Skip to content
Post Views: 3,180
அவனோ எனக்கு தூங்க வரலை என்றவன். என்னால தூங்கமுடியல கௌசி என்றவன்.அவளை அணைத்து கொண்டு என்னை தூங்கவையேன் என்றான்.
கௌசி கோடியின் தலை கோதிவிட்டு. எனக்கு எந்த வருத்தமும் இல்லை . சின்ன கோபம்தான் .அதுவும் சரியாகிரும் என்றவள். கோடியின் முகத்தை தன் மார்பின் மேல் வைத்து தட்டி கொடுக்க. தூங்கிவிட்டான் கோடி.
Advertisement
இருவரும் தூங்கி எழுந்து குளித்து. ரெடியாகி திருப்பதிக்கு சென்று தரிசனம் முடித்து. பின்பு அலேமேலு மங்கையை சரிசனம் பண்ணி விட்டு பெங்களுர் வந்து சேர்ந்தனர்.
Advertisement
நாட்கள் வேகமாக செல்ல. கௌசியின் காலேஜில் இருந்து கோடிக்கு போன் வந்தது.
Advertisement
கௌசிக்கு உடம்பு சரியில்லை வந்து அழைத்து போகுமாறு.
உடனே கிளம்பியவன் கார் எடுத்து சென்றான். காலேஜில் ஒரு அறையில் அமர்ந்து வாக்கில் தலை சாய்த்து தூங்கி கொண்டு இருந்தவளை பார்த்தவன்.
Advertisement
கௌசி என்று அழைக்க. கண் திறந்து பார்த்தவள்.கோடியிடம் வந்தாள்.
கோடிஸ்வரன் என்னாச்சும்மா என்றான்.
அது காலையில் பூரி சாப்பிட்டேன்னா , அது கொஞ்சம் ஆயில் அதிகமாக இருந்துச்சு.பித்தம் மாதிரி இருக்கு தல சுத்தி வாமிட்டு பண்ணிட்டேன் என்றாள்.
சரி வா என்றவன் ஹாஸ்பெட்டல் போலாம் .
கௌசி அது எல்லாம் வேண்டாம் லெமன் ஜூஸ் குடிச்சா சரியா போகும் என்றவள்.சொல்லி முடிக்கும் முன் ரெஸ்ட் ரூம் நோக்கி ஓடினாள். மறுபடியும் வாமிட் வர.
அதை பார்த்தவன் , அவளுக்கு தண்ணீர் குடுத்து . நீ வா நம்ம முதல்ல ஹாஸ்பெட்டல் போலாம் என்றான். அவனுக்கு தெரிஞ்ச மருத்துவமனைக்கு கௌசியை அழைத்து சென்றான்.
கௌசிக்கு அனைத்து டெஸ்டும் எடுத்து விட்டு டாக்டரிடம் இருவரும் அமர்ந்து இருக்க.
நல்ல விசயம் கோடி உங்க மனைவி பிரக்னன்டா இருக்காங்க என்றார்.
கௌசிக்கு இது அதிர்ச்சியாக இருக்க.
கோடி வாய்விட்டே சொல்லி விட்டான், ஒரு வாட்டி தானே அதுக்குள்ள எப்படி என்று புலம்ப.
கௌசி அவன் தொடையில் கிள்ளி இருந்தாள்.
கோடி சொல்லியது டாக்டருக்கு கேட்க வில்லை.
கோடி டாக்டரிடம் மேம் நல்லா பாத்தீங்கல என்றான்.
ஆமாம் கோடி நல்ல பாத்தாச்சு 45 டேஸ் இருக்கும். டூவீக்ஸ் கழிச்சு வாங்க என்றவர். கௌசியிடம் நல்ல சாப்பிடுமா வாமிட் ரொம்ப வந்த மட்டும் இந்த மாத்திரையை போடு என்று எழுதி கொடுத்தார்.
கௌசிக்கு சந்தோஷமாக இருந்தது. அவள் கோடியை பார்க்க அவன் சாக்கடித்தவன் போலவே இருந்தான். கௌசி அவனை வெளியில் அழைத்து வர. இருவரும் எப்படி வீடு வந்து சேர்ந்தார்கள் என்றே தெரியவில்லை.
இருவரும் காரில் இருந்து இறங்காமல் இருக்க. கோடி ஏதோ புலம்பிய படியே இருந்தவன். கௌசியை திரும்பி பார்க்க . அவளோ கலங்கிய கண்களோடு கோடிஸ்வரனை பார்த்தவள் , வீட்டுக்குள் சென்று விட்டாள்.
கோடி அவளை கவனிக்காமல் இருந்துட்டோமே டா என்றவன். உள்ளே சென்று கதவை மூட.
கௌசி சோபாவில் படுத்து இருந்தாள்.
ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தவன். கௌசியின் அருகில் சென்று அமர.
கௌசியின் கை கோடிஸ்வரனின் சட்டையை இழுக்க. அவளை பார்த்தவன். அவளின் முகத்தில் சந்தோஷம் , கண்ணீர் என்று பல விதமான பாவனை இருக்க.
கௌசியை தூக்கி தன் மடிமீது வைத்து அனைத்து கொண்டான். சிறிது நேரம் இருவரும் பேசவில்லை.
கௌசி தான் ஆரம்பித்தாள் நமக்கு பாப்பா வர போகுது என்றவள் கோடியை முத்தமிட…
கோடிஸ்வரன் கௌசியின் முகம் முழுவதும் முத்தமிட்டவன். தாங்யூ கௌசிமா என்றான். பின்பு சாரி என்க.
எதுக்கு சாரி என்றாள் கௌசி .
அது நான் என்றவன், உன்படிப்பு முடியட்டும் என்று நினைத்தேன்.
அவளோ கொடியின் கழுத்தை கட்டி கொண்டு.இன்னும் மூணு மாதம் தானே இருக்கு படிப்பு முடிய பரவாயில்லை என்றாள்.
அப்போ உனக்கு ஓகே வா. ஒன்னும் பிரச்சனை இல்லையில்ல.
எனக்கு ஒன்னும் மில்லை என்றவள். ஆனால் பசிக்குது என்றாள்..
கோடி உனக்கு என்னாட வேணும் என்றான்.
எனக்கு பிரியாணி வேணும். பால் கோவா , ஐஸ்கிரீம் வேணும் என்க.
சரி நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு நான் வாங்கிட்டு வரேன் என்றவன். சிறிது நேரத்தில் அவள் கேட்டதை அனைத்தும் வாங்கி வந்தான். கௌசி சோபாவில் தூங்கி இருந்தாள். அவளை எழுப்பி விட்டவன் முதலில் இனிப்பை கௌசிக்கு ஊட்டி விட. பின்பு பிரியாணியை எடுத்து கொடுக்க . நான்கு வாய் சாப்பிட்டவள் போதும்.ஒரு மாதிரி இருக்கு என்றவள்.மறுபடியும் படுத்து கொண்டாள்.
கோடிஸ்வரன் முதலில் யாரிடம் சொல்வது என்று நினைக்க.
அவனின் வீட்டின் காலில் பெல் அடித்தது. யார் என்று பார்க்க கமலம் வந்து இருந்தார். வாங்கக்கா என்றவன் உள்ளே அழைக்க.
கமலம் உள்ளே வந்தவர்.காலேஜுக்கு நீ போகலிய கௌசி என்றார். அவளின் அருகில் வந்து ஏன் படுத்து இருக்க. உடம்பு சரியில்லையா என்றவர் மகளின் தலை கோத.
அவளோ தன் அம்மாவை அணைத்து கொள்ள.
கமலம் என்னடா என்றவர். அவர் முன் இருந்த மருந்து , மாத்திரை, பின்பு ஸ்வீட் , பிரியாணி என்று இருக்க கோடியை பார்க்க அவனின் முகத்தை பார்த்தவர். கௌசியிடம் மாசமா இருக்கியா என்றார்.
அவள் ஆமாம் என்றாள்.
மகளின் தலையில் முத்தமிட்டவர். நல்லா இருடா என்றார்.
கோடிஸ்வரன் இனிப்பை கமலத்திடம் கொடுக்க .
அதை வாங்கியவர் . கௌசிக்கு கொஞ்சம் ஊட்டி விட்டு சந்தோஷமா இருக்கனும். கொஞ்ச நாள் வீட்டில் இரு. அப்பறம. காலேஜ் போலாம் என்றவர்.
கோடிஸ்வரனிடம் கமலம் உங்க வீட்டுல சொல்லிட்டீங்களா தம்பி என்றார்.
இல்லைக்கா என்றவன் சொல்லுறேன் என்றான்.
முதல்ல சொல்லுங்க என்றவர். நீ ரெஸ்ட் எடு கௌசி ,நான் அப்பா, சிவா கிட்ட சொல்லிட்டு வர்ரேன் என்று கமலம் கிளம்பிவிட்டார்.
கோடிஸ்வரன் முதலில் குருவம்மாளிடம் சொல்ல .
குருவம்மாளுக்கு எல்லை இல்லா சந்தோஷம் உடனே வர்ரேன் கோடி என்றார்.
பின்பு தென்றல், சுந்தர் என்று அனைவரிடம் சொல்ல. எல்லோரும் கோடிக்கு வாழ்த்து சொன்னார்கள் .
கௌசி கோடிஸ்வரனை ஆசையாக பார்த்து இருந்தாள் . அவன் எல்லோரிடம் சந்தோஷமாக சொல்லி கொண்டு இருப்பதை பார்த்தவள். கோடியை பார்த்து சிரிக்க.
கோடி கௌசியை பார்த்து என்ன வென கேட்க.
ஒன்னும் இல்லை என்றவள்.அவளை நீங்க வெட்க படுறதை முதல் தடவ பார்த்தேனா அதுதான் என்று மீண்டும் சிரிக்க.
நீ ரொம்ப பேசுற வா என்றவன். அவளை பெட் ரூம்புக்கு தூக்கி் வந்தவன் அவளை படுக்க வைத்து தூங்கு என்றான்.
கௌசி கோடியை விடாமல் அணைத்து தன்னுடன் இருக்குமாறு சொல்ல.
என்ன கௌசி என்றவன். அவளுக்கு முகம் முழுவதும் கௌசி, கௌசி முத்தம் மிட்டவன்.
அவள் முகத்தையே பார்த்து இருந்தான்.
கௌசி என்னவென்று கேட்க ஒன்னுமில்லை என்றவன். மனதில் கௌசியை முதல் , முதலில் பார்த்ததில் இருந்து இன்று வரை அனைத்தையும் நினைத்து பார்த்தவன்.சிறிது நேரம் கழித்து எழுந்தவனை .
எழ விடாமல் கௌசி பிடித்து கொள்ள என்ன என்றான் கோடி.
அவளோ கோடியின் அணைப்பிலே இருக்க வேண்டும் என்று தோன்ற.
கோடியை எழ விடாமல் இருந்தவளை என்ன வேணும் என்றான் கோடி.
அவளோ பின் தலை பாரமா இருக்கு என்றவள்.
அவன் கையை வைத்து பிடித்து விட சொல்ல .
அவள் சொல்லிய படி செய்தவன் போதுமா என்றான் .
அவளோ போதாது இன்னும் வேண்டும் என்றவள் முதல் முதலில் கோடியின் இதழில் முத்தமிட்டு அணைத்து கொள்ள
கோடி கௌசியின் காதில் இப்போ வேண்டாம் டி கொஞ்சம் நாள் ஆகட்டும் என்றான்.
கோடி வேண்டாம் என்று சொல்லியவுடன் கௌசிக்கு கோபம் வர . நீ வேண்டாம் போ என்று கோடியை தள்ள .
இதற்கு மேல் முடியாது என்றவன். ஏதோ சின்ன பொண்ணுன்னு பார்த்த என்ன ஓவர சீண்டுற மாட்டுனடி என்றவன். அவளை கொஞ்சி தீர்த்துவிட.
கௌசி போதும் , போதும் என்றவுடனே விட்டான் அவளை இனிமே கேட்ப என்றான்.
அவள் கேட்பேன் என்று தலையாட்ட.
அடிங்க. என்றவன் சிரிக்க.
அவளும் சேர்த்து சிரிக்க.
கௌசியின் நெத்தில் முத்தமிட்டவன் தூங்கு என்றான்.
கௌசி தூங்கவும் , அவளை அணைத்த படியே அவனும் தூக்கிவிட்டான்.
அங்கே நெல்பர்ன் நாட்டில் தன் வேலையை முடித்து வந்த வசீகரன். மனைவியின் போன் வர அதை எடுத்தவன்.சொல்லு தென்றல் என்றான்.
தென்றலின் கணவன் வசீகரன்,டாக்டர் வசீ..
தென்றல் கணவனிடம் எப்படி இருக்கீங்க வசீ என்றாள்.
ஐ , எம், ஓகே என்றவன். நீ எப்படி இருக்க தென்றல்.
நான் நல்ல இருக்கேன். உங்க கிட்ட ஒரு நல்ல செய்தி .என் தம்பி பொண்டாட்டி கன்சீவ இருக்க.
வசீகரன் அப்படியா என்றான்.
தென்றல் வசீகரனிடம் எப்போ இந்தியா வருவீங்க என்று கேட்க
உன் வளைகாப்புக்கு அங்கே இருப்பேன் என்றவன் போனை வைக்க.
நான் வர்ர நாள் தான் உன் தம்பி வாழ்க்கை முடிய போற நாள்.
அந்த கௌசியை வாழ விட மாட்டேன். அவ நிம்மதியா இருக்க கூடாது.
வர்ரேண்டி இந்த வசீகரனை வேண்டாமுன்னு சொன்னல.நான் வர்ர நாள் தான் . நீ கடைசிய சிரிக்க போற நாள் என்று கௌசியின் போட்டோவை பார்த்து சிரித்தான்…
error: Content is protected !!