Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 8

ஜான்விக்கும்  பரணியைக் கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் என்று தெரிந்துக் கொண்டபின் இரு பாட்டிமார்க்கும் சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை!

கொஞ்ச நேரம் ஆனது அவர்கள் நிதானத்துக்கு வர!

முதலில் சுதாரித்துக் கொண்டது கனகு தான்!

நாம் ஏற்பாடு செய்தாலும் பெண்ணைப் பெற்றவன் தானே அவள் கல்யாணத்தில் முடிவு எடுக்க வேண்டும்!



Advertisement

அவர்களுக்கு ஜக்தீஷ் பற்றி ஒன்றுமே தெரியாது, அவர் ஒரு டாக்டர் என்பதைத் தவிர!

எனவே மெல்ல கனகு தான் ஜான்வியிடம்  ஆரம்பித்தார்.

“எம்மாடி ஜானு, உன் அப்பாவைப் பத்தி சொல்லு, அவர் எப்படி, உன்னை நல்லா பார்த்துக்குவாரா? உன் மேல பிரியமா இருப்பாரா?”

Advertisement

“அதெல்லாம் பப்பா ரொம்ப நல்லவர் அம்மாச்சி, இந்தூர்ல பெரிய ஹாஸ்பிட்டல் நடத்திட்டு இருக்காரு, நிறைய பேருக்கு ஹெல்ப் பண்ணுவாரு!

Advertisement

நான்னா ரொம்ப பிடிக்கும் அவருக்கு, நானும் அவரை மாதிரி டாக்டர் ஆனதில் அவருக்கு ரொம்ப பெருமை!

அம்மா இறந்ததும் அவர் கூட வந்து இருக்கதான்  சொன்னாரு, நான் தான் இங்க அம்மாச்சி ஊருக்கு வந்தே ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சு வந்திருக்கேன்!

அவருக்கு என் மேல கொஞ்சம் வருத்தம் இதில்! சொல்லி சிரித்தாள் ஜான்வி!

Advertisement

“ஜானும்மா, கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காத, உன் மேல இவ்வளவு பிரியமா இருக்கிற உன் அப்பா, ஏன் உங்கள விட்டு போனாரு?

உங்க அம்மா அவ்வளவு எதிர்ப்பை மீறி உங்கப்பாவை காதல் கல்யாணம் செய்தவ! அப்புறம் ஏன் அவங்க பிரிஞ்சு போனாங்க?

உன் அம்மாச்சி அப்புறம்  உன் மாமா சரவணன் ஏன் உங்கள் அதுக்கப்புறம் கூட வந்தே பார்க்கலையா?”

கனகுவிடமிருந்து சரமாரியாக கேள்விகள்!

அவை எல்லாம் ஜகதுவின் கேள்விகளும் கூட!

“எனக்குக் கூட அப்பா அம்மா டிவோர்ஸ் பண்ணி பிரிஞ்சு இருப்பது கொஞ்சம் பெரிய பெண் ஆனவுடன் தான் புரிஞ்சுது அம்மாச்சி!

அவங்க ரெண்டு பேருமே அத என்கிட்ட வெளிப்படையாக சொல்லவே இல்லை!

நானும் லீவுக்கு அப்பா ஊருக்குப் போய் அவருடனே இருந்ததால், ஆரம்பத்தில் எனக்கு ஒண்ணும் பெரிசா தெரியல!

எனக்கு பத்து வயசு ஆனப்ப தான் ஏன் அப்பாவும் அம்மாவும்  சேர்ந்து எங்கயும் வரதில்ல, அப்பா ஊர்மி ஆண்டி கூட தான் வெளிய போறாருன்னு தெரிஞ்சு, கொஞ்சம் புரிஞ்சும் புரியாம அம்மா கிட்ட கேட்டப்போ தான் அவங்க அப்போ தான் அவங்களோட டிவோர்ஸ் விஷயம் பற்றி சொன்னாங்க!

அது மட்டுமில்ல, இது அவங்க அம்மா வீட்டுக்குத் தெரியாம வச்சு இருக்கிறதாவும் சொன்னாங்க.

அதனால அவங்க பேரைக் கூட ஜி. விஜயதேவி என்பதைக் கூட ஜி.வி. தேவி ன்னு கெசட்டுல மாத்திட்டாங்களாம்!

இங்க சென்னையில கூட தேவி டாக்டர்ன்னா தான் எல்லோருக்கும் தெரியும்!

அம்மாவோட முழுப் பெயர் விஜய தேவின்னே நிறைய பேருக்குத் தெரியாது!

அம்மாச்சி வீட்டுல இருந்து யாரும் அவங்கள தேடி வந்திடக் கூடாதுன்னு தான் இப்படி பேரைக் கூட மாத்தி வச்சுட்டாங்க அவங்க!

அப்புறம் கொஞ்ச வருஷம் கழிச்சு, நான் ப்ளஸ் டூ படிக்கும் போது அம்மா கிட்ட கேட்டேன், ஏன்ம்மா நீங்களும் பப்பாவும் பிரிஞ்சீங்கன்னு.

அதுக்கு அம்மா எனக்கு ரஜினின்னா ரொம்ப பிடிக்கும், நான் அவர் படையப்பா படத்தில் அவர் பொண்ணுங்க கிட்ட சொல்லுவாரு, நான் அதையே உன்கிட்ட சொல்லுறேன்னாங்க!”

 ஜான்வி அவள் அம்மா விஜி சொன்னதை நினைவில் கொண்டு வந்தாள்!

“படையப்பா படத்தில ரஜினி அவர் பொண்ணுங்க கிட்ட,

கணவன் மனைவி ரெண்டு பேருல ஒருத்தர் படிச்சுருந்தா போதும்னு சொல்லுவாரு,

இது எல்லோருக்கும் பொருந்துமான்னு தெரியல, என் விசயத்துல சரியா இருந்திருக்கு!

உன் பப்பாவுக்கு, அவர் ஒய்ப், கரப்பான் பூச்சியைப் பார்த்தா கூட பயப்படறவளா இருக்கணும்!  அந்த அளவு சாதுவா, பயந்த சுபாவமா இருக்கணும்!

நான் வில்லேஜ் பேக்ரவுண்டில் வளர்ந்தவ!

பாம்பைக் கண்டால் கூட, பயப்படாமல் கம்பை எடுத்து அடிக்க தான் போவேன்!

அப்புறம் அவருக்கு எல்லாமே அவரைக் கேட்டு நடக்கணும்.

அவரை சார்ந்து இருக்கணும்னு நினைப்பாரு.

நான் ரொம்ப ஸெல்ப் டிபன்டன்ட் ஆன ஆள்!

நாங்க காதலிக்கும் போது  இந்த குணம் என்கிட்ட இருந்து வெளிப்படல நிஜத்தில்!

அப்போ எல்லாம் நானும் எங்கப்பா, பாட்டியோட கட்டுப்பாடுகள் பற்றி ரொம்ப பயத்தோட தான்  இருந்தேன்.

அப்போ எனக்கு அவரிடம் கொஞ்சம் டிபண்டன்சி இருந்தது.

எல்லாமே அவர் பார்த்துக்குவார்ன்னு அவர் பொறுப்பில் விட்டு விட்டேன். அவரும் எங்க வாழ்க்கை முடிவை எல்லாம் அவரே எடுத்தார்.

எங்க ரிஜிஸ்டர் மேரேஜ் தொடங்கி, நான் வீட்டை விட்டு வெளியேறும் வரை எல்லாமே அவர் முடிவு தான்!

ஆனால் நாங்க சேர்ந்து வாழ ஆரம்பிச்ச சில வருடங்களில் எங்களின் உண்மையான குணாதிசயங்கள் வெளிப்பட்டன.

பிஜி படிக்கும் போது அவர் என்னை கைனகாலஜி எடுக்க சொன்னார்.

எனக்கு  அதில் விருப்பமில்லை. நான் லங்க்ஸ் ஸ்பெசலிஸ்ட் – Pulmonologist – Respiratory Medicine எடுத்து படிச்சேன்!

அதே மாதிரி உன் மாமா சரவணன் கொண்டு வந்து கொடுத்த பாமிலி ப்ரோப்பர்ட்டி ஷேர் எல்லாம்  இன்வெஸ்ட் பண்ணும் போது அவரைக் கேட்டு அவரின் கைடன்ஸ்படி தான் பண்ணுவேன்னு அவர் எதிர்பார்த்து இருப்பார் போல!

நான் அதிலும் என் ப்ராப்பர்டி என் இஷ்டம் தானே என்று, இப்போ நான் பார்ட்னர் ஆகா இருக்கும் இந்த ஹாஸ்பிட்டலில் இன்வெஸ்ட் செய்தேன்!

அது, அவருக்கு கொஞ்சம் வருத்தம்.

என் முடிவு சரியாக தான் இருந்திருந்தது என்றாலும், அவரை மருந்துக்கு கூட நான் கேட்டு செய்யாதது அவருக்கு வருத்தம்!

இப்படி நிறையடா, பெரிய டிசிசன்ல இருந்து டே டு டே ஆக்டிவிட்டி வரைக்கும் எங்களுக்குள் கொஞ்சம் விரிசல் அதிகமாகிட்டே போனது!

ஒரு கட்டத்தில் போதும் இப்படியே அட்ஜஸ்ட் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணி, வாழ்க்கை முழுவதும் அட்ஜஸ்ட்மென்ட்டா ஆகிடப் போவுதோன்னு ஒரு பயம் ரெண்டு பேருக்குமே!

மியுச்சுவல் டிவோர்ஸ் வாங்கிட்டோம்! இப்பவும் நல்ல பிரண்ட்ஸ் ஆ மட்டும் இருக்கோம்!

பப்பா, அவர் மேல் ரொம்ப பிரியமா இருந்த ரிலேடிவ் பொண்ணு ஊர்மிளாவைக் கல்யாணம் செய்துக் கொண்டார்!”

“நீங்க ஏன்மா இன்னொரு கல்யாணம் செய்துக்கல?”

“என்னோட நேச்ச்சர்க்கு கல்யாணமே செட் ஆகாதுன்னு நினைக்கிறேன்! நான் உன் அப்பாவோட வாழ்ந்ததே ரொம்ப ஆச்சரியம்!

என் அப்பா சொல்படி அவர் பார்த்து வைத்தவரை திருமணம் செய்து இருந்தால் ஒரு மாதம் கூட தாக்குப் பிடித்து இருக்க மாட்டேன்!

 எனக்கு என்னோட கெரியர் ரொம்ப முக்கியம்!

அது இல்லாம என்ன தான் இந்த சொசைட்டி அட்வான்சா போயிட்டு இருந்தாலும், என் பொண்ணுக்கு ஒரு ஸ்டெப் பாதர் வேணாமின்னு நினைச்சேன்!

எனக்கு தான் குடும்ப வாழ்க்கையில ரொம்ப ஈடுபாடு இல்லையே தவிர, உன்னை நல்ல பெரிய கூட்டுக் குடும்பத்தில், நிறைய உறவுகளோடு இருக்கும் பெரிய குடும்பத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும், சுற்றி நிறைய மக்கள் இருக்க வேண்டும்! ரெண்டு மூணு பேரன் பேத்திகள் வேணும்!

இப்படி நிறைய ஆசை உண்டும்மா! நான் அப்படியான சூழலில் தான் வளர்ந்தேன்!

என்ன தான் என் பாட்டி ஒரு முசுடு என்றாலும், மற்ற எல்லோரும் அதற்கு டிமிக்கி கொடுத்து விட்டு ஜாலியாக தான் இருப்போம்!

பொங்கலின் போதும், ஊர்த் தேர் திருவிழாவின் போதும் வீடே நிறைந்து இருக்கும்!

நம் கிராமத்து வீட்டில் கூட கொல்லைப் புறம் வாய்க்கால் ஓடும்! மாமரம் இருக்கும்! கொய்யா மரம் இருக்கும்!

ஆற்றில் குளித்து விட்டு வந்து மாங்காய், கொய்யாக்காய் அடித்து  மிளகாய்ப் பொடி வைத்து சாப்பிடுவோம்!

என் அம்மாச்சி ஊரில் எல்லாம் புன்செய் பயிர்கள்!

அங்கு லீவுக்குப் போனால், கடலைக் காட்டுக்கு போய், கடலையை செடியோடு பிடுங்கி வந்து காய்ந்த சருகுகளைப் போட்டு எரித்து அதில் கடலையை  சுட்டு சாப்பிடுவோம்! கம்பங்கதிரையும் கூட அப்படி தான்! கையால் தேய்த்து ஊதி சாப்பிடுவோம்!

வெயில் காலத்தில் ஆற்றில் தண்ணீர் இருக்காது!

அப்போது எல்லாம் தோப்பில் பம்ப் செட்டில் குளிக்கப் போய் விடுவோம்!

எல்லாம் என் பாட்டிக்கு தெரியாமல் தான்!

அது எல்லாம் கோல்டன் டேஸ்மா!

எனக்கு கூட நீயும் அதையெல்லாம் என்ஜாய் பண்ணனும்!

மெடிசன் படிச்சுட்டு, வில்லேஜ்ல போய் ப்ராக்டிஸ் பண்ணனும் கூட ஆசைம்மா!

ஆனா உனக்கு அதில் இன்ட்ரஸ்ட் இருந்தா மட்டும்!

இதுல உன்னோட டிசிசன் தான் முக்கியம்!”

அம்மா மூச்சு விடாமல் ரொம்ப சிலாகித்து பேசினாங்க!

ஜான்வியும் தன் அம்மா பற்றிய இனிய நினைவுகளில் இருந்து மீண்டாள்!

இப்போது கனகு ஜகது இருவருக்கும் ஜான்வியின் மனநிலை புரிந்தது!

விஜி ஆசைப்பட்ட படியான கிராமத்து சூழல்! அங்கே ஜான்விக்கு பொருத்தமான பையன்! கூட்டுக் குடும்ப வாழ்க்கை!

விஜி இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால், உரிமையாய் பெண் கேட்டுருப்போம்!

நம் அதிர்ஷ்டம் அவள் இப்போ இல்லை! அவள் பாட்டி  ஜானு இருக்கும் இடம் தெரிந்தால் கூட அவளிடம் பெண் கேட்கலாம்!

இப்போது ஜான்வியின் அப்பாவிடம் தான் இது விசயமாய் பேச வேண்டும்!

பாட்டிகள் இருவரும் ஜான்வியிடம் அவள் அப்பாவின் போன் நம்பர் வாங்கினார்கள்! பேச சரியான நேரம் பற்றி அறிந்து கொண்டார்கள்!

பின் பரத்தை அழைத்து விஷயத்தை சொல்லி, அவன் மூலம் ஜகதீசை போனில் அழைத்தார்கள்! மொழிப் பிரச்சினையை மனதில் எண்ணிக் கொண்டு!

பரத் அவரை போனில் அழைத்து என் வீட்டு பெரியவர்கள் உங்களிடம் பேச வேண்டும், அவர்களுக்கு இங்கிலீஷில் பேச வராது, ஹிந்தியும் தெரியாது. அதனால தான் கூட இருந்து ட்ரான்ஸ்லேட் பண்ணி அவர்களுக்கு உதவப் போவதாக சொல்ல,

ஜகதீஸ் அதற்கு, “எனக்கு தமிழ் நல்லாவே தெரியும்! நீங்க அவங்க கிட்டயே போனைக் கொடுங்க” என்று சொல்லி ஜகதுவிடம் பேசினார்.

ஜகது, அவரிடம் தன்னை ஜான்வி வேலைப் பார்க்கும் ஹாஸ்பிட்டலின் ஓனரின் பாட்டி , அவளின் பாட்டியோட க்ளோஸ் பிரன்ட் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு, ரொம்ப சுற்றி வளைக்காமல்,

“என் பேரனுக்கு உங்க பொண்ணைக் கொடுப்பீங்களா?” என்று கேட்டு விட்டார்!

முதலில் ஜகது என்ன கேட்கிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ளவில்லை ஜகதீஸ்!

பின் கேட்ட விஷயம் புரிந்தவுடன் அவ்வளவுதான் ரவுத்திர மூர்த்தியாகி விட்டார் அவர்!

“எங்க என்ன கேக்குறோம்னு தெரிஞ்சு தான் கேக்குறீங்களா? ஜான்வி யார் தெரியுமா ஜகதீஸ் பொண்ணு! ஜெய் ஜகதீஸ் ஹாஸ்பிட்டலோட ஜே எம் டி! வருங்கால எம் டி!

ஜெய் ஜெகதீஸ் ஹாஸ்பிட்டல்  எவ்வளவு பெரிசு தெரியுமா, உங்க  வில்லேஜ் ஹாச்பிட்டலோட நூறு மடங்கு பெரிசு!

இந்தியா பூராவும் பிரான்ச் வரப் போற பெரிய க்ரூப்!

அத நிர்வகிக்க போறது ஜான்வியும், நான் அவளுக்கு பார்த்து இருக்கிற என்னோட மச்சினன் மகன் நிகிலும் தான்!

இது என் சைடில் உள்ள சொத்துக்கள்!

அங்கே சென்னையில அவ அம்மாவோட சொந்த ஹாஸ்பிட்டலே உங்க ஹாஸ்பிட்டலோட பத்து மடங்கு பெரிசு!

இதெல்லாம் விட்டுட்டு, இந்த ஜான்வி தான் அவ அம்மா நினைவா இருக்கிற, அவ அம்மா பிறந்து வளர்ந்த ஊரில் கொஞ்ச நாள் இருக்கிறேன்னு ஆசைப்பட்டதாலே, எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லாமதான் அவளை அங்கு வேலைப் பார்க்கவே அனுப்பினேன்.

அவ அங்க வேலைப் பார்க்கிறதே எனக்கு பிடிக்கல, நீங்க என்னடான்னா அவளைப் பொண்ணு கேக்குறீங்க!”

அவர் மூச்சு விடாமல் கத்தினார்!

முதலில் கொஞ்சம் பயந்தே விட்டே ஜகது, கனகு சைகையில் தைரியம் ஊட்ட,  அவரும் பேசினார்.

“நாங்களும் உங்களை விட வசதியில குறைஞ்சவங்க எல்லாம் இல்லீங்க! நீங்க பெரிய ஹாஸ்பிட்டல் வைத்து நடத்துறீங்க, நாங்க வேற பல தொழில் செய்துட்டு இருக்கோம்! நாங்களும் இங்கே ஜமீன் அந்தஸ்துல இருக்கிறவங்க தான்! நீங்க எங்க வீட்டை வந்து பாருங்க அப்ப தான் புரியும்!”

அவர் அப்படி பேசியதில், கொஞ்சம் நிதானத்துக்கு வந்தார் ஜகதீசும்!

“சாரிங்க, உங்கள இன்சல்ட் பண்ணுனும் நான் சொல்லல, ஜான்வியோட எதிர்காலம் குறித்த கவலையில தான் நானும் கொஞ்சம் வேகாம பேசிட்டேன்!

ஆனா, நீங்களே நினைச்சுப் பாருங்க, ஜான்வி ஒரு டாக்டர்! அவளுக்கு இங்க ஒரு பெரிய எதிர்காலம் இருக்க, அதை விட்டுட்டு , அங்க ஒரு சின்ன கிராமத்தில் வாழ வைப்பது , ஒரு பறவையை சிறகை உடைத்து கூண்டில் அடைப்பது போல தானே!

நீங்க விஜி அம்மாவோட பிரண்டா வேறே இருக்கீங்க, இதுவே உங்க பேத்தியா இருந்தா இப்படி விடுவீங்களா?

எனக்கு இருக்கறது ஒரே பொண்ணு! என்னோட மருத்துவ சாம்ராஜ்த்துக்கே அவள் தான் வாரிசு!

அவளை நான் எப்படி உங்க பேரனுக்குக் கட்டி வைக்க முடியும்? ஒரு பெண்ணைப் பெத்தவன் இடத்தில் இருந்து யோசிச்சுப் பாருங்க!”

ஜகதீஸ் மடக்க, இப்போது போனை கனகு வாங்கிப் பேசினார்!

“நானும் உங்க மாமியாரோட பிரன்ட் தான்! ஜானு எனக்கும் பேத்தி மாதிரி தான்!

நீங்க இவ்வளவு சொல்றீங்க, ஆனா ஜானும்மாவுக்கும் எங்க பையனைக் கல்யாணம் செய்ய ரொம்ப விருப்பம் தான்! அத பத்தியும் கொஞ்சம் யோசிங்க!”

“இருக்கட்டும்மா, ஜான்வி சின்ன பொண்ணு, அவளுக்கு இன்னும் ரியாலிட்டி புரியல! அதெல்லாம் எடுத்து சொன்னா புரிஞ்சிப்பா! நீங்க வீணா உங்க பையன் மனசுல ஆசையை வளர்த்து விட்டுடாதீங்க!

ஜான்வி ஏதோ ஒரு இமொசன்ல உங்க கிட்ட அப்படி சொல்லியிருப்பா! இங்க வந்து ஒரு வாரம் இருந்தா, அவளுக்கு அந்த கிராமத்து வாழ்க்கைப் பிடிக்காமல் போய் விடும்! பாருங்க!” என்று இந்த பேச்சுக்கு அத்துடன் என்ட் கார்ட் போட்டு விட்டார் ஜகதீஸ்!

இதை ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த ஜகதுவின் கண்ணில் கண்ணீர்!

“அழுவாத ஜகது, நாம கடவுள நம்புவோம், எனக்கென்னமோ எதுவும் கைய விட்டு போனதா தெரியல!

எல்லாத்துக்கும் மேல, பெரியவங்க ஒண்ணு சொல்லுவாங்க, ஒருத்தன் பொண்டாட்டிய இன்னொருத்தன் கட்ட முடியாது! ஜானு, நம்ம பரணிக்கு தான்னு அந்த ஆண்டவன் விதிச்சு இருந்தா யார் என்ன பண்ணினாலும்  ஒண்ணும் கிழிக்க முடியாது!

நீ தான் அடிக்கடி சொல்லுவ இல்ல, என் நாக்கு கரி நாக்கு, சொன்னது பலிக்கும்னு! நான் அன்னிக்கு சொன்னது நிச்சயம் பலிக்கும்! நம்ம பரணிக்கு தான் ஜானும்மா! நீ வேணா பாரேன்!” என்று சொல்லி ஜகதுவை சமாதானம் செய்தார் கனகு!

“இல்லடி கனகு, நாம தான் தேவையில்லாத வேலைப் பண்ணி பிள்ளைங்க மனசுல ஆசைய வளர்த்துட்டமோன்னு ஒரே குற்றஉணர்ச்சியா இருக்கு!” ஜகது புலம்பினார்!

 அடுத்து வந்த சில நாட்களில் பரணியின் செயல் ஒன்று, அவன் ஜானுவை நேசிப்பதை அவருக்கு உறுதி செய்ய அவரின் குற்ற உணர்ச்சி மேலும் அதிகமானது!

ஆனால், அதைப் போக்கும் விதமாக இருந்து விட்டது ஜான்வியின் அதிரடி செயல்கள்!

கனகுவையே கொஞ்சம் கதி கலங்கி , அப்படியே அதிர்ச்சியில் நிற்கவும் வைத்து விட்டது!

அப்படி என்ன செய்தாள் ஜான்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!