சம்யுக்தாவின் செய்கை அனைத்தையும், அதே மாறாத சிரிப்போடு பார்த்திருந்த இனியாளின் முகத்தை பார்த்த தனத்திற்கு நிம்மதியாக இருந்தது.
இப்போது இருக்கும் இதே மகிழ்ச்சி.. எப்போதும் அவள் முகத்தில் மீண்டும் தொலைந்து போகாமல் நிலைத்திருக்க வேண்டுமே..?! என்ற எண்ணமும் இடையில் எழாமல் இல்லை.
Advertisement
“என்னம்மா, இப்படி பாத்துட்டு இருக்கீங்க..?” என தனத்திடம் கேட்டாலும், அவருக்கான பதத்தில் குடிக்க டீயை போட்டுக்கொண்டிருந்தது அவளின் கரங்கள்.
“எல்லா வேலையும் நீயே செய்யனுமாடா..? அந்த குட்டி கழுதைய கூடமாட எதாவது செஞ்சு கொடுக்க சொல்ல வேண்டியது தானே..?” என குறைபட்டுக்கொண்ட தனத்திடம்,
Advertisement
Advertisement
“அவ இன்னும் சின்ன பொண்ணு தானே.. போக போக மெல்ல கத்துக்கட்டும்..” என்றாள் இனியாள் மென்மையாக.
“என்ன சின்ன புள்ள..? காலேஜ் முடுச்சிட்டா. கேம்பஸ்ல செலக்ட் ஆகி, இன்னைக்கு வேலைக்கு போக போறா.
Advertisement
ஆனா பாரு, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம.. குழந்தைக்கு சமமா விளையாண்டுட்டு இருக்கா. எல்லாமே நீ கொடுக்கற செல்லம் தான்..” என்று கடிந்து கொள்ள,
“விடுங்கம்மா. அவ பொறுப்பில்லாத பொண்ணு இல்ல. நம்மகிட்ட மட்டும் தான் இப்படி விளையாடிட்டு இருக்கா..” என தங்கைக்காக பரிந்து வந்தாள் இனியாள்.
“என்னமோ போ. நீ தான் அவள மெச்சிக்கனும்..” என சலித்தாலும்,
அவருக்கும் தன் மகளைப் பற்றி தெரியும் என்பதால், பேச்சு வாக்கிலேயே இனியாள் கொடுத்த டீயை அருந்தி முடித்தவர், டாக்டரின் பரிந்துரைப்படி.. தனது நடைபயிற்சிக்காக வீட்டிலிருந்து வெளியேறினார்.
“என்னக்கா.. தாய் கிழவி வாக்கிங் போயிடுச்சா..?” என கேட்டவாரே, தலையை துவட்டி கொண்டு வந்த சம்யுக்தாயை கண்டிப்போடு பார்த்தவள்,
“சம்யும்மா.. தப்புடா.. அம்மாவ அப்படி சொல்லாதே. நீ கூப்பிடறத பார்த்தா வெண்பாவும் அதை செய்வா.. ஒழுங்கா அம்மான்னு சொல்லு..” என பெரியவளாய் சின்னவளின் தவறை எடுத்துரைக்க,
“எல்லோரு உன் மாதிரி பேடு கேளா இருப்பாளா..? வெம்பா அம்மா பெஸ்ட்..” என்று சமையல் அறை வாயிலில் கேட்ட வெண்பாவின் மழலைக்குரலில், அவளிடம் அக்கா தங்கை இருவரின் கவனமும் திரும்பியது.
“வாடீ சிலுப்பீ.. வடுஞ்ச ஜொல்லு கூட போகாம வந்து நின்னுட்டு, நா பேட் கேர்ளா..? நீ தான்டீ பேட் பேட் பேட் கேர்ள்..” என சம்யுக்தா சொன்ன நொடி,
அவ என்ன நம்பி குளிக்க கூட வரமாட்டாளாம். இனி, நா ஏன் செய்ய போறேன்…?
நீயாச்சு உன் பொண்ணாச்சு..” என்றவிட்டு முகத்தை திருப்பிய சம்யுக்தாவின் உக்தி நன்றாக அதன் வேலையை காட்ட,
“அம்மா வேணா. சித்தா குளிச்சா..” என நொடியில் மின்னும் கண்களுடன் தன்னிடம் தாவிய சிறுமலரை அள்ளிக்கொண்ட சம்யுக்தாவும், கிச்சு கிச்சு மூட்டியபடி பாத்ரூமுக்குள் அழைத்து சென்றாள்.
அவர்களின் சிரிப்பு சத்தம் அந்த அறையை தாண்டி கேட்க, இரு புறமும் தலையை ஆட்டி புன்னகைத்த இனியாளோ, சமைத்த பாத்திரங்களை கழுவிவிட்டு.. உடை மாற்ற சென்றவள், மறக்காமல்.. தனது மகளுக்கான உடையையும் பெட்டின் மீது எடுத்து வைத்தாள்.
நிம்மதியாக சிரிப்போடு இருக்கும் இந்த குடும்பத்தின் நிம்மதி இனி வரும் காலத்தில் நிலைக்குமா..?!