Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காற்றின் அலைவரிசை கேட்கிறதா

KAK 2

” நீலக்கடல் அலைகள் நிரம்ப தாலாட்டும்

திருச்செந்தூர் இது
திருச்செந்தூர்

ஆழிப்பேரலை அடங்கி நடந்தது

அது எந்தூர்…….. இந்த திருச்செந்தூர்”



Advertisement

என ஒலித்த வேலவனின் பாடலை கேட்டுக்கொண்டே அந்த வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழையாமல் அப்படியே நின்றார் மயில் வாகணார்.

அவரை பார்த்தால் எண்பது வயதை தாண்டியவர் என எவரும் சொல்ல முடியாது. தனது 82 வயதிலும் உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்து இருந்தார். ஆனால் இந்த ஒரு மாத காலமாக அவர் மனதில் சில விரும்பத்தகாத நிகழ்வுகளால் அடுத்து என்ன முடிவு எடுப்பது என தெரியாது மனதில் குழம்பி உள்ளார்

கதவை திறக்கும் சத்தம் கேட்டும் இன்னும் உள்ளே வராமல் இருந்த தனது மணவாளனை தேடி வந்தார் வள்ளியம்மை.

Advertisement

அவர் வருகையை கூட அறியாமல் ஏதோ நினைவில் நின்றவரை பார்த்து ” மாமா அப்படி என்ன நினைப்பு காலையிலேயே உங்களுக்கு, எதிரே ஆள் வந்தது கூட தெரியல” என்றார் சத்தமாக

Advertisement

அதில் தன் சிந்தனை களைந்தவர். தன் எதிரில் நெற்றியில் செந்தூரம் வைத்து மஞ்சள் முகமாக நின்றவரை
பார்த்து புன்னகைத்தார்.

“அதுவா வயசு போக போக நீ மட்டும் அப்படியே எப்படி இருக்கணு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்”என்றதில் முகம் சிவந்தவர்

“வர வர உங்களுக்கு கொழுப்பு கூடி போச்சி மாமா “என பொய் கோவம் கொண்டு அவரை திட்டிவிட்டு உள்ளே சென்றார் வள்ளியம்மை.

Advertisement

“வள்ளி உன் வெக்கத்தை நானறிவேன் “என அவரின் பின்னால் கிண்டல் செய்துக்கொண்டு சென்றவரை பிடித்து நிறுத்தி,

“மயில் என்ன என் வள்ளி டார்லிங்-க கிண்டல் பண்ற ” என்றான் அந்த வீட்டின் கடைசி மைந்தன் விசாகன்.

“டேய் என் பொண்டாட்டிய அப்படி கூப்பிடாத டா “என்றார் அந்த வயதிலும் ஏற்பட்ட பொறாமையால்

“அத என் வள்ளி டார்லிங் சொல்லடும் அப்ப கூப்பிடாம இருக்கேன் “என்றான் அவரை வெறுப்பேற்றும் விதமாக

“இருடா உங்க அப்பனை கூப்பிடுறேன்” என்றவரிடம்

“ஐயோ தாத்தா நான் பாவம், நான் உன் செல்லப் பேரன் இல்ல, நான் உன் ஒத்தைக்கொரு பேரன் இல்ல. அறியா சிறுவன் தெரியாம சொல்லிட்டேன். என்ன மன்னிச்சு விட்டுறு தாத்தா”என கெஞ்ச தொடங்கினான்

” சரிடா பொழச்சிப்போ” என்று சொல்லி அந்த கூடத்தின் நடுவில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.
நாற்காலிக்கு கீழே அவரின் இரு கால்களுக்கு இடையே அமர்ந்து, ” என்ன தாத்தா உன் அருமை பிள்ளைகளை இன்னும் காணோம்” என்றான் விசாகன்

” அதுவா உன் அப்பாவும் பெரியப்பாவும் நேத்து நைட்டு கடையிலிருந்து வர நேரம் ஆகிட்டு, ஆமா நீ எப்படி சீக்கிரமா எழுந்த” என்றவரிடம்

” எக்ஸாம் நடக்கு தாத்தா படிச்சிட்டு இருந்தேன் லைட்டா தூக்கம் வர மாதிரி இருந்துச்சு அதான் டீ குடிக்கலாம்னு வந்தேன்” என்றான் சோர்வாக

“அது சரி வள்ளி விசாக்கு ரெண்டு காபி கொண்டு வா” என்றார் சமையலறையில் உள்ள மனைவியிடம்

அதே நேரம் கையில் இரண்டு கோப்பையுடன் வந்தார் அந்த வீட்டில் மூத்த மருமகள் சிவகாமி.

“யாருக்கு மாமா ரெண்டு காபி” என தான் கொண்டு வந்த இரண்டு கோப்பையில் ஒன்றை விசாகனிடமும் மற்றொன்றை தன் மாமனாரிடமும் கொடுத்தாள் சிவகாமி

“அதுவா எல்லாம் நம்ம விசா குட்டிக்கு தான்” என்று சொல்லி அவள் கொடுத்த கோப்பையை நுகர்ந்து பார்த்து, ” என்னமா இன்னைக்காவது காப்பி தந்து இருக்கலாம் இல்ல” என்று குறை சொல்லி அதை பருக ஆரம்பித்தார்.

” வயசு ஆகுதுல மாமா ரெண்டு நாளா தலை சுத்துது வேற சொன்னீங்க அதான் இனிமே காலைல காபி கிடையாது மாமா சத்து மாவு கஞ்சி தான் ” என்றவளின் புன்னகை முகத்தை பார்த்தவர் எதுவும் சொல்லாமல் குடிக்க தொடங்கினார் மயில்வாகனார்.

இவ்வளவு நேரம் பார்வையாளனாக இருந்தவன் “அப்படி சொல்லுங்க பெரியம்மா இந்த மயிலுக்கு வருஷம் போக போக இளமை திரும்புதுன்னு நினைப்பு வேற” என்றான் கிண்டலாக விசாகன்

” அது சரி நீ பரிட்சைக்கு படிக்காம இங்க என்ன பண்ற” என்று சொல்லி பொய் கோபத்தோடு அவனின் காதை மெல்லமாக திருகிவிட்டாள் சிவகாமி.

ஆ….. என்ற சிறு அலறலுடன் “பெரியம்மா வலிக்குது இதோ படிக்கப் போறேன்” என்றான் விசாகன். அதில் சிவகாமியும் தாத்தாவும் சிரித்து விட

அப்போதுதான் அறையில் இருந்து வெளியே வந்த இந்த வீட்டின் இரண்டாவது மருமகள் பிரபாவதி இவர்களின் சிரிப்பை பார்த்து கோபம் கொண்டு, ” என் பையன் எப்போதுமே பரீட்சையில் முதல்ல தான் வருவான். மத்தவங்க பிள்ளையை மாதிரி ஜஸ்ட் பாஸ் பண்ண மாட்டான் அவனுக்கு எப்ப எப்படி படிக்கணும் தெரியும். அதனால யாரும் அவனே திட்ட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டு வந்தாள்.

அவளின் இந்த பேச்சினை கேட்டு அதுவரை புன்னகை முகமாக இருந்தவர்களின் முகம் இருண்டது.

” என்னமா இப்படி பேசுற உனக்கு பேசவே தெரியாதா” என கடுப்புடன் கேட்டான் விசாகன்

” டேய்” என ஆரம்பித்து அவனை திட்ட தொடங்கும் முன்

“என்னம்மா பிரபாவதி பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்குது என்ன பழசு எல்லாம் மறந்துட்டோ” என அவளை அதட்டி கொண்டு அங்கே வந்தார் வள்ளியம்மை.

” ஐயோ அத்தை அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை” என சமாளிப்பாய் சொன்னாள் பிரபாவதி

” பழச என்னைக்கும் மறக்க கூடாது.நாம யாரு எப்படி இந்த வீட்டுக்குள் வந்தோம். யார எப்படி பேசுறோம் அதுக்கு நமக்கு தகுதி இருக்கா அப்படின்னு பார்த்து பேசணும்” என அவளை திட்டி விட்டு
” எப்பவும் நமக்கு அடுத்தவங்க பேசுவாங்கன்னு எதிர்பார்க்க கூடாது, இங்க வாய் பேசலனா நம்மள வாழ விட மாட்டாங்க,என்ன நான் சொல்றது புரிஞ்சுதா” என்ன சிவகாமியை திட்டவும் மறக்கவில்லை அவர்

தேவையில்லாமல் சண்டை வளர்க்கும் அன்னையை அடக்க முடியாமல் பாசமாக வளர்த்த பெரியம்மாவின் கலங்கிய முகத்தை வேதனையுடன் பார்த்து நின்ற விசாகனிடம் “கண்ணா நீ போய் படி “என சொல்லி அனுப்பிவிட்டு, வேதனைவுடன் இருந்த கணவரின் முகத்தை பார்த்தார் வள்ளியம்மை.

“என்னங்க நீங்க போய் ரூம்ல கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுங்க” என அவரை அனுப்பிவிட்டு தனது இளைய மருமகளிடம்,
” இதுதான் நீ முழிச்சி வர்ற நேரமா அதுவும் வந்து ஒரு வேலை கூட செய்யல அதுக்குள்ள காலையில கலகம் பண்ணலாம்னு பாக்கியா” என அதட்ட

” இல்ல அத்தை அது என ஆரம்பித்தவளிடம்

” நீ எதுவும் சொல்ல வேண்டாம் போய் வேலையை பாரு” என அவளை அனுப்பிவிட்டு

தனது முன்னே கண்கலங்கி நின்ற சிவகாமியை பார்த்து “உன்னை என்ன சொல்லனு எனக்கு தெரியல. இப்படி அவ சொல்வதற்கு எல்லாம் கண்ணை கசக்கி கசக்கி தான் என் பேத்திய இந்த வீட்டுல இருக்க விடாம பண்ணிட்டீங்க. நீ மட்டும் கொஞ்சம் வாய் பேசுறவளா இருந்தா என் பேத்திக்கு இந்த நிலைமை வந்திருக்குமா” என அவளை திட்டிக்கொண்டு இருக்கும் போதே அங்கே வந்தார் சிவகாமியின் கணவரும், மயில்வாகனார்- வள்ளியம்மை தம்பதியின் மூத்த புதல்வரும் ஆன செந்தில் முருகன்.

“என்னமா காலையிலேயே என் பொண்டாட்டியை திட்டிகிட்டு இருக்க” என்றவரிடம்

” ஆமா பொல்லாத பொண்டாட்டி போடா, எல்லாம் நீ குடுக்குற செல்லம் தான் அவ இப்படி இருக்க காரணம். ரெண்டு வார்த்தை அதிகமா பேசினா என்ன உன் பொண்டாட்டிக்கு” என்றார் கோவமாக

” விடுமா அவளுக்கு அன்பா தான் பேச தெரியும். அதான் நீ இருக்கயில்ல நீ பாத்துக்க” என்றார் சிரிப்புடன்

அவரின் சிரிப்பை பார்த்து இன்னும் ஆதங்கத்துடன் ” உன் வாழ்க்கையில பண்ண மாதிரியே உன் பொண்ணு வாழ்க்கையில பண்ணிட்டாங்களே டா” என்றார் வள்ளியம்மை

அதில் முகம் வாடி நின்ற தனது மனையாளின் முகத்தைப் பார்த்து அவளின் கையை பிடித்துக் கொண்டு “அதனால என்னம்மா நான் இப்போ நல்லா சந்தோசமா தானே வாழ்றேன். அதே மாதிரி என் பொண்ணு நல்லா வாழ்வாமா” என அவரை அணைத்து ஆறுதல் சொன்னார் செந்தில் முருகன்.

அதில் தெளிந்தவர் ” சரிடா நேரமாகிட்டு சாப்பிட வா நான் போய் எடுத்து வைக்கிறேன்” என சொல்லி சமையலறைக்குள் சென்றார் வள்ளியம்மை.

போகும் அவரே பார்த்து நின்ற தனது மனைவியிடம் “என்ன சிவா எதுக்கு இப்படி கலங்கி போற நம்ம பொண்ணு குணத்துக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்” என ஆறுதல் சொன்னவர் நினைவு வந்தவராய்,
” ஆமா குட்டிமா நைட் போன் பண்ணாலா” என்றார் செந்தில் முருகன்.

” ஆமா மாமா பேசுனா உங்கள தான் கேட்டா ஆனா நீங்க தான் நைட் பன்ரெண்டு மணிக்கு வர அந்த வள்ளிமயிலேயே குடியிருக்கிங்களே” என்றாள் சிவகாமி கிண்டலாக

அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்து,தனது நீள மூடியின் நுனியில் முடிச்சிட்டு சிறிது மல்லிகை பூவை அதில் வைத்து முகத்தில் கஸ்தூரி மஞ்சள் பூசி அதில் திலகம் வைத்து இன்று பூத்த மலர் போல நிற்கும் தனது மனைவியை அழகை ரசித்துக்கொண்டே ” உனக்கு பேச தெரியாதுன்னு எங்கம்மா சொல்றாங்க ஆனா நீ எப்படி பேசுவது எனக்கு தெரியும்” என்றார் செந்தில் முருகன்

அதில், “மாமா ” என சிணுங்கியவள்
“உங்களுக்கு வேற வேலை இல்லையா என்ன கிண்டல் பண்றீங்க “என சிவந்த முகத்தை மறைத்து உள்ளே போக திரும்பியவளின் கையை பிடித்து,

” இல்லையே இந்த சிவகாமி தேவியை தரிசிப்பதை தவிர இந்த அடியனுக்கு வேற வேலை இல்லை “என மீண்டும் கலாய்த்தார் செந்தில் முருகன்.

” போ மாமா” என அவரின் பேச்சினை தாங்க முடியாமல் அவர் பிடித்திருந்த கையை விலக்கிவிட்டு உள்ளே சென்று மறைந்தாள்.

போகும் அவளை புன்னகையுடன் பார்த்து நின்று செந்தில் முருகனை நெருங்கி “அண்ணா நேத்து வந்த ரெடிமேட் துணி எல்லாம் பழைய ஸ்டாக் கூட வைக்கட்டானு மேனேஜர் கேக்குறாங்க என்ன சொல்லட்டும்” என கேட்டார் அவர் தம்பி பழனி முருகன்.

அதற்கு “வேண்டாம் தனியா வைக்க சொல்லு” என சொல்லி அவரின் முகத்தைக் கூட பார்க்காமல் சென்றார் செந்தில் முருகன்.

தனது முகத்தைக் கூட பார்க்காமல் செல்லும் அண்ணனை நினைத்து வருந்தியவரின் அருகில் வந்து “என்ன உங்க பாசமலருக்கு உங்க முகத்தை கூட பார்க்க பிடிக்கலையா” என்றாள் நக்கலாக பிரபாவதி.

அதில் திரும்பி அவளின் முகத்தை பார்த்தார் சுண்டி விட்டால் ரத்தம் வரும் அளவுக்கு கலராக 40 வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அவளின் அழகை எப்போதும் பார்த்தாலும் ஒரு கர்வம் எழும். ஆனால் இப்போது அவருக்கு நச்சு பாம்பாக தெரிந்தது.

இந்தப் பாம்பிடம் தான் திருமணம் என்ற பெயரில் 25 வருடமாக அடிமையாக இருந்தது இப்போதுதான் அவருக்குத் தெரிந்தது அதில் தன்னை கேவலமாக நினைத்துக் கொண்டார் பழனி முருகன்.

” என்ன அப்படிப் பாக்குறீங்க” என்று ஒருவித மயக்கும் குரலில் சொன்னவளை பார்த்து

” நீ பாம்புனு எனக்கு தெரியுறதுக்கு 25 வருஷம் ஆயிருக்கு. நான் எவ்ளோ பெரிய முட்டாளா இருந்து இருக்கேன் இல்ல. அது மட்டும் முன்னாடியே தெரிஞ்சி இருந்தா என் பொண்ணையாவது உங்கிட்ட இருந்து காப்பாத்திருக்கலாம். இப்ப அவளும் உன்னை மாதிரியே ஆயிட்டா. அன்னைக்கு நம்ம என் அண்ணனுக்கு செஞ்சு பாவத்தை இன்னைக்கு என் பொண்ணு என் அண்ணே மகளுக்கு செஞ்சுட்டா. இந்தப் பாவத்தை நான் எப்படி குறைக்கணு எனக்கு தெரியலையே” என்றார் வருத்தமாக

“ஆனா நல்ல வேலை என் மகனாவது என் அண்ணனோட வளர்ப்புல நல்ல வளர்ந்து இருக்குகான் ” என்றார் சற்று பெருமையாக

அதில் முகத்தை சுளித்து, “ரொம்பதான் என் பொண்ணுக்கு என்ன குறை அவ நல்லா தான் வளர்த்து இருக்கேன் அதனாலதான் அவ்வளவு பெரிய குடும்பத்துல மருமகளா இருக்கா” என்றாள் பெருமையுடன்

“ரொம்ப பெருமை கொள்ளாத அந்த வாழ்க்கை கூட என் அண்ணனால தான் உன் பொண்ணுக்கு கிடைச்சது மறந்துடாத” என்று கோபமாக சொல்லி சென்றார் பழனி முருகன்.

போகும் அவரை கோபமாக பார்த்துக் கொண்டு “உங்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லை என்னையும் என் பொண்ணையும் கரிச்சு கொட்டலனா இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு சோறு செரிக்காது. இது வரைக்கும் நடந்தது போதாது போல இன்னும் இங்கே உள்ளவங்களுக்கு நம்ம யாரு காட்டணும்.” என வஞ்சமாக சொல்லி அவளின் மகள் ஆனந்த அமிழ்தினியை போனில் அழைத்துக் கொண்டு சென்றாள் பிரபாவதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!