அவனுக்கு பிடித்த பால்கோவாவை செய்து எடுத்து கொண்டவன். காலேஜுக்கு வந்து அன்றைய வகுப்புகளை முடித்தவள். அவனை எப்போதும் சந்திக்கும் இடத்தில் வந்து அமர்ந்திருந்தாள்.
ஸ்ரீ ஜெயமிற்கு எக்ஸாம் முடிந்தவுடன். அவனின் நண்பர்கள் அவனை கேன்டீன் அழைத்து சென்று விட்டனர். கடைசி நாள் என்பதால். நண்பர்கள் அனைவரும் சேர்த்து ஓரே ஆட்டம் , பேசி சிரித்து, உண்டு என்று வெகு நேரமாகியது.
Advertisement
இங்கே காலேஜ் முடிந்து வீட்டுக்கு போகும் மாணவர்களிடையே ஸ்ரீ ஜெயத்தை அவள் தேடினாள். அவன் இல்லை. ஒரு வேளை லைப்பிரரி சென்று இருப்பாரோ, இல்லை, அப்போ எக்ஸாம் முடிஞ்சவுடனே வீட்டுக்கு சென்றுவிட்டாரா. நான் அவரை போய் காலேஜில் தேடி பார்க்கலாமா என்று நினைத்தவள். நான் போன பிறகு இங்கே என்னை அவர் பார்க்க வந்தால் என்ன செய்வது என்று நினைத்து இருவரும் எப்போதும் சந்திக்கு இடத்திலே அமர்ந்து இருந்தாள்.
Advertisement
Advertisement
ஸ்ரீஜெயம் மஞ்சுவை மறந்தே போனான். நண்பர்களிடம் பேசி முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பும் போது அவளின் ஞாபகம் வர மணி 6 மணிக்கு மேல் ஆகியிருந்தது. அவள் காரில் வீட்டுக்கு சென்று இருப்பாள் என்று நினைத்தவன் பைக்கை ஸ்டார்ட் பண்ணும் பொழுது ஏதோ மனதில் தோன்ற. காலேஜ் உள்ளே சென்றான். எப்போதும் மஞ்சுவிடம் பேசும் இடத்துக்கு வர. அவளோ அந்த மரத்தடியில் அமர்ந்து இருந்தை பார்த்தவன். அதிர்ச்சியாகி விட்டான்.
அவள் கண்டிப்பா வீட்டுக்கு சென்று இருப்பாள் என்று நினைத்து இருந்தான்.
ஒரு வேளை தன்னை பார்க்க வந்து இருந்தாள் என்று நினைத்து வர.
Advertisement
அவளோ வெகு நேரமாகியும் அவன் வரமால் இருக்க. தன்னை மறந்து விட்டான். தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு போக நினைவு இல்லை என்று வருத்தபட்டு கண்கலங்கி அமர்ந்து இருந்தாள்.
ஸ்ரீ ஜெயம் அவளை பார்த்து மரத்தின் அருகில் வந்தவன். கீழே அமர்ந்து இருந்தவளை பார்த்து பாப்பு என்று அழைக்க.
அவனின் பாப்பு என்ற அழைப்பை கேட்டவள். அவளின் கலங்கிய கண்களை அவனுக்கு தெரியாத வாறு துடைத்தவள். அவனுக்காக கொண்டு வந்த பால்கோவா டப்பாவை அவனிடம் கொடுத்து விட்டு. அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தாள்.
அய்யோ என்று இருந்தது ஸ்ரீ ஜெயத்திற்கு டப்பாவை திறந்து பார்க்க அவளின் மொத்த அன்பும் தெரிந்தது. தனக்காக இவ்வளவு நேரம் காத்து இருந்திருக்கிறாள் என்றவன். வண்டியை ஸ்டாட் பண்ணி அவளின் முன் சென்று நிறுத்தி வண்டியில ஏறு என்றான்.
அவளோ நான் பஸ்ல போறேன் என்றவள் நடக்க.
ஏய் ஏறுடீ என்றான்.
அவளோ எனக்கு பஸ்சுல போக தெரியும்.
ஏய் வண்டியில ஏறுன்னு சொன்னேன்.
அவன் முறைப்பதை பார்த்தவள். வண்டியில் ஏற. வண்டி வேகம் எடுத்தது.
சிறிது நேரம் கழித்து அவள் வண்டியின் பின் இருந்து அவணை அணைத்துக் கொண்டு அழுவதை உணர்ந்தவன். யாரும் இல்ல ஒரு மண்டப வாசலில் வண்டியை நிறுத்தி
கீழே இறங்க. அவளோ அவனுக்கு முகத்தை காட்டாமல் குனிந்து கொண்டாள்.
அவளின் கைபிடித்தவன். என்னை பாரு மஞ்சு என்றான்.
அவளோ பாக்க மாட்டேன் என்று
தலையாட்ட.
அவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்ப.
அவளிடம் இருந்து ஒரு கேவள் வர.
அவளை அப்படியா தூக்கி அணைத்து கொண்டான் ஸ்ரீ ஜெயம்.
அவளோ அழுது கொண்டே அவனை அடிக்க.
நல்ல அடி என்றவன். சாரிடா என்றான் அணைப்பை கூட்டியவாறே.
அவளுக்கு மனமே ஆரவில்லை எப்படி தன்னை மறக்கலாம் என்று கோபப்பட்டு அழுது, அவனை அடித்து முடித்தவன். தன் நிலை உணர.
அவள் ஸ்ரீ ஜெயமின் அணைப்பில் இருந்தாள்.
அவனிடம் இருந்து விலக பார்க்க. அவனோ இரும்பு போல் அவளை அணைத்து வைத்திருந்தான்.
ஸ்ரீ என்று நெழிந்தவளை. என்னடா என்றான் அணைப்பை கூட்டி.
விடுங்க என்றாள் மெல்லிய குரலில்.
மெல்ல அவளை விலக்கியவன். அவனது வண்டியின் மீது அவளை உக்கார வைத்து. அவளின் களைந்த முடியை சரிபண்ணி விட்டு நெத்தியில் முத்தமிட்டு சாரிடா என்றான்.
நீங்க என்னை மறந்துட்டீங்கல.
ஏய் உன்னை நான் மறப்பேனா. உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் பாப்பு. படிக்குற பொண்ண டிஸ்டர்ப் பண்ண வேண்டாமுன்னு நெனச்சேன். படிப்பு முடியட்டும் அப்பறமா உங்க வீட்டுக்கு வந்து பேசலாமுன்னு நெனச்சேன். ஆன நீ இவ்வளவு பாசம் என்மேல வச்சு இருப்பேன்னு நான் நினைக்கல.
என்னை உங்களுக்கு பிடிக்குமா ஸ்ரீ.
என் பாப்புவ எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நாளையில இருந்து உங்கள பாக்க முடியாது.
அவளை நெருங்கி நின்றவன். நீ மொதல்ல படிச்சு முடி. அது குள்ள நான் நல்ல வேலைக்கு போயி சாம்பாரிச்சிருவேன். அதற்கு அப்புறமா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்.
மஞ்சு அவன் சொல்வதை கேட்டவள். எந்த வேலைக்கு போறீங்க.
நான் துபாய் போறேன்.
துபாய்யா!!.
ஆமாம் என்றவன். இரண்டு வருஷத்துல வந்துருவேன். நீயும் படிப்ப முடிச்சுருவ. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் சரியா. என்ன நெனச்சு அழகூடாது சரியா, நல்ல படி, நான் சீக்கிரம் வந்துருவேன்.
அவளோ எப்போ போறீங்க துபாய்.
நாளைக்கு நைட் சென்னை போறேன். அடுத்த நாள் துபாய் கிளம்புறேன்.
அப்போ உங்கள இனிமே.
ஏய் இப்பதானே சொன்னேன். அழாத. நாளைக்கு எங்க அரிசி மில்லுக்கு வர்ரீயா. கொஞ்சம் நேரம் பேசலாம்.
சரி என்றவள். நேரம் ஆச்சு வீட்டுக்கு போலாமா.
வா என்று அவளை அழைத்து கொண்டு அவளின் வீட்டுக்கு பக்கத்துல உள்ள கோவிலில் இறக்கி விட்டவன். நாளைக்கு காலையில் ஞாபகம் இருக்கா.
கண்டிப்பா வருவேன் என்று சொல்லி விட்டு சென்றாள்.
********
இன்று.
ஸ்ரீஜெயமின் போன் ஒலித்தது. மஞ்சுவின் நினைவில் இருந்து வெளி வந்தவன். போனை யார் என்று பார்க்காமல் காதில் வைக்க.
ஹலோ மாம்ஸ் நான் அன்பு.
மருமகனின் வாய்சை கேட்டவர். எங்கே இருக்கேடா.
இன்னும் பத்து நிமிஷத்துல விருதுநகர் இரயிவே டேஷன் வந்துருவேன்.
இதோடா நான் வர்ரேன் என்றவர். அவரின் அனைத்து நீங்கா நினைவுகளையும் மனதில் வைத்து பூட்டியவர். மருமகனை அழைத்து வர சென்றார்.
தாய் மாமனை பார்த்த அன்பு, அன்பு அரசன், மாமனை அணைத்து கொண்டு என்ன மாம்ஸ் உன் முகம் ஏன் டல்லா இருக்கு.
நீ இல்லாம அப்படி இருக்கு. இப்போ நீ வந்துட்டல, இனிமே பாரு உன் மாமனை எப்பவும் சிரிச்ச மாதிரி இருப்பேன்.
அது, அது என் மாம்ஸ் எப்பையும் சந்தோசமா இருக்கனும்.
இருவரும் சேர்ந்து வீட்டுக்கு வர மணி அதிகாலை 4, அனைவரும் தூங்கி கொண்டு இருக்க.
ஸ்ரீ ஜெயம் தூங்குடா காலையில் பார்க்கலாம் என்று அவர் வீட்டுக்கு செல்ல.
ஹலோ மாம்ஸ் இன்னைக்கு என்ன நாள் நம்ம முறை பொங்கல் விழா. அதை சிறப்ப செய்ய வேண்டாமா. நீ போய் தூங்கு மாம்ஸ் பக்கத்துல போன வச்சுக்கோ நான் ஏதாவது டௌவுட் வந்த கால் பண்ணுறேன் என்றவன் குளித்து முடித்து கோவில் சென்றான்.
அன்புவை பார்த்த அவன் நண்பர்கள். டேய் அன்பு வந்துட்டான்டா என்று அனைவரும் ஓடி வந்து அவனை அணைத்து கொள்ள.
அனைவரிடம் பேசியவன் இன்று நடக்க போற பொங்கல் வேலைகளை பத்தி பேசி விட்டு.
மேலூர் காரனுங்க பொங்கல் எப்படி இருந்துச்சு என்றான்.
நல்லா தாண்டா இருந்துச்சு.
அன்பு அவன் நண்பன் ஜீவாவிடம்,
அவனுங்க அம்மனுக்கு எத்தன அடி பூ மாலை போட்டானுங்க.
அது பத்து அடி இருக்கும்டா.
நீ நம்ம அம்மனுக்கு போடுற பூ மாலைய 15 அடி கட்ட சொல்லு, செலவு எவ்வளவு ஆனாலும் பரவலா அவனுங்கல விட நம்ம சிறப்பா பண்ணனும்.
அப்புறம் என்ன மேளம் விட்டானுங்க.
அது ஏதோ கேரள கொட்டு மாதிரி இருந்துச்சு.
அப்படி என்றவன். நான் ஏற்கனவே ஆன் லைனில் பெரிய மேளம், அப்பறம் டான்ஸ் ஆட ஆளுன்னு புக் பண்ணிட்டேன். மத்தியானம் 30 பேர் வருவாங்க.பாத்து கோங்கடா என்றவன் கோவில் சென்று அம்மனை வணங்கி விட்டு. கோவிலில் நடந்து கொண்டு இருந்த அலங்காரத்தை பார்த்த அன்பு வெளியே வந்து. அவன் நண்பர்களிடம் டேய் கோவில சுத்தி பூ அலங்காரம் நல்லா பண்ண சொல்லு சாயங்காலம் கோவில் பூ அலங்காரதோட லைட்டும் சேர்ந்து மின்னனும்.
அவனின் நண்பர்கள் சரிடா நீ வந்துட்டல தூள் கிளப்பிறலாம்.
அன்பு என்னடா நம்ம ஊரு எப்படி இருக்கு.
அது நல்லா தான் இருக்கு.
அப்பறம் என்னடா.
அந்த பெரியசாமி பண்ணுற அலப்பற தாங்க முடியல.
என்ன பண்ணுறான் அந்த ரெண்டாவது சண்டியரு.
அவனுக்கு கல்யாணம் முடிவு ஆகிடுச்சு போல. அவன் வருகால பொண்டாட்டிய வண்டியில கூட்டிட்டு விருதுநகரே வலம் வர்ரான்.
என்னடா சொல்லுற.
ஆமாம்டா. இதுல என்ன விஷயமுன்னா அந்த பொண்ண முதல்ல ஆண்டவர் கனிக்கு கல்யாணம் பண்ண பேசி வச்சுயிருந்தாங்கலாம். இந்த பய நடுவுல போயி அந்த பொண்ண பிடிச்சுருக்குன்னு சொல்லி கல்யாணம் பண்ணுறான். எவ்வளவு நல்ல எண்ணம் பாரு இந்த பயலுக்கு என்று கூறி சிரிக்க.
டேய் என்று ஒருவன் கண் காண்பிக்க. தூரத்தில் யோகாவும், பார்கவியும் அம்மனுக்கு மஞ்சள் பால் ஊற்ற குடத்தில் நீர் எடுத்து கொண்டு வருவதை பார்த்து அமைதியாக இருக்க.
யோகா அன்புவை பார்த்து எப்படி இருக்க அன்பு என்றார்.
அன்பு நல்லா இருக்கேன்மா என்றான்.
நேத்தே உன்னை தேடினேன் அன்பு பொங்கலுக்கு வருவீயே காணுமேயின்னு வர்ரேன்யா, என்று கிளம்பினார்.
யோகாவும் பார்கவியும் அம்பாளுக்கு மஞ்சள் நீரை ஊற்றி விட்டு வெளியில் வர.
பார்கவி அன்புவை பார்த்து யாரு அத்தை அவங்க.
அவனா! அவன் பேரு அன்பு நல்ல பையன். நம்ம பெரியசாமி கூட சேர்ந்து ஒன்னா படிச்சவன். நல்லா தான் பிரெண்டா இருந்தானுங்க திடிர்னு என்ன ஆச்சுன்னு தெரியல ரெண்டு பேரும் பேசுறது இல்ல. கீலூர், மேலூர் என்று ஏதோ ஊர் பிரச்சனையில இவனுங்க இரண்டு பேரும் பேசுறது இல்ல.