Skip to content
Post Views: 9,496
‘மற்றவர்களிடம் எளிதில் ஒட்டாத முகுந்த், சம்யுக்தாவிடம் எப்படி இவ்வளவு எளிதாக ஒட்டிக்கொண்டான்..?’ என்ற ஆச்சர்யத்தில் மூழ்கியிருந்த ரியான், போன வேகத்தில் தன்னிடம் வந்து விட்டவனை கண்டு சிரிப்போடு,
“அவன் யாரிடமும் ஒட்ட மாட்டான். ஏதோ நினைப்பில் உங்களிடம் வந்து விட்டான்..” என ஆங்கிலத்தில் சொல்லி கொண்டிருக்க, சரியாக சம்யுக்தாவின் போன் அடித்தது.
Advertisement
அது அடித்த பிறகே.. ‘தான் எதற்காக இன்று வந்திருக்கிறோம்..’ என்பதே அவளுக்கு நினைவுக்கு வந்தது போலும்..
“அச்சோ.. போச்சு..!” என்று தன் நெற்றியில் தானே அடித்துக்கொண்டவள், அவசரமாக போனை உயிர்ப்பிக்க.. மறுமுனையில், “சம்யுக்தா எம்டி வந்து பிப்டீன் மினிட்ஸ் ஆச்சு..
Advertisement
Advertisement
எக்ஸ்பீரியன்ஸ் பர்ஷன்ஸ்
ஒவ்வொருத்தரா போயிட்டு இருக்காங்க.. அடுத்து நான் போகனும்.
Advertisement
எங்களுக்கு அடுத்து ஃப்ரஷர்ஸ் கூப்பிடுவாங்க. இன்னும் என்ன பண்ணறே..?” என்ற சாந்தியின் கேள்விக்கு,
“இப்ப வந்திடுறேன்.. நா வர்றதுக்குள்ள நீங்க உள்ளே போகனுமின்னா, என்னோட ஃபைலை வெளிய இருக்கற நம்ம செட்ல யாராவதுகிட்ட கொடுத்துட்டு நீங்க போங்க..” என்றவள்,
“பாய் முகுந்த். பாய் சார். தேங்க்ஸ் ஃபார் யுவர் டைம்லீ ஹெல்ப் ஆன் மீ..” என்றுவிட்டு,
அவசரமாக லிஃப்டையும் மறந்து அருகே இருந்த படியில் வேகமாக இறங்க துவங்கினாள்.
வேக வேகமாக மூச்சு வாங்க வந்து நின்றவளை பார்த்த சாந்தி, “ஏய்..! என்னாச்சு..? இப்படி மூச்சு வாங்க ஓடி வர்றே..?” என்றார் பதட்டமாக.
“இல்ல சாந்தி, லேட் ஆகிடுச்சுன்னு சொன்னீங்களா.. அதான்.. லிஃப்டை எதிர்பார்த்து.. இன்னும் லேட் ஆகிட்டா.. என்ன பண்ணறதுன்னு.. படியில இறங்கி வந்தேன்.. அதான்.. இப்படி.. மூச்சு.. வாங்குது..” என்று தான் வேகமாய் வந்ததற்கு மூச்சு வாங்கியபடியே காரணம் சொல்ல,
“இந்தா.. இந்த தண்ணிய குடி..முதல்ல..” என்று அருகே இருந்த சஞ்சனா கொடுக்க,
“தேங்க்ஸ்..” என்றுவிட்டு, அதை வாங்கி அவசரமாக குடிக்க துவங்கியவள் ஆசுவாசமாக இருக்கையில் அமர்ந்தாள்.
அடுத்து சாந்தியின் முறை வர, சம்யுக்தாவின் ஃபைலை அவளிடம் கொடுத்துவிட்டு, ‘மேனேஜிங் டைரக்டர்..’ என்ற பெயர் பலகை வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றார்.
மேலும் சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, சம்பிரதாயமாக சிலபல கேள்விகள் கேட்கப்பட்டதும்,
ஏற்கனவே வேலை அனுபவம் உள்ளவர்களை இப்போது போய் கொண்டிருக்கும் சில ப்ராஜெக்டுகளில் சேர்ந்து கொள்ளவும், அவர்களின் சேர்க்கைக்கான பார்மாலிட்டீஸ் முடிக்கவும் தனியாக அனுப்பப்பட்டனர்.
புதிதாக இப்போது தான் வேலைக்கு என வந்த மூன்று பேரையும் ஒன்றாக அழைத்த சந்தீப், “உங்க மூணு பேரையும் வெங்கடேஷ் டீம்ல போட்டிருக்கேன்.
உங்களுக்கு ஒன் வீக் ட்ரைனிங் பீரியட் மாதிரி தான்.. அதுல உங்க பர்பாமென்ஸ் பார்த்துட்டு, அடுத்து என்னன்னு டிசைட் பண்ணலாம்.
வெங்கடேஷ் உங்களுக்கு அசைன் பண்ணற மாடுலரை செய்ய.. அவரே உங்களுக்கான மென்டரையும் சொல்வாரு.. அவரை ஃபாலோ பண்ணிக்கோங்க.. ஆல் தி பெஸ்ட்..” என்று சொல்லி அனுப்பினார்.
அந்த அறையை விட்டு வெளியே வந்ததும்.. இவர்களுக்காக காத்திருந்த ஒருவர்,
“உங்களுக்கான லன்ச் முடுச்சிட்டு, நீங்க தேர்ட் ஃப்ளோர் போனா.. அங்கே வெங்கடேஷ் உங்களுக்கு ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் பார்த்துப்பாங்க..
இது உங்களுக்கான லன்ச் டோக்கன்..” என்று கொடுத்து செல்ல,
அப்போது தான் மதிய உணவுக்கான நேரம் நெருங்கி இருந்ததே தெரிந்தது அனைவருக்கும்.
இடையில் காத்திருந்த நேரத்தில் பழச்சாறு கொடுக்கப்பட்டிருக்க, ‘முதல் நாள்..’ என்ற பதட்டம் இதுவரை, ‘பசி..’ என்ற உணர்வை மறக்கடித்திருந்ததால்.. அதை பற்றி யோசிக்காமல் இருந்தவர்களுக்கு, இப்போது அதை யோசித்து செயல்பட்ட அந்த நிறுவனத்தின் மேலாண்மை மிகவும் பிடித்து போனது.
உணவு வேளைக்கு பின், அடுத்து நடந்தது எல்லாம் மின்னல் வேகம் என்பது போல இருக்க, ஒருவழியாய் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு போகலாம்.. என்று சொன்னதும், முதல் முறை பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் மழலைக்கு ஒப்பாக இருந்தது அந்த மூவரின் நிலையும்..
சம்யுக்தாவின் பொழுது இவ்வாறு கழிந்திருக்க, ரியானோ முகுந்திடம் படாதபாடு படவேண்டியானது அவனை சாப்பிட வைக்க..
“இட்ஸ் சோ ஸ்பைஸி..ப்பா..” என எதை கொடுத்தாலும் மறுத்தவனை சமாளிக்க திண்டாடி தான் போனான்.
சந்தீப் மேலே வந்து பார்த்த போது.. தந்தையும், மகனும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை திரும்பி அமர்ந்திருந்த கோலத்தில், பக்கென.. சிரித்தே விட்டான்.
“என்னாடா ஆச்சு..? இப்படி ஒரு போஷூல உட்கார்ந்து இருக்கீங்க.. அப்பாவும் மகனும்..” என சிரிப்போடு கேட்டவனை கண்டு கொலைவெறி ஆனது ரியானுக்கு.
“இடியட்.. எல்லாம் உன்னால தான்டா.. குழந்தைக்கு இவ்வளவு ஸ்பைஸியாவா ஃபுட் பிரிப்பேர் பண்ணுவாங்க..?
நா ஏற்கனவே ஃஸ்பைஸியா வேண்டாமுன்னு சொன்னேன் தானே உன்கிட்ட..
வீட்டுல சொன்னையா..? இல்லையா..?
அவன் ஒரு வாய் கூட சாப்பிடல.. இங்கே கெட்டில் மட்டும் தான் இருக்கு..
இண்டக்ஷன் ஸ்டவ் இருந்திருந்தா,
எதாவது நானே செஞ்சு கொடுத்திருப்பேன்..
அதையும் இன்னும் ஃபிக்ஸ் பண்ணாம இருக்கே..” என்றான்.. இயலாமை கொடுத்த கோபமும், மகன் சாப்பிட முடியாமல் இருக்கிறானே.. என்ற தவிப்பும் கலந்த குரலில்.
“ரியான் வீட்டுல சொல்லி லைட்டா தான்டா காரம் சேர்த்தாங்க.. அதுவே அவனுக்கு சாப்பிட முடியலன்னா.. அங்கே நீ என்ன தான் கொடுத்தே..?” என்றான், ‘இப்படி ஆகிவிட்டதே..’ என்ற பதட்டமும், ‘இந்த காரம் கூட சாப்பிட முடியவில்லையா.. இவனால்..?’ என்ற யோசனையுமாய்.
“ப்ச்.. இப்போ கொஞ்ச நாள் வரை அவன் லிக்விட் ஃபுட் தான் எடுத்துக்க வேண்டி இருந்தது.
அதனால அவனுக்கு நா ஃஸ்பைஸி புட் எல்லாம் இன்னும் கொடுத்ததே இல்லடா..” என்றான் இயலாமையோடு.
“இத முதல்லையே சொல்லியிருக்கலாமேடா..?
ஓகே, நா கால் பண்ணி வீட்டுல கஞ்சி ரெடி பண்ணி கொடுத்து விட சொல்றேன்..” என சொல்லி தனது போனை சந்தீப் எடுக்க,
அதை அவசரமாக தடுத்து, “இல்ல வேணாம்.. அவங்களுக்கு ஏன் வீண் சிரமம்..” என்றான்.
“இதுல என்னடா சிரமம்..? குழந்தைக்காக அதும் ஒரு நாள் தானே..” என சமாதானம் சொல்லி கால் பண்ண முயல,
“பரவாயில்லை டா. எங்களுக்காக நீ நிறைய பண்ணியிருக்கே.. விடு..
இப்போ லன்ச் டைமுக்கு நம்ம கேபிட்டேரியல தயிர் சாதம் கிடைக்கும் தானே.. அதை அவனுக்கு கொடுத்துக்கறேன்..” என்று தீர்மானமாக சொல்லி விட,
ஒருவழியாக அதை வரவழைத்து முகுந்துக்கு மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் உண்ண வைத்தவன்,
மீண்டும் போராடி அவனுக்கான மருந்தை கொடுத்து முடித்தான்.
அவன் இதையெல்லாம் செய்யும் இடைவெளியில், ரியானுக்கான உணவை வரவைத்திருந்த சந்தீப், பிடிவாதமாய் அவனை உண்ண அமர்த்தினான்.
முகுந்தை தன் கையணைப்பிலேயே வைத்துக்கொண்டே ரியான் உண்டு கொண்டிருக்க, பாதி உணவு உள்ளே சென்ற நேரம், தூக்கத்திற்கு கண்ணை தேய்த்த முகுந்தை கண்டவன், அவசரமாக அவனை தூக்கி கொண்டே சென்று.. கை கழுவி வந்தவன், அவனை தன் தோளில் போட்டு தட்டி கொடுத்து கொண்டே நடக்க துவங்கினான்.
அவனின் இந்த நிலை சந்தீப்புக்கு வேதனையாக இருக்க, “காலம் கடந்து உனக்கு பிள்ளை வரம் கிடச்சும் இப்படி ஆகியிருக்க வேண்டாம்..” என்றான் வேதனை நிறைந்த குரலில்.
“எங்க பல வருஷ தவத்தோட பலன்டா இந்த குழந்தை.. இவனை காலம் முழுக்க இப்படி தோளுல போட்டே தான் வளர்க்கனும் ங்கற நிலை வந்தா கூட.. அதையும் சந்தோஷமா செய்வேன்..
என்னோட பிருந்தா எனக்காக விட்டுட்டு போன ஜீவனை பார்த்துக்கற தவிர எனக்கு வேற எதுவும் வேணாம்டா..?” என்றான், தன் தோளில் தூங்கியிருந்த குழந்தையின் முடியை லேசாக கோதி விட்டபடி.
“உங்க தவத்துக்கு பலனா குழந்தைய கொடுத்த கடவுள்.. அதுக்கு பிரதி உபகாரமா.. உன் குடும்பத்தையே எடுத்துக்கிட்டது தான் கொடுமை..” என்ற சந்தீபுக்கு..
“விடுடா, யாருமே இல்லாம நா அனாதையா நிற்க கூடாதுன்னு தான், இந்த குழந்தைய மட்டும் காப்பாத்தி என்கிட்ட கொடுத்துட்டு போயிருக்காங்க எல்லாரும்..
இவன் என் குடும்பம் எனக்காக கொடுத்த பொக்கிஷம் டா.. இவனுக்காக.. இவனோட சந்தோஷத்துக்காக.. நான் எதையும் செய்வேன்..” என்றவனின் தீர்மானம்..
யார் யாரின் வாழ்க்கையை எப்படி மாற்றப்போகிறதோ..?!
error: Content is protected !!