Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ 3.1

இனியாள் தைத்து கொண்டிருந்ததை ஊற்று பார்த்து கொண்டிருந்த வெண்பாவிடம், “என்னடா, அம்மாவ புதுசா பாக்கற மாதிரி பார்க்கறே…?” என சிறு புன்னகையுடன் கேட்க,

“சித்தா தா தொன்னா, உ அம்மா கஷ்ட்டப்பட்டு வேல பாக்கறான்னு.. அதா நீ கஷ்ட்டப்படறீயான்னு பாக்கேன்..?” என்றாள் குழந்தையும் கேள்வியுடன்.



Advertisement

அவளின் பேச்சில் சிரித்துவிட்ட இனியாள், “ரெண்டு பெரிய மனுஷிங்களும் வெளிய போய் ஜாலியா இருந்துட்டு வருவீங்கன்னு பாத்தா, அங்கே போயும் என்னைய பத்தி பேசுனீங்களா..?” என்று கேலியாய் கேட்ட இனியாளிடம், ஓடி வந்த குழந்தையை தூக்கி தையல் மிஷின் மேல் அமர்த்த,

தாயின் கன்னத்தை, தனது இரு பிஞ்சு கரங்களால் பற்றிய படி,

Advertisement

Advertisement

“இல்ல ம்மா, சித்தா சாமிகித்த கண்ணு மூடி கும்பிடாளா, நானூ எதுக்கு இப்புடின்னு கேட்டனா, அப்ப அவ உன்னட அம்மா தொம்ப கஷ்ட்டப்படறா, அதுக்கு இந்த சாமி நல்லவழி காட்டு ன்னு சொன்னா… 

அப்பதம் என்னயு கண்ணு மூடி சாமிட்ட அது மாரி உனக்கு புச்சத கேட்டா.. அவது கொப்பாரூ தொன்னா…” என்றாள், தனது தலையை இருபக்கமும் ஆட்டியபடி கதை போல விளக்கமாக.

Advertisement

தங்கையின் தன்மீதான கரிசனத்தில் உருகினாலும், மகளின் வேண்டுதலை அறிந்திடும் நோக்கில்,

“ஓ… அப்போ, பாப்பா என்ன கேட்டீங்க.. அந்த சாமிகிட்ட..?” என்றாள் ஆர்வமாக. 

“நானா..! நா எனக்கு அப்பா கேட்டே. என்கூட நம்ம பாக்குல (பார்க்) விள்ளாடற எல்லா அப்பா வந்தா ஓதி போய் அவகள டூக்க தொல்லி நின்னா.. அவங்க அப்புதம் டூக்கி இப்புதி இப்புதி டூக்கி விள்ளாடுவாங்க..” என தனது இரு பக்கத்து கை சந்திலும் கை கொடுத்து, தூக்கி போட்டு விளையாடுவது போல செய்கை காட்டிய குழந்தை,

“நம்ம வீட்டல அப்புதி ஒது அப்பா இல்லல.. அதா அத சாமிட்ட கேட்டே… சாமி கொதுப்பாரு தானே ம்மா..?” என்றாள் ஆசையும், ஆவலுமாய்.

மகளின் ஆரம்ப பேச்சில் புன்னகை முகமாய் இருந்த இனியாளின் முகம், மகளின் இறுதி பேச்சில் முற்றிலும் சிரிப்பு மறைந்து, உறைந்து போனது அவளின் மொத்த தேகமும்.

தாய், மகள் இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டே, ஜாக்கெட்டுக்கு ஷூக் வைத்து தைத்து கொண்டிருந்த தனமே.. குழந்தையின் பேச்சில் அதிர்ந்து தான் போனார்.

அவசரமாக, இனியாளின் முகத்தை பார்க்க, அவளின் கசங்கிய முகம் தாயாய் அவரை பெரிதும் வருத்த,

“பாப்பூம்மா.. இங்கே வாங்கடா. பாட்டிக்கு அந்த தண்ணி பாட்டிலை எடுத்து கொடுங்க..” என சொன்னதும்,

எப்போதும் இது போன்ற சின்னச் சின்ன வேலைகளை அங்கே செய்து பழக்கம் என்பதால், தாயின் மடியில் கால் வைத்து அவளை பற்றிக்கொண்டே இறங்கி தனம் சொன்னதை செய்ய சென்றாள் வெண்பா.

மகளின் கேள்வியில் உறைந்து போயிருந்த அமிழ்தினியாளுக்கு, வெண்பாவின் செயல் எதுவும் உறைக்கவே இல்லை.

மகளின் உறைநிலை.. தனத்தின் கண்ணிலும் கண்ணீரை வரவழைக்க, ‘அந்த குழந்தை கேட்ட மாதிரி ஒருத்தனை எப்படியாவது கொண்டு வந்து கொடு ஆண்டவா.. அப்படியாவது இனியாளோட வாழ்க்கை ஆரம்பிக்கட்டும்..’ என்று மனமார வேண்டுதலை வைத்தார்.

******

முதல் நாள் என்பதால், ‘அவங்க சொன்ன நேரத்துள்ள போகனும். லேட்டா போய் பஸ்ட் இம்ப்ரஷன் வொஸ்ட் இம்ப்ரஷனா ஆகிட கூடாது..’ என்ற எண்ணத்தால்..

ஆட்டோவில் விரைவாக ‘நியூ டெக் பார்க்..’ வந்து இறங்கிய சம்யுக்தா, அதற்குரிய கட்டணத்தை செலுத்திவிட்டு, செக்யூரிட்டியிடம் தான் வந்த நோக்கத்தை சொல்லி, உள்ளே சென்றாள்.

பல தளங்களை கொண்ட.. அழகான கட்டிடத்தின் வடிவமைப்பே ரசனையை கூட்ட, சுற்றுச்சூழலை அவதானித்தபடி உள்ளே சென்றவள்,

ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம், தனது போனில் வந்திருந்த மெயிலை காட்ட,

“யூ கோ டூ த சிக்ஸ்த் ஃப்ளோர் மேடம்..” என்றாள் இன்முகமாய்.

“தேங்க்யூ..” என்றுவிட்டு, படியை நோக்கி செல்ல, 

“மேம், லிஃப்ட் திஸ் சைட்..” என்று அந்த பெண் காட்ட, அதற்கும் நன்றி சொல்லிவிட்டு, அவர் சொன்ன தளத்திற்கு சென்று சேர்ந்தாள் சம்யுக்தா.

சென்ட்ரலைஸ்டு ஏசியின் குளுமை அந்த தளம் முழுவதும் பரவியிருக்க, அந்த குளிரையும், அந்த தளத்தின் செழுமையையும் ரசித்த வண்ணம்.. தனது சர்டிபிகேட்ஸ் அடங்கிய ஃபைலை மார்போடு அணைத்துக்கொண்டு சென்றவள், இங்கிருந்த ரிசப்ஷன்னிஸ்டிடம் விசயத்தை சொல்ல,

“எம்டி சார் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க. அவர் கூட ஒன் ஸ்மால் இன்டர்வியூ இருக்கும். அதுக்கு அப்புறம் தான் ஃபார்மாலிட்டிஸ் பார்க்கனும். 

சோ, நீங்க கொஞ்ச நேரம் வெயிட்டிங் ஹால்ல இருங்க. ஆல் ரெடி கொஞ்ச பேர் அங்கே அதுக்காக வெயிட் பண்ணறாங்க. 

நீங்களும் அவங்க கூட ஜாயின் பண்ணிக்கோங்க..” என்று விளக்கமாக சொல்ல, 

அவருக்கு நன்றி உரைத்தவள், அங்கே வெயிட்டிங் ஹாலில் அமர்ந்திருந்த ஐவரோடு இணைந்து கொண்டாள்.

அங்கிருந்த ஐவரும் இன்று அந்த நிறுவனத்தில் இணைய வந்திருந்தனர். 

அதில், இரு பெண்கள் இருக்க, லேசான புன்னகையோடு அவர்களின் அருகே சென்று அமர்ந்தாள் சம்யுக்தா.

பெண்கள் கூடினால் பேச்சு வார்த்தைக்கு குறைவு வருமா..?! 

“ஹாய் நா சம்யுக்தா.. **** காலேஜ்ல இருந்து கேம்பஸ் ல செலக்ட் ஆகி வந்திருக்கற ஃபிரஷர்..” என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள,

“ஹாய், ஐ ம் சஞ்சனா.. *** காலேஜ்ல இருந்து கேம்பஸ் ல செலக்ட் ஆகியிருக்கேன்..” 

“ஐம் சாந்தி.. நா ஏற்கனவே சென்னைல டூ இயர் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். ஆப்டர் மேரேஜ்.. இங்கே ஜாப் மாத்திக்க வேண்டி ஆகிடுச்சு.. சோ..” என்றுவிட்டு தோளை குலுக்க,

அவர்களின் பேச்சை கேட்டிருந்த ஆண்களும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

மொத்தமாக ஆறு பேரில், மூவர் ஃபிரஷர்ஸ் என்பதும், மற்ற மூவரும் வேறு சில காரணங்களால் இந்த கம்பெனிக்கு மாறி வந்ததும் தெரிய வந்தது.

பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் கடந்ததே தெரியாமல் அரை மணி நேரம் சென்றிருக்க, ஏசி குளிரில் சம்யுக்தாவின்‌ நிலை சங்கடத்தை கொடுக்க ஆரம்பித்தது.

அவளின் அவஸ்த்தை புரிந்தது போல,‌ “என்னாச்சு சம்யுக்தா..?” என்ற சாந்தியிடம்,

“ரெஸ்ட் ரூம் போகனும்..” என்று மெல்லிய குரலில் சொல்ல,

“சஞ்சனாவும், நானும் நீ வர்றதுக்கு முன்னாடி தான் போயிட்டு வந்தோம். 

இந்த ஃப்ளோர்ல ஏதோ ப்ளம்மிங் வொர்க் நடக்குதாம். மேல் ஃப்ளோர்ல லெப்ட் சைட் போனா, அங்கே இருக்கறத இப்ப யூஸ் பண்ண சொன்னாங்க.. 

நீ தனியா போயிடுவையா..? இல்ல ன்னா நாங்க..” என சொல்லிக் கொண்டிருந்தவரின் பேச்சில் இடைமறித்த சம்யுக்தா,

“இட்ஸ் ஓகே. நா போயிட்டு வந்திடுறேன். இது என்னோட போன் நெம்பர்.. 

சப்போஸ் நா வர்றதுக்குள்ள எம்டி சார் வந்துட்டா இன்ஃபார்ம் பண்ணுங்க.. வந்திடுறேன்..” என்றவள்,

ரிசப்ஷனில் இருந்தவரிடமும் சொல்லிவிட்டு, மேல் தளத்திற்கு சென்றாள்.

அவளின் நேரம், சாந்தி சொன்ன ‘லெப்ட் சைட்..’ என்பதை அவளின் அவதியில் சரியாக கவனிக்காமல் விட்டு விட, மேலே சென்றவள் அங்கே தேட, ‘ரெஸ்ட் ரூம்..’ செல்வதற்கான எந்த பதாகையும் அவள் கண்ணில் படவில்லை.

அவசரத்தில்.. தனது எண்ணை சாந்தியிடம் கொடுத்தவள், அவரின் எண்ணை வாங்காமல் வந்திருக்க, “அய்யோ.. சம்யூ இருக்கற அவசரத்துல இதுவும் சதிபண்ணுதே..” என்று வாய்விட்டு புலம்பியபடி, 

“இந்த சைடா..? அந்த சைடா..?” என தானே யோசித்து, தப்பான வழியில் செல்ல துவங்கினாள் சம்யுக்தா. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!