Skip to content
Post Views: 2,729
மின்னல் ஒரு கோடி
அத்தியாம் – 16
Advertisement
வசீகரனும் , கௌசியும் முறைத்து நிற்க.
Advertisement
வசீகரன் கௌசியிடம் நான் படிக்க போறேன். வேலைக்கு கிழிக்க போறேன். அப்பறம் தான் கல்யாணமுன்னு சொன்ன. என்ன வேணாமுன்னு சொல்லிட்டல இப்போ .இந்த படிக்காத பயல கல்யாணம் பண்ணி இருக்க என்று கௌசியை ஏளன பார்வை பார்க்க.
Advertisement
நீங்க யார் சார் அத கேட்க என்றவள்.
Advertisement
அப்படி தான்டி கேட்பேன். டாக்டர் மாப்பிள்ளை வேண்டாமுன்னு சொல்லிட்டு, , பெரிய மஹாராஜ படிகாத அந்த மேதாவியை கல்யாணம் பண்ணி இருக்க. அது தான் கேட்டேன்.
உங்களுக்கு பதில் சொல்லனுமுன்னு அவசியமில்லை என்றவள் கிளம்ப.
வசீகரன் கௌசியின் கையை பிடித்து முறுக்கி இருந்தான் எனக்கு பதில் சொல்லித் தான் ஆகனும் நீ என்ன வேண்டாமுன்னு சொன்னல என்றான்.
கௌசிக்கு அவன் பிடித்து இருப்பது வலிக்க. விடுடா கையை என்றாள்.
பதில் சொல்லு எதுக்கு அவனா போய் நீ கல்யாணம் பண்ணுன.
டேய் நீ எல்லாம் ஒரு டாக்டர், ஒரு மாசாமா இருக்குற பொண்ண, கை பிடிச்சு முறுக்குற.என் புருஷனுக்கு தெரிஞ்சது. உன் கையை வெட்டி போட்டுடுவாரு,விடுடா, விடுடா என்று கத்த.அவள் சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவார்கள் என்று அவளின் கையை விட்டவன்.
அந்த கருவா பய உனக்கு எவ்வளவு ,பணம் குடுத்தான் சொல்லு என்றான்.
கௌசிக்கு பயம் இவன் பேச்சும் சரியில்லை. இவன் ஆலும் சரியில்லை என்றவள். கோடிக்கு போன் போட போனை எடுக்க.
கௌசியின் கையில் இருந்த போனை பிடிக்கி கொண்டான் வசீ.
யாருக்கு போன் போட போற .உன் புருஷனுக்கா. அவன் நான் என்ன சொன்னாலும் கேட்பான் என்றவன் . நான் யார் தெரியுமா, தென்றலின் புருஷன்.
கௌசிக்கு இது ஆச்சர்யம். தென்றலின் புருஷனா இவன் சீ என்றவள்.
இவன் முன்னாடி இருக்கறதே தப்பு என்றவள் வேகமாக நடக்க.
வசீ கௌசியின் முடியை பிடித்து இலுக்க.
கௌசிக்கு கோபம் ஏற.விடுடா என் புருஷன் பாத்தாரு நீ செத்த என்றவள்.
அவன் பெரிய இவன் என்ன ஒன்னும் பண்ணமுடியாது. இந்த வீட்டு மாப்பிள்ளை நான் என்று சிரித்தவன். எனக்கு அப்போ தெரியாம போச்சு உன்னோட விலை.
கௌசி தெரியாமல் முழிக்க.
வசீ 1 1/4 கோடி உன்னோட விலை என்றவன் கோணல சிரிக்க. இப்போ ஒன்னும் கெட்டு போகல . நான் உனக்கு 2 கோடி பணம் தர்ரேன். நீ இந்த குழந்தையை கலச்சுட்டு என்கூடா வா என்று சொல்ல.
கௌசிக்கு கோபம் வர எடு கையை என்றாள்.
வசீ கையை எடுக்காமல் கௌசியின் முடியை பிடித்து இருக்க. 2 கோடி பணம் போதாதா. சரி 3 கோடி தர்ரேன் என் கூடவா. உன்ன பாரின்ல வச்சுக்கிறேன் என்றவன் கௌசியின் தோளில் கை வைத்து அலுத்த.
கௌசி வசீயின் கையை தட்டி விட .
வசீ கைவைத்து அழுத்த .
கௌசிக்கு இவனை என்ன செய்யலாம் என்றவள்.எதை கொண்டு அடிக்கலாம் கையில் ஏதும் கிடைக்காமல் இருக்க.விடுடா என்றாள்.
வசீயோ மேலும் கௌசியின் தோளின் மீது அழுத்தம் கூட்ட.
கௌசி குனிந்து அவளின் செருப்பை எடுத்து வசீயை அடித்து இருந்தாள்.
கௌசி அடித்து நிறுத்திய பின்.
ஏய் என்று சத்தம் வர நிமிர்ந்து பார்த்தாள் கௌசி.
தென்றலும், குருவம்மாள் மற்றும் வசீயின் அப்பா ,அம்மா என்று அனைவரும் நின்று இருக்க.
முதலில் குருவம்மாள் ஏய் என்னடி . ஏன்டி மாப்பிள்ளையை அடிச்ச என்றவர். பளார் என்று கௌசியை அடித்து இருந்தார் குருவம்மாள்.
குருவம்மாள் அடித்த அடியில் கீழே விழுந்து இருந்தாள் கௌசி.
சத்தம கேட்டு வந்த கோடியின் நண்பன் மஞ்சுநாத் . கீழே விழுந்து இருந்த கௌசியை தூக்கி விட்டு. குருவம்மாளை ஏன்மா மாசமா இருக்குற பொண்ண தள்ளி விட்டீங்க? என்று குருவம்மாளிடம் கேட்க.
குருவம்மாள் இவளை என்றவர். மீண்டும் அடிக்க போக .
மஞ்சுநாத் கௌசியை பின் இழுத்து கொண்டான்.
குருவம்மாள் ஏய் வாடி. ஏன்டி என் மாப்பிள்ளையை அடிச்ச என்றவர் கௌசியை சத்தம் போட்டு கொண்டு இருக்க.
தென்றல் வசீயிடம் சென்று என்னாச்சு வசீ என்று கேட்டாள்.
அவனோ கௌசியை எனக்கு ஏற்கனவே தெரியும் .சும்மா பேசியிட்டு இருந்தேன். உன் தம்பி அவளுக்கு குடுத்த காசு விஷயம் பத்தி கேட்டேன்.கோபத்துல அடிச்சுட்ட என்றான் பாதியை மறைத்து.
தென்றலுக்கு இதை கேட்டதற்கா என் புருஷனை அடிச்ச என்று கோபம் கொண்டவள்.கௌசியிடம் வந்து .ஏய் எதுக்கு என் புருஷனை அடிச்ச. அவரு என்ன பொய்யா சொன்னாரு நீங்க என் தம்பி கிட்ட பணம் வாங்குனத சொன்னா உனக்கு கோபம் வந்து என் புருஷனா அடிச்ச.
கௌசி மனதில் வசீயை பத்தி அண்ணியிடம் சொன்னால். கண்டிப்பா தென்றல் ,வசீயோட வாழ மாட்டாள் என்று அமைதியாக நிற்க.
தென்றலும் , குருவம்மாளும் கௌசியை கண்ட படி திட்ட.
கௌசி அழுதாலே தவிர .ஒன்னும் பேசவில்லை.
கோடிஸ்வரன் சாப்பிடும் இலை பத்தாமல் இருக்க அதை வாங்க சென்றவன் வாங்கி வர சத்தம் கேட்டு மேலே வர.
தன் மனைவியை தென்றலும் , குருவம்மாளும் திட்டுவதை பார்த்தவன்.கௌசியின் அருகில் வர.
கௌசி கோடிஸ்வரனை அணைத்து கொண்டு அழுதாள்.
குருவம்மாள் நடிக்காதடி என்றவர். கோடியை அணைத்து இருந்த கௌசியை பிரித்து விட்டவர். சொல்லு என்று அவளின் கன்னத்தில் ஒரு அடி வைத்தார்.கௌசி கன்னத்தை பிடித்து கொண்டு அழ.
கோடிஸ்வரன் அம்மா என்று கத்தி இருந்தான். என் பொண்டாட்டியை ஏன் அடிக்குற என்று குருவம்மாளிடம் கேட்க.
தென்றலுக்கு கோபம் வந்து விட்டது. உன் பொண்டாட்டியை அடிச்சா உனக்கு கோபம் வருதுல.அதே மாதிரி தான். அவ என் புருஷனை அடிச்சு இருக்கா.அதுக்கு என்ன பண்ணுறது உன் பொண்டாட்டியை என்றாள்.
கோடி கௌசியை பார்த்து. என்னாச்சு கௌசிம்மா என்றான்.
அவளோ மீண்டும் அழ.
குருவம்மாள் நடிக்காதடி .இப்படி அழுது , அழுது தான் என் பையன் மயக்கி வச்சு இருக்க இன்னும் அழற.ஆன நான் உன்ன சும்மா விட மாட்டேன் என்றவர். என் மாப்பிள்ளை கிட்ட மன்னிப்பு கேளுடி என்றவர். கௌசியின் கைபிடித்து இழுக்க .
கோடி மனைவியை தன் அருகில் பிடித்து கொண்டான். என்னாச்சு கௌசி என்ன நடந்தது சொல்லு.
கௌசி கோடியிடம் அவன் தப்பா பேசுனான் அடிச்சேன் என்றாள்.
என்ன பேசுனார் . என் புருஷன் என்று தென்றல் கௌசியிடம் சண்டைக்கு வர. அவர் என்ன பேசுனார் எனக்கு தெரியாது அவர் ஒன்னும் இல்லாத சொல்லலியே நீ காசு வாங்குனது தானே சொல்லி இருக்காரு. அதுக்கு செருப்பை எடுத்து அடிப்பீயா. என் வசீயை நீ எப்படி அடிக்கலாம் என்று தென்றல் அழ. எவ்வளவு பெரிய அவமானம் என்று மீண்டும் அழுதாள்.
தென்றலின் மாமியார், மாமானாரும் வந்து நீ ஏன்மா அழற, தப்பு பண்ணது அந்த பொண்ணு என்றவர்.
கோடியிடம் நல்ல மரியாதை செஞ்சுட்டீங்க என்றவர் குருவம்மாளையும் கோடியையும் பார்த்து வீட்டு மாப்பிள்ளைக்கு நல்ல மரியாதை என்றவர். மருமகளை அழத என்று சொல்லி கொண்டு இருக்க.
கோடி கௌசியிடம் ஏன் கௌசி இப்படி பண்ண. நீ அடிச்சது தப்பு என்றான்.
வசீயின் தாய் , தந்தை இருவரும் கோடியை பார்த்து உன் பொண்டாட்டியை என் பையன் கால் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லு என்றார்கள்.இவ பண்ணுனது பெரிய அவமானம் எங்களுக்கு.
குருவம்மாள் நான் மன்னிப்பு கேட்கிறேன் சம்பந்தி மாப்பிள்ளை கிட்ட.
வசீயின் அம்மா குருவம்மாளை பார்த்து நீங்க ஏன் மன்னிப்பு கேட்கனும்.இதோ இவ தான் என் பையன் அடிச்ச .இவ என் பையன் காலுல விழுந்து மன்னிப்பு கேட்கனும்.
கோடி என்னடி பண்ணி வச்சுயிருக்க என்றவன். இது உனக்கு தேவையா என்றவன். அவன் உன்க்கிட்ட என்ன சொன்னா என்ன அதுக்கு நீ ஏன் இப்படி பண்ணி வச்ச என்று அவனும் கௌசியை சத்தம் போட.
குருவம்மாள் வந்து விட்டார்.கௌசியிடம் ஏய் போடி மாப்பிள்ளை கால்ல விழுந்து மன்னிப்பு கேளு என்று சொல்ல அவளோ முடியாது என்று தலையை ஆட்ட.
ஏய் என்னடி தலையை ஆட்டுற. போ என் மாப்பிள்ளை கிட்ட மன்னிப்பு கேளு கேட்டாதான் . நீ என் பையன் கூட வாழ முடியும் என்று சொல்ல.
கோடி அமைதியாக இருக்க. கௌசி கோடியை பார்த்து கொண்டு இருந்தாள்.
கோடிக்கு யார் பக்கம் பேச என்று தெரிய வில்லை .இந்த பக்கம் தென்றல்,அந்த பக்கம் தன் மனைவி.
தென்றல் கோடியிடம் வந்த உன் பொண்டாட்டியை என் புருஷன் கிட்ட மன்னிப்பு கேட்க சொல். அங்கே இருந்த அனைவரும் கௌசி பண்ணியது தப்பு. அது என்ன?
ஒரு பொம்பள பிள்ள.ஆம்பளலையை அடிக்குறது.என்ன வளப்போ என்று பேச.
இவ்வளவு நேரம் அழுதவள் கண்ணை துடைத்து விட்டு.அழமல் நான் எந்த தப்பு செய்யல .மன்னிப்பு கேட்க முடியாது.
வசீயின் அம்மா ,அப்பா கௌசியிடம் வந்து என்ன துணிச்சல் உனக்கு . மரியாதையா போயி என் பையன் கிட்ட மன்னிப்பு கேளு .இல்ல உன்ன சும்மா விட மாட்டோம். என்று கோடியை பார்த்து கேட்க.
கௌசி அவர்களை பார்த்து உங்க பையன் பண்ணது தப்பு.அதான் அடித்தேன் இன்னும் ரெண்டு அடி சேத்து குடுத்து இருக்கனும் என்றவள் வசீயை பார்த்து பல்லைகடிக்க.
ஏய் என்று அனைவரும் கௌசியை சத்தம் போட.
கோடிஸ்வரன் கௌசியிடம் நீ மன்னிப்பு கேளு என்க.
அவளோ மாட்டேன் என்றாள்.
சொன்னா கேளுடி என் அக்கா வாழ்க்கை எனக்கு முக்கியம்.
கௌசி நான் எந்த தப்பும் பண்ணல .மன்னிப்பு கேட்க முடியாது.
சிவா தங்கையை காண வந்து இருந்தான். மண்டப உள்ளே ஒரே சத்தமாக இருக்க.என்னவென்று மேலே வந்து பார்க்க அணைத்தையும் கேட்டவன்.
சிவா கௌசியின் அருகில் வர. அண்ணணை பார்த்தவள் சிவா நான் எந்த தப்பு பண்ணல என்னை போய் மன்னிப்பு கேட்க சொல்லுறாங்க என்று அழ.
சிவாக்கு ஒரு அளவுக்கு விசயம் தெரிந்து இருக்க . தங்கையை சமாதானம் பண்ண.
குருவம்மாள் எல்லாம் இவன்னால தான் .இவனுக்கு பணம் குடுக்க போய் இவ்வளவு பிரிச்சனை என்று சொல்ல.
சிவா தன்னிடம் இருந்த பேகை எடுத்து அதில் இருந்த 1 1/2 கோடி பணத்தை வட்டியும், முதலும் இருக்கு .இனிமே என் தங்கச்சியை காசு வாங்கி தான் கல்யாணமாச்சுன்னு யாரும் சொல்ல கூடாது.
கோடிஸ்வரனிடம் அந்த பேகை சிவா குடுத்து இதில் நீங்க எனக்கு குடுத்த பணம் இருக்கு சார் ரொம்ப நன்றி என்று கை எடுத்து கும்பிட.
நான் என் தங்கச்சியை கூப்பிட்டு போறேன் என்று அவளின் கைபிடித்து அழைத்து சொல்ல.
கோடிஸ்வரன் என்ன சிவா.இவனும் புரியாமல் நடந்து கொண்டதை பார்த்து கேட்க.
சிவா என் தங்கச்சியை எல்லோரும் கண்ட படி பேசுறாங்க. நீங்க வேடிக்கை பார்க்குறீங்க.
குருவம்மாள் உன் தங்கச்சி என்ன பண்ணான்னு கேளு.
சிவா தங்கையை பார்த்து என்ன ஆச்சு கௌசி என்றான்.
அவன் என்னை பேட் டச் பண்ணான் என்றாள் சிவாவிடம் அமைதியாக.
சிவா வசீயிடம் சென்று என்ன பண்ண . என் தங்கச்சியை என்று அவன் சட்டையை பிடிக்க. அவ மேல கை வைப்பீயா என்று அவனை அடிக்க போக.
கோடி சிவாவை இழுத்து பிடித்து இருந்தான்.
சிவா வசீயை பார்த்த கொண்ணுடுவேன். யார்மேல கைவச்ச என்றவன். ஒரு பொண்ணு சும்மா ஒருதனை செருப்ப கழட்டி அடிச்சான்னா.அவன் என்ன தப்பு பண்ணான்னு அவன் கிட்ட போய் கேளுங்க .சும்மா எந்த பொண்ணும் ஒருத்தனை அடிக்க மாட்டா. தப்பு என் தங்கச்சி பேருல இருக்காது.
கௌசியை பத்தி எனக்கு தெரியும் ,அவ உண்டு.அவ வேலைவுண்டுண்ணு இருப்ப.அவ கோப படுற மாதிரி என்ன பொறுக்கி தனம் செஞ்ச என்று வசீன் சட்டையை பிடிக்க.
தென்றல் ஏய் என்றவள் வசீயின் அருகில் வந்து . உன் தங்கச்சி என் புருஷனை அடிச்சா நீ அவர் சட்டையை பிடிப்பியா என்றவள். கோடி என்று கத்த.
கோடிஸ்வரன் தென்றலின் அருகில் வந்து அக்கா கத்தாத வயித்துல குழந்தை இருக்கு.
அவளோ என்னடா இது எல்லாம், என்னால முடியலடா எல்லாரும் வந்து என் புருஷனை அடிக்குறாங்க .அவர் ஒரு டாக்டர் அந்த மரியாதை கூட கொடுக்க கூடாத. உன் பொண்டாட்டியை என் புருஷன் கிட்ட மன்னிப்பு கேட்க சொல்லு. இல்லன்னா விசயம் வேற மாதிரி ஆகும். நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது.
கோடி இப்போது கௌசி மன்னிப்பு கேட்கலன்னா தன் அக்காவின் வாழ்க்கை என்ன ஆகும் என்று நினைத்தவன்.
தன் மனைவி தானே பிறகு சமாதானம் பண்ணி கொள்ளலாம் என்றவன். கௌசியிடம் நீ போய் மாப்பிள்ளை கிட்ட மன்னிப்பு கேட்டு வா. நாமா நம்ம வீட்டுக்கு போலாம் ,பிரிச்சனை. இதோடு முடியட்டும் என்று.
கௌசியோ முடியாது என்றாள். திரும்பி நின்று கொண்டு.
கௌசி சொன்னா கேளுமா.நீ மன்னிப்பு கேட்டு வா நாமா போலாம்.
அவளோ முடியாது என்றாள் மீண்டும்.
அப்போ நான் உனக்கு வேண்டாமா என்றான் கோடி.
அவளோ திரும்பி கோடியை பார்த்து, என்னால முடியாது, அவன் கிட்ட , என்னால மன்னிப்பு கேட்க முடியாது ,அவன் பண்ணுணது தப்பு , நீங்க எனக்கு வேணும் என்றவளின் குரல் அழுகையில் இருக்க.
அப்போ நான் சொன்னத செய் என்றான் கோடி.
அவளோ கோடியை விட்டு தன்னால் இருக்க முடியாத. தன்னை கோடி புரிந்து கொள்ளவில்லை . என்ன செய்வது. வசீயிடம் மன்னிப்பு கேட்பத.
கௌசி நான் அண்ணிகிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.
கோடிஸ்வரன் நீ இப்போ வசீ மாப்பிள்ளை கிட்ட மன்னிப்பு கேட்குற. நான் உனக்கு வேணுமுன்னா, இல்ல நான் வேணமுன்னா.நீ மன்னிப்பு கேட்க வேண்டாம்.
கௌசி நான் மன்னிப்பு கேட்டதான் உங்க கூட வாழ முடியுமா என்றவள் கோடியிடம் சென்று கேட்க.
ஆமாம் என்றான்.
கௌசி மனதை கல் போல படுத்தி கொண்டு.
மனதில் என் கோடிக்காக என்றவள். வசீயிடம் சென்று மன்னிப்பு கேட்க தயாராக. முதலில் தென்றலிடம் சென்றவள் மன்னிச்சிருங்க அண்ணி நான் பண்ணுனது தப்பு தான் என்றவள்.பின்பு வசீகரனின் அப்பா, அம்மாவிடம் சென்றவள்.உங்களுக்கு உங்க பிள்ளையை அடிச்சது அவமானம் தான் என்றவள் என்னை மன்னிச்சுருங்க என்றாள்.
குருவம்மாள் ஏய் உன்னை மாப்பிள்ளை கிட்ட மன்னிப்பு கேட்க சொன்னா. நீ எல்லோரு கிட்டையும் மன்னிப்பு கேட்குற என்றார்.
கௌசி குருவம்மாளிடம் நான் யாரு உங்களுக்கு என்றவள். நானும் வயித்து பிள்ளையை வச்சு இருக்கேன் ஞாபகம் இருக்க. இனிமே என்னை ஏய் போ வா அப்படி கூப்புட்டிங்க அவ்வளவு தான். மரியாதை என்றவள் குருவம்மாளை முறைத்து விட்டு.
வசீயிடம் சென்றவள் அவனிடம் மன்னிப்பு கேட்கனுமா. தப்பே செய்யாமல் நான் ஏன் என்றவள்.அவள் சட்டம் படித்தது அனைத்தும் நியாபகம் வர, இது தப்பு . கோடிக்காக மட்டும் தான் . என்று அவன் காலின் அருகே செல்ல. தப்பே செய்யாமல் நான் ஏன் மன்னிப்பு கேட்கனும்.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம். ஆனால் ஒரு நல்லவனுக்கு கூட தண்டனை கிடைக்க கூடாது என்று படித்ததை நினைத்தவள்.
வசீயின் முகத்தை பார்த்து உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு தான் , எனக்கு வாழ்க்கைன்னா, அந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்றவள்.
சிவாவின் கைபிடித்து இழுத்துட்டு கொண்டு சென்று விட்டாள் மண்டபத்தை விட்டு. அந்த ஊரை விட்டு , இனி இவர்கள் முகத்தில் நான் முழிக்க மாட்டேன் என்று சென்றுவிட்டாள். 4 வருடம் ஆகியும் அவள் கோடியை பார்க்க வர வில்லை.யாரும் தனக்கு வேண்டாம் என்று நினைத்து. தன் அண்ணனோடு ஹைதாரபாத் சென்று விட்டாள்.
இனி நான்கு வருடம் களித்து பார்க்கலாம்……
error: Content is protected !!