Skip to content
Post Views: 5,853
ரைஸ் மில்லுக்கு தன் புல்லட்டில் சென்று கொண்டிருந்தான் பரணி.
கைகள் அனிச்சையாக பைக்கை ஓட்டிக் கொண்டிருக்க, அவன் மனமோ, சற்று முன் நடந்ததையே நினைத்துக் கொண்டிருந்தது.
“ச்சே. அந்த பொண்ணு, என்னைப் பத்தி என்ன நினைச்சு இருப்பா? அவள கீழே விழாம பிடிச்சுக்க தான்னாலும், நாம அவ இடுப்பில் கை வச்சு தாங்கிப் பிடிச்சது தப்பு தான்!
என்ன இருந்தாலும் அவளும் ஒரு வயசுப் பொண்ணு! அவளை சங்கடப்பட வச்சுட்டமே!”
Advertisement
அந்த முகம்.. அப்பா என்னவொரு சாந்தம்! அந்த கண்களில் தான் எவ்வளவு கனிவு!
அந்த கனிவோடு அவள் சும்மா பார்த்தாலே போதும் போலேயே, அவள் ட்ரீட்மெண்ட் கூட செய்ய வேண்டாம்!
அந்த கனிவான கண்களில் ஒரு சின்ன சங்கடத்தையும் வெளிப்படுத்தினாள் அப்போது!
Advertisement
அவள் உடல் கூட கொஞ்சம் நடுங்கியது போல இருந்தது!
Advertisement
அவனும் அவன் ஜானுவின் இடுப்பில் கைப் போட்டுக் கொண்டு சினிமா பார்த்தவன் தான்!
அவனுக்காகவே அவள் க்ராப் டி ஷர்ட் அணிவாள்! கூடவே கிண்டலாக சொல்வாள். “உன்னோட லிமிட் இவ்வளவு தான்னு தெரியும் எனக்கும் தெரியும்” என்று!
அவளும் ஜானவியைப் போல நல்ல கலர்! ஆனால் அவள் முகத்தில் இத்தனை சாந்தம் இருக்காது.
Advertisement
கண்களில் ஒரு அலட்சியம், தான் ஒரு அழகி என்ற கர்வம் எல்லாம் இருக்கும். ஆனால் அதையெல்லாம் கூட அவன் அப்போது ரசித்தான் தான்!
ஆனால் இவளுக்கோ சாந்தமான முகம், கனிவான கண்கள்.
ஜானு, கேட்டால் கூட அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் உதவி செய்து விட மாட்டாள்.
அதற்கு அவள் வரையில் ஒரு நியாயமும் சொல்வாள்.
புட் ஆர்டர் பண்ணும் போது கூட டெலிவெரி பாய்க்கு சின்ன டிப்ஸ் ஆட் பண்ண மனம் வராது!
ஆனால் ஜான்வி அப்படியில்லை! வாலண்டியராகவே போய் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்கிறாள். அவர்கள் கேட்கும் வரைக் கூட காத்திருப்பதில்லை!
இதில், இந்த உதவும் விசயத்தில் அவள் தன்னுடனும், தன் சித்தப்பா கதிர் மாதிரி ஒத்துப்போவதாக அவன் பலமுறை நினைத்து இருக்கிறான்.
“ச்சே. நான் என்ன இப்படி ஜானுவோடு ஜான்வியை கம்பேர் செய்து கொண்டிருக்கிறேன்!
முதலில் என்னை வேண்டாம் என்று சொல்லிய ஜானுவைப் பற்றி, இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பதே முட்டாள் தனம்!
இனி என் வாழ்க்கையில் எந்த பொண்ணுக்கும் இடம் கிடையாது!
நல்லவளோ கெட்டவளோ, ஜானு அன்று சொன்னதில் ஒன்று கொஞ்சம் உண்மைதான்!
என்னோட சுமையை, நிறைய ஆசை கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கும் ஒரு பெண்ணின் தோளிலும் ஏற்றி விட்டுடக் கூடாது!
என் குடும்ப சுமையை நான் தான் சுமக்க வேண்டும்! என் பொறுப்புகளை நான் தான் ஏற்க வேண்டும்!
என்ன தான் பொறுப்புகளைப் பிரித்துக் கொடுத்து இருந்தாலும், தான் ஒரு பொழுதும் கூட பொறுப்பற்ற வாழ்க்கை வாழவே முடியாது.
பொறுப்புகள் பிரித்துக் கொடுத்தது அவர்களை ஸெல்ப் டிபெண்டண்ட் ஆக இருக்க வைக்க தான்!
ஸோ, நோ மோர் கேர்ள் இன் மை லைப்!
இனி ஜான்வியைப் பற்றி நினைக்கக்கூடாது! கூடவே கூடாது! அந்த பொண்ணு வேற எங்கியாவது நல்லபடி லைப் அமைஞ்சு நல்லா இருக்கட்டும்!”
“இனி சாந்தியைப் பத்தி நினைக்க மாட்டேன் சாந்தின்னு சொல்ல மாட்டேன்.. சாந்தியைப்பத்தி பேச மாட்டேன்” என்று ஒரு படத்தில் பார்த்திபன் சொல்லுவது போல, ஜான்வியை பத்தி நினைக்க கூடாது என்று நினைத்துக் கொண்டே, அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான் பரணி!
——
தன் வீட்டில், கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த ஜான்விக்கும் அதே நிலை தான்!
திரும்ப திரும்ப, ஆக்சன் ரீ ப்ளே மாதிரி,அவள் தடுக்கி விழ, அவன் பிடிக்க என்பதே அவள் நினைவில் வந்துக் கொண்டிருந்தது.
அவளுக்கு அவனின் கம்பீரம் பிடிக்கும்! அவனின் கேரிங் ரொம்பவே பிடிக்கும்! எல்லாவற்றையும் விட அவனின் அந்த ஆளுமையான குரல் அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்.
அவன் இருப்பே, அவளுக்குள் ஏதோ ஒரு பரவசம் கொடுக்கும்!
அவனிடம் நேரிடையாக பேசா விட்டாலும் கூட!
“அய்யோ, மனசே, இது தான் உன் லிமிட்! அதைத் தாண்டி போக நினைக்காதே!
அப்புறம் இருப்பதும் கெட்டுவிடும்!”
அவள் ஆசைப்பட்ட வேலை, கிராமத்து சூழ்நிலை! எல்லாவற்றையும் விட குறிப்பாக இந்த ஊர்! இந்த ஊரில் தான் இருக்க வேண்டும் என்பது அவளின் ரகசிய ஆசை அல்லவா!
அவள் ஆசைப்பட்ட ஊரில், இது போல அவள் படிப்பிற்கேற்ற வேலை, பாதுகாப்பான வீடு, சுற்றிலும் அன்பான மக்கள்!
வேறென்ன வேண்டும்? வேற எதாச்சும் தேவையில்லாத ஆசைகளை வளர்த்துக் கொண்டு பின்னாடி சங்கடப்படக் கூடாது!
இவர்கள் கிராமத்தவர்கள்! உள்ளுக்குள்ளேயே திருமணம் செய்து, ஸ்வெட்டர் பின்னல் போல உறவுகள் கொண்டவர்கள்!
தன்னைப் போன்ற ஒரு கலப்பினப் பெண்ணை அவர்கள் வீட்டில் ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான்!
உறவு என்று இல்லை என்றாலும், பேத்தி பேத்தி என்று தன் மீது பாசத்தைப் பொழியும் ஜகதுப் பாட்டி! கூடவே கனகுப் பாட்டி!
அவர்கள் அன்பை அட்வான்டேஜ் ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது!
நம் லிமிட்டிற்குள் இருந்து கொள்வது தான் நல்லது!
இனி அந்த பரணி கண் முன்னாடி எல்லாம் போய் நின்று விடக் கூடாது!
முடிந்தவரை அந்த வீட்டிற்குள் போகாமல் இருப்பது நல்லது!
அப்படியே போக நேர்ந்தாலும் அவன் இல்லாத நேரமாக போவது தான் நல்லது!
ஜான்வியும் தனக்குள் ஒரு சங்கல்பம் எடுத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால், இந்த இருவரின் சங்கல்பத்தையும் ஜகது & கனகு கூட்டணி எச்சில் போட்டு துடைத்து விடப் போவது பற்றி அவர்கள் அறிந்திருக்க வில்லையே!
———
மறுநாள் காலை.
“அண்ணா, என் பைக்கை சர்வீஸ்க்கு விட்டுருக்கேன், என்னையும் உன் கூடவே கூட்டிப் போய் ஆபீஸில் விட்டுடு” என்றபடி வந்தான் பரத்.
“சரிடா” என்று அவனையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பினான் பரணி!
அவனுக்கு இன்று டவுனில் அக்ரி ஆபிசரை சந்திக்க வேண்டியிருந்தது.
இருவரும் காரில் அந்த ஊரின் ரெண்டாவது பஸ் ஸ்டாப் அருகே போய்க் கொண்டிருக்கும் போது, அங்கு ஒரு மினி பஸ் நின்று கொண்டிருந்தது.
அதன் அருகே சிறு கும்பல்!
அதில் இருந்த சிலர் இவர்களின் காரை அடையாளம் கண்டு கொண்டு காரை வழி மறித்து அவர்களை நோக்கி வந்தனர்.
அதில் அந்த மினி பஸ் கண்டக்டர், டிரைவர், ரெண்டு கல்லூரி மாணவிகள் கூடவே கனகுப் பாட்டி!
கனகுப் பாட்டியின் இப்போதைய கெட்டப்பே அவர் டவுனில் இருக்கும் பேங்க்குக்கு போய்க் கொண்டிருக்கிறார் என்பதை காட்டியது.
பாட்டி ஊரில் இருக்கும் போது தான், சாதாரண ரேசன் புடவையும் கோடாலிக் கொண்டையுமாக இருப்பார்.
காலில் கூட சாதாரண ஹவாய் ஸ்லிப்பர் தான்! சில சமயம் அது கூட இருக்காது.
ஆனால் டவுனுக்கு என்று, அதுவும் பேங்கிற்கு போவதாக இருந்தால், பாட்டி பக்கா ப்ரோப்பசனல் தான்!
சில்க் காட்டன் புடவை, கையில் வாட்ச், ஹான்ட் பாக், அதில் சின்ன வாட்டர் பாட்டில், ஸ்பெக்ஸ், குடை, கர்சீப் காலில் பாட்டா செருப்பு! நீட்டாக எண்ணை தடவி சீவிப் போட்டுக் கொண்ட கொண்டை!
முதலில் நோக்கியா பட்டன் போன் தான் வைத்திருந்தார்.
கனடா சென்று வந்த பிறகு ஆன்ராய்டு போன்! பேரனிடம் வாட்ஸ் அப்பில் பேசவென்று!
அது வேற 3G போனாம், 5G போன் வாங்க வேண்டும் என்று பரத்திடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் பாட்டி போடும் கண்டிசன்கள், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யா சொல்லும் கண்டிசன்கள் போல் இருந்ததால்,
“நீ நம்ம ஆபிஸ் போனையே வச்சுக்க ஆத்தா, உன் பேரன் கிட்ட அந்த நம்பரையே கொடு” என்று சொல்லி விட்டான்.
அவன் வாங்கிக் கொடுத்தாலும் வாங்கிக்க மாட்டார்!
இப்போது இவர்களை நோக்கி அந்த கும்பல் வருவதைப் பார்த்தால், “கிழவி, யாரிடமோ ஏழரையை கூட்டிடுச்சு போலயே” என்று வாய் விட்டே சொன்னான் பரத்.
“டேய் சும்மாயிருடா, ஆத்தா காதில் விழுந்துட போகுது” என்று அவனைக் கண்டித்தான் பரணி!
“அண்ணே, நீங்களே இத கேட்டு ஒரு முடிவை சொல்லுங்கண்ணே” அந்த கும்பலில் இருந்த ஒரு கல்லூரிப் பெண், பரணியிடம் புகார் செய்தாள்.
“என்னம்மா, என்ன ஆச்சு? நீ பெயிண்டர் முருகேசன் அண்ணன் பொண்ணு தானே?”
“ஆமாண்ணா”
“சரி சொல்லு என்ன பிரச்சினை?”
“இந்த கனகு ஆத்தா, இல்ல, அது நான் பஸ்ல போன் பார்த்துட்டே வந்தேன்னு, தெரியாம இடிச்சுட்ட மாதிரி வேணுமின்னே என்னோட போனை கீழே தட்டி விட்டுடுச்சு, இங்க பாருங்க, எப்படி உடைஞ்சுப் போச்சுன்னு!” போனை காண்பித்தாள் அந்த பெண்!
அவள் கையில் இருந்த ஆப்பிள் ஐ போன் சுக்கல் நூறாக உடைந்து இருந்தது!
ஆளுக்கும் போனுக்கும் சம்பந்தம் இல்லையே! முருகேசன் அண்ணனுக்கு அவ்வளவு வசதியில்லையே!
இதில் ஏதோ விஷயம் இருக்கு! இல்லையென்றால் கனகுப் பாட்டி இப்படி வம்பு இழுத்து இருக்காது!
பரணி, கனகுவைப் பார்த்தான்.
“இப்ப என்னன்ற நீ, நான் வயசானவ, தள்ளாமையில தெரியாம என் கைப் பட்டு, உன் போன் ஜன்னல் வழியே கீழே விழுந்து உடைஞ்சுப் போச்சு, அவ்வளவு தானே, எவ்வளவுன்னு சொல்லு, நானே உன் அப்பன் கிட்ட கொடுத்துடறேன்!”
“ம்ம் அப்பா கிட்டயா, அதெல்லாம் வேண்டாம், என் கிட்டயே கொடு!”
“ம்ம். டேய் சங்கரு, எவ்வளவுடா இந்த போன், இந்தா இப்ப என் கிட்ட ஐயாயிரம் தான் இருக்கு, மிச்சத்த அப்புறமா தரேன்!”
“அது வரைக்கும் நான் என்ன பண்றது? நான் எப்படி படிக்கிறது?”
“அப்ப.. இந்த என் போனை வச்சுக்கோ, டேய் சங்கரு, என்னோட சிம்மை கழட்டிட்டு அவ கிட்ட கொடுடா”
“ம்ம். என்னோட போன் அறுபதாயிரம்! அதுக்கு உன்னோட போனா ஆத்தா.. பாருங்கண்ணே!” அவள் பரணியிடம் திரும்பவும் புகார் செய்தாள்.
“என்ன? படிக்கிற பொண்ணுக்கு, இத்தன ரூபாயில போனா? வயசுப் புள்ளைக்கு, காதில கழுத்தில ஒரு பொட்டு தங்கம் வாங்கிப் போட துப்பில்ல உங்கொப்பனுக்கு!
போன் இப்படி வாங்கிக் கொடுத்துருக்கானா அவன்! ஏய்.. கிளம்பு உடனே, நான் உங்கொப்பன பாக்கணும், நான் அவன் கிட்டயே பேசிக்கிறேன்!” கனகு அவள் கையைப் பற்றி இழுத்தார்.
முகமே வெளிறிப் போனது அந்தப் பெண்ணுக்கு!
“இல்ல ஆத்தா, அதெல்லாம் ஒண்ணும் வேணாம், எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு. நான் போகணும் என்னை விடு” என்று சொல்லியபடி, அந்த பெண் பஸ்சில் ஏறி விட்டாள்.
“அப்புறம் என்னடா வேடிக்கை, போய் பஸ்ஸ எடுடா,” டிரைவரை கனகு விரட்ட, பஸ் கிளம்பியது!
ஓடிப் போய் ஏறிக் கொண்டான் கண்டக்டர் சங்கர்! படியில் நின்றுக் கொண்டே, கனகுக்கு தம்ப்ஸ் அப் காட்டி சென்றான்!
அதை பரணி பார்க்க வில்லை! ஆனால் பரத் பார்த்து விட்டான்!
“ஏய்.. கிழவி! நீ ஏதோ சேட்டை பண்ணியிருக்க, இதில்! என்ன பண்ணுன?” பரத் கனகுவைக் கேட்டான் பரணி முறைப்பதையும் கண்டுக் கொள்ளாமல்.
“விடுடா விடு. இந்த கனகுவோட பொது வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம்!” என்றார் கனகுவும்!
“முதல்ல அந்த முருகேசன பார்த்து, உன் பொண்ணு படிச்சு கிழிச்ச வரைக்கும் போதும், உடனே ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து அவளுக்கு கல்யாணம் பண்ற வழியப் பாருன்னு சொல்லப் போறேன்” என்றார் கனகு! அவர்கள் காரில் ஏறிக் கொண்டே!
பரணியும் பரத்தும் அவரை ஆச்சர்யமாக திரும்பிப் பார்த்தனர்!
பரத் கேட்டே விட்டான்!
“இல்ல ஆத்தா, நீ படிக்கிற பொண்ணுங்களுக்கு நல்லா சப்போர்ட் தானே பண்ணுவ! இப்ப என்ன, இன்னிக்கு?”
ஆமாம். கனகுவுக்கு பெண்கள் நன்றாக படிக்க வேண்டும்! படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும்.
சொந்தக் காலில் நிற்க வேண்டும். அதற்கு தன்னால் ஆன உதவிகளை செய்வார்.
பெரிய பண உதவி என்றால் பரணி போன்ற ஆட்களிடம் கேட்டு வாங்கிக் கொடுப்பார்.
போன வாரம் கூட பெட்டிக்கடை மதியின் பெண் மலர் அவள் அம்மாவிடம் புதியதாக கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவள் அம்மாவோ “இன்னும் குழுவில் வாங்கிய பணத்தைக் கட்டவே இங்க முழி பிதுங்குது! இவ வேற, அதுக்கு காசு.. இதுக்கு காசுன்னு” என்று விரட்டிக் கொண்டிருந்தாள்.
இதைப் பார்த்த, கனகு, அந்தப் பெண்ணிடம் என்ன கோர்ஸ் என்ன விவரம் என்று கேட்டுக் கொண்டு, பரத்திடம் கேட்டார்.
“டேய். பரத்து, இந்த மலர் பொண்ணு, என்னமோ பித்தானோ, பொத்தானோ என்னமோ படிக்கணும்ங்கிறா, நீ கொஞ்சம் அவளை படிக்க வைக்கிறியா?”
“அது பைத்தான் ஆத்தா, நீ அந்த பொண்ணை வந்து பார்க்க சொல்லு, நான் படிக்க வைக்கிறேன். நல்லா படிப்பாளா?”
“அதெல்லாம் நல்லா படிக்கும்டா அந்த குட்டி, மதி கூட சொல்லுவான், எனக்கு லட்சுமி கடாட்சம் தான் இல்ல ஆத்தா, என்புள்ளைக்கு சரஸ்வதி கடாட்சம் நிறையவே இருக்குன்னு! நீ எதாச்சும் செய்டா”
இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜான்வி அவளாகவே, “நான் வேணுமின்னா பணம் தரேன் பாட்டி, அந்த பொண்ணை கோர்ஸ் சேர சொல்லுங்க!” என்றாள்.
அது தான் ஜான்வி! கேட்காமலே உதவி செய்யும் குணம் அவளுக்கு!
“ஏன் ஆத்தா, போன வாரம் கூட மதியண்ணன் பொண்ணு படிக்க ஹெல்ப் பண்ணின? ஜான்வி டாக்டர் கூட அவங்களே பணம் கட்டிறதா சொன்னாங்களே? இப்ப இந்த பொண்ணை மட்டும் ஏன் டார்ச்சர் பண்ணிட்டு இருக்க?” பரத் திரும்பிப் பார்த்துக் கேட்டான்.
ஜான்வி பெயரைக் கேட்டவுடன் கொஞ்சம் ஜெர்க் ஆகி, காரை ஒட்டியபடியே இவர்கள் பேச்சை கவனித்தான் பரணி!
“ஆமாண்டா, அது படிக்கிற பொண்ணு, ஆனா இது கண்ட பசங்களோட ஊர் சுத்த இல்ல போகுது!
எவனோ வாங்கிக் கொடுத்தான்னு இந்த வில உசந்த போனை வாங்கிட்டு வந்துருக்கு. பதிலுக்கு அவன் இவ கிட்ட ஏதாச்சும் எதிர்பார்க்காம இருப்பானா சொல்லு!
முருகேசன் எல்லாம் ரோசக் காரன், யாராச்சும் ஏதாவது சொல்லிட்டா, அப்படியே தொங்கிப் புடுவான்! அதான்!”
அன்று பஸ்ஸில் நடந்ததை அவர்களிடம் சொன்னார் கனகு!
பஸ்ஸில் நின்று கொண்டு வந்தார்கள் இரு கல்லூரிப் பெண்கள்!
பஸ்ஸில் நின்று கொண்டிருக்கும் போது போனைப் பார்த்துக் கொண்டு தான் வந்தார்கள்.
அது பஸ்சில் இருந்த பெரியவர்களை எரிச்சல் ஊட்டியது!
அவர்களை முறைத்த கனகுவிடம் வந்த கண்டக்டர் சங்கர்,
“ஆத்தா, ரெண்டு புள்ளைங்களையும் முறைக்காத. அதில இந்த பொண்ணு படிச்சுட்டு தான் வருது. அதோட பாடம் எல்லாம் பி.டி.எப் ஆ வச்சுருக்கு.
ஆனா இந்த முருகேசன் மாமா பொண்ணு தான் சரியில்ல! ரீல்ஸ் பார்த்துட்டு வருது!
கையில பார்த்தியா, ஐ போன்! அவ பாய் பிரன்ட் வாங்கி கொடுத்துருக்கான்! இது காலேஜ் போறேன்னு சொல்லிட்டு, அங்க வந்து கட் அடிச்சுட்டு அவன் கூட ஊர் சுத்துது!
டிரைவர் அண்ணன் கூட கண்டிச்சார் ஒரு நாள். அதுக்கு, அவர் தான் அது கிட்ட வந்து ப்ரபோஸ் பண்ணினார், அது ஏத்துகில்லைன்னு, அவளை தப்பா பேசுறதா மாட்டிவிடுவேன்னு சொல்லுது ஆத்தா, அதான் நாங்க ஒண்ணும் கண்டுக்கிறது இல்லை! என்று கனகுவின் காதில் மெல்ல கிசுகிசுத்தான்.
இதைக் கேட்டவுடன், கனகு ஆத்தா, மெல்ல வேற சீட்டுக்கு போய் உட்கார முற்பட்டது போல அவள் அருகே வந்து அவள் கொஞ்சம் பலமாகவே முழங்கையைத் தட்டி விட, அந்த போன் ஜன்னல் வழியே வெளியே விழுந்து நொறுங்கி விட்டது!
உடனே அந்த பெண் கத்தி பஸ்சை நிற்க செய்து பஞ்சாயத்து செய்து, கனகு மூலம் அவள் அப்பாவிடம் விஷயம் போகும் என்றவுடன் பேக் ஆகி ஓடி விட்டாள்.
இதைக் கேட்டவுடன், “நல்ல வேளை ஆத்தா, நீயெல்லாம் படிக்கல, நீ மட்டும் படிச்சுருந்த, இந்த உலகம் தாங்காது! ரொம்ப நிச்சயம் இந்த ஊர் தாங்காது!” கிண்டல் அடித்தபடி அவர்களின் எக்ஸ்போர்ட் கம்பெனி வாசலில் இறங்கிக் கொண்டான் பரத்.
“நீ என்ன ஆத்தா, உன்னை பாங்க்ல இறக்கி விடுறேன். உன் வேலை முடிஞ்சவுடன் போன் பண்ணு. நான் வந்து கூட்டிட்டு போறேன்” பரணி கேட்டான்.
“இல்ல, நான் இன்னைக்கு பேங்க்குக்கே போகல!”
“அப்ப என் கூட அக்ரி ஆபிஸ் வரியா, இல்ல, உன்னை வீட்டில் இறக்கி விட்டுட்டு அப்புறம் நான் போகட்டுமா?”
“இல்லப்பா, நான் அங்க வந்து என்ன செய்யப் போறேன்? நீ போற வழியில நம்ம ஹாஸ்பிட்டல்ல இறக்கி விட்டுடு. நான் ஜானகியோட இருந்துட்டு அவ கூடவே வீட்டுக்குப் போய்க்கிறேன்.”
மீண்டும் ஜான்வியின் பெயர்! அவன் நினைக்க கூடாது என்று நினைத்தால், மீண்டும் அவன் காதில் வந்து வந்து விழுகிறது!
ஹாஸ்பிட்டல் போனால், சீப் டாக்டர் பார்க்கிங்கிலேயே நின்றுக் கொண்டிருந்தார்!
கூடவே ஜான்வியும்!
இவனைக் கண்டவுடன் விஷ் செய்து விட்டு தலை குனிந்து கொண்டாள்.
இவன் ஏன் இங்கு வந்தான்? அவளுள்ளும் கொஞ்சம் படப்படப்பு!
அவனும் அவளுக்குப் பதிலுக்கு விஷ் செய்து விட்டு சீப் டாக்டரிடம் கொஞ்ச நேரம் பேசி விட்டு கிளம்பினான்.
அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் மனம் அவளையே நினைத்துக் கொண்டிருந்தது!
போகும் வழியிலும் தான்!
அக்ரி ஆபிசில் அடுத்த நாள் அவனை விருதுநகரில் நடக்க இருக்கும் சிறு தானியங்கள் பற்றிய ஒரு அக்ரி மீட்டிங் அட்டென்ட் பண்ண ஆலோசனைக் கூறினார் அக்ரி ஆபிசர்.
திரும்பி வரும் போது அவனுக்கு மதுரையில் ஒரு பிரன்ட் வீட்டிற்கும் போக வேண்டிய வேலை இருந்தது!
அப்பாடா, ஒரு ரெண்டு மூணு நாள் இந்த ஜான்வி அவன் நினைவில் அடிக்கடி வந்து தொல்லை செய்ய மாட்டாள்!
என்று நினைத்து தான் அவன் கிளம்பியதே!
ஆனால் அந்த ட்ரிப்பே அவனை ஜான்வியுடன் இன்னும் நெருக்கம் உண்டாக்கப் போகுதுன்னு அவன் அப்போது நினைக்க வில்லை!
error: Content is protected !!