Skip to content
Post Views: 2,522
அதெல்லாம் எனக்கு தெரியாது.எனக்கு பார்கவி வேணும்.
அடிச்சு பல்ல கழட்டிருவேன் ராஸ்கல். வயசு பையன்னு பார்க்கிறேன். இல்லன்னா நடக்கிறதே வேற என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே. வாசலில் நிழல் தெரிய அம்மாவும் , மகனும் திரும்பி பார்க்க.
ஆண்டவர் கனி வாசலில் நின்று இருந்தான். இவர்கள் பேசியதை கேட்டிருந்தவன். பெரியசாமியின் பிடிவாத குணம் அறிந்தவன்.
அவனிடம் சென்று உனக்கு உண்மையாகவே பார்கவியை பிடிச்சுருக்க.
Advertisement
ஆமாம் அண்ணா. எனக்கு அவளை ரொம்ப பிடிச்சுருக்கு. கல்யாணம் ஒன்னு நடந்த அது பார்கவி கூடத்தான்.
Advertisement
சரி நீ போ. நான் பாத்துக்கிறேன் என்றவன் யோகாவை பார்க்க.
Advertisement
தான் பெறாத பிள்ளையை கண் கலங்கி பார்த்து இருந்தார் யோகா.
Advertisement
சித்தி என்றவன் அருகில் வர.
அவன் பேசுறது சரியா.இது தப்பு, உனக்குன்னு பார்த்த பொண்ணை.
இப்ப என்ன சித்தி பேசிதான வச்சோம்.நிச்சயம் ஒன்னும்
பண்ணலயே. எல்லோரும் கிட்டையும் பேசி .நல்ல படியா முதல்ல பெரியசாமிக்கு, பார்கவிக்கும் கல்யாணம் பண்ணுவோம்.அப்புறம் எனக்கு பார்ப்போம்.
அது இல்லப்பா. என் அக்கா கிட்ட நான் எப்படி சொல்லுவேன்.
நான் பாத்துக்கிறேன் சித்தி.
யோகா ஆண்டவர் கனியின் கையை பிடித்தவர். உனக்கு ஒரு நல்லது நடக்க மாட்டேங்குதே.நீ வேணா பாரு உன் மனசு கேத்த மாதிரி நல்ல பொண்ண அமையும்.
ஆண்டவர் கனி அனைவரிடமும் பெரியசாமியின் கல்யாணத்தை பத்தி பேச.
முதலில் எல்லோரும் திட்டினார்கள், புலம்பினார்கள். பின்பு நம்ம வீட்டுக்கு தானே வருவா. என்று மனதை தேற்ற.
பார்கவியைக்கும், பெரியசாமிக்கும் வைகாசியில் திருமணம் என்று முடிவானது.
இலங்கையில் உள்ள ஆதிநாராயணனுக்கு விசயத்தை தெரியப்படுத்த முதலில் அதிர்ச்சியானவர் பின்பு சரி மச்சான் உங்க இளைய மகன் தானே என்று சரி என்றார்.
நாளை விருதுநகர் பங்குனி பொங்கலும் கொடியேற்றம் என்று இருக்க.
மேலூருக்கு காரர்கள் என்று ஆண்டவருக்கு கோவிலில் நிறைய வேலைகள் இருந்தது.
அதேமாதிரி கீலூர் ஆட்கள் என்று ஸ்ரீஜெயமிற்கு அதிக வேலைகள் இருந்தன.
இருஊர் ஆட்களும், பக்கத்தில் உள்ள சின்ன ஊர்க்காரர்களும் சேர்ந்து நடந்தும் திருவிழா.
ஆண்டவர் கனிக்கு தினமும் அதிகாலை வாக்கிங் செல்லும் பழக்கம் உள்ளது. அவன் வாக்கிங் சென்று வரும் வழியில். அவனின் நண்பன் செந்தில் டி கடை நின்று இருந்தான் . செந்திலை பார்த்து நீண்ட நாள்களாக நண்பனிடம் சென்று பழைய கதைகள் எல்லாம் பேசிக்கொண்டு இருந்தனர். நாளைக்கு நீ ரொம்ப பிசியாக இருப்ப இல்லாடா கனி.
அப்படி எல்லாம் இல்லாடா .அது , அதுக்கு ஆள் சொல்லிட்டேன்.சரியா நடக்குதா என்று மட்டும் பார்ப்பேன். அப்படியே இருந்தாலும் நமக்குன்னு சில வேலைகள் இருக்குல என்று இரு நண்பர்கள் பேசிக்கொண்டு
இருக்க. தூரத்தில் திவ்யா அரிய நாச்சி வாக்கிங் வந்து கொண்டு இருப்பதை பார்த்தவன். அவள் பார்க்கதவாரு திரும்பி நின்று கொண்டான்.
திவ்யா ஆண்டவர் கனியை பார்த்து விட்டு அவனிடம் வந்தவள் ஹாய் சார் என்று பேச.
இவளை பார்க்க கூடாதென்று திரும்பி நிற்க. அவளே வந்து பேச. விட மாட்டா போலயே என்றவன் திரும்பி பார்த்து முறைக்க.
குட் மார்னிங் சார் என்றவள். பக்கத்தில் இருந்த செந்திலுக்கும் குட் மார்னிங் சொல்ல. செந்தில் குட் மார்னிங் மா என்றான். ஆண்டவர் அமைதியாக இருக்க.
திவ்யா என்ன குடிக்குறீங்க எனக்கும் சொல்லுங்க தொண்டை வரண்டு போச்சு என்று கேட்க.
டி கடைகாரர் என்னம்மா குடிக்குறீங்க. காபி , டி , முருக்ககீரை சூப் என்று கேட்க. ஒரு சூப் குடுங்க என்று வாங்கி குடித்தவள். டி கடை காரரிடம் சூப் நல்ல இருக்கு அண்ணா என்றவள்.
ஆண்டவர் கனியை பார்க்க அவன் அமைதியாக நின்றான் மௌன விரதம் போல.செந்தில் எந்த ஊருமா நீ என்று கேட்க. அவனிடம் அவளை பத்தி ஓர் அளவுக்கு சொன்னவள். பாய் பிரதர்ஸ் டைம் ஆச்சு,
ஆண்டவர் கனியை பார்த்து சூப்புக்கு காசு குடுத்துடுங்க. என்கிட்ட காசு இல்லை என்றவள். நான் உங்களுக்கு அப்பறமா ஏதாவது வாங்கி தர்ரேன் பாய் சார் என்றவள் கிளம்பிவிட்டாள்.
திவ்யாவின் கள்ளம் இல்லா பேச்சு செந்திலுக்கு பிடித்துவிட.ஆண்டவர் கனியிடம் யார் வீட்டு பொண்ணுடா.
உம் என்றவன். பின்னாடி பாரு.
ஸ்ரீஜெயம் ஒருவரிடம் பேசிக்கொண்டு வந்தவரை கண் காண்பிக்க.
இவங்க வீட்டு பொண்ணா. அதுதான் நீ பேசமா இருந்தியா.
ஆமாம் .
எப்படிடா என்றான் செந்தில்.
பஸ்சில் நடந்ததை சொல்ல.
டேய் உனக்கு இந்தன வருஷம் கழிச்சு பெல் அடிச்சுருக்கு போல.அதுவும் உன் பஸ்சுலே. சீட்டு பின்னாடி ஏதாவது லலலலல பாட்டு கேட்டுச்ச.
டேய் அடி வாங்குவ. இவ்வளவு வருஷம் கழிச்சு ஒனக்கு பீலிங்சு அதுவும் ஆப்போசிட் ஆலுக்க பொண்ணு மேல சூப்பர்டா. பிடிச்சுருந்த பேசி கல்யாணம் பண்ணிங்க வேண்டியது தானே. இல்லன்னா சொல்லு தூக்கிறுவோம்.
ஆண்டவர் எல்லா விசயமும் உனக்கு தெரிஞ்சும் ஏன்டா இப்படி பேசுற.சில விசயம் மாறாதுடா. மாத்தவும் கூடாது.அப்படியே விடு என்றவன். கோயில் கொடியேற்றதிற்கு வந்துரு என்று
இருவரும் பேசி முடித்து கிளப்பினார்கள்.
சாயங்காலம் 5.30 மணிக்கு இன்று மேல் ஊர்க்காரர்கள் எடுத்து நடந்தும் பொங்கல் விழா. இன்றைக்கு கோவிலில் நடக்கும் எல்லா செலவு மேலூர் ஊர்க்காரர்கள் பொறுப்பு. அவர்களின் முறைப்படி அம்மனுக்கு மேல் ஊர் காரர்களின் வீட்டு பெண் பிள்ளைகள் மஞ்ச பால் எடுத்து செல்வது வழக்கம். பிறகு மேலூர் பெரிய வீட்டுக்காரர்கள் ஆண்டவர் கனி வீட்டில் இருந்து அம்மனுக்கு சாத்த பட்டு புடவை, அன்றைக்கு நடக்கும் அபிஷேக பொருள் அனைத்து எடுத்து ரெடியாக இருக்க.
மேல் ஊர்க்காரர்களை அழைத்து செல்ல கோவிலில் இருந்து ஆலி பொம்மை மேளத்தோடு வந்தது.
ஆலி பொம்மை என்பது மூங்கிலாலும் காகித அட்டைகளாலும் வண்ணம் தீட்டிய பெரிய உருவ பொம்மை ஒருவர் பொம்மையின் உள்யிருந்து ஆடுவார்கள். மேலூர்காரர்களை மேள தாளத்துடன் கோயிலில் உள்ளே வர. அங்கே அனைத்து ஊர்க்காரர்களும் இருந்தனர்.கொடியேற்றதை பார்க்கவென்று.
அம்மனுக்கு அபிஷேகம் செய்து . தீபாரதனை நடந்து முடிந்தவுடன்.
பங்குனி பொங்கல் கொடியேற்றம் நடந்து முடிந்தது.
அந்த ஊரின் அனைத்து தலைகட்டுகாரர்களும் அம்மன் முன் நின்றிருந்தனர்.
ஒருபக்கம்ஸ்ரீஜெயமின் குடும்பம்,
எதிர் பக்கத்தில் ஆண்டவர் கனியின் குடும்பம் நின்று இருந்தது. கொடியேற்றம் முடித்து பொது மக்கள் அம்மனை வணங்கிவிட்டு சென்று கொண்டு இருந்தனர்.
கோவிலிருந்து ஊரில் உள்ள அனைத்து மெம்பர்களுக்கும் மரியாதை செய்யும் விதமாக மைக்கில் ஒருவராக பெயரை சொல்லி அழைப்பார். பெயரை சொல்லி நீங்க வரலாம் என்றவுடன் ஒருவராக சொல்வார்கள். ஆண்களும் மாலை அணிவித்து திருமணம் முடிந்து இருந்தாள்.மனைவியோடு சென்று வாங்க வேண்டும். கணவனுக்கு மாலைபோட்டும், மனைவிமார்கள் கையில் பெரிய பிரசாத தட்டு கொடுப்பார்கள். அதில் பூ , பொங்க சோரு, தேங்காய் பழம் என்று அனைத்து விதமான மங்கள பொருட்களும் இருக்கும்.
ஸ்ரீஜெயம் தனியாக சென்று மாலையும் பிரசாத தட்டோடு வந்து. தன் அக்காவின் கையில் கொடுக்க. அனைவரும் குடும்பமாக போக , தன் தம்பி மட்டும் தனியே சென்று வாங்கி வந்ததை பார்த்து கண் கலங்கினார் நளினி. இவனுக்கு ஒரு திருமணம் நடக்கலையே கடைசிவரை இவன் இப்படியே இருந்திடுவானோ என்று வருத்தபட்டார்.
ஆண்டவர் கனியின் தந்தை தாயுக்கும் மரியாதை செய்வதற்கு அழைக்க லட்சுமியின் கைபிடித்து அழைத்து சென்று பக்கத்தில் நின்று கொண்டான் ஆண்டவர் கனி தாயை மெதுவாக அழைத்து வந்து ஒரு இடத்தில் அமரவைத்து விட்டு தந்தை பார்க்க சொல்லி விட்டு செல்ல . கூட்டம் அதிகமாக இருந்தது. மைக்கில் ஆண்டவர் கனி வரவும் என்று அழைக்க.லட்சுமி போப்பா அடுத்த வருஷம் நீ ஜோடிதான் போகனும் என்று மகனை அனுப்பிய வைத்தார். அவன் இந்த வருஷமே ஜோடியாகத்தான் வாங்க போறான் என்று தெரியாமல் வாழ்த்தி அனுப்பினார்.
ஆண்டவர் கனி அம்மன் சன்னிதிக்கு செல்ல அவன் சித்தப்பா, சித்தி பிரசாத தட்டோடு வந்தனர். நீ போப்பா என்க. ஐயர் ஆண்டவர் கனி வாங்க என்றவர் தம்பிக்கு பெரிய மாலையா எடுக்க இன்னைக்கு அம்பாளுக்கு சிறப்ப எல்லாம் நடந்திருக்க காரணம் தம்பி தான். எப்போதும் பொங்கலுக்கு செய்வதை விட இந்த வருடம் ஆண்டவர் கனி கோவிலுக்கு அதிகபடியாக செய்து இருக்க. அதற்கு இந்த மரியாதை ஆண்டவர் கனிக்கு மாலைபோட்டு திருநீர் பூசி பிரதான தட்டை ஆண்டவர் கனியிடம் கொடுக்க பக்கத்தில் ஒருவர் ஆண்டவர் கனியை தெரியாமல் இடித்து விட.அவன் கையில் இருந்த தட்டு நழுவுவதை பார்த்த திவ்யா அரிய நாச்சி ஆண்டவர் கனியோடு சேர்ந்து தட்டை வாங்கி கொண்டு பார்த்து என்று சொல்லி விட்டு. அவனின் கையில் தட்டை கொடுத்தவள்.
பிரசாத தட்டில் இருந்த பொங்கலையும், பூவையும் எடுத்துக்கொண்டு கண்களால் வர்ரேன் என்று சொல்லி விட்டு செல்ல.ஐயர் இவர்கள் இருவரையும் பார்த்து நிற்றார்.
ஆண்டவர் கனி வெளியூர் பொண்ணு நம்ம பழக்கம் தெரியாது என்று சொல்லி நகர்ந்தான். இவளை என்ன செய்யலாம் ,முடியலயே என்று புலம்பியபடி சென்றான்.
ஸ்ரீஜெயம் பூஜை முடிந்தவுடன் வீட்டுக்கு சொல்லாம் என்று எழுந்து தன் பர்சை பார்க்க. அது காணாமல் போகியிருந்தது. கொஞ்சம் நேரம் முன்னாடி தானே பார்த்தேன் என்று நினைத்தவர். ஒரு வேலை கோயிலில் வலம் வரும்போது கீழே விழுந்து இருக்கும் என்று பர்சை தேடிக்கொண்டு கோவிலை சுத்த.
ஒரு பெண் ஸ்ரீஜெயமின் பர்சை கையில் வைத்து கொண்டு பர்சை துழைத்தவரை தேட.
ஸ்ரீஜெயம் அந்த பெண் அருகில் சென்று அம்மாடி இது என் பர்ஸ் என்று கேட்டார்.
பார்கவி ஸ்ரீஜெயத்தை திரும்பி பார்த்தவள் உங்க பர்சா ஹங்கில் என்று பர்சை கொடுத்தாள்.
ஸ்ரீஜெயம் பார்கவியை பார்த்து அதிர்ச்சியாகி நின்றார்.அச்சு அசல் தன் காதலி மஞ்சுவை போல் இருந்த பார்கவியை பார்த்து மஞ்சு என்று அழைத்திருந்தார்……
error: Content is protected !!