Skip to content
Post Views: 2,322

அன்று இரவு நந்தினி சுபாவை வீட்டை விட்டு துரத்தியவுடன் நிம்மதியாக தூங்க சென்றுவிட்டாள்… அவளின் நிம்மதியான உறக்கம் இது தான் கடைசி என்று அறியாமல்….
சுபா பித்து பிடித்தது போன்று அவள் போக்கிற்கு சென்று கொண்டு இருந்தாள்… ஆரவ் நந்தினிக்கு தெரியாமல் சுபாவின் பின் எப்படியோ வந்துவிட்டான்…. அவன் அழைப்பது கூட கேட்காமல் சென்று கொண்டு இருந்தாள்…
Advertisement
ஆரவ் ஓடி சென்று அவள் காலை கட்டிக்கொண்டு “ம்மா…” என்று அழைத்தான்… தன் காலை கட்டி கொண்டு நிற்கும் தன் மகனை பார்த்து விட்டு அவளும் மண்டியிட்டு அவளை அணைத்து கொண்டாள்…. அவளுக்கு அவனை பார்க்கும் போது சாமி குறி சொன்னது தான் ஞாபகம் வந்தது….
Advertisement
“உனக்காக யார் இல்லனாலும் உனக்காக இவன் ஒருத்தன் இருப்பான் தைரியமா இரு” என்று ஆரவை காட்டி கூறியது அவளுக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது…..
Advertisement
ஆரவ் சுபாவிடம் “ம்மா வா நாம முகி மாமா வீட்டுக்கு போகலாம்… காலைல எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்” என்று மழலை குரல் மாறாமல் கூறினான் ஒன்பது வயது பாலகன்…
Advertisement
சுபா அதை மறுத்து பேசுவதற்குள் அவள் தோளை யாரோ தொட்டனர்… திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள் அங்கு நின்றவர்களை பார்த்து அதிர்ந்து விட்டாள்… அங்கு நின்றது ராஜம்மாவும் அவர் கணவர் கருப்பையாவும் நின்று இருந்தனர்…
அவர்களை பார்த்தவுடன் கண்கள் கலங்கிவிட்டது… ராஜம்மாவிற்கும் சுபாவை பார்த்து அழுது விட்டார்… எந்தவித நகையும் இன்றி அர்ஜுனன் அணிவித்த ஒரே ஒரு செயின் மட்டுமே அணிந்து இருந்தாள்… முகத்தில் நந்தினியின் கைதடம் வேறு இருந்தது…
முதலில் சுபாவை அடித்துவிட்டு தான் முடியை பிடித்து இழுத்து வந்து வெளியே தள்ளி இருந்தாள்…. ஆனால் சுபாவின் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை….
கருப்பையா சுபாவை பார்த்து “பாப்பா எங்க கூட வீட்டுக்கு வாங்க இல்லனா முகி தம்பி வீட்டுக்கு போயிடலாம்… தனியா இப்போ ராத்திரில போக வேண்டாம்” என்று கூறினார்…
அதற்கு அவளோ “இல்ல வேண்டாம் ண்ணா நான் எங்கயோ போறேன்… தம்பியை மட்டும் கூட்டிட்டு போங்க” என்று கூறினாள்…. ஆனால் ஆரவ் மறுத்து விட்டு “ம்மா நீங்க எங்க போனாலும் நான் உங்க கூட தான் வருவேன்” என்று கூறி அவளை அணைத்து கொண்டான்….
கருப்பையாவும் ராஜம்மாவும் சுபாவை காட்டாய படுத்தி முகுந்தன் வீட்டுக்கு அழைத்து சென்றனர்… முகுந்தன் அன்று உறங்கவே இல்லை… அவனுக்கு உறக்கம் தூர போய் இருந்தது…. அதனால் வெளியில் தோட்டத்தில் தான் நடந்து கொண்டு இருந்தான்….
நால்வரும் வருவதை பார்த்து விட்டு திகைத்து விட்டான்… அதுவும் சுபாவின் கன்னத்தில் இருக்கும் கை தடத்தை பார்த்து அதிர்ந்து விட்டான்….
“டேய் பாப்பா இந்த நேரத்துல என்ன டா பண்ற… கன்னத்துல என்ன காயம் யார் அடிச்சது உன்னை” என்று வேகமாக கேட்டான்… சுபா அமைதியாக நின்று இருக்க ராஜம்மா தான் சொன்னார்…
“தம்பி எங்க ரெண்டு பேருக்கும் தூக்கமே வரல… அப்போ தான் வெளியே பேச்சு சத்தம் கேட்டது…. நந்தினி பொண்ணு பாப்பாவை முடிய பிடிச்சி இழுத்துட்டு வந்து வெளிய தள்ளி ஊரை விட்டு போக சொல்லிடுச்சு….” என்று வெளியில் நந்தினி செய்ததை கூறினர்….
ஆரவ் அழுதுக்கொண்டே நந்தினி வீட்டினுள் நடந்ததை கூறினான்… நந்தினி சுபாவை அடித்தது வரை அனைத்தையும் கூறி இருந்தான்…
அதை கேட்டு நந்தினி மேல் கொலை வெறியே வந்தது…. “அவங்களை…” என்று கோவமாக வண்டியை எடுக்க போனவனை சுபா தடுத்து நிறுத்தினாள்….
“அண்ணா நான் எங்க போனேன்னு யாருக்கும் தெரிய வேணாம்… எனக்கு இந்த ஊரே வேண்டாம்… அவர் இல்லாத இடத்துல என்னால இந்த ஒரு நாளே என்னால இருக்க முடியல… செத்து போலாம்னு இருக்கு… ஆனா தோ இவனுக்காக உயிரை பிடிச்சி இருக்கேன் ண்ணா… என்னால அவர் இல்லாம இருக்க முடியல ண்ணா… ஆனா அவர் சாகலனு என் உள் மனசு சொல்லிட்டே இருக்கு ண்ணா… எனக்கு இந்த ஊர் வேண்டாம் ண்ணா… நானன் மட்டும் வேற ஊருக்கு போறேன்னு சொன்னா ஆரவ் உங்க கூட தான் இருப்பேன்னு சொல்றான்… என்னால முடியல ண்ணா… ” என்று இறுகிய குரலில் கூறினாள்… அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வரவில்லை…
“பாப்பா ஏன்டா இங்கேயே இரு… எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்… அவசரத்துல முடிவு எடுக்காத டா… அந்த வீட்டுல கூட வேண்டாம்.. இங்க வீட்டுல இரு டா… நீ ஆரவை கூட்டிட்டு போயிட்டா நிரவி குட்டி என்ன பண்ணுவா டா நாளைக்கு காலைல அங்க வீட்டுக்கு போவோம் டா…. நீ ஆரவ் நிரவி பாப்பா மூனு பேரும் இங்க இருங்க டா….” என்று தன்மையாக கூறினான்….
ஆனால் அவள் ஒத்துக்கொள்ளவே இல்லை… “அண்ணா நான் அங்க போனா கண்டிப்பா அவங்க என்னை கொல்ல கூட தயங்க மாட்டாங்க ண்ணா…. சொத்துக்காக என்னை ஆரவை நிரவியை யாரையும் விட்டு வைக்க மாட்டாங்க… நீங்க எல்லாரும் இருப்பிங்க தான்… ஆனா வீட்டுல அத்தனை பேர் இருந்தும் அவங்களுக்கு தூக்க மாத்திரை குடுத்து தூங்க வெச்சிட்டு தானு துரத்தி விட்டாங்க… கண்டிப்பா கொலை கூட பண்ணுவாங்க…நானும் இவனும் போயிட்டா கண்டிப்பா நிரவியை கொஞ்சம் கொல்ல தயங்குவாங்க… ஏன்னா அவ அவங்களை மாதிரி கொஞ்சம் இருக்குறதுனால….. அண்ணா அம்மா அப்பாவை(தேவியின் அம்மா அப்பா) மட்டும் நல்லா பாத்துக்கோங்க ண்ணா…..அவங்க இப்போ இருக்குறது எனக்காக தான்… நானும் இப்போ போயிட்டா ரொம்ப ஒடஞ்சி போயிடுவாங்க ண்ணா.. என்னை விட்ருங்க ண்ணா நான் எங்கேயோ போயிடுறேன்…. பாப்பா சசி கூட இருந்துப்பா… தயவு செஞ்சி எங்களை விட்ருங்க ண்ணா” என்று கெஞ்சி கேட்டாள்….
“பாப்பா ஏன்டா இப்படி பேசுற… அந்த வீட்டுல இருக்காத… நம்ம வீட்டுல இருக்கலாம்டா…. எங்கடா போவ நீ” என்று கேட்டான் முகுந்தன்….
“இல்ல ண்ணா ப்ளீஸ்… என்னால இந்த ஊருல இதுக்கு மேல இருக்க முடியாது…. அதுவும் அவங்க என்னோட ராசியால தான் மாமா இறந்தாங்கனு சொன்னதும் இதுக்கு மேல இருக்க முடியாது ண்ணா ப்ளீஸ் எங்கேயோ போயிடுறேன் ண்ணா….” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்..
“பாப்பா நீ இல்லாம வீட்டுல எப்படி இருப்பாங்கனு யோசிச்சியா…” என்று கேட்டான்….
அவள் அவன் சொல்வதை கேட்கவே இல்லை… அவன் தான் அவள் பேசுவதை கேட்க வேண்டியதாய் போயிற்று…. “சரி டா நீ சொல்றது ஓகே.. நீ போலாம்… ஆனா நீ எங்க போனாலும் எனக்கு தெரியணும்…. வாரத்துக்கு ஒரு நாள் என்கூட பேசனும்…. நான் மாசத்துக்கு ஒரு தடவ வந்து பார்த்துட்டு போவேன்… எங்க போகலாம் இருக்க… நானே கொண்டு போய் விட்டுட்டு வரேன் “என்று கண்டிப்பாக கூறினான்….
எனக்கு எங்க போறதுனு தெரியல ண்ணா… நான் மட்டும் போறதா இருந்தார் எங்கயோ போய் இருப்பேன்…. ஆனா தம்பியும் என்கூட வரான்… அதுனால ஒரு பாதுகாப்பான இடத்துக்கு போகணும்… ண்ணா நான் கேரளாவுக்கே போகட்டா…. வேற எங்கயும் போகல… அவர் கண்டிப்பா அங்க தான் இருப்பாரு… அவர் கூட எப்பயும் நான் இருக்கனும்…. நான் அங்கேயே இருக்கேன் ண்ணா… எல்லாரும் நான் அங்க போக மாட்டேன்னு தான் நினைப்பாங்க… யாரும் நான் அங்க இருக்கேன்னு கண்டு பிடிக்க மாட்டாங்க…. நான் அங்க போக மட்டும் ஏற்பாடு பண்ணுங்க ண்ணா…. யாருக்கும் நான் எங்க போறேன்னு தெரிய கூடாது…. இங்க உங்க மூனு பேர் தவிர நாங்க எங்க போனோம்னு யாருக்கும் தெரிய கூடாது என்று கெஞ்சலுடன் கேட்டாள்…
ராஜம்மாவும் அவர் கணவனும் “பாப்பா நாங்களும் உங்க கூடயே வரட்டா…” என்று கேட்டனர்….
ஆனால் சுபாவோ “வேணாம் நீங்க என்கூட வந்தா நான் எங்க போனேன்னு தெரிய வாய்ப்பு இருக்கு…. நீங்க இங்கயே இருங்க” என்று கண்டிப்பாக கூறிவிட்டாள்…..
அவர்களும் மனதே இல்லாமல் ஒத்து கொண்டனர்… அடுத்து அவர்களை கட்டாய படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டாள்…
சுபா தன் பரதநாட்டிய மாஸ்டரை அழைத்தாள்…. அந்த நேரத்தில் அழைப்பது தவறு என்று தெரிந்தாலும் அழைத்தாள்….. அவரிடம் முதலில் மன்னிப்பு கேட்டுவிட்டு தன் நிலையை சுருக்கமாக கூறி தான் கேரளா வரலாமா என்று கேட்டாள்….
அவர் கேரளாவிற்கு சென்று செட்டில் ஆகி இருந்தார்…. அவர் அவளுக்கு நடந்ததை தெரிந்து வருத்தப்பட்டு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் வா என்று கூறிவிட்டார்…
அவள் முகுந்தன் போனில் இருந்து தான் அழைத்தாள்…. அவர் அந்த போனிற்கு அட்ரஸ் அனுப்பி விட்டு வா பேசிக்கொள்ளலாம் என்று கூறி வைத்து விட்டார்….
முகுந்தன் தனக்கு நன்கு தெரிந்த நம்பிக்கையான ஒரு டிரைவரை அழைத்து இவர்களை அங்கு அழைத்து செல்ல முடியுமா என்று கேட்டான்…
அவரும் ஒத்துக்கொண்டு காரை எடுத்து கொண்டு வந்துவிட்டார்…. இந்த பேச்சு வார்த்தை அனைத்தும் மெதுவாக தான் நடந்தது….
உள்ளே இருப்பவர்களுக்கு எழுந்துகொள்ளாமல் தான் மெதுவாக தான் பேசிக்கொண்டனர்…. டிரைவரும் காரை எடுத்து கொண்டு வந்து இருந்தார்….
சுபா முகுந்தனிடம் சொல்லிக்கொண்டு ஏற முற்படும் போது ஆகாஷ் ஓடி வந்து அவளை அணைத்து இருந்தான்…. அவனை யாரும் கவனிக்கவில்லை….
தூக்கத்தில் இருந்து எழுந்த ஆகாஷ் முகுந்தன் பக்கம் இல்லாததை பார்த்து எழுந்து வெளியே வந்து இருந்தான்… அவன் வெளியே இருப்பதை ஓடி வந்தவன் அப்போது வந்த அனைவரையும் பார்த்து அப்டியே நின்றுவிட்டான்….
ஆகாஷ் சுபாவை அணைத்து “மிஸ் யூ அத்த” என்று கூறினான்….. அவனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு யார் கிட்டயும் சொல்ல கூடாது அகி… குட் பாயா இரு என்று கூறினாள்….
ஆரவும் ஆகாஷும் அணைத்து கொண்டு பிரியா விடை பெற்றனர்….முகுந்தன் அவளுக்கு தேவையான பணத்தை குடுத்து இருந்தான் அவன் மறுப்பையும் மீறி….. முகுந்தனிடம் சுபா மீண்டும் விடைபெற்று கொண்டு அய்யனார்புரத்தை விட்டு புறப்பட்டனர்….
அய்யனார் கோவிலை தாண்டும் போது டிரைவரை வண்டியை நிறுத்த கூறி கோவிலுக்கு செல்லாமல் வெளிவே நின்று “நீ சொன்னதை நடத்தி காட்டிட்டல…. இனிமே இந்த ஊருக்கு நான் வரவே மாட்டேன்… நீயும் வேண்டாம்… இந்த ஊரும் வேண்டாம்” என கூறி காரில் மீண்டும் ஏறி இருந்தாள் சுபா….
விடியற்காலை கேரளாவுக்கு சென்று இருந்தாள் சுபா… அவளின் மாஸ்டர் அவளை வாசலிலேயே நின்று வரவேற்று இருந்தார்…. அதன் பின் சிறிது நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கி இருந்தனர்..
பின் அவளே தனி வீட்டை வாடகைக்கு கேட்டு இருந்தாள்… அவர் நடன பள்ளியிலேயே ஆசிரியராக சேர்ந்து இருந்தாள்….
ஆரவை முகுந்தன் துணை கொண்டு கேரளாவில் பள்ளியில் சேர்த்து இருந்தாள்…. இரண்டு வருடம் அர்ஜுனன் நினைவுடனே வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்…
ஆனால் சுபா இந்த இரண்டு வருடமும் மிகவும் தைரியம் பெற்று இருந்தாள்…. ஆனால் அவள் அனைவரிடமும் பாதுக்காபின்மையை உணர்கிறாள்…. அவள் இந்த வருடத்தில் அவள் மாஸ்டர் பின் அந்த பள்ளியில் இருக்கும் ஒரு சில ஆசிரியர்கள் அங்கு பயிலும் மாணவர்கள் பின் ஆரவின் தோழன் சுபாஷ் குடும்பத்தினர் அவனின் ஆசிரியர்கள் இவர்களிடம் மட்டுமே பேசுவாள்….
தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் ரேவதியிடம் கூறி இருந்தாள் சுபா…. அனைத்தையும் கேட்டு ரேவதியும் அவள் கணவனும் அனைத்தையும் கேட்டு அதிர்ந்து விட்டனர்…. ரேவதி கண்டிப்பாக இது எல்லாம் எதிர்பார்க்கவே இல்லை… அர்ஜுனன் விபத்தில் இறந்து இருப்பான் என்று தான் நினைத்து இருந்தாள்….
ஆஷா அர்ஜுனன் படத்தையே பார்த்து கொண்டு இருந்தாள்…..
error: Content is protected !!