Skip to content
Post Views: 796
கவிதை 4
இருவரும் படித்து முடித்து விட்டோம்…
அவனுக்கு முதலில் வேலை கிடைத்து இருந்தது…
அவன் தான் கெட்டிக்காரன் ஆயிற்றே…
Advertisement
வேலையையும் சீக்கிரமே பெற்றுக் கொண்டான்…
எனக்கு தான் தாமதமாகிக் கொண்டு இருந்தது…
நேர் முக தேர்வுகளில் ஏதாவது சொதப்பி விடுவேன்…
Advertisement
அவனே எனக்கு நிறைய கம்பெனிகளுக்கு அப்ளை செய்து கொடுப்பான்…
Advertisement
அடுத்த நாள் எனக்கு நேர்முக தேர்வு இருந்தது…
முதல் நாள் இரவு ஒன்பது மணி இருக்கும்…
அவனிடம் இருந்து ஒரு அழைப்பு…
Advertisement
இரவிரவாக பேசினாலும் இன்னும் எங்களுக்கு சலித்த பாடு இல்லை…
நான் அலைபேசியை எடுத்து காதில் வைத்ததுமே, “எல்லாம் ரெடியா?” என்று கேட்டான்…
எப்போதும் இப்படி தான்…
என்னை விட அவனுக்கு தான் இன்டெர்வியூ என்றாலே பதட்டம்…
“ரெடி ரெடி” என்றேன்…
எனது அலட்சியம் அவனுக்கு கோபத்தை வரவழைத்து இருக்க வேண்டும்…
“இவ்ளோ இரெஸ்பான்சிபிள் ஆஹ் இருக்காதே” என்றான் கடுப்பான குரலில்…
“எப்படியும் கிடைக்க போறது இல்ல” என்றேன்…
இன்னும் கடுப்பாகி விட்டான்…
“உன் வாயில நல்ல வார்த்தையே வராதா?” என்று திட்டினான்…
“இப்போ நான் என்ன பண்ணட்டும்?” என்று கேட்க, “நாளைக்கு நல்லா இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணி வேலையோட வர்ற” என்றான்…
“சரி வந்தா என்ன தருவீங்க?” என்று கேட்டேன்…
“என்ன வேணும்னாலும் தர்றேன்” என்றான்…
“ஆஹ் டீப் ஆஹ் ஒரு கிஸ் வேணும்… கிடைக்குமா?” என்று கேட்டு விட்டு நாக்கை கடித்துக் கொண்டேன்…
மறுமுனையில் மௌனம்…
எனக்கு சற்று இதயம் வேகமாக துடித்தது…
ஏதோ ஒரு ஆர்வத்தில் கேட்டு விட்டேன்…
இப்போது என்னை அலைவதாக நினைத்துக் கொள்வானோ என்று ஒரு பதட்டம்…
“சாமியார் கிட்ட கேட்டது என் தப்பு தான், அதொன்னும் கொடுக்க தேவையில்லை” என்று சமாளிக்க முயன்றேன்…
அப்போதும் மௌனம் கலையவில்லை…
“பிரபஞ்சன்” என்று மென்மையாக, மிக மிக மென்மையாக அழைத்தேன்…
“ஓகே தர்றேன்” என்றான்…
எனக்கோ அதிர்ச்சியும் ஆச்சரியமும்…
“நம்பலாமா?” என்று கேட்டான்…
“வேலையை எடுத்துட்டு வா” என்று மட்டும் சொன்னவன், “குட் நைட்” என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று இருப்பவனிடம் போய் முத்தம் கேட்டு இருக்கின்றேன்…
வேலை கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் முத்தம் கிடைக்காது என்று தான் எனது எண்ணம்…
வழக்கம் போல, கனவில் மட்டும் அவனுக்கு முத்தமிட்டு விட்டு, கண்ணயர்ந்து கொண்டேன்.
அடுத்த நாள் விடிந்தது…
கருப்பும் வெள்ளையும் சேர்ந்த காட்டன் புடவையை நேர்த்தியாக உடுத்துக் கொண்டேன்…
தலை முடியை பின்னி விட்டு, நெற்றியில் கருப்பு பொட்டும் வைத்துக் கொண்டேன்…
எனக்கு மனதளவில் ஒரு சலிப்பு…
வழக்கமாக வேலை கிடைக்கவில்லை என்றால் வரும் சலிப்பு தான்…
‘எனக்கு வேலையும் கிடைக்க போறது இல்ல, கிஸ்ஸும் கிடைக்க போறது இல்ல’ என்று முணுமுணுத்துக் கொண்டே கிளம்பி வெளியே வர, எனது அம்மாவோ, “இட்லி சாப்பிட்டு போ” என்றார்.
ஜேம்ஸும் காலேஜுக்கு கிளம்பிக் கொண்டு இருந்தான்.
“பெஸ்ட் விஷஸ் அக்கா” என்று சொல்லி விட்டு அவன் கிளம்பி விட்டான்…
நானும், “தேங்க்ஸ் டா” என்று பதில் சொல்லி விட்டு இட்லியை ஒரு கட்டு கட்டினேன்…
வேலை கிடைக்குதோ இல்லையோ, சாப்பாடு முக்கியம் அல்லவா?
சாப்பிட்டு விட்டு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டே கிளம்பி விட்டேன்.
அம்மா எனக்கு அவ்வளவாக வேலை விஷயத்தில் அழுத்தம் தருவது இல்லை…
அதனாலேயே இந்த அலட்சியம் எனக்கு நிறைய இருந்தது…
ஒரு வழியாக கம்பெனியை நெருங்க, அங்கே பைக்கை பார்க் செய்து கொண்டு நின்று இருந்தான் எனது பிரபஞ்சன்…
வழக்கமாக நேரில் பார்த்து வாழ்த்தி விட்டு செல்வான்…
“இன்னைக்குமா?” என்று கேட்டுக் கொண்டே வண்டியை நிறுத்த, “வேலையை சீக்கிரம் எடு டி” என்று சொல்லிக் கொண்டே, கையை நீட்டினான்…
நானும் கையை நீட்ட, “ஆல் தெ பெஸ்ட்” என்று சொன்னான்…
“தேங்க்ஸ்” என்று சொல்லி விட்டு மேலும், “நீங்க வேலைக்கு போகலையா?” என்று கேட்க, “போக தான், உன்னை பார்த்துட்டு போக வந்தேன்” என்றபடி தனது பைக்கில் ஏறிக் கொண்டான்.
“வேலை எடுத்தா, நான் கேட்டது கிடைக்குமா?” என்று கேட்டேன்…
ஒரு கணம் திரும்பி என்னை ஆழ்ந்து பார்த்து விட்டு, “ம்ம் கண்டிப்பா” என்றான்…
சிரிக்கவில்லை…
சாதாரணமாக சொன்னான்…
அவன் உணர்வை என்னால் கணிக்க முடியவில்லை…
அதனை பிறகு ஆராயலாம் என்று நினைத்து விட்டு, “அப்போ வேலையோட வர்றேன்” என்று சொல்ல, அவன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியது இப்போது தெரிந்தது…
“ம்ம்” என்று சொல்லி விட்டு வண்டியை கிளப்பி விட்டான்.
நானும் நேர்முக தேர்வுக்கு சென்றேன்…
ஐந்து பேர் தான் தெரிவு செய்வதாக இருந்தது…
வந்து இருந்தவர்கள் இருபதை தாண்டியது…
இது தான் கடைசி நேர்முக தேர்வு.
இதில் தெரிவாகி விட்டால், வேலை நிச்சயமாகி விடும்… இன்றே பதில் சொல்வதாக தான் சொல்லி இருந்தார்கள்…
ஒவ்வொருவராக சென்று வர வர எனக்கு இப்போது தான் பயம் பிடித்தது…
ஊரில் இருக்கும் எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொண்டேன்…
அடுத்து நான் உள்ளே செல்ல வேண்டும்…
தட்டு தடுமாறி உள்ளே சென்று விட்டேன்…
மூவர் அமர்ந்து இருந்தார்கள்…
நானும் அமர்ந்து கொண்டேன்…
வேலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்கின்ற மனநிலையை கொண்டு வந்தேன்…
கொஞ்சம் பதட்டமும் பயமும் குறைந்தது…
அவர்கள் கேள்விகளை அடுக்கினார்கள்.
ஓரிரெண்டு கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை…
முடிந்தவரை எல்லாவற்றுக்கும் பதில் சொன்னேன்…
எல்லாம் பிரபஞ்சன் சொல்லி கொடுத்தது தான்…
அவனாக இருந்தால் ஒரு கேள்வி விடாமல் பதில் சொல்லி இருப்பான்…
உலக அதிசயமாக, என்னை வேலைக்கு எடுத்து விட்டார்கள்…
நம்ப முடியவில்லை…
ரகசியமாக கிள்ளிப் பார்த்தேன்…
ஆம் தெரிவாகி விட்டேன்…
என்னை வேறு தகவல்கள் பெற்றுக் கொள்ள உள்ளே அழைத்துக் கொண்டார்கள்…
எனக்கு வானில் பறக்கும் உணர்வு…
பிரபலமான ஐ டி கம்பெனி அது…
அதுவும் அமெரிக்காவை மையமாக கொண்டு நடக்கும் நிறுவனம் வேறு…
“வேலை கிடைச்சிடுச்சு” என்று என்னவனுக்கு மேசேஜ் அனுப்பி விட்டு, அவர்கள் கேட்ட விபரங்களை கொடுக்க ஆரம்பித்து இருந்தேன்…
அவனிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை…
பிஸியாக இருப்பான் என்று யூகித்துக் கொண்டே, ஒரு வழியாக அங்கிருந்து வெளியேற மதியம் கடந்து விட்டது…
ஒரு வாரத்தில் வேலைக்கு ஜாயின் பண்ணுவதாக கூறிய நான், வெளியே வந்து அம்மாவுக்கு அழைத்து விஷயத்தை சொன்னேன்…
“ரொம்ப சந்தோசம் மா” என்றார்…
அதனை தொடர்ந்து, ஜேம்ஸுக்கும் மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்…
இன்னும் பிரபஞ்சனிடம் இருந்து பதில் வரவில்லை…
அவனும் வேலைக்கு சேர்ந்த புதிது தானே…
வேலை நேரத்தில் அவ்வளவு பேசுவதும் இல்லை அவன்…
அதனால் நானும் அலட்டிக் கொள்ளவில்லை…
வேலை கிடைத்த சந்தோஷத்தில் தூக்கம் தான் வந்தது…
கேட்கும் உங்களுக்கு புதுமையாக இருக்கலாம்…
எனக்கு வந்தது…
நான் என்ன செய்யட்டும்…
மதியம் நன்றாக சாப்பிட்டு விட்டு, தூங்கி விட்டேன்…
ஓரிரு மணி நேர தூக்கம் அல்ல, ஐந்து மணி நேர தூக்கம்…
மாலை ஐந்து மணி போல அலைபேசி அலறி தான் என்னை எழுப்பியது…
எடுத்தது என்னவோ பிரபஞ்சன் தான்…
தூக்க கலக்கத்திலேயே அலைபேசியை காதில் வைத்தேன்…
குரலிலேயே தூங்கி வழிகின்றேன் என்று கண்டு கொண்டான்…
“ஹேய், தூங்குனது போதும், ரெடி ஆகி நான் சொல்ற காஃபி ஷாப்புக்கு வா” என்றான்…
எனக்கோ அடித்து போட்ட போல தூக்கம்…
“நாளைக்கு பார்க்கலாம் பிரபஞ்சன்” என்றேன் கெஞ்சுதலாக.
“நீ கேட்டதை தரலாம்னு இருக்கேன், வேணாமா?” என்று கேட்டான்…
சட்டென விழிகளை விரித்துக் கொண்டேன்…
முத்தமிட போறானா? நம்ப முடியவே இல்லையே… இதயத்தில் ஒரு வித பயமும் ஆர்வமும்…
அடித்து பிடித்துக் கொண்டே சென்றால் அலைகின்றேன் என்று நினைத்து விடுவான் என்று தோன்ற, “இல்ல, வேணாம், நான் சும்மா தான் கேட்டேன்” என்றேன்…
“அப்போ ஓகே, நீ தூங்கு” என்று சொல்ல, என்னையே நான் செருப்பால் அடித்தால் என்ன என்று தோன்றியது…
பேசியே காரியத்தை கெடுத்து விட்டேனே…
“எப்போ வேணாம்னு சொல்லுவேன்னு பார்த்துட்டு இருந்தீங்களா?” என்று கேட்டேன்… சத்தமாக சிரித்துக் கொண்டான்…
“சிரிக்காம விடை சொல்லுங்க” என்று சொல்ல, “நீ வேணாம்னு சொன்ன அப்புறம், நான் என்ன பண்ணுறது?” என்று கேட்டான்…
“அப்போ நான் கேட்டேன்னு தான் கொடுக்க ரெடி ஆயிட்டிங்க… உங்களுக்கு அந்த ஃபீலிங்கே இல்லையா?” என்றேன் ஆதங்கமாக…
ஏதோ வேண்டா வெறுப்பாக பேசினால் கோபம் வருமா இல்லையா எனக்கு?
“இருக்கா இல்லையான்னு நீ ஃபீல் பண்ணி தெரிஞ்சுக்கோ” என்றான்…
“கிஸ் பண்ணுற அளவுக்கு தைரியம் இருக்கா என்ன?” என்று கேட்டேன்…
“பார்க்க தானே போற” என்றான்…
“சரி அத பார்க்கவாச்சும் நான் ரெடி ஆகி வர்றேன்” என்றேன்…
நான் பேசுவது அபத்தம் என்று எனக்கே தெரியும்…
ஆனால் முத்தத்துக்கு அலைவது போல இருக்க கூடாது என்று நினைத்து சமாளிப்பது போல பேசிக் கொண்டேன்…
அது அவனுக்கும் தெரியும்…
தெரிந்த போல அவன் அதனை காட்டி என்னை சங்கடப்படுத்தவில்லை…
“வாடி சீக்கிரம்” என்றான்…
“ம்ம் அட்ரஸ் அனுப்புங்க” என்று சொல்லி விட்டு வைத்து விட்டேன்…
அதனை தொடர்ந்து, முகத்தை அடித்து கழுவி விட்டு, முக்கியமாக பற்களை விலக்கு விலக்கு என்று விலக்கினேன்…
முத்தமிடும் போது அசௌகரிகம் உண்டாக கூடாது என்று என்னென்னவோ ஆயத்தங்கள் என்னிடம்…
எனக்கே சிரிப்பாக இருந்தது…
இதெல்லாம் செய்து விட்டு போய் முத்தம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது என்கின்ற எண்ணமும் எனக்குள்…
சிவப்பு நிற சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டே, ஆயத்தமாகி வெளியே வந்தேன்…
“இந்த நேரத்துல எங்க போக போற?” என்று நேரத்தைப் பார்த்துக் கொண்டே அம்மா கேட்டார்…
நேரம் ஐந்தரை மணி ஆகி விட்டதே…
“ஃப்ரெண்டுக்கு ட்ரீட் மா” என்றேன்…
“சீக்கிரம் வந்திடும்மா” என்றார்.
“ம்ம்” என்று சொல்லிக் கொண்டே சென்ற எனக்கு சீக்கிரம் வீட்டில் விஷயத்தை உடைத்து விட வேண்டும் என்கின்ற எண்ணம் தான்…
இனி தடை என்று எதுவும் இல்லையே…
ஒரு வழியாக ஸ்கூட்டியில் அவன் சொன்ன காஃபி ஷாப்புக்கும் வந்து சேர்ந்து விட்டேன்…
அவன் பைக் முன்னால் நின்றது…
பார்த்துக் கொண்டே, உள்ளே சென்றேன்…
விழிகளை சுழல விட்டேன்…
கையசைத்து என்னை அழைத்தான்…
அவனும் சிவப்பு நிற கட்டம் போட்ட ஷேர்ட் தான் அணிந்து இருந்தான்…
என் இதழ்களுக்குள் மெல்லிய புன்னகை…
வெட்கத்தை அடக்கிக் கொண்டே, அவன் முன்னே வந்து அமர்ந்தேன்… என்னையே பார்த்து இருந்தவன், “கங்கிராட்ஸ்” என்றான்…
“தேங்க்ஸ்” என்றேன் மென் சிரிப்புடன்…
“காஃபி ஆர்டர் பண்ணட்டுமா?” என்று கேட்டான்…
“ட்ரீட் நான் தானே தரணும்” என்றேன்…
“சரி நீயே ஆர்டர் பண்ணு” என்று அவன் சொல்ல, நானும் காஃபி ஆர்டர் செய்தேன்…
வேலையை பற்றியே பேசினான்…
முத்தத்தை பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை…
எனக்கோ ஏமாற்றம்…
கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை மோதமாக போய் விட்டது…
பல் எல்லாம் விலக்கி விட்டு வந்தேனே என்று நினைத்துக் கொண்டேன்…
காஃபியை குடித்து முடிய, “லேட் ஆகுதா? என் கூட ரைட் வர்றியா?” என்று கேட்டான்…
உலக அதிசயமாக பைக்கில் அழைத்து செல்ல கேட்கின்றான்…
மறுப்பேனா?
“லேட் ஆகுது தான்… பரவாயில்லை போயிட்டு வரலாம்” என்றேன்…
ஏதோ பிடிக்காத போல ஒரு பாவனை என்னிடம்…
அவனுக்கோ சிரிப்பு ஒரு பக்கம்… அடக்கிக் கொண்டே, “ம்ம் வா” என்று சொல்லிக் கொண்டு முன்னால் செல்ல, நானும் பின்னால் சென்றேன்…
அவன் பைக்கில் ஏறிக் கொள்ள, நானும் ஏறிக் கொண்டேன்…
முதன் முறை அவனுடன் பைக்கில் பயணம் செய்கின்றேன்…
விழுந்து விடாமல் அவனது தோள்களை பற்றிக் கொள்ள, அவனும் பைக்கை கிளப்பி இருந்தான்…
குளிர்ந்த காற்று முகத்தில் அடித்தது…
ரம்மியமாக இருந்தது…
வண்டியும் அங்கும் இங்கும் ஓடி, ஒரு பாழடைந்த கட்டிடம் அருகே வந்து நின்றது…
நானும் சுற்றி பார்த்து விட்டு, “இங்க எதுக்கு அழைச்சு வந்தீங்க?” என்று கேட்டபடி இறங்கிக் கொள்ள, “ஆஹ் கேட்டதை கொடுக்க வேணாமா?” என்று கேட்டான்…
எனக்கு தூக்கி வாரிப் போட்டது…
கிடைக்காது என்று நினைத்தது கிடைக்க போகின்றது என்று படபடப்பு…
காட்டிக் கொள்ளாமல், “இந்த இடம் எப்படி தெரியும்?” என்று கேட்டேன்…
“நம்ம பேட்ச் பாய்ஸ் லவ்வர்ஸ் எல்லாம் அழைச்சிட்டு இங்க தான் வர்றதா சொல்லி இருக்கானுங்க, பிரைவேட் ப்லேஸ் தான்” என்றான் சுற்றி பார்த்துக் கொண்டே…
“நீங்க இதெல்லாம் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசுவீங்களா என்ன?” என்று கேட்டுக் கொண்டே கூடவே நடந்தேன்…
“ம்ம், எல்லாமே பேசுவோம்” என்று சொல்லிக் கொண்டே, என்னை இழுத்து அங்கே இருந்த சுவரில் சாய வைத்து, ஒற்றைக் கையை சுவரில் ஊன்றியபடி நெருங்கி நின்றவன், “எங்க கொடுக்கணும்னு சொல்லு கொடுத்துடுறேன்” என்றான் என் விழிகளை பார்த்துக் கொண்டே…
எனக்கு கோபம் தான் வந்தது…
ஏதோ எனக்காக தான் முத்தமிடுவது போல பேசிக் கொண்டு இருந்தால் கோபம் வருமா இல்லையா?
“எனக்காக எதுவும் செய்யாதீங்க, உங்களுக்கு ஃபீல் இருந்தா மட்டும் பண்ணுங்க, இல்லன்னா நோ ப்ராப்லம்” என்று சற்று காட்டமாக சொல்லிக் கொண்டே நகர முற்பட்டேன்…
சட்டென இழுத்து, சுவரில் சாய வைத்து, இதழ்களுடன் இதழ்களை பொருத்தி இருந்தான்…
எனக்கு தூக்கி வாரிப் போட்டது…
விழிகளை மூட கூட இல்லை…
எதிர்பாராத முத்தம் கிடைத்த அதிர்ச்சியில் அப்படியே நின்று இருந்தேன்…
மெதுவாக விலகியவன், “டீப் கிஸ் கேட்டுட்டு, வாயை இறுக மூடி இருந்தா என்ன அர்த்தம்? திறடி” என்றான்…
எனக்கு வார்த்தைகளே வரவில்லை…
அப்படியே விறைத்து போய் நின்று இருக்க, பெருவிரலால் இதழ்களை வருடி விட்டு, மீண்டும் இதழ்களில் இதழ்களை பதித்தான்…
இம்முறை என் விழிகள் அவன் முத்தத்தினை அனுபவித்தபடி மூடிக் கொண்டன… அவன் கேட்ட போல இதழ்களை திறந்து அவனுக்கு வழியமைத்துக் கொடுத்தேன்.
அவனுக்குள் இவ்வளவு உணர்வுகளா? என்று எனக்கு இன்று தான் தெரிந்தது…
அதிர்ச்சியும் ஆச்சரியமும் தான்…
வெட்கமும் கூச்சமும் கூட எட்டிப் பார்த்தது…
நீண்ட நெடிய முத்தமிட்டு விலகி, என் விழிகளை பார்த்தவன், “நான் ஒன்னும் சாமியார் இல்ல” என்றான் கிறக்கமாக…
“மேம் எனிதிங் டு ட்ரிங்க்” என்கின்ற விமான பணிபெண்ணின் கேள்வியில் சட்டென நிதானத்துக்கு வந்து இருந்தேன்…
நினைவுகளில் வந்த அந்த வெட்கம் இன்னும் எனக்குள் அப்படியே இருந்தது…
படம் என்னென்னவோ காட்சிகளை தாண்டி சென்று இருக்க, “வன் ஆப்பிள் ஜூஸ்” என்று அதனை பெற்றுக் கொண்டு, மீண்டும் படத்தை பார்க்க தொடங்கினேன்…
அவன் முதல் முத்தம் என்றும் மறக்க முடியாதது…
இன்னும் என் நினைவலைகளில் இருந்து அகலாத முத்தம் அது…
அவன் கல்வியில் மட்டும் அல்ல, முத்தமிடுவதில் கூட கை தேர்ந்தவன் என்று எனக்கு அன்று அறிந்து கொண்டேன்…
இன்னும், அவனிடம் நான் சொன்ன அந்த வார்த்தைகள் இன்னும் எனக்குள் ஒலித்துக் கொண்டு இருந்தன…
“ஃபெர்ஸ்ட் கிஸ்ஸை கூட இவ்ளோ பேர்ஃபெக்ட் ஆஹ் கொடுக்க முடியும்னு இன்னைக்கு தான் தெரியும்” என்றேன்…
அவன் சிரித்துக் கொண்டான்…
அந்த சிரிப்பில் ஆண்களுக்கு உண்டான ஆளுமையான வெட்கமும் ஒளிந்து இருந்தது…
error: Content is protected !!