Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ 9.1

ரியான் சிரிப்போடு அவர்களை பார்க்கும் போது சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டவர்கள் பின் மெல்லிய குரலில் தங்களுக்குள் பேச துவங்கினர்.

“மலர் குடிக்க என்ன கொண்டு வரச்சொல்ல..?” என கேட்டு, அதை கொண்டு வர போனில் கட்டளையிட்டவன் பார்வையில்.. சம்யுக்தா அனுப்பியிருந்த மெயில் பட, 



Advertisement

“சந்தீப்.. சம்யுக்தா அவங்க வேலைய முடுச்சு அனுப்பிட்டாங்க. 

ஜஸ்ட் ஃப்யூ மினிட்ஸ், நா போய் அடுத்து என்னன்னு சொல்லிட்டு வந்திடுறேன்..” என்றவன், குழந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழ் தளம் நோக்கி சென்றிருந்தான்.

Advertisement

Advertisement

சந்தீப்புக்கு அவனின் அவசரம் எதனால்.. என்பது புரியும் என்பதால் பெரிதாக விளக்காமல்.. அவன் சென்றிருக்க,

சந்தீப் மலரிடம்.. தங்களின் புது ப்ராஜெக்ட் பற்றியும், அதில் சம்யுக்தாவின் தேவை பற்றியும் சொல்லிவிட, அவளும் அவர்களுக்காக வந்திருந்த குளிர்பானத்தை குடித்து விட்டு முகுந்த் விழிப்பதற்காக காத்திருந்தனர்.

Advertisement

ஆனால், அவன் விழிக்கும் போது நடக்க போவது தெரிந்திருந்தால்.. அவர்களும் முன்னெச்சரிக்கையாக இருந்திருப்பார்களோ..?

*****

கீழே வருவதற்கு லிஃப்டில் வரும் போதே.. தனது போனில் சம்யுக்தா அனுப்பியதை சரி பார்த்தவன் அவளின் வேலையை மனதுக்குள் மெச்சித்தான் கொண்டான்.

அவனின் இத்தனை வருட அனுபவத்தில் சம்யுக்தா போல வெகு சிலரையே கண்டிருக்கிறான். 

சொல்ல வருவதை எளிதாக புரிந்து.. கேட்பதற்கு ஏற்ப சரியாக அதை கொடுப்பதற்கும் எவ்வளவு சாமர்த்தியம் தேவை.. என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

அவ்விதத்தில் சம்யுக்தா பேச்சிலும்.. செயலிலும்.. அவ்வப்போது விளையாட்டுத்தனம் வெளிப்பட்டாலும், ‘வேலை திறன் கொண்டவள்..’ என்ற திருப்தியோடு அவனறைக்குள் வந்திருந்தான்.

*****

“அவங்களுக்கு அனுப்பி இவ்வளவு நேரமாயும் ஒரு ரிப்ளையும் வரலையே..? 

இன்னும் அவர் பார்க்கலையா..?” என்ற சிந்தனையோடே லேப்டாப்பை பார்த்திருந்த சம்யுக்தா பட்டென திறந்த கதவில் ஒலியில் பதறி எழுந்தாள்.

அவளின் வேலையால் மட்டுப்பட்டிருந்த ரியானின் கோபம், இப்போது அவளின் செயலில் மீண்டும் உண்டாக, “ஆமா.. நீ என்ன நெனச்சிட்டு இருக்கே..?

நா என்ன ரோட் சைட் ரோமியோவா..? இல்ல.. வுமனைய்சரா..? 

என்னை பார்த்தாலே எதுக்கு இப்படி பதறி போறே…?” என்றான் ஆங்கிலத்தில் அழுத்தமாக.

அவனின் பேச்சில் அவனிடம் கேட்க வேண்டும்‌.. என நினைத்திருந்த ‘சாரி..’ கூட மறந்து போக, திருதிருவென விழிக்க துவங்கினாள். 

அவளின் அந்த பார்வையும் கடுப்பையே கிளப்ப, “என்ன, எனக்கு கீழ வேலை பார்க்கற ஐடியா இருக்கா…? 

இல்ல, இப்படியே ஓடி போறையா..?” என்றான் பல்லைக்கடித்து.

“வே.. வேல பாக்கறேன் சார்..” என்றாள் திக்கி திணறி.

“லுக்.. எனக்கு கீழ வேல பார்க்கனுமுன்னா.. முதல்ல உன்னோட ஆட்டிட்யூடை மாத்திக்கோ. 

இப்படி சில்லியா பக்கம் வந்தாலே பதட்டமாகறது, ஏதோ உன்னை டச் பண்ணவே நான் அலையற மாதிரி, என்னை ஃபீல் பண்ண வைக்கறது போல இருக்கு. 

இனி அது கண்டின்யூ ஆச்சு…” என்றவன், ஆள்காட்டி விரல் நீட்டி மிரட்டலாக சொல்லிவிட்டு அவனின் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அவனின் செய்கையில் பயம் உண்டாக, ‘நேத்து அந்த திட்டு நா திட்டியும்.. சிரிச்சிட்டு எனக்கு ஹெல்ப் பண்ண அந்த வெள்ளக்கொக்கா இது…? இல்லவே இல்ல..’ என மனதில், 

அவனின் மாற்றத்தை எண்ணி பார்த்துக் கொண்டிருந்தவளை  ரியானின் பேச்சு நடப்பிற்கு கொண்டு வந்தது. 

அவன் அவள் செய்ய வேண்டிய வேலை குறித்த சிறு குறிப்பை மட்டும் சொன்னவன்.. அதை வைத்து மீதத்தை அவளாகவே டெவலப் செய்ய பணிக்க அவளுக்கு உள்ளுக்குள் நடுக்கம் பிறந்தது.

ரியானுக்கு, ‘அவளால் முடியும்..’ என்று தோன்றியதால் தான் அதை கொடுத்தான். 

அது அவளின் திறன்‌ மீதான நம்பிக்கையால் வந்தது. ஆனால், அதை நேரடியாக சம்யுக்தாவிடம் முந்தையதை பற்றி பாராட்டிவிட்டு சொல்லியிருந்தால் பரவாயில்லை.

அவன் இப்போது சொன்ன விதம்.. அவனின் கோபத்தால் அவளை பழிவாங்க அவன் செய்வது போல அவளுக்குத் தோன்ற, ‘அடுத்து என்ன..?’ என்பதே ஓடவில்லை அவளுக்கு.

அவளுக்கான வேலையை சொல்லி முடித்தவனுக்கு முக்கியமான தொலைபேசி அழைப்பு வர, அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு பால்க்கனி நோக்கி சென்றான்.

அவன் போன் பேசி வர ஆன சில நிமிட நேரமும்.. அவள் அப்படியே லேப்டாப்பை வெறித்துக்கொண்டு அமர்ந்திருக்க, 

உள்ளே வந்ததும் அவளின் கோலம் கண்டு, “எனி ப்ராப்ளம் சம்யுக்தா..?” என்றான் அக்கறையாக.

‘எதாவது தவறாக வந்திருக்கும்.. அதை அவளுக்கு தெளிவு படுத்தினால்.. அவள் அதை சரி செய்துவிடுவாள்..’ என்ற எண்ணத்தில் கேட்டவனை அதிர வைத்தது அவளின் செய்கை.

அவன் கேட்ட நொடி அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் கலங்கி.. கண்ணீர் கன்னத்தில் வழிந்தோடியது.

அவளின் திடீர்‌ அழுகையில் பதறி போவது.. இப்போது ரியானின் நிலையானது. 

அவன் வேலை பார்த்தது எல்லாமே வெளி நாட்டு கம்பெனிகளில் தான். 

அங்கே இப்படி யாரும் இவனிடம் ரியாக்ட் பண்ணியதில்லை.. என்பதால் குழப்பமும், ‘ஏன்‌ அழுகிறாள்..?’ என்ற யோசனையும் அவனை படுத்தியது.

“ஹேய்.. வாட் ஹேப்பண்ட்..?” என்றான் அவளருகே வந்து நின்று லேப்டாப்பை பார்த்தபடி.

அதில் ஒரு‌ எழுத்து கூட இன்னும் டைப் ஆகாமல் இருக்க, 

அவளை ‘ஏன்..?’ என்ற பாவனையோடு பார்த்தவனை கண்டு இன்னும் கண்ணீரை வழிய விட்டவள்,

“நா.. நீங்க.. பக்கம் வந்தத பாக்கல.. திடீர்.. ன்னு கை வந்ததும்.. பயத்துல அப்படி.. பண்ணிட்டேன். 

அதே மாரி நீங்க மெயில்ல.. பதில் அனுப்புவீங்கன்னு.. நினைச்சு.. அதையே.. பாத்துட்டு இருந்தேன்.. அப்போ.. சத்தம் வந்துச்சா.. மறுபடி பயந்துட்டேன்..” என விசும்பலோடு திக்கி திணறி அவள் ஆங்கிலத்தில் சொல்ல,

“சரி‌.. அதுக்கு இப்போ எதுக்கு அழுகறே..‌?” என்றான்‌ புரியாமல்.

“இல்ல.. நீங்க.. கோபமா.. இருந்ததால தானே.. இப்படி ஒரு‌ ப்ரோகிராம்.. கொடுத்து என்னையே.. தனியா.. பண்ண வைக்கறீங்க..!” என்று தோம்ப,

ஓங்கி ஒன்று தலையில் கொட்டு வைத்தால் என்ன‌..? என்ற‌ எண்ணம் தான் எழுந்தது ரியானுக்கு.

“இடியட்.. உன்னை பத்தி ஒரு நிமிஷம் நல்ல விதமா நினைச்சா.. அடுத்த நிமிஷம் அதை அப்படியே சுக்குநூறா உடைக்கறே. 

நா சொன்ன ப்ரோகிராம் உன்னால தனியா பண்ண முடியாதா..?” என்றான் கோபமாய் முகத்தை வைத்துக்கொண்டு.

அதில் பீதியானவள், ‘தெரியலையே..!’ என்ற பாவனை காட்ட,

‘அய்யோ..’ என எங்காவது போய் முட்டும் நிலை தான் ரியானுக்கு.

அவசரமாக அங்கிருந்த தண்ணீரை எடுத்து குடித்து.. தன்னை சமன்‌ செய்தவன் அவளுக்கும் கொடுத்து குடிக்க சொன்னான்.

தண்ணீர் உள்ளே போனதும் கண்ணீர் சுத்தமாக நின்று போயிருக்க, 

“அந்த வாஸ் ரூம் போய் பேஷ் வாஸ் பண்ணிட்டு வா..” என்று சொல்லி அனுப்பினான்.

அவன் கட்டளையை கேட்டு.. அமைதியாய் அவள் செயல்பட.. அதற்குள் தன்னை நிதானப்படுத்தி கொண்டவன் அவளை அமர்த்தி அவளுக்கு அருகிலேயே இருந்த மற்றொரு சேரில் அமர்ந்தவன்,

“போன தடவை நீ முடுச்சு கொடுத்தது ரொம்ப நல்லா இருந்துச்சு. 

நான் சொன்னதை.. நீ உன்னோட ஐடியாவும் கலந்து செஞ்ச விதம்.. ரொம்ப இம்ப்ரஸ்ஸிவா இருந்ததால உன்னால ஒரு ஹிண்ட் கொடுத்தாலே.. நீட்டா டெவலப் பண்ண முடியுமுன்னு எனக்கு தோணுச்சு. 

தட்ஸ் த ரீஷன்.. நா அடுத்த ப்ரோகிராமுக்கு வெறும் ஹிண்ட் மட்டும் கொடுத்தது..” என்றான் பொறுமையாக.

அவனின் விளக்கத்தில் தெளிவான சம்யுக்தா, ‘இப்பவும் உன் அவசர புத்தியால அவரை தப்பா நினைச்சிட்டையே..?’ என்று அவளின் மண்டையிலேயே மானசீகமாக கொட்டி கொண்டவள்,

“ரியல்லி சாரி சார்.. நா.. நீங்க..” என ‘என்ன சொல்வது..’ என தடுமாறிக்கொண்டிருந்தவள்,

ரியான் தனது போனை பார்த்து அதிர்ந்து, “முகுந்த்..” என்று அலறி அங்கிருந்து ஓடத்துவங்க,

அவன்‌ சொன்ன பேரிலும், ஓட்டத்திலும்.. ‘குழந்தைக்கு தான் எதோ பிரச்சினை..’ என்பது சம்யுக்தாவுக்கு விளங்க, 

அவளும், அவனின் பின்னோடு ஓடத்துவங்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!