அவளின் ஆதியானவன் – 32
அத்தியாயம் 32:
அரவிந்த் சந்தியாவிடம் “நீ ஏம்மா பேசமாட்ட. லட்டு மாதிரி பொண்ணு கல்யாணம் பண்ணிக்க கிடைச்சும், தூக்கி எதிரி கையில குடுத்துட்டு போனேன்ல. நீ இதுவும் பேசுவ இதுக்கு மேலையும் பேசுவ” என்றான்.
“கோச்சுக்காதீங்க தலைவரே. இப்ப என்ன நடந்துபோச்சு. முதல்ல சொல்லுங்க. நீங்க எப்ப வந்தீங்க. எப்படி இருக்கீங்க”
“ம் பெரிய மனசுதான். மேடம்க்கு என்ன பத்தி தெரிஞ்சுக்க கூட நேரம் இருக்கா. நா காலைல வந்து ஊருக்குள்ள என்ட்ரி ஆகி வீட்டுக்கு கூட போகல. ஒரு கால். என்ன ஒரு ஆச்சரியம் . நம்ம எதிரி. என்னடான்னு கால் அட்டென்ட் பண்ணா, அவரு பொண்டாட்டிக்கு ஆபத்தாம். நான்தான் காப்பாத்தி குடுக்கணும்ன்னு ஒரே கதறல்” என்றவன் வித்தியாசமாக தன்னை பார்த்து கொண்டிருந்தவளை திரும்பி பார்த்து
Advertisement
“என்ன பாக்கிற. உன்ர புருஷன்தான். சரி எதிரியா இருந்தாலும் நம்ம பயலா போய்ட்டான். சரி கழுதைய காப்பாத்தி போடுவோமேன்னு லன்ச் கூட சாப்புடாம வந்தா நீ என்ன பாத்து உன்ர நாக்கு மேல பல்ல போட்டு பேசற”
“சரி தலைவரே, எனக்கு என்ன ஆபத்தாம்”
“ம் அதுதான் ஆதி, அரவிந்த், ஸ்ரீதர் தான் லிஸ்ட்ல இருக்காங்கன்னு பாத்தா, எங்களுக்கு முன்னாடியே உங்கிட்ட ஒருத்தன் சிக்க இருந்தானாமே. எஸ்கேப் ஆனவன் அப்படியே போயிருந்தான்னா, இப்ப அரைமெண்டலா இருக்கவன் அப்படியே இருந்திருப்பான். பாவி பய. திரும்ப உன்ன தேடி வந்துருக்கானாமே. ம்ஹ்ம் அவன் இனிமே முழு மெண்டல்தான்” என்றதும் கையிலிருந்த காலேஜ் பேக்கால் அவனை மொத்தியவள்,
Advertisement
“ஒழுங்கா சொல்லுங்க. என்ன பிரச்சனை” என்று கத்தினாள்.
Advertisement
“அட என்னம்மா. அந்த தீபன் ஈவினிங் உன் மாமா காரை மடக்கி உன்ன தூக்க பிளான் போட்ருக்கானாம். அதான் அதுக்கு முன்னவே உன்ன என் கார்ல வர சொல்லிட்டானுங்க. உன் மாமா மட்டும் தனியா அவனை டீல் பண்ண போறானாம். இதெல்லாம் புதுசா டீஸிபி ஒருத்தன் நம்ம ஊருக்கு வந்துருக்கான். அவனும் உன்ர மாமாவும் சேந்து பிளான் போட்ருக்கானுங்க”
“எதுக்கு மாமா போகணும். அதான் நான் வீட்டுக்கு வந்துட்டேன்ல்ல” என்றுவிட்டு போனை எடுத்து ஆதிக்கு கால் செய்தாள். போனை எடுக்கவே இல்லை ஆதி.
திரும்ப திரும்ப கால் செய்தும் எடுக்காததால் அரவிந்திடம் “நா வீட்டுக்கு போக மாட்டேன். நீங்க கார திருப்புங்க. நம்ம காலெஜ்க்கே போகலாம்” என்று அடம் பண்ணியவளிடம் “இல்ல சந்தியா. ஆதி தனியா வந்து அந்த தீபன் அட்டாக் பண்ணா, கொலை முயற்சி கேஸ்ல அவனை பிடிச்சி உள்ள போடலாம். அட்லீஸ்ட் அவனால நமக்கு ஆபத்துன்னு கம்ப்லைண்டாவது கொடுக்கலாம். இப்ப உன் விஷயத்துல எதுவுமே செய்யா முடியாம பயந்துட்டே இருக்க வேண்டாம் பாரு” என்றவனிடம்
Advertisement
“மாமாக்கு எதாவது ஆச்சுன்னா என்ன பண்றது அரவிந்த். எனக்கு பயமாருக்கு. இந்த விஷ பரிட்சையெல்லாம் வேண்டாம். அதான் போலீஸ் இருக்காங்கல்ல. அவங்க பிடிக்கட்டும். நா கம்பளைண்ட் கொடுக்கிறேன்”
“அதெல்லாம் சரிப்பட்டு வராது. உன் மாமா ஒத்தையா பத்து பேர சமாளிப்பான். அவனை பத்தி உனக்கு தெரியாது. இதோ உன்ன வீட்ல விட்டுட்டு நானும் வசந்தும் அங்கதான் போறோம். போலீசும் கரெக்டா அந்த இடத்துக்கு வந்துருவாங்க. எல்லாம் கரெக்ட்டா ஸ்கெட்ச் போட்ருக்காங்க. அதிலையும் அந்த டீஸிபி விஜய் இருக்கானே. அவன் உன்ன விட கேடி. பக்காவா பிளான் போட்ருப்பான். பயப்படாத” என்றுவிட்டு அவளை வீட்டில் சிவகாமியிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பிய அரவிந்த் வழியில் வசந்தனை ஏற்றி கொண்டு திரும்பவும் கோவை பாதையில் சென்றான்.
இங்கு ஆதி கல்லூரியில் இருந்து கிளம்பினான். அவன் ஊருக்கு வரும் பாதையில் திரும்பியதும் ஒரு டொயோட்டா கார் அவனை பாலோவ் பண்ண ஆரம்பித்தது.
சிறிது நேரத்தில் ஆள் அரவமற்ற இடம் வந்தவுடன் ஆதியின் காரை முந்தி கொண்டு போய் அவனை மறைத்தவாறு நின்றது. அதிலிருந்து இறங்கினான் தீபன். அவனுக்கு பின்னால் ஒரு எட்டு பேர் தடி தடியாக நின்றார்கள் கையில் ஆயுதங்களுடன்.
ஆதியும் அலட்டி கொள்ளாமல் காரிலிருந்து இறங்கினான். அவனிடம் தீபன் “ஒழுங்கா என் டாலிய இறக்கி விட்டுட்டு நீ போயிட்டே இரு. உன்ன ஒண்ணுமே பண்ண மாட்டோம். நீ போயிட்டே இருக்கலாம்” என்றான்.
“ஏண்டா. என் பொண்டாட்டிய உன்னட்ட விட்டுட்டு போக என்னை என்ன சொம்பன்னு நினைச்சியாடா” என்றபடி வேட்டியை மடித்து கட்டியவன், காரின் கதவை திறந்து, சீட்டுக்கு அடியில் இருந்து ஒரு நீளமான இரும்பு ராடை எடுத்தான்.
ஆதி கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாக சிலம்ப பயிற்சியில் இருப்பவன். ஒவ்வொரு வருட திருவிழாவிலும் தவறாமல் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டி செல்பவன்.
இப்பொழுது இரும்பு ராடை கையில் பிடித்து கொண்டு தீபனிடம் “வாடா. தைரியமிருந்தா வந்து என் பொண்டாட்டிய கூட்டிட்டு போடா” என்றதும் அடியாட்களை முன்னே அனுப்பினான் தீபன்.
முதலில் இருவர் அரிவாளுடன் வேகமாக ஆதியை வெட்ட வந்தனர். அவர்களை அனாயாசமாக ராடால் தடுத்து கால்களால் எட்டி உதைத்தான். பிறகு எல்லோருமே சேர்ந்து வந்து அவனை சுற்றி கொண்டனர்.
கம்பியால் அவர்களை தடுத்து பந்தாடி கொண்டிருந்தான். அந்த இடைவெளியில் தீபன் காரை நெருங்கி திறந்து பார்த்தவன், உள்ளே யாருமில்லை என்பதை தெரிந்து கொண்டு “ஷிட். ஏமாத்திட்டான்” என்று கதவை வேகமாக அடித்தவன் ஆக்ரோஷமாக ஆதியிடம் வந்தான்.
இவ்வளவு நேரம் ஆதி தன்னை தற்காத்து கொண்டிருந்தானே தவிர யாரையும் பெரிய அளவில் தாக்க வில்லை. ஆனால் தீபன் அவனை நெருங்கி வந்ததும் கையிலிருந்த ராடால் அவன் கால் முட்டியில் வேகமாக தாக்கினான். என்ன தைரியமிருந்தா என் பொம்முவ கேப்பான் இவன் என்று மனதில் இருந்த கோபத்தையெல்லாம் காட்டி ஒரு அடி . வலியில் சுருண்டு விழுந்தவனின் மேலே ஒரு காலை வைத்துக்கொண்டே மற்றவர்களை சமாளித்து கொண்டிருந்தான்.
அப்பொழுது பின் பக்கமாக அருண்,கௌரி, அருணின் பிரெண்ட்ஸ் நால்வர் என்று பைக்குகளில் வந்துவிட்டனர். அதிலெல்லாம் கவனம் சிதறாத ஆதி எதிரில் அரவிந்தின் ஸ்கோடாவை பார்த்ததும் நிதானம் தவறினான். ஒருவேளை சந்தியா வந்துவிட்டாளோ என்று அவன் பதறிய வேளையில் ஒருவனின் கத்தி தோள்பட்டையில் லைட்டாக கீறி சென்றது.
அதை பார்த்ததும் அரவிந்த் நிலைமையை புரிந்து கொண்டு கண்டேன் சீதையை என்பது போல் சந்தியா சேஃப் என்று கூறிக்கொண்டே ஓடி வந்தான். வசந்தன் அருண் பிரெண்ட்ஸ் அனைவரும் வந்து அவர்களை சுற்றி வளைத்தனர். போலீஸ் ஜீப்பும் வழக்கம் போல் கடைசியாக வந்தது. வந்தவர்கள் தீபன் அவன் அடியாட்கள் எல்லோரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்கள்.
ஆதி, அருண் கௌரியை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு, ஹாஸ்பிடல் சென்றுவிடலாம் என்று அரவிந்தும் வசந்தும் சொல்லியும் கேட்காமல் காயத்தில் ஒரு கட்டை மட்டும் போட்டுவிட்டு அவர்கள் சரக போலீஸ் ஸ்டேஷனிற்கு சென்று அங்கிருந்த தீபன் மேல் கொலை முயற்சி என்று வழக்கு பதிவு செய்தவன், தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் என்ன நடந்தாலும் தீபன்தான் முதற்காரணம் என்று எழுதி கொடுத்துவிட்டு ஹாஸ்ப்பிட்டல் சென்றான்.
ஸ்டேஷனில் இருக்கும் இன்ஸ்பெக்டருக்கும் டீஸிபியிடம் இருந்து முன் கூட்டியே ஆணை வந்திருந்ததால் அவரும் அதன் படி நடந்து கொண்டார். தீபன் மேல் எப்ஐஆர் போட்டுவிட்டார்.
ஹாஸ்ப்பிட்டலில் காயத்தில் தையல் போட்டு கொண்டிருந்தார்கள் ஆதிக்கு. அவன் வசந்த்திடம் காய்ந்து கொண்டிருந்தான். “என்னதுக்குடா நீங்க வந்தீங்க. உங்கட்ட குடுத்த வேலைய மட்டும் பாக்க வேண்டியது தான. என்ன பாத்துக்க எனக்கு தெரியாதா” என்று.
அதற்கு அரவிந்த் “அவன் அடிவாங்குறத பாத்துட்டு போலாம்ன்னு ஒரு ஆசை. அதான் வந்தேன். இவன காப்பாத்தவா நாங்க அவ்ளோ அவசரமா ஓடி வர்றோம். என்ன வசந்தா”
அதற்கு வசந்தை பார்த்து பல்லை கடித்த ஆதி “குடுத்தது ஒரு வேலை. அத கரெக்ட்டா பாக்க துப்பு ம….. கிடையாது. இதுல எல்லாத்திலையும் போட்டி வேற” என்றதும்
“யாரு சரியா வேலைய பாக்கல. அவன் பொண்டாட்டிய சேஃபா கொண்டு போய் வீட்ல விட்டுத்தான வந்தோம். இவனுக்கு ஒழுங்கா சண்டை போட தெரில. இதுல வருசா வருஷம் பஸ்ட் ப்ரைஸ் வேற” என்று மூணு முணுத்தான் அரவிந்த். அதே நேரம் தையல் முடிந்து ட்ரிப்ஸ் ஓடி கொண்டிருந்தது.
அப்பொழுது அங்கு மப்டியில் வந்தான் விஜயதேவ்வர்மன். “என்ன மேன் நீ. பத்து பேர அடிப்பேன்னு சொன்னியேன்னு நா வேற உன்ன அசால்ட்டா தனியா அனுப்பிட்டேன். இப்படி காயம் பட்டுட்ட” என்று அவன் கூறியதும் அரவிந்த் “ஹாஹா” சிரித்துவிட்டு, ஆதி அவனை திரும்பி பார்த்து முறைத்ததால் வாயை மூடி கொண்டு தோளை குலுக்கினான்.
விஜயும் அரவிந்தை திரும்பி பார்த்தவன் “சோ நீதான் அரவிந்த்?” என்று கேட்டுக்கொண்டே அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.
“ஆமா சார். என்ன எப்படி தெரியும்” என்றவனிற்கு “கால் மீ விஜய். ஆதிக்கு பிரெண்ட்ணா எனக்கும் பிரெண்ட்தான்” என்று அவன் கூறியதும் ஆதியும் அரவிந்தும் ஒரே சமயத்தில் அலறினார்கள் “என்ன இவன் எனக்கு பிரெண்டா……” என்று.
அவர்களை வினோதமாக பார்த்துவிட்டு வசந்தனை திரும்பி பார்த்தான் விஜய்.
“அண்ணா நல்ல நேரத்துல நீங் வந்தீங்கண்ணா. ரெண்டு போரையும் கொஞ்ச நேரத்துக்கு நீங்களே சமாளிங். எனக்கு ஒரே தலைவலிங் . நா ஒரு டி குடிச்சி போட்டு வரனுங்ண்ணா” என்றுவிட்டு வெளியே ஓடினான் வசந்தன்.
வசந்த் திரும்பி வரும் போது ஆச்சரியமாக ஆதியும் அரவிந்தும் அமைதியாக அமர்ந்து விஜய்யின் பேச்சை கேட்டு கொண்டிருந்தனர்.
அதாகப்பட்டது தீபனின் வரலாற்றைத்தான் சுருக்கமாக கூறி கொண்டிருந்தான் விஜய்.
“வீட்டிற்கு ஒரே மகன். அவன் அப்பா ஜி.கே அலைஸ் கல்யாண சுந்தரம் ஒரு ரவுடி. முதலில் சிறு சிறு ரவுடி வேலைகள் கட்ட பஞ்சாயத்து செய்து பெரிய ஆளானவன், நிறைய நிலங்களை அடித்து பிடுங்கி ரியல் எஸ்டேட் அதிபர் ஆனான்.
அவன் தாய் நல்ல குடும்பத்தை சேர்ந்த நல்ல பெண்மணி. இவனை தெரியாத்தனமாக காதலித்து திருமணம் செய்து ஏமாந்தவர். ரவுடியாக மட்டும் இல்லாமல் பெண் பித்தனாகவும் அவன் இருந்ததால் மனம் நொந்தவர். அவருக்கு ஒரே ஆதரவு மகன் தீபன். சிறு வயதிலிருந்தே தந்தையின் அராஜகத்தையும் தாயின் அழுகையையும் பார்த்து வளர்ந்ததால் தந்தையென்றால் வெறுப்பு. தாயென்றால் உயிர் அவனுக்கு.
இப்படி வளர்ந்தவன் மேற்கல்விக்கு கனடாவில் இருந்துவிட்டு, திரும்பிவந்து பெங்களூரில் ஒரு சிறு ஸ்டார்ட் அப் கம்பனி ஓபன் செய்துவிட்டு, தாயை தன்னுடன் வருமாறு அழைத்தான்.
அவன் தாய் வர மறுத்துவிட்டவர் சில நாட்களில் இறந்தும் விட்டார். ஏதேதோ நோய் என்று கூறினார்கள். அவர் இறந்த இருபதாம் நாளே இன்னொரு முப்பது வயது பெண்ணை மணந்து வீட்டிற்கு அழைத்து வந்த தந்தையை பார்த்து பெங்களூர் வந்தவன்தான் ஆக்சிடெண்டில் சிக்கி சந்தியாவை பார்த்தது” என்று சொல்லி முடித்தான் விஜய்.
அவன் முடித்ததும் அவனை பார்த்து அரவிந்த் ஒரு கேள்வி கேட்டான் “தீபன் நல்லவனா… கெட்டவனா…. விஜய்” என்று. அனைவரும் அவனை திரும்பி பார்த்து முறைத்தாரகள்.
