Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ithaiya Geethamae

Ithaiya Geethamae 8

💜 கீதம் – 8 💜

” ஜோதி, பயப்படாதே அமைதியா இரு. உனக்கு ஒன்னும் ஆகாது. இன்னும் கொஞ்ச நேரத்துல நல்லபடியா கொழந்த பிறந்திடும்…” பிருந்தா சர்ஜரிக்கு ரெடி ஆகி கொண்டே அவளிடம் பேச்சு கொடுக்க.



Advertisement

” டெலிவரியை பத்தி பயம் இல்லைக்கா., போன தடவை ரெண்டு பிள்ளை பெத்துட்டேனே. ம்ம்., என் பாட்டியை நினைச்சா தான்கா கொஞ்சம் பயமா இருக்கு. பொறக்குற புள்ளை ஆம்பளபுள்ளையா இருந்தா ஒன்னும் சொல்லாது. இல்லைனா திட்டிட்டே இருக்கும்..,” வயிற்றை வருடி கொண்டே மெதுவாய் சொல்ல.

Advertisement

” ஏன் உன் பாட்டிக்கு பையன் தான் வேணுமா. இல்லைனா என்ன பண்ணும் ?.”

Advertisement

” அவங்களுக்கு பொறந்த ஏழும் பொட்டைபுள்ளையா வரிசையா பிறந்ததாம். அப்புறம் வேண்டுதல் எல்லாம் வச்சு தான் என் மாமா பொறந்தாங்க. ஒத்தை பையன்னு உசிரே வச்சி இருக்கு. என் மூலமா தான் அடுத்த சந்ததி வரும். அதான் பையன் வேணும்னு அடம்புடிக்குது. இல்லைனா கொஞ்ச நாளைக்கு அழுதுட்டு கூப்பாடு போடும். அம்புட்டுதேன்…,வேற என்ன பண்ண போகுது.., அத பார்க்கவே  பாவமா தான்  இருக்கு., ” என்றபடியே உச்சு கொட்டினாள்.

Advertisement

” சரிதான் உங்க பாட்டிக்கு ஒத்து ஊத்திட்டு இரு.விளங்கிரும்., என்ன புள்ளையோ ., உன் வயசு என்ன ? அதுக்குள்ள கல்யாணம் பண்ணி இதெல்லாம் தேவையா ? நீ படிக்க வேண்டிய வயசுல உன்னை இப்படி நிப்பாட்டி இருக்கு. அது புரியுதா உனக்கு..,” பாட்டி மேல உள்ள கோபத்தில் பிருந்தா பேச

” கோபப்படாதிங்க அக்கா, அது நிலைமையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க., அப்போ தான் புரியும்., எங்க அய்யாரு குடிக்க காசு இல்லனு ஏஜென்ட் கிட்ட விற்க பார்த்தாரு. பாட்டி தான் அவரு கூட சண்டை போட்டு மாமாக்கு கட்டி வச்சுச்சு, என்னை காப்பாத்தியும் கூட்டிட்டு போச்சு. இப்பவும் என் ரெண்டு பிள்ளைகளையும் இடுப்புல தூக்கிட்டு தான் திரியும். என் கையில் கூட கொடுக்காது. நான் சின்ன பிள்ளைன்னு. பாவம் அத போய் திட்டுறீங்க…,”

” ஏண்டி, நீ அசால்ட்டா பேசிட்டு இருக்க…பாட்டி நல்லவங்கனு ., எங்களை அடிக்க வந்தாங்க..,உசிரை புடிச்சு, உங்க பாட்டிகிட்ட அம்புட்டு திட்டையும் நாங்க வாங்கிட்டு நிற்கிறோம், உனக்கு தெரியுமா., “

” பிள்ளையை தூக்கி நல்லபடியா கையில் கொடுங்க. உங்க கால்ல கூட விழுகும். அதுக்கு பயம், அதான் திட்டுது..,”

” அப்ப உனக்கு பயமில்லையா.., ?”

” நீங்க எல்லாம் இருக்கும் போது நான் ஏன் பயப்பட போறேன். பெரிய மேடமும், நந்துக்காவும் சொல்லி இருக்காங்க. நான் பயந்தா எம்பிள்ளையும் பயப்படுமாம். அதனால தைரியமா இருக்கணும்னு சொல்லி இருக்காங்க. நாளைக்கு அண்ணனும், அக்காவும் வந்து பாட்டிகிட்ட பேசி புரிய வைக்குறோம்னு, ஊர்ல வந்தப்போவே சொன்னாங்க. அதனால மனசுல பயமில்லை…,” வெள்ளந்தியாய் மனதில் உள்ள அனைத்தையும் சொல்லி கொண்டு இருக்க.,

” எந்த அண்ணன் வந்தாங்க உன்னை பார்க்க, நந்துவை கூட்டிகிட்டு..,” யாரென அறியும் ஆவலில் அவர் கேட்க.

” செவப்பா, ஹீரோ மாதிரி இருந்தாங்க. அவுக கூட தான் அக்கா போன வாரம் வந்துச்சு…,”

” ஓ…ஆரவ் சார் வந்தாரா. அங்கே எதுக்கு வந்தாங்க…,” அவளை சர்ஜரிக்கு தாயார் செய்தபடியே, பயமின்றி நார்மலாக வைத்திருக்கும் பொருட்டு, பேச்சு கொடுத்து கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தார்.

” எங்க ஊர்ல இருக்க துரைபாண்டி மாமா,அவங்க பொண்ணுங்க மூணு பேரையும், ஏஜென்ட் கிட்ட விட போறதா சொன்னாங்க. நான் தான் அக்காக்கு போனை போட்டு சொன்னேன். அதுகளும் நல்லா படிக்கிற பிள்ளைங்க. அவங்க அக்கா என்கூட தான் படிச்சா. இப்போ சென்னைல வேலை பார்குறா. எப்போவாது தான் ஊருக்கு வருவா. நானும் படிக்க முடியல. இந்த பிள்ளைங்களாவது படிக்கணும்னு அக்காட்ட சொன்னேன். அதுக்கு தான் முயற்சி பண்ணிட்டு இருக்காங்க.

” ஓ..,அப்படியா, சரி நீ என்ன படிச்சி இருக்க? “

” பத்தாவதுல 456 மார்க் வாங்கி இருக்கேன். அடுத்து படிக்க முடியல., இப்போ நினைச்சா படிக்க முடியுமா ? முடியாதே..,” என கண் கலங்க ஆரம்பிக்க.

“அழாதேடா. நீ படிக்கலைனா என்ன. உன் பிள்ளைகளை நல்லா  படிக்க வைக்கலாம். உனக்கு தெரிஞ்ச எல்லா புள்ளைகளையும் படிக்க வைப்போம். கலங்காம இருக்கனும். நாங்க இருக்கோம் சரியா..,” என தலை கோதி அங்கே வந்த ராணியும் அவளை  அமைதிப்படுத்தினார்.

நந்துவோடு சேர்ந்து ஆரவ்வும் அந்த ஊருக்கு சென்றிருப்பதால் விஷயம் எதுவோ பெரியது போலிருக்கே, பின் கேட்டு கொள்ளலாம் என மனதில் எண்ணிக் கொண்டே அவளை OT க்கு அழைத்து செல்லலாமா என டாக்டரிடம் கேட்க சென்றனர்.

********

அம்மா. ஆரவ்வை பத்தி இவங்களுக்கு எப்படி தெரியும் ? யார் சொன்னது ? பதிலை தேடி அலைபாயும் விழிகளுடன் தாயை நோக்க.

சகுந்தலாவோ. “தம்பி மட்டும் இல்லைனா உன்னை உசுரோடு பார்த்திருக்க முடியாது. எப்பவோ கொன்னு போட்ருப்பாங்க. உங்க அப்பா ஆசைப்படி இந்த ஊர்ல டாக்டரே இல்லைங்கிறதாலையும் தான் படிக்க வைக்க நினச்சேன். உன்னை படிக்க வைக்க கூடாது, அவங்க பையனுக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு ரெண்டு பேரும் சண்டை போட்டாங்க. என்ன பண்ணறதுன்னு யோசிச்சு, சென்னைல இருக்க முருகேசன் மாமா துணையோடு உனக்கு காலேஜ் சீட்டை வாங்கி, யாருக்கும் தெரியாமத் தான் கூட்டிட்டு போனேன். அங்கே தான் ஆரவ் தம்பியை பார்த்தேன்..’

கல்லூரியில் ஆரவ்வை முதன் முதலாக சந்தித்த கதையில் இருந்து சொல்ல ஆரம்பித்தார்.

கல்லூரி வாயிலில் அழகழகாய் பட்டாம்பூச்சிகள் சுற்றிக் கொண்டு திரிந்தன. ராகிங் செய்ய ஒரு கூட்டமே அலைந்து கொண்டு இருந்தது. பள்ளி முடித்த நிலையில் புதிதாய் வந்த குட்டி பறவைகள் பயமும் தயக்கமும் மனதை வாட்ட மெல்ல எட்டி பார்த்தன.

என்ன வேண்டுமானாலும் செய். மோதி பார்ப்பேன் என ஒரு சிலரும் தெனாவட்டாய் சுற்றி கொண்டிருக்க, இதையெல்லாம் ரசித்தப்படி மெதுவாய் தன் காரை பார்க்கிங் செய்துவிட்டு திரும்பியவன், ஒரு பெண்மணி மயங்கி விழுந்ததை கண்டு ஓடிச்சென்று பிடித்தான். ” அம்மா என்னாச்சு. என்னை பாருங்க,..,” என கன்னத்தை தட்ட, மெதுவாய் கண் விழித்து பார்த்தவர்.

” ஒண்ணுமில்லை தம்பி. கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன். அதான் மயக்கம் வந்துருச்சு போல..,” என்றார் தன்னிடம் இருந்த தண்ணீரை எடுத்து பருகியபடி.

” உங்க பசங்கள இங்கே பார்க்கவோ, இல்லை சேர்க்கவோ வந்தீங்களா, விட்டு போறது கஷ்டமா இருக்கா..,” என்றான்.

ஆதரவாய் அவரின் கையை பிடித்தபடி, தோள் சாய்ந்து அழ துணையின்றி தவித்து நின்றதைப்போல. கண்ணீரோடு” ம்ம்..,” என்று தலையாட்டியவர்.

” என் பெயர் சாந்தி, ராம்நாடு பக்கத்துல ஒரு கிராமத்துல வசிக்கின்றோம். என் பொண்ணு பெயர் தர்ஷினி. இன்னைக்கு தான் இங்கே சேர்க்க வந்தேன். பிறந்தது முதல் அவளை பிரிஞ்சதே இல்லை. இன்னைக்கு சூழ்நிலைக்கு பயந்து அவரை பிரிய போறதாய் நினைச்சா அடிவயிறு கலக்குது. அவ இங்கே எப்படி இருக்க போறாளோன்னு பயமா இருக்கு..,” என கலங்கிய குரலில் மெதுவாக கூறினார்.

” இதுக்கு ஏன்மா கவலை, நானும் முதல் வருஷம் தான் படிக்க போறேன். உங்க பொண்ணை பத்தி சொல்லுங்க. பத்திரமா பார்த்துகிறேன்..,” என ஆறுதலாய் பேசினான்.

” இல்லை. அது.., “என தயங்கியபடி யாரென்று தெரியாத ஒரு ஆணிடம் எப்படி வயசு பொண்ணை பத்தி சொல்ல முடியும் என யோசனை முகத்துடன் அவனை பார்த்தார். பார்த்தால் நல்லவன் போல தான் தோன்றுகிறது என ஒரு மனம் சொல்ல, மறுநொடியே எப்படி என ஒரு தயக்கம் என சில நொடிகள் மௌனத்தில் கழிந்தது.

” அம்மா, என் பெயர் ஆரவ், எங்கப்பா Dr .ரவி, உன் உயிரை கொடுத்து எந்த உயிரையும் காப்பாத்த முயற்சிக்கும்னு அடிக்கடி சொல்லுவார். நான் டாக்டர் படிச்சிட்டு தான் காப்பாத்தணும்னு எதுவும் இல்லையே, இப்பயே பண்ணலாமே. என்னோட தங்கையா நினைச்சி தான் உங்க பொண்ணை பத்தி கேட்கிறேன். உங்களுக்கு தயக்கம் இருந்தா சொல்ல வேணாம்…,”

” அச்சோ தம்பி, உன்னை நம்பாம, தப்பாக எல்லாம் நினைக்க தோணலை. என் பொண்ணை கூப்பிட்டு அறிமுகம் படுத்தி வைக்கின்றேன். நீங்க அவளை பார்த்துக்கோங்க.ஒரு பெரிய பிரச்சனைல மாட்டி இருக்கோம். அதான் பயம். வேற ஒண்ணுமில்லை..,” என்றார் தயக்கமாய் முந்தானையால் முகத்தை துடைத்தபடி.

” காலேஜ் சேர்க்கிறதால எதுவும் பிரச்சனையா, பணம் கஷ்டமா சொல்லுங்க. மேனேஜ்மென்ட் எனக்கு தெரிஞ்சவங்க தான். நான் பேசி டைம் வாங்கி தரேன்…,”

” சொத்து பத்து எல்லாம் எக்கச்சக்கமா இருக்கு தம்பி. பணத்தை குறியா நினைச்சி, உசுர எடுக்கிற கும்பலுக்கு மத்தியில் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். அவ அப்பா உடம்பு முடியாம, இறந்து பத்து வருஷம் ஆச்சி. அவரு சாகுறதுக்கு முன்னாடியே எல்லா சொத்தும் எங்களுக்கு அப்புறம் என் பொண்ணுக்கும் , அவளுக்கு வர போற மாப்பிள்ளைக்கு மட்டுமேனு உயிலெழுதி வச்சிட்டார். இவளை கடத்திட்டு போய் கல்யாணம் பண்ண முயற்சி பண்ராங்க. அதான் யாருக்கும் தெரியாம இங்கே கூட்டி வந்து படிக்க வைக்கின்றேன்..,”

” ஏம்மா..,சொத்துக்காக தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவாங்களா ?, என்ன கொடுமையா இருக்கு.., என கடுப்பாய் கேட்டான் ஆரவ்..

” ம்ம் கிராமத்துல சகஜம் தான், தாலி கட்டிட்டா அவங்க சொல்றபடி கேட்டு இருக்கணும்னு பஞ்சாயத்துல சொல்லுவாங்க. அது படி தான் நடக்கணும். இல்லைனா ஊரை விட்டு தள்ளி வச்சிருவாங்க. எங்க விட்டு சார்பா பேச எந்த ஆண் துணையும் இல்லை. தாய் விட்டு உறவுன்னு சொல்லியும் யாருமில்லை. நானும் ஒத்தை பொண்ணு. ஊரில் நிலத்தை எல்லாம் விட்டுட்டு எந்நாளும் உடனே இங்கே வர முடியாது. தெரிஞ்சவங்க இருந்தாலும் என் பிள்ளையை நினைச்சா அழுகையா வருது. என்ன பண்றதுன்னு புரியாம நிற்கிறேன்..,” என உணர்வு மிகுதியில் அழவே ஆரம்பித்து விட்டார்.

அவர் கூறியதை கேட்டவன் சிறிது யோசித்து ” டோன்ட் ஒர்ரிமா. நான் அவளை பத்திரமா பார்த்துகிறேன். நீங்க பயப்படாம ஊருக்கு போங்க. இதை பத்தி அவங்களுக்கு எதுவும் தெரியுமா? ” என  கேட்டான்.

” இல்லைப்பா, அவகிட்ட எதுவும் சொல்லல, அப்பாவி பொண்ணு, அதுவுமில்லாம என் பொண்ணு வேற கொஞ்சம் வெகுளியா இருப்பா. இந்த ஊர்ல எப்படி தாக்கு பிடிக்க போராளோன்னு பயமா இருக்கு. அப்புறம் பயந்துட்டு படிக்க மாட்டேனுட்டு ஓடி வந்திரும், ஏற்கனவே என்னை விட்டுட்டு இருக்கமாட்டேன்னு ஒரே அழுகை. இதுவும் தெரிஞ்சா அவ்வளவு தான்..,” என பதறியபடி கூறினார்.

” ஓகே. அவளுக்கு எல்லாம் நான் சொல்லி தரேன். இங்கே இருந்து நீங்க கூட்டிட்டு போகும் போது, தைரியசாலியாய், எல்லாத்தையும் தாங்கி நிற்கிற பொண்ணா மாத்தி இருப்பேன்..,” என அவரின் கரம் பற்றினான்.

” ரொம்ப நன்றிப்பா. யாருன்னு தெரியாத உசுர காப்பாத்த துடிக்கிற. நீ நல்லா இருப்பா..,” என நன்றி பெருக்குடன் பேசினார்.

ஆரவ்விடம் பேசியதை பற்றிய நினைவுகளில் இருந்து வெளி வந்தவர், எழுந்து தண்ணீரை குடித்து விட்டு வந்து மீண்டும் அமர்ந்தார்.

” இவன் ஏன் நம்ம மேல இவ்ளோ பாசம் வச்சி இருக்கானு எத்தனையோ தடவை யோசிச்சு பார்த்து இருக்கேன். காதல்ன்ற உணர்வு தான் காரணம்னு தப்பா நினைச்சி, அவன்கிட்டயும் பேசியிருக்கேன். ஆனால் நம்ம அம்மாட்ட சொன்ன வார்த்தைக்காக இத்தனை வருஷம் என்னை பத்திரமா பாதுகாத்திருக்கானே. ரியலி கிரேட். இனியாவது அவனை புரிஞ்சிக்க முயற்சிக்கனும்..,” என தனக்குள் கூறிக் கொண்டே, மேலும் பேசுவதை கேட்க தயாரானாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!