Skip to content
Post Views: 1,178
நயம் – 17 
Advertisement
தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்தவள் சிறிது நாட்கள் வீட்டிலே இருந்தாள். ஓடி கொண்டே இருந்த கால்கள் ஓரிடம் நிற்குமா? தானும் வேலை பார்ப்பதாய் கூறினாள். அவனோ திடமாய் மறுத்து விட்டான். ஒண்ணுக்கு ரெண்டு குழந்தை வயிற்றில் வச்சிட்டு நீ ஆபீஸ் எல்லாம் வர கூடாது, வீட்லேயே இருந்து தொழில்களை பார்க்கலாம். நீ எங்கும் அலையக்கூடாது என்பதை கேட்டவள், வீட்ல இருந்தா எனக்கு போர் அடிக்கும் என்ன செய்ய என எதிர் கேள்வி கேட்டாள்.
ஐந்து வருசமா கஷ்டப்பட்டு படிச்சு, அப்பப்ப மட்டும் மாமா கம்பெனிக்கு பிளான் போட்டு கொடுக்குற. உன் படிப்பை வேஸ்ட் பண்ணாம அழகா நமக்குன்னு ஒரு வீட்டு பிளான் போடு, உனக்கு ரொம்ப புடிச்ச வீட்டு மாடல்ல ஒரு பெரிய பில்டிங் பிளான் பண்ணு. குழந்தைங்க பிறந்த பின்னாடி வீடு கட்ட ஆரம்பிப்போம். அதுக்குள்ள மத்த விஷயம் எல்லாம் முடிச்சி வச்சிருவோம். அப்பாவும், மாமாவும் அதுக்கு ஹெல்ப் பண்ணுவாங்கனு சொல்லி இருக்காங்க. இத்தனை நாள் எனக்காக நீ ஓடுன. இனி உன்னோட கனவுக்காக நானும் ஓடுறேன் என்றான் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே.
Advertisement
Advertisement
தலையாட்டுவதை தவிர்த்து அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை. ஏனென்றால் தொழில்கள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு, அனைத்து குழப்பங்களும் சரிசெய்யப்பட்டு, மிக பாதுகாப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுவிடாது. எனவே அதனை பற்றிய எந்த சங்கடமும் தனக்கில்லை. இனி அரவிந்த் கூறுவதைப் போல தன் படிப்பு திறமையை பயன்படுத்தலாமே.
மனைவியின் படிப்பை தூக்கி போட்டுவிட்டு, தனக்கு வீட்டில் அடிமை வேலையை மட்டும் செய்ய சொல்லும் கணவர்களுக்கு மத்தியில், தன் படிப்பு, கனவை பற்றி யோசிக்கும் அரவிந்தை இன்றுமாய் அவளுக்கு பிடித்தது. இதோ அவள் குழந்தைகளோடு சேர்ந்து அவள் கனவு இல்லதிற்கான பிளான் போடுவதும் நாளோடு மேனியும், பொழுதொடு வண்ணமாய் வளர்ந்து கொண்டு இருந்தது.
Advertisement
ஆறு மாத தொடக்கத்திலே குழந்தைகள் தன் தந்தையின் குரலை கேட்டதும் தாயை விட வேகமாக அவனிடம் ஓடி வர பார்க்கும். ரைட்ல ஒரு உதை. லெப்ட்டுல ஒரு உதை. வெளிய வர முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் அவள் வயிறு தான் அவர்களின் பிலே கிரவுண்ட் ஆனது. அவன் சிரித்து பேசுவதை கேட்டால் இன்னும் குலுங்க ஆரம்பித்து விடுவர். விஷ்ணுவும், சிவாவும் இவனோடு இணைந்து ஆட்டம் போட்டால், இரவு இடுப்பு வழியில் தான் துடிக்க வேண்டும். ஆதலால் அவர்கள் வந்தாலே இவள் பாடு திண்டாட்டம் தான்.
உருண்டு, திறந்து, பானை வயிற்றை தள்ளி கொண்டு நிற்கும் அபியை காண காண கண்கள் தெவிட்டவில்லை. குழந்தைகள் நல்ல வளர்ச்சியில் உள்ளதை ஸ்கேன் செய்யாமலே கண்களால் காண முடிந்தது. அதுவரை நடைப்பயிற்சி மேற்கொண்டவள், வெளியில் சென்றாலே அனைவரின் பார்வையும் அபியின் வயிற்றிலேயே நிலைத்ததில் கண்பட்டு விடுமோ என அச்சங்கொண்டு ருக்மணி பாட்டி இப்போதெல்லாம் அவளை எங்கும் அனுப்புவதே இல்லை. வீட்டின் மொட்டை மாடியில் மட்டும் நடந்தால் போதுமென்று சொல்லிவிட்டார் . காலை சூரிய உதயத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் உள்ள அரவிந்தோடு இணைந்து நடந்தாள்.
எந்த உறவுகள் அவர்களை பிரித்து வைக்க எண்ணியதோ அவர்களை எல்லாம் ஒன்றாக கூட்டி வளைகாப்பு நடத்தினான். இருவரையும் பிரிக்க முடியாது, மேலும் இருவராய் நால்வரானோம் என கெத்தாய் நின்றான். நம் மகிழ்ச்சியை குலைக்க விருப்புவோர் மத்தியில் கோபம் காட்டாது, தன் இயல்பு மாறாது, தலை தூக்கி நிற்பதும் அவர்களை தண்டிப்பதற்கு சமம் தானே. அவன் தன் கோபத்தை வார்த்தையில் காட்டவில்லை. வாழ்ந்து காட்டினான். வாழ்க்கையில் காட்டினான்.
ஆகாய வர்ண கலரில், குங்கும பூ கலர் பார்டர் வைத்த பட்டு சேலையில் அவனின் மங்கை மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து வந்தாள். பொன் வண்ண ஆபரணங்களை விட அவள் முகம் ஜொலித்தது. அழகுக்கு அழகு சேர்த்தது போல தாமரை மலர் சூடி , சிவந்த கன்னத்தில் சிறு திருஷ்டி பொட்டு வைத்து வஞ்சியவள் வந்து நின்றாள். மூத்த சுமங்கலி பாட்டி ஒருவர் சந்தானம் பூசி, குங்குமமிட்டு , மலர் தூவி, வளையல் பூட்டி விசேஷத்தை தொடங்கி வைத்தார். அவரை தொட்டு ருக்மணி பாட்டி, பிரியா, பிரமிளா, பவியின் மாமியார், பவி என ஏனையோரும் வளை அணிவித்தனர்.
பிரமிளா அரவிந்தை பார்த்து, வாப்பா, நீயும் வந்து அணிவிக்க வா என்றதை தொட்டு , மனைவியின் சேலை வர்ணத்திலேயே சர்ட் போட்டு , வெண் பட்டு வேஷ்டியில், முகம் முழுவதும் , விசுகசிக்க புன்னகையோடு வந்து நின்றான்.
அழகிய வேலைப்பாடுகள் நடுவே வைர கற்கள் மின்ன பொன் வளையலை அவளின் கரம் பற்றி அணிவித்து , சந்தனம் பூசி, அவளின் நெற்றியில் சிறு முத்தம் பதித்தான். அவன் சுவாசம் அவள் மீது பட்ட உடனே அவள் மணிவயிற்று பிஞ்சுகள் அசைய ஆரம்பித்தன.
கன்னம் சிவக்க ஆரம்பிக்க, அவள் முகம் சுருங்க வயிற்றில் கரம் வைக்க, அவளை பார்த்து கொண்டு இருந்த பாட்டி ஒருவர், என்ன உன் பிள்ளை அப்பனை பார்த்ததும் உதைக்க ஆரம்பிக்குதா, ரொம்ப பாசம் போல அவன் மேல. பார்த்தும்மா, விட்டா பிறந்து உடனே அவன் கையில தாவி ஓடிரும் போலவே என கேலி பேச கேட்டவர்கள் சிரித்தனர்.
சிறிது நேரம் கழித்து, அபி, வா உள்ளே போய் உட்காரலாம், கால் ரெண்டும் நல்லா வீக்கம் கொடுத்துருச்சு. அப்புறம் நடக்க கூட முடியாம கஷ்டப்படுவே. காலை நீட்டி கொஞ்ச நேரம் உட்கார்துக்கோ என்றபடி பிரியா அவளை அறைக்கு அழைத்து சென்று விட்டார்.
ஏன் இன்னும் கொஞ்ச நேரம் உட்கார வச்சு இருக்கலாமே, அதுக்குள்ள உள்ளே கூட்டி போய்ட்டாங்க என்றார் ப்ரியாவின் பெரியம்மா.
இல்லை பாட்டி, அவளால ரொம்ப நேரம் சேர்ல உட்கார முடியல. அதான்.
அப்புறம் குழந்தைங்க எவ்ளோ வெயிட் இருக்காங்க. நல்லா வளர்ச்சி தெரியுது.
போன வாரம் பார்த்த ஸ்கேன்ல ரெண்டு பேரும் சேர்த்து நான்கு கிலோன்னு சொன்னாங்க. மத்த எல்லாமே கரெக்டா இருக்கு பாட்டி.
இப்பவே வெயிட் ஏறுன மாதிரி தான் இருக்கு. அவளை மாடி எல்லாம் மேல ஏறி இறங்க விடாதீங்க. கீழ ரூம்ல இருக்கட்டும். நல்லா டெய்லி ஒரு ரெண்டு மணி நேரம் நடக்க மட்டும் வச்சு, ராத்திரில கொஞ்சம் இளஞ் சூட்டுல தண்ணியை வயித்தில உத்தி விடுங்க. அப்ப தான் நல்லா தூக்கம் வரும். எடை கூட்டுற மாதிரி சாப்பாடு ரொம்ப கொடுக்காதீங்க. அப்புறம் பிரசவத்துல ரொம்ப சுணக்கம் ஆகிடும். பார்த்து பத்திரமா பார்த்துக்கோடா. மூணு உசிரும் நல்லா இருக்கணும்.குல தெய்வத்துக்கு போய் நல்லா வேண்டிக்கோங்க . என் பேத்தி வயித்து பிள்ளை பார்த்துட்டு தான் இந்த உசிரு போகணும் என்றார் அந்த எண்பதை கடந்த பாட்டி.
நீங்க எல்லாமிருக்கும் போது எங்களுக்கு என்ன பயம். எங்களை வளர்த்த மாதிரி அவங்களையும் வளர்த்து கொடுங்க என்றபடி வந்தான் அரவிந்த்.
உனக்கென்ன பேராண்டி, உன் நல்ல மனசுக்கு எந்த குறையும் வராது. இன்னும் ரெண்டு பிள்ளை கூட அழகா பெத்துக்கோ. மனசார வளர்த்து தரேன். ஆமா உங்கம்மா எங்க ஆளையே காணோம். மருமக பின்னாடியே தான் திரியிறா. இங்க வர மாட்டலாமா?.
அபிக்கு சாப்புடு குடுக்க போயிருக்காங்க பாட்டி , இப்போ வந்துருவாங்க.
உன்னை பெத்து வளர்க்க அவ்ளோ கஷ்டம் பட்டுட்டா. இப்போவாது சந்தோசமா இருக்காளே. பத்திரமா பாத்துக்கோப்பா எனகூறிக்கொண்டே இருக்கும்போதே பிரமிளா வந்து விட்டார்.
வாடிமா. மருமக பின்னாடியே சுத்தி முடிச்சுட்டியா. இனி அடுத்து பேர பசங்க பின்னாடி சுத்த போற. நல்லா இருக்கியா?
சௌக்கியமா நல்லா இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கீங்க?
எனகென்னத்தா உங்க மாமன் கூட நல்லா தான் இருக்கேன். எப்போ போக போறேன்னு தான் தெரியல.அதுக்குள்ள உங்கள பாத்துரலாம்னு தான் ஓடி வந்தேன்.
ஏன் அத்தை இப்படி சொல்றீங்க. இன்னும் நிறைய வருஷம் நல்லா இருப்பீங்க.
இருப்போம் இருப்போம். உன் மருமகளை நல்லா பாத்துக்கோமா. குனிஞ்சி நிமிந்து வேல வாங்கு. வீட்டை கூட்டி டெய்லி பெருக்க வை. மெதுவா பண்ணாலும் அவளே பண்ணட்டும். அப்பதான் இடுப்பெலும்பு நல்லா வலுவாகி, கருப்பையும் பலமாகி சுகப்பிரசவம் ஆகும். நல்லா நடக்க வை. கால்ல வீக்கம் வந்தாலும் தண்ணீர் நிறைய குடிக்க வச்சு, நீர்சத்து உடம்புல நல்லா நிக்குறமாரி பாத்துக்கோ. பத்து பிள்ளை பெத்தவடா. என் பேத்தியும் சொகமா பிள்ளை பெத்துருவா. எனக்கென்னமோ பொம்பள பிள்ளை தான் பிறக்கும்னு தோணுது. மூஞ்சி நல்லா ஜொலிக்குது. எப்படியும் பிள்ளை ஒவ்வொன்னும் மூணு கிலோ கிட்ட வந்துரும். சாப்பாட்டை பார்த்து பத்திரமா கொடுங்கத்தா. பிள்ளை பெத்த உடனே சொல்லு வாரேன் என்றார் சுந்தரி பாட்டி.
நீங்க இல்லாமலா அத்தை, நம்ம வீட்டுல விசேஷம் நடக்க போகுது. என் பேர பிள்ளைகளுக்கு நீங்க தான் மொத ஆசிர்வாதம் பண்ணனும்.
இவர்கள் இங்கே பேசி கொண்டு இருக்க அங்கே கணேசின் நண்பர்கள் கூட்டமோ அவர்கள் இருவரையும் கலாய்த்து கொண்டு இருந்தது. சிறு வயது நண்பர்கள் அல்லவே, இவர்களின் அனைத்தும் அறிந்து கொண்டு, ஏன்டா, உங்க வீட்டுல ரெண்டு பொண்ணுங்க பிறந்த உடனே , அவ்வளவுதான் இவன் மருமகன்க வந்துட்டா பிரிஞ்சி போயிருவாங்கன்னு நாங்க நினச்சா, அவன் மகனை கட்டி சம்மந்தி ஆகி உறவை புதுப்பிச்சுட்ட. நண்பேன்டா நீங்க ரெண்டு பேரும் . இப்போ பேர பசங்க வேற வந்து தாத்தா ஆகிட்டீங்க. எப்போ தனியா இதுக்கு ட்ரீட் தர போறே.
கண்டிப்பா தருவோம்டா . எங்க வீட்டு நட்போடு நாலாவது தலைமுறை வாரிசு ஆச்சே. அவங்களை எங்க கையில் தூக்கின அடுத்து நொடி உங்களுக்கு பெரிய ஹோட்டல்ல விருந்து ஏற்பாடு பண்ணிருவோம். என்று சந்தோசமாய் சிரித்தார் அச்சுதன்.
அதோ இதோவென நாட்கள் ஓடி அவர்கள் எதிர்பார்த்த நாளும் அருகில் வந்து விட்டது. நார்மல் டெலிவரிக்கு முயலலாம், முடியாத பட்சத்தில் தான் சிசேரின் என கூறிவிட்டனர். பவிக்கு இரு குழந்தைகளும் நார்மல் தான். ஆதலால் இவளுக்கும் எதிர்பார்த்தனர்.
என்ன நார்மல் டெலிவெரியில் அந்த ஒரு நாள் பொழுது மட்டுமே வழியை உணர வேண்டும். சிசேரியன் என்றால் வலிக்காது குழந்தை பெற்று வாழ்வின் பொழுது முழுவதும் வலி உணர வேண்டும். அவ்வளவுதான் வித்தியாசம்.
என்ன தான் நாம் அத்தனை முயற்சிகள் செய்தாலும் தெய்வம் மட்டுமே அறியும் நம் குழந்தையின் பிறப்பை. அபிக்கும் சிறிது மனதில் தயக்கம் இருந்தது. என்ன தான் தைரியமாக அத்தனை வேலைகளை செய்தாலும், நாட்கள் கடக்க, தன்னை மீறி ஹார்மோன் மாற்றத்தில் பயத்தினை உணர்ந்தாள். தன்னை கொண்டு தானே தன் கணவன் இருப்பான் என்பதால் அவனிடம் கூட கூற முயலவில்லை. ஆனாலும் அவள் முகம் கண்டே அவனும் அவளை தேற்றினான். நம்ம பாப்பா அழகா நம்ம கையில் வந்து, உன்கிட்ட சேட்டை பண்ணி வாங்கி கட்டிக்க தான் போகுது, அவங்க நம்மளை விட சேட்டை பசங்களா தான் இருப்பாங்க.
பயப்படாம ரிலாக்ச்சா இரும்மா. நான் தான் கூடவே இருக்க போறேன். அப்புறம் என்ன?
அது தான் பயமா இருக்கு. சட்டென்று டென்ஷன் ஆகி நிற்ப்பீங்க. யாரை பத்தி நினைக்காம உடனே ஓடி வந்து நினைச்சதை செய்யுனும்னு இருப்பிங்க. ஏற்கனவே எல்லாரும் பயந்துட்டு இருக்காங்க. நீங்க தான் அவங்க எல்லாரையும் சமாளிச்சு பார்த்துக்கணும். என்ன பண்ண போறிங்களோ தெரியல?
நான் என்ன சின்ன பிள்ளையா, பாத்துட்டு நிற்க, பாரு ஐயா பயப்படாமல் என் பிள்ளைங்களை எப்படி தூக்கி கொஞ்ச போறேன்னு?
ஆமாம், நீங்க எந்த குழந்தையும் இதுவரை தூக்கி பார்த்தது இல்லையே, எப்படி நம்ப பசங்கள தூக்குவிங்க. தூக்கி பழகி தான் ஆகணும், வேற வழியில்லை. உங்கட்ட கொடுத்துட்டு அப்பாடான்னு நான் தூங்கிருவேன்.
நீங்க தான் முழிச்சு பார்த்துக்கணும்.
உன்னை தூக்கி பழக்கம் இருக்கு. அதுக்கப்புறம் யாரையும் தூக்கி பழக்கம் இல்லை. நான் தான் முதல்ல தூக்கி கொஞ்சுவேன்.
இப்போ வாயாடிக்கிற நீங்க அப்போ என்ன பண்ண போறீங்கன்னு பார்க்க தானே போறேன்.
வாயை பத்தி பேச கூடாதுன்ன சொல்லியும் நீ அடங்க மாட்டேங்கிறே. அப்புறம் சேதாரம் உனக்கு தான் ஜாஸ்தியாகும் பார்த்துக்கோ.
அதெல்லாம் சமாளிப்போம். எனக்கு ஒண்ணுமில்ல என்றபடி அவர்களின் பொழுது இனிமையாக கழிந்தது. இதோ அவர்கள் எதிர்பார்த்த அந்த நாளும் வந்து விட்டது.



“தாயின் பாலைத்
தந்து வளர்த்தால்
தங்கம் போல் வளரும் !
தழுவும் போதே
தட்டி வளர்த்தால்
தன்னை உணர்ந்து விடும் !
நோயில்லாமல்
காத்து வளர்த்தால்
நூறு வயது வரும் !
கல்வியோடு
கடமையையும்
கற்று கொடு
கருத்தாய் வளரும் !
எதிர் நீச்சல் அடிக்க
சொல்லி கொடு
எதுவும் சுளுவாகும்!
பேணி வளர்த்திட்டால்
பெருமை என்றுமே
உனதாகும்! வளமாகும் !”
error: Content is protected !!