Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அவளின் ஆதியானவன்

அவளின் ஆதியானவன் – 35

 அத்தியாயம் 35:

தோட்டத்திற்கு சென்று சந்தியாவை பம்ப் செட்டில் குளிக்க சொன்னதற்கு “மாமா வாங்க. கிணத்துல குளிக்கலாம். எங்களை தனியாத்தான் கிணத்து பக்கம் போக கூடாதுன்னு சொல்வீங்க. இன்னைக்குத்தான் நீங்க இருக்கீங்கள்ல” என்றதும் 

“பொம்மு கிணறு ஆழம் அதிகம் டி. நா மட்டும்ன்னா ஓகே. நீ வேண்டாம். ஒழுங்கா இங்கவே குளிடி”

“இல்ல மாமா. எனக்கும் நீச்சல் தெரியும். பக்கத்துல நீங்களும் இருக்கீங்க. அப்புறம் என்ன பயம்”



Advertisement

“பொம்மு. உன்ன வெளில அழைச்சிட்டு வந்ததே அதிகம். இதுல இன்னும் சேட்டை பண்ணாம குளிடி” என்றவன் அவளை அப்படியே தூக்கி கொண்டு போய் தண்ணீர் தொட்டியில் போட்டான். மோட்டாரும் ஆனில் இருந்ததால் தண்ணீர் கொட்டி கொண்டிருந்தது.

புடவையோடு தண்ணீரில் விழுந்ததால் மூழ்கி எழும்போது சந்தியா படு கிளாமராக இருந்தாள் . அதை பார்த்து ஆதியும் நீரில் இறங்கிவிட்டான்.

சிறிது நேரம் அதிலேயே விளையாண்டார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் ஆதி அவளை அப்படியே கைகளில் அள்ளி கொண்டு வீட்டிற்குள் சென்று கதவை சாற்றி விட்டான். 

Advertisement

பிறகு குளித்துவிட்டு வேறு புடவையை சந்தியா கட்டியதும் மறக்காமல் ஜிபிஎஸ் மெஷினை அவள் உடையில் மறைவான இடத்தில் பொருத்திதான் வீட்டிற்கு கிளம்பினான்.

Advertisement

வீட்டிற்கு வந்து மத்திய உணவை சாப்பிட்டுவிட்டு அனைவரும் சிறிது நேரம் படுக்க சென்றனர். ஆதியும் சந்தியாவோடு படுக்க சென்றான். 

சந்தியாவை கட்டிக்கொண்டு ஆதி சிறிது நேரத்தில் தூங்கி விட்டான். ஆனால் சந்தியாவிற்கு தூக்கம் வரவில்லை. சிறிது நேரம் ஆதியின் கைகளுக்குள் உருண்டு கொண்டிருந்தவளை “ச்சு பொம்மு. சும்மா உருளாம பேசாம தூங்குடி” என்றான் தூக்க கலக்கத்தில்.

சிறிது நேரம் அசையாமல் படுத்திருந்தவள் ஆதி நன்றாக தூங்க ஆரம்பித்ததும் மெதுவாக அவன் கைகளிலிருந்து நழுவி வந்தாள். கட்டிலை விட்டு இறங்கி மொபைல் பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

Advertisement

சிறிது நேரத்தில் அதுவும்  போரடித்ததால் எழுந்து கீழே வந்தாள். கௌரி ரூமிற்கு சென்றவள் அங்கு அவளும் அசந்து தூங்குவதை பார்த்து அவளை எழுப்ப மனமில்லாமல் திரும்பி வந்தபொழுது பின்கட்டிலிருந்து மாடு கத்தும் சத்தம் கேட்டது.

அவள் முதன் முதலாக இங்கு வந்தபோது பிறந்த கன்று குட்டி அவளுக்கு என்றுமே ஸ்பெஷல்தான்.

சரி இப்பொழுது அதை போய் பார்க்கலாம் என்று பின்கதவை திறந்து கொண்டு இறங்கினாள். காலை பதினோரு மணிக்கு பிறகு மாலை நான்கு மணி வரை ஆதி வீட்டு பின்கட்டில் பெரிதாக புழக்கம் இருக்காது. 

அவர்கள் வீட்டின் பின்கட்டின் காம்பவுண்ட் கேட் காலையில் வேலையாட்கள் வந்து சென்றவுடன் சாத்தித்தான் இருந்தது. அதே போல் அந்த கேட் இருந்த பக்கமும் தெரு செல்வதால் ஆட்கள் நடமாட்டம் இருக்கும்.

ஆனால் அவர்கள் வீட்டின் வலதுபக்கத்தில் உள்ள வீட்டில் வயதான ஒரு தம்பதிகள் வசித்து வந்தனர். அவர்களின் மகன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.

பக்கத்து ஊரில் இருக்கும் அவர்கள் பெண் குடும்பம் மட்டும் எப்பொழுதாவது வந்து தங்கி செல்லும்.

அந்த வீட்டின் கொல்லைப்புறம் பெரிதாக யாரும் வரமாட்டார்கள். அவர்கள் வீட்டின் அடுத்த இடமும் ஒரு குறுகலான முட்டு சந்து. ஆள் நடமாட்டம் இருக்காது.

அந்த வழியாக பக்கத்து வீட்டின் கொல்லையில் இறங்கி, பிறகு ஆதி வீட்டின் காம்பவுண்ட் ஏறி குதித்து அங்கிருந்த வைக்கோல் போருக்கு பின்புறம் மறைந்திருந்தனர் தீபனின் ஆட்கள் மூன்று பேர்.

அவர்கள் பிளான் என்னவென்றால் ஆதி மாலை நான்கு மணிவாக்கில் மில்லுக்கு செல்வான். அப்பொழுது வீட்டுக்குள் புகுந்து மற்றவர்களை எளிதாக சமாளித்து சந்தியாவை தூக்கி விடலாம் என்பதுதான்.

ஆனால் அந்த அளவு அவர்களுக்கு கஷ்டம் கொடுக்காமல் இப்பொழுது ஈஸியாக சந்தியா அவர்களின் கண்களில் பட்டாள். வேறு ஆட்கள் நடமாட்டமும் இல்லை என்பதால் உடனடியாக முடிவு செய்து கன்றுக்குட்டியுடன் பேசிக்கொண்டிருந்த சந்தியாவின் பின்னால் சென்று அவள் வாயை இறுக பொத்தி துணியை வைத்து அடைத்து விட்டார்கள். அதோடு அவள் கை கால் கண் எல்லாவற்றையும் கட்டி விட்டனர்.

பிறகு அவளை அதே பக்கத்து வீட்டு கொல்லை வழியாக தூக்கி சென்று விட்டனர்.

ஒரு முக்கால் மணி நேரம் சென்று ஆதி மெதுவாக கண் விழித்தவன் பக்கத்தில் சந்தியா இல்லையென்பதை உணர்ந்து எழுந்தான்.

ரெஸ்ட் ரூமிலோ கௌரியோடோ இருப்பாள் என்று மெதுவாக எழுந்தவன் ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு கீழே சென்றான்.

அங்கு கௌரி ரூமிற்கு சென்று சந்தியா என்று அழைத்தான். கௌரி மட்டும் தூங்கி எழுந்து வந்து கதவை திறந்தவள் “சந்தியா இங்க இல்லீங்ண்ணா. அவ உங்களோடதான தூங்க வந்தாலுங் மதியம்” என்றதும் ஆதிக்கு பயம் பரவ ஆரம்பித்தது. மெதுவாக எல்லொரும் எழும்பி தேடி பார்க்க ஆரம்பித்தார்கள்.

அவள் எங்கேயும் காணவில்லை என்றதும் ஆதிக்கு மூளை வேலை நிறுத்தம் செய்துவிட்டது. அப்படியே என்ன செய்வது என்று தெரியாமல் கீழே உட்கார்ந்துவிட்டான்.

அருண் தான் அரவிந்துக்கும் வசந்தனுக்கும் கால் செய்தான். அப்பொழுது பின்கட்டிலிருந்து மாடசாமி சந்தியாவின் செல்லை எடுத்து வந்து கொடுத்தான்.

அதற்கு பிறகுதான் ஆதி சுயநினைவிற்கு வந்தான். என்ன நடந்திருக்கும் என்று ஒருவாறு யூகித்தவன் விஜய்க்கு கால் செய்தான்.

விஜய் வேறு ஒரு இன்வெஸ்டிகேஷன் விஷயமாக வெளியே சென்றிருந்தான். ஆதி கால் செய்து விஷயத்தை கூறியதும், அவன் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு சந்தியாவின் ஜிபிஎஸ் மெஷினை ட்ராக் செய்ய சொன்னான்.

அவர்கள் ட்ராக் செய்து லொகேஷனை கூறியதும் உடனடியாக ஆதிக்கு கால் செய்து “ஆதி பயப்படாத. சந்தியா லொகேஷன் கோயம்புத்தூரைதான் காட்டுது. நா லொகேஷன் ஷேர் பண்றேன். கிளம்பி போ. நானும் கொஞ்ச தூரத்தில இருக்கேன். அங்கதான் வந்துட்டிருக்கேன். அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல அலெர்ட் பண்ணி முதல்ல போய் பாக்க சொல்றேன்” என்றுவிட்டு கட் செய்தான். ஆதி வாசலுக்கு வேகமாக செல்லவும் அரவிந்த் காரோடு வந்துவிட்டான். 

வீட்டில் யாரும் வரவேண்டாம், பாதுகாப்பாக இருங்கள் என்று ஈஸ்வரனிடம் கூறிய ஆதி அரவிந்த் காரிலேயே ஏறி கொண்டான். இருவரும் கிளம்பியதும், வசந்த் பின்னாலேயே பைக்கை கொண்டு வந்து  நிறுத்தினான். அருண் அவன் பைக்கில் ஏறிக்கொண்டு அரவிந்த் காரை பாலோவ் பண்ண சொன்னான். 

விஜய் கிளம்பியவன், சந்தியாவின் ஜிபிஎஸ் ஆடியோ சவுண்டை அவன் மொபைலில் கன்னெக்ட் செய்து கொண்டான். 

இங்கு சந்தியா ஒரு ரூமில் உள்ள கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவள் வாயை பொத்தி தூக்கி வந்ததும் முதலில் எதிர்பாராமல் நடந்த நிகழ்வில் அதிர்ந்தவள், பிறகு நிதானமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

அதே மூன்று பேரும் ஒரு டிரைவரும் சேர்ந்துதான் காரில் இங்கு கொண்டு வந்தார்கள். சந்தியா முதலில் திமிறியவள் பின்பு அதனால் பயனில்லை என்று அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

அந்த ஆட்களும் தெலுங்கில் பேசினாலும் அவளிடம் மரியாதையாகவே நடந்து கொண்டார்கள். காரில் கொஞ்சதூரம் டிராவல் செய்து , பிறகு ஒரு இடத்தில் அவளை இறக்கி நடத்தி கூட்டி சென்று, இப்பொழுது இருக்கும் ரூமில் விட்டுவிட்டு கட்டுக்களை அவிழ்த்து விட்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் சந்தியா எதிர்பார்த்தபடி தீபன்தான் அங்கு கையில் ஸ்டிக்குடன் ஒரு காலை தாங்கியபடி நடந்து வந்தான்.

“ஹாய் சந்தியா டால். ப்பா. உன்ன பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு. உன்ன என் கண்ல காட்டாம வீட்லயே அடைச்சு வச்சுட்டான் அந்த காட்டான்”

“ஏய். யாரை காட்டான்னு சொல்ற. அடுத்தவன் பொண்டாட்டிய கடத்திட்டு வந்துருக்க நீதான் காட்டான்”

“ஹா ஹா டாலி. அப்படி பாத்தா ஒரு வருசத்துக்கு முன்னாடியே நா உன் புருஷனாயிட்டேன். இப்ப சொல்லு என் பொண்டாட்டிய திரும்ப கலயாணம் பண்ணிக்கிட்ட அவன் யாரு” 

அவனை அட பைத்தியமே என்பது போல் பார்த்தவள் “அடேய் நான் ஒன்னும் போண்டா டி இல்ல. நீ இஷ்டத்துக்கு உரிமை கொண்டாட. இந்த பாரு. நீ உங்கப்பா மாதிரி இல்ல. நல்லவன்னு கேள்விப்பட்டேன். என் விஷயத்துல மட்டும் ஏன் இப்படி நடந்துக்கிற”

“நீயே என்ன நல்லவன்னு சொல்றல டாலி. அப்ப என்னோட வாழறதுல உனக்கு என்ன தயக்கம்”

“உலகத்துல நீ மட்டுமா நல்லவன். எவ்ளோ நல்லவங்க இருக்காங்க. அதுக்காக நா எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியுமா. எனக்குன்னு ஒரு மனசு இருக்கு. அதுக்கு யாரை பிடிக்குதோ நா அவர்க்கூடதான் வாழ முடியும். இந்த ஜென்மத்துல என் மாமாவை மட்டும்தான் எனக்கு பிடிக்கும்”

“அப்படியெல்லாம் இல்ல டாலி. நீயே ஒரு வருஷம் அவன பாக்காம இருந்து, என்ன மட்டுமே பாத்துக்கிட்டிருந்தீன்னா ஆட்டோமேடிக்கா உன் மனசுக்கு என்ன பிடிக்க ஆரம்பிச்சுரும். இதான் ஹியூமன் சைக்காலஜி” என்றதும் நக்கலாக அவனை பார்த்து சிரித்தவள் 

“நீ எத்தனை வருஷம் ட்ரை பண்ணாலும் என் மனசு மாறாது. உன் வாழ்க்கைதான் வீணா போவும்”

“எனக்கு அதைபத்தில்லாம் கவலை கிடையாது டாலி. நீ இந்த ஆயுசு முழுக்க என் கூடத்தான் இருக்கணும். அதுதான் எனக்கு வேணும்”

“இந்த பாரு. உனக்கு திரும்பவும் சொல்றேன். புரிஞ்சிக்க. ஆயுசு முழுக்க ஒண்ணா இருக்க ஆய்சு வேணுல்ல”

“என்னட்ட வந்துட்டபிறகு உன் உயிர் கூட நா அனுமதிக்காம வெளிய போகாது டாலி”

“ஓ நா தற்கொலை பண்ணிக்க போறேன்னு நினைச்சியா. உன்ன ஏன் அன்னைக்கு காப்பாத்தினேன்னு இப்பவரைக்கும் நா நினைக்கல தீபன். நீ மட்டும் என்ன விடலன்னு வச்சுக்கயேன். உனக்கு என் கையாலதான் சாவு” 

“குழந்தை மாதிரி பேசாத டாலி. இனிமே சாவால கூட நம்மள பிரிக்க முடியாது”

“ஐயோ ஏன் இந்த மாதிரி டைலாக்லாம் பேசி கொல்ற. இன்னும் கொஞ்சம் நேரத்துல என் மாமா வந்து உன்னோட இன்னொரு காலையும் உடைக்க போறாரு பாரு”

அவளின் அருகில் நெருங்கி வந்தவன் “எவ்ளோ அழகா இருக்க டாலி நீ. அவனுக்கும் உனக்கும் ஏதாவது  பொருத்தம் இருக்கா. இன்னொரு தடவை அவனை பத்தி என்கிட்டே பேசாத டாலி. அவனோட என்னை கம்பேர் பண்ணி பாரு நா எவ்ளோ அழகா இருக்கேன். எத்தனை பொண்ணுங்க என்னோட டேட்டிங் வர ஆசைப்படுவாங்க தெரியுமா” என்று அவள் கன்னத்தை தொட வந்தவனிடம் 

“ஏய் தொடாத தள்ளி போ. அழகுங்கறது பார்க்கிற பார்வைல இல்ல. எண்ணத்துல இருக்கு. செய்ற செயல்ல இருக்கு. அடுத்தவங்களுக்கு எப்படி பயனுள்ள வகைல வாழறோம்ங்கிற வாழ்க்கைல இருக்கு. உன்ன மாதிரி அடுத்தவனுக்கு தொந்திரவு குடுத்துத்துக்கிட்டு வாழறதெல்லாம் ஒரு வாழ்க்கையா. நீயெல்லாம் அழகானவன்னு வேற சொல்லிக்கிற”

“டாலி. நீ நினைக்கிற அளவு நா கெட்டவன் இல்ல. என்னோட வாழ்ந்து பாரேன். அப்புறம் பிடிக்கலைன்னா கூட நீ என்ன பேசு. இப்படி எனக்கு சந்தர்ப்பமே குடுக்காம என்ன பத்தி நீயா ஜட்ஜ் பண்ணாத டாலி”  

“ஏய் உனக்கு மூளைன்னு ஒன்னு இருக்கா இல்லையா. ஏற்கனவே ஒருத்தரோட வாழ்ந்துட்ருக்கவள்ட்ட வந்து வாய்ப்பு குடுன்னு கேக்கற. உலகத்துல என்ன பொண்ணுங்களுக்கா பஞ்சம். போய் வேற பொண்ணுங்கள பாரு”

“எவ்ளோ பொண்ணுங்க இருக்கலாம் டாலி. நானும் நம்மூர் பொண்ணு பாரின் பொண்ணுங்கன்னு எல்லோரோடையும் பழகிருக்கேன். ஆனா நீ ஏஞ்சல் டாலி. அதும் நீயெல்லாம் எப்படியிருக்க வேண்டியவ தெரியுமா. மாடல் மாதிரிருக்க நீ, இந்த பட்டிக்காட்ல வந்து இப்படி சேலைய சுத்திக்கிட்டு என்ன மாதிரி வாழ்ந்துட்டருக்கன்னு  புரியுதா உனக்கு. என்னோட வந்தீன்னா நாம கனடா போய்டலாம். வாழ்க்கையை எப்படி என்ஜாய் பண்ணி வாழலாம்ன்னு அங்க வந்து பாரு”

“இதோ பாரு. எனக்கு இந்த கிராமத்து வாழ்க்கைதான் பிடிச்சுருக்கு. நானும் சிட்டியில அரக்க பறக்க ஓடி வாழ்ந்துட்ருந்தவதான். இங்க வந்ததுக்கப்றம்தான் என் வாழ்க்கை ர்த்தமுள்ளதா இருக்கிறதா எனக்கு படுது. அதிலையும் என் ஆதி மாமாதான் என் உயிர் உலகம் எல்லாம்” என்றவளிடம் 

“போதும் போதும் டாலி. அவனை பத்தி என்னட்ட பேசாத. அப்ப நீ உன் முடிவுல இருந்து மாறுறதா இல்ல. சோ எனக்கும் வேற வழி தெரியல” என்றுவிட்டு ரூமின் கதவை போய் சாற்றிவிட்டு அவளின் அருகில் வர ஆரம்பித்தான்.

இவ்வளவு நேரம் இல்லாத பயம் இப்பொழுது சந்தியாவிற்கு வர ஆரம்பித்தது. அதுவும் ஜிபிஎஸ் வைத்து அவள் மாமா அவளை விரைவில் கண்டு பிடித்துவிடுவான் என்றுதான் அவனிடம் பேசி நேரத்தை கடத்தி கொண்டிருந்தாள். ஆனால் இப்பொழுது அருகில் வந்தவனிடம்

“என்ன பண்ற நீ. கடைசியா இவ்ளோதானா நீ. இந்த உடம்புக்காகத்தான் இவ்ளோநாளா அலஞ்சியா நீ” என்று கேட்டுக்கொண்டே பின்னே சென்றாள் சந்தியா.

அவள் சொன்னதை கேட்டதும் ஒரு நிமிடம் நின்றவன் “எனக்கு ஒரு பொண்ணோட உடம்புதான் வேணும்ன்னா எவ்ளோ வேணாலும் கிடைக்கும். ஆனா எனக்கு வேண்டியது நீ என்கூட இருக்கணும். அதுக்குதான் நா இத பண்ண போறேன் டாலி”

“ஓ பலவந்தமா என் உடம்ப நீ அடஞ்சிட்டீன்னா நா உன் கூடவே இருந்துடுவேனா. இந்த ஒரு விஷயத்துக்காக என் மாமா என்ன விட்றுவாருன்னு நினைக்கிறியா நீ”

“உன் மாமா எப்படீன்னு எனக்கு தெரியாது. ஆனா அதுக்கு பிறகு உன் மாமா கூட வாழற துணிச்சல் உனக்கு இருக்கா டாலி? அவன் குடும்பத்துக்கிட்ட உண்மைய சொன்னா உன்ன ஏத்துக்குவாங்களா? அப்படியே அவங்க ஏத்துக்கிட்டாலும் உன் மாமா ஊர்ல வந்து இந்த விஷயத்த சொல்லுவேன். உன் மாமாக்கும், அவன் குடும்பத்துக்கும் ஊர்ல ஏகப்பட்ட மரியாதையாம்ல. இந்த மாதிரி ஒரு விஷயம் கேள்விப்பட்ட பிறகு யாரவது உன் மாமனை மதிப்பாங்களா டாலி” என்றுவிட்டு அவள் மேல் கையை வைக்க போனான்.

சந்தியா கட்டிலில் ஏறி மறுபக்கம் இறங்கி நின்றாள். மனதிற்குள், இவனின் அடிபட்ட காலில் அடித்துவிட்டு வெளியே சென்றாலும் அங்கு இருக்கும் தடியன்களை எப்படி சமாளிப்பது. மாமா சீக்கிரம் வந்துடுங்க என்று தைரியம் சொல்லி கொண்டவள், வெளியில் தீபனிடம் 

“இதோ பாரு. உங்கம்மா இறந்ததுக்கப்புறம் என்ன பாத்ததுனாலதான உனக்கு என்ன பிடிச்சது. ஒரு பொண்ணுக்கிட்ட நீ இப்படி நடந்துக்கிறது உங்கம்மாக்கு பிடிக்குமா. கொஞ்சம் யோசிச்சு பாரு” என்றாள்.

  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!