பற்றி சொல்லலாமா???

வேண்டாம் அவளிடம் சொல்லி அவள் அவள் அண்ணனிடம் சொன்னால் பெரிய பிரச்சினையாகிவிடும் இதை நாமே பார்த்துக் கொள்ளலாம்…..

தேவா அலுவலகத்தில் இருந்து நேராக அவனது நண்பன் ஒருவன் வீட்டிற்கு சென்றான்….

அந்த நண்பனிடம் ராஜேஷ் பற்றி கூறினான்.. அந்த நண்பனுடைய நண்பன் ராஜேஷுக்கு தெரியும்.. அதனால் அவனைப் பற்றி விசாரிப்போம் அவன் எப்படிப்பட்டவன் என்று…

இப்படி திருமணத்தை பேசி முடித்துவிட்டு ரம்யா இவனுடன் பேசுவது சரி இல்லை இது குடும்பத்தில் தெரிந்தால் தெரிய பிரச்சனையாகிவிடும் என்று அந்த நண்பனிடம் கூறிக் கொண்டிருந்தான்…

சரி நீ பயப்படாதே தேவா இரு நாம் கேட்போம் அவனைப் பற்றி என்று அந்த நண்பன் சொல்ல….

தேவாவிற்கோ மனதில் குழப்பங்கள் அம்மா அப்பாவிடம் சொல்லலாமா???
இப்போது அந்த ராஜேஷின் குடும்பத்தை பற்றி ஓரளவுக்கு விசாரித்து விட்டார்கள் அவனது நண்பர்கள்…

அவனுக்கு இரு சகோதரிகள் எனவும் சகோதரிகள் யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை..

ராஜேஷ் law படித்துக் கொண்டிருப்பதாகவும் அதையே அவங்க அம்மா கடன் வாங்கி தான் அவனை படிக்க வைப்பதாகவும் அவனுக்கு தந்தை இல்லை என்றும் அவன் நண்பர்கள் கூறினார்கள்….

இதையெல்லாம் தேவா கேட்டுவிட்டு வேகமாக வீட்டுக்கு கிளம்பினான்….

தேவா வீட்டிற்கு வந்ததும் அவன் அம்மா என்னடா தேவா …

சீக்கிரமா வந்துட்ட???

இல்லம்மா கொஞ்சம் தலைவலி என்னால சிஸ்டம்ல பார்த்து ஒர்க் பண்ணவே முடியல…

அதனால தான் பர்மிஷன் போட்டு வந்து விட்டேன் என்று அவன் அம்மாவிடம் சொன்னான்..

சரி நீ ரூம்ல போய் படுத்துக்கோப்பா நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன்.. என்று அம்மா சொன்னாள்..

ரம்யாவை எங்கம்மா என்று வேகமாக கேட்டான்…

ரம்யா அவ ரூம்ல இருக்காப்பா….

ஏன் என்னாச்சு ரம்யாவை தேடுற??

என்றாள் அம்மா…

  சும்மா தான் கேட்டேன் அவ கிளாஸ் போயிட்டு எப்ப வந்தான்னு கேட்டேன்….

அவள் எப்பவும் போல் வந்து விட்டாள் என்று அம்மா சொன்னதும் தேவா வேகமாக அவள் ரூமுக்குள் போனான்…

அம்மா நான் வந்து டீ கேட்கும் போது குடு இப்போ நான் ரம்யாவிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வருகிறேன்…

அவள் இன்னும் சிறிது காலத்தில் கல்யாணம் முடிந்து அடுத்த வீட்டுக்கு போய் விடுவாள் அப்போ நான் அவளை ரொம்ப மிஸ் பண்ணுவேன் இல்லமா அதனால கொஞ்சம் பேசிட்டு வரேன்…

என்று தேவா சொன்னான்…

சரிப்பா… என்றாள் அம்மா….

இப்போது வேகமாக கதவை திறந்து ரம்யா என்று கூப்பிட்டான் தேவா….

அண்ணா…

என்னாச்சு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!