Skip to content
Post Views: 704
அவன் சொன்னது போல கண்களை துடைத்துக்கொண்ட மயில்வாகனார், “ஆமா எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடுங்க. மச்சான் நீங்களும் சாப்பிடுங்க. பார்வதி, வள்ளி நீங்களும் உட்காருங்கமா. அம்மாடி சிவகாமி எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறுமா”
அவர் சொன்னது போல அனைவரும் உட்கார்ந்து டைனிங் டேபிளில் சாப்பிட நின்று கொண்டு சிவகாமி அனைவருக்கும் பரிமாறினாள். அப்போதுதான் வெளியே சென்று விட்டு உள்ளே நுழைந்த பிரபாவதியின் கண்களில் இந்த காட்சி விழுந்தது. “ ஓ எல்லாரும் ஒன்று கூடிட்டாங்க போல அப்ப என் பொண்ணு மட்டும் என்ன பண்ணா அவள மட்டும் தனியா விட்டுட்டாங்க” என்று பொருமியவள் தனது கைபேசியில் அமிழ்தினிக்கு அழைப்பு விடுத்தாள்.
Advertisement
@@@@@@@@@@@@@
Advertisement
அங்கே அப்போதுதான் காலையிலிருந்து தின்ற அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டு சோர்வுடன் தனது 5 மாத கரு தாங்கிய வயிற்றில் கை வைத்துக் கொண்டு மெதுவாக மாடிப்படி இறங்கி கொண்டு இருந்தாள் ஆனந்த அமிழ்தினி.
Advertisement
“ அக்கா பேச்சியக்கா எங்க இருக்கீங்க” என்று அழைத்தவள் ஹாலைத்தாண்டி சமையலறைக்கு செல்ல கூட தெம்பு இல்லாமல் அங்கே இருந்த நாற்காலியில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தாள்.
Advertisement
அப்போது பக்கத்தில் இருந்த மொபைல் ரிங் ஆக அதனை எடுத்து பார்த்து, “அம்மா சொல்லுமா” என்றாள் சோர்வுடன்
“ என்னத்த சொல்லுமா. ஏண்டி உனக்கு கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆகுது”
அதில் கடுப்பானவள், “ இப்ப இதை கேட்க தான் போன் பண்ணுனியாமா” என்றாள்.
“ என்னடி என்ன பார்த்தா உனக்கு எப்படி தெரியுது நான் பேசினா கடுப்பா எல்லாம் ஆகுற என்னடி உன் கதை” என்றாள் கோபமாக பிரபாவதி
“ ஐயோ என்னமா உன் பிரச்சனை சொல்லுமா” என்றாள் தனிவுடன்
“ம் அப்படி கேளு சொல்றேன் உனக்கு எத்தனை மாசம் ஆச்சி கல்யாணம் முடிஞ்சி இன்னும் உன்னை யாராவது மறு வீட்டுக்கு கூப்பிட்டாங்களா. ஆனா இங்க பாரு இவ்வளவு நாளா வீட்டுக்கு வராமல் சுத்திட்டு இருந்தவளை கூட்டிட்டு வந்து இங்க விருந்து வைக்கிறாங்க” என்றாள் வெறுப்புடன்
“ என்னம்மா சொல்ற யார கூட்டிட்டு வந்து யாருக்கு விருந்து வைக்கிறாங்க” என்றாள் சோர்வுடன்
“ அதாண்டி அந்த ராங்கிக்காரி இருக்களா அவளை கூட்டிட்டு வந்து தான் விருந்து வைச்சிட்டு இருக்காங்க”
“ என்னம்மா சொல்லுற’ என்றவள் திடீரென்று, “ நீ இனியாவையா சொல்ற” என ஒரு வித அதிர்ச்சியுடன் கேட்டாள் அமிழ்தினி
“ ஆமாண்டி அவளை தான்.அவளை கூட்டிட்டு வந்து நடு வீட்ல உட்கார வைத்து அழுது,கொஞ்சி பாசத்தை பிழிறாங்க. ஒரே நாடகம் பாக்குற மாதிரி தான் இருக்கு”
“ஓ சரிமா அவ எப்ப வந்தா வீட்டுக்கு”
“ அது தெரியலைடி மதியம் வந்து இருப்பான்னு நினைக்கிறேன். நான் இப்பதான் வீட்டுக்கு வந்தேன். அப்ப தான் இந்த டிராமாவ பாத்துட்டு உனக்கு போன் பண்றேன்”
“ஓ ஓகே மா” என்று எதையோ யோசித்துக் கொண்டு சொன்னவளை
“ என்ன ஓகே மா நீ எப்ப டி இங்கு வர போற”.
“ அம்மா ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் புரிஞ்சிக்க” என்றாள் இறைஞ்சும் குரலில்
“ என்னடி புரிஞ்சுக்கணும் உனக்கு கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆச்சு. இன்னும் நீயும் மாப்பிள்ளையும் நம்ம வீட்டுக்கு வரல. ஊர்ல எப்படி எல்லாம் பேசுறாங்க தெரியுமா. எனக்கு தெரியாது. அடுத்த வாரம் நம்ம ஊர்ல திருவிழா வருது. இந்த திருவிழாவுக்கு நீயும் மாப்பிள்ளையும் வரீங்க அவ்வளவுதான் நான் போன வைக்கிறேன்” என்று தனது மொபைலை கட் செய்தாள் பிரபாவதி.
“ ஐயோ கடவுளே நான் என்ன செய்வேன். இந்த அம்மா வேற நம்ம நிலைமை புரியாம பேசுது. நானே அவர் முகத்தை பார்த்து அஞ்சு மாசம் ஆகுது இதுல நான் அவரை கூப்பிட்டு ஊருக்கு வேற போகணுமா” என்றவளின் புலம்பலை கேட்டுக் கொண்டு வந்தார் ஈஸ்வரி.
“ என்னடி ஆத்தாளும் மகளும் சேர்ந்து அடுத்து என்ன பிளான் போட்டு இருக்கீங்க. இப்போ யார் குடும்பத்தை கெடுக்க போறீங்க” என்றார் நக்கலாக
“ அத்தை பார்த்து பேசுங்க. இவ்வளவு நேரம் நானும் அம்மாவும் பேசினத ஒட்டு கேட்டீங்களா”
“ ஆமா கேக்குறாங்க பாரு. நீயும் உங்க அம்மாளும் இராணுவ ரகசியம் பேசுனீங்க. இதுல நான் வந்து ஓட்டு வேற கேட்டுடேன். பேசுறவ ரூம்ல இருந்து பேச வேண்டியது தானடி.எதுக்குடி நடு வீட்ல உட்கார்ந்து பேசிட்டு இருக்க”
அப்போதுதான் கவனித்தால் இருந்த களைப்பில் ஹாலில் வந்த அமர்ந்ததை, அதில் தலையைத் தட்டிக்கொண்டு கஷ்டப்பட்டு இருக்கையில் இருந்து எழுந்து மெதுவாக நடக்க தொடங்கியவளின் கையைப் பிடித்து இழுத்து, “ஏய் நின்னு நான் பேசிக்கிட்டே இருக்கேன் எங்க போற நீ” என அவள் கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு கேட்டார்.
“ அத்த ப்ளீஸ் கையை விடுங்க. நானே டென்ஷன்ல இருக்கு இதுல நீங்க வேற ப்ளீஸ் பிறகு வந்து நான் உங்களிடம் பேசுகிறேன் என்ன விடுங்க” அத்தை என்றாள் களைப்புடன்
“ உனக்கு என்னம்மா டென்ஷன் நீ தான் எல்லாத்துக்கும் டென்ஷன் வர வைப்ப. சரி அத விடு உங்கம்மா ஏதோ மறுவீடு போறத பத்தி பேசினாளே அது என்ன”
“ அது வந்து.. அத்தை அடுத்த வாரம் எங்க ஊர்ல திருவிழா. அதுக்கு தான் அம்மா கூப்பிடுறாங்க. அதோட கல்யாணம் ஆகி இன்னும் ஒரு ஊர் பக்கம் போகவே இல்லையா. அதான் அப்படியே சேர்த்து மறு வீட்டுக்கு வான்னு கூப்பிடுறாங்க”
“ மறு வீடு” எனச் சொல்லி சத்தமாக சிரிக்க தொடங்கினார் ஈஸ்வரி. சிறிது நேரத்திற்கு பிறகு
“ ஒரு தடவை உங்க வீட்டுப்படி ஏறினதுக்கு தான் என் பையன் அஞ்சு மாசமா வனவாசம் போன மாறி பண்ணிட்டீங்க. இப்ப மறுபடியும் உங்க வீட்டுக்கு வந்தா அவ்வளவுதான் எனக்கு பையனே இல்லாம பண்ணிருவீங்க போல” என்றார் கோவமாக
“ அத்த” என கோபமாக கத்தியவள் “ ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க உங்க வாயில இப்படி ஒரு வார்த்தை வரலாமா அத்தை” என்றாள் ஆதங்கமாக
“ வேற எப்படி என்ன பேச சொல்ற. ஆங் சொல்லு” என அவள் இரு கைகளை பிடித்து ஆட்டியவர். “சும்மா நடிக்காதடி நல்லவ மாதிரி. நீ ஏதோ காரணத்துக்காக தான் இந்த வீட்டுக்குள்ள வந்து இருக்குன்னு எனக்கு தெரியும் அந்த காரணம் மட்டும் தெரிய வரட்டும். அப்புறம் இருக்கு உனக்கு. சரி இப்ப என்ன பண்ண போற என் பையனுக்கு அதான் உன் புருஷனுக்கு போன் பண்ணி என்னங்க அம்மா நம்மளை மறு வீட்டுக்கு கூப்பிடுறாங்க வாங்க நம்ம ரெண்டு பேரும் போய் ஒரு வாரம் தங்கிட்டு வருவோம்னு கூப்பிடு பார்ப்போம். நீ கூப்பிடு டி பாப்போம். முதல்ல நீ கால் பண்ணுனா அவன் எடுக்கானா பார்ப்போம். என் பையன் என்ன பாக்காம ஒரு நாள் கூட இருந்தது இல்லடி ஆனா இப்ப பாரு அஞ்சு மாசம் ஆயிடுச்சு என் பையன நான் பார்த்து இதுக்கு எல்லாம் காரணம் யாரு? நீ தானே நீ தானே உன்னை பார்த்தாலே எனக்கு பத்திட்டு வருதுடி அப்படி என்னதான் உனக்கு வேணும் சொல்லுடி சொல்லுடி” என கத்தி அவளின் இரு கையை பிடித்து உலுக்கிக்கொண்டு கேட்டார் ஈஸ்வரி.
ஏற்கனவே வாந்தி எடுத்து சோர்வு, சரியான தூக்கமின்மை மற்றும் தலை சுற்றல், வயிற்றில் ஒன்றும் இல்லாதது எல்லாம் சேர்த்து கண் சொருக அவர் கைகளிலே மயக்க நிலைக்கு சென்றாள்.
திடீரென அவளை பிடித்திருந்த கைகளில் கணம் கூடவும் அவளின் முகத்தை பார்த்தார். “ ஏய் என்னடி ஆச்சு” என அவளை தாங்க போனவரால் அவளின் கணம் தாங்க முடியாமல் அவளோடு சேர்த்து இவரும் கீழே விழ போக அப்போது இருவரையும் சேர்த்து ஒரு கரம் தாங்கி நிறுத்தியது. கீழே விழுந்தோம் என கண்ணை மூடிக்கொண்டு இருந்தவர். திடீரென கீழே விழாமல் தன்னைத் தாங்கிப்பிடித்த கைகளை கண்ணை திறந்து பார்க்க அவரின் முன்பு நின்றவனை பார்த்து, “கவின் வந்துட்டியா செல்லம்” என்று கத்திய இவரின் குரலில்,
தலைச்சுற்றி கண்கள் சொருக மயக்க நிலைக்கு செல்லப் போனவள் கஷ்டப்பட்டு கண்களைத் திறந்து அவனின் கண்களைப் பார்த்து, “ தமிழ் மிஸ் யூ லாட். எங்க கூடவே இருங்க எங்கேயும் போவாதீங்க. லவ் யூ சோ மச் தமிழ்” என மெதுவாய் அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக அவன் காதுகளில் சொல்லி மயக்கத்துக்கு சென்றாள் ஆனந்த அமிழ்தினி .
error: Content is protected !!