Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ .. 12.1

நிலைமையின் தீவிரம் புரிஞ்சு ஆம்புலன்ஸ்க்கும், போலீஸூக்கும் கால் பண்ணிட்டேன்.

ஆம்புலன்ஸ் வர்றதுக்குள்ள அவனோட உடம்பு சூடு நல்லா குறைஞ்சு சில்லுன்னு ஆகவும் எனக்கு உயிரே இல்ல. 



Advertisement

ஒருவழியா.. போலீஸ் நிமிஷத்துல வந்து அந்த பொண்ணை அரஸ்ட் பண்ணிட்டாங்க.

நான் சொன்னத வச்சு நாங்க யூஸ் பண்ண டம்ளாரையும்.. கிச்சன்ல அவ யூஸ் பண்ண மருந்தோட மிச்ச சேம்பிளையும்.. அவளோட பிங்கர் பிரிட்டோட எடுத்துட்டு போயிட்டாங்க.

Advertisement

Advertisement

ஆம்புலன்ஸும் வந்து சேர்ந்து.. ஹாஸ்பிடல் போனா.. ஏற்கனவே அவ கொடுத்திருந்த மருந்தோட வீரியம், இப்ப குடுக்கப்பட்ட போதை மருந்தோட வீரியம் எல்லாம் சேர்ந்து.. 36 மணி நேரம் தண்டும் வரை எந்த முடிவும் சொல்ல முடியாது. 

எங்களால முடுஞ்சதை செய்றோம். ஆனா முடிவு சாதகமா இருக்குமான்னு உறுதி தரமுடியாதுன்னு சொல்லி.. என். ஐ. சீ. யூ. ல குழந்தைய வச்சிட்டாங்க.

Advertisement

அந்த மூணு நாளும்.. பச்சை தண்ணி கூட குடிக்காம.. அவன் என்கிட்ட நல்லவிதமா வந்திடனுமேன்னு தவமிருந்தேன்.

எனக்கே எனக்குன்னு இருந்த ஒரே சொந்தம் அவன் மட்டும் தானேடா.. சந்தீப்.

அவனுக்காக மட்டும் தான்.. என்னோட மிச்ச வாழ்க்கையும் ன்னு, அவனை போராடி மீட்டு வச்சிருந்து.. இப்படி மறுபடியும் ஒரு ஜீவமரண போரட்டத்துக்கு கொண்டு போயிட்டேனே.. ன்னு என்னை நானே வெறுத்து போனேன். 

அந்த நேரத்துல அவனை பார்க்கவா.. இல்ல என்னோட மனபாரத்தை வேதனையை இறக்க யாருமே இல்லை.. ன்னு என்னை நினைச்சே அனுதாபப்படறதான்னு.. தெரியாம ஜடமா மாறி போனேன்.

இருந்த விரக்தில அழுகை கூட வரல. 

மூணு நாளுன்னு சொன்னது.. நாலு நாள் ஆக நானும் மயக்கத்துக்கு போயிட்டேன். 

என்னையும் அங்கேயே அட்மிட் பண்ணிட்டு.. எங்க ஆஃபீஸ்க்கு தகவல் சொல்ல, என்னோட டீம்ல இருந்தவங்க தான் வந்து அன்னைக்கு எனக்கு உதவுனாங்க.

அதுல அந்த பொண்ணை வேலைக்கு சேர்த்து விட்டவருக்கு உண்மை தெரிஞ்சதும்.. என் கைய புடுச்சு மன்னிப்பு கேட்வர்.. 

“நிஜமா.. அந்த பொண்ணு அப்படின்னு தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் சொல்லியிருக்க மாட்டேன்..” ன்னு வருத்தப்பட்டார்.

எங்களோட விதிக்கு.. அவரை நொந்து என்ன பலன்..னு, “இட்ஸ் ஓகே. உங்க நாலேஜ்க்கு வராத ஒண்ணைப் பத்தி.. உங்களுக்கு எப்படி தெரியும்..? நான் தான் சுதாரிப்பா இருந்திருக்கனும்..” அப்படின்னு சொல்லிட்டேன்.

அப்பவே முடிவு பண்ணிட்டேன்.. என் பையன் கண் விழிச்சதும் என்னோட வேலைய விடறதுன்னு.

அடுத்தவங்ககிட்ட வேலை பார்த்தா தானே இத்தனை சிக்கல். 

நானே சொந்தமா தொழில் தொடங்கினா.. என்னை கம்பள் பண்ணி வொர்க் பண்ண வைக்க ஹயர் ஆஃபிஸர்ஸ் யாரும் இருக்க மாட்டாங்க ன்னு முடிவெடுத்து நேரம்.. சரியா முகுந்த் அபாய கட்டத்தை தாண்டிட்டான்னு சொன்னாங்க.

அப்போ என்னோட முடிவு தான் சரின்னு தொழில் தொடங்க தேவையானதை பத்தி யோசனை பண்ணினதோட, 

என்னோட ஹெல்த் கண்டீஷன் சரியில்லை.. ரெஸ்ட் கண்டிப்பா வேணுமுன்னு டாக்டர் மூலமா ரிப்போர்ட் வாங்கி.. என் கம்பெனிக்கு கொடுத்துட்டு.. வேலைய விடுறேன்னு பேப்பரும் போட்டுட்டேன்.

இல்லைன்னா.. அவங்க பேப்பர் ப்ரீயட்டுன்னு மறுபடியும் அங்கே வர வைப்பாங்கன்னு எனக்கு நல்லா தெரியும். சோ, நான் மயங்கி விழுந்ததை எனக்கு சாதகமா மாத்திட்டேன்.

இந்தியாவுல தொழில் தொடங்கினா.. நா அந்த நாட்டு க்ரீன் கார்ட் வச்சிருக்கறதால.. என்ஆர்ஐக்கான பல சலுகையோட இங்கே செய்ய முடியும். 

தன்னந்தனியா எல்லாம் பார்த்து வெறுத்து போன எனக்கு.. உங்க பிரஷன்ஸ் தேவை பட்டுச்சு.. சந்தீப்.

இதோ இப்ப சில நிமிஷத்துக்கு முன்னாடி நான் இருக்கேன்னு நின்னையே.. உன் தோளை கொடுத்து. 

அது.. அந்த ஆதரவுக்காக.. தான் இந்த ஊருக்கு வந்தோம்..” என்றவனிடம் வெளிவந்த பெருமூச்சு, 

அவனிடம் இத்தனை நாட்களாய் அழுத்திக்கொண்டிருந்த அழுத்தத்தை மொத்தமாக வெளியே கொட்டி விட்டதால் வந்த ஆசுவாச மூச்சாகவே இருந்தது.

ஆரம்பத்தில் ரியான் சொன்ன, “தனியாக இருக்கும் பெண்ணுக்கு மட்டுமல்ல.. ஆணுக்கும் பிரச்சனை தான்..” என்ற பதத்திற்கு இப்போது அர்த்தம் புரிந்தது மற்றவர்களுக்கு.

மொத்தமாக கொட்டி கவிழ்த்த ரியானிடம்.. அதன் பின் அமைதி மட்டுமே. 

ஆனால் கேட்டுக்கொண்டிருந்த மற்ற மூவருக்கும் கண்கள் கலங்கி, மனதின் வலியால் தொண்டை அடைத்தது.

முகுந்த் பட்ட துன்பத்திற்கு வருந்தவா..? இல்லை இத்தனையையும் தனி ஒரு மனிதனாய் சமாளிக்க எத்தனைபாடு பட்டிருப்பான்.. என ரியானுக்காக வருந்தவா..? என புரியவில்லை அவர்களுக்கு.

சிறு அமைதிக்கு பின் ரியானே, “முகுந்த் கண்விழிச்சதும் புதுசா யாரைக்கண்டாலும் பயப்பட ஆரம்பிச்சான். 

டாக்டர் அவன்கிட்ட மெல்ல பேச்சு கொடுத்து கேட்டப்ப அந்த லேடியோட பேச்சு.. அவனோட ஆழ்மனசுல பதிஞ்சு போனதோட விளைவு அது ன்னு தெரிய வந்துச்சு.

புதுசா யாராவது‌.. குறிப்பா லேடீஸ் அவனை நெருங்கினா அவனுக்குள்ள இயல்பா ஒரு ஒதுக்கம் வருது. 

இது போக போக மாறிடும்.. அப்படி ன்னு சொல்லி கவுன்சிலிங் முடுச்சு தான் இங்கே வந்தோம்.

நீ வீட்டுக்கு கூப்பிட்டப்போ.. மலர்கிட்ட அவன் கொஞ்சம் அக்வேர்டா பிகேவ் பண்ணா.. ஏற்கனவே பெரியப்பாக்கு எங்களை கண்டா ஆகாது. 

இதுல என் குழந்தைய அவர் வேற மாதிரி சொல்லிட்டா..?! என்னால தாங்க முடியாதுன்னு தான் அங்கே வரல..” என முடிக்க,

ரியானின் சூழ்நிலை இப்போது முழுதாய் புரிந்து போனது மற்றவர்களுக்கு.

ஆனால் சம்யுக்தாவிற்கு மட்டும், “பொண்ணுங்கன்னா ஒதுங்கி போகும் முகுந்த்.. என்கிட்ட மட்டும் இவ்வளவு நெருங்க காரணம் என்னவா இருக்கும்..?” என்ற எண்ணம் உறுத்த துவங்கியது.

அதே எண்ணம் சந்தீப், மலர் மனதிலும் எழுந்தாலும்.. இப்போது அதை பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை. 

முதலில் இந்த இறுக்கமான சூழல் மாற வேண்டும்.. என நினைத்து,

“என்னங்க.. மணி என்ன ஆகுது..? லன்ச் இங்கே கொண்டுவரச் சொல்லுங்க..” என சந்தீப்பிடம் சொன்ன மலர், 

சம்யுக்தாவிடம், “எம்மாடி.. உன்னோட பேர் என்னடா..?” என்றாள்.

மலரின் கேள்வியை தன்னிடம் எதிர்பார்க்காதவள் சற்று திணறி, “சம்..சம்யுக்தா..‌” என்றிருந்தாள்.

“ஓ.. நல்ல பேர். நீயும் இங்கேயே எங்க கூட சாப்பிடு. 

ஏங்க அந்த பொண்ணுக்கும் இங்கே கொண்டு வரச்சொல்லுங்க..” என்றுவிட,

தர்மசங்கடமாக உணர்ந்த சம்யுக்தா, “இல்லங்க.. நான் வீட்டுல இருந்து கொண்டு வந்திருக்கேன்..” என்று சொன்னதும்,

“பரவாயில்லம்மா. இப்போ முகுந்த் உன்னை விடுவான்னு தோனல. 

அதுக்காக உன்னை பார்க்க வச்சிட்டு நாங்க சாப்பிட முடியுமா..?” என்றாள் எதார்த்தம் உணர்ந்தவளாய்.

ஆனாலும் அதை ஏற்க மனமின்றி, “இல்ல.. அது…” என சம்யுக்தா பேச்சில் இடைப்புகுந்த ரியான், 

“மிஸ் சம்யுக்தா.. ப்ளீஸ்.. சாப்பிடுங்க..” என்றான் ஒரே முடிவாய். 

அதை மறுக்க முடியாது, “ம்ம்.. ஓகே சார்..” என்றவள், 

“முகுந்தும் இன்னும் எதுவும் சாப்பிடலையே..! அவனுக்கு..?” எனக் கேட்க,

“அவனுக்கு கொண்டு வந்தது அந்த பேக்ல இருக்கு.. நானே..” என மகனை வாங்க கை நீட்டியவன்,

மகனின், ‘ஐ ஹேட்..’ என்ற வார்த்தை தடுக்க நீட்டிய கையை மடக்காமல் குழந்தையையே வலியோடு பார்த்தான்.

அதுவரை.. சம்யுக்தாவின் தோளில் கண்மூடி இருந்த முகுந்த் லேசாக திரும்ப.. தன் தந்தை தன்னருகே கை நீட்டிக்கொண்டிருப்பது கண்டதும்,

“ப்பா…” என்றபடி அவனிடம் தாவினான்.

பிள்ளை மனது அதானே..! காயம் கொடுப்பவரிடம் தானே ஆறுதலை தேடும். 

முகுந்த் தன்னிடம் வந்த நொடி, “கண்ணா..” என சொன்னவனின் வார்த்தை கூட கரகரத்தே வந்தது.

பூவாய் தாங்கிக்கொண்டவன் தன் மார்போடு சாய்த்து நெற்றியில் முத்தமிட.. அழுத சுவடே இல்லாமல்.. அழகான புன்னகை அந்த பிஞ்சின் முகத்தில்.

அந்த புன்னகை கூட ரியானை கலங்க வைக்க.. அவனை தோளோடு அணைத்து கொண்டவன் சத்தமின்றி கண்ணீரை சிந்தினான்.

அதை பார்த்த சந்தீப், “ரியான்..” என அவன் மறு தோளை அழுத்த தன்னை சமாளித்து கொண்டவன்,

“முகுந்த்.. சாப்பிடலாமா..?” என்றான் அன்பாக.

அவன் சம்மதமாக தலையசைக்க.. அவனுக்கான உணவை ரியான் எடுக்கும் முன் வேகமாய் அவன் முன்பு எடுத்த பேகில் இருந்த ஹாட் பேக்கை எடுத்திருந்தாள் சம்யுக்தா.

சிறு புன்னகையுடன், “தேங்க்ஸ்..” என இதழசைத்து அதை பெற்றுக்கொண்டவன், 

“சந்தீப்.. இதை ஓப்பன் பண்ணி வை. நாங்க பிரஷப் ஆகி வந்திடுறோம்..” என்றுவிட்டு அறைக்குள் இருந்த வாஸ்ரூம் சென்றனர்.

எத்தனை வலி.. எத்தனை போராட்டம்.. வாழ்க்கையில் நம்பிக்கை துரோகம் எப்படியான பாதிப்பை உண்டாக்கும்.. என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டு.. என வெளியே நின்றிருந்த மூவரும் எண்ணியிருக்க, 

தன் வாழ்க்கையில் சந்தித்த நம்பிக்கை துரோகத்தை சொல்லி முடித்த ரியானுக்கும் தெரியாது.. 

இதை விட.. மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை இன்னும் அவன் கடக்க வேண்டி வருமென.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!