Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Abinayangalin Vizhigalil

Abinayangalin Vizhigalil 20

💞 நயம் – 20 💞

சுழன்று கொண்டே இருக்கும் வேலை பளுவிலும் மாதத்தில் இரு நாட்கள் மேகமலை வீட்டிற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டனர். அச்சுதன், கணேஷ் குடும்பதோடு இப்போது பவியின் புகுந்த வீட்டினரும் இணைந்து விட்டனர். குழந்தைகள் கும்மாளத்தில் இவர்களின் கொண்டாட்டம் தொடரும்.



Advertisement

இன்றும் அங்குதான் அவர்களின் சேட்டைகளோடு வாசம் செய்ய வந்துள்ளனர். தேயிலை தோட்டங்களில் ஓடி விளையாடுவது தான் முதல் வேலையே, காலையில் குதூகலமாய் கிளம்புபவர்கள். அந்தி சாயும் வேலையில் தான் வீட்டிற்கு திரும்புவர். அப்போதும் புத்துணர்ச்சியோடு ஆட்டம் தொடங்கும். அபியோடு இணைந்து நல்ல பிள்ளையாய் பரதம் ஆடுபவர்கள், அதே பாட்டுக்கு அரவிந்தோடு இணைந்து குத்தாட்டமும் ஆடி கலாட்டா செய்வர். நால்வர் கூட்டணியின் தலைவனாய் அவனும் குறும்பு குழந்தையாகி விடுவான். அவளை வம்புக்கு இழுத்து கத்த வைப்பதில் அத்தனை சுகம் அவர்களுக்கு.

இத்தனை தொழில்களை திறன்பட நடத்தி, அன்பினை பொழியும் இல்லம் நடத்தும் பொறுப்பானவனாய் அவன் இருப்பதில்லை. கள்ளம், கபடமற்ற எதுவும் அறியா, அகமொன்று புறமொன்று பேசா வளர்ந்த குழந்தை அவன் .

Advertisement

பெரியவர்கள் அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க, சிறியவர்கள் மட்டும் மேலே ஊஞ்சல் அறையில் விளையாடி கொண்டு இருந்தனர். எந்த சப்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறதே என மாடியேறி சென்றவள் கண்டது அலங்கோல அறையை தான்.

Advertisement

ஏன் இப்படி ரூம் புல்லா பென்சில், கிரையான்ஸ், சார்ட் பேப்பர்னு பரப்பி வச்சு இருக்கீங்க. பூவை எல்லாம் இப்படி பிச்சி போட்டு வச்சி என்ன பண்றீங்க, அமைதியா இருக்கீங்க, புரியலையே?

Advertisement

மை லார்ட், வீ ஆர் க்ரீன் சான்ட், நாங்க ஒன்னும் பண்ணல என்றான் விஷ்ணு.

இல்லமா, விஷ்ணு அண்ணா தான் பார்ட்ஸ் ஆப் பிளவர் சொல்லி தரேன்னு தோட்டத்திலுள்ள எல்லா பூவையும் பறிச்சிட்டு வந்துட்டாங்க. ஒரு பூ வச்சிதான் சொல்ல சொல்ல வரைஞ்சோம். நிறைய டவுட் வந்துச்சா அதான் எல்லாம் பறிச்சிட்டோம். சார்ட் பேப்பர் எல்லாம் காலியா போச்சு. திருப்பி கேட்டா நீங்க திட்டுவீங்க இல்லையா ?, அதான் தரையில இங்கே வரைஞ்சு பழகினோமா , அது போக மாட்டேங்குது. என்ன பண்ணணு தெரியலை. அதான் குட் கேர்ளா அமைதியா இருக்கோம் என்றவுடன் தான் அவர்களின் பின்னே எட்டி பார்த்தால் , கட்டிலுக்கு அடியில் எல்லாம் கலர் கலராய் வரைந்து இருந்தனர். அதை அழிக்க முயற்சிக்க, புதிய துண்டினை நான்காய் கிழித்து, அதுவும் ஹோலியில் அபிஷேகம் செய்யப்பட்ட உருவமாய் இருந்தது.

நினச்சேன். என்னடா இன்னிக்கு சேட்டை பண்ணாம பொழுது போச்சேன்னு, ஆரம்பிச்சுட்டுட்டீங்களா ? எனக்கு தெரியாது, நீங்களும் உங்க காட்பாதரும் சேர்ந்து எல்லாம் கிளீன் பண்ணி இருக்கனும், பண்ணலைனா என்ன பண்ணுவேன்னு தெரியாது. இன்னைக்கு அடி தான் விழுகும்?

என்ன, என் பெயர் அடிபடுது என்றபடியே வந்தவன், இவர்களின் செயலில் ஜகா வாங்கி, நீ போடா அபி, நாங்க கிளீன் பண்ணி , ரூமை நீட் பண்ணிருவோம். என்னடா செல்லம்ஸ். என்றபடியே அவளை நகர்த்திவிட்டு , சும்மாவே இருக்க மாட்டிங்களா. அபிமா டென்ஷன் பண்றதே வேலையா போச்சு. வாங்க சீக்கிரம் சரி பண்ணிட்டு சாப்பிட போவோம். இல்லைனா நைட் பூரி உங்களுக்கு குடுக்கமா எல்லாமே அவங்களே சாப்பிட்டுருவாங்க, பாஸ்டா பண்ணுங்க என்று குழந்தைகளோடு குழந்தையாய் மாறி, அத்தனையும் சீர் செய்தவன், நீங்க கீழே போய் சாப்பிட்டு, பாட்டி ரூமில் படுங்க. டாடி குளிச்சுட்டு வருவேன், என அவர்களை அனுப்பியவன் தனக்கு தேவையான அனைத்து வேலைகளையும் முடித்து விட்டே கீழே வந்தான்.

அப்பாவின் கூற்றுப்படி சமர்த்தாய் சாப்பிட்டு, உறங்க சென்றதும் தன் மனைவியை மேலே மாடிக்கு போக சொன்னான். எப்போது இங்கே வந்தாலும், மொட்டை மாடியில் நிலவின் குளுமையை அனுபவித்து கொண்டு கதை பேசி கொண்டிருப்பது இவர்களின் வாடிக்கை என்பதால் அவளும் நம்பி மேலே சென்றாள்.

அவளின் அன்பு கணவன் , தன் பெண்கள் பிய்த்து போட்ட பூக்களை எல்லாம் கட்டிலில் தூவி, அந்த ரூமை அழகாய் அலங்காரம் செய்து இருந்தான் . இவனை என்ன தான் செய்ரது என சுகமாய் அலுத்து கொண்டாலும் , அதனை ரசிக்க தான் செய்தாள். பாடலை சீட்டி அடித்த படி மேலே வந்தவன், எப்படி பார்த்தியா, எதையும் வேஸ்ட் பண்ணாம அழகா யூஸ் பண்ணி இருக்கேன். என் பொண்ணுங்க இந்த அப்பாவுக்காக பறித்து கொடுத்து இருக்காங்க என கண் சிமிட்டி சிரித்தான்.

அப்பாவுக்கு தப்பாம பிள்ளைங்க, வாலு மட்டும் தான் இல்லை. என்ன பண்றது. ஓவர் சேட்டை.

அப்படியெல்லாம் சொல்லாதே, என்னை மாதிரியே அவங்க எவ்ளோ நல்ல பிள்ளைங்க தெரியுமா, ஓய், பேசியே டைம் போயிரும், அப்புறம் எந்திரிச்சி தேட ஆரம்பிச்சிருவாங்க.

இப்போ இது தேவையா? என்றவளிடம்

பத்து நாள் கழிச்சு தான் நம்ம வாழ்க்கையை இங்கே தொடங்கினோம். அதனால் இந்த இடம் நமக்கு எப்பவும் ரொம்ப ஸ்பெஷல்.

இன்னோர் டயலாக் விட்டுட்டீங்க. பத்துமா எழுதுனதால் தான் பத்து நாள் ஆச்சுன்னு சொல்விங்க, இன்னைக்கு அத விட்டாச்சு.

அதான் நீயே சொல்லிட்டியே. அப்புறம் என்ன? இங்க பாரு கட்டுப்பாடு இல்லாம குடும்பம் நடத்தணும்னு தானே, குடும்ப கட்டுப்பாட்டை நானே பண்ணி இருக்கேன். சோ…, என்றபடி அவளை அள்ளி கொண்டவன், தன் ஆசைகளை பள்ளி கொண்டு முடித்து விட்டு தான் அயர்ந்தான்.

குழந்தைகள் பிறந்து ஆறு மாதம் கழிந்த நிலையில் லண்டன் சென்று இருந்தவன் , அபியின் பிரசவ வேதனையை கண் கொண்டு பார்த்தவன், அவள் இனி எந்த நிலையிலும் வருந்த கூடாதென , அங்கேயே தனக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு வந்து விட்டான். தனக்கு தெரிந்தே அவளின் வலி இனி மீண்டு வரக்கூடாது என்ற அவன் முடிவுக்கு பெரியோர்களும் சம்மதம் சொல்லி விட்டனர். ஆனால் என்றேனும் தெரிந்தவர்கள் ஆண் வாரிசு ஒன்று பெற்று கொண்டு இருந்துருக்கலாம் என அங்கலாய்த்தால், அவனே தன் ஆண் மகவு என பெருமையாக சொல்லுவாள். மனைவியின் மனம் புரிந்த மாயக்காரன். அவன் குணமே அவன் பெண்களிடமும் அப்படியே.

*******

ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் , பள்ளி விட்டு வரும் போது , சிக்னல் அருகில் ஒரு மூதாட்டி மயங்கி விழ போவதை கண்டவர்கள், டிரைவரின் துணை கொண்டு, அவரை தங்கள் அன்பு இல்லத்துக்கு அழைத்து கொண்டு வந்தனர் தீக்சாக்கள் இருவரும். விசாரித்த போது அவர் பெயர் சுபத்ரா என்பதும், செல்வா சீமாட்டியாய் வாழ்ந்து, அவரின் பிள்ளைகள் கைவிட்ட நிலையில் அனாதையாய் , தெருவில் பிச்சை எடுத்து சாப்பிட்டு வருபவர் என்றும், இன்று பசிமயக்கத்தில் மயங்கி இருந்தார் என்றும் அங்குள்ள மேனேஜரிடம் கூறினார்.

அவரின் நிலை எண்ணி பரிதாபம் கொண்டு, இங்கேயே தங்கள் காலம் வரை வாழலாம் என்றும், நிறுவன தலைவர் இன்று வருகை தருவார் , அவரிடம் ஒரு வார்த்தை கேட்டு உங்களுக்கு உறுதியாக சொல்கின்றேன் என்றும் கூறியதை கேட்டும் , அவர்க்கு சாப்பாடு கொடுத்து விட்டு தான், பிள்ளைகள் இருவரும் வீடு திரும்பினர்.

சிறிது நேரத்தில் அங்கே வந்த அரவிந்த், அந்த முதியவரை எங்கோ பார்த்தது போல் உள்ளதே, யார் அவர் என விசாரித்து கொண்டு இருக்கும் போதே காஞ்சனா அங்கே வந்து விட்டார்.

நீங்கள் நினைத்தது சரி தான், அபியை வீட்டை விட்டு துரத்த சொல்லி, அச்சுதனிடம் திட்டு வாங்கிய அதே காஞ்சனா தான். இவரது பேச்சினை பொறுக்க முடியாமல் , இவரின் மகன்கள் முதியோர் இல்லத்தில் சென்று சேர்த்து விட்டனர். அங்கு சரியாக உணவு இல்லாமல் , மிகவும் வருந்தி, நிலை தளர்ந்து இருந்த நேரத்தில் தான், இந்த அன்பு இல்லம் பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்தார். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, மனம் திருந்தி இப்போது இங்கேயே அடைக்கலமாக சரணடைந்து உள்ளார். வாரம் இரு முறை இங்கு வருகை தரும் அரவிந்தை பார்க்கவே அவர் வந்தது, ஆனால் சுபத்ராவை கண்டு கொண்டு, நீ என்னடி இங்கே வந்து இருக்கே? ஏன் முகம் எல்லாம் வாடி வதங்கி பசிக்கு செத்து போனவே மாறி இருக்கே, உன் பசங்களும் உன்னை விரட்டி விட்டுட்டாங்களா என்றபடி தொடர்ந்தவர், அரவிந்த் தம்பி , இது யாருன்னு தெரியலையா.உன்னோடு அத்தை. உங்க அப்பாவோட பெரிய அக்கா. மத்த ரெண்டு பேரும் அல்பாயுசுல போய்ட்டாங்க. இவ மட்டும் தான் மிச்சம் இருக்கா. உனக்கு யாருன்னு மறந்து போச்சா என்றார்.

அப்போது தான் சிறு வயதில் அவரை பார்த்த ஞாபகம் அவனுக்கு வந்தது. அவன் பேச ஆரம்பிக்கும் முன்பே சுபத்ரா கையெடுத்து கும்பிட்டு, என்னை இங்கே இருந்து போக சொல்லிடாதப்பா, பண்ண பாவத்துக்கு நடு ரோட்டில நிற்க்குறேன். என் சொத்தை எல்லாம் பிடுங்கிட்டு, நான் பெத்த பசங்கள் பொண்டாட்டி பேச்சை கேட்டு, என்னை பத்தி விட்டுட்டாங்க. போக்கிடம் இல்லாம இருக்கேன். என்னை மன்னிச்சு இங்கேயே சாக விட்டுடுயா என மன்றாடினார்.

அத்தை, நான் உங்களை வெளியே போக சொல்லவே மாட்டேன்.நீங்க இங்கேயே இருக்கலாம். என் பொண்ணுங்க உங்களை காப்பாத்தி கூட்டி வந்து இருக்காங்க. அவங்க நம்பிக்கையை நான் எப்பவும் காப்பாத்துவேன். பழசை எல்லாம் மறந்துட்டு , நிம்மதியா இருங்க என்றவனின் காலிலே விழுந்து கதறி அழுது விட்டார்.

உன்னை நான் துரத்தி விட்டேன். விதி உன் பிள்ளைகளை பார்க்க வச்சி , என்னை வாழ வச்சிருச்சி என கதறியவரை , ஆறுதல்படுத்தி அங்கேயே தங்க வைத்தான். காலம் தான் எத்தனை வலியது. உச்சாணி கொம்பில் ஆடிய ஒருவரை நடுத்தெருவில் பிச்சை கேட்டு நிற்க வைத்து விட்டதே. தெய்வம் நின்று கொல்லும் என்பது இது தானோ. அவனின் அன்பு அவன் குழந்தைகளிடமும் முளை விட்டு மரமாக தொடங்கி விட்டதே .

******

சென்னையில் நடைபெற்ற இளம் தொழிலதிபர் விருது வழங்கும் விழாவில், அந்த வருடமும் விருதினை பெற்று கொண்டு நின்று இருந்தவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. ஏனெனில் இந்த வருடம் அபியும் இளம் கட்டிட கலை நிபுணர் என்ற விருதினை வாங்கி கொண்டு அவன் அருகில் நின்று கொண்டு இருந்தாள். அடுத்தடுத்து குவிந்த வாய்ப்புகளை அழகாய் பயன்படுத்தி கொண்டு, தன் மனைவியின் உயரிய நிலைக்கு காரண கர்த்தாவாய் நின்று கொண்டு இருந்தாலும். அவன் முகத்தில் துளி கூட கர்வம் இல்லை. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் அவனின் மனைவி கண்டிப்பாக துணை நிற்பாள். ஆனால் தன் மனம் கவர்ந்தவள் எங்கும் கம்பிரமாக, முடி சூடி நிற்க வேண்டுமென எந்த ஆண் மகன் பாடுபடுவான் ?. அவளின் உழைப்புக்கு தோள் கொடுத்து நண்பனாய் நின்றான். மனதிற்கு தோள் கொடுத்து காதலனாய் மிளிர்ந்தான். உவகைக்கு தோள் கொடுத்து கணவனாக நின்றான். காரியம் யாவிலும் இருவரும் கை கோர்த்து நின்றனர். வெற்றியும் பெற்று விட்டனர்.

அபிநயத்தின் விழிகளில் என்றும் அவளின் குறும்பு கிருஷ்ணனின் ஆலிங்கனமும் , அரும்புகளின் அட்டகாசங்களும் தொடர்கிறது. அவர்களின் நேசம், காதலில் துளிர்ந்து, குடும்ப பந்தத்தில் செழித்து, விழுதுகளோடு வேரூன்றி விருட்சமாய் தழைத்து விட்டது. அதன் நிழலில் அன்பு இல்லம் ஓய்வெடுக்க, நாமும் விடைபெறுவோம் இனிதாக.

💞💞💞

“இல்லத்தின் உணர்வினை

புரிந்து கொண்டால்

இல்லறம் சிறக்குமே !

கொண்டவனை

நண்பனாய் எண்ணி

நேசமுடன் பகிர்வோம் !

காதலாய் கரம் கோர்ப்போம் !

கஷ்டங்கள் என்றாலும்

இஷ்டமாய் சகித்திடுவோம் !

மகிழ்ச்சியின் ஊற்றில்

முத்தெடுப்போம் !

சிறகு விரித்து பறந்து

வானத்தில் சுற்றுவோம் !

தடைகளை தகர்த்து

சிற்பங்கள் செதுக்குவோம் !

களைகளை பறித்து

வளர்நிலம் ஆவோம் !

வாழ்வின் நியதிகள்

வரங்களாய் அமையட்டும்

தண்டனைகளாய் அல்ல !

வாழ்வது ஒரு வாழ்க்கை

வாழ்ந்து தான் பார்ப்போமே !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!