Skip to content
Post Views: 8,832
பகுதி 5
சம்யுக்தா உள்ளே சென்ற பின், அவளின் பேச்சை திரும்ப அசை போட்ட ரியானுக்கு அவளின் படப்பட பேச்சு ஒரு வித சுவாரஸ்யத்தை கொடுக்க.. அதில் அழகாய் மலர்ந்தது ஓர் புன்னகை.
Advertisement
“சரியான சாட்டர் ஃபாக்ஸா இருப்பா போல..” என்று சொன்னவன்,
“எனக்கு தமிழ் தெரியாதுன்னு நினைச்சு என்னவெல்லாம் பேசறா..? வெரி இன்ட்ரெஸ்டிங் கேரக்டர்..” எனச் சொல்லியவாரே முகுந்திடம் அதே மலர்ந்த முகத்தோடு திரும்பி,
Advertisement
Advertisement
“கண்ணா.. தூக்கம் போச்சா..? இனி ஃபிரஷ்ஷப் ஆகலாமா..?” என்று கேட்டு அவன் நெற்றி முட்டினான்.
தந்தையின் இது போன்ற மலர்ந்த முகத்தை இதற்கு முன்பு பார்த்தே இராத முகுந்துக்கு ஏதோ காணாத அதிசயமாய் இருந்தது அது.
Advertisement
வெளிநாட்டில் பிறந்தது முதல் இருந்ததால்.. அக்கம்பக்கம் அதிக பழக்கம் இல்லாத நிலையில்,
தாயை இழந்து தந்தையுடனே எப்போதும் இருந்ததன் விளைவோ.. என்னவோ.. ரியானின் இந்த முகம், சட்டென முகுந்திடமும் அதன் தாக்கத்தை கொடுத்தது.
அதனால் அவனின் முகமும் அழகான மலர்ச்சியை காட்டியது.
“ஹேய் கண்ணா, ஓய் ஆர் யூ லுக்கிங் அட் மீ லைக் திஸ்..?” என்றான் சிரிப்போடு.
“அப்பா.. யூ ஆர் சோ க்யூட்.. வென் யூ ஸ்மைல் லைக் திஸ்..” என்றான் மின்னும் கண்களுடன்.
குழந்தையின் பேச்சை கேட்டு, “என்னடா..! புதுசா அப்பா சிரிச்சு பார்க்கற மாதிரி பேசறே..?” என்றான் ஆச்சர்யமாக.
“யூ ஆல்வேஸ் லாஃபிக் வித் மீ.. பட், திஸ் ஈஸ் டிஃபரென்ட் அண்ட் குட் ப்பா..” என்றான் பெரிய மனிதனாய்.
அவனின் பேச்சை கேட்டு வாய்விட்டு சிரித்தவன், “ஓ.. அப்பாவ அவ்வளவு கவனிக்கறையா நீ..? இது தெரியாம போச்சே எனக்கு..” என்று கிச்சு கிச்சு மூட்ட,
குழந்தையும் அவனுடன் சேர்ந்து கிளுங்கி சிரித்தது.
அங்கே இருந்த போது ரியான் வீட்டில் தமிழில் பேசினாலும், பொதுவெளியிலும்.. மருத்துவ மனையிலும் எப்போது ஆங்கிலமே பிரதானமாக பேசப்பட, முகுந்துக்கு ஆங்கிலம் சரளமாக வரும் அளவு தமிழ் வராது.
எதாவது மனதில் தோன்றியதை கடகடவென பேச நினைத்தால், உடனே பேச்சு ஆங்கிலத்திற்கு தாவி விடும்.
ரியான் முகுந்தை தூக்கிக்கொண்டு, இருவரும் சிரித்த முகமாக அறைக்குள் வரவும், சம்யுக்தா வாஷ்ரூம் கதவை திறந்து வரவும் சரியாக இருந்தது.
அதுவரை ரியானை கவனித்த அளவு முகுந்தை கவனிக்காதவள், இப்போது தான் குழந்தையை கவனித்தாள்.
மெல்லிய உடல்வாகுடன் இருந்தாலும், பார்த்ததும் அள்ளி கொஞ்ச சொல்லும் அழகுடன், அசல் இந்திய ஜாடையும், நிறமும் கொண்டு இருந்தான் முகுந்த்.
‘ஓ.. அப்போ பேபி நம்ம ஊரு.. இந்த குழந்தைய பாத்துக்க எதுக்கு பாரீன் பேபி சிட்டர்..?’ என்று யோசித்து கொண்டிருந்தவளை,
“டிட் யூ ஃபினிஷ் தி ஒர்க் யூ கேம் ஃபார்(நீ வந்த வேலை முடுஞ்சுதா..)?” என்ற ரியானின் கேள்வி நிகழ்வுக்கு கொண்டு வர,
“ய்யா.. இட் ஃபினிஷ்.. தேங்க்ஸ்..” என்று சற்று கூச்சத்தோடு சொன்னவள்,
“குழந்தை ரொம்ப க்யூட்டா இருக்கான்.. வாட் ஈஸ் ஹிஸ் நேம்..?” என கேட்க,
“முகுந்த்..” என்றதும்..
“ஓ.. சூப்பர். ஐ ஹேவ் டூ டெல் யூ சம்திங்..?
பேபி சிட்டிங் ஈஸ் ஏன் ஆர்ட்.. டோண்ட் ஷோ யூவர் இரிட்டேஷன் டூ த சைல்ட்..
இட்ஸ் அபெக்ட் தெம் ஏ லாட்.. ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட் மை பாயிண்ட்..?” என்று ரியானிடம் சொல்ல,
முதல் முறை பார்த்த போதும், குழந்தையின் மீதான அவளின் அக்கறையான பேச்சு.. அவளின் மீதான மரியாதையை ரியானிடம் உயர்த்தி காட்ட,
அது தந்த இதத்துடன், “ஸ்யூர் மிஸ் சம்யுக்தா. ஐ வில் ட்ரை மை லெவல் பெஸ்ட்.. அண்ட் தேங்க்ஸ் ஃபார் யுவர் கன்ஷர்ன்..” என்றான்.
அவனின் இதமான குரலில் தைரியம் பெற்றவளாய், அவனிடம் நெருங்கி, குழந்தையை நோக்கி, “ஹாய் முகுந்த்.. நா சம்யுக்தா. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.
உன்னை மாதிரி சமத்து குட்டீஸ் எல்லாம் அழலாமா..?
நீங்க ரொம்ப ஸ்வீட் தானே..? இனி அழுகாம சமத்தா உன்னோட பேபி சிட்டர் சொல்றத கேட்டு, குட் பாயா இருக்கனும் உன்னோட பேரன்ட்ஸ் வர்ற வரை.. ஓகே வா..?” என சொல்லி,
அவனின் முன் நெற்றியில் பரவியிருந்த முடியை கோதிவிட,
பிறந்ததும் தாயை இழந்ததால், பெண்ணின் இதமான ஸ்பரிசத்தை இதுவரை உணர்ந்தே இராத குழந்தைக்கு அந்த இதம் மிகவும் பிடித்து போனது போல..
ரியான் என்ன தான் மென்மையாக அவனை கையாண்டாலும், ஆணுக்கே உரிய கடுமை வெளிப்படுவதால்.. இந்த தனிப்பட்ட ஸ்பரிசம் அந்த குழந்தையை ஈர்த்ததோ..?!
அதனால் அவளின் கரத்தை ஒரு கையால் பற்றி கொண்டவன்,
“என்ன டூக்கு..” என்றான், மறு கரத்தை அவளை நோக்கி விரித்து கொண்டு சாய்ந்து.
‘அவன் இப்படி அவளின் புறம் சட்டென சாய்வான்..’ என எதிர்பார்க்காத பெரியவர்கள் இருவரும் தடுமாறி.. கடைசி நொடியில் மோதாமல் விலகி நின்றனர்.
தாவி வந்த குழந்தையை லாவகமாய் பிடித்து நின்ற சம்யுக்தாவை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தான் ரியான்.
சம்யுக்தாவிடம் வந்த குழந்தை அவளின் முகத்தை உற்று பார்த்து கொண்டே, “இது..” என ரியானை காட்டி, ‘அவர்.. என் அப்பா..’ என சொல்ல போகும் முன்பாக,
ரியானை குழந்தை கை காட்டியதும், அவனின் புறம் பார்வையை திரும்பியவள், குழந்தையை லாவகமாய் பிடித்த தனக்கான மெச்சுதல் பாவனையை காட்டிய முகத்தை கண்டதும்.. குழந்தை பேச்சை தொடரவிடாது,
“எங்க வீட்டுலையும் ஒரு வாண்டு இதே மாதிரி இருக்கா.. அவளும் இப்படி தான் சடனா எதாவது பண்ணி வைப்பா..
சோ, இதெல்லாம் ஹேண்டில் பண்ணி பழகிடுச்சு..” என்று ஆங்கிலத்தில் சொல்லி முடித்தவள்,
“முகுந்த்.. எங்க வீட்டுக்கு வர்றீங்களா..? அங்கே உன்னை மாதிரியே ஒரு கேர்ள் பேபி இருக்கா.. அவ கூட சேர்ந்து விளையாடலாம்..” என்று ஆசையாய் அழைக்க,
தன் பேச்சை கேட்காமல் தந்தையிடம் பேசியதிலேயே ஒருமாதிரி ஆகிவிட்ட குழந்தை,
‘எங்கே அங்கு போனால்.. தன்னை விட்டு அந்த குழந்தையை சம்யுக்தா அதிகமாய் தூக்கி கொஞ்சுவாளோ..?’ என்ற குழந்தைகளுக்கேயான பொறாமை குணம் சட்டென தோன்ற,
“நோ.. நா வல்ல..” என்று சொல்லி, மீண்டும் ரியானிடமே செல்ல கை நீட்டினான் பிள்ளை.
error: Content is protected !!