ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 19
பிடித்தம் 19
காலை எட்டு மணிக்கு கண்விழித்த மாலினி உற்சாகத்துடன்,
“இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
Advertisement
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
Advertisement
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
Advertisement
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்” என்ற பாடலை உற்சாகத்துடன் முணுமுணுத்தபடி குளியலைறை உள்ளே சென்றாள்.
இன்று அவளது பிறந்தநாள் என்பதோடு அவளது உற்சாகத்தின் முக்கிய காரணம் வெற்றிவேலின் பிறந்தநாள் வாழ்த்து தான். ஆம் இரவு பன்னிரெண்டு மணிக்கு வெற்றிவேல் அவளது கைபேசியில் அழைத்து அவளிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தான்.
Advertisement
அன்று உணவகத்தில் வெற்றிவேலை சந்தித்து வந்த பிறகு அவளது மனம் அவளுக்குத் தெள்ளத் தெளிவாக புரிந்தது. தன் மனம் வெற்றிவேலின் அன்பில் வீழ்ந்துவிட்டது என்பதை உணர்ந்தவள் தனது அன்பின் ஆழத்தை அறியும் பொருட்டு சிறிது காலம் அமைதியாக இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தாள்.
வெற்றிவேலை பற்றி இவளும் பெற்றோரிடம் பேசவில்லை அவர்களும் இவளிடம் பேசவில்லை ஆனால் மாலினி வெற்றிவேலை உணவகத்தில் சந்தித்தை பற்றி கிருஷ்ணமூர்த்தி அவளது பெற்றோரிடம் கூறியிருந்தான்.
வெற்றிவேலை மருமகனாக ஏற்றுக்கொள்ள இன்னமும் அருணாச்சலத்திற்கு தயக்கமாக இருக்கவும், மாலினி வெற்றிவேலை விரும்பினால் யோசிக்கலாம் என்ற முடிவில் இருக்க, அவளோ சுய ஆராய்ச்சியில் அமைதியாக நாட்களைக் கடத்தினாள்.
குளித்துவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தவளின் மனம் வெற்றிவேலுடன் நிகழ்ந்த கைபேசி உரையாடலை நினைத்துப் பார்த்தது.
நல்ல உறக்கத்தில் இருந்தவள் கைபேசியின் ஒலியில் ‘ப்ச் இந்த நேரத்தில் யாரு?’ என்ற நினைப்புடன் அரைக்கண் மட்டும் திறந்து பார்த்தவள் புதிய எண்ணாக இருக்கவும் அழைப்பை எடுக்காமல் தூக்கத்தை தொடர்ந்தாள்.
அழைப்பு மீண்டும் வரவும் எரிச்சலுடன் அழைப்பை எடுத்து காதில் வைத்தவள் அமைதியாக இருக்க,
“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மானு” என்ற வெற்றிவேலின் வாழ்த்தில் படக்கென்று எழுந்து அமர்ந்தவளின் தூக்கம் நொடியில் காணாமல் போயிருந்தது.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மானுமா” என்று மீண்டும் வாழ்த்தியவன் காதலுடன் மென்மையாக, “மானு” என்று அழைத்தான்.
அவள் தன்னையும் அறியாமல், “ஹ்ம்ம்” என்றாள்.
“பேச மாட்டியா?” என்றபோது அவனையும் மீறி சிறு ஏக்கம் எட்டிப் பார்த்ததோ!
மாலினி சட்டென்று, “தேங்க்ஸ்.. என் நம்பர் எப்படித் தெரியும்?”
“போலீஸ்காரனுக்கு போன் நம்பர் கண்டுபிடிக்கிறது கஷ்டமா?”
“அப்போ எது உங்களுக்கு கஷ்டம்?”
“என் மானுவோட சம்மதம்”
‘அதான் ஈஸியா சாச்சுட்டீங்களே!’ என்று மனதினுள் முணுமுணுத்தவள், “அப்போ என் அப்பாவோட சம்மதம் கிடைப்பது ஈஸியா?”
“நீ சம்மதித்தால் மாமா ஓகே சொல்லிடுவாங்க”
“அப்படியா!”
“அப்படி தான்.. சரி பர்த்டே பேபிக்கு என்ன கிப்ட் வேணும்?”
“நீங்க எதுக்கு எனக்கு கிப்ட் தரணும்?” என்று அவள் பிகுபண்ண,
“நான் தராம வேறு யாரு தருவா?”
“நீங்க யாரு எனக்கு கிப்ட் தர?”
“நீயே சொல்லேன் நான் யாரு உனக்கு?” என்று அவனது குரல் ஆழ்ந்து ஒலிக்க,
அவள் விளையாட்டை கைவிட்டவளாக அமைதியானாள்.
“மானு”
“ஹ்ம்ம்”
“பதில் சொல்லு”
“நான் தூங்கனும்”
“நான் தூங்க வேணாமா?”
“தூங்குங்க”
“என் தூக்கம் உன் பதிலில் தான் இருக்குது”
“இத்தனை நாள் தூங்காமலா இருந்தீங்க?”
“நிம்மதியான தூக்கம் இல்லை”
மீண்டும் அவள் அமைதியாகிவிட, அவன் மீண்டும் ஆழ்ந்த குரலில், “அன்னைக்கே உன் மனம் புரிஞ்சிடுச்சு.. இன்னைக்கு இந்நேரத்தில் என்னிடம் இவ்ளோ நேரம் அமைதியா பேசிட்டு இருக்கிறதில் இருந்தே உன் மனம் எனக்கு தெளிவா புரியுது.. அதை உன் வாயால் கேட்டா சந்தோஷப்படுவேன்”
“என்ன புரிந்தது?”
“வெற்றியின் மனதை மானு ஏற்றுக் கொண்டாள் னு புரிந்தது”
“எதை வச்சு சொல்றீங்க?”
“கத்தாம கோபப்படாம நீ கேள்வி கேட்கிறதே சான்று.. அதை விட என்னால் உன் மனதை உணர முடியுது.. அன்னைக்கே உன் கண்ணில் என் மீதான நேசத்தை பார்த்தேன்”
“அதெல்லாம் இல்லை”
“என் மீது ஆணையிட்டு கேட்கிறேன்.. உனக்கு என்னை பிடிச்சு இருக்குதா? என்னை உன் கணவனா ஏத்துப்பியா?”
“எனக்கு.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும் ப்ளீஸ்”
“சரி.. ஆனா டேக் யுவர் ஓன் டைம் னு சொல்ல மாட்டேன்.. எனக்கு பொறுமை ரொம்ப கம்மி”
“ஹ்ம்ம்”
“இன்னைக்கு மீட் பண்ணலாமா?”
“அதெல்லாம் வேணாம்” என்று அவசரமாக கூறினாள்.
ஆனால் அவன், “சரி விடு..” என்றதும் அவளது மனம் ஏமாற்றமடைந்தது.
அவன், “இப்போ சின்னதா பிறந்தநாள் பரிசு தரட்டுமா?”
“போன்லயா?”
“எஸ்”
“ஹ்ம்ம்”
“ஐ லவ் யூ மானுமா” என்று கூறி அழுத்தமாக முத்தம் கொடுக்க, அவள் அதிர்ச்சியில் கைபேசியை தவறவிட இருந்து இறுக்கமாக பிடித்தாள்.
கைபேசியில் கொடுத்த முத்தத்திலே நேரில் கொடுத்தது போல் அவளது உடல் சிலிர்த்தது.
“மானு.. லைன்ல இருக்கியா?”
“…”
“மானு!!”
“ம்”
“அடுத்த வருஷம் நேரில் தரேன்.. என்ன ஓகே வா?”
“அஹான்.. என்ன சொன்னீங்க?”
“பரிசு நல்லா இருந்ததா னு கேட்டேன்”
பதில் சொல்வதறியாது தினறியவள், “என்ன பரிசு?”
“கிடைக்கலையா? சரி அப்போ திரும்ப தரேன்”
[the_ad id=”6605″]
“இல்ல.. இல்ல.. கிடைச்சது”
அவன் உல்லாசமாக சிரித்தபடி, “அப்போ எப்படி இருந்தது னு சொல்லு”
“இது என்ன கேள்வி?” என்று அவள் சிணுங்க,
‘இப்படி சிணுங்கி போலீஸ்காரனை சுவர் ஏறி குதிக்க விட்டு திருடனா மாத்திடுவ போல!’ என்று அவன் முணுமுணுக்க,
‘அதான் ஏற்கனவே திருடனா மாறி என் மனதை திருடிட்டீங்களே!’ என்று அவளும் முணுமுணுக்க,
அவன் உற்சாக குரலில், “ஹே! இப்போ என்ன சொன்ன?”
“நான் எதுவும் சொல்லலை”
“ப்ச் சொல்லுடி”
“முடியாது போடா”
“ஓய்!!”
“என்ன!!”
“மானுமா சொல்லுடி” என்று அவன் கெஞ்ச,
அவளோ, “கோல்டன் வர்ட்ஸ் கேன்னாட் பி ரிபீட்டட்” என்றாள்.
“என் கிட்ட ஒரு நாள் சிக்காமையா போவ!”
“அதை அப்போ பார்த்துக்கலாம்”.. இப்போ நான் தூங்க போறேன்.. பை”
பெருமூச்சொன்றை வெளியிட்டவன், “ஹ்ம்ம்.. சரி.. என்னை பற்றிய இனிய கனவுகளுடன் தூங்கு.. பை டா மானுமா” என்றபடி அழைப்பைத் துண்டித்தான்.
அவனது முத்தம் அவளை மொத்தமாக சுருட்டியது என்றே சொல்லணும். அதை நினைத்துப் பார்த்தவளுக்கு இப்பொழுது கூட சிலிர்த்தது.
வெளியே தனக்காக காத்திருக்கும் அதிர்ச்சியை பற்றி அறியாமல் இனிய கனவில் மிதந்துக் கொண்டிருந்தாள்.
—————————————————————————————————————————————————
ரௌத்திரம் மின்னிய விழிகளுடன் கிருபாகரனை சுட்டெரித்துக் கொண்டிருந்த புகழ்வேந்தன் ‘புகழ்’ என்ற அன்னையின் அழைப்பில் சட்டென்று முகத்தை இயல்பிற்கு கொண்டுவந்து அன்னையை நோக்கிச் சென்றான். புகழ்வேந்தனின் சுயக்கட்டுப்பாட்டை கண்டு மனோஜ் ஆச்சரியம் கொண்டான்.
புகழ்வேந்தனை தொடர்ந்தவனின் பார்வையில் மித்ராணி விழவும் மனோஜின் நெஞ்சில் பெரும் வலி உண்டானது.
கிருபாகரன், “கிளம்பலாம்” என்று உறும,
“ஒரு நிமிஷம்” என்ற மல்லிகா புகழ்வேந்தன் மித்ராணி நோக்கி நகர,
கிருபாகரன், “மல்லிகா” என்று கோபத்துடன் அழைக்க, திரும்பி பார்த்தவர், “ரெண்டு வார்த்தை பேசிட்டு வரேன்”
“ஒன்னும் தேவை இல்லை.. அவ இப்போ என் எதிரியோட மனைவி”
“ஆனா இப்பவும் உங்க தங்கை மகள் தானே! அவள் மிசஸ் புகழ்வேந்தன் ஆனது உங்களு………..”
“என்ன! என்னையே எதிர்த்து பேசுறியா?”
“எதிர்த்து பேசலை எதார்த்தத்தைச் சொல்றேன்”
கிருபாகரன் கடுமையாக முறைத்தபடி, “என்ன! அவனோட அண்ணன் பையனதும் பாசம் பொங்குதோ!”
மல்லிகா அதீத வெறுப்புடன், “இப்படி பேசி என்னை மட்டுமில்லை உங்களை நீங்களே கேவலப்படுத்துறீங்க”
“ஆமா அப்படியே என்னோட சந்தோஷமா வாழ்ந்து கிழிச்சிட்ட!”
மல்லிகா துயரத்துடன் கண்களை மூடித் திறக்க,
“அப்பா வீட்டுக்கு போய் பேசிக்கலாம்.. இப்போ கிளம்பலாம்” என்ற மனோஜ் மல்லிகாவை பார்த்து, “அம்மா நாங்க காரில் வெயிட் பண்றோம்.. அஞ்சு நிமிஷத்தில் வந்திடுங்க.. அத்தை என்ன பண்ணப் போறாங்க னு கேட்டுக்கோங்க” என்றுவிட்டு கிளம்பினான்.
அவனால் அங்கே இருக்க முடியவில்லை. ‘அடுத்து என்ன செய்வது?’, ‘இதில் இருந்து எப்படி வெளியேறுவது?’, ‘ஏன் எனக்கு இப்படி ஒரு நிலை?’ என்ற கேள்விகள் எதற்கும் அவனிடம் பதில் இல்லை. அங்கே நிற்பது அவனுக்கு மூச்சு முட்டுவது போல் இருக்கவும் வேகமாக வெளியேறி இருந்தான். கிருபாகரனும் வெளியேறி இருந்தார்.
அன்னையின் அழைப்பில் புகழ்வேந்தன் சென்றதும் கலைவாணி, “இப்போ எதுக்கு தேவை இல்லாததைப் பற்றி பேசுற?” என்று மெல்லிய குரலில் கண்டித்தார். அவன் பேசியது அவருக்கு கேட்கவில்லை என்றாலும் அவனது முகத்தில் தெரிந்த கோபத்தை வைத்து அவன் எதை பற்றி பேசி இருப்பான் என்றதை யூகித்தே அவனை கண்டித்தார்.
அவனும் மெல்லிய குரலில், “எது மா தேவை இல்லாதது?” என்று சீற,
அவனைத் தீர்க்கமாக பார்த்தவர், “இன்னைக்கு உன் வாழ்க்கையோட சந்தோஷமான நாள்.. பழசை பற்றி யோசிச்சு தேவை இல்லாத குப்பையை மனசில் அடைக்காத”
“அம்மா.. நாம பட்ட கஷ்டம்…………..”
“கடந்த காலம் கடந்ததாவே இருக்கட்டும்.. கடந்த கால கசப்பை நினைத்து நிகழ் கால தித்திப்பை இழந்திடாத.. மித்ராவை கவனி”
மித்ராணி பெயரை கேட்டதும் அவனது பார்வை தானாக நான்கடி தள்ளி நின்ற மித்ராணியை நோக்கிச் சென்றது. சரியாக அதே நேரம் நிவேதாவின் குழந்தையை கொஞ்சியபடி மென்னகையுடன் திரும்பியவளின் பார்வை எதேர்ச்சையாக இவன் மீது பதிய, இவன் மென்னகையுடன் கண்ணடித்தான். அவள் கோபத்துடன் முறைத்துவிட்டு திரும்பிக்கொள்ள இவனது புன்னகை விரிந்தது.
மகனின் புன்னகையில் கலைவாணியின் மனம் சிறு நிம்மதி அடைந்தாலும் கிருபாகரன் விஷயத்தில் மகன் அடுத்து என்ன செய்ய போகிறானோ? என்ற கவலையும் மித்ராணி என்ன செய்ய காத்திருக்கிறாளோ? என்ற கவலையும் அவரது மனதை அரித்துக் கொண்டு தான் இருந்தது.
மித்ராணி, “பாப்பாக்கு பசிக்கப் போகுது.. போய் சாப்பிடு” என்று கூறவும் நிவேதா தலை அசைத்து கீழே சென்றாள்.
அப்பொழுது மல்லிகா வரவும் மித்ராணியின் மனமும் உடலும் இறுகியது.
மல்லிகா, “மித்து……..” என்று ஆரம்பிக்க,
மித்ராணி இறுகிய குரலில், “உங்களுக்கு வேண்டியது தான் நடந்துருச்சே! இன்னும் என்ன சொல்லப் போறீங்க?” என்றவள் அவர் பதில் சொல்லும் முன், “நீங்க கிளம்பும் போது உங்க நாத்தனாரையும் கூட்டிட்டு போய்டுங்க” என்றாள்.
பதில் சொல்வதறியாது திணறிய மல்லிகா அதிர்ச்சியுடன் கமலாவை பார்க்க, அவரோ கலங்கிய விழிகளுடன் மகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு காலத்தில் கிட்டதிட்ட இதை போன்றதொரு நிலையில் தானே தானும் இருந்தோம் என்று நினைத்த மல்லிகாவிற்கு ‘புகழ்வேந்தனை அனுசரித்து நன்றாக வாழ்’ என்று அறிவுரை கூற மனம் வரவில்லை. அவர் அமைதியாக இருக்கவும்,
மித்ராணி எரிச்சலுடன், “ச்ச.. ஒரே கூட்டமா இருக்குது.. சிலர் கிளம்பினா காத்தாவது வரும்” என்று கூற,
கண்களை துடைத்துக் கொண்ட கமலா, “அண்ணி வாங்க கிளம்பலாம்” என்றார்.
அன்னை சட்டென்று கிளம்புறேன் என்றதும் மித்ராணியின் மனம் ஒரு நொடி தவித்தது தான் ஆனால் அடுத்த நொடியே ‘என்னை பத்தி நினைச்சாங்களா? எனக்கு யாரும் வேணாம்’ என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு நிமிர்ந்து நின்றாள்.
மல்லிகா சத்தமின்றி பெருமூச்சை வெளியிட்டு அவளது கையை தட்டியபடி, “நல்லா இருடா” என்றவர் கழுத்தில் இருந்த தங்க சங்கலியை கழட்ட,
அவரது எண்ணம் புரிந்து சட்டென்று இரண்டடி பின்னால் நகர்ந்தவள் புகழ்வேந்தன் மேல் மோதி நின்றாள். யாரென்று அவள் திரும்பி பார்க்க, அவனோ அவள் தோள் மீது கைபோட்டு மல்லிகாவை பார்த்து, “எங்களுக்கு உங்களோட வாழ்த்தும் தேவை இல்லை பரிசும் தேவை இல்லை” என்றான்.
அவள் அவன் கையை தட்டிவிட முயற்சிக்க, “ராணி” என்று அழைத்தவன் அவள் அவன் முகம் பார்த்ததும் அவளது விழிகளை ஆழ்ந்து நோக்கியபடி அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “உன்னை பற்றி யோசிக்காதவங்க இரக்கப்படுவது போல் நீ தனித்து இருக்க வேண்டாம்.. அவங்க போனதும் கையை எடுத்துருவேன்” என்றான்.
அவள் முகத்தை அமைதியாக இருப்பது போல் வைத்துக் கொண்டாலும் உள்ளே எரிச்சலுடனும் கோபத்துடனும், ‘இரு டா.. எல்லாத்துக்கும் சேர்த்து வைச்சு உன்னை கவனிக்கிறேன்’ என்று பொருமினாள்.
அவளது மனதை படித்தவன் போல் அவன் மென்னகையுடன், “நீ கவனிக்கிறதுக்காக தான் அம் வெயிட்ங் மை டியர் அல்லிராணி” என்று அவளது காதில் ரசகியம் பேசினான்.
அவள் சிறு அதிர்ச்சியுடன் அவன் முகத்தை பார்த்து, “என்ன சொன்ன?”
சூரியனை பார்க்கும் அல்லியை போல் அவளது முகம் சற்று நிமிர்ந்து நோக்கியிருக்க, ரகசியம் பேச அவன் சற்று குனிந்து இருக்க, இருவரது முகமும் வெகு அருகில் இருக்க, புகைப்படம் பிடிப்பவர் இந்த அழகான காட்சியை தனது கருவியில் படம் பிடித்தார். அந்த புகைப்படம் மிக அருமையாக இருந்தது. ஆம் மனம் ஒத்து திருமணம் புரிந்தவர்கள் போன்று காட்சியளித்தது. அவளது தோளில் அவன் கை போட்டிருந்தது சற்று அணைத்தார் போல் காட்சியளிக்க, புகழ்வேந்தன் கண்ணில் காதலுடன் கூடிய சிறு மயக்கம் தெரிய மித்ராணியின் சற்று விரிந்த விழிகளில் சிறு ஆச்சரியம் தெரிந்தது.
அவன் மென்னகையுடன், “நீ என்னை கவனிக்க தான் காத்திருக்கிறேன் னு சொன்னேன்” என்று கூறி கண்சிமிட்ட, சட்டென்று எழுந்த கோபத்துடன் அவனது பிடியை உதறியவள், “டேய் நான் என்ன சொன்னேன்?”
அவள் மீதிருந்த கையை எடுத்து இயல்பாக நின்றபடி, “என்ன சொன்ன?” என்றான்.
“ஹ்ம்ம்.. இன்னொரு முறை கண்ணடித்த இப்படி தான் செய்வேன்” என்றபடி வலது கை ஆள்காட்டி விரலால் அவனது வலது கண்ணை குத்தினாள்.
‘அடி பாவி!’ என்று ஒரு நொடி அவன் மனம் நினைத்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கண்ணை கையால் துடைத்தபடி இயல்பான குரலில், “கண்ணை நோண்டுவேன் னு சொல்லிட்டு குத்துற?” என்று அவளை சீண்டவே செய்தான்.
“கத்தி கிடைச்சதும் நோண்டுறேன்”
“ஆல் தி பெஸ்ட்” என்றபடி பார்வையை திருப்பியவன் தங்களை பார்த்தபடி நின்றிருந்த மல்லிகாவிடம், “இன்னுமா நீங்க கிளம்பலை!!!” என்றான் வரவழைத்த ஆச்சரியக் குரலில்.
மல்லிகா அமைதியாக கிளம்ப, மித்ராணி, “உங்க நாத்தனாரை விட்டுட்டு போறீங்க!” என்றாள்.
மல்லிகா கமலாவை பார்த்தபடி நின்றார். பிடிவாதத்துடன் தன்னை பார்க்காமல் நிற்கும் மகளை ஒரு நொடி பார்த்து கலங்கிய கமலா பின் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு புகழ்வேந்தனை பார்த்தார். அவன் கண்களை மூடி திறக்கவும் கமலா அமைதியாக மல்லிகாவுடன் கிளம்பிச் சென்றார்.
[the_ad id=”6605″]
மகளுடன் பேச கமலாவிற்கு ஆசை தான் ஆனால் எங்கே தான் ‘புகுந்த வீட்டில் அனுசரித்து போ’, ‘புகழுடன் நன்றாக வாழ்’ என்று கூறினால் வேண்டுமென்றே அதற்கு எதிர்மறையாக செய்துவிடுவளோ என்ற அச்சத்தினாலேயே பாசத்தையும் தவிப்பையும் தன்னுள் புதைத்து வெளியே திடமாக காட்டிக் கொண்டு அமைதியாக கிளம்பிச் சென்றார்.
மல்லிகாவும் கமலாவும் வண்டியில் ஏறவும், “வரதுக்கு இவ்ளோ நேரமா?” என்று கத்திய கிருபாகரன் காரோட்டியை பார்த்து, “வண்டியை எடு டா” என்று எரிந்து விழுந்தார்.
மல்லிகா கமலா மற்றும் மனோஜ் அவரவர் சிந்தனையில் உழன்றபடி அமைதியாக இருந்தனர்.
சிறிது நேரத்தில் மல்லிகா, “புகழ் உங்க கிட்ட என்ன பேசினான் அண்ணி?” என்று வினவ,
கிருபாகரன், “இப்போ எதுக்கு அவன் பேச்சு?” என்று எகிறினார்.
கமலா அமைதியாக இருக்கவும் மல்லிகா, “அண்ணி” என்று அழைத்தார்.
மல்லிகாவை அமைதியாக பார்த்த கமலா, “அதான் உங்களுக்கு வேண்டியது நடந்துருச்சே! அப்பறம் அதைப் பத்தி பேசி என்ன ஆக போகுது? விடுங்க” என்றார்.
கமலாவின் ஒட்டாத பேச்சில் மல்லிகா அமைதியானார்.
கமலாவின் மனமோ புகழ்வேந்தன் தன்னிடம் பேசியதை அசை போட்டது.
முதல் மாடியில் இருந்த அறைக்கு கமலாவை அழைத்துச் சென்ற புகழ்வேந்தன் அறைக் கதவை மூடிவிட்டு, “உங்க அண்ணன் கல்யாணம் எப்படி நடந்தது னு முழுமையா தெரியுமா?” என்று கேட்டான்.
கமலா எரிச்சலுடன், “பழைய கதை பேச தான் கூட்டிட்டு வந்தியா?”
“பழைய கதையின் தொடர்ச்சி தான் இந்த புதிய கதை”
“ப்ச்.. இப்போ உனக்கு என்ன வேணும்? எதுக்கு என்னை தனியா கூட்டிட்டு வந்த?”
“நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில் சொல்லலை”
அவர் எரிச்சலுடன், “தெரியும்.. இப்போ எதுக்கு அதை கேட்கிற?”
“அப்போ லக்ஷ்மணன் யாரு னு தெரியும்”
அவர் சிறு யோசனையின் பின், “அதான் தெரியும் சொன்னேனே”
“நான் லக்ஷ்மணன் அண்ணன் பையன்.. இப்போ புரியும் னு நினைக்கிறேன்”
ஒரு நொடி அதிர்ச்சியுடன் பார்த்தவர் பின், “என் அண்ணனை பழி வாங்க நினைப்பதில் ஒரு நியாயம் இருக்கலாம்……………..”
“இருக்கலாம் இல்லை இருக்கிறது.. உங்க அண்ணன் கல்யாணம் நடந்த விதம் தெரியும் ஆனா அதுக்கு அப்பறம் லக்ஷ்மணன் என்ன ஆனார் னு தெரியுமா? அவரோட குடும்பம் சிதைந்து சின்னாபின்னமானது தெரியுமா?” என்று அவன் உணர்ச்சிகளை அடக்கிய குரலில் கூற,
ஒரு நொடி மௌனித்த கமலா, “அது சரி தான்.. ஆனா என் பெண்ணோட வாழ்க்கையில் விழையாட உனக்கு உரிமை இல்லை..”
“மனோஜ் மித்ராணிக்கு ஏற்றவன் னு நினைக்கிறீங்களா? தன்னை நம்பி வரும் பெண்ணை எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க கூடாது.. ஆனா மனோஜ் ஈஸியா மித்ராணியை எனக்கு தூக்கி கொடுத்துட்டான்”
“பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுரியா? மனோஜ் இந்த முடிவை எடுக்க காரணம் நீ தான்” என்றார் கோபத்துடன்.
“ஒருவேளை அவன் தாலி கட்டிய பிறகு நான் மித்ராணியை அவன் பிரியனும் னு சொல்லி இருந்தால் அவன் அப்பாவுக்காக அதை செய்து தான் இருப்பான்.. அவன் மித்ராணி பற்றி கொஞ்சமாது யோசிச்சானா னு நீங்க கொஞ்சம் யோசிங்க”
கரைப்பார் கரைத்தால் கல்லே கரையும் என்றபோது கமலா எம்மாத்திரம்! முன்பு மனோஜ் தன் மகளை நன்றாக பார்த்துக் கொள்வான் என்று கமலா நினைத்தார் தான் ஆனால் இப்பொழுது யோசித்து பார்க்கும் போது மனோஜ் தன் மகளுக்கு ஏற்றவன் தானா? என்ற சந்தேகம் எழுந்தது. மித்ராணி மனோஜ் கல்யாணம் பேச்சு நடந்த அன்றும் மனோஜ் வாய் திறக்கவில்லை என்பதையும் நினைத்து பார்த்த கமலாவின் மனதிற்கு மனோஜூடன் தன் மகளின் வாழ்க்கை சிறக்காது என்றே தோன்றியது.
சில நொடிகள் அவரை யோசிக்க விட்டவன், “நான் னு இல்லை இனி யார் நினைத்தாலும் மித்ராணி மனோஜை கல்யாணம் செய்துக்க மாட்டா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் முன்னாடியே மனோஜை வெறுக்கிறதா சொன்னா.. உங்க மகளை பத்தி உங்களுக்கே தெரியும்..”
“மனோஜ் சரி இல்லை என்பதால் நீ சரி என்று ஆகிவிடாது”
அவன் உதட்டோரம் மென்னகை அரும்பவும் அவர் கோபத்துடன், “என்ன பார்க்கிற? எனக்கு என் அண்ணன் முக்கியம் தான் ஆனா அதுக்காக என் மகளின் வாழ்க்கையை பணையம் வைக்க மாட்டேன்”
“என் கோபம் உங்க அண்ணனிடம் தான்.. உங்களிடமோ உங்க மகளிடமோ இல்லை.. நான் நினைத்து இருந்தால் இந்த கல்யாணத்தை மட்டும் நிறுத்தி இருப்பேன்.. உங்க மகளின் வாழ்க்கையில் அக்கறை இருப்பதால் தான் கல்யாணம் செய்ய நினைக்கிறேன்”
“உன்னோட அக்கறை எங்களுக்கு தேவையே இல்லை”
“ஆனா என்னால் உங்க பெண்ணோட வாழ்க்கை கெட்டிறக் கூடாது என்ற அக்கறை எனக்கு இருக்குது.. உங்களுக்கு உங்க அண்ணனோட சுயரூபம் இன்னும் தெரியலை.. நீங்க நினைப்பது போல் உங்க கார்மென்ட்டில் உங்க அண்ணனுக்கு எந்த உரிமையும் இல்லை ஆனா இத்தனை வருஷம் உங்களை ஏமாத்திட்டு இருக்கார்………….”
கமலா கோபமாக ஏதோ கூற வர, கையை உயர்த்தி அவரை தடுத்தவன் ஒரு கோப்பியத்தை கொடுத்தபடி, “இது உங்க குடும்ப வக்கீல் கொடுத்தது.. நான் சொன்னது உண்மை னு இதை பார்த்தால் உங்களுக்கு தெரியும்.. மற்ற சொத்துக்களையும் ஏமாத்திட்டு தான் இருக்கார்.. இப்போ உங்க அண்ணான் நான் சொல்றதை செய்றதுக்கு காரணம் அவர் செய்த பல தில்லுமுல்லுக்கு என் கிட்ட ஆதாரம் இருக்குது.. அவர் செய்த கொலைக்கு கூட என்னிடம் ஆதாரம் இருக்குது”
கமலா அதிர்ச்சியில் வாயடைத்து போய் நிற்க, அவரைப் பார்க்க புகழ்வேந்தனுக்கு பாவமாக இருந்தது. அவரது தோளை பற்றி அமரச் செய்தவன் குடிக்க தண்ணீர் கொடுத்தான். அவர் தண்ணீரை குடித்து சற்று சுயம் பெறவும் அவன், “மணமேடை வரை வந்த கல்யாணம் நின்னா பொண்ணை தப்பா சொல்றவங்க தான் அதிகம் அதுவும் உங்க அண்ணனே மித்ராணியை தப்பா பேச அதிக வாய்ப்பு இருக்குது.. தன்னை காக்கவும் தன்னோட கௌரவத்தை காக்கவும் கல்யாணம் நின்னதுக்கான பழியை மித்ராணி மேல தான் போடுவார்.. யோசிச்சுக்கோங்க.. அண்ட் இன்னொரு முக்கியமான விஷயம் இதற்குமேல் மித்ராணியை கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்க நீங்க போராட வேண்டியதா தான் இருக்கும்.. இப்பவே அவளோட மனம் கல்யாணத்தில் நாட்டம் குறைந்து தான் இருக்கும்.. அதுவும் ஒருவேளை கல்யாணம் நின்னா மத்தவங்க பேசுறதில் அவ இன்னும் இறுகத் தான் செய்வா”
மீண்டும் சில நொடிகள் அவரை யோசிக்க விட்டவன், “ஒன்னே ஒன்னு உறுதியா சொல்றேன்.. உங்க மகளை பெயருக்கு ஏற்றார் போல் ராணி மாதிரி நான் பார்த்துப்பேன்.. என்னோட பழி வெறி உங்க அண்ணன் கிட்ட தான்”
கமலா தவிப்புடனும் குழப்பத்துடனும் அவனை பார்க்க, அவரது கையை பற்றி தனது கையை அவர் கை மீது வைத்தவன், “என் அம்மா மேல சத்தியமா சொல்றேன்.. என்னோட ராணியை நான் ராணி மாதிரி பார்த்துப்பேன்” என்றான் உறுதியான குரலில்.
அவரையும் அறியாமல் அவரது மனதில் புகழ்வேந்தன் இடம் பிடித்தான். அவனது கையை இறுக்கமாக பற்றியவர், “இப்போ எனக்கு யாருமில்லை.. உங்களைத் தான் நம்புறேன்” என்றார் கலக்கத்துடனே.
என்ன தான் அவன் மேல் சிறு நம்பிக்கை புதிதாக பிறந்தாலும் அவனை இன்று தானே அவருக்கு தெரியும்! அதுவும் மகளின் வாழ்க்கை எனும் போது அவரது மனம் தவிப்புடன் அடித்துக் கொண்டது.
அவரது கையை இறுக்கமாக பற்றியவன், “இனி உங்களுக்கு யாரும் இல்லை னு சொல்லாதீங்க.. மருமகன் னா மகன் தானே! நான் இருக்கிறேன் உங்களுக்கு.. கவலையே படாதீங்க அத்தை.. முழு மனசுடன் எங்களை வாழ்த்துங்க.. நாங்க நல்லா இருப்போம்”
“ஹ்ம்ம்” என்று இப்பொழுதும் அவர் சிறு பயம் கலந்த தவிப்புடன் தான் தலையை ஆட்டினார்.
அவன், “கல்யாணத்துக்கு அப்பறம் நீங்களும் நம்ம வீட்டுக்கு வந்துடுங்களேன் அத்தை”
அவர் ஆச்சரியத்துடன் அவனை பார்க்க, அவன், “நீங்க தனியா எப்படி இருப்பீங்க? நீங்க எங்க கூட தான் வரீங்க” என்று அன்புடன் கட்டளையிட,
அதில் அவன் மீது நம்பிக்கை சற்று வலுப்பெற, அவர் மென்னகையுடன், “ரொம்ப சந்தோசம்.. நீங்க கூப்பிட்டதே போதும் தம்பி.. மித்ரா உங்களிடம் பழகி உங்க வாழ்க்கையுடன் முழுதாக பொருந்தட்டும் அப்பறம் யோசிக்கலாம்”
“அப்பவும் யோசிக்க தான் செய்வீங்களா?”
“அது.. என்ன இருந்தாலும் தாய் வீடு தனி தானே” என்று அவர் இழுக்க,
அவன், “ஹ்ம்ம்.. அதாவது எனக்கும் ராணிக்கும் சண்டை வந்தால் அவளுக்கு தோள் கொடுக்க தாய் வீடு வேணும் னு சொல்றீங்க!”
அவர் தவிப்புடன் பார்க்க,
அவன், “ஆல்ரைட் இப்போ உங்களுக்கு என் மேல் நம்பிக்கை வரது கஷ்டம் தான்.. கொஞ்ச நாளில் நீங்களே புரிஞ்சுப்பீங்க.. அப்போ கண்டிப்பா உங்களை தனியே விட மாட்டேன்”
“முதல்ல மித்ராவோட மனசை மாத்துங்க”
“நீங்க கல்யாணத்திற்கு ஒத்துக்க வைங்க நான் அவ மனசை மாத்துறேன்”
“சரி வாங்க” என்றபடி எழ,
அவன், “நீங்க போங்க.. நான் ரெடி ஆகி அஞ்சு நிமிஷத்தில் வரேன்”
“சரி” என்றவிட்டு அவர் கிளம்ப,
அவர் கதவில் கைவைத்த நொடி அவன், “அத்தை” என்று அழைத்தான்.
அவர் திரும்பி பார்க்கவும் சிறு யோசனையுடன், “இப்போ நீங்க எங்க கூட வரலைனா உங்க அண்ணனை பற்றி தெரிந்துக் கொண்டதை அவரிடமோ அவர் குடும்பத்தினரிடமோ காட்டிக்காதீங்க”
இப்பொழுது கமலா யோசனையுடன் அவனை பார்க்க, அவன், “கொஞ்ச நாளைக்கு தான்.. இப்போதைக்கு கட்டிடம் இடிந்த வழக்கு பத்தியும் அந்த அதிகாரி கொலை பற்றியும் மட்டும் தெரிந்ததா இருக்கட்டும்.. அதுவும் அவர் கேட்டா சொல்லுங்க”
[the_ad id=”6605″]
“ஹ்ம்ம்.. சரி” என்றுவிட்டு அவர் வெளியேறினார்.
இவற்றை நினைத்துப் பார்த்தவர் சத்தமின்றி பெருமூச்சை வெளியிட்டு கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து தன் மகளின் நல்வாழ்விற்காக இறைவனை வேண்டினார்.
கமலா கிளம்பியதும் சக்தி குறைந்தார் போல் மனமும் உடலும் மித்ராணிக்கு சோர்வடைந்தது.
அவளையே கவனித்துக் கொண்டிருந்த புகழ்வேந்தன் கலைவாணியை பார்த்து, “அம்மா ஆட்கள் வரது குறைஞ்சிடுச்சு.. சாப்பிட போகலாமா?”
அவர், “சரி பா” என்று கூற,
மித்ராணி, “எனக்கு வேண்டாம்” என்றாள்.
புகழ்வேந்தன், “ஏதோ என்னை கவனிக்கிறேன் னு சொன்ன! அதுக்கு தெம்பு வேண்டாமா?”
அவள் முறைத்துவிட்டு திரும்பிக்கொள்ள,
அவன், “சரி.. நான் உன்னை கவனிக்கும் போது அதை எதிர்கொள்ள தெம்பு வேண்டாமா?”
உதட்டை லேசாக சுளித்தபடி அவனை பார்த்தவள், “அந்த நினைப்பு வேற இருக்குதா உனக்கு?” என்றாள் நக்கலான குரலில்.
“நான் உன்னை கவனித்தால் நீ எதிர்த்து சண்டை போடுவ னு நினைத்தேன்.. அப்படி இல்லையா?” என்றான் அதே நக்கல் குரலில்.
அவளோ அதை கண்டுக்கொள்ளாமல், “எப்போ கிளம்புறோம்?”
“எங்கே?”
சிறு தோள் குலுக்கலுடன் கலைவாணி பக்கம் திரும்பியவள், “உங்க வீட்டு அட்ரெஸ் சொல்லுங்க” என்றாள்.
‘என்ன டா இது!’ என்பது போல் கலைவாணி பார்க்க, அவள், “ஹெலோ ராஜமாதா உங்களை தான் கேட்கிறேன்” என்றாள்.
அவர் அதிர்ச்சியுடன், “ராஜமாதா வா!” என்று முணுமுணுக்க,
அவளோ நக்கலுடன், “உங்க பையன் தான், தான் ஸிம்பா னு மார்தட்டிக்கிட்டார்.. அதான் உங்களுக்கு ராஜமாதா னு பெயர் வச்சேன்”
கலைவாணி திருதிருவென்று முழிக்க அவளோ, “அட்ரெஸ் கேட்டேன்” என்றாள் அழுத்தத்துடன்.
“நம்ம வீடு…….” என்று ஆரம்பித்து அவர் வீட்டு முகவரியைக் கூற, அதை மனதில் பதித்துக் கொண்டவள் மணமகள் அறை நோக்கிச் சென்றாள்.
கலைவாணி, “அவ கிட்ட என்ன டா சொன்ன?”
புகழ்வேந்தன், “நான் வேந்தன் னு ராஜாங்கிற அர்த்தத்தில் பேசினேன் மா.. அதான் உங்களை ராஜமாதா னு கிண்டல் பண்ணிட்டு போறா.. ஸிம்பா-ங்கிறது லையன் கிங் படத்தில் வர கேரெக்டர் மா” என்றான் ரசனையான மென்னகையுடன்.
கலைவாணியின் பார்வையில் அவன், “என்ன மா இப்படி அதிசயமா பார்ப்பது போல் பார்க்கிறீங்க?”
‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை மறுப்பாக அசைத்தவர், “இப்போ என்ன செய்றது?” என்றார்.
உதட்டை பிதுக்கியவன், “உங்க மருமகள் வந்தா தான் தெரியும்”
‘ஆண்டவா!’ என்று அவரால் மனதினுள் கூறிக்கொள்ள மட்டுமே முடிந்தது.
அடுத்த பத்து நிமிடத்தில் ஜீன்ஸ் பேண்ட் குர்தா அணிந்து கையில் கைப்பையுடன் வெளியே வந்த மித்ராணி எந்தவித ஒப்பனையுமின்றி முடியை குதிரைவாலிட்டு காதில் வைர தோடும் கழுத்தில் தாலியும் வலது கையில் கைகடிகாரம் மட்டுமே அணிந்திருந்தாள்.
கலைவாணி அதிர்ச்சியுடன் பார்க்க, புகழ்வேந்தன் மனம் அவளை ரசித்தாலும் வெளியே புருவ சுளிப்புடன் அவளை பார்க்க, அலட்சியத்துடன் அவன் அருகே வந்து ஒரு சாவிக்கொத்தை அவனிடம் தூக்கி போட்டவள் திரும்பி பார்க்காமல் மண்டபத்தை விட்டு வெளியேறி இருந்தாள்.
‘சண்டிராணி இப்பவே ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டா!’ என்று நினைத்த புகழ்வேந்தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
முதல் ரிங்கிலேயே அழைப்பு எடுக்கப்பட, அந்த பக்கம் இருந்த ஆள், “மேடம் ஆட்டோவில் போயிட்டு இருக்காங்க சார்.. நான் பாலோ பண்ணிட்டு இருக்கிறேன்”
“குட்.. கவனம்”
“ஓகே சார்” என்றதும் அழைப்பை துண்டித்தவன், எதுவும் நடக்காதது போல் கலைவாணியை பார்த்து, “அம்மா சாப்பிட போகலாமா?” என்றான்.
“டேய்!” என்று கலைவாணி சிறிது அலறியேவிட்டார்.
அப்பொழுதும் புகழ்வேந்தன் நிதான குரலில், “உங்க மருமக நம்ம வீட்டுக்கு தான் போவா.. வாங்க நாமும் சாப்டுட்டு கிளம்பலாம்” என்றுவிட்டு நடக்க ஆரம்பிக்க, கலைவாணியோ இன்னும் அதிர்ச்சியுடன் அதே இடத்தில் நின்றுக் கொண்டிருந்தார்.
திரும்பி பார்த்த புகழ்வேந்தன், “அம்மா வாங்க” என்று அழுத்தத்துடன் அழைக்கவும், ‘கடவுளே! இப்பவே கண்ணக்கட்டுதே!’ என்று கலைவாணி மனதினுள் அலறியபடி அவனுடன் சென்றார்.
மித்ராணி செல்வதை பார்த்த சதீஷ் வேகமாக புகழ்வேந்தனை நோக்கி வர, புகழ்வேந்தன், “டேவிட் பார்த்துப்பான்.. நீ வந்தவங்களை கவனி.. அம்மாவும் நானும் சாப்டுட்டு கிளம்புறோம்” என்றான்.
“ஓகே பாஸ்” என்றுவிட்டு அகன்றவன் கிளம்புறவங்களுக்கு தாம்பூலப்பை கொடுக்கும் பணியைத் தொடர்ந்தான். சதீஷின் கை அதன் போக்கில் வேலையை செய்ய மனமோ ‘பாஸ் எப்படி இவ்ளோ கூலா இருக்கிறார்?’ என்று சிந்தித்தது.
—————————————————————————————————————————————————-
மாலினி அறையை விட்டு வெளியே வரவும், “ஹாப்பி பர்த் டே மை டியர் லிட்டில் டார்லிங்” என்று அருணாச்சலமும், “ஹாப்பி பர்த் டே டா” என்று புஷ்பாவும் வாழ்த்தியபடி தங்க நகை ஒன்றை பரிசாக கொடுக்க,
அவள் மகிழ்ச்சியுடன், “தன்க் யூ பா.. தன்க் யூ மா” என்று கூறி தந்தையை அணைத்தாள்.
சிறிது நேரத்தில் உணவு மேஜையில் அமர்ந்து உணவு உட்கொண்ட போது அருணாச்சலத்திற்கு கைபேசியில் அழைப்பு வந்தது.
எழுந்து சென்று பேசிவிட்டு வந்தவர் மகிழ்ச்சியுடன், “ஒரு குட் நியூஸ்.. மாலுக்கு நல்ல வரன் ஒன்னு வந்திருக்குது.. இன்னைக்கு பொண்ணு பார்க்க வரவா னு கேட்டாங்க.. நானும் சரி னு சொல்லிட்டேன்” என்று கூற,
“அப்பா!!” என்று மாலினி அதிர்ச்சியுடன் கிட்டதிட்ட அலற,
புஷ்பாவும், “என்னங்க சொல்றீங்க?” என்றார் அதிர்ச்சியுடன்.
அருணாச்சலம் மாலினியிடம், “என்ன டா?”
“மினிமம் ஒன் இயர் நான் வேலை பார்க்கணும் னு சொன்னேன்னே பா!”
“இப்ப பொண்ணு பார்க்க தானே டா வராங்க.. கல்யாணத்தை ஒரு எட்டு மாசம் கழிச்சு வச்சிக்கலாம்”
“ப்ச்.. என்ன பா?”
புஷ்பாவும், “வெற்றிவேல்……….” என்று ஆரம்பிக்க,
அருணாச்சலம், “அதான் வேண்டாம் னு முடிவு பண்ணியாச்சே! அப்பறம் என்ன?”
புஷ்பா முறைப்புடன், “என்ன பேசுறீங்க? மாலினி கிட்ட……………….”
அருணாச்சலம், “மாலினி அப்பா உன் நல்லதுக்கு தான் செய்வேன் னு உனக்கு நம்பிக்கை இருக்குது தானே டா?”
“ஹ்ம்ம்.. ஆனா பா.. இது.. இவ்ளோ சீக்கிரம் எனக்கு கல்யாணம் வேணாம்”
“நீ ஒரு வருஷம் டைம் கேட்ட.. நாலு மாசம் தானே குறையுது”
“அப்பா” என்று அவள் தவிப்புடன் அழைத்தாள். தந்தை மனம் நோகாமல் வெற்றிவேல் மீதான தனது காதலை எப்படி சொல்வது என்று அவள் திணறினாள்.
அருணாச்சலம், “மாப்பிள்ளையை உனக்கு பிடித்தால் தான் டா கல்யாணம்.. இன்னைக்கு பொண்ணு பார்க்க வரதுக்கு அப்பா சரி னு சொல்லிட்டேன்”
மாலினி அமைதியாக இருக்கவும் அவர், “சரி நான் போன் பண்ணி வர வேண்டாம் னு சொல்லிடவா?”
‘சரி’ என்று அவள் சொல்லப் போக அவர், “அப்பாக்கு ரொம்ப தெரிஞ்சவங்க டா.. இப்போ வரவே வேணாம் னு சொன்னா….. சரி விடு நான் சொல்லிடுறேன்” என்றபடி அவர் எழ,
மாலினி சட்டென்று, “வரச் சொல்லுங்க பா.. ஆனா என்னை கேட்காமல் சம்மதம் சொல்லக் கூடாது”
அருணாச்சலம் மகிழ்ச்சியுடன், “சரி டா” என்றார்.
மாலினியின் உற்சாகம் அப்படியே வடிய பாதி சாப்பாட்டில் எழுந்து சென்றாள்.
“நீங்க செய்றது கொஞ்சம் கூட சரியே இல்லை” என்ற புஷ்பாவின் கோபக் குரலும்,
“எனக்கு என் பொண்ணு பாதுகாப்பா இருக்கிறது தான் முக்கியம்.. நீ என்ன சொன்னாலும் இது தான் என் முடிவு” என்ற அருணாச்சலத்தின் உறுதியான குரலும் மாலினிக்கு கேட்டது.
கைபேசியை எடுத்து முகநூல் சென்று வெற்றிவேலின் புகைப்படத்தை பார்த்தபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் இன்னைக்கு அப்பா கிட்ட கண்டிப்பா பேசியே ஆகணும் என்ற முடிவிற்கு வந்தாள். அருணாச்சலம் மாலினியின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிப்பாரா? வெற்றிவேல் அருணாச்சலத்தின் மனதைக் கரைப்பானா? பொறுத்திருந்து பார்ப்போம்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥
