Skip to content
Post Views: 722
“இப்ப என்ன நடந்துச்சின்னு இப்படி முகத்தை தொங்க போட்டுவிட்டு இருக்க டா” என்றான் தீபக்
“எப்படிடா அவனால மட்டும் எப்பவும் என்ன பத்தி ஃதிங்க் பண்ண முடியுது. அவன் என்ன நிலைமையில இருக்குறான் பாரு டா அப்பவும் என்ன பத்தி என் ப்ராப்ளம் பத்தி மட்டுமே எப்படி நினைக்க முடியுது. எப்படிடா இவனை நான் புரிஞ்சுக்காம போனேன்” என்றான் மிகவும் வருத்தமாக இன்பா.
“சரி விடுடா இது தான் நடக்கணும்னு இருந்திருக்கு நடந்துட்டு இனி நம்ம ஒன்னும் பண்ண முடியாது இதுக்கப்புறம் அவனுக்கு நடக்கிற எல்லா பிரச்சினையும் நீ அவன் கூட சேர்ந்து நின்னு சால்வ் பண்ற வழிய பாரு”
“கரெக்டா இனிமேல் அவனுக்கு ஏதாவது ஒரு சின்ன பிரச்சனை வந்தா கூட முதல்ல அவனுக்கு தோள் கொடுக்கிறது நானா தான் இருப்பேன் பாரு”
Advertisement
“சரிடா வா எல்லோரும் வீட்டுக்கு போறதுக்கு கிளம்புறாங்க. அவங்க கூட சேர்ந்து நாமளும் கிளம்புவோம்” என்று சொல்லி அவனை உள்ளே அழைத்து சென்றான்.
“பாட்டி நீங்களும் எங்க கூட வரலாம் தானே” என்று வள்ளியம்மை பாட்டியிடம் கேட்டான் கவின்.
Advertisement
“ கண்ணா எப்போவும் நான் தாத்தா கூட தான் வருவேன். நான் இல்லாமல் தாத்தாவும் வரமாட்டார். என்னாலயும் தாத்தாவ விட்டு பிரிஞ்சி இருக்க முடியாது. அதனால நாங்க ரெண்டு பேரும் இந்த கார்ல வாரோம் நீ மத்தவங்க கூட்டிட்டு அந்த கார்ல வாடா” என்று சொன்னார் வள்ளியம்மை.
Advertisement
“ பாட்டி இந்த விஷயம் ரொமான்ஸ் பின்னிரீங்க போங்க. இந்த வயசுல என்ன ஒரு கெமிஸ்ட்ரி உங்களுக்குள்ள. வாழ்ந்தா உங்களை மாதிரி வாழனும் பாட்டி” என்றான் மனதார தனக்கு முன்னே இருந்த காரில் அமர்ந்து கொண்டிருந்த தனது மனைவியை பார்த்து பெருமூச்சுயுடன்
“கண்ணா நாங்களும் உங்களை மாதிரி இருபதுல இருக்கும் போது போடாத சண்டை கிடையாது. சண்டை போட போட தான் ஒரு புரிதல் வரும். அதுக்கப்புறம் தான் நம்ம வாழ்க்கையே தொடங்குது ஆனா இது புரிஞ்சிக்காம சிலர் ஆரம்பத்திலேயே சண்டை போட்டு பிரிஞ்சிடுறாங்க. அவங்களால கண்டிப்பா ஒரு மன நிறைவான வாழ்க்கையை வாழவே முடியாது. என்னதான் நம்ம துணைக்கிட்ட எவ்வளவு குறை இருந்தாலும் அதை நம்ம நிறையால பேலன்ஸ் பண்ணனுமே தவிர அவங்க குறையை சொல்லி காட்டி அவங்க கிட்ட இருந்து தப்பிக்க நினைக்க கூடாது. இப்ப நான் சொல்றது உண்மையான காதலோட ஒருத்தனுக்கு ஒருத்தின்னு வாழ்றவங்கங்களுக்கு மட்டும் தான் பொருந்தும். உனக்கு நான் மட்டும்தான் ஆனா எனக்கு பல பேர்னு வாழ்றவங்களுக்கு கண்டிப்பா இது பொருந்தாது அவங்ககிட்ட இருந்து எவ்ளோ சீக்கிரம் நம்ம பிரியுறோமோ அவ்வளவு சீக்கிரம் பிரிஞ்சிரனும். அப்புறம் தான் நம்ம நிம்மதியா வாழ முடியும். இப்போ உன்னோட வாழ்க்கையில நிறைய காதல் இருக்கு ஆனா உங்க ரெண்டு பேருக்கும் புரிதல் தான் இல்ல. அதுவர கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. கண்ணா இப்பவே எந்த பெரிய முடிவு எடுக்காத” என்றார் பெரியவராய் தனது கருத்தினை சொன்னார் வள்ளியம்மை.
“ சரி பாட்டி எனக்குன்னு சில டவுட்டு இருக்கு அதெல்லாம் கிளியர் பண்ணிட்டு கண்டிப்பா அவளுக்கான நேரத்தை நான் கொடுப்பேன். ஆனா உங்க கிட்ட இப்போ ஒன்னு மட்டும் தான் என்னால சொல்ல முடியும் இந்த ஜென்மத்துக்கு அவன் ஒருத்தி தான் எனக்கு. ஆனா அவளால உண்டான காயம் ஆற ரொம்ப நாள் இல்ல ரொம்ப வருஷம் கூட ஆகலாம். அதுவரை அவ எனக்கா வெயிட் பண்ணி தான் ஆகணும். எப்பவுமே எனக்கு அவ்வளவு விடுற எண்ணமே கிடையாது பாட்டி” என்றவனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு, “உன்னுடைய இந்த நல்ல மனசுக்கு எல்லாமே நல்லது தான் நடக்கும் கண்ணா” என்று அவன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார் வள்ளியம்மை.
Advertisement
“ தேங்க்ஸ் பாட்டி” என்று சிரித்தவனை காரின் உள்ளே அமர்ந்து வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டே இருந்தாள் ஆனந்த அமிழ்தினி.
ஏதோ ஒரு உந்தாலில் அவன் நிமிர்ந்து பார்க்க உடனே எத்தனை பேர் கண்களே மறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.
அவளின் இந்த செயலைக் கண்டு கொண்டவனோ தனது வாய்க்குள் சிரிப்பினை அடக்கிக் கொண்டு அவள் அருகே உள்ள சீட்டில் வந்து அமர்ந்தான்.
தனது பக்கத்தில் அவன் அமர்ந்ததும் மூச்சு விட கூட மறந்து இறுக்கமாக தனது சீட்டினை பிடித்துக் கொண்டாள். அதனை தனது கீழ்கண்களால் கவனித்துக் கொண்டு இருந்தவனும் ஒன்று சொல்லாமல் டிரைவர் சீட்டில் அமர்ந்து இருந்தவனை பார்த்து, “ டேய் எங்க அவங்க ரெண்டு பேரும் இன்னும் வராம என்ன பண்றாங்க. டைம் ஆகுதா போன் பண்ணி அவன் கிட்ட கேளு” என்றான் சதீஷை பார்த்து
“மச்சான் அவங்க ரெண்டு பேரும் வேற ஒரு கார்ல வரேன்னு சொல்லிட்டாங்க. இப்ப நம்ம கிளம்பலாமா” என்றவனுக்கு பதில் சொல்லாமல் டிரைவர் சீட்டுக்கு அருகில் இருந்த தனது அம்மாவை பார்த்து, “மாம் உங்களுக்கு ஓகே யா. இல்ல அவங்க கூட வரிங்களா”
“ இல்லடா நான் உங்க கூட வரேன் ஒருவேளை இடையில இவளுக்கு ஏதாவது வாந்தி வந்தனா ஹெல்ப் பண்றதுக்கு ஆள் வேணும் இல்ல அதுக்கு நான் இருக்கேன் டா” என்றார் ஈஸ்வரி
“ஓகே மா கால் நீட்டி நல்லா உட்காருங்க” என்றவன் அமிழ்தினி புறம் திரும்பி, “நீ நல்லா ஃப்ரியா உக்காந்துக்கோ. இடையில ஏதாவது வாந்தி வர மாதிரி பீல் வந்துச்சுன்னா எனக்கு சொல்லு” என்றான் கனிவாக
தன்னிடம் இத்தனை மென்மையாக பேசியவனை கண் இமைக்க கூட மறந்து அவன் முகத்தினை பார்த்துக்கொண்டு இருந்தபடி முன்பு கையினை அசைத்து, “ஹலோ மேடம் என்ன முழிச்சுக்கிட்டே கனவா. நான் சொன்னது கேட்டுச்சா” என்றவனுக்கு பதில் சொல்லாமல் முழித்தவளை பார்த்து மறுபடியும் அதனை சொன்னான். இப்போது அவனுக்கு சரி என்பது போல் தலையை அசைத்து விட்டு சீட்டில் சாய்ந்து கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.
அதனைப் பார்த்து பெருமூச்சு ஒன்றிணை விட்டுவிட்டு, “ டேய் நீ கிளம்புடா கொஞ்சம் மெதுவா ஓட்டிட்டு போ” என்றான் சதீஷை பார்த்து கவின்.
“ஓகே டா என்று சொல்லி காரை ஸ்டாட் பண்ணினான் சதிஷ்.
இங்கே, “ஏன் மச்சான் நம்ம மட்டும் தனியா போறோம். நாமளும் அவங்க கூட போலாம் தானே”என்ற தீபக் தனது அருகில் அமர்ந்து கார் டிரைவ் செய்து கொண்டிருத்த இன்பாவை பார்த்து கேட்டான்.
“இல்ல டா அந்த கார்ல எல்லாரும் போக முடியாது அமிழ்தினி இப்ப தான் டிஸ்டார்ஜ் ஆகியிருக்கா. அதோட அவங்க மேரேஜ்க்கு அப்புறம் இப்ப தான் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காங்க. இப்ப நான் அங்க இருந்தா அமிழ்தினி எதாவது தேவனா எங்கிட்ட தான் கேப்பா அதே நான் இல்லனா அவங்கிட்ட தான் கேக்கணும் அதான் டா. அதோட என்னால கவின் முகத்தை பாக்க முடியலடா. அவன் லைப் இருக்குற ப்ரோப்லேம் எல்லாம் சீக்கிரம் சரி பண்ணனும் டா. அப்ப தான் என்னால நார்மல் அவன் கிட்ட பேச முடியும் அவனும் அப்ப தான் எங்கிட்ட பேசுவான்”என்றான் தெளிவாக.
“கரெக்ட் டா எதாவது பண்ணுவோம் இப்போதைக்கு நடக்கிறத வேடிக்கை மட்டும் பார்ப்போம். எப்போ நம்ம ஹெல்ப் அவங்களுக்கு தேவைப்படுதோ அப்ப நம்ம பண்ணுவோம் ஓகேவா. இப்ப பீல் பண்ணாதடா இப்போ மைண்ட் ஃபுல்லா இனியா தான் இருக்கணும் அவ்வளவு நெனச்சிட்டு அப்படியே கண்ண மூடி தூங்கு. நான் கார் டிரைவ் பண்றேன் டா. நீ இந்த பக்கம் வா” என்றான் தீபக்
அவன் சொன்னதே போல காரினை தீபக்கிடம் கொடுத்துவிட்டு பின் பக்கமிருந்த இருக்கையில் படுத்து கண்களை மூடி மூடிக் கொண்டான் இன்பா.
அந்த அரண்மனை போன்ற வீட்டின் முன்பு இன்பா, கவின், ஈஸ்வரி, அமிழ்தினி, சதீஷ்,தீபக் மற்றும் பிரபாவதி ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர்.
“டேய் என்னடா இது வீடா இல்ல அரண்மனையா எவ்வளவு பெருசா இருக்கு” என்று வாயை பிளந்தான் சதீஷ்.
“ ஆனாலும் உங்க அம்மாவுக்கு ரொம்ப குசும்புதான் டா இவ்வளவு பெரிய வீட்டில் இருக்கிறவங்கள பாத்து கஞ்சிக்கே வழி இல்லன்னு சொன்னாங்க பத்தியா அங்க நிக்குறாங்க உங்க அம்மா” என்றான் கிண்டலாக இன்பாக்கு மட்டும் கேட்கும் படியான சத்தத்தில்.
“டேய் கொஞ்சம் வாய் வச்சுட்டு சும்மா இருடா இப்பதான் எல்லாரும் மறந்துட்டு இருக்காங்க உனக்கு அது பொறுக்கலையா. தயவுசெய்து இங்கிருந்து போற வரைக்கும் உன் வாய தொரத்து குட்டைய குழப்பி விட்டுடாத ப்ளீஸ். எனக்காக இந்த நண்பனுக்காக இது ஒன்னு மட்டும் பண்ணுடா” எனக்கெஞ்சினான் இன்பா.
“சரி பொழச்சி போ. நண்பனா வேற போயிட ம்…… இருந்தாலும் உங்க அம்மா பேசுனது கொஞ்சம் ஓவர் தான். இப்ப தான தெரியுது இனியா ஏன் உன் மேல அவ்வளவு கோபப்பட்டானு என்னாலேயே மறக்க முடியல இங்க இருக்குற எல்லாரும் மறந்து இருப்பாங்க நெனைக்க”
“இல்ல தான் ஆனா மறக்க முயற்சி செய்வாங்க. ஒருத்திய தவற மிச்சமெல்லாரும் நடிக்காவது செய்வாங்க ஆனா அவ என்ன செய்ய காத்து இருக்களோ”என்றான் கொஞ்சம் பயமாக இன்பா.
error: Content is protected !!