Skip to content
Post Views: 7,497
பகுதி 12
“நா அந்த பொண்ணை தள்ளிவிட்டு.. எந்த தைரியத்துல நீ என்னை நெருங்க நினைச்சேன்..? ன்னு கேட்டதுக்கு அவ,
Advertisement
“உன்னோட பையனை பார்த்துக்கறது மட்டும் என்னோட வேலைன்னு நீ நினைச்சிருந்தா, உனக்கு என்னை எதுவும் செய்ய விடாம தடுத்திருக்கனும்.
உனக்கும் ஆசை இருக்க தானே.. நான் செய்யறத அக்சப்ட் பண்ணிக்கிட்டே..?
Advertisement
Advertisement
உனக்கு எப்ப.. என்ன செஞ்சு வைக்கன்னு டெய்லி லிஸ்ட் போட்டது எந்த உரிமையில..?” ன்னு கேட்டா..!
அதைக்கேட்டதும் எனக்கு செம ஷாக்..!
Advertisement
ஒரு வேலைக்காரியா.. நம்ம செய்ய சொன்னதுக்கு பின்னாடி இப்படி ஒரு அர்த்தம் இருக்குமா..? ன்னு ஒரு நிமிஷம் ஸ்டன் ஆகிட்டேன்.
சின்ன வயசுல இருந்தே ஹாஸ்டல்ல இருந்ததால.. அடுத்தவங்கள நம்பி.. அவங்கள எதிர்பார்த்தோ.. இல்ல நானே செஞ்சோ பழகினதால.. அதிகாரம் பண்ணி எதையும் வாங்கி பழக்கமில்ல எனக்கு.. எதையும் ஹம்புளா கேட்டே பழகிட்டேன் போல.
அது அவங்களுக்கு அப்படியான எண்ணத்தை கொடுத்திருக்குன்னு புருஞ்சது.
அவங்களோட அந்த எண்ணங்கள் தான் தப்பு.. அதை சரி பண்ணிட்டா போதுமுன்னு மட்டும் தான் அப்போவும் நான் நினைச்சேன்.
அதனால அந்த பொண்ணுகிட்ட, “பேபிசிட்டரா நீ இந்த வீட்டுக்குள்ள வந்தாலும்.. உன்னை ஒரு மெய்டா.. ஒரு குக்கா தான் நான் பார்த்தேன்.
எனக்கு கீழே வேலை பார்க்கறவங்க கிட்ட சொல்ற மாதிரி.. என்னோட தேவையை சொன்னேன். மத்தபடி உன் கற்பனைக்கு தீனி போட முடியாது.
வீணா.. எந்த எண்ணத்தையும் வளத்துக்காம.. போய் வேற இடத்தில் வேலை தேடிக்கோங்க.
இப்படியான நினைப்போட என்னை நெருங்கிட்டு.. இனி இங்கே நீங்க இருக்கறது சரி வராது.
இனி எனக்கு என் மகனை பார்த்துக்க முடியும். உன் தேவை இனி இங்கே இல்லை.
எங்க ரெண்டு பேரோட உலகத்துல.. மூணாவதா ஒருத்தர் உள்ள வர்றத நான் அனுமதிக்க முடியாது. சோ, ப்ளீஸ் லீவ்..” ன்னு சொன்னேன்.
அப்போ அவ இளக்காரமா ஒரு பார்வை என்னை பார்த்து கொடுத்துட்டு,
“ஓ.. உனக்கு உன் மகன் மட்டும் போதுமா..? அது உனக்கு நிலைக்காது..” ன்னு சொல்ல,
“உன்னால.. என்னைத்தாண்டி அவனை எதுவும் செய்ய முடியாது.. ஜஸ்ட் கெட் அவுட்டு..” ன்னு நான் சொன்னதும்,
“வாட் ஏ பிக் ஜோக்.. டெய்லி அவனை என்னோட விட்டுட்டு போகும் போது அதை யோசிச்சிருக்கனும்.. மிஸ்டர்.
அவனை வச்சு உன்னை அடையலாமுன்னு முயற்சி பண்ணினேன்.. அது நடக்கல.
என் பொண்ணை வச்சு.. உன் பையனையும் மடக்கிட்டு உன்கிட்ட சிம்ப்பத்தி க்ரியேட் பண்ணி.. உன்கிட்ட வர பார்த்தேன் அதுவும் நடக்கல.
எப்பவும் உனக்கு உன் பையன் தான் உன் கண்ணுக்கு தெரியறான்..!
அதான் நான் இந்த வீட்டுக்குள்ள நுழைய எண்ட்ரி கார்டா இருந்த அவனுக்கு.. எக்ஸிட் கார்ட் போட தேவையானதையும் செய்ய ஆரம்பிச்சேன்.
நீ தான் உண்மை விழும்பியா.. இதுக்கு முன்னாடி இருந்த கிளவி அவனை படுத்தினதை சொல்லியிருந்தையே..!
அதை வச்சு.. நீ இல்லாத நேரத்துல நான் நினைச்சா.. அவனை என்னவெல்லாம் பண்ணலாமுன்னு சும்மா வாய் வழியா சொல்லும் போதே அப்படி பயம் அவனுக்கு..” என வாய்விட்டு சிரித்தவளை கண்டவனுக்கு.. அவள் முழு சைக்கோவா தெரிந்தாள் இப்போது.
முகத்தின் பாவனைக்கும்.. அவள் பேசும் பேச்சுக்கும் துளியும் சம்மந்தமில்லை.
“சின்னதா சேம்பிளுக்கு ஒரு நாள் அவனுக்கு கொஞ்சமா ஸ்டமக் பெயின் வர்ற மாத்திரையை பால்ல கலந்து கொடுத்தேன்.
அது ஜஸ்ட் ஒன் அவர் தான் இருக்கும்.
நீ வந்தாலும் அப்படி ஒரு இன்சிடென்ட் நடந்ததா தெரியாதுன்னு.. அவன்கிட்ட பாலை குடிக்க வச்சிட்டு சொன்னேன்.
அதே மாதிரி அவன் வலியில துடுச்சான்.
அவனை அந்த நேரத்துல பாத்ரூம் கூட்டிட்டு போய் விட்டுட்டு.. ஹாயா ரசிச்சிட்டு இருந்தேன்..
வலியின் வீரியத்துல அவன் ஓஞ்சு போனதும் தூக்கிட்டு வந்து பெட்ல போட்டு.. பக்கத்துல இருந்துட்டேன்.
நீ சப்போஸ் சந்தேகம் வந்து சிசிடிவில செக் பண்ணாலும்.. நார்மலா பால் குடுச்சிட்டு வாஸ்ரூம் யூஸ் பண்ணிட்டு பெட்ல படுத்த மாதிரி தான் இருக்கும்.. ன்னு ப்ளான் பண்ணி பண்ணேன்னு சொல்ல.. என் உயிரே ஆட்டம் கண்ட மாதிரி இருந்தது.
அது மட்டுமில்லாம, “அவனுக்கு சரியாகி எழுந்ததும்.. இதை உன் அப்பாகிட்ட சொன்னா.. அவர் நம்ப மாட்டார்.
அதோட நாளைக்கும் அவர் வேலைக்கு உன்னை என்கிட்ட தான் விட்டுட்டு போகனும்.
அப்புறம் நாளைக்கும் உனக்கு ஸ்ட்மக்பெயின் வரும் ன்னு மிரட்டி வச்சிட்டேன்.
குழந்தையாச்சே.. அதான் அவனும் எனக்கு சாதகமா உன்கிட்ட எதையும் சொல்லல.
அவன் என்கிட்ட விலக ட்ரை பண்ணாலும்.. அது நடக்குமுன்னு சொல்லியிருக்க அவன் அமைதியா எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தான்..” என்று கைகளை லேசாக தட்டி சிரிப்போடு சொன்னவளை கண்டு பயம் தோன்றியது ரியானுக்கு.
“நா பண்ண பெரிய தப்பு.. அவ ஃபேஸ் ரியாக்ஷனை நோட் பண்ண.. அவ இருந்த சைட் கேமிராவை செக் பண்ணவன் முகுந்தோட அந்த நேரத்து முகபாவனையை காட்டற கேமிரா ஏங்கிளை செக் பண்ணாம விட்டது.
எப்படிப்பட்ட சைக்கோவா இருந்தா.. இப்படி ஒரு பிஞ்சு குழந்தை வலியில துடிக்கறதை ரசிச்சிருக்க முடியுமுன்னு அப்ப தான் முழுசா எனக்கு புருஞ்சது.
அதுக்கு அப்புறமும் அவளோட பேசி பிரயோஜனம் இல்லன்னு முடிவுக்கு வந்த நேரம்..
“இதுக்கே இப்படி அசந்தா எப்படி..? இன்னைக்கு எப்படியாவது உன்கூட இருக்கனுமுன்னு உனக்கு கொடுத்த பால்ல ******* மருந்தை கலந்து கொடுத்தேன்..
ஆமா அதை குடுச்சும் இவ்வளவு ஸ்டெடியா இருக்கன்னா.. உனக்கு ஏற்கனவே ட்ரக்ஸ் பழக்கம் இருக்கா என்ன..?!”
அப்படின்னு கேட்டதும் பதறிப் போய்.. அப்ப தான் நா முகுந்த் இருந்த பக்கம் பார்த்தேன்.
அவன் ஷோஃபால சரிஞ்சு இருக்கறத பாத்து.. பதட்டமா அவன்கிட்ட ஓட,
“ஹேய் கூல்.. அவனுக்கு வெறும் தூக்க மாத்திரை தான் கலந்தேன். அதான் அவன் அப்படி தூங்கி கிடக்கிறான்.
இப்படி.. அடிக்கடி நான் கொடுக்கறது தான்.. அதோட டோஸ்.. கொஞ்சம் கொஞ்சமா அவனை அழிச்சிட்டு இருக்கும்.
சீக்கிரமே.. அவன் சேப்டர் க்ளோஸ் ஆகிடும். அது நடந்தா இங்கே வர வேணாமுன்னு நீ சொல்லலாம்.
அதான் அது நடக்கறதுக்கு முன்னாடி நீ என்னை மறுக்க முடியாத படி நெருங்க நினைச்சேன்.
உங்க நாட்டுல தான்.. பொண்ணை தொட்டா.. அந்த பொண்ணை கட்டிப்பீங்களாமே..?!
அதான் இன்னைக்கு இந்த ப்ளான்னு அசால்ட்டா சொன்னா.
அவளுக்கு தெரியாதே.. நான் என்னோட பாலை தான் முகுந்த்க்கு கொடுத்தேன்னு.
அதுவரை ஒரு பொண்ணா பார்த்த அவளை.. அதுக்கு மேல அப்படி நினைக்க முடியாம ஓங்கி ஒரு அறை கொடுத்துட்டு முகுந்தை தூக்கி பார்த்தா தலை நிக்கவே இல்லை.
error: Content is protected !!