Skip to content
Post Views: 6,218
அத்தியாயம் 30:
ஒரு வருடத்திற்கு முன்பு பீனிக்ஸ் மாலில் பிரென்ஸோடு சுற்றிவிட்டு வெளியில் வந்த சந்தியா , ரோட்டில் கூட்டமாக இருந்ததை பார்த்து விட்டு அங்கு சென்றாள்.
அங்கு ஒருவன் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தான். ஹை ஸ்பீட் கேடிஎம் பைக்கில் வந்து விழுந்திருப்பான் போலும். ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்தனரே யாரும் அவன் அருகில் செல்லவே இல்லை. ஆம்புலன்சுக்கு கால் செய்துவிட்டதாக பேசி கொண்டிருந்தனர்.
ஹெல்மெட் கூட அணியாமல் வந்திருப்பான் போலும். உடல் முழுவதுமே நல்ல அடி. தலையில் இடது பக்கம் ரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. கை கால்களில் பிராக்ச்சரும் இருப்பதாக தெரிந்தது.
Advertisement
சந்தியாவின் தோழிகள் வாடி சென்றுவிடலாம் என்று சந்தியாவை அழைத்தும் அவள் செல்லவில்லை. தலையில் ரத்தம் வெளியேறி கொண்டிருந்ததை நிறுத்தாவிட்டால் கண்டிப்பாக உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சந்தியா மூளைக்கு புரிந்தது.
என்எஸ்எஸ் கேம்பில் இருந்ததால் சில முதலுதவிகள் அவளுக்கு தெரியும். அதனால் தைரியமாக அவன் அருகே சென்று அணிந்திருந்த காட்டன் துப்பட்டாவை எடுத்து ரத்தம் வெளியேறி கொண்டிருந்த அவன் தலையில் இறுக்கி கட்டினாள். ரத்தம் வெளியேறுவது நிற்காவிட்டாலும் குறையவாவது செய்யட்டும் என்று அவ்வாறு செய்தாள். பிறகு அவன் தலையை மட்டும் தூக்கி அவளின் பேக் பேகின் மேல் உயரமாக இருக்குமாறு வைத்தாள்.
இவ்வளவுக்கும் அந்த அடிபட்டவன் மயக்க நிலைக்கு செல்லாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான். ஆம்புலன்ஸ் வந்ததும் அவனை ஏற்ற செல்லும் போது அவன் சந்தியாவின் கையை இறுக்கி பிடித்து கொண்டு அம்மா அம்மா என்று அவள் முகத்தை பார்த்து சொல்லி கொண்டிருந்தான்.
Advertisement
சந்தியா அவள் கையை அவன் கையிலிருந்து பிரித்தாலும் விடாமல் போகாத என்று மெதுவாக உச்சரித்து கொண்டிருந்தான். சரி என்னவானாலும் பரவாயில்லை என்று தோழிகளிடம் சொல்லிவிட்டு அவளும் வேனில் ஏறி விட்டாள்.
Advertisement
பிறகு ஹாஸ்ப்பிட்டல் செல்லும் வழி யாவும் அவன் கையை பிடித்து கொண்டு காதில் உங்களுக்கு ஒன்னும் ஆகாது, கவலை படாதீங்க என்று பேசி கொண்டே வந்தாள்.
ஹாஸ்ப்பிட்டல் வந்து உள்ளே செல்லும் போதும் அவளை பார்த்து கொண்டே சென்றான். அங்கு அவனுக்கு மேஜர் சர்ஜரி செய்ய வேண்டும், ரிலேஷன் சைன் வேண்டும், பெரிய அளவு தொகை உடனடியாக கட்ட வேண்டும் என்றெல்லாம் சொன்னதால் என்ன செய்வது என்று தெரியாமல், அவனின் மனைவி தான் தான் என்று கூறி சைன் போட்டு, வீட்டில் சொல்லியிருக்கிறேன் பணத்தோடு வந்துவிடுவார்கள், நீங்கள் முதலில் சர்ஜரி செய்யுங்கள் என்று அவள் கையிலிருந்த கார்டில் இருந்த சிறு தொகையை மட்டும் அட்வான்ஸாக கட்டி ஆபரேசன் செய்ய சொல்லி எப்படியோ ஏற்பாடு செய்து விட்டாள்.
அவன் பாக்கெட்டில் இருந்து உடமைகளை எடுத்து வந்து கொடுக்கும் போது அதில் விசிட்டிங் கார்டும் மொபைல் போனும் இருந்தது. ஏதோ பணக்காரனாக இருப்பான் போலும் அடிபட்டவன். விசிட்டிங் கார்டில் இருந்த நம்பருக்கு அவள் கால் செய்து விவரத்தை கூறியவுடன் ஒரு இருபது நிமிடத்தில் அவன் பீஏ போல் ஒருவர் வந்துவிட்டார்.
Advertisement
அவர் வந்து பொறுப்பெடுத்து கொண்டு அவளுக்கு நன்றி கூறி அவள் கட்டிய பணத்தையும் கொடுத்து விட்டதால் சந்தியாவும் கிளம்பிவிட்டாள்.
ஒரு வாரம் வரையிலும் அந்த சம்பவம் மனதில் இருந்தது. பிறகு மறந்தே விட்டது. ஆனால் அதை பெரிதாக நியாபகத்தில் வைத்து கொண்டு இப்படி இவன் வந்து நிற்பான் என்று சந்தியா நினைக்கவே இல்லை.
உசுர காப்பாத்துனது ஒரு குத்தமாடா என்று மனதில் நினைத்து கொண்டவள் அவனிடம் “ஓ நீங்கதானா அது. அன்னைக்கு எனக்கு ஒன்னும் புரியல. நிறைய சினிமால அப்படித்தான் பொய் சொல்லி ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் பாக்க வைப்பாங்க. அந்த நினைப்புல நானும் அத மாதிரி பண்ணிட்டேன். அதுக்காக இப்ப வந்து நின்னுட்டு புருஷன்கிறீங்க” என்று கோபப்பட்டால் எதிரில் நின்றவனிடம்.
அதற்கு அவளை பார்த்து சிரித்தவன் “உனக்கு வேணுன்னா அது சாதாரண விஷயமா இருக்கலாம் டாலி . எனக்கு அப்படி கிடையாது. எங்க அம்மா இறந்த நேரம். எனக்குன்னு உலகத்துல இருந்த ஒரே ஜீவன். அவங்க போய்ட்டாங்க அப்படீன்ற விரக்திலயும், எங்க அப்பான்னு ஒருத்தன் இருக்கானே அவன் மேல உள்ள கோபத்திலையும் பைக் எடுத்துட்டு வந்து லாரில மோதி விழுந்துட்டேன்.
இனிமே இந்த உலகத்துல இருக்க வேண்டாம்ன்னு நா நினைச்சிக்கிட்டே அடிபட்டு ரோட்ல கிடந்த நேரத்தில நீ என் எதிர்ல வந்து தேவதை மாதிரி எல்லாம் பண்ண. உண்மையிலேயே நா செத்து சொர்க்கத்துக்கு போய்ட்டேன். நீ தேவதைன்னு நினைச்சிதான் உன் கைய இறுக்கி பிடிச்சிக்கிட்டேன்.
அதுக்கு பிறகு ஹாஸ்ப்பிட்டல்ல எனக்கு நினைவு வர்ற மூணு நாள் ஆச்சி. நா நல்லா எழுந்து நடமாட மூணு மாசம் ஆச்சி. அதுக்கு பிறகு வாழ்க்கைல உன்ன தேடிட்டேதான் இருந்தேன் டாலி. ஒரு வழியா பேங்க்ளூர்ல உன் அட்ரஸ் கண்டுபிடிச்சி வந்தா, நீ ஊரையே காலி பண்ணிட்டு வந்துட்ட.
அப்புறம் அந்த ஸ்ரீதர் குடும்பம் மூலமா நீ இந்த ஊருக்கு வந்துருக்கன்னு மட்டும்தான் எனக்கு தெரிய வந்தது. எக்ஸ்சாக்ட்டா உன் ஊர் அட்ரஸ் தெரியல. உனக்கு ஒன்னு தெரியுமா. நீ இந்த ஊர்ல இருக்கேன்ற ஒரே காரணத்துக்காகத்தான் பிடிக்காத என் அப்பன்கிட்ட போய், நா இந்த ஊருக்கு போய் பிசினஸ் பாத்துக்கிறேன்னு கேக்க வேண்டியதா போயிடுச்சி. ஆனா அந்த ஆளு பிசினஸ் மூலமாத்தான் என்னால் உன்ன பாக்க முடிஞ்சது. என்ன பெத்ததுக்கு எங்க அப்பன் மூலமா எனக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் இதுதான். சரி இந்த நல்ல நேரத்துல எதுக்கு அவன பத்தி பேசிக்கிட்டு.
நீ சொல்லு டாலி. நா விசாரிச்சேன். எதோ சொந்தத்துல ரெண்டாம் தாரமா உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன், நீ இப்பவே என்கூட வந்துடு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றதும் சந்தியா அவனை ஏற இறங்க பார்த்தாள்.
ஆள் நல்லாத்தான் இருக்கான். ஆனா அந்த ஆக்சிடன்ட்ல மூளைல அடிபட்டு பைத்தியமாயிட்டானோ என்று நினைத்தவள் “இங்க பாருங்க. லூசுத்தனமா பேசாதீங்க. யாரும் எனக்கு இஷ்டம் இல்லாமெல்லாம் கல்யாணம் பண்ணி வைக்கல. எதோ உங்கள காப்பாத்துனதுக்கு வந்து ஒரு நன்றி சொல்லிட்டு போவீங்களா. அத விட்டுட்டு உங்க கூடவே வந்துடுன்னு கூப்புடறீங்க”
“டாலி. என்ன தாலி செண்டிமெண்ட் பாக்குறியா. இல்ல அந்த பட்டி காட்டான் உன்ன ஏதும் பண்ணிட்டானா. நானும் பாரின்ல நிறைய பொண்ணுங்களோட படுக்கை அறைவரை போயிருக்கேன். ஆனா என்னைக்கு உன்ன பாத்தேனோ அன்னையில இருந்து நீ மட்டும்தான் எனக்கு. அதனால கற்பு அது இதுன்னு யோசிக்காத. எனக்கு அத பத்தில்லாம் கவலை இல்ல. எனக்கு நீ மட்டும் தான் முக்கியம். நீ எப்படி இருந்தாலும் தேவதைதான். வா உன்ன அழைச்சுட்டு போய்டறேன்” என்று அவன் கூறியதும் சந்தியாவிற்கு ஏகப்பட்ட கோபம். இவ்வளவு நேரம் அவனிடம் பொறுமையாக மரியாதையாக பேசியவள், இப்பொழுது மரியாதையை கை விட்டு
“ஹே யாரை பாத்து பட்டி காட்டான்னு சொல்ற. இந்த சின்ன வயசுல விவசாயத்துல என் மாமா பண்ணிட்டுருக்க புரட்சி தெரியுமா உனக்கு. விவசாய நிலத்தை அடிச்சி புடுங்கிற நீங்க மாடர்ன் யூத். அந்த விவசாயத்தை காப்பாத்த பாடுபட்டு சோறு போட்ற என் மாமா பட்டி காட்டானா. நீ லாஸ்ட்டா கேட்டுக்க. என் மாமா எனக்கு ரெண்டாம்தாரம்ன்னு பேர் வந்துடும்ன்னு என்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னுதான் சொன்னாரு. ஆனா நா என் மாமாவை உருகி உருகி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவருதான் என் உலகமே” என்றவள் கூறியதை கேட்டதும் அந்த தீபனுக்கு முகம் பயங்கரமாக மாறியது.
“என்ன. இங்க ஒரு வருசமா உன்ன நா என் சுவாசமா நினைச்சி வாழ்ந்துட்டருக்கேன். உனக்கு அவன்தான் பெருசா போய்ட்டானா டாலி. அப்ப நீயும் நல்லா கேட்டுக்க. அவன் உயிரோட இருந்தாதான நீ என்கூட வரமாட்ட. அவனை கொன்னுட்டு உன்ன கூட்டிட்டு போறேன்” என்று அவன் கூறியதும் சந்தியாவிற்கு வயிறெல்லாம் காலியான உணர்வு. ஆனால் அதை வெளியில் காட்டாமல்
“என் மாமா எங்க போனாலும் நானும் அவர்கூடத்தான் போவேன். உன் கூட வருவேன்னு கனவுலையும் நினைக்காத” என்றுவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
பின்னாடியே தீபன் “உனக்கு புடிச்சாலும் புடிக்கலைன்னாலும் உன் வாழ்க்கை என் கூடத்தான் டாலி” என்று கத்தினான். பிறகு அவன் காரின் முன் கண்ணாடியை கைகளாலேயே நொறுக்கினான்.
அதை திரும்பி பார்த்து கொண்டிருந்த கௌரி “என்னடி இவன் சரியான கிறுக்கனா இருக்கான். பயமா இருக்குடி அண்ணி” என்றாள்.
அவனை கண்ணாடி வழியாக பார்த்து கொண்டிருந்த சந்தியாவிற்கும் பயம்தான். ஆனாலும் சந்தியாவிடம் “நா மாமாட்ட பேசிக்கிறேன் கௌரி. நீ ஏதும் சொல்ல வேண்டாம்” என்றவளுக்கு உள்ளுக்குள் நடுக்கமே.
எப்பொழுதும் மாலையில் சிறிது நேரம் விளையாடிவிட்டு படிக்க செல்வார்கள் கௌரியும் சந்தியாவும். இங்கு வந்ததிலிருந்து அருணையும் சேர்த்து கொண்டாள் சந்தியா. அவனுக்கு அரியர் இருப்பதால் அவனையும் விடாமல் இழுத்துக்கொண்டுதான் படிக்க அமர்வாள்.
ஆதியும் இரண்டு நாளாக இரவு ஏழு மணிக்குத்தான் வீட்டுக்கு வருகிறான். அதற்கு பிறகும் படித்துவிட்டு ஒன்பது மணிக்குத்தான் ரூமிற்க்கு சென்றாள் நேற்று. ஆதியும் படித்துவிட்டு வந்தவளை தொந்திரவு செய்யாமல் தூங்க சொல்லிவிட்டான். இன்று வீட்டிற்கு வந்ததிலிருந்து தலைவலி என்று சிவகாமியிடம் கூறியவள் ரூமிற்க்குள்ளேயே இருந்தாள்.
சிவகாமியும் மருமகளை தொந்திரவு செய்யாமல் காபியை போட்டு கௌரியிடம் கொடுத்தனுப்பினார். சித்ராவும் சுந்தரமும் அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.
கௌரி மட்டும் இங்கேயே தங்கிவிட்டாள். இப்பொழுது தன அண்ணனின் ரூமிற்க்கு காபி எடுத்து வந்தவள் பெட்டில் படுத்திருந்த சந்தியாவை பார்த்து “அண்ணாக்கு கால் பண்ணியா சந்தியா” என்றாள்.
“ம் பண்ணிட்டேன் கௌரி. இன்னும் கொஞ்ச நேரத்துல வரேன்னு சொன்னாங்க”
“ஏண்டி அண்ணி. நா வேணுன்னா அப்பாட்டையும் பெரியப்பாட்டையும் அந்த தீபனை பத்தி சொல்லவா”
“சும்மா இரு கௌரி. எல்லாரையும் பயமுறுத்தாத”
“உண்மைய சொல்லு சந்தியா. உனக்கு பயமா இல்லையா”
“ம் பயப்பட கூடாதுன்னு எனக்கு நானே சொல்லிட்டே இருந்தா கூட, அந்த தீபனோட பார்வை என்னை பயமுறுத்துது டி” என்று சந்தியா கூறி கொண்டிருக்கும் போதே ஆதியின் புல்லட் சவுண்ட் கேட்டது.
“சரி டி அண்ணி. நீ அண்ணாகிட்ட பேசு” என்றுவிட்டு கீழே சென்றாள் கௌரி.
ஆதி உள்ளே வந்தவன் எதிரே வந்த சிவகாமியிடம் “சந்தியா எங்கம்மா. அவ வாய்ஸ் ஒரு மாதிரி இருந்துச்சி. என்னாச்சு அவளுக்கு” என்று கேட்டான்.
“ஆமாப்பா. புள்ள வரும்போதே சுணக்கமாதேன் வந்துச்சி. தலைவலின்னு போய் படுத்திருக்கு”
“சரிம்மா. நா போய் அவளை பாக்கிறேன்” என்று மேலே சென்றான்.
அங்கே சந்தியா கட்டிலில் அமர்ந்து எதோ யோசனையில் இருந்தாள்.
“என்ன பொம்மு. தலைவலிக்குது படுத்திருப்பீங்கன்னு பாத்தா பலத்த யோசனையில் இருக்கீங்க” என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் அமர்ந்தவனின் மடியில் ஏறி அவனை கட்டி கொண்டாள் சந்தியா.
“மாமா கசகசன்னு வேர்வைல இருக்கேன். போய் குளிச்சிட்டு வரேன் டி பொம்மு” என்று ஆதி கூறியும் விடாமல் அவனை இறுக்கி கொண்டு அவன் மேல் இழைந்தாள்.
“என்னடி பொம்மு. இன்னைக்கு மேடம் நல்ல மூட்ல இருக்கீங்க போல. அப்புறம் எதாவது நடந்ததுன்னா நா பொறுப்பில்லை” என்றவனின் சட்டை பட்டனை அவளே கழட்டினாள். அவள் கைகளை பிடித்து நிறுத்தியவன் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களுக்குள் பார்த்து “என்னடி ஆச்சி உனக்கு. நாளைக்கு காலேஜ்” என்றவனை முடிக்க விடாமல் கழுத்துக்கடியில் அவன் முகத்தை புதைத்து கொண்டாள்.
அதற்கு மேல் ஆதியாலும் தாங்கி கொள்ள முடியவில்லை. வழக்கம் போல் சுனாமியாக அவளை சுருட்டி கொண்டான். ஆனால் எல்லாம் முடிந்த பிறகும் ஆதியை விலக விடவே இல்லை சந்தியா. திரும்ப திரும்ப அவனை தேடினாள் . தன்னுள் தேட வைத்தாள்.
ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் அவள் தூங்கியவுடன்தான் எழுந்து அமர்ந்த ஆதி குளித்துவிட்டு கீழே போய் கௌரியை விசாரித்தான்.
“இன்னைக்கு என்ன நடந்தது கௌரி. ஏன் சந்தியா வித்தியாசமா இருக்கா”
“அவ உங்ககிட்ட எதும் சொல்லலையா அண்ணா” என்றவள் தீபன் அவர்களை நிறுத்தியது முதல் பேசிய அனைத்தையும் கூறினாள்.
“அவன் பேச்சு, பார்வை எதுமே சரியில்லண்ணா. பைத்தியம் மாதிரி இருக்கான். ஆனா நம்ம சந்தியா மேலையும் பைத்தியமா இருக்கான்” என்றதும்
“சரிடா. இதப்பத்தி வேற யார்ட்டயும் சொல்ல வேண்டாம். நாளைக்கு நானே உங்கள காலேஜ்க்கு கூட்டிட்டு போறேன்” என்றவன் சாப்பிட்டுவிட்டு சந்தியா தூங்குவதாக சொல்லி அவளுக்கும் டிஃபனை அறைக்கு எடுத்து சென்றான்.
ஒரு மணிநேரம் அவளை தூங்கவிட்டவன் பிறகு அவளை எழுப்பி சாப்பிட வைத்தான்.
சாப்பிட்டு முடித்ததும் “என்ன ஆச்சு பொம்மு. எவனோ ஒரு பைத்தியக்காரன் வந்து பேசுனா, நீ இவ்ளோ பயந்துக்கணுமா. எவ்ளோ தைரியமான பொண்ணு நீ” என்றான்.
அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள், கௌரியிடம் விசாரித்திருப்பான் என்று ஊகித்து கொண்டு “மூளையுள்ளவன சமாளிக்கலாம் மாமா. இவன என்ன பண்றது. நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சிடுவானோன்னு பயமா இருக்கு” என்றாள் .
“மாமா இருக்கேன்ல. எதுக்கு பயப்படற. அவன் பிரச்சனை முடியிற வரை, இனிமே கொஞ்ச நாள் நானே உங்கள காலேஜ்ல கொண்டுவந்து விட்டு அழைச்சிட்டு வர்றேன். காலேஜ்லயும் இன்ஃபார்ம் பண்ணிடலாம். நம்ம ஊர் பசங்க நிறைய பேர் காலேஜ்ல இருக்காங்க. எல்லாரும் உன்ன பாத்துப்பாங்க”
“மாமா… அவனால எனக்கு எந்த பிரச்னையும் வராது. அவன் என்ன எதுவும் பண்ண மாட்டான். நா பயப்படறது அவன் உங்கள ஏதாவது பண்ணிடுவானோன்னுதான்”
“அட பொம்முக்குட்டி. என்னை நா பாத்துப்பேன் டி. மாமா என்ன அவ்ளோ வீக்காவா இருக்கேன். மாமா கூட பத்து நாள் இருந்தும் மாமா பலத்தை பத்தி உனக்கு தெரியலையே” என்று அவளை வன்மையாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தான்.
error: Content is protected !!