Skip to content
Post Views: 9,423
ஊருக்குப் போவதற்காகத் தயாராகி நின்றிருந்தனர் துர்காவும் சாந்தாவும், தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் பழங்கள் என்று இருவருக்கும் எடுத்துவைத்தனர் தமிழின் வீட்டில் வேலை செய்வோர்.
தமிழே இருவரையும் அழைத்துச்சென்று ரெயில் நிலையத்தில் விட்டான் அவனிடம் என்ன பேச என்று தெரியாமல் அவர்கள் அமைதியாக இருக்க அவர்களிடம் பேசத் தனக்கு ஒன்றுமில்லை என்று அவனும் அமைதியாக இருந்தான்.
Advertisement
“துளசியை பாத்துக்கோங்க” என்றார் சாந்தா அவனிடம்.
Advertisement
Advertisement
“ஹ்ம்…” என்றுமட்டும் சொல்லியவன் அவர்களுடைய உடமைகளை சரியான இடத்தில் வைத்துவிட்டு பிளாட்போமில் நின்றுகொண்டான், ரெயில் புறப்படும்வரை நின்றிருந்தான் என்றால் பேச்சுவார்த்தை ஒன்றும் இல்லை, ரெயில் புறப்படும்நேரம் தலையசைப்போடு விடைகொடுத்தான்.
Advertisement
“துளசி ரொம்பல்லாம் யோசிக்காத இது உன் வீடு இனிமே இங்க எல்லாத்தயும் நீதான் பாத்துக்கணும் அம்மா இப்படி ஆனதுக்கு அப்புறம் தமிழ்த்தான் சமையல் எல்லாம், மத்த வேலைக்கெல்லாம் ஆள் இருக்காங்க அம்மாவை நினச்சு வருத்தப்படாத என்னமோ அவங்க அப்படித்தான் இனிமே மாத்த முடியும்னு தோணல”.
“அவங்கள நர்ஸ் பாத்துப்பாங்க நீ என் தம்பியை நல்லா பாத்துக்கோ, இந்த நாலு வருஷத்துல அதிகமா கஷ்டப்பட்டது நீயா அவனான்னு எனக்குத் தெரியல அவன் கூடவே இருந்து பாத்ததால அவன்தான் அதிகம் கஷ்டப்பட்டான்னு எனக்குத் தோணும் எது எப்படியோ எல்லாத்தயும் கடந்து வந்துடீங்க யாரைப்பத்தியும் இனிமே யோசிக்காத இனிமேலாவது உங்க வாழ்க்கையை பாருங்க” என்றாள் தாமரை.
திருமணம் முடிந்து தாமரையின் புகுந்த வீட்டினர் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டனர் துளசி மற்றும் தமிழுடன் சென்னைக்குவந்து இரண்டு நாட்கள் அவர்களுடன் தங்கியிருந்து தன் வீட்டிற்கு சென்றாள் தாமரை, அன்று மாலை தாமரையின் கணவன் வந்து அவளை அழைத்த்து சென்றான்.
“நைட் சாப்பிட என்ன வாங்கட்டும் துளசி” என்றான் தமிழ்.
“ஒன்னும் வேண்டாங்க நானே சமைக்கிறேன்” என்றாள் அவள்.
“ஏய்… அதெல்லாம் வேண்டாம் கஷ்டப்படாத வெளில வாங்கிக்கலாம் நாளைலேயிருந்து நீ வேணும்னா சமச்சுக்கோ” என்ற தமிழ் மீண்டும் அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்கத் தோசை போதும் என்றவள் “அத்தைக்கு” என்று அவனைக் கேள்வியாய் நோக்க.
“அம்மாவுக்கு இட்லி இல்லனா இடியாப்பம் தான்” என்றவன் நர்ஸிடம் என்ன வேண்டும் என்று கேட்டுக்கொண்டு சென்று வாங்கிவந்தான், இரவுணவை முடித்தபிறகு அடுக்களையில் ஏதோ உருட்டிக்கொண்டிருந்த மனைவியின் அருகில் வந்தான் தமிழ்.
“என்ன பண்ற துளசி”.
“இல்ல நாளைக்கு உங்களுக்கு வேலைக்குப் போகணுமே அதான் என்ன இருக்குனு பாக்குறேன்” என்றவளை இடையோடு இழுத்து அருகில் நிறுத்தியவன்.
“உன் கையால எதைச் செஞ்சு குடுத்தாலும் எனக்கு அமிர்தம்தான்” என்றான் காற்றான குரலில், உடல் நடுங்க தொடங்கியது துளசிக்கு அவனால் புரிந்துகொள்ள முடிந்தது, அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தான் தமிழ்.
“ஒண்ணுமில்ல துளசி ஒண்ணுமில்ல நான் இருக்கேன்” என்றான் அவளை ஆறுதலாகத் தட்டிக்கொடுத்து, மறுநாள் காலையே எழுந்து
காலைக்கு டிபன் மதியத்திற்கு சாப்பாடு அனைத்தையும் தயார் செய்து வைத்தாள் துளசி, உதவி செய்கிறேன் என்று அவளுக்குக் கொஞ்சமாக உதவியும் நிறைய குறும்பையும் செய்துகொண்டிருந்தான் தமிழ்.
சாந்தாவிடம் மீண்டும் பேசத்தொடங்கியிருந்தாள் துளசி தனிமையில் இருக்கிறார் என்பதாலே அவர் அழைப்பை அலட்சியம் செய்வதில்லை என்றாலும் கேட்பதற்கு பதில் அவ்வளவே, வேண்டாம் என்று மறுத்தும் மாதம் தவறாமல் அவரின் கணக்கிற்கு பணம் அனுப்பிவிடுவான் தமிழ்.
“உங்க அம்மா அதைச் செலவு செய்றாங்க இல்ல செய்யல அது பிரச்சினையில்ல ஒரு தேவைன்னா தன் கைல காசு இருக்கின்றதே ஒரு பெரிய தைரியம்தான்” என்றுவிட்டான்.
கற்பகம் துளசியிடம் பேசத் தயக்கம் காட்டினார் அதையெல்லாம் அவள் கண்டுகொள்ளவில்லை சாந்தாவிடம் எப்படி நடந்துகொள்கிறாளோ அப்படியே கற்பகத்திடமும் நடந்துகொன்டாள் தினமும் அவரிடம் எப்படி இருக்கிறதுக்கு என்ன வேண்டும் என்று கேட்பதோடு கொஞ்சம் நேரம் அமர்ந்து ஏதேனும் புத்தகங்கள் வாசித்துக் காட்டுவாள்.
தமிழுக்கு இப்பொழுதுதான் வாழ்வே அழகானதாகத் தோன்றியது காலை வாசலில் நின்று வழியனுப்பும் மனைவி மாலை அவன் வருகையில் அவனுக்காக வாசலில் காத்திருப்பாள், காலை வேலைக்குச் செல்லும் அவசரம் மதியம் அலுவலகத்தில் உணவு ஆகையால் இரவுணவை எப்பொழுதும் இருவரும் ஒன்றாகவே உண்பது.
மெல்ல மெல்ல அவர்களுக்கிடையில் தயக்கங்கள் விடைபெறத் தொடங்கியது கட்டாயம் இல்லாமல் தயக்கம் இல்லாமல் பழைய வாழ்வின் கசப்புகள் இல்லாமல் இருவருக்கும் இடையில் தாம்பத்யம் அழகாய் மலர்ந்தது, மூன்று வருடங்களுக்கு முன்பான அனைத்தும் முன்ஜென்மம் போல மறந்து மறைந்து போனது.
மகளின் வாழ்வு அந்தரத்தில் நிற்கும்போதும் ஜெயந்தியிடம் பெரிதாக மாற்றம் வந்துவிடவில்லை இப்பொழுதும் துளசியை திட்டுவதுதான் அவரின் வேலை, இந்தக் கருப்பிக்கு வந்த வாழ்வை பாரு நல்லா வாழ்ந்திடுவாளா என்று கரித்து கொட்டுகிறார்.
என்ன… அவர் சாபம் எல்லாம் அவர் மகளின் தலையிலே விழுந்துகொண்டிருக்கிறது இறுதிவரை அதை அவர் உணரப்போவதில்லை.
ஆறு வருடங்களுக்குப் பிறகு
“நீங்க இங்க இருக்கறதால இங்கே வந்து இதெல்லாம் பாக்க முடிஞ்சது இல்லனா இந்தப்பக்கமெல்லாம் வரணும்னு கூட ஐடியா வந்திருக்காது” என்றான் பார்கவியின் கணவன் பிரசாந்த்.
“உண்மைதான்” என்றார் துர்காவின் கணவனும், பிரசாத்தும் பார்கவியும் தாய் நாட்டிற்க்கே வந்துவிட்டனர் இந்த வருட விடுமுறைக்கு அனைவரையும் தங்களுடைய செஞ்சி வீட்டிற்கு அழைத்திருந்தான் தமிழ்ச்செல்வன்.
அனைவரோடும் அவன் சுமுகமான உறவையே கொண்டிருந்தான் கற்பகம் இரண்டு வருடம் முன்பு மறைந்துவிட்டார் மரணப்படுக்கையில் மருமகளிடம் மன்னிப்பை கேட்டுக்கொண்டார்.
சாந்தாவிற்கு ஒவ்வொரு நொடியும் மகளுக்கு முன்பே நல்லதை செய்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுவதை தடுக்கமுடியவில்லை, ஒரு வாரமாக அனைவரும் இங்கேயே இருக்கின்றனர், செஞ்சி அதன் சுற்றுப்புறம் அவர்களுடைய தோட்டம் திருவண்ணாமலை என்று அணைத்து இடங்களும் அழைத்துச் சென்று காட்டினான்.
செஞ்சி வீட்டிலும் தோட்டத்திலும் வேலை செய்யும் ஆட்களைக் கண்டதும் பார்கவிக்கு ஆச்சர்யமாக இருந்தது ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்து கிடந்தது தோட்டம், என்னதான் வெளிநாட்டில் வேலை செய்தாலும் வீட்டு வேலைக்கு ஆள் வைக்கக் கூடத் தயக்கமே அவர்களுக்கு வேலைக்குச் சம்பளமே அவ்வளவு கேட்க்கிறார்களே இங்கு என்னவென்றால் இவனிடம் இத்தனை பேர் வேலை செய்கிறார்களே என்று ஆச்சர்யமானது.
அவனுடைய செல்வசெழிப்பை மற்றவர்களைப் போல அவன் காட்டிக்கொள்ளவில்லை அவ்வளவே, தன்னுடைய கணவன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்… பெரிய அக்காவின் கணவன் கல்லூரி பேராசியர் இவன் வெறும் மினாசாரத்துறையில் ஊழியன்தானே என்ற இளக்காரம் இருந்தது பார்கவிக்கு.
இந்த ஒருவாரத்தில் அவன் குணத்தை போலச் செல்வாக்கிலும் அவன் உயர்ந்தவனே என்பதை அறிந்துக்கொண்டாள், தமிழும் சரி துளசியும் சரி முன்பு எப்படியோ அப்படியே இப்பொழுதும் துளசியிடமும் எந்த மாற்றமும் இல்லை அவள் குணம் இப்பொழுதும் அந்தத் தூய்மையோடே இருந்தது மேன்மக்கள் எப்பொழுதும் மேன்மக்களே.
விசாலமான அந்தப் பெரிய வீடு அனைவரையும் அரவணைத்துக்கொண்டது துர்காவும் பார்கவியும் சாந்தாவை அர்த்தத்தோடு பார்த்தனர், வெற்றியைத் திருமணம் செய்துகொண்டு சென்ற அன்று அவன் வீட்டின் ஒற்றை ஜன்னலைத் திறந்துவைத்து நின்றிருந்த துளசியின் முகம் நினைவு வந்தது.
இன்று கணவன் காதலில் திளைத்து மிளிர்ந்தது அவள் முகம் அன்பான கணவன் அவள் ஆசைப்பட்ட வாழ்வு அழகாக இரண்டு பிள்ளைகள் ஆணொன்று பெண்ணொன்று, இத்தனை வருடங்களில் அவள் முகத்தில் இப்படியொரு தெளிவும் புன்னகையும் மிளிர்வும் யாரும் கண்டதில்லை சாந்தாவை இபோழுது தங்களுடன் வைத்துக்கொண்டனர் தமிழ் மற்றும் துளசி.
துர்காவின் குடும்பமும் பார்கவியின் குடும்பமும் புறப்படத் தயாராக அவர்கள் வண்டியைப் பொருட்களால் நிரப்பிவிட்டனர் தம்பதியர், பிள்ளைகளை அணைத்துக்கொண்டு கணவனின் கையணைப்பில் நின்றுகொண்டு மலர்ந்த முகத்தோடு தங்களை வழியனுப்பிய உடன்பிறந்ததவளை நிறைவான மனதோடு பார்த்துக்கொண்டே சென்றனர் துர்காவும் பார்கவியும்.
error: Content is protected !!