Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ninaivellaam Neeyae

Ninaivellaam Neeyae 17

நினைவெல்லாம் நீயே 17 

 

விலாசினி அழைத்து கொண்டு போய் வீடு முழுக்க சுற்றி காண்பிக்க அங்கங்கு இருந்த கேமராக்களை பார்த்து சிவகுமரன்என்ன மேடம் வீடு பூரா சிசிடிவி கேமரா வெச்சீருக்கீங்களே..உங்க பொண்ணு காணாம போனாங்கனு பாத்த பிறகு இதை செக் பண்ணீங்களா..” 

 



Advertisement

இல்ல சார்இருந்த பதட்டத்துல பாக்கனும்னே தோணல..இத வெச்சது..நாம இல்லாம இருக்கறப்ப வீட்டை கண்காணிக்க வசதியா இருக்கும்னு தான்..” 

 

இதோட ரெகார்ட்டிங் எங்க இருக்கு மேடம்..?” 

Advertisement

 

Advertisement

என் ஃபோன்லயே பாத்துக்கலாம் சார்..இந்தாங்க..” 

 

விலாசினியின் ஃபோனை வாங்கி திருப்பி திருப்பி பார்த்தவர் பார்த்த விலாசினிஎன்ன சார் பாக்கறீங்க..ஐஃபோன் சார்.. 

Advertisement

பொண்ணு வாங்கி குடுத்தது..” 

 

அது சரி..நீங்க இந்த மாறி ஃபோன் எல்லாம் பாத்திருக்க மாட்டீங்கல்ல..ஜாக்கிரதை..ரொம்ப விலைங்க சார்..பத்திரமாகைல வெச்சு நல்லா பாருங்க..சார்..” 

 

மேடம் நான் இங்க வந்தது உங்க பொண்ணு காணாம போனதை பத்தி விசாரிக்க தான்..ஃபோன் பத்தி இல்ல..” என விலாசினியின் நக்கலை அவர் பக்கமே திருப்பி விட்டு அமைதியாக ஹாலில் போய் உட்கார்ந்து கொண்டு லாக் எடுத்த ஃபோனில் இருந்த ரெக்கார்டிங்க்கை பார்க்க ஆரம்பித்தார் 

 

அதில் அவருக்கு தேவைப்பட்ட எந்த தகவலும் இல்லாமல் போக..ஃபோனை திரும்பி குடுத்து விட்டு தன்ராஜிடம்கொஞ்சம் யோசிக்க வேண்டிய கேஸ் சார்..வீட்டுலேந்து அவங்க போன மாறி தெரியல..கதவை தாள் போட்டது அப்படியே இருந்திருக்கு..” 

 

அவங்க எப்டி காணாம போயிருக்க முடியும்னு தெரியல சார்எங்க டீம்ல கலந்து பேசினா நிச்சயம் ஏதாவது ஐடியா கிடைக்கும் சார்..” 

 

எனக்கு கொஞ்சம் டைம் தேவைப்படும் சார்..எப்படியும் ஒரு வாரத்துக்குள்ள ரிசல்ட் சொல்ல ட்ரை பண்றேன் சார்..” 

 

என்னங்க சார்..இது..வீட்டுலேந்து ஒரு பொண்ணு காணாம போனா..அவளை கண்டுபிடிக்க ஒரு வாரமா ஆகும்..அவளை காணோம்னு அம்மா நான் பதறிட்டு இருக்கேன்..என் வேதனையை புரிஞ்சிக்காம..” 

 

ஐயோ..என் குழந்தைக்கு உலகமே தெரியாதே..யார் கிட்டயும் அதிர்ந்து கூட பேச மாட்டாளே..பூ மாதிரி இருப்பாளே…” 

 

அவளுக்கு எதிரியே இல்லயே..எல்லார் கிட்டயும் தன்மையா பழகுவாளேஅவளை யார் கடத்திட்டு போனாங்களோ.. 

எங்க இருக்காளோ..” 

 

அண்ணா உங்களை பத்தி உயர்வா சொன்னாங்க..அதனால தான் உங்க கிட்ட பேசவே நான் ஒத்துக்கிட்டேன்..நீங்க உடனே ஒரு வழி சொல்லுங்க சார்..” 

 

என் பொண்ணு பல படத்துல நடிக்க கமிட் ஆகி இருக்கா.. 

அவளை காணோம்னு நியூஸ் வெளில போனா..இதனால எவ்ளோ பிரச்சினை வரும் தெரியுமா?” 

 

நீங்க ஒரு வேளை வேலை பண்ணிட்டு இருந்தா சீக்கிரமா கண்டுபிடிச்சிருப்பீங்க போல..” என சொல்லி கதற ஆரம்பித்தார். 

 

மேடம்..எங்களோட உழைப்பை எப்பவும் தப்பா பேசற வேலை வேணாம்..நாங்கசர்வீஸ்ல இருந்தாலும், இல்லேனாலும் எங்க கிட்ட யார் உதவினு கேட்டாலும் எங்களால ஆன உதவி செய்வோம்..இதுல பாரபட்சமே இல்ல..” 

 

உங்களுக்கு சந்தேகமா இருந்தா நான் இப்பவே இதுலேந்து வெளியே போயிடறேன்..” 

 

சார் ப்ளீஸ் எனக்காக அமைதியா இருங்க..” என்ற தன்ராஜூன் மனைவிஏம்மா..விலாசினி கொஞ்சநேரம் சும்மா இருக்க கூடாதா..உன் பொண்ணை பத்தின கவலை உனக்கு மட்டும் தான் இருக்கு..யாரும் அதை மறுக்கல..” 

 

சார் ரொம்ப பெரிய ஆள்..அவரை அவமானம் பண்றது நீ எங்களை அசிங்கப்படுத்தறதுக்கு சமம். உதவிக்கு வந்தவரை அவமானம் பண்றது சரியில்லை..” 

 

அவர் நாங்க கூப்பிடவே தான் வந்திருக்கார்..ஸோ..நீ அமைதியா இருந்தா தான் என்ன பண்றதுனு யோசிக்க முடியும்..அழுகையை நிறுத்தினா தான் நல்லது..”   

 

அதில் கொஞ்சம் அமைதியடைந்த விலாசினி தன்ராஜோடு அமர்ந்து சிவகுமரன் சில விஷயங்களை மெல்லிய குரலில் விளக்க நடப்பதை பார்க்க ஆரம்பித்தார் 

 

சரி..சார்..நான் கிளம்பறேன்.. 

மேடம் கிளம்பறேன்..என்ன ப்ரோக்ரஸ்ங்கறதை அவங்க கிட்ட பேசிட்டு சொல்லுங்க..” 

 

அதை பொறுத்து தான் டீம் வேலை செய்ய ஆரம்பிக்க முடியும்..ஒன்ஸ் நாங்க வேலை சேய்ய ஆரம்பிச்சா ரெகுலர் பேசிஸ்ல உங்களுக்கு அப்டேட் வரும் சார்..” என சொல்லி விலாசினியை திரும்பி கூட பார்க்காமல் கிளம்பி போனார் 

 

அதில் கொந்தளித்த விலாசினி ஏதோ கோபமாக சொல்ல வருவதற்குள்எதுவும் பேசாத விலாசினி..வீடு தேடி வந்தவங்களுக்கு நல்ல மரியாதை குடுத்த..நாங்களும் கெளம்பறோம்..” என அவரும் வீட்டில் இருந்து கிளம்பி எழுந்தார் 

 

அண்ணா..மன்னிச்சிடுங்க..நான்ஏதோ பெத்தவ ஆதங்கத்துல பேசிட்டேன்..தப்பா நெனக்காதீங்க..எனக்கு நீங்க மட்டும் தான் அண்ணா ஆதரவே..அண்ணி நுங்க கொஞ்சம் சொல்லுங்க..” 

 

அவர்க்கு லேசுல கோவம் வராது..வந்தா சீக்கிரம் குறையாது விலாசினி..உனக்கு தெரியாதா..” என சொல்ல எதுவும் பேசாமல் தன்ராஜின் முகம் இறுகிய நிலையில் இருந்தது. 

 

ரூபா காணாம போன விஷயம் தெரிஞ்சதுலேந்து கிரியும், சபரியும் உடனே கிளம்பி இங்க வர எமர்ஜென்சி கோட்டாவுல டிக்கெட் புக் ட்ரை பண்ணிட்டு இருந்தாங்க..” 

 

நான் எங்க ட்ராவல் ஏஜெண்ட் கிட்ட சொல்லி புக் பண்ணியாச்சு.. 

நாள மறுநாள் அவங்க குடும்பத்தோட வந்துடுவாங்க..” 

 

 “எதுவா இருந்தாலும் நீ யார் கிட்டயும் எதுவும் சொல்லாத..பேசாத..அவங்க 

வந்ததும் அவங்க கிட்ட பேசி என்ன பண்ணலாம்னு ஒரு முடிவுக்கு வரலாம்..” 

 

வேலை செய்யும் ஆட்களிடம் அவர் பிள்ளைகள் வரும் வரை அங்கேயே விலாசினி கூடவே இருக்க வேண்டுகோள் விடுத்தார் 

 

கூடவே எந்த தகவலும் வெளியே போக கூடாதுனு என எச்சரிக்கையும் செய்தார் 

 

தன்ராஜின் கார் அந்த பில்டிங்ல் நின்று கொண்டு இருந்ததை அந்த பக்கமாக ஏதோ வேலையாக வந்தபிரபலமாக தன்னை காட்டி கொள்ள முயற்சி செய்யும்நீங்களும் நானும்என்ற யூட்யூப் சேனல் ஓனர் மதிக்கு (கற்பனை) ஏதோ பொறி தட்டவே இவர் எதுக்காக ரூபா இருக்க பில்டிங்க்கு வரணும் என யோசித்தவர் அந்த பில்டிங் வாட்ச்மேனை நெருங்கி என்ன விஷயம் என மெல்ல விசாரிக்க ஆரம்பித்தார். 

 

எனக்கு எதுவும் தெரியாது சார்..அதோ அவங்க டிரைவர் இருக்கார் பாருங்க..அவரை கேட்டால் தெரியும்..” 

 

வாட்ச்மேனிடமிருந்து நகர்ந்து டிரைவரிடம் போய் எதுவும் தெரியாதது போல காரை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.. .  

 

முதலில் பிடி குடுக்காத டிரைவரிடம்ஏன் பா..இந்த காரை பாக்க ஆசையா இருக்கவே தான் கேட்டேன்..நானும் உன்னை மாறி சாதாரண ஆள் தான் பா..ஏன் நான்எல்லாம் தெரிஞ்சிக்க கூடாதா..” 

 

அந்த வார்த்தைகளில் மயங்கிய  

தன்ராஜ் கார் டிரைவரும் உற்சாகமாக காரை பற்றி விளக்க ஆரம்பித்தார். பேச்சோடு பேச்சாக 

தன்ராஜ் வருகை பற்றி கேட்க..”அம்மாக்கு உடம்பு சரியில்லங்க.. அதான் பாக்க வந்திருக்காரு..” 

 

ஓஓ..ரூபா அம்மாக்கு தானே..என்னாச்சு பா..” 

 

இல்லங்க..ரூபா மேடம்க்கு தான் ஜுரம் அதிகம் இருக்கு போல.. 

அவங்க பாக்க அவங்க நடிக்கற படத்தோட ப்ரொடியூசர் தன்ராஜ் சார் வந்திருக்காருங்க..” 

 

அப்டியா..சரி பா..அவங்க எல்லாம் பெரிய இடம்..சாதா ஜுரத்துக்கு கூட பாக்க ஆள் வர்றாங்க..நம்ம அப்படியா..நம்ம வேலைய பாத்தா தான் நமக்கு சோறு..நான் வரேன் பா..” 

 

அத சொல்லுங்க..போயிட்டு வாங்க..” 

 

அதன் பின் நடந்தது எதுவும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மின்னல் வேகம் தான். 

 

மதி மிக ரகசியமாக தன் ஷர்ட்டில் சொருகி இருந்த பேனாவில் இருந்த கேமராவினால் அங்கிருந்த சூழ்நிலையை படம் பிடிக்க, பேசியபடி வீட்டுக்கு உள்ளிருந்து தன்ராஜ் வருவதை பார்த்து அவருக்கு தெரியாது மறைந்து நின்று அவரையும் தன் கேமராவில் பிடித்து கொண்டு வேகமாக அங்கிருந்து நழுவினார் 

 

உடனே தன் ஸ்டூடியோக்கு சென்று அதை தேவையான அளவுக்கு வெட்டி, ஒட்டி தன் குரலோடு பதிவு செய்து அடுத்த ஒரு மணி நேரத்தில் யூட்யூபில் பதிவிட்டிருந்தார் 

 

சில நிமிடங்களில் அது வைரலாகி ரூபாவின் பல ஆயிரம் ரசிகர்கள் ஷேர் செய்ய போக..இது ஊரில் பேசும் பொருளாகி விட்டது.   

 

பல ரசிகர்கள் தங்கள் கனவு கன்னிக்கு என்ன ஆனது என கேள்வி கேட்டு சோஷியல் மீடியாவில் பதிவிட அதை பலர் ஷேர் செய்ய என பரபரப்பாக ஆகிவிட்டது. 

 

ரூபாவின் நிலை அறிய அவளின் வீட்டை முற்றுகை இட்ட ரசிகர்கள் அங்கேயே சிலர் கத்த, சிலர் வீட்டுக்குள் நுழைய பார்க்க, அந்த அத்துமீறல்களை அடக்க, ரூபாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு என இருந்த தனியார் பாதுகாப்பு ஆட்களால் சமாளிக்க முடியாமல் போக போலீஸ் வந்து அமைதி படுத்தும்படி ஆனது 

 

எதேச்சையாக வீட்டின் வெளியே வந்த விலாசினியை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் கூச்சலிட ஆரம்பிக்க, அவர்களை மறுபடியும் போலீஸ் அடக்க இது தொடர்ந்து கொண்டே இருந்தது. 

 

நிலைமை தீவிரமாக அடுத்த சில மணி நேரத்தில் பத்திரிகையாளர் கூட்டம் ரூபா வீட்டிலும், தன்ராஜ் வீட்டிலும் முற்றுகை இட ஆரம்பித்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!