ஆண்டவர் கனி விருதுநகர் பஸ் ஸ்டாப்பின் பக்கத்தில் இருந்த அவனது மரக்கடைக்கு வந்தான்.
Advertisement
ஆண்டவர் கனியின் பட்டறையில் பல வகையான மரக்கட்டைகளில் இருந்து சன்னல், கதவுகள், கட்டில்கள், என்று அனைத்து விதமான ஜாமான்கள செய்யும் பட்டரை வைத்துள்ளான். எந்த மரக்கட்டையால் என்ன செய்யலாம் என்று ஆண்டவருக்கு நன்றாக தெரியும்.
Advertisement
அவன் சிவகாசி, விருதுநகர், மதுரை என்று மூன்று இடத்தில் பர்னீச்சர் ஷோ ரூம் வைத்துஉள்ளான்.
அது மட்டும் இல்லை அவன் தாத்தா நடத்தி வந்த பஸ் டிரான்ஸ் போர்ட்டையும எடுத்து நடத்துகிறான்.
Advertisement
ஆண்டவர் கனிக்கு திவ்யாவை பார்த்ததும் மிகவும் பிடித்தது. ஏதோ பொண்ணு அழகா இருக்க பாக்கலாமுன்னு திவ்யாஅரிய நாச்சியை பார்த்து சைட்டு அடித்து சென்றான். அவள் அவன் பக்கத்தில் வந்து அமர்ந்து. தனது ஊர் என்று தெரிந்த பின்பு மிகவும் சந்தோஷமடைந்தான்.
அவளை பார்த்ததும் அவன் நம்ம ஆலுங்க மாதிரி தெரியுது. நல்ல அழகான பொண்ணு. யாரு என்னன்னு கேட்டு கல்யாணம் பண்ணிக்க கேட்டு பாக்கலாம் என்று நினைத்தான்.
திவ்யா ஸ்ரீஜெயமின் சொந்தம் என்று தெரிந்தவுடன். தனது முடிவை மாற்றி இருந்தான்.
ஆண்டவர் கனிக்கு ஓய்வு தேவையாக இருக்க. தனது வீட்டுக்கு சென்றான். அவனின் வீட்டில் அப்பா ராமசுப்பு, அம்மா லட்சுமி, சித்தி யோகா, சித்தப்பா முருகேசன், தம்பி பெரியாசாமி படித்து முடித்து கொஞ்ச நாள் சிங்கப்பூரில் வேலை பார்த்தான். இப்போது விருதுநகரில் சூப்பர் மார்க்கெட் பெரியதாக வைத்துள்ளான். ஒரு தங்கை ரதி அவளை ராஜபாளையத்தில் திருமணம் முடித்து இருந்தனர்.
எல்லோரும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக இருக்கிறார்கள்.
ஆண்டவர் கனி வீட்டுக்கு வர அவனின் சித்தி யோகா ஏதோ விஷேச வீட்டிற்கு கிளம்பி கொண்டு இருந்தார். ஆண்டவர் கனியை பார்த்து என்ன தம்பி இந்த நேரத்துக்கு வந்து இருக்க உடம்பு சரியில்லையா.
என்ன சித்தி திடிர்ன்னு , வெளியில் தானே பொண்ணு பார்த்தீங்க இப்போ என்ன மஞ்சு அத்தை பொண்ண கல்யாணம் பண்ண கேட்குறீங்க.
அப்படி இல்ல ஆண்டவர் , உன் சொந்த அத்தை பொண்ணு. உங்க அப்பா கூட பொறந்த ஒரே தங்கச்சி மஞ்சு. அவ இறந்துட்டாலும், அவ பொண்ணு பார்கவியை நாம அப்படியே விட முடியாதுல.
அது சரி, மஞ்சு அத்தை பொண்ணு பார்கவி இங்கே வந்து ரொம்ப வருஷம் ஆச்சு. மஞ்சு அத்தையோட வீட்டுகாரர். அத்தை இறந்ததுக்கு அப்பறம். வேற கல்யாணம் பண்ணி பசங்களோடு இலங்கையில இருக்காங்க. இப்போ எப்படி இந்த விசயம் வந்தது.
மஞ்சு வீட்டுக்காரர் ஆதிநாரயணன் தான் போன் பண்ணி உங்க அப்பா
கிட்டையும் , சித்தப்பா கிட்டையும் பேசி இருக்காரு நம்ம வீட்டுல தான் பார்கவியை கல்யாணம் கட்டி கொடுப்பாராம் என்றார் யோகா.
அது எப்படி சித்தி இலங்கையில் இருக்கும் பொண்ணு இங்க வந்து இருப்பாளா ?
ஆண்டவர் கனி தன் பக்கத்தில் இருந்த அம்மாவை பார்த்தவன் . அவரும் சரியின்னு சொல்லுப்பா. அம்மா இல்லாம வளர்ந்து பொண்ணுயா.
தாய் வருந்துவதை பார்த்து சரி சித்தி பங்குனி பொங்கலுக்கு வர சொல்லுங்க பார்க்கலாம் என்று சொல்லி விட்டு அவனின் ரூம் சென்றான்.
உடனே யோகா இலங்கைக்கு போன் போட்டு ஆண்டவர் கனிக்கு சம்மதம் நீங்கள் எல்லோரும் பங்குனி பொங்கலும் வாங்க பேசி முடிக்கலாம் என்று விசயத்தை சொல்ல.
சரி என்ற ஆதிநாராயணன் . நான் இப்போ வரமுடியாது. பிள்ளைக்களை அனுப்பி வைக்கிறேன் என்றார்.
யோகா இரவு வீடு வந்த கணவரிடம், அக்கா கணவர் மச்சானிடம் கனிக்கு பார்கவியை கல்யாணம் பண்ண சம்மதம் என்று சொல்ல.
இருவருக்கும் மிகவும் சந்தோசம். தன் தங்கை, பார்கவி பிறந்தவுடன், இறந்து விட. அவளின் சாயலில் இருக்கும் மஞ்சுவின் மகளை . தன் தங்கையாகவே நினைத்தனர். தன் மகனுக்கு தங்கையின் மகளை திருமணம் முடித்து பக்கத்தில் வைத்து
பார்க்க ஆசை பட்டனர்.
ஆதிநாராயணன் மஞ்சு இறந்தவுடன். இலங்கையில் உள்ள ஒரு பொண்ணை திருமணம் முடித்து ஓரு பையன் இருக்கிறான். தன் இரு பிள்ளைகளை அவர் நன்றாக பார்த்தாலும். பார்கவி எப்போது தனிமையிலே இருப்பாள். ஆதிநாரயணன் இரண்டாவது மணைவி ஜோபியா பார்கவியை நன்றாக பார்த்து கொள்வார். ஒரு முறை ஜோபியா சொந்தம் உறவுமுறை வீட்டுக்கு பார்கவியை அழைத்து செல்ல. எல்லோரும் ஜோபியாவின் மகன் அஜய் தூக்கி வைத்து கொள்ள. இவளை யாரும் கண்டு கொள்ளவில்லை. அச்சிறுபொண்ணுக்கு ஒர் அளவிற்கு விசயம் புரிய.
தன்னை தனிமை படுத்தி கொண்டாள். தனக்கு ஏதாவது தேவை என்றாள் தந்தையிடம் கேட்பாள் . அவளின் தம்பி அஜய் அக்காவை விட மாட்டான் கூடவே இருப்பான். இப்போது கூட ஆதிநாராயணன் இந்தியாவுக்கு பார்கவியை அனுப்ப ஏற்பாடு பண்ண. அவனும் அக்காவுடன் சேர்ந்து மதுரை ஏர்போர்ட்டில் வந்து இறங்கினார்கள்.
ஆண்டவர் கனிக்கு ஒரு முக்கிய மான வேலை இருக்க. பார்கவியையும் , அஜய்யும் ஏர்போர்ட்டில் இருந்து அழைத்து செல்ல ஆண்டவர் கனியின் தம்பி பெரியசாமி வந்திருந்தான்.
பெரியசாமி ஆண்டவர் கனியை திட்டி கொண்டே ஏர்போர்ட்க்கு வந்தான். இவர் கல்யாணம் பண்ண போற பொண்ண கூப்பிட இவர் வரமாட்டாற என்று புலம்பியபடி காத்திருக்க.
பார்கவியும் , அஜய்யும் ஏர்போர்ட்டில் எல்லா செக்கிங் முடித்து வெளியில் வர.
காத்திருக்கும் இடத்தில் பெரியசாமியை பார்த்து இருவரும் அவனிடம் வந்தனர்.
பெரியசாமி பார்கவியை பார்த்து கண்களை திருப்ப முடியவில்லை. சாந்தமான முகம், நல்ல நிறம், உயரம் மெதுவாக நடை மெல்ல ஒரு சிரிப்பு. பெரியசாமி கண்களுக்கு பேர் அழகியாக தெரிய. மனது அண்ணன் கட்டிக்க போற பொண்ணு என்று சொல்ல. கண்ணோ இவன் பேச்சு கேட்காமல் பாருவை பார்க்க. இருவரை அழைத்து கொண்டு பார்க்கிங் வந்தான்.
காரின் முன்னாடி அஜய் அமர்ந்து கொள்ள.பின்னாடி பார்கவி அமர்ந்து கொண்டாள். பெரியசாமி கார் ஓட்டிக்கொண்டு வந்தான். அஜய் பெரியசாமியிடம் மச்சான் என்று பேசி கொண்டு வர. அவனுக்கு அஜய் பேசுவது பாதி புரிய. அவன் பேசும் இலங்கை தமிழ் பெரியசாமிக்கு புரிய வில்லை . குழப்பதுடனே இருந்த பெரியசாமி பார்த்த பார்கவி தம்பியிடம் நீ கதைக்குறது மச்சானுக்கு புரியல்ல நல்ல தமிழ் கத இல்ல ஆங்கிலத்தில் பேசு .
அஜய் பிறகு பெரியசாமிக்கு புரியும் படி பேச விருதுநகர் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
தங்கை மகளை கான ராமசுப்புவும் , முருகேசனும் வீட்டிலே இருந்தனர். காரின் சத்தம் கேட்டு அனைவரும் வெளியே வந்தார்கள் . பார்கவி அனைவரையும் பார்த்து சிரித்தாள்.
தங்கை மகளை பார்த்து அண்ணன்மார்கள் கண் கலங்கி மஞ்சு இருந்தாள் எவ்வளவு நன்றாக இருந்துருக்கும் என்று வருத்தப்பட யோகா தான் இருவரையும் பார்த்து .மொத , மொத பிள்ள வீட்டுக்கு வருது கண்ண தொடைங்க என்றவர்.
வாம்மா பார்கவி, வாப்பா அஜய் என்று வீட்டினுள் அழைத்து சென்றார்.
பார்கவிக்கு 10 வயதில் வந்தது கொஞ்சம் ஞாபகம் இருக்க. அனைவரிடமும் உறவு முறை சொல்லி அழைத்தாள். தம்பிக்கு தாய்மாமன்களை அறிமுகப்படுத்தி வைக்க. அஜய் அனைவரிடமும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். தம்பியிடம் உறவு முறை சொல்லி கொடுப்பதை பார்த்திருந்தனர்.
யோகா பார்கவியையும் , அஜய்யும் அழைத்து கொண்டு லட்சுமியின் அறைக்கு வர.
லட்சுமி பார்கவியை பார்த்து வாடா லட்டு என்றீருந்தார். பாரு அத்தை என்றவள் பழைய ஞாபகம் வர. லட்சுமியை அணைத்துக் கொண்டாள்.எப்படி இருக்கே டா .
நல்ல இருக்கேன் அத்தை என்றவள் இது என் தம்பி அஜய்
வாப்பா நல்ல இருக்கீயா. அப்பா , அம்மா எப்படி இருக்காங்க.எல்லோரும் பைன் அத்தை என்றான்.
உங்களுக்கு உடம்புல என்ன பிரச்சனை அத்தை.
ஒன்னும் இல்லாட சுகர், பெசர் அதிகமா ஆச்சு . வயித்துல நீர் கட்டி இருந்துச்சு ஆப்ரேசன் பண்ணி இரண்டு மாதம் தான் ஆகுது . இரண்டு பேரை கூட்டிட்டுபோ யோகா குளித்துவிட்டு சாப்பிடட்டும் போங்க என்று அனுப்பி வைத்தார்.
இருவருக்கும் அறையை காட்டி விட்டு குளிச்சுட்டு கீழே வாங்க என்ற யோகா கிச்சனுக்கு செல்ல.
பெரியசாமி அம்மா உன்க்கிட்ட பேசனும் .
பேசு.
தனியா பேசனும்.
இங்கே என்ன பத்து பேர இருக்காங்க பேசுமாறு சொல்ல.
தாயின் அருகில் வந்தவன். எனக்கு பார்கவியை பிடிச்சுருக்கு.
இங்கே எல்லோருக்கும் தான் அவளை பிடிச்சுருக்கு.
ம்மா! அவளை எனக்கு கல்யாணம் பண்ணி தாங்க.
என்ன சொன்ன.
பார்கவியை எனக்கு பிடிச்சுருக்கு கல்யாணம் பண்ணி வைங்க.
ஓங்கி ஒரு அறை அறைந்திருந்தார் மகனை.அறிவு இல்லையாட உனக்கு .உன் அண்ணனுக்கு பேசி வச்சுருக்க பிள்ளையை நீ கட்டணுமுன்னு சொல்லுற.
ம்மா, எனக்கு பிடிச்சுருக்கு.
எப்படி உனக்கு பிடிக்கும். உனக்கு தெரியாதா அவ , ஆண்டவர் கனிக்கு பார்த்த பொண்ணுன்னு.