Skip to content
Post Views: 931
அலைவரிசை -6
வீட்டு வாசலில் நின்ற தன் தந்தை மற்றும் தமையனை நோக்கி அடி எடுத்து வைக்க போனவள் அவர்களுடன் நின்ற தனது ஒரே மகளை பார்த்ததும் அவளை ஓடி போய் அணைக்க தான் தாய் உள்ளம் கெஞ்சியது.ஆனால் ஐந்து மாதமாக தனது முகத்தினை காட்டாது அவ்வளவு கெஞ்சி, கொஞ்சி, மிரட்டியும் வராமல் போன் செய்தாலும் எடுத்து பேசாமல் இருந்தவள் மேலுள்ள கோபம் தாய்ப் பாசத்துக்கு அணை போட்டு கட்டுப்படுத்தி கோவமாக தனது அறையை நோக்கி செல்ல வைத்தது.
“ என்ன மீனாட்சி இது வீட்டுக்கு வந்தவங்கள உள்ளவாங்கன்னு சொல்லாம போற என்ன பழக்கம் இது” என்ற தனது அத்தையின் வார்த்தையில் உள்ள உண்மையை உரைக்க மீண்டும் திரும்பி வந்து, “ சாரி அத்தை” என்று விட்டு தனது தந்தை மற்றும் தமையனை கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தாள் சிவகாமி.
Advertisement
அவர்களுடன் நின்றவளை அங்கு உள்ளே யாருமே கண்டு கொள்ளவில்லை அதில் அனைவரையும் முறைத்துக் கொண்டு வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தாள் இனிய அமிழ்தினி.
“ வாங்க அண்ணா எப்படி இருக்கீங்க” என்று சிவசாமியை கேட்டார் வள்ளியம்மை.
Advertisement
Advertisement
“ நான் நல்லா இருக்கேன்மா. நீ எப்படிம்மா இருக்க. மாப்பிள்ளை எங்க காணோம்”
“அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னா உள்ள தான் படுத்து தூங்கிட்டு இருந்தாங்க இருங்க நான் போய் எழுப்பிட்டு வரேன்”
Advertisement
“வேண்டாமா மாப்பிள்ளை தூங்கட்டும். பிறகு பாத்துக்குறேன்” என்றவர் தனது மகளின் கையை பிடித்து “தங்கம் எப்படி இருக்க மா” என தலையை தடவி விட்டு கேட்டார்.
அதில் கண்ணில் நீருடன் “நான் நல்லா இருக்கேன் பா நீங்க எப்படி இருக்கீங்க” என்றாள் சிவகாமி.
அவர் இருவரும் பேசிக் கொள்வதை பார்த்துக் கொண்டிருந்த மாறனின் கைகளை பிடித்து தனது பக்கத்தில் அமர வைத்து, “மாறா எப்படி இருக்க.என்ன உடம்பு மெலிந்த மாதிரி இருக்க இவ ஒழுங்கா உனக்கு சாப்பாடு போடலையா” என தனது நாத்தனார் பார்வதியை காட்டி மாறனிடம் கேட்டார் வள்ளியம்மை.
“ அதெல்லாம் இல்லத்தை. நல்லா தான் இருக்கேன் நீங்க தான் ஒல்லியான மாதிரி இருக்கு” என்றான் இளமாறன்
அவன் சொன்னதை கேட்டு அதுவரை தன்னை கவனிக்காமல் இருந்தவர்களை முறைத்துக் கொண்டு இருந்த இனியா அதிர்ச்சியுடன் மாறனை பார்த்து, “ யாரடா நீ எப்படி டா இவ்ளோ பொய் சொல்ற” என மனதில் பேசிக்கொண்டாள். ஏனென்றால் வள்ளியம்மை பார்த்து யாரும் இந்த கேள்வி கேட்க மாட்டார்கள். அவருக்கு நல்ல பருமனான உடல் அதை பார்த்து இப்படி சொன்னால் யாரும் அதிர்ச்சி தான் கொள்வார்கள்.
“ என்னப்பா பண்ண சொல்ற சொல் பேச்சு கேட்கறவங்கள நான் வளர்த்து இருந்தா கவலைப்படாம உடம்பை பார்க்க முடியும். ஆனா இங்க தான் கட்டுன புருஷன், பெத்த பசங்க, அவங்க பெத்து பசங்கனு யாருமே என் பேச்ச கேட்க மாட்டேங்குது. நம்ம சொல்றதுக்கு எதிரா தான் செஞ்சிட்டு இருக்குதுங்க” என்று பேத்தியை ஒரக்கண்ணால் பார்த்துக்கொண்டு மாறனிடம் சொன்னார் வள்ளியம்மை.
அதில் கோபம் கொண்டவள், “ இங்க பாரு வள்ளி யார் இப்ப உன் பேச்சு கேட்கலைன்னு சொல்ற எல்லாரும் உன் பேச்ச கேட்டு தலையாடுற தலையாட்டி பொம்மையா தான வச்சிருக்க” என்றாள் பொறுமலுடன்
“ ஏய் என்ன பேச்சி பேசுற. பாட்டிய பேர் சொல்லி கூப்பிடுவியா. அவங்க சொல்றதுல என்ன தப்பு இருக்கு. நீ இந்த அஞ்சு மாசமா யாராவது ஒருத்தர் சொல்ற பேச்சை கேட்டியா. எல்லாம் உன் இஷ்டம் தான. நம்ம குடும்ப மரியாதைய கொஞ்சமாவது யோசிச்சியா. இல்ல வீட்ல இருக்கிறவங்க பெரியவங்க உடம்பு தான் நினைச்சு பார்த்தியா.பெரிய மாமா நீ சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுறதால தான எல்லாரும் பேச்சையும் கேட்காமல் உன் இஷ்டம் போல இருக்க. உன்னால இப்ப பெரிய மாமாவுக்கு நடந்த அசிங்கத்துக்கு நீ என்ன பண்ண போற சொல்லு. கொஞ்சமாவது பெரியவங்க சொல்றத கேட்டு நடக்குறது இல்ல எப்ப பார்த்தாலும் சின்ன புள்ளைங்க மாதிரி விளையாண்டுக்கிட்டு எப்பதான் நீ பொறுப்பா நடப்ப வாய் திறந்து பதில் சொல்லு இனியா” என்றான் கோபமாக மாறன்.
“ அப்படி சொல்லு மாறா இவள கேள்வி கேட்குற ஒரே ஆள் நீ தான். நீ இல்லாம தான் இவ இஷ்டம் போல ரொம்ப ஆடுனா. என்ன பேச்சு பேசுனா தெரியுமா இப்ப பேசுறாளா பாரு. புடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி நிக்குறா பாரு பதில் சொல்லுடி மாமன் கேக்குறான் இல்ல” என
குதூகலமாக மேலும் அவனை ஏத்திவிட்டார் வள்ளியம்மை.
அதில் கடுப்புடன் வள்ளியம்மையை பார்த்துக் கொண்டு, “ என்ன இந்த வள்ளி ரொம்ப பேசுது. எல்லாம் இந்த மாமன் வந்த தைரியம் தான். இதை யாரு இப்போ இங்கு வர சொன்னது. பேசாம பாரின்ல இருந்து காலேஜ் ஸ்டுடென்ட்க்கு கிளாஸ் எடுக்க வேண்டியதுதானே. இன்னும் இதுக்கு நான் இவர்கிட்ட படிச்ச ஸ்டூடண்ட் நினைப்பு எப்ப பாரு குச்சி வச்சு விரட்டிக்கிட்டு” என வள்ளியம்மை மற்றும் மாறனை தனது மைண்டு வாய்ஸில் கழுவி ஊற்றிக் கொண்டே இருந்தாள் இனியா.
“ என்ன இனியா உன் மைண்ட் வாய்ஸ்ல பேசுனது போதும் இப்ப நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லு” என்றான் மாறன்.
“ மாமா அது அது” என அவனிடம் இருந்து தன்னை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஒவ்வொரு முகத்தையும் பார்த்தாள். முதலில் அவள் அன்னையின் முகத்தை பார்த்து இந்த அம்மா நம்மளை எப்ப ரெண்டு அடி போடலாம்னு பாக்குது இது வேஸ்ட்.நெக்ஸ்ட் பாட்டி என வள்ளியம்மையின் முகத்தை பார்க்க அவரோ இன்னும் சேர்த்து தீட்டு என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு இருந்தார். அதில் கடுப்பாகி அவர் அருகில் இருந்து பார்வதி பாட்டியின் முகத்தை பார்த்தால் அவரோ தான் ஏதாவது பேசினால் மகன் இன்னும் கொஞ்சம் அதிகமாக அவளை திட்டுவான் என்று அவள் முகத்தினை பார்க்காமல் தரையை பார்த்துக் கொண்டு இருந்தார். அடுத்ததாக சிவசாமி தாத்தாவின் முகத்தை பாவமாக பார்த்தாள் இனியா.
“ ஏன்டா வந்த உடனே பாப்பாவ திட்ற அவளே களைப்பா இருக்கா நீ உள்ளே போய் ரெஸ்ட் எடுமா” என அவளை உள்ள அனுப்ப பார்த்தார்.
அவரின் திட்டத்தை புரிந்து கொண்ட மாறன் “அப்பா என்ன பண்றீங்க நீங்க” என அவரை கோவமாக திட்ட வந்தான். அவரோ அதற்கு இடம் தராமல் “வந்த புள்ள கிட்ட என்னடா நிக்க வச்சு கேள்வி கேக்குற. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கடும் அதுக்கப்புறம் நீ என்ன வேணாலும் கேளு சிவகாமி என்ன அப்படியே பாத்துட்டு இருக்க போ பிள்ளைக்கு காப்பி தண்ணி கொண்டு வந்து கொடு” என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டே பேத்தியை ரூமுக்கு செல்லுமாறு கண் காட்டினார். அதை புரிந்து கொண்ட இனியாவும் தனது லக்கேஜை தூக்கிக்கொண்டு வேகமாக உள்ளே சென்று மறைந்தாள்.
இவர்களின் நாடகத்தைப் பார்த்துக் கொண்டு நின்ற மாறன் அவரை முறைத்து, “இங்க இருக்கிறவங்கதான் அவளுக்கு அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்கன்னா இதுல நீங்க வேற ஏன்பா இப்படி பண்றீங்க” என்றான் கடுப்புடன் மாறன்
அவன் சொல்வதில் உள்ள உண்மை சுட அனைவரும் அமைதியாக நின்றனர். “மாறா” என்று சத்தத்தில் எல்லோரும் திரும்பி பார்க்க மயில்வாகனார் உள்ளே இருந்து வெளியே வந்தார்.
“ மாறா வாப்பா எப்படி இருக்க” என்ன வந்து அவன் கை பிடித்துக் கொண்டார்.
“ நான் நல்லா இருக்கேன் மாமா நீங்க எப்படி இருக்கீங்க”
“ ஏதோ இருக்கேன் ப்பா” என்றவர் சிவசாமி பார்த்து, “வாங்க மச்சான்” என்று அவரை அணைத்து விட்டார். “ எப்படி இருக்கு பார்வதி” என தனது உடன்பிறப்பை பார்த்து கேட்டார் .
“ நான் நல்லா இருக்கேனா நீ ஏன் இப்படி இருக்க இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி இருக்க என் அண்ணன் எப்பவும் சிங்கம் மாதிரி இருக்கணும் அது எப்பவும் மாறக்கூடாதுனா. உடம்ப பாத்துக்க மாட்டியா என்றார் ஆதங்கமாக உடல் தளர்ந்து முகம் கருத்து சோர்வாக இருந்த அண்ணனினை பார்த்து
“ உன் அண்ணனுக்கும் வயசாகும் பார்வதி. சிங்கம் இப்ப கிழட்டு சிங்கமா மாறிட்டு அதனால இப்படித்தான் இருக்கும். பழகிக்க பார்வதி நாளைக்கு என்ன வேணாலும் நடக்கலாம்” என்றதும்
“ அண்ணா.. மாமா..மாப்பிள்ளை.. என்னங்க…” என்று தொடர்ந்து குரல் ஒலித்தது
“ ஏன் மாமா இப்படி எல்லாம் பேசுறீங்க நீங்க வாங்க உட்காருங்க” என்று அவரை அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்த மாறன் தன்னை சுற்றி வேதனையாக நின்றவர்களை பார்த்து “அத்தை போங்க போய் சாப்பிடு ரெடி பண்ணுங்க எனக்கு பசிக்குது அக்கா நீயும் போ அம்மாவையும் கூட்டிட்டு போ” என பெண்கள் அனைவரையும் சமையலறைக்கு அனுப்பி வைத்தான்.
அவர்கள் செல்லும் வரை அமைதியாக இருந்துவிட்டு, “மாமா ஓகேவா. இப்போ சொல்லுங்க மாமா எதுக்கு என்ன சீக்கிரமா கிளம்பி வர சொன்னிங்க.” என்றான் மாறன் மயில்வாகனார் கையைப் பிடித்துக் கொண்டு
ம் என பெருமூச்சு விட்டுக்கொண்டு, “உனக்கு தான் எல்லாம் தெரியும்ல மாறா.அந்த பையன் கூட நீ நல்லவன் சொன்னதினால் தானே சரின்னு பாக்க வர சொன்னேன்” என்றவரை மேலும் பேச விடாமல் இடையில் மறைத்து
“ மாமா பையன் ரொம்ப நல்ல பையன்தான் நம்ம இனியாவுக்கு ஏத்த ஜோடி தான். உண்மைய சொல்லணும்னா இனியா தான் அவனுக்கு மேட்ச் இல்ல. அத சொல்ல தெரியாம தான் அந்த அம்மா அப்படி பேசிட்டு, நம்ம எப்படி பையன பத்தி விசாரிப்போமோ அதை அவங்க பண்ணி இருப்பாங்க. நம்ம எப்படி நமக்கு சமமா வசதியான இடம் பாப்போமோ அப்படித்தான் அவங்களும் ஆசைப்பட்டு இருப்பாங்க நீங்க இனியா பேச்சைக் கேட்டு நம்ம வசதிய மறைச்சு இருக்க கூடாது மாமா அதுதான் அவங்க பார்வையில் இருந்து நம்ம கீழே போக காரணம். அந்த அம்மா ஒன்னும் கெட்டவங்க கிடையாது கொஞ்சம் கவுரவம் பாக்குறவங்க தான். இன்பாவால அவங்க அம்மாவ சமாளிக்க முடியும்.ஆனா இங்க பிரச்சனையே அமிழ்தினி அவன் தம்பிய தன்னோட குழந்தைக்கு அப்பான்னு சொன்னது தான் அந்தப் பையன் முழுக்க முழுக்க சிட்டில வளர்ந்த பையன். அவன் ஸ்கூல்,காலேஜ் எல்லாமே அங்க தான் ஆனா நம்ம அமிழ்தினி கிராமத்தில் வளர்ந்த பொண்ணு அவ காலேஜ் கூட இங்க தான் படிச்சா அப்படி இருக்கும்போது அந்த பையன எப்படி மீட் பண்ண முடியும். அந்தப் பையன் ஒன்னும் அப்படிப்பட்டவன் கிடையாது. இவ்வளவு பெரிய தப்பு பண்ண நம்ம அமிழ்தினிக்கும் தைரியம் கிடையாது.இதுல வேற ஏதோ நடந்திருக்கு மாமா” என்றான் தான் விசாரித்து தெரிந்து கொண்டதை வைத்து மாறன்.
“ நீ சொல்றதும் கரெக்ட் தான் மாறா அமிழ்தினி இத பண்ணி இருப்பான்னு எனக்கும் நம்பிக்கை இல்லை. இதுல வேற யாரோ இருக்காங்க யாரோ என்ன என் சின்ன மருமக பிரபாவதி தான் இருப்பானு தோணுது ஒன்னு அவ சொல்லி இது நடக்கணும் இல்ல அவ சம்பந்தப்பட்டவங்களால இது நடக்கணும்” என்றார் குழப்பமாக மயில்வாகனார்.
“ மாப்பிள்ளை நீங்க யாரை சொல்றீங்க அவங்களையா ஆனா அவங்களுக்கும் நமக்கு தான் இப்போ சம்பந்தமே இல்லையே” என்றார் இதுவரை அமைதியாக கேட்டுக்கொண்டு இருந்த சிவசாமி.
“ தெரியல மச்சான் ஆனா அவங்கள பத்தி கண்டிப்பா விசாரிக்கணும் அதோட நம்ம பையனுக்கு பார்த்த பொண்ணு இப்போ பைத்தியமா இருக்கு. எனக்கு என்னவோ 25 வருடங்களுக்கு முன்னால் நடந்ததுக்கு இப்ப பதில் சொல்ல போறோம்ன்னு தோணுது” என்றார் எதையோ நினைத்துக் கொண்டு மயில்வாகனார்.
பின்பு, “ஆங் கேக்க மறந்துட்டேன் அந்த பையன் கிட்ட சொல்ல சொன்னது சொல்லிட்டியா மாறா”
“ அது எல்லாம் நல்ல உரைக்கிற மாதிரி சொல்லிட்டு தான் வந்தேன் மாமா”
“ உங்களுக்கு எப்படி அவன் குழப்பத்துல தான் இருப்பான் தோணுச்சு மாமா”
“ அந்த பையன் இனியாவ உண்மையா லவ் பண்றான் இப்போ இந்த பிரச்சனை எப்படி சரி பண்றதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருப்பான் பாவம் அவனுக்கு யோசனை சொல்லித்தர யார் இருக்கா அவன் தான் எல்லாத்தையும் பாக்கணும். அவனும் எனக்கு ஒரு பேரன் தான அதான் உன்ன பேச சொன்னேன். இனி அவன் இதுக்கு வழி கண்டுபிடிச்சிருவான். சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணனும்.அமிழ்தினிக்கு வேற ஆறாவது மாசம் தொடங்க போகுது. அடுத்த மாசம் வளைகாப்பு போடணும் அதுக்குள்ள எல்லாத்தையும் முடிவுக்கு கொண்டு வரணும்” என்றார் பெருமூச்சியுடன் மயில்வாகனார்.
@@@@@@@@@@@@@
தனது ஆபீஸ் கேபினில் உள்ள இருக்கையில் அமர்ந்து கன்னதை இரு கைகளால் தாங்கி அதனை டேபிள் மேல் வைத்து சோகமாக அமர்ந்திருந்தான் இன்பா.அவன் அருகில்,
“அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே”
என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் தீபக்.
“ என்ன மச்சான் உன் மூஞ்ச சுத்தி ஒரு ஒளிவட்டம் தெரியுது ரொம்ப ஜாலி மூட்டுல இருக்க போல” என்றான் நக்கலாக
அதில் அவனை கடுமையாக முறைத்து விட்டு, “ ஆமா ரொம்ப ஜாலி மூடுல தான் இருக்கேன் வரியா பார்ட்டி பண்ணலாம்” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.
“ இல்ல மச்சி ஆபீஸ்ல அதெல்லாம் பண்ண கூடாது நீ தனியா என்ஜாய் பண்ணு நான் வரேன்” என்று அவன் கோபத்தை பார்த்து கழண்டு
கொள்ள நினைத்து திரும்பி கதவை நோக்கி அடி எடுத்து வைக்க
அதற்குள் வந்து அவன் கையை பிடித்துக்கொண்டு, “இல்ல மச்சி நீ இல்லாம எப்படா நான் தனியா என்ஜோய் பண்ணியிருக்கேன். உனக்கு சேர்த்து நான் லீவு சொல்லிட்டேன். நீ வா நம்ம ரெண்டு பேரும் போகலாம் “ என அவனை இழுத்துக் கொண்டு அருகில் இருந்த ரெஸ்டாரண்ட் நோக்கி நடந்தான் இன்பா.
“ மச்சி நான் என்ன சொல்ல வரேன்னா”
“ நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் என்கூட வந்தா மட்டும் போதும் வா” என்று அவனை இழுத்துக்கொண்டு அந்த ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்து ஒரு கார்னரில் உள்ள இருக்கையில் அமர்ந்தான்.
அதுவரை அவனிடம் விளையாடி கொண்டு இருந்த தீபக் சீரியஸ் முடுக்குமாறி “என்னடா ஆச்சு இப்ப சொல்லுடா” என்றான்.
“ அமிய அவங்க மாமா வந்து கூட்டிட்டு போய்ட்டார்டா”
“ என்னடா சொல்ற அவர் பாரின்ல தானே இருந்தார் எப்போ இந்தியா வந்தாரு” என்றான் குழப்பமாக தீபக்
“ அது வந்து தான்டா” என அவன் சொல்ல ஆரம்பித்த அதே வேலையில் தனது அறைக்கு வந்த இனியாவும் ஐந்து மாதத்திற்கு பிறகு வந்ததால் ரூமினை சுற்றிப் பார்த்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து ஒரு பெருமூச்சுடன் காலையில் நடந்ததை நினைத்து பார்த்தாள்.
error: Content is protected !!