Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ – 4

பகுதி 4

அதிகாலை உறங்க துவங்கிய ரியானுக்கு தூக்கம் கலைய, பெட் அருகே டேபிள் மீதிருந்த தனது போனை எடுத்து நேரத்தை பார்த்தான். 



Advertisement

அதுவோ ஒன்பதை கடந்துவிட்டேன் எனக் காட்ட, ‘போதும் உறங்கியது..’ என்ற எண்ணத்தோடு எழுந்து அமர்ந்தவன் கண்ணில் சந்தீப்பின், 

“டிப்பன் டேபிள்ல ஹாட்பேக்ல இருக்கு. நா ஒரு சின்ன வேலைய முடுச்சிட்டு.. என்னோட கேபின்ல இருப்பேன். வேற எதாவது வேணுமுன்னா கால் மீ..” என அனுப்பியிருந்த மெசேஜ் பட்டது.

Advertisement

Advertisement

சந்தீப்பின் அக்கறையில் லேசான புன்னகையை இதழ் பூசிக்கொள்ள அதே இதமான மனதுடன், 

“முகுந்த் கண்ணா.. வேக்கப்..” என்று செல்லமாக தன் மகனின் அருகே நெருங்கி அணைத்து அவன் காதில் மெல்ல கிசுகிசுக்க,

Advertisement

“நோ ப்பா.. ஐ வாண்ட் டூ ஸ்லீப்..” என்று விட்டு முகுந்த் மீண்டும் தூங்க முயல,

“கண்ணா.. சன் ரெய்ஸ் ஆகி.. ரொம்ப நேரமாச்சு.. எழுந்து சாப்பிட்டு டேப்லெட் போடனுமில்ல.. கெட் அப்..” என‌ அவன் தலை கோதி நெற்றி முட்டி கொஞ்சினான்.

“நோ.. ஐ வாண்ட் ஸ்லீப்.. நா தூங்காம்..” என்று குழந்தை திரும்பி படுத்து சிணுங்க துவங்கினான்.

‘இங்கு வந்த பின் அவன் துவங்கும் முதல் நாள் காலை, அவனின் நாள் அழுகையில் ஆரம்பிக்க வேண்டாமே..’ என்று நினைத்தவன்,

“ஓகே.. டேண்ட் க்ரை.. நீ தூங்கு..” என தட்டி கொடுத்த ரியான், அவன் மீண்டும் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றவிட்டதை உறுதி செய்துவிட்டு,

எழுந்து அந்த அறையிலேயே இருந்த பாத் ரூமில் தனது காலை கடன்களை முடித்து, குளித்து விட்டு‌ டவலை மட்டும் இடையில் சுற்றிக்கொண்டு வெளியே வந்தான்.

‘எப்படியும் முகுந்த் எழுந்தால், அவனுக்கு தேவையானதை செய்யும் போது மீண்டும் உடை மாற்ற வேண்டும்..’ என்பதை மனதில் கொண்டு, தான் கொண்டு வந்த பெட்டியில் இருந்ததில் ஆராய்ந்து,

கையில்லா பனியனும், ஷாட்ஸ் ஒன்றையும் அணிந்தவன், சந்தீப் ஹாட் ஃபாக்ஸில் கொண்டு வந்து வைத்திருந்த உணவை உண்டு முடித்துவிட்டு, மீண்டும் முகுந்த்தைப் பார்க்க, அவனோ ஆழ்ந்த உறக்கத்திலேயே இருந்தான்.

பெருமூச்சோடு கெட்டிலில் தண்ணீர் வைத்து அதில் காஃபி கலந்து குடித்துக்கொண்டே தனது லேப் டாப்பை உயிர்ப்பித்தவன், மதியம் அங்கு நடக்க போகும் மீட்டிங்கிற்கு தேவையானதை பற்றிய விசயங்களை வரிசைபடுத்தி பதிய துவங்கினான்.

வேலை மும்முரத்தில் நேரம் கடந்ததே ரியானுக்கு உரைக்கவில்லை. 

ஓரளவு தனது வேலையை முடித்தவன் தனது லேப்டாப்பிலேயே நேரத்தை பார்க்க அதுவோ பதினென்றை நெருங்கிவிட்டதாக காட்ட, 

“அச்சோ, நேத்து ஃபிளைட்லயும் முகுந்த் சரியா சாப்பிடல. இப்போ, இவ்வளவு நேரமாகிடுச்சு.. 

எழுந்து, ரெப்ரஸ் ஆகி சாப்பிட்டா தானே.. டேப்லெட் கொடுக்க முடியும்..?” என தனக்கு தானே பேசிக்கொண்டவன், 

அவசரமாக லேப் டாப்பை ஸ்லீப் மோடுக்கு கொண்டு சென்று அதை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு வேகமாக பெட்டை நெருங்கினான்.

இம்முறை அவனை பெட்டிலிருந்து தூக்கி தன் மடியில் வைத்தவன், அவன் தலையை மார்போடு அணைத்து கொண்டு, “கண்ணா, எழுந்துக்கோ..” என கன்னம் வருட,

“ம்ம்..” என்ற முனங்கலே அவனிடமிருந்து வந்தது. 

ஏஸி ஓடிக்கொண்டு இருந்ததால், அறையின் ஜன்னல் முதற்கொண்டு எல்லாமே மூடி இருக்க, அந்த அறை இன்னும் லேசான இருளின் வசம் இருந்தது.

‘ரூம்ல வச்சுட்டு இருந்தா, இந்த ஏஸி சில்னஸ்க்கு இவன் இப்போதைக்கு எழ மாட்டான். கொஞ்சம் வெளிய வராண்டாக்கு தூக்கிட்டு போய், சன்லைட் பட்டா இவனோட இந்த ஸ்லீப்பினஸ் போகும்..’ என ரியானுக்கு தோன்றியது.

அதை செயல்படுத்தும் விதமாக, குழந்தையை தோளில் போட்டு கொண்டு, அங்கு இருந்த துண்டை தயாராக வைத்திருத்த தண்ணீரில் முக்கி அதை ஈரமாக்கி எடுத்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவன், அந்த தளத்திலிருந்த ஓப்பன் விண்டோ அருகே சென்று நின்றான்.

அந்த ஜன்னல் இருந்த திசையில் சூரியக்கதிர் நேரடியாக படாது என்பதால், அந்த நேரத்திற்கான‌ வெளிச்சம் மட்டும் அவ்விடத்தை நிறைக்க லேசாக அசைந்த மரங்களின் குளிமையான காற்று இதமாக வீசியது.

“கண்ணா, இங்கே பாரு.. சன் ரெய்ஸ் ஆகி டூ மச் டைம் ஆச்சு.. இன்னும் நீங்க வேக்கப் ஆகமா இருந்தா எல்லாரும் முகுந்த் லேஸிபாய்ன்னு சொல்லுவாங்க..” என முகுந்தின் தலையை லேசாக திரும்பி வெளிச்சத்தில் காட்ட,

“ம்ம், பட், ஐம் சோ டையர்ட் ப்பா.. ஐ காண்ட் வேக் அப்.. நவ்..” என்று விட்டு வாகாய், ரியானின் மார்பிலேயே சாய்ந்து தூக்கத்தை தொடர போனான் குழந்தை.

அவனை பற்றி நன்கு அறிந்ததால், அவனை இப்படியே விட்டால் நாள் முழுவதும் உறங்கியே கழிப்பான்.. 

அவனின் தூக்கத்தை கலைத்து, உணவு கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தால் அவனை அந்த ஜன்னல் திட்டில் அமர வைத்தவன்,

வரும் போதே கையோடு எடுத்து வந்திருந்த ஈரமான துண்டை கொண்டு, லேசாக அவன் முகத்தில் ஒற்றி எடுத்தான் அவனின் தூக்கம் முழுவதும் கலைவதற்காக.

அதில் தூக்கம் கலைந்த முகுந்த், “நோ.. நோ..” என ரியானின் கரத்தை தட்டி விட்டபடி சிணுங்க துவங்கினான்.

அதில் லேசாக கடுப்பான ரியான், “முகுந்த், ஸ்டே காம்..” என லேசாக அதட்ட,

ஏற்கனவே தூக்க கலக்கத்தில் இருந்த குழந்தை தந்தையின் அதட்டலில் சிணுங்கலை விடுத்து அழுகையை தத்தெடுத்தான்.

பொதுவாக முகுந்த் இப்படி செய்பவன் இல்லை. 

இடமாற்றம் தந்த கால மாற்றத்தால்.. இந்த நேரம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பழகியவனுக்கு.. இங்கு, சட்டென மாற முடியாமல் போக, அதை தான் வெளிபடுத்தியும்.. கேட்காமல்.. தன்னை தொந்தரவு செய்த தந்தை.. அதட்டவும் செய்ய, அவனால் அழுகையை அடக்க முடியவில்லை.

மூன்று வயதை நெருங்கும் குழந்தை வேறு என்ன செய்யும்..?

அவனின் அழுகையை பொருட்படுத்தாமல், ரியான் அவனின் செயலில் மும்முரமாக இருக்க, 

“ஏய் இடியட்..! மண்டையில எதாவது இருக்கா..? குழந்தைய அழுக வச்சிட்டு இருக்கே..?” என கேட்ட பெண் குரலில் அவசரமாக திரும்பி பார்த்தான் ரியான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!