Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பொழியும் மேகம்...

பொழியும் மேகம்!… அத்தியாயம் 22

பொழியும் மேகம்!

அத்தியாயம் 22

   நிரஞ்சன் மீண்டும் ஒரு முறை எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டு, அங்கேயே மாலை வரை தங்கி, நல்ல உறவுமுறையை வளர்த்து கொண்ட பின் தான், தன் குடும்பத்தோடு கிளம்பினான்.

   நர்மதா ரொம்ப எல்லாம் பிகு பண்ண வில்லை. உண்மையாக திருந்தி, மனம் வருந்தி நிற்கும் கணவனிடம், கோபத்தையும், வைராக்கதையும் இழுத்து பிடித்து என்ன ஆக போது… ஏற்கனவே சொன்னது போல கணவனின் வேதனையில் எந்த மனைவிக்கு இதம் கிடைக்கும்…



Advertisement

   உடல் நிலை தளர்ந்து நிற்கும் கணவனிடம் வீம்பு கொண்டு நின்றால் உடைய போவது அவள் குடும்பம் தான். இதுவா அவளின் எண்ணம். பொதுவாக ஒரு குடும்பத்திற்கு வாழ வரும் பெண்.. குடும்பத்தை கட்டுபவள் என்று தான் சொல்வார்கள். நர்மதாவும் தன் குடும்பத்தை கட்ட தான் நினைக்கிறாள்.

   பால மரத்தான், விஜயா தம்பதிகளும் சேர்ந்து போய் தான் மகளை, அவள் வீட்டில் விட்டு வந்தார்கள். நிரஞ்சன் கூட மனைவி முகம் பார்த்து நிற்க.. நர்மதா சாதரணமாக தான் இருந்தாள்.

  “என்னோட அதிக பட்ச ஆசை நீங்க மாறனும்ன்னு தான். வேற தனிப்பட்டு ரோசம் பார்க்க, நான் தனி மனுஷி கிடையாது. நீங்க நார்மலா இருங்க…” என்ற பின் தான் கணவனும் கொஞ்சம் நார்மல் ஆனான்.

Advertisement

   தவறு தான். வீட்டை விட்டு துரத்தி இருக்கான். அந்த வலி இருக்க தான் செய்யும். ஆனால், வாழ்க்கை வழிவகை செய்யும் போது முரண்பாடு கூடாது அல்லவா…

Advertisement

  நிரஞ்சன் வீட்டில் ஓய்வில் தான் இருந்தான். நர்மதாவும் ஐந்து மாதம் சம்பளமில்லா விடுப்பு எடுத்து கொண்டாள். இன்றைய நிலையில் கணவனை விட்டு வேலைக்கு செல்ல முடியாது. அதே போல வேலையே வேண்டாம் என்றும் சொல்ல முடியாது. போட்ட பணம் லாஸ் என்று தெரியும். அது எவ்வளவு தூரம் என்று தெரிய வில்லை. அதனால், தன் கையில் ஒரு வருமானம் தேவையாக இருந்தது.

  அஸ்வின் நண்பனை பார்க்க வந்தான். நிரஞ்சன் வேலையில் தொடர்ந்து லீவ் என்பது கூடாத ஒன்று…

  வொர்க் ஃபிரம் ஹோம் மாதிரியும் கார் உற்பத்தி செய்யும் கம்பெனியில் பார்க்க முடியாது என்பதால் என்ன என்று தான் கேட்க வந்தான்.

Advertisement

  நர்மதா தீர்மானமாக சொல்லி விட்டாள்,

“நமக்கு அந்த வேலையே வேண்டாம்ங்க… ஓவர் வொர்க், அதிகமான பிரஸர் தான் உங்களுக்கு முடியாம போச்சு. நீங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும். நேரம் காலம் பார்க்காம வேலை செய்ய இனி உங்களால முடியாது. நிச்சயம் ஓய்வு தேவை. இந்த வேலை வேணாம்…” நர்மதா தீர்மானமாக சொல்லி விட்டாள்.

 ஆனால், நிரஞ்சனுக்கு யோசனை தான். பிடித்த வேலை, நிறைய சம்பளம், பத்து வருட உழைப்பு. அப்படி எல்லாம் விட தோன்ற வில்லை. ஆனாலும் உடல் நிலையும் இடம் தர வில்லை. முழு ஓய்வு வேண்டும் என்று டாக்டர் கண்டிப்பாக சொல்லி விட்டார்.

 அவன் வேலை எளிது கிடையாது. தனக்கும் திறமை இருக்கு… பின்னர் கூட பார்த்து கொள்ளலாம். கொஞ்சம் பயந்து போயிருந்தான் நிரஞ்சன். தனக்கு இப்படி ஆகும் என்று ஒரு நாளும் நினைத்தது இல்லை. அதில் வாழ்க்கையை குறித்த பயம் வந்தது.

  அஸ்வினும் அதை தான் சொன்னான், “மச்சான் உன் திறமைக்கு எப்ப போனாலும் வேலை கிடைக்கும்டா… நீ மொத உன் உடலை கவனி…”

 “நல்ல சம்பளம், தகுதியோட வேலைடா… இனி எவ்வளவு பணம் கிடைக்காது…”

 “சேலரிய யோசிக்காட… அப்படி ஒன்னும் நீங்க கஷ்ட பட போறது இல்லை. உன் ஒய்ஃப் கவர்மெண்ட் வேலையில இருக்காங்க. பெருசா கவலை படுறான்…” என்று நண்பன் சொல்ல,

  பட்டென்று நிரஞ்சன்,

  “என்னாடா சொன்ன?…”

 “என்ன சொன்னாங்க. உன் ஒய்ஃப் கவர்மெண்ட் ஜாப்ல இருக்காங்க. நாங்கன்னா யோசிக்கணும். உனக்கு என்னடா, தோல் கொடுக்க ஆள் இருக்கு…” என்று அஸ்வின் அழுத்தி சொல்ல,

  நிரஞ்சனுக்கு பேச்சே வர வில்லை. ஒரு காலத்தில் உன் சம்பளம் எல்லாம் எனக்கு தகுதியா என்றான். இன்று, அவளின் வேலை அவர்களுக்கு ஒரு ஆதாரம். அதை கொண்டு தான் மனைவி தைரியமாக நிமிர்ந்து நிற்கிறாள்.

  ஒரு வேளை அன்றே எனக்கு எதுவும் ஆகிருந்தால். அவளின் ஆதாரம் இந்த வேலை தான். ஒரு பெருமூச்சு வந்தது. வாழ்க்கை எப்படி வேண்டும் என்றாலும் மாறும் போல…

  நிரஞ்சன் வேலையை விட்டு விட்டான். அவனுக்கு உடனிருந்து நர்மதா பார்த்து கொண்டாள். வீடு அமைதியா என்றால் இல்லை.

  அங்கு கொதித்து கொண்டு இருந்தது வித்யா. எல்லா வேலையும் அவள் பக்கம் வந்து விழுந்தது. காலையில் கணவனை பார்ப்பதும், பிள்ளைகளை கிளப்புவதும் நர்மதாவுக்கு நேரம் சரியாக இருக்க,

  காலை நேர வேலை எல்லாம் வித்யா தான் பார்ப்பது.

  முகுந்தன், “இது வரைக்கும் நர்மதா தான் எல்லாம் பார்த்துச்சு. இனி கொஞ்ச நாள் பாரு…” என்று சொல்ல,

  “எல்லா வேலையும் என்னால எப்படி பார்க்க முடியும்…”

  “சமையல் வேலை மட்டும் தான. அத்தோடு நர்மதா, நிரஞ்சன் கூடவே இருந்து பார்க்கணும். இவ்வளவு நாளும் நர்மதா பார்க்கல… சொத்தை சமமா தான பிரிச்ச. அப்ப குடும்பத்தை பார். குழந்தையும் எல்லார்கிட்டயும் போறான் தான…” முகுந்தன் அழுத்தமாக சொல்ல, மறுப்பு சொல்ல முடிய வில்லை வித்யாவால்…

  எரிச்சலோடு தான் வீட்டு வேலையை பார்த்தாள். ஆனால், அடுத்த நான்கு நாட்களுக்கு பின் நர்மதாவும் வேலையில் சேர்ந்து கொண்டாள். இவ்வளவுக்கு பின்னும் சுசீலா மருமகளுக்கு வேலையை பிரித்து கொடுக்க வில்லை.

  நர்மதா பிரித்து கொண்டாள். காலை வேலையை வித்யா பார்க்க. மதிய சமையலை நர்மதா எடுத்து கொண்டாள். இரவு உணவு வேலையை இருவரும் பிரித்து கொண்டார்கள்.

  வித்யாவுக்கு, தான் மட்டும் அதிக வேலை செய்வது போல ஒரு எண்ணம்.

 “என்னங்க… நான் டிபனும் பண்ணி, லஞ்ச்சும் சேர்த்து செய்யுறேன். ஆனா, நர்மதா லஞ்ச் மட்டும் தான் செய்றாங்க…” என்று தொடங்கும் போதே,

  “இங்க பாரு வித்யா. என்ன பெரிய லஞ்ச் பண்ற நீ… காலையில லஞ்ச் கொண்டு போறது நானும், குழந்தைகளும் மட்டும் தான். நர்மதா, நிரஞ்சன் யாரும் வேலைக்கு போகல… அத்தோடு எங்களுக்கு வெறும் கலவை சாதம் தான் கொடுக்குற… மதியம் காய், பொரியல், கூட்டு எல்லாம் செய்துவது யாரு?… சும்மா குறை சொல்லாத…” கண்டிப்பாக சொல்லி விட்டான்.

  ஆனால் உண்மையில் வித்யாவுக்கு வேலை கஷ்டமாக தான் இருந்தது. நர்மதா ஆரம்பம் முதலே கூட்டு குடும்ப வட்டத்திர்க்குள் தான் இருந்தாள். அதனால், மாமனார், மாமியார் எல்லார் தேவையும், வேலையும் அவளுக்கு பழக்கம் தான். அதுவும் வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின் மின்னல் வேகம் தான். நேர கணக்கிட்டு வேலையை முடித்து விடுவாள்.

  முக்கால் மணி நேரத்தில் சமையல் வேலையை நர்மதா முடித்து விட்டு, தங்கள் அறைக்குள் சென்று விடுவாள். ஆனால், வித்யாவால் அவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியாது. மூணு மணி நேரமாவாது எடுக்கும்…

  “பண்றது இட்லியும், தக்காளி சோறும் தான். அவ்வளவு நேரம் கிச்சன்குள்ள என்ன தான் பண்ணுவியோ…” என்று மாமியார் குத்தல் பேச்சு ஒரு பக்கம் என்றால்,

  காலை வேலை பார்க்கும் போது மட்டும் தான் பிள்ளையை பெரியவர் வைத்து இருப்பார். வித்யா வேலை முடித்து வெளியே வந்த உடனே பிள்ளையை கொடுத்து விடுவார் சுசீலா.

   மதியம் நர்மதா பார்த்து கொள்ள… பிள்ளை வித்யாவோடு தான் இருந்தது. பெரிதாக மாற்றமில்லை. இதில் சமையல் வேலை மட்டும் தான் பகிர்வு. மத்தபடி துணி துவைக்க, மடிக்க என்று தனிப்பட வேலை எல்லாம் அவரவர் தான் பார்த்து கொள்ள வேண்டும்.

   ஒவ்வொன்றுக்கும் சுசீலா தன் பெரிய மருமகளை குறை சொல்லி கொண்டு தான் இருந்தார். அவ்வளவு எரிச்சல் வரும் அவளுக்கு… எல்லாத்துக்கும் குற்றம், குறை என்று… சின்ன மருமகளை மட்டும் தாங்குகிறார் என்று வித்யா புலம்பி கொள்வாள்.

  அவள் அறியாத ஒன்று… நர்மதாவும் இந்த கெடுபிடிகள் எல்லாம் பார்த்தவள் தான். அவளுக்கு தான் எட்டு வருட அனுபவம் இருக்கே… அதனால், அவர்களுக்கு தக்க வேலை செய்து பழகி கொண்டாள். வேற வழியும் இல்லை. இன்று வித்யாவுக்கு ஓரளவு நர்மதா துணை இருக்கு. அன்று நர்மதாவும் இவளை போலவே பேச்சு வாங்கி கொண்டு, ரெண்டு பிள்ளைகளையும் வைத்து கொண்டு, வீட்டு வேலை என்று சக்கரம் கட்டாத குறையாக தான் ஓடினாள். வருசம் போக சமையல், வீடு, பிள்ளைகள் என்று எல்லாவற்றையும் கடகடவென செய்ய கற்று கொண்டாள்.

  வித்யா கல்யாணம் முடிந்த நாள் தொட்டு வெளி நாட்டு வாசம். கணவன், மனைவி இருவர் மட்டும் தான். அதுவும் ஆறு வருடம் குழந்தை இல்லை. மிக சுதந்திரமான வாழ்க்கை. நினைத்த நேரத்தில் எழுவது, பிடித்ததை செய்வது, தேவை என்றால் வெளியில் வாங்கி கொள்வது என்று அவள் விருப்பம் தான். கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் அவள் விருப்பம் போல படித்து கொள்ளுவாள்.

  இங்கு ஒவ்வொன்றுக்கும் மற்றவர்களை பார்க்க வேண்டி இருந்தது. ஏதாவது சொல்லி கொண்டே இருக்கும் மாமியார், கண்டிப்பாக இருக்கும் மாமனார், அம்மா, தம்பி மனைவி இருப்பதால் கிச்சன் பக்கம் கூட எட்டி பார்க்காத கணவன், இதில் தம்பி குடும்பம் என்று வித்யாவுக்கு மூச்சு முடியாது.

 அன்று ஒரு நாள் மிகுந்த ஆசையாக இருக்கிறது என்று தன் விருப்பமான உணவை ஆர்டர் செய்து வாங்கி கொண்டாள். மாமியாருக்கு தெரியாமல் ஒளித்து அறைக்குள் வைத்து உண்ண, பிடித்து விட்டான் முகுந்தன்.

  “கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு… சொந்த வீட்டுல இப்படி தான் திருட்டு தனம் பண்ணுவியா…” என்று கத்த,

 “பிட்சா, பர்கர் எல்லாம் உங்க அம்மவுக்கு பிடிக்காது. எங்களுக்கு வாய் இல்லை. நான் சாப்பிடுவேன்…” சட்டமாக வித்யா சொல்ல,

  “உனக்கு பிடிச்சதை நீ சாப்பிடு. யாரும் எதுவும் சொல்லல. ஆனா, வீட்டுல எங்க அம்மா மட்டுமா இருக்காங்க. எந்தம்பி குடும்பமும் இருக்கு. அவங்களுக்கும் சேர்த்து வாங்கி கொடுத்து சாப்பிட வேண்டிய தான…”

 “நல்லா இருக்கு. எனக்கு பிடிச்சதை நான் வாங்குறேன். அவங்களுக்கும் செய்யணும்ன்னு என்ன இருக்கு…”

  “முட்டாள் மாதிரி பேசாத வித்யா. அவங்கன்னா, அங்க ரெண்டு குழந்தைக இருக்காங்க. அவங்களுக்கும் ஆசை இருக்கும்ல. சின்ன பிள்ளைக ரெண்டு பேருக்கும் சேர்த்து வாங்கி கொடுக்கலாம்ல… வீட்டுல ரெண்டு பிள்ளைக இருக்க, நீ மட்டும் விதவிதமா ஆர்டர் பண்ணி சாப்பிடுறது என்ன பழக்கம்…”

  “எனக்கு பிடிச்சது நான் வாங்குகிறேன். அவங்களை, இவங்களை எல்லாம் என்னால பார்க்க முடியாது…”

  “கூட்டு குடும்பத்துல அப்படி சொல்ல முடியாது. உன் அண்ணன் பிள்ளைக இருந்தா, அவங்களை விட்டுட்டு நீ மட்டும் சாப்பிடுவியா? பேரு மட்டும் தான் பெரிய மருமகள். நர்மதா கிட்ட இருக்குற தன்மையான குணம், உன்கிட்ட சுத்தமா இல்லை…” எரிந்து விழுந்தான் முகுந்தன்.

  வித்யாவுக்கு அப்படியே முகம் மாறி போனது. கொஞ்ச நாளாக மறந்து இருந்தவள். திரும்பவும் பழயதை மனம் அசை போட்டது. முகுந்தன் பார்வையில் நர்மதா தரம் உயர்வதை பார்க்க பிடிக்கவே இல்லை.

  அதை எல்லாம் நர்மதா பக்கம் திருப்ப ஆரம்பித்தாள். முன் பேசளவில் இருந்த உறவு, பட்டென்று நிறுத்தி கொண்டாள்.

  “உங்க பிள்ளைகளுக்கு நீங்க தனியா பண்ணி கொடுங்க. குழந்தையை வச்சுட்டு எனக்கு கஷ்டமா இருக்கு…” என்று முடித்து கொள்ள,

  நர்மதாவும் ஒப்பு கொண்டாள். வேண்டா வெறுப்பாக என் பிள்ளைகளுக்கு நீயும் செய்ய வேண்டாம் என்று…

 சுசீலா விட வில்லை. பெரிய மகனை வைத்து பஞ்சாயத்து பண்ணி விட, கணவன், மனைவிக்கு இடையில் தான் முட்டி கொண்டது. ஏற்கனவே மூத்த மகனாக வீட்டிற்கு ஒன்றுமே செய்ய வில்லை. ஆனால் சித்தை சமமாக பகிர்கிரோம் என்ற குற்ற உணர்வில் இருந்தவனை வித்யா சோதித்தாள்.

 கணவன், மாமியார், மாமனார் என்று எல்லோருக்கும் செய்பவள், நிரஞ்சன் குடும்பத்தோடு ஒதுக்கத்தை மட்டுமே காட்டினாள். அவர்களுக்கு நான் ஏன் செய்ய வேண்டும் என்று தான் நினைத்தாள். வீடு பொது நான் இருக்கிறேன். அதற்காக அவர்களை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது தான் அவள் எண்ணம்.

    முன்பு நிறைய விட்டு கொடுக்கும் நர்மதா. இன்று வித்யா போல அவளும் தள்ளி நின்று கொண்டாள். நீ பேசுனா பேசுவேன். உனக்கு தேவை இல்லையென்றால், எனக்கும் அவசியமில்லை என்று…

 அதுவும் வித்யாவை எரிச்சல் படுத்தியது. தங்கள் தயவில் இருந்து கொண்டு என்ன வெட்டி ரோசம் என்று…

  அப்படி தான் வித்யா நினைத்தாள். நிரஞ்சன், நர்மதா இருவரும் வேலைக்கு போக வில்லை. போட்ட பணமும் கை வர வில்லை. எல்லா பொறுப்பும் முகுந்தன் மேல் என்றால், அவர்கள் இருப்பது யாரால்? என்று நினைத்தாள்.

  பெரிதாக இல்லாமல் உரசலோடு தான் நாட்கள் சென்றது. சுசீலாவும் பெரிய மருமகளை குத்தி கொண்டு தான் இருந்தார். முகுந்தன் வீட்டு வேலை முடித்து, பால் காய்ச்சும் விழா வைத்தார்கள்.

  நர்மதா பெற்றோருக்கும், அக்காவுக்கும் முறையான அழைப்பு சென்றது. மறுநாள் காலையிலே நல்ல நேரத்தில் விழா தொடங்கியது. முதல் நாள் இரவே நிரஞ்சன் குடும்பம் தவிர, எல்லோரும் அங்கு சென்று விட்டார்கள். மறுநாள் காலை தான் நிரஞ்சன் குடும்பம் சென்றது. நாலு வீடு, மேலே ரெண்டு, கீழ ரெண்டு. நன்றாக பெரிதாக கட்டி இருந்தான்.

  அந்த பெருமை அவர்கள் முகத்தில் தெரிந்தது. வித்யாவை கையில் பிடிக்க முடியவில்லை. அவ்வளவு பூரிப்பு. எவ்வளவு பெரிய சொத்து அது… இவர்கள் இருவர் பெயர் தான் வைத்து இருந்தார்கள். வித்யா வீடு ஆட்களுக்கு கூட அவ்வளவு பெருமை.

  அவள் எப்பொழுதும் சொல்லும், “என் புருசன் கஷ்ட பட்டு சம்பாதித்த பணம்…” என்பதன் மதிப்பை நிரஞ்சன் அன்று உணர்ந்தான். கட்டடம் மிளிர்ந்தது.

  ஹோம பூஜை ஆரம்பிக்க, சுசீலா சின்ன மகன் குடும்பத்தை அழைத்தார்.

  “நிரஞ்சா, அவளை கூட்டிட்டு முன்னாடி வா… குடும்பமா தான் உட்காரணும். ஐயர் வர சொல்றார்…” என்று சொல்ல,

  நிரஞ்சன் எழுந்து கொண்டான். திரும்பி மனைவியை பார்க்க, நர்மதா அவன் கையை பிடித்து திரும்ப அமர வைத்தாள்.

 “என்ன நம்மு… குடும்பமா தான் உட்காரணுமாம்…”

  “அதை உங்க அண்ணனும், அண்ணியும் சொல்லட்டும் போலங்க…” என்றாள் நர்மதா.

 நிரஞ்சன் புரியாமல் பார்க்க, மாலை ஐந்து மட்டும் தான் இருந்தது. வீட்டுக்கு பெரியவர்கள் என்று தாமோதரன், சுசீலாவை அமர வைத்தவர்கள். நிரஞ்சன் குடும்பத்தை கண்டு கொள்ள வில்லை. அந்த யோசனையும் இல்லை.

  பூஜையில் அவர்களும் அமர்ந்தால், எல்லாம் பொதுவில் வைக்க படும் அல்லவா… இது முழுக்க முழுக்க முகுந்தன் உழைப்பு. வித்யாவின் வீடு. அவர்களின் பெருமை. இதில், நிரஞ்சன் குடும்பத்திற்கு என்ன பங்கு. அவர்கள் வெறும் விருந்தாளி மட்டும் தானே…

  சுசீலா தான், “பெரியவனே, தம்பிய விட்டுட்டா…” என்று சொல்ல,

  “அத்தை, இது ஒன்னும் பொது சொத்து கிடையாது. நாங்க சம்பாதிச்சது. ஒரே வீட்டுல இருந்தா எல்லாம் ஒன்னா… வருமானம் தனித்தனி தான. அப்படி இருக்க எப்படி ஒன்னா வைக்க முடியும். எங்க வீட்டு ஆளுக சீர் கொண்டு வந்து இருக்காங்க. எதுக்கு எம் மக வீடுன்னு… அதுல எப்படி நர்மதாவ விட முடியும். வயசுக்கு தகுந்த மாதிரி பேசுங்க…”

 “வித்யா…” என்று கணவன் கண்டிக்க,

  “சும்மா என்னை சொல்லாதீங்க. உங்க அம்மா பேச்சை பார்தீங்க தான. என் நகை, பத்து வருட சேமிப்பு இருக்கு. இதுல யாரை முன்னாடி வைக்க சொல்றீங்க. நிரஞ்சன் கூட நிறைய வாங்கி இருப்பார் தான. அதுல நான் போய் பங்கு கேட்க முடியுமா? அது நியாயமா…” என்றாவது கொடுக்க வேண்டும் என்று இருந்தாள்.

 சந்தர்ப்பம் கிடைக்க வைத்து வாங்கி விட்டாள். அத்தோடு எல்லாரும் தூக்கி வைக்கும் நர்மதா முன் தன் தகுதி உணர்த்த தான். முன்பே அவளுக்கு இந்த வீட்டின் மேல் பொறாமை என்று நினைத்தவள், அதை புகைய விட்டாள்.

  என்னவோ நர்மதாவை வென்ற ஒரு தோற்றம். தாமோதரன், சுசீலாவை அடக்கினார். பேச்சு வார்த்தை காதில் விழ, சங்கடமாக மனைவியை பார்த்தான் நிரஞ்சன்.

  “ஊதறி…” என்று வித்யா சொன்னதன் பொருள் உணர்ந்தது போல… ஒரு மாதிரியாக, தான் மனைவிக்கு எதுவும் செய்ய வில்லை என்ற தோற்றம் கொடுத்தது.

  அடுத்தடுத்தும் வித்யா எந்த காரியத்துக்கும் நர்மதாவை உள்ளே விடவே இல்லை. எது ஒன்று என்றாலும், தேவை என்றாலும் உரிமையாக தன் வீட்டு ஆட்களை மட்டுமே அழைத்து கொண்டவள். கடைசி வரை நீங்கள் விருந்தாளி என்றே நிரூபித்தாள்.

  நிரஞ்சனுக்கு உறவுகள் ஓரளவு புரிந்தது. சம உறவுகள் மத்தியில் அவர்களுக்கு சம அந்தஸ்தில் இருந்தால் தான் மதிப்பு போல… ஒரே குடும்பத்தில் இருந்தாலும் எல்லாம் ஒன்று அல்ல. வருமானம் தனி எனும் போது முன்னேற்றமும் தனி தனி தான் போல…

   நிரஞ்சன் மனைவி முகம் பார்க்க, பொறுக்க முடியாமல் நர்மதா சொல்லி விட்டாள்.

  “எனக்கு சொந்த வீடு வாங்கி, இப்படி ஒரு விசேஷம் பண்ண ஆசை தான். அதை உங்க கிட்ட சொல்லி இருக்கேன் தான். நமக்கே நமக்குன்னு சொந்தமா ஒரு வீடு கட்ட எல்லாருக்கும் தான் ஆசை இருக்கும். அதுக்காக அடுத்தவங்க வீடு கட்டுறத பார்த்து பொறாமை இல்லை. நம்ம வருமானத்தை சேமித்து ஏன் வீடு கட்ட கூடாதுன்னு தான் உங்க கூட சண்டை போட்டேன். உங்க அண்ணன் வீடு கட்டுறாங்கன்னு சண்டை போடல… சும்மா எம் முகத்தை பார்க்காதீங்க. அவங்கவங்க உழைப்புக்கு தக்க எல்லாம் முன்னேறுவாங்க. நாமளும் நமக்கு தக்க முன்னேறலாம்…” என்று கணவனை தட்டி கொடுக்க,

  ஆனாலும் நிரஞ்சன் முகம் களையிழந்து தான் போனது. நர்மதா வீட்டு ஆட்களும்.வந்தார்கள். அவர்களோடு சேர்ந்து தான் நிரஞ்சன் குடும்பம் உணவருந்த சென்றது. நிறைய கூட்டம், சொந்தமும் நிறைந்து நின்றது. முகுந்தன் தம்பதிக்கு அவ்வளவு நிறைவு.

   அடுத்த கொஞ்ச நேரத்தில் விருந்தாளி போலவே நிரஞ்சன் குடும்பம் வெளியேறி விட்டார்கள்.

  வித்யா அம்மா, மகளை தனியே அழைத்து சென்று,

  “உன் ஓரகத்தி பார்த்தியா முகமே செத்து போச்சு. அப்படியே வெந்து போனா, சிரிப்பே இல்லை. கண்ணு படும் ஜாக்கிரதை…”

  “அவளுக்கு என்னை மாதிரி வீடு கட்ட ரொம்ப ஆசை. அவ புருசன் ஒரு வேஸ்ட். ஒன்னும் இல்லை. ரெண்டு பேரும் வீட்டுல தான் இருக்காங்க. அதான் முகத்தை அப்படி வச்சு இருப்பா…”

  “இங்க பாரு வித்யா, ஒரு குடும்பத்தை இன்னொரு குடும்பம் தாங்க முடியாது. உன் கொழுந்தன் செலவு எல்லாம் உன் புருசன் தான் பார்த்தாராம்…”

  “அப்படியா? என்ன அம்மா சொல்ற, எனக்கு தெரியாதே. அவர் சொல்லவே இல்லை…”

 “உன் மாமியார் தான் சொன்னாங்க. ரெண்டு பேரும் வீட்டோடு இருக்காங்க. ரெண்டு பொம்பளை பிள்ளைக வேற இருக்கு. எல்லாம் உன் தலையில விழுந்துடாதாம பார்த்துக்க. அவனே ஒரு நோயாளி. அவன் என்ன சம்பாதிக்க போறான். உங்களை தான் பார்க்க சொல்லுவாங்க. எப்பவே வெட்டி விடு…” என்று அறிவுரை வழங்க,

  முன்பே ஒட்டமாட்டாள். கணவன் தான் எல்லாம் பார்த்தான் என்ற பின், “விசேஷம் முடிய போய் வைக்கிறேன்…” என்று நினைத்து கொண்டாள்.

  நிரஞ்சன் முகம் சரியே இல்லை. எல்லாம் ஒரே குடும்பம் தானே என்று நினைத்தான். ஆனால், மனைவிக்கு தன்னால் மரியாதை இல்லை என்று புரிந்தது. என்ன.செய்ய? யோசனை சென்றது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!