Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நேசிக்க நியதி அழைக்கிறதா?

“மச்சான், நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல டா. உன் ஒருத்தனால மொத்த குடும்பத்தோட நிம்மதியும் போகுது” என்று டோனி கத்தாத குறையாக சொல்ல, அவனோ அழுத்தமாய் நின்றிருந்தான்.

அந்த நாளின் தாக்கம் அவன் மனதில் தீப்பிழம்பாய் எறிய, அவனின் அந்த நாளின் செய்ட்பாடுகளை நினைத்து தன்னையே வெறுத்து ஒதுக்கினான்.

“டேய், நான் உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். நீ இப்படி சிலைப்போல நின்னா முடிந்ததை மாற்ற முடியுமா மச்சான்?”

…..



Advertisement

“மச்சி, அமைதியா இருந்து நீயும் செத்துட்டு மத்தவங்களையும் சாகடிக்காத டா. புரிஞ்சிக்க அன்பு” நண்பனின் தோள் தொட்டு கூறவுமே, அவனை சிவப்பேறி கண்களுடன் திரும்பி பார்த்தவனின் விழிகளில் வேதனைகள் நிறம்பிருந்தன.

அவனின் வாழ்வில் மிகவும் முக்கியமானவள் அவனின் மேகமலை.

இன்று அவளுக்கான நாள். அவளுடைய நாளும் கூட.

Advertisement

இப்போது அவளுடன் தான் இருக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியவர்கள் மீது கோபம் கோபமாய் வந்தது.

Advertisement

இருப்பினும் அமைதியாய் இருந்தான். அமைதியாய் எங்கோ இருந்து அவனை ஆட்சி புரிந்தாள்.

“அன்பு!!!”

“போய்டு மச்சி. என்னால அவங்க சொல்ற மாதிரி முடியவே முடியாது டா. நீ போ நான் அப்புறமா வரேன் ” என்று நண்பனை வற்புறுத்தி அனுப்பி வைத்தான்.

Advertisement

*********

“சார், ஒரு நிமிஷம்…”

அன்பு நின்ற இடத்திலிருந்து மெதுவாக குரல் வந்த திசையை திரும்பி பார்த்தான்.

கையில் சிறிய வடிவிலான மைக்கை வைத்திருந்தவள் தான் அவனை அழைத்திருந்தாள்.

கைமைக்கேமரா, மைக்ரோபோன் என்ற ஒரு குழு மனிதர்கள் அவளுடன் கூடவே நின்றனர்.

“சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ். நாங்க ஒரு யூட்டூய்ப் சேனல்ல இருந்து வந்துருக்கோம்” என்று அந்த சேனலின் பெயரை கூறி அவர்களை அறிமுகப்படுத்தியவளை, கேள்வியாக நோக்கினான்.

“என்ன வேணும் உங்களுக்கு?” சற்று கடுகடுத்த குரலில் கேட்க,

‘அய்யோ! இது ஒரு சிடுமூஞ்சி போலயே. தெரியாம மாட்டிக்கிட்டோம் போல’ மனதினுள் நினைத்தவள் வெளியில் புன்னகை முகமாய்,

“சார், இன்றைக்கு காதலர் தினம்… லவ்வர்ஸ் ஸ்பெஷல் ஷூட்டிங் நடக்குது. உங்க காதல் கதை சொல்ல விருப்பமா?” என மைக்கை காட்டி வினா எழுப்பி அவனை காண, அவனோ அவர்களை முறைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீங்க சம்பாதிக்க நான் தான் கிடைச்சேனா. இப்படி சம்பாதிக்க வேற ஏதும் செய்யலாம். கெட் லாஸ்ட்” கத்திவிட்டு நகர பார்த்தவனை நிறுத்தியவள்,

“சார், வார்த்தைகளின் அர்த்தங்கள் ரொம்ப முக்கியம். வாய் இருக்குன்னு எதையும் பேசக்கூடாது. பேசிய வார்த்தைகளை திரும்ப வாங்க முடியாது சார். தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம் ” என்றவள் தன் குழுவுடன் நகர்ந்து விட்டாள்.

போகும் அந்த குழுவை ஒருமுறை பார்த்தவன், பின் கால் போன போக்கில் தன் நடையினை தொடர்ந்தான்.

*******

“அன்பு!!!”

“சொல்லுங்க மேகமலை”

“பயமா இருக்கு பா. வீட்ல நம்ம காதல் விஷயத்தை எப்படி சொல்ல போறேன்னு தெர்ல. அப்பா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாரு அன்பு” தன் பயத்தினை மெல்ல கூற,

“அவரு ஒத்துக்கிறாரு ஒத்துக்கில அது அடுத்த விஷயம். ஆனா நம்ம கடமை வீட்ல சொல்றது. நீ பயப்படுறன்னா நான் வேணும்னா உங்க வீட்ல வந்து பேசவா டா ” அவளின் உள்ளங்கையை தன் கரத்தினுள் உள்ளடக்கியவாறே கேட்க,

“வேணாம்… வேணாம்..‌. நானே பேசுறேன்” உடனே மறுத்துவிட்டாள் அவனின் குணமறிந்து.

“உன்னால முடியலனா நான் பாத்துக்கிறேன். யாராலும் உன்ன என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது டி மேகமே” என்றவன் வார்த்தைகள் அழுத்தமாய் விழுந்தது.

“சரி காஃபி குடி. டென்ஷன் ஆகாத. எல்லாமே நமக்கு சாதகமா தான் முடியும்”

“லவ் யூ சோ மச் அன்பு” என்றாள் காதலாய். அவளின் காதலில் புன்னகையை உதிர்த்தான் மேகமலையின் அன்பு.

********

“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை. வீட்ல என்னால் பேச முடியாது. நீங்க என்னைய பிடிக்கலைன்னு உங்க வீட்ல சொல்லிடுங்க” தன் முன் அவனுக்காக பார்த்து வைத்த பெண்ணிடம் கட்டளைப் போல் கூற, அவளோ சிலையென நின்றிருந்தாள்.

“உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னா நீங்க சொல்லுங்க. என்னை சொல்ல சொல்லி நீங்க சொல்லக்கூடாது. அதுக்கு உங்களுக்கு உரிமை கிடையாது” என்றவள் தான் வீட்டில் வளர்க்கும் புறாக்களுக்கு தண்ணீர் ஊற்றினாள்.

அப்பெண்ணின் பேச்சில் கடுகடுத்தவன், ” என்னால முடியாம ஒன்னும் உங்கக்கிட்ட உதவி கேக்கல. சொல்ல முடியாத சூழ்நிலைனால தான் உங்கக்கிட்ட கேட்டதே. முடியும் முடியாதுன்னு சொல்லுங்க ‌தேவையில்லாம பேசாதீங்க” என்றவனை கண்டு சிரித்தாள்.

“இஸ் திஸ் வாட் யூ காலிங் ஆஸ்கிங் ஃபார் ஹெல்ப்? நீங்க உதவி கேக்கல கட்டளை மாதிரி சொல்றீங்க. அதுக்கு நான் ஆல் கிடையாது அண்ட் ஒன் மோர் திங் எனக்கு உங்களை பிடிக்க போக தான் இந்த பொண்ணு பார்க்கிறதுக்கே சம்மதம் சொன்னேன். பிடிக்கலைன்னா நீங்களே சொல்லிக்கோங்க. நான் பொய் சொல்ல மாட்டேன் ” என்றவள் தன் பேச்சு முடிந்தது போல் நகர்ந்து விட்டாள்.

அன்பு தான் போகும் அவளை பார்த்து பற்கள் நறநறத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!