Skip to content
Post Views: 7,679
புடவையை அள்ளிக் சொருகிக்கொண்டு, அந்த மாட்டுக்கொட்டகையை கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தாள் மதி. வான்மதி.
வெண்ணிலாவின் பெரிய அக்கா.
மாட்டை அவிழ்த்து வெளியில் கட்டிவிட்டு பட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் அவள். நேற்றே மதியமே வந்துவிட்டாள்.
மாமா செல்வம்தான் கொண்டு வந்துவிட்டு விட்டுப்போனான்.
Advertisement
வந்தபோதே இருவர் முகமும் சரியில்லை.
செல்வம் ஒன்றும் பேசாது, மாமனார் மாமியாரிடம் மரியாதை நிமித்தம் ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசி விட்டு, சாப்பிட்டு விட்டு ஒன்றுமே சொல்லாமல் கிளம்பி போய் விட்டான்.
இது வாடிக்கை தான்! ஆனால் பயமில்லை.
Advertisement
அவர்கள் இருவராலும் ஒருவரை விட்டு ஒருவர் இருக்க முடியாது.
Advertisement
கண்டிப்பாக பிரச்சினை என்று அவர்கள் வீட்டில் வந்திருந்தால், அது கண்டிப்பாக அவன் அம்மா சுசீலாவால் இருக்கவேண்டும்!
இப்போது என்ன ஏழரையைக் கூட்டி இருக்கோ அந்த கிழவி!
மனதிற்குள் மதியின் மாமியாரைத் திட்டிக்கொண்டே வெண்ணிலா அவள் அம்மா வசந்தாவைப் பார்க்க, அவரோ, இவளிடம் கண்ணாலேயே “என்னன்னு கேளு” என்று கேட்டார்.
Advertisement
“ம்ம்.. இரு கேக்குறேன்” என்பதை சைகை செய்துவிட்டு
“அக்கா, கொடுக்கா, நான் கூட்டுறேன், நீ போய் குளி, அப்புறம் மாமா வந்து லேட்டாச்சுன்னு திட்டப் போறாரு!”
“அதெல்லாம் ஒண்ணும் திட்டமாட்டார், நான் வர வேணாம்னு சொல்லியிருக்கேன்.
நான் கொஞ்ச நாளைக்கு அம்மா கூட இருந்துட்டுப் போலாம்னு வந்திருக்கேன்!”
வெண்ணிலா அதிர்ந்தாள். அக்கா ஒருபோதும் இப்படியெல்லாம் பேச மாட்டாள்!
குணவதிக்கு டெபனிசன் கேட்டால் டக்கென்று வான்மதி என்றே சொல்லி விடலாம்!
அத்தனை தண்மையான பெண் அவள்!
அவள் குணத்தைப் பற்றி கேள்விப்பட்டும், அவளை ஒரு கல்யாண வீட்டில் வைத்து, அவள் அழகையும், எல்லோரிடமும் பழகும் குணத்தையும் கண்டு தானே அவள் கணவன் செல்வம் சொக்கிப் போனதே!
கட்டினால் அவளைத் தான் கட்டுவேன் என்று பிடிவாதம் பிடித்துக் கட்டியவனிடம் கல்யாணம் ஆகி இந்த பத்து வருடங்களில் அதே காதல், அன்புதான்! கொஞ்சம் கூட குறையவே இல்லை!
அப்புறம் பிரச்சினை?
அவனின் அம்மா சுசீலாவால் தான் எப்போதும்!
சுசீலாவுக்கு எப்போதும் ஒரு குணம் – அது கல்யாணவீடாய் இருந்தால் மாப்பிள்ளையாகவும், துக்க வீடாய் இருந்தால் பிணமாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வார்களே அந்த கேரக்டர் அந்த அம்மாவுக்கு!
தான் தான் எந்த இடத்திலும் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும் என்பது அவரது மிகப்பெரிய ஆசை, சில சமயங்களில் வெறியும் கூட!
இதற்கு பெரும்பாலும் பலியானதும், பலியாகிக் கொண்டு இருப்பதும் பெண்ணைக் கட்டிக்கொடுத்தப் பாவத்திற்கு வசந்தாவின் குடும்பம் தான்!
சுசீலா செல்வத்தைப் பெற்றத் தாய் இல்லை! வளர்ப்புத்தாய் தான்! அதாவது சித்தி!
செல்வத்திற்கு ஒரு வயது, அவன் அண்ணனுக்கு மூணு வயது அவர்கள் அம்மா இறக்கும் போது!
அவர் அம்மா செண்பகத்தின் தங்கை தான் சுசீலா!
அக்கா குழந்தைகளை வளர்க்கவென்று சொல்லியே பெண் கேட்டார்கள்.
அவரும் சரி என்று சொல்லி அவன் அப்பாவை மணந்தவருக்கு குழந்தைகள் ஏதும் பிறக்கவில்லை!
தனக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்து கொண்டதால் தான் அவள் அக்கா கணவனுக்கு ரெண்டாம் தாரமாய் வாழ்க்கைப்பட்டு தியாகி பெயர் வாங்கிக்கொண்டாள் என்றும் உறவுகளுக்குள் முணுமுணுப்பதும் உண்டு தான்!
அப்படிப்பட்ட சுசீலாவிற்கு அவர் மகன், தன்னைக் கூட கேட்காமல், தன் விருப்பம் பற்றிக் கூட தெரிந்து கொள்ளாமல், கட்டினால் அந்த மதியை தான் கட்டுவேன் என்று அவன் அப்பாவிடம் அடம் பண்ணியது கொஞ்சம் அதிர்ச்சியைத் தந்தது!
கூடவே மதியின் அந்த அமைதியான குணம் அவருக்கும் பிடித்து தான் இருந்தது!
ரொம்ப நன்றாக சமையல் செய்வாள்.
வீட்டில் இருந்து கொண்டே தையல் மெசினில் கவர்மென்ட் ஸ்கூல் யூனிபோர்ம் தைக்கும் வேலையை அதற்கென்று இருக்கும் சொசைட்டியில் தன்னைப் பதிவுசெய்துக் கொண்டு வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்கவும் செய்கிறாள்.
பார்க்கவும் லட்சணமாக இருக்கிறாள்!
வேறு என்ன வேண்டும்!
என்ன, பெண் வீடு கொஞ்சம் வசதிக் குறைவு, செய்முறை எல்லாம் நன்றாக செய்வார்களா என்று தெரியவில்லை!
ஆனால் ரொம்பவும் கவுரவம் பார்ப்பார் அந்த பொண்ணோட அப்பா அருண் என்று அவரும் கேள்விப்பட்டு இருக்கிறார்! ரொம்ப ரோசக்காரர் வேறயாம்!
இந்த மதியை இவனுக்கு மட்டுமா பிடித்து இருந்தது, அந்த கல்யாணத்திற்கு வந்திருந்த, அனேக மாப்பிள்ளை வீட்டாருக்கும் தான் பிடித்து இருந்தது!
ஆனால் அவர்கள் எல்லோருக்கும் ரொம்ப தயக்கம்!
பெண் கேட்க! பெண் வீடு வசதிக் குறைவு, அதோடு இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள், கல்யாணம் ஆனவுடன், எங்கே அந்த பெண்களின் கல்யாணப் பொறுப்பைத் தங்கள் மகன் தலையில் கட்டி விடுவார்களோ என்று!
அதனால் எவரும் துணிந்து பெண் கேட்கவில்லை!
கேட்டவர் சுசீலாவின் கணவர் தான்! அப்போது அவர் உயிருடன் இருந்தார்.
மகனின் ஆசையை மட்டும் மதித்து கேட்டார்.
இங்கே அன்புவின் வற்புறுத்தல், அங்கே செல்வத்தின் பிடிவாதம் எல்லாம் சேர்ந்து செல்வம் வான்மதி திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப் பட்டது!
நிச்சயம் ஆகி தட்டு மாற்றும் வரை ரொம்பவும் பெருந்தன்மையானவராகவேத் தன்னைக் காட்டிக் கொண்டார் சுசீலா.
ஏற்கனவே அக்கா மகன்களை வளர்ப்பதற்கென்றே தான் ஒரு பிள்ளையைக் கூட பெற்றுக் கொள்ளாத தியாகி இமேஜ் வேறு அவருக்கு இருந்தது!
அதை நம்பிவிட்டனர் வசந்தாவும் அருணும்.
ஆனால், தட்டு மாற்றி கல்யாணம் உறுதியான பின், அவர் தன் வேலையைக் காட்டினார்!
நிச்சயம் ஆகும்வரை, “செய்றதை செய்யுங்க, உங்க பொண்ணுக்கு நீங்க செய்ய போறீங்க, நான் என்ன கேக்கப் போறேன்” என்று மகா பெரிய யோக்கியசுந்தரியாக பேசிக்கொண்டிருந்து விட்டு, முடிந்தபின்,
“அது வேணும், இது வேணும், இது தான் எங்கள் பக்கத்து வழக்கம், வீட்டு பழக்கம்” என்று பலவற்றை கறக்கத் தொடங்கி விட்டார்.
“உங்க பொண்ணு புகுந்த வீட்டுல கவுரவமா இருக்க வேண்டாமா, ஒர்ப்படிங்க கூட மனம் ஒத்து, சரி சமமா இருக்க வேண்டாமா” என்று பலதும் சொல்லி!
மகன் தடுப்பான் என்றும் தெரியும். அதனால் அவனையும் ஆரம்பத்திலேயே லாக் செய்து விட்டார்.
“நீ ஆசைப்பட்ட மாதிரியே நானும் அந்த பொண்ணையே உனக்கு கட்டி வைக்கிறேன், ஆனா நீ நான் பேசுற மத்த எந்த விசயத்திலும் தலையிடக்கூடாது” என்ற கண்டிசனோடு தான் அவர் ஒத்துக் கொண்டதே!
செல்வத்தின் அப்பாவே ஓகே சொன்ன பிறகு சுசீலா என்ன சொல்லுவது என்பது தான் கேள்வியாய் இருக்கும் பலருக்கும்.
ஆனால் இங்கு தான் செல்வத்தின் ஒரு தனிப்பட்ட குணம் அல்லது நம்பிக்கை இருக்கிறது!
செல்வம் என்றால் வெறும் செல்வம் அல்ல!
சரியான “செண்டிமெண்ட் செல்வம்!”
அதுவும் அம்மா செண்டிமெண்ட்!
அம்மா செண்டிமெண்ட் என்றால், நீங்கள் நினைப்பது போல அல்ல!
அவன் அம்மா சுசீலாவின் மனம் கோணாமல், அவர் வாயில் விழாமல், அவரைக் கோபப்படுத்தாமல், அல்லது அழவைக்காமல் ஒரு விஷயத்தை நடத்தினால் மட்டுமே அந்த காரியம் “உருப்படும்!”
இல்லையென்றால் ஊத்திக் கொள்ளும்!
இப்படி ஒரு செண்டிமெண்ட் அவனுக்கு அவன் டீன்ஏஜில் இருக்கும் போதிலிருந்து!
அதற்கேற்றார் போலவே பல சம்பவங்களும் அவன் வாழ்வில் நடந்தும் இருக்கின்றன!
அதனால் அவன் அம்மா சொல்வதற்கு எல்லாம் தலையைத் தான் ஆட்ட வேண்டியிருந்தது!
அம்மா கேட்கிறப்படி கேட்கட்டும்! நாம அவங்களுக்கு தெரியாம மதி வீட்டுல போய், அவங்க இந்த மாதிரி திடீர்னு திடீர்னு எதாச்சும் கேட்டா, பயந்துடாதீங்க, அதை எல்லாம் அவங்களுக்கு தெரியாம நானே வாங்கி தரேன் என்று சொல்லி விடலாம் என்ற எண்ணம்!
ஆனால் அருண், இதையெல்லாம் ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று தெரிந்தே , இதைக் கண்டும் காணாமல் சுசீலா இருந்து விட்டார்!
அவரின் கணிப்பு சரியே!
செல்வம் அவரைத் தனியே சந்தித்து இதைப் பற்றி சொல்லிய போது, அவர் ஒத்துக்கொள்ள வில்லை!
“நாங்க பார்த்துக்கிறோம் மாப்பிள்ளை, அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நாளைக்கு இது வெளியில் ஒரு வேளை தெரிஞ்சுடுச்சுன்னா, என் பொண்ணுக்கு தான் கவுரவக்கேடு!” என்று பெரிய நோ சொல்லி விட்டார்!
வீட்டுத் தலைவராக, ஜம்பமாக இதையெல்லாம் பேசி விட்டதோடு சரி!
மற்றபடி, ஒரு துரும்பையும் அவர் அசைக்க வில்லை மகள் திருமணத்திற்கு!
அசைக்கவில்லை என்று கூட சொல்லக் கூடாது!
அசைக்க தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்!
இவரின் கெப்பாசிட்டி அவ்வளவுதான் என்று தான் வசந்தாவிற்கு அவரின் கல்யாண ஆன நாள் முதல் தெரியுமே!
இப்போதும், அவர் தான் வெண்ணிலாவின் துணையோடும், அன்புவின் துணையோடும் பணத்திற்கு ஏற்பாடு செய்தார்!
அருண் செய்திருந்த ஒரே நல்ல காரியம், காண்ட்ராக்ட் முடியும் வரை அந்த ரெண்டு வருடம் வெளிநாட்டில் வேலை செய்தது தான்!
அப்போது அவர் அனுப்பிய பணத்தில் வாங்கிப் போட்டிருந்த மூணு ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கரை விற்க முனைந்த போது, வெண்ணிலா தான் தடுத்து அதை அடமானம் வைக்க சொல்லி விட்டாள்.
“அப்போ தான் அம்மா நமக்கு கமிட்மென்ட் இருக்கும், நிலத்தை சீக்கிரம் மீட்க வேணுமின்னு, ஓடி ஓடி வேலை செய்வோம், சிக்கனமா இருந்து சேர்த்து வச்சு கடனை அடைப்போம்னு!”
அவள் சொன்னதில் பாதியை ஏற்றுக் கொண்டார் வசந்தா!
அடமானம் வைத்தாலும் பணம் பத்தாது என்று ஒரு ஏக்கரை விற்று விற்றும், ஒரு ஏக்கரை அடமானம் வைத்தும் தான் அந்த கல்யாணத்தை நல்லபடியே நடத்தி முடித்தது.
ரொம்ப சரியாக அந்த நிலத்தைத் திருப்பும் போது வளர்மதியின் கல்யாணம்!
வளர்மதி, அம்மாவுக்கு செலவு வைக்காமல் தன் கல்யாணத்தை நடத்தி விட எண்ணினாள்.
அதைப் போல நீங்கள் போடுறதைப் போடுங்கள் என்று தான் நட்ராஜின் அம்மாவும் சொல்லியிருந்தார்!
ஆனால் “நான் பெத்த பொண்ணுங்க மூணு பேருமே எனக்கு ஒண்ணு தான், அதனால வான்மதிக்கு என்ன செஞ்சேனோ அதை வளர்மதிக்கும் கட்டாயம் செய்வேன்” என்று சபையில் வைத்து சொல்லி விட்டு வந்து விட்டார்!
ஆனால், வான்மதியை விட வளர்மதியின் கல்யாண செலவு தான் எகிறி விட்டது!
காரணம் நட்ராஜின் அரசியல் தொடர்புகள்!
சரியான கூட்டம் கல்யாணத்திற்கு!
சாப்பாட்டு பட்ஜெட் போட்டதைக் காட்டிலும் இரு மடங்கு ஆகி விட்டது!
அதை அடிக்கடி சுசீலா ஜாடைப் பேசி, அந்த கூடுதல் செலவுக்கான பணத்தைக் கூட கல்யாணம் ஆகி பல வருடம் கழித்து ஒரு பொங்கலின் போது வசூலித்து விட்டார் தன் பாணியில்!
கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகி விட்ட நிலையில், இப்போது என்ன பிரச்சினை மதி அக்காவுக்கு? வெண்ணிலாவுக்குள் கேள்வி!
வேலை எல்லாம் முடிந்து, சாப்பாட்டு வேலையும் முடிந்து, அருண் பிற்பகல் குட்டித்தூக்கம் போட சென்று விட, வசந்தா கடையில் உட்கார்ந்து கொண்டார்!
அதிகாலையில் எழுந்தாலும் அவருக்கு பகலில் தூக்கம் வராது!
“ஏய்.. கேளுடி நிலா, மதிக்கு என்ன பிரச்சினை”ன்னு வெண்ணிலாவிடம் காதைக் கடித்தார் அவர்.
“இரும்மா, அக்கா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும், அவளே ஏதோ பிரச்சினைன்னு தான் நிம்மதியா இருக்கலாம்னு இங்க வந்திருக்கா, நாமளும் வேற நைநைன்னு தொந்தரவு பண்ணக்கூடாது, இரு கேக்குறேன். அக்கா கட்டாயம் என்கிட்ட சொல்லுவா” என்றாள் வெண்ணிலா!
அது என்னமோ நிச்சயம் தான்!
யாருமே வெண்ணிலாவை நம்பி அவர்கள் பிரச்சினையை, எண்ணங்களை ரொம்பவும் வெளிப்படையாக சொல்லலாம்.
சொன்ன விஷயம் அவளைத் தாண்டி வெளியே போகாது என்பதுடன், சொன்ன விஷயத்தை சொன்னவர்களின் கோணத்தில் புரிந்து கொள்வாள்!
தவறாக நினைத்து விடுவாள் என்ற பயம் இருக்காது.
எனவே அக்கா தங்கை மூவரில் மதியும் சரி வளரும் சரி வெண்ணிலாவிடம் வெளிப்படையாகவே பேசுவார்கள்.
ஏன் அம்மா வசந்தாவுமே அப்படி தான்!
வசந்தாவுக்கு வெண்ணிலா மகள் மட்டுமல்ல, ஒரு நல்லதோழியும் கூட!
அத்தனை நெருக்கம் வசந்தாவுக்கு மற்ற இருப்பெண்களைக் காட்டிலும்!
பாசம் என்று வரும்போது மூவருமே ஈக்வல் தான் என்றாலும் கூட வெண்ணிலா வசந்தாவிற்கு கொஞ்சம் ஸ்பெசல்தான் எப்போதுமே!
அப்படிப்பட்ட வெண்ணிலாவிடம் தான் பின் நாட்களில் முகம் கொடுத்து பேச முடியாத அளவு கோபம் கொள்ளவும் போகிறார் வசந்தா!
சாப்பிட்டு முடித்தவுடன், தன் பழைய தையல் மிசினை துடைத்து எண்ணைப் போட்டுக் கொண்டிருந்தாள் மதி!
“அக்கா, இப்ப எதுக்கு இத பண்ணிட்டு இருக்க, போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடு, அங்க மாமா வீட்டுல தான் உனக்கு ரெஸ்ட் எடுக்க டைம் இருக்காது, இங்க வந்தப்ப எடுத்தா தான் உண்டு, போக்கா, நீயும் போய் கொஞ்ச நேரம் தூங்கு!” என்றாள் வெண்ணிலா.
அது உண்மை தான்!
மதியும் கொஞ்ச நேரம் கூட அயர மாட்டாள்.
வீட்டு வேலைகளை முடித்து விட்டு, அங்கு போயும் ஸ்கூல் யூனிபோர்ம் தைக்கும் வேலைகளை எடுத்து செய்தாள்.
அப்புறம் வெண்ணிலாவின் ஐடியாவின் படி ஆரி ஒர்க் கற்றுக் கொண்டு, வீட்டில் இருந்து ஆரி ஒர்க் வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
வெண்ணிலா சொல்லிக் கொடுத்து, தொடங்கி வைத்த சோசியல் மீடியாக்களில் அவளின் ஆரி ஒர்க் பற்றி போட, மதிக்கு நிறைய ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கி விட்டன இப்போது.
வருமானத்திற்கு ஒன்றும் குறையில்லை. மாமாவும் ஒரு பெரிய பேப்ரிகேசன் கம்பெனியில் வெல்டர் ஆக இருக்கிறான்.
சம்பளம் இல்லாது, வேறு சில வெளி வேலைகளையும் எடுத்து செய்து அதிலும் நல்ல வருமானமே!
என்ன தான் பிரச்சினை? இன்னும் குழந்தை இல்லை என்பதைத் தவிர!
ஒரு வேளை அதை வைத்து தானோ?
“என்ன தான்க்கா பிரச்சினை?” வெண்ணிலா கேட்டு விட்டாள்.
“போன வாரம், நானும் மாமாவும் டாக்டர் கிட்ட போய் இருந்தோம். அவங்க எங்களை செக் பண்ணிட்டு, ஐ வி எப் (IVF) செயற்கை முறைக் கருத்தரிப்பின் மூலம் குழந்தைப் பெத்துக்கலாம்னு சொல்லி அதுக்கு ரெண்டு ரெண்டரை லட்சம் வரை செலவாகும்னு சொல்லிட்டாங்க!
ரொம்ப சரியா மாமா போட்டு இருந்த ரெண்டு லட்ச ரூபா சீட்டு முடிஞ்சு பணமும் வந்திட்டது.
நான் வேற ஆரி ஒர்க் மூலம் கிடைச்ச, ஒரு எழுபதாயிரம் வச்சுருக்கேன்!
சரி, நல்ல நாள் பார்த்து ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம்னு அத்தைக் கிட்ட சொன்னப்ப, அவங்க உடனே அவங்க ஒண்ணு விட்ட அக்கா பேத்தி வயசுக்கு வந்திட்டா, அவளுக்கு நம்ம மாமா தான் தாய்மாமா சீர் செய்யணும்னு சொல்லி ரெண்டு லட்ச ரூபா வேணுமின்னு கேக்குறாங்க
நாம் ஒண்ணு விட்ட சொந்தம் தானே, சாதாரணமா செஞ்சா பத்தாதா? ஏன் நகையெல்லாம் போடணும் சொல்லுறீங்கன்னு கேட்டதும் ஒரே சண்டை வீட்டில்.
அவங்க அக்காவுக்கு ஒரே பொண்ணு தானாம், பையன் இல்லையாம், நம்ம மாமா தான் தாய்மாமா ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்யணுமாம். இந்த பொம்பள பேர் வாங்க, நாங்க பிள்ளைப் பெத்துக்க வச்சுருக்க காசைக் கேட்டால் எப்படி! அதான் ஒரே சண்டை வீட்டில்!” மதி அழுத படி சொன்னாள்.
“அதுக்கு மாமா ஒண்ணுமே சொல்லலையா?”
“மாமா சொல்லிப் பார்த்தார், அவங்க கேட்டா தானே?”
“அப்புறம்?”
“அப்புறம் என்ன, வழக்கம் போல என் அம்மா வாயில விழுந்தா எதுவும் உருப்படாது, நாம நல்லப்படியா பெத்துக்க வேண்டாமா? பிறக்கப்போகும் நம் குழந்தை அவங்க வாயில் விழுந்திட்டு பிறக்க வேண்டாம்” என்று காசை எடுத்துக் கொடுத்து விட்டார்.
“அம்மாவும் பிள்ளையும் போங்க, நான் வர மாட்டேன்னு சொல்லிட்டு தான் இங்க வந்திட்டேன்! எனக்கு அங்க போகவே பிடிக்கல வெண்ணிலா!”
“என்னக்கா, இப்படி சொல்லிட்ட? உன்னால மாமாவை விட்டுட்டு இருக்க முடியுமா, இல்ல மாமாவால தான் அது முடியுமா, கொஞ்ச நாள் இங்க இருந்து ரிலாக்ஸ் பண்ணுக்கா, நாம வேற எதாச்சும் சோர்ஸ் இருக்கான்னு பார்ப்போம்!” என்றாள் வெண்ணிலா ஆறுதலாக.
“போ வெண்ணிலா, இப்படி தான் ஒவ்வொரு தரமும் இந்த கிழவி நம்ம அம்மாவையும் உன்னையும் படுத்தி வைக்குது, இனி அதுக்கு நான் இடம் தர மாட்டேன்” என்றாள் மதி உறுதியாக!
“அக்கா, நீ ரொம்ப இமோஷனலா இருக்க, இப்ப எந்த முடிவும் எடுக்கக் கூடாது! எதைப் பத்தியும் யோசிக்காம ரெஸ்ட் எடு, நான் இருக்கேன், உனக்காக யோசிக்க!” என்றாள் வெண்ணிலா அக்காவைக் கட்டிக்கொண்டு!
“ம்ம்.” என்று அழுதபடி தலையாட்டினாள் மதி!
தனியே தன் லாப்டாப்பை எடுத்துக் கொண்டு வீட்டின் வெளியே வந்தாள் வெண்ணிலா!
அது அவள் ஸ்கூல் படிக்கும் போது கவர்மென்ட் கொடுத்தது.
அந்த கிராமத்தில் சிக்னல் வீக்காகவே இருக்கும் பெரும்பாலும்.
வீட்டில் ஒய்பை போடும் வசதியில்லை! மொபைல் ஹாட்ஸ்பாட் தான்!
சிக்னல் கிடைக்காததால், வெண்ணிலா அந்த ஊரின் மையத்தில் இருக்கும் ஒரு சிறிய மாரியம்மன் கோவில் முன் இருக்கும் சிறிய மண்டபத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள் லாப்டாப்புடன்!
அது அவள் கஷ்டப்பட்டுக் கண்டுப்பிடித்த சிக்னல் நன்றாக கிடைக்கும் லோகேசன்!
“ஹாய் வெண்ணிலா” குரல் கேட்டு நிமிர்ந்தால், அங்கே ஜீவா!
“இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க, ஸ்கூல் இல்லையா?” கேட்டான் ஜீவா.
“ஒரு பத்து நாள் ஹாப் இயர்லி ஹாலிடேஸ்! ஏதாச்சும் பேசிவ் இன்கம் வர மாதிரி வேலை எதாச்சும் இருக்கான்னு பார்த்துட்டு இருக்கேன், ஏன்னா ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ்!” சிரித்தபடி சொன்னாள் வெண்ணிலா!
அவள் ஏற்கனவே ஸ்கூலில் வைத்தே மாலை மேத்ஸ் டுயுஷன் எடுக்கிறாள். அவள் யூஜியில் மேத்ஸ் தான் மேஜர்!
அதோடு அபாகஸ், வேதிக் மேத்ஸ் என்று கற்றுக் கொண்டு அதையும் கிளாஸ் எடுக்கிறாள்.
அவள் வேலைப் பார்க்கும் பள்ளியில் அதற்கு என்று தனியாக ஒரு சம்பளம் தருகிறார்கள்.
அதோடு சனி ஞாயிறுகளில் ஆன்லைன் கிளாசும் எடுக்க தான் செய்கிறாள்.
அம்மாவும் பொண்ணும் ஓடி ஓடி உழைத்தும் கடன் மட்டும் தீர மாட்டேங்குது, இப்போது மதி வடிவில் புதிய கமிட்மென்ட் ஒன்று!
“நீங்க ஏன், ஒரு ஐடி ஜாபிற்கு ஸ்விட்ச் ஆகக் கூடாது? உங்க கடன் கமிட்மென்ட் எல்லாம் ஒரே ஷாட்டில் முடித்து விடலாம்!
நீங்க உங்களை கொஞ்சம் அப்க்ரேட் பண்ணிக்கங்க, நான் கரென்ட்ல என்ன படிச்சா உடனே பிளேஸ் ஆக முடியுமோ அதுக்கு சப்போர்ட் பண்றேன்!
ஏன் இப்படி உங்களை ஒரு கூட்டுக்குள்ள அடைச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுட்டு இருக்கீங்க?” ஜீவா கேட்க
வெண்ணிலாவுக்கும் உள்ளே ஒரு ஸ்பார்க் ஆனது!
“ஆமாம் இல்ல? நாம ஏன் அதை ட்ரை பண்ணக் கூடாது! என்ன அப்பாவை கொஞ்சம் சமாளிக்கணும், அதுக்கு முதலில் அம்மாவை சமாளிக்கணும்!”
வெண்ணிலாவுக்குள் ரொம்பவும் யோசனையைத் தூண்டி விட்டான் நம் ஜீவா!
அது அவளின் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறது என்பதை அறியாமல்!
error: Content is protected !!