KAK-13-2
“ஏய் இப்ப உனக்கு என்ன தான் பிரச்சனை ஏன் கிளம்பமா இருக்க”என்றார் கோவமாக சிவகாமி
“என் பிரச்சனை சொன்னா உடனே தித்து வச்சிவீங்களா”என்றாள் சத்தமாக இனியா.
“சரி சொல்லுமா அப்படி உனக்கு என்ன பிரச்சனை நானும் தெரிஞ்சிக்கிறேன்”என்றார் சிவகாமி.
“ஏன் உங்களுக்கு தெரியாதா என் பிரச்சனை என்னனு. எல்லாம் தெரிஞ்சியும் ஏன் இப்படி பண்ணுறீங்க மா”என்றாள் அதங்கமாக
Advertisement
“உனக்கு என்ன இப்ப நடந்துச்சி. நீ என்ன உனக்கு விருப்பமே இல்லாத ஒருத்தனையா கட்டிக்க போற. இப்ப அவன் பொண்ணு பாக்க வந்துட்டான்னு சொல்லி இப்படி முகத்தை தூக்கி வைச்சிட்டு இருக்க. நீ ஆசைப்பட்ட பையன் தானே உன்னை பொண்ணு பாக்க வரான். நீ ஆசைப்பட்டது தானே நடக்க போகுது.இன்னும் உனக்கு என்ன வேணும். வரவங்க முன்னாடி இன்னும் நாங்க அவமானப்படுத்தனுமா. அதான் உனக்கு வேணுமா சொல்லுடி சொல்லு”
“இதுதான் இதுதான் நீ சொல்லிட்ட இல்ல இதுதான் என்னோட பிரச்சனை உங்கள அவமானப்படுத்தின வீட்ல எப்படி என்னால போய் வாழ முடியும்னு திரும்பவும் அவங்கள கூப்பிட்டு இருக்கீங்க. என்னால முடியாது எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் அவங்களுக்கும் சொல்லுங்க அவங்க யாரையும் எனக்கு பார்க்க பிடிக்கல”
“ என்னடி நினைச்சு நினைச்சு பேசுவியா அப்போ உனக்கு வேணும் சொன்ன இப்ப வேணாம் சொல்லுற. உன்ன எல்லாம் சின்ன வயசுலயே அடிச்சி வளர்த்து இருக்கணும். அதனாலதான் நீ இப்படி உன் இஷ்டத்துக்கு எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்க. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன்னை எல்லாம்” என்று அவளை அடிக்க போனவரை தடுத்து நிறுத்தி, “ சிவகாமி நீ போ நான் அவளை கூட்டிட்டு வரேன்” என்று சொல்லி அனுப்பிவிட்டு இனியா பக்கம் திரும்பினார் வள்ளியம்மை.
Advertisement
அங்கே அழுது கொண்டு நின்றவர்களை பார்த்து கொஞ்சமும் இறங்காமல் அழுத்தமாக பார்த்துக் கொண்டு, “இப்ப வந்திருக்கவங்கள போ சொல்றேன். ஆனா அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கு நாங்க பார்த்து இருக்குற பையனோட கல்யாணம் அதுக்கு ஓகே சொல்லுவியா நீ”
Advertisement
அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுடன் அவரை பாவமாக பார்த்தவளை கண்டு சிறிதும் இறங்காமல், “ சொல்லு இனியா இவங்கள வேணாம் சொல்லிட்டு நாங்க பாத்து இருக்குற பையனை நீ கல்யாணம் பண்ணிக்குவியா”
“ அது வந்து பாட்டி” என தடுமாறியவளை பார்த்து சிரித்துக் கொண்டே, “உன்னால அவனைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது எங்களுக்கு தெரியும். அதனால் தான் எல்லாத்தையும் மறந்துட்டு அவங்களை இப்ப வர சொல்லி இருக்கோம். அதனால முரண்டு பிடிக்காமல் எடுத்து வச்சிருக்க பட்டு சேலையை கட்டிட்டு நகை எல்லாம் போட்டுட்டு அவங்க முன்னாடி வந்து நீ நிக்கிற இல்லையா அவங்க போன பத்தாவது நிமிஷம் நாங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளை வீட்டுல இருந்து வருவாங்க. அந்த பையனை கல்யாணம் பண்ற”என்று அழுத்தமாக சொல்லிவிட்டு சென்றார்.
Advertisement
@@@@@@@@@@@@@@
“என்ன மச்சான் நான் சொன்னது எல்லாம் கரெக்ட் நடக்குமா”என்றான் டென்ஷனாக கவின்.
“அதுலாம் கரெக்ட் தான் நடக்கும் நீ ஏன் டா டென்ஷனா இருக்க.ஃபீல் ப்ரி டா.டென்ஷன் ஆகாம இங்க நடக்குறத வேடிக்கை மட்டும் பாரு”என்றான் தீபக்.
“எப்படி டா டென்ஷன் ஆகாம இருக்க சொல்லுற அண்ணன் கால் பண்ணா எடுக்கல. அவர் வேற கரெக்ட் ஆன டைமுக்கு வருவாரா தெரியல. இது எல்லாம் நடந்து முடியுற வர என்னால டென்ஷன் இல்லாம இருக்க முடியாதுடா”
“அது எல்லாம் சரியா தான் நடக்கும் நீ அமைதியா இரு. மாறன் அண்ணா சொன்னா சொன்ன டைம்க்கு வந்துவாரு. அதோட அவங்கள நான் நேர்ல போய் தான் கூப்புட்ட போறேன். சோ எல்லாம் கரெக்ட் தான் நடக்கும் இப்ப உங்க அம்மா கரெக்டா பேசுறாங்களா பாரு”என ஹாலில் அமர்ந்து இருந்தவர்களின் பேச்சினை சற்று தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்து கவனிக்க சொன்னான்.
அங்கே ஹாலில் இருக்கையில் வலது பக்கம் மயில்வாகனார், சிவசாமி, வள்ளியம்மை மற்றும் பார்வதி அமர்ந்திருக்க அதற்கு அருகே உள்ள இருக்கையில் செந்தில் முருகன், பழனி முருகன் அமர்ந்திருக்க அவர்களுக்கு பக்கத்தில் அவர்களின் துணைவிகள் நின்றிருந்தனர். அதற்கு நேர் எதிரில் உள்ள இருக்கையில் ஈஸ்வரி மற்றும் இன்பா, தீபக் ஆகியோர் அமர்ந்திருந்தார்கள்.
முதலில் யார் ஆரம்பிப்பது என தெரியாது அனைவரும் ஒருவரின் ஒருவர் முகத்தை பார்த்திருக்க அவர்கள் அனைவரையும் கவனித்த கவின் தனது அன்னையின் அருகே வந்து அவரின் தோளில் கை வைத்து கண்ணால் பேச சொன்னான். அவன் செய்கையை புரிந்து கொண்ட ஈஸ்வரி, “ ஐயா முதலில் நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அன்னைக்கு நான் பேசின எதையும் மனசுல வச்சுக்காதீங்க. எனக்கு ஃபர்ஸ்ட் லவ் பண்ணாலே பிடிக்காது. என்ன பொறுத்த வரைக்கும் காதலே ஒரு சுயநலம் தான். அது ஒருத்தருக்குள்ள வந்துச்சுன்னா அவங்கள சுத்தி இருக்க எல்லாரையும் மறக்க வைச்சிடும். இதனால நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். அதோடு இவங்க சொன்ன பொய். எனக்கு முதலிலேயே தெரியும் நீங்க எவ்வளவு பெரிய பணக்காரங்கன்னு. அதோட என் உயிர் தோழிய என்கிட்ட இருந்து பிரிச்ச பேமிலிக்குள்ள எப்படி ஒரு பொண்ணு என்னால எடுக்க முடியும். ஒருவேளை அவளை மாதிரி என் பையனும் என்னை விட்டு போயிட்டனா நான் என்ன பண்ணுவேன் எனக்கு உலகமே உங்க ரெண்டு பேர் மட்டும் தான்”என்று கலங்கிய குரலில் சொன்னவரின் இரு கைகளையும் கவின் இன்பா இருவதும் பிடித்துக் கொண்டனர். அதில் அவர்களை பார்த்து மெதுவாக புன்னகைத்து விட்டு, “அதுதான் என்ன ரொம்ப பேச வச்சிச்சி. நான் இதுவரைக்கும் பேசுனது உங்களால மறக்க முடியாதுன்னு தெரியும் இருந்தாலும் உங்க பொண்ணா நெனச்சு என்ன மன்னிக்க முயற்சி பண்ணுங்க” என்று கைகூப்பி மயில்வாகனாரை பார்த்து சொன்னாள்.
“ இப்படி மன்னிப்பு எல்லாம் கேட்டு எங்களை கஷ்டப்படுத்தாதம்மா நாங்களும் தான் தப்பு பண்ணி இருக்கோம் என்னதான் சின்ன பொண்ணு சொன்னாலும் பெரியவங்க நாங்க யோசிச்சு எல்லாத்தையும் பண்ணி இருக்கணும். ஆனா என்ன பண்ண எல்லாம் நடந்து முடிஞ்சிட்டு, அதனால இதுவரைக்கும் நடந்தத பத்தி இனிமே நம்ம பேச வேண்டாம். நீ சொன்ன மாதிரி தான் ஈஸ்வரி நீயும் எங்களோட பொண்ணு தான் அதனால நீ பேசுனத நாங்க மறந்துடுறோம். இது நடக்க வேண்டியது மட்டும் நம்ம பாப்போம்” என்றார் பெருந்தன்மையாக மயில்வாகனார்.
“ இருந்தாலும் இது உங்களோட பெருந்தன்மைய தான் காட்டுது. என்னோட மனத்திருப்திக்காக உங்க எல்லாத்துக்கும் தனித்தனியா நான் மன்னிப்பு கேட்டுறேன்.என்ன தான் நான் பேசுனது நீங்க மறந்துட்டேன்னு சொன்னாலும் மனசுல ஒரு காயம் இருக்கும் இல்ல அதனால அம்மா அண்ணா எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க” என்று அனைவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார் ஈஸ்வரி.
“ என்ன தங்கச்சி அதான் அப்பா மன்னிச்சிட்டேன்னு சொல்றார் இல்ல அதனால எங்க யாருக்கும் உன் மேல எந்த கோவமும் இல்ல சரியா. என்னோட தங்கச்சியா இருந்தது நீ இன்னொருத்தர் கிட்ட மன்னிப்பு கேட்பியா அது கூடாதும்மா” என்று பாசமாக சொன்னார் செந்தில் முருகன்.
“ அண்ணா சொன்னது கரெக்ட் தான் இத்தனை வருஷம் கழிச்சு எங்களுக்கு ஒரு தங்கச்சி கிடைச்சிருக்கு. அவ போய் எங்ககிட்ட மன்னிப்பு கேப்பாளா. நீ எங்க தங்கச்சிமா நீ என்ன சொன்னாலும் எங்களுக்கு கோபமே வராது சரியா. அதோட இந்த பிரச்சனைக்கெல்லாம் முழு முக்கிய காரணமும் நாங்க மட்டும் தான். உன்னோட உயிர் தோழியை எத்தனை வருஷம் உன்கிட்ட இருந்து பிரிச்சதுக்காக நான் உங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்” என்றார் பழனி முருகன்
“ஐயோ அண்ணா நீங்க போய் என்கிட்ட மன்னிப்பு கேட்பீர்களா. இத்தனை வருஷம் என் ஃப்ரெண்ட் நல்லா பாத்துக்கிட்டதுக்காக நான் தான் உங்ககிட்ட நன்றி கேட்கணும்” என்றார் பதறிப் போய் ஈஸ்வரி.
“ போதும் ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றி, மன்னிப்பு கேட்டது. இதுவரைக்கும் நடந்தது ஒரு கெட்ட கனவா நினைச்சு எல்லோரும் மறந்துருவோம் இனிமேல் நடக்க வேண்டியத பாப்போம் சரி சொல்லுங்க எப்போ ரெண்டு பேருக்கும் கல்யாணம் வச்சுக்கலாம்” என்றார் வள்ளியம்மை.
“ அம்மா அதுக்கு முன்னாடி நான் என்னோட மருமகளா பாக்கணும் அவள அழைச்சிட்டு வர முடியுமா அண்ணி” என்றாள் சிவகாமியை பார்த்து ஈஸ்வரி.
“ஐயோ அண்ணி நான் உங்களோட வயசுல ரொம்ப சின்ன பொண்ணு என்ன எல்லாம் அண்ணி சொல்லி கூப்பிடாதீங்க”
“ஆனா நீங்க தான என் அண்ணாவோட மனைவி அப்ப நான் மரியாதையா தானே கூப்பிட முடியும்”
“ஐயோ நீங்க அப்படி கூப்பிடாதீங்க. என்ன பெயர் சொல்லி கூப்பிடுங்க அண்ணி” என்று சிணுங்கிய சிவகாசி பார்த்து புன்னகைத்து,“ ஆமா மா அவளை அண்ணி சொல்லி கூப்பிடாதம்மா அவளுக்கு வயசு ஆன மாதிரி பீல் ஆகி என்னை தூங்க விடாம நைட் புல்லா புலம்பிக்கிட்டே இருப்பா அதுனால அவளை குட்டி அண்ணி வேணும்னா கூப்பிடு என்ன சிவகாமி நான் சொன்னது கரெக்ட் தானே” என்று கேலி செய்தார் செந்தில் முருகன்.
“மாமா போங்க மாமா நீங்களும் என்னை கலாய்க்கிறீங்க போங்க நான் போய் இனியாவ கூட்டிட்டு வரேன்” என்று சிறு பிள்ளை போல் கோவித்துக்கொண்டு உள்ளே சென்றாள். போகும் அவளைப் பார்த்து அனைவரும் சிரித்துக் கொண்டனர்.
