Skip to content
Post Views: 5,933
காதல் அன்று.
வித்யாவின் வீட்டுக்கு மறு வீடு விருந்துக்கு வந்திருந்தனர் வித்யாவும் ராகவும்!
லதா விருந்தில் கலக்கி எடுத்து விட்டார்!
பறப்பதில் ஏரோப்ளேன், மிதப்பதில் கப்பல் தவிர என்பார்களே, கிட்டதட்ட அந்த மாதிரி எல்லா அசைவ உணவுகளும் இருந்தன, அவர் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்திருந்த விருந்தில்!
Advertisement
உண்மையான மாப்பிள்ளை உபசாரத்தின் இலக்கணமாக இருந்தது ராகவிற்கு லதாவால் அளிக்கப் பட்ட அந்த விருந்தும் உபசரணைகளும்!
இந்த அம்மாவா, அன்று அப்படி கோபமாக, ஸ்ட்ரிக்டாக தன்னிடம் பேசியது என்று ராகவிற்கு அப்படி ஒரு ஆச்சரியம்!
அதை, அவன் பெரியப்பாவிடம் சொல்லவும் செய்தான்!
Advertisement
விருந்திற்கு அவர் குடும்பமும் வந்திருந்தது!
Advertisement
நந்தினிக்கு தான் அளித்த வாக்கின்படி, ராகவிற்கு ஒரு நல்ல இடத்தில், ஒரு அற்புதமான பெண்ணைக் கட்டி வைத்து, நல்ல மாமனார் குடும்பமும் ஏற்படுத்திக் கொடுத்து விட்ட திருப்தி அவர் முகத்தில் நன்றாகவே தெரிந்தது!
ராகவை இன்னும் இரண்டு மூன்று நாட்கள் அங்கு இருந்து விட்டே வர சொல்லி விட்டார் பெரியப்பா!
அவன் தயங்கிய போது, வித்யாவைக் காட்டினார்.
Advertisement
“பார், உன் பொண்டாட்டி முகத்தில் இப்போ எவ்வளவு சந்தோசம்! அது இன்னும் இரண்டு மூன்று நாள் தொடரட்டுமே! எப்படியும் உள்ளூர் என்றாலும் பெற்ற பெண்ணைப் பிரிவதற்கு, அப்புறம் பிறந்த வீட்டைப் பிரியும் போது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும்!
அதனால, அவ கூட இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போ” என்றார் அவர்.
“சரி பெரியப்பா” என்றான் ராகவன், மனைவியின் முகத்தில் தெரிந்த சந்தோசத்தைக் கண்டு அவனும் சந்தோசமடைந்து!
மாலை காபி, பலகாரம் முடித்து விட்டு பெரியப்பா குடும்பம் கிளம்பி விட,
லதா, தமிழரசுவோடு, வாகீசன், வாணி என்று குடும்பம் மொத்தமும் ஹாலில் அமர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!
ராகவிற்கு கிரிக்கெட் அவ்வளவு விருப்பமில்லை.
மேலும் அவன் அமர்ந்து இருக்கும் போது லதாவும் வாணியும் ஏன் வாகீசனும் கூட இயல்பாய் இல்லாமல், மரியாதை நிமித்தம் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டவன், வித்யாவின் ரூமிலேயே கட்டிலில் அமர்ந்து கொண்டு வாகீசன் கொண்டு வந்து கொடுத்த கம்ப்யூட்டர் மாகசினைப் படித்துக் கொண்டு இருந்தான்.
வித்யா கொஞ்ச நேரம் ஹாலில் அமர்ந்து அவள் குடும்பத்தோடு டிவி பார்ப்பாள், பின் எழுந்து வந்து,
ராகவைக் கட்டிக் கொண்டு “மாமா..” என்று மூக்கோடு மூக்கை உரசி கொஞ்சி விட்டு டக்கென்று அவன் உதட்டில் முத்தமிட்டுவிட்டு சென்று விடுவாள்.
பின் திரும்ப சென்று டிவி பார்ப்பாள், பின் திரும்ப வந்து அவனின் லேசாக கன்னத்தைக் கடித்து “மாமா” என்று சொல்லி முத்தமிட்டு போவாள்!
இப்படி அவள் போக வர முத்தமிட்டு செல்வதைக் கண்டு முதலில் சிரித்துக் கொண்டே படிப்பதை தொடர்ந்தவன், அவள் மீண்டும் மீண்டும் இப்படியே செய்ய,
அருகில் வந்தவளை இழுத்து மேலே போட்டுக் கொண்டான்!
“ஏய், நில்லுடி, நான் என்ன உனக்கு டப்பாவில் இருக்கும் ஸ்நாக்ஸா, போக வர திங்கிற மாதிரி போக வர கடிச்சு வச்சுட்டு போயிட்டு இருக்க?” என்று அவளை இறுக்கிக் கொண்டு கேட்டான்!
“அய்யோ, மாமா, ஹாலில் தான் எல்லோரும் இருக்காங்க, ப்ளீஸ் விட்டுடு!”
“ஹோ, ஹாலில் எல்லோரும் இருக்காங்கன்றது உங்களுக்கு இப்போ தான் தெரியுதா மேடம்! நீங்க வந்து வந்து கடிச்சுட்டு போகும் போது தெரியலையா?”
“சாரி மாமா, ரொம்ப கடிச்சுட்டனா? வலிக்குதா? சாரி!”
“ஏய்.. ஏய். சும்மா சொன்னேன், வலிக்க எல்லாம் இல்லை ஆனா கூசுதுடி, உனக்கு என்ன ஆச்சு, இப்படி சும்மா சும்மா வந்து கிஸ் பண்ணிட்டு போறே?”
“அதுவா மாமா, நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் இன்னிக்கு! அதான், அதுக்கு காரணமான உன்னை அப்படியே கொஞ்சனும் போல இருக்கு!”
“மேடம்க்கு இன்னிக்கு அப்படி என்ன சந்தோஷம்?”
“சொன்னா சிரிக்கக் கூடாது”, பீடிகையுடன் தான் ஆரம்பித்தாள்!
“என் அண்ணன், அக்கா ரெண்டு பேரும் எப்பவுமே என்னை பைசாவுக்கு மதிக்க மாட்டாங்க, பாசம் இருக்கும் ஆனா மதிப்பு இருக்காது அவங்க கிட்ட!
நான் வேற அவங்களுக்கு ஈக்வலா படிக்க மாட்டேனா, அதனால எனக்கு ஒண்ணும் தெரியாது, சின்ன பிள்ளை அப்புறம் நானெல்லாம் ஒரு ஆளா என்கிற மாதிரி தான் இருக்கும் அவங்க நடவடிக்கை எல்லாம்!
ஆனா, இப்போ, அவங்க ரெண்டு பேரும் உன்னைக் கண்டு அப்படியே பம்முறத பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது மாமா!
ஏய், நீங்க எல்லாம் பயந்து பம்முற ஆள், என்கிட்ட சரண்டர் ஆகி ரொம்ப நாளாச்சு!
அவன் என் மாமா, என் செல்ல மாமான்னு தோணுது மாமா, அதான் அதுக்கு காரணமான உன்னை அப்படியே கொஞ்சனும் போல இருந்துச்சு!”
உண்மை தான்!
வாகீசன் இப்போது தான் ஐ டி துறையில் வேலையில் சேர்ந்து இருக்கிறான்!
கோடிங் எழுதும் டெக்னிக்கல் ஸ்கில்ஸ் இல்லாவிட்டாலும் மார்கெட் பத்தி, அன்றைய ட்ரேண்டிங் பத்தி எல்லாம் ராகவன் விரல் நுனியில் வைத்திருக்கும் தகவல்கள் வாகீசனுக்கு தெரியாது!
அதே போல வாணிக்கும்! மேலும் அவர்கள் இருவரின் ஆங்கிலத்தை விட ராகவனின் ஆங்கிலப் புலமையும் ப்ளுயன்சியும் ரொம்ப அதிகம்!
அதை இருவருமே உணர்ந்து விட்டதால், தன்னாலேயே அவன் மீது ஒரு பயம் கலந்த மரியாதை வந்து விட்டது!
அதைக் கண்டு விட்டு தான் வித்யாவிற்கு ஒரே குதூகலம்! கொண்டாட்டம்!
இவர்கள் இங்கு இருக்கும் போதே, ராகவின் வீட்டில் வித்யாவிற்கான சீர் வரிசைப் பொருட்களை கொண்டு போய் இறக்கி அடுக்கிக் கொடுத்து விட்டு வந்தார்கள் லதாவும் அரசும்!
“ம்ம்.. இத்தோட, நாற்பத்தி ஆறு பாக்!”
கையில் இருந்த கடைசி ஹான்ட் பாகை வைத்து விட்டு அரசு சொன்னார்!
“மாப்பிள்ளை, இவள் ஒரு ஹான்ட் பாக் பயித்தியம், இங்க பாருங்க எத்தனை வாங்கி வச்சுருக்கான்னு! நீங்க தான் இதை இனிமே கண்ரோல் பண்ணனும்!”
“அப்பா,,” வித்யா சிணுங்கினாள்.
“ஏங்க, இத விட்டுட்டீங்களே, இதோ இப்ப கூட அவ அண்ணன் வாகிசன் சொல்லி பெங்களூர்ல இருந்து வாங்கிட்டு வர வச்சுருக்கா!” என்று சொல்லி, இன்னொரு பாகையும் கொடுத்தார் லதா!
“ஏய், என்னடி இது?” என்று ராகவ் அவளை ஆச்சர்யமாக பார்த்தான்!
“ஏண்டி, நான் அன்னிக்கு முப்பது நாள் முப்பது சாக்ஸ்னு சொன்னதுக்கு அப்படி எனக்கு கிளாஸ் எடுத்த, இப்ப தானே தெரியுது உன்னைப் பத்தி!”
“ஏய்.. லதா, இப்படி என்னை என் புருஷன் கிட்ட கோத்து விட்டுட்ட இல்ல! இரு உன்னை வச்சுக்கிறேன்!”
“ஏய் கழுத.. என்னையாடி பேர் சொல்லி கூப்பிடுற, இரு நாளைக்கு உனக்கு பிள்ளைப் பொறக்கட்டும், அதுக்கு நல்லா பேரை சொல்லிக் கூப்பிட்டு பழக்கி விடுறேன்! அதுவும் மயில் மயில்னு சொல்லி கூப்பிட சொல்றேன்!” என்றார் லதாவும் பொய்க் கோபத்தோடு!
———-
“என்ன மாமா இப்படி வந்துருக்கீங்க?” என்றாள் அப்போது தான் குளித்து விட்டு இடுப்பில் டவலோடு உள்ளே நுழைந்தவனிடம்!
டக்கென்று அவர்கள் ரூம் கதவை சாத்திவிட்டு உள்ளே அவரசமாக நுழைந்து கொண்டான் ராகவ்!
“ஏண்டி, எப்படி வந்துட்டேன்?”, தன்னை நன்றாக மேலும் கீழும் பார்த்துக் கொண்டான் ராகவ்!
“சரியா தானே இருக்கேன்!” ஒரு நிமிஷம் பயந்து தான் போய் விட்டிருந்தான்!
எங்கே தன் பேச்சிலர் வீட்டில் இருந்தது போல முன்னே பின்னே பழக்க தோஷத்தில் இங்கயும் வந்துட்டமோ என்று, அதுவும் மாமியாரும் கொழுந்தியாளும் இருக்கும் வீட்டில்!
“ஏண்டி இப்படி பயமுறுத்திட்ட இப்படி, சரியா தானே வந்திருக்கேன்!”
“அய்யோ மாமா நான் அத சொல்லல, இப்படி தலையில் ஈரத்தோடு வந்திட்டீங்களே, சரியா கூட துவட்டாம! அதை சொன்னேன்!”
“அடச்சே இதுக்கா இப்படி கத்துன, அவ்வளவு அக்கறை இருந்தா நீயே துவட்டி விடு!”
“ம்ம். சரி இருங்க” என்று அங்கிருந்து கிளம்பியவளை இழுத்துப் பிடித்துக் கொண்டான்!
“எங்க போற?”
“ம்ம் டவல் எடுக்க?”
“இதயும் டவலா யூஸ் பண்ணிக்கலாம்!” என்று டக்கென்று அவள் புடவையை முந்தானையால் துவட்டிக் கொள்ளத் தொடங்கினான்!
“மாமா..” என்று வெக்கப்பட்டு சிரித்தவள், கொஞ்சம் யோசித்து விட்டு மீண்டும் சிரித்தாள்!
“ஏய்.. என்னடி உனக்குள்ள யோசிக்கிற, அப்புறம் சிரிக்கிற? என்னனு சொல்லு!”
“அதுவா மாமா, கொஞ்ச நாள் முன்னாடி, இதே ரூமில் என்னை வைச்சு அடைச்சு வச்சுகிட்டு, உன்னை வெளியே வந்து பார்க்க கூட விடல என் அம்மா!
இப்போ, நீ என்னடான்னா, என் சாரியை உருவிட்டு அதில் தலை துவட்டிடு இருக்க! அத நினைச்சு சிரிச்சேன்!”
“எல்லாம் இது செய்ற மேஜிக்!” அவள் ஜாக்கெட்டில் உள்ளே இருந்து அவள் தாலியை வெளியே எடுத்துக் காண்பித்தான்!
“ம்ம். ஆமா மாமா, ஆனா இதுக்கு நாம எவ்வளவு போராட வேண்டியிருந்துச்சு இல்ல?”
“ம்ம். இது எவ்வளவு பெரிய அச்சீவ்மென்ட் தெரியுமா, அந்த ஈஸ்வரி எதிர்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது எல்லாம் பெரியப்பாவுக்கு மட்டுமே சாத்தியம்!
அப்புறம் நீ ஸ்ட்ராங்கா இருந்தது, நீ மட்டும் அம்மாவுக்குப் பிடிக்கல ஆட்டுகுட்டிக்குப் பிடிக்கல மட்டும் சொல்லியிருந்தே அவ்வளவு தான், பெரியாப்பாவுக்கு ரொம்ப நோஸ் கட்டா போயிருக்கும்!
உன்னோட அந்த ஸ்ட்ராங் லவ், அப்புறம் என் அம்மாவோட ஆசிர்வாதம் பெரியப்பாவோட பவர் எல்லாம் சேர்ந்து, எனக்கு, என் மயிலுகுட்டிக் குட்டிய கொண்டு வந்து சேர்த்துருக்கு!” என்று அவளை இறுக்கிக் கொண்டான் ராகவ்!
அடுத்த வாரம் முழுவதும் அவர்களுக்கு விருந்து உபசரிப்பிலேயே போனது!
ஒரு நாள் பெரியப்பா வீட்டில், ஒரு நாள் அவர் பெண் மோகனா வீட்டில், அடுத்த நாள் கணேஷ் வீட்டில் கடைசியாக ராகவின் முதலாளி சியாம் சுந்தர் வீட்டில்!
சியாம் அவனுக்கு திருமணப் பரிசாக ஒரு டபுள் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி பரிசளித்தான்!
ராகவ் அப்படியே அதிர்ந்து போய் விட்டான்!
நன்கு செய்வான் என்று தெரியும்! ஆனால் இவ்வளவு பெரிய பரிசை அவன் எதிர்பார்த்திருக்க வில்லை!
நன்றி பெருக்கில் வார்த்தையிழந்து நின்றான் ராகவ்!
“என்னடா முழிக்கிற, உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, நீ பேமிலி மேன் ஆகிட்ட, இன்னும் அந்த வீட்டில் இருப்பது உனக்கு வசதிப் படாது!
நீ வேலை விசயமா அடிக்கடி வெளியூர் போவ, அப்பெல்லாம் சிஸ்டர் அந்த வீட்டில் தனியா இருப்பது சரியாக வராது! சேப்டியும் இல்ல!
இந்த வீட்டில் நல்ல டைட் செக்யுரிட்டி இருக்கு! அவ்வளவு சீக்கிரம் யாரும் உன் வீட்டுக்குள்ள வந்துட முடியாது!”
“ரொம்ப தாங்க்ஸ் அண்ணே, நானே நினைச்சுட்டு தான் இருந்தேன், வேற வீடு பார்க்கணும்னு! ஆனா வாடகைக்கு!”
“நீ எதுக்குடா வாடகை வீட்டில் இருக்கணும்? உங்கப்பா ஒழுங்கா இருந்திருந்தா, உன்னோட நிலைமையே வேற? என்ன பண்றது எல்லாமே விதி!
சிஸ்டர், இவன் கிட்ட அவன் வாங்குற சம்பளம் எல்லாம் சரியா கணக்கு பண்ணி நீ வாங்கி வச்சுக்கோங்க, பெரிய லார்ட் லபக்கு மாதிரி பேசுவான், ஆனால் காசு விசயத்துல சரியான ஈனா வானா தான்!
இவ்வளவு சம்பளம் நான் கொடுக்கிறேன், அவனோட சேவிங்க்ஸ் எவ்வளவுன்னு கேளு! பெரிசா ஒண்ணும் இருக்காது!
இனிமே நீ தான், இந்த பயல கண்ரோல்ல எடுக்கணும்! ஆனா அது அவ்வளவு ஈசி இல்ல! மூஞ்சிய காட்டுவான், நீ அதுகெல்லாம் பயந்து பின் வாங்கிடக் கூடாது! என்ன சரியா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் சியாம்!
“அண்ணே, வீட்டையும் வாங்கிக் கொடுத்து, கூடவே ஆப்பையும் சொருகி அனுப்புறியேண்ணே, இது நல்லா இல்ல ஆமா?” செல்லமாய் கோவித்துக் கொண்டான் ராகவ்!
“அப்படி இல்லடா, உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்துட்டா, இனி நீ பொறுப்பா இருக்கணும்! அது தான் சொன்னேன்!”
“அதெல்லாம் சரிண்ணே, இவ ஏற்கனவே கணக்குல புலி, இப்ப தொட்டதுக்கெல்லாம் கணக்கு கேக்கப் போறா? நல்லா கோத்து விட்டுட்ட அண்ணே!”
“ஓ, அப்படியாம்மா, அப்ப அப்படியே மெயின்டெயின் பண்ணு!”
“சரிங்க அண்ணா” என்று வித்யாவும் சொல்லி விட, ராகவ் நேராக சியாமின் அம்மாவிடம் போனான்!
“அம்மா, என்னம்மா பண்றீங்க நீங்க, அண்ணனுக்கும் ஒரு பொண்ணைப் பார்த்துக் கட்டி வச்சீங்கன்னா, நானும் அண்ணிக்கிட்ட அவர போட்டு விட்டு பழி தீர்த்துருப்பேன், நீங்க ரொம்ப மோசம்மா!” அவரிடம் சலித்துக் கொள்ள,
“நான் என்னப்பா, பண்ணட்டும், பார்க்கிற பொண்ணை எல்லாம் இவன் ரிஜெக்ட் பண்ணிடறான்! அவனுக்குப் பிடிச்ச பொண்ண எப்ப தான் அந்த கடவுள் என் கண்ணுல காட்டுவாரோ தெரியல!” அந்த அம்மாவும் புலம்பினார்!
வித்யாவும் ராகவும் கொஞ்ச நேரம் அவர்கள் வீட்டில் பேசி கொண்டிருந்து விட்டு கிளம்பினார்கள்.
வித்யா வீட்டில் வீட்டைப் பற்றி சொன்னவுடன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம்!
கிரகப்ரவேசம் நடத்துவது பற்றி பேச பெரியப்பாவை சந்திக்க சென்றான் ராகவ்!
பெரியப்பாவுக்கும் ரொம்ப சந்தோசம்!
அவர் கூட இருந்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்!
அடுத்து வந்த சில நாட்களில் ராகவின் முதலாளி சொன்னது உண்மைதான் என்று தெரிந்து கொண்டு விட்டாள் வித்யா!
ராகவின் கை சரியான ஓட்டை கை!
ரொம்பவும் செலவாளியாக இருந்தான்!
வித்யா தான் இழுத்துப் பிடிக்க வேண்டியிருந்தது!
அப்படி செய்தால், அவனுக்கு கோபம் வந்தது!
அவன் கோபம் அவளை என்ன செய்யும்? அவள் பதிலுக்கு கோபப்படவே மாட்டாள்!
அவன் கோபப்படும் போது அமைதியாய் இருந்து விட்டு, அவன் கோபம் தணிந்தவுடன் தான் பேசவே ஆரம்பிப்பாள்!
கிரகப் பிரவேசத்தோடு, வித்யாவின் பிறந்த நாளும் சேர்ந்து வந்தது!
கல்யாணம் ஆன பிறகு வரும் முதல் பிறந்த நாள் என்பதாலும், கிரகப்ரவேசமும் இருப்பதால், ராகவ் அவளுக்கு ஒரு விலை உயர்ந்த பட்டுப் புடவை வாங்கியிருந்தான்!
விலை ஐம்பதினாயிரம்!
வித்யா அதிர்ந்து தான் போனாள்!
“எதுக்கு மாமா, இவ்வளவு விலையில்? இந்த காசுக்கு, நாம் வீட்டை இன்டீரியர் பண்ணலாம், இல்ல நல்ல பர்னிச்சர் செட் வாங்கியிருக்கலாம்! ஒரு புடவையில் போய் ஏன் இவ்வளவு காசைப் போட்டீங்க?”
“என் பொண்டாட்டிக்கு நான் வாங்கித் தர முதல் பிறந்த நாள் பரிசு! அது நல்லதா இருக்கணும்னு ஆசைப்பட்டது தப்பா?
நீ தானே சொன்னே, சின்ன வயசுல இருந்து உன் அக்காவோட பழைய பட்டுப் பாவாடை தான் உனக்குன்னு!
அதான் உனக்கே உனக்குன்னு ஒரு காஸ்ட்லி புடவை!”
“போ மாமா, அதெல்லாம் எங்கள் மாதிரி மிடில் க்ளாஸ்ல மூத்த அக்காங்களோட டிரெஸ்ஸை அடுத்து உள்ள சின்னவங்க போட்டுகிறது தான் அதுக்காக இப்படியா?
இன்னும் கொஞ்ச நாளில் இதே மாதிரி டுயுப்ளிகட் சாரி இதே பேட்டர்னல வந்திடும்! அப்ப நான் என்ன புடவை விலையை ஒட்டிட்டா திரிய முடியும்!”
“இப்ப என்ன உனக்கு இந்த புடவைப் பிடிக்கலையா, கொடு கொண்டு போய் அம்மன் கோவில்ல கொடுத்துட்டு வந்திடறேன், கொண்டா அதை!” வெடுக்கென்று பிடுங்கினான் அதை!
“ஸ்..என்ன மாமா இப்படி கோபப்படுற? நான் பிடிக்கலைன்னு எப்ப சொன்னேன், விலை அதிகம்னு தான் சொன்னேன்! சரி கொடு!” வாங்கி வைத்து கொண்டாள் பத்திரமாக!
கிரகப்ரவேசம் நல்ல படியாக முடிந்தது!
லதா, பிறந்த வீட்டு சீராக வாங்கி கொடுக்க வேண்டிய அனைத்தையும் குறைவில்லாமல் செய்து கொடுத்தார்!
அன்று மாலை அவன் வாங்கி கொடுத்த அந்த பட்டுப்புடவையை உடுத்திக் கொண்டு கோவிலுக்கு போய் வந்தார்கள் ராகவும் வித்யாவும்!
ராகவ் மற்றவர்கள் முன்பு காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் தனிமையில் அவளிடம் பேசாது மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் இருந்தான்!
அவன் வீட்டு கிரகப்ரவேசத்திற்கு அவன் அப்பாவிற்கு தகவல் அனுப்பினான்!
அந்த ஈஸ்வரி அவரைப் போக அனுமதிக்க வில்லை! அவன் இங்கு வந்து அழைப்பு விடுக்கவும் விட வில்லை!
சொந்தக்காரர்கள் கேட்டதற்கு “அவன் நேரில் வந்து கூப்பிடவில்லை, அதனால் எனக்கு கோபம்” என்று பொய் சொல்லி சமாளித்தார்!
ஈஸ்வரிக்கு பயந்து பயந்து பொய் சொல்ல ஆரம்பித்து, அவருக்கு வாழ்க்கையே பொய் மயமாகிவிட்டது!
“அவர் வராததே நல்லது தான்” என்றான் கணேஷ்!
“அவர் வந்தால், அட்டை மாதிரி அந்த பொம்பளையும் கூடவே வந்திடும்!
அதோட கால் எல்லாம் இந்த வீட்டில் பட்டா, பயங்கர பேட் வைப்ஸ் ஆகிடும்!
வரலைன்னா விடு!”
“அதுவும் சரி தான்” என்றே தோன்றியது ராகவனுக்கும்!
ஓ. மாமாவுக்கு அவர் அப்பா விசேஷத்துக்கு வரலன்னா அப்செட்டா? இப்படி தான் நினைத்துக் கொண்டாள் வித்யா!
புது வீட்டில் இன்னும் முழுமையாக எல்லா பொருட்களும் எடுத்து வரப்படவில்லை!
ஆனாலும் கிரகப்ரவேசம் நடந்த வீட்டில், அன்று இரவு வீட்டு உரிமையாளர் தங்க வேண்டும் என்பது சம்பிரதாயம்!
எனவே ராகவ், அந்த புது வீட்டின் பெட் ரூமில் ஒரு பாயை விரித்து படுத்து இருந்தான்.
இரவு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, வந்தாள் வித்யா!
“என்ன மாமா, இன்னுமும் கோபமா?”
முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான் ராகவ்!
வித்யாவிற்கு சிரிப்பு வந்தது!
“அய்யோ மாமா, இதெல்லாம் உனக்கு செட் ஆகலை! ப்ளீஸ் மாமா பேசு!
நான் தான் நீ வாங்கிக் கொடுத்த புடவையைத் தானே இன்னும் கட்டியிருக்கேன்!
பாரு, கச கசன்னு வேர்க்குது, ஆனா நீ இன்னும் என்னை இந்த புடவையில் நல்லா பார்க்கவே இல்லன்னு தானே இன்னுமும் மாத்தாம இருக்கேன்! ப்ளீஸ் மாமா!”
ராகவ் திரும்பினான்!
“நீ உன் பர்த்டே ட்ரெஸ்ல வா, அப்ப தான் நான் உன்கிட்ட பேசுவேன்!”
“என்ன சொல்ற மாமா, இது தான் அந்த ட்ரெஸ்! நீ வாங்கி கொடுத்தத நீயே மறந்திட்டியா?
பாரு அத தானே இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருந்தேன்! பாரு! நைட்டி கூட நான் இன்னுமும் மாத்திக்கல!”
“நான் உன்னை உன் பர்த்டே ட்ரெஸ்ல வர சொன்னேன்!”
“அதான் மாமா இது..” சொல்லிக் கொண்டுப் போனவள்.. நாக்கைக் கடித்துக் கொண்டு, “ஸ்ஸ். இப்ப புரியுது.. ஹேய்.. மாமா நீ சரியான ஆளு! கோபப்படுற மாதிரி நடிச்சுட்டு, நீ உன் காரியத்துல கண்ணா இருக்க இல்ல! போ மாமா” என்று அவன் மேல் சாய்ந்து கொண்டாள் அவனின் செல்லமயில்!
இவர்கள் இங்கே சந்தோசமாக இருக்க, அங்கோ ஒரு இவில் பவர் ஒன்று கொதித்துக் கொண்டு இருந்தது! என்ன செய்யலாம், எப்படி செய்யலாம், யார் மூலம் செய்யலாம் என்று வழிகளை யோசித்துக் கொண்டும்!
வேறு யார் ஈஸ்வரி தான்!
error: Content is protected !!