Skip to content
Post Views: 738
அலைவரிசை 8
“இனிக்குட்டி என்ன பண்ணுறீங்க”
Advertisement
“ஆமா அவ குட்டியா. நல்லா எரும மாடு மாதிரி தான இருக்கா. இப்படியே எல்லாரும் செல்லம் கொடுத்து தான் அவ இப்ப யார் சொல்லுறதையும் கேட்கமாட்டேன் திரியுறா” என்று பொருமினார் வள்ளியம்மை.
“ஏன் அண்ணி இப்படி சொல்லுறீங்க அவ நம்ம இனியா. ஒரு சின்ன தப்பு பண்ணிடா அதுக்காக இப்படி எல்லாம் பேசாதீங்க. இத கேட்டா பாப்பா மனசு என்ன பாடுப்படும்”என்றார் ஆதங்கத்துடன் பார்வதி
Advertisement
Advertisement
“ஆமா ஆமா ரொம்பத்தான் பாடுபடும்”என்றவர் அடுத்து பேசும் முன்
“அண்ணி கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. இல்லனா நீங்க போங்க நான் போய் அவளுக்கு காப்பி கொடுத்துட்டு வரேன்”
Advertisement
“சரி சரி நான் பேசல போதுமா. நான் பேசுறத இங்க யார் தான் மதிக்காங்க”
“அண்ணி நீங்க போங்க நான் அவள பாத்துட்டு வரேன்” என்று அவரை அனுப்பிவிட்டு இனியாவின் ரூம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார் பார்வதி
அங்கே அசையாமல் எதிரே இருந்த சுவரை வெறித்து பார்த்துக் கொண்டுயிருந்தவளின் அருகில் சென்று தோளில் கைவைத்து அசைத்தார். அதில் கலைந்தவள் தன் பக்கத்தில் நின்றவரை பார்த்து இதழ் பிரியாமல் புன்னகைத்து, “ என்ன பாட்டி என்ன ஆச்சு ஏன் என்ன அப்படி பாக்குறீங்க”
“ அத நான் தான் உன்ன கேக்கணும். ஏன் இனிமா இப்படி இருக்க உனக்கு என்ன ஆச்சு ரூம்க்கு வந்து எவ்வளவு நேரம் ஆகுது இன்னும் நீ டிரஸ் மாத்தாம முகம் கழுவாம அப்படியே ஒக்காந்து இருக்க என்ன நினைப்புல தான் இருக்க இனிமா. உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்குடா ஏன்டா இப்படி இருக்க” என்றார் கவலையாக பார்வதி
“ என்ன பாட்டி நீங்க. நான் நல்லா தான் இருக்கேன். ஏதோ யோசனைல இருந்தேன். உடனே நான் வந்து நல்லா இல்லன்னு சொல்லிருவீங்களா”
“ பாரேன் என் பேத்திக்கு பொய் கூட சொல்ல வருது.நீ நல்லா இருந்தா எப்படி இருப்பனு எனக்கு தெரியாதா. அஞ்சு நிமிஷம் கூட உன்னால யார் கூடவும் பேசாம இருக்க முடியாது. அப்படிப்பட்ட நீ வந்ததுல இருந்து யார் கூடவும் பேசாம அமைதியா இருப்பதிலேயே தெரியலையா. அத கூட விடு நீ வீட்டுக்கு வந்த உடனே தாத்தான்னு கத்திட்டு தான் உள்ளேயே வருவ. முதல்ல உன் தாத்தா தான போய் பாப்ப. ஆனா இப்போ நீ அவர போய் பாக்காம இப்படி தனியே வந்து சுவத்தை பாத்துட்டு உக்காந்து இருக்க இது எதுக்கு எனக்கு தெரியாதா”
பாட்டி தன்னை கண்டுக் கொண்டு விட்டார் என தெரிந்து விட்டதால் இதுவரை போட்டிருந்த புன்னகை என்னும் முகமூடி கிழித்து எறிந்து விட்டு தனது பாட்டியை கட்டிக் கொண்டு அழத்தொடங்கி விட்டாள். அவளின் இந்த கண்ணீரைக் கண்டு பதறிப்போன பாட்டி “இனிமா இங்க பாருடா இனிமா அழக்கூடாது பாட்டி சொல்றத கேளு” என ஆறுதல் சொன்னார்
அதில் கொஞ்சம் தெளிந்தவள் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு அவர் அணைப்பில் இருந்து கொண்டே, “ எப்படி பாட்டி என்னால தாத்தா முகத்தை பார்க்க முடியும். என்னால தாத்தாக்கு ஒரு அவமானம் ஆகிட்டே. அன்னைக்கு அவங்க சொல்ல சொல்ல தாத்தா முகத்தை பாத்திருக்கணும். அப்படியே முகமெல்லாம் செத்துப்போய் கூனிக்குறுகி அவங்க முன்னாடி நின்னாரு. அந்த முகத்தை என்னால எப்படி மறக்க முடியும் பாட்டி. இப்ப கூட நைட் எல்லாம் என்னால சரியா தூங்க முடியல. கண்ணு முன்னாடி தாத்தாவோட அந்த முகம் தான் எனக்கு ஞாபகம் வருது பாட்டி. என்னால தான் எல்லாம் என்னால தான் நான் லவ்வே பண்ணி இருக்க கூடாது பாட்டி”
“ இனிமா இங்க பாருடா இது எல்லாத்துக்கும் நீ காரணம் இல்ல.இது நம்மளோட போதாத காலம் நினைச்சிக்கோ. இனிமே இப்படி அழக்கூடாது சரியா போ போய் மூஞ்ச கழுவிட்டு வா நான் காப்பி எடுத்து வந்து இருக்கேன் அத குடி” என்று அவளை பாத்ரூம்குள் அனுப்பி விட்டு ரூம் விட்டு வெளியே வந்து இவ்வளவு நேரம் தன் மகளின் கண்ணீர் வார்த்தைகளை கேட்டு மௌனமாக அழுது கொண்டு இருந்த சிவகாமியின் கையை பிடித்தார் அவளின் அன்னை பார்வதி.
“ போதும் சிவகாமி நம்ம எல்லாரும் அழுதது போதும் இனி இந்த பிரச்சினையை தீர்க்க ஒரு வழி கண்டுபிடிக்கணும் அதை விட்டுட்டு இப்படி உட்கார்ந்து எல்லாரும் அழக்கூடாது. பாத்தியா பாப்பா எவ்ளோ அழுவுறானு நீயும் அவள நோகடிக்காத சிவகாமி அவ கூட பேசு சரியா”
“ சரிமா எனக்கு மட்டும் என்ன அவ கூட பேசணும் இஷ்டம் இல்லயா என்ன. நான் மட்டும் என்ன அவ கண்ணீரப் பார்த்து சந்தோஷமாக இருக்கேன். அஞ்சிமாசமா அவ பாக்காம நான் எவ்வளவு தவிச்சி போனேன் தெரியுமா. எவ்வளவு போன் பண்ண தெரியுமா ஒரு தடவை கூட அட்டன் பண்ணி என்கிட்ட பேசவே இல்லம்மா இவ. நான் என்னமா பண்ணுனேன் ஏன் என்கூட பேசாம இருந்தா இவ. இவ கரெக்ட் டைமுக்கு சாப்பிட்டாளா, சரியான நேரத்துக்கு தூங்குனாளா எதுவும் தெரியாம நான் எவ்வளவு பாடு பட்டேன் தெரியுமா” என்றார் ஆதங்கத்துடன் சிவகாமி
“ சரிடா எனக்கு புரியுது ஆனா அவளுக்கு கொஞ்சம் குற்றயுணர்ச்சி டா எங்க உங்க கிட்ட பேசினா ரொம்ப உடைஞ்சு போயிருவாளோனு பேசாம இருந்து இருக்கா. சின்ன பொண்ணு தானே ஏதோ தெரியாம பண்ணிட்டா நீ மன்னிச்சு அவ கூட பேசுடா”
“ சரிமா என்றவள் ஆங் உங்களை சாப்பிட கூப்பிட தான் நான் வந்தேன் அப்படியே அவளையும் கூட்டிட்டு நீங்க சாப்பிட வாங்க மா” என்று சொல்லி கண்ணைத் துடைத்துக் கொண்டு சென்றாள்.
போகும் அவளை பார்த்து பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு, “ ஆண்டவா ஏன் இப்படி சோதிக்கிற என் பிள்ளைங்க எல்லோரையும் நல்லா வை பா முருகா” என மேலே பார்த்து வணங்கிவிட்டு மீண்டும் உள்ளே சென்று இனியா என்ன செய்கிறாள் என்று பார்த்தார். இன்னும் வராததால் குளியலறையை நோக்கி, “ இனிமா இன்னும் உள்ள என்ன பண்ற. சீக்கிரம் வெளியே வா”என்றார்.
“ இதோ வந்துட்டேன் பாட்டி” என்று சொல்லிக்கொண்டு முகத்தில் உள்ள நீரை துண்டால் துடைத்துக்கொண்ட வெளியே வந்தவள். கண்ணாடி முன் நின்று தலையில் கலைந்திருந்த முடிகளை சிறு திருத்தங்களை செய்து விட்டு நெத்தியில்பொட்டு வைத்துக் கொண்டு, “ஓகேவா பாட்டி. எங்கே என் காப்பி தாங்க நான் குடிக்கேன்” என்றாள் மலர்ந்த முகத்துடன்
அதில் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு அவள் முகத்தை சுற்றி திருஷ்டி கழித்தவர்”இப்பத்தான் முகத்தை பார்க்க மங்களகரமா இருக்கு. சரி வா நம்ம சாப்பிட போலாம்” என்று அழைத்தார்.
அதில் இடுப்பில் கை வைத்து பாட்டியை பொய்யாக முறைத்து, “எனக்கு காபி தானே கொண்டு வந்தேன்னு சொன்னீங்க. இப்ப என்ன சாப்பிட கூப்பிடுறீங்க” என்றாள்
“ ஆமா அது நீ ஒரு மணி நேரம் பாத்ரூம்ல மூஞ்சி கழுவிட்டு வந்தேயே அப்பவே ஆறிப்போச்சு. இதுக்கு அப்புறம் அதை குடிச்சின்னா கசாயம் மாதிரி தான் இருக்கும். வா டைம் ஆச்சு வந்து சாப்பிட்டு அப்படியே கொஞ்ச நேரம் படுத்து தூங்கி ரெஸ்ட் எடு” என்று சொல்லி நடக்க தொடங்கினார்
“ இப்பவாது உங்களுக்கு தெரிஞ்சே உங்க பொண்ணு போடுற காப்பி கசாயம் மாதிரி தான் இருக்கும்னு” என தாயை கலாய்த்து கொண்டு அவர் பின்னால் இவளும் சென்றாள்.
“ ராஸ்கல் என் பொண்ண என்கிட்டயே கலாய்க்கிறயா இரு இரு நான் உங்க அம்மாக் கிட்ட சொல்றேன் பாரு” என்று பொய்யாக அவளை மிரட்டினார்
“ போங்க போய் சொல்லுங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நான் உண்மைய தான் சொன்னேன்” என்று அவரிடம் வழவழத்துக்கொண்டே டைனிங் டேபிள் முன்பு வந்து அதிலிருந்தவர்களை பார்த்தவுடன் தயக்கத்துடன் அமைதியாக நின்றாள்.
அதுவரை அவளின் சிரிப்புடன் கூடிய பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தவர்கள் அமைதியான அவளின் முகத்தைப் பார்த்து வருத்தத்துடன் ஒருவருக்குக்கோருவர் முகத்தை பார்த்துக் கொண்டனர்.
இவ்வளவு நேரம் தன்னிடம் வளவளத்துக் கொண்டு இருந்தவள் திடீரென அமைதியானதால் நிமிர்ந்து அவளின் முகத்தையும், எதிரே இருந்தவர்கள் முகத்தையும் பார்த்துவிட்டு, “இப்படியே அமைதியா இருக்கவா வந்த உட்காரு. உட்காந்து சாப்பிட்டு போய் படுத்து தூங்கு போ” என அவளை அதட்டினார் பார்வதி.
அதில் டேபிளில் அமர்ந்திருந்தவர்களும் நிமிர்ந்து அவரைப் பார்த்தனர். அவர் கண்கள் காட்டிய செய்தியை புரிந்து கொண்டு, “ இனிமா உட்காருடா எப்படி இருக்க ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா ஏன் இப்படி இருக்க. உட்கார்ந்து சாப்பிடுடா” என்றார் கனிவுடன் மயில்வாகனார்.
“ சரி தாத்தா’ என சேரில் உட்கார்ந்து, ‘நான் நல்லா தான் இருக்கேன் தாத்தா. நீங்க உடம்ப பாத்துக்கிறது இல்லையா ஒழுங்கா சாப்பிடுறீங்களா இல்லையா ரொம்ப வீக்கா தெறிங்க தாத்தா எல்லாம் என்னால தானே சாரி தாத்தா” என்றாள் குற்ற உணர்வுடன் அவரின் கண்களை பார்க்காமல்
“ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா தாத்தாக்கு வயசாகுதுல்ல நீ ரொம்ப நாள் கழிச்சு என்னை பார்க்குரல அதான் அப்படி தெரியுது போல. நான் எப்பவும் போல தான் இருக்கேன் டா. நீ உட்கார்ந்து சாப்பிட்டு போய் ரெஸ்ட் எடும்மா”
“ இல்ல தாத்தா நான்தான்” என பேச போனவளை தடுத்து, “ இனியா என்னது சாப்பிடுற இடத்தில் தேவையில்லாம பேச்சி அமைதியா சாப்பிடு” என அதட்டியவன், “ அக்கா என்ன பார்த்துட்டு இருக்க அவளுக்கு தட்டுல சாப்பாடு எடுத்து வை” என கவலையுடன் நின்ற தனது அக்காவையும் அதட்டினான் மாறன்.
அதுவரை அமைதியாக நின்ற சிவகாமி தான் மகளுக்காக செய்து வைத்திருந்த பதார்த்தங்களை இனியாவின் தட்டில் எடுத்து வைத்தாள்.
தன் தட்டிலிருந்த சோறு, சாம்பார், கோஸ் கூட்டு, உருளைக்கிழங்கு வறுவல், பூண்டு ஊறுகாய், அப்பளம் என அனைத்து பதார்த்தங்களும் அவளுக்கு பிடித்த வகையாக இருந்ததால் நிமிர்ந்து தனது தாயின் முகத்தை பார்த்துவிட்டு அவளின் வயிற்றில் முகம் புதைத்து , “சாரிமா வெரி சாரி எல்லாம் என்னோட தப்பு தான் உன்கிட்ட நான் பேசாம இருந்திருக்க கூடாது ரொம்ப சாரிமா” என அழுகையுடன் சொன்னாள் இனியா.
அதில் அவளுக்கு பரிமாறிக்கொண்டு இருந்த கைகள் ஒரு நொடி அப்படியே நின்று மகளின் தலையை வருடி கொடுத்து, “ சரிடா அழாத சாப்பாடு சாப்பிடு” என்று தனது துக்கத்தை மறைத்துக் கொண்டு மகளை தேற்றினாள் சிவகாமி.
“ உனக்கு என் மேல எந்த வருத்தமும் இல்லையாம்மா உண்மையா என்ன மன்னிச்சிட்டியா” என்று கண்ணீருடன் பாவமாக தனது தாயின் முகத்தைப் பார்த்து கேட்டாள். இதுவரை மகளின் கண்ணீர் முகத்தை பார்க்காத அந்த தாய் மனம்
“ நான் ஏண்டா உன் மேல வருத்தப்பட போறேன். ஆனா நீ என் கூட பேசாம அஞ்சு மாசத்துக்கு வந்துட்ட இல்ல” என்றாள் அழுதழுது முகம் சிவந்து போய் பார்க்கவே பாவமாக இருக்கும் மகளின் முகத்தைப் பார்த்து அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையுடன் சிவகாமி.
“ அக்கா என்ன நீ அவதான் சின்ன புள்ள ஏதோ தெரியாம அழறானா நீயும் கூட சேர்ந்து அழுதுட்டு இருக்க. கண்ண தொடை முதல்ல அவளுக்கு சாப்பிடப் போடு. நீயும் கண்ண துடிச்சிட்டு சாப்பிடு இனியா. உங்களுக்கு என்ன தனியா சொல்லனுமா எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடுங்க. அம்மா,நீயும் அத்தையும் உட்காருங்க.மாமா,அப்பா எல்லாரும் கண்ணை துடைச்சுட்டு சாப்பிடுங்க ” என்றான் கண்டிப்புடன் இளமாறன்.
error: Content is protected !!