Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 16.1

“சந்தீப், ஏன் உனக்கு புரியல..? 

 

எனக்கும் பேபிக்கும் கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கும் மேல வயசு வித்தியாசம் இருக்கு. 

 



Advertisement

நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு பையனுக்கு தகப்பன்டா.

 

பேபிய பொறுத்தவரை முகுந்தை பார்த்துக்கறதை வச்சு நான் நல்ல அப்பா.. நான் நல்ல குரு.. நல்ல நண்பன்..

Advertisement

 

Advertisement

இப்போ.. தப்பை கண்டுபிடிச்சு சரி பண்ணதுல ஒரு நல்ல மனுஷன். 

 

இப்படியான எண்ணம் தான் இருக்குமே ஒழிய.. நீ சொல்ற மாதிரி அவ தாட் இருக்காது..” என்றான் ஸ்திரமாக.

Advertisement

 

“நீயே.. எப்படி அப்படி முடிவு எடுக்கலாம்..? 

 

அந்த பொண்ணு உன்கிட்ட சொன்னாளா..? இல்லை தானே..?

 

வயசு வித்தியாசம் எல்லாம் ஒரு மேட்டரா..? 

 

அது, அவங்க அவங்க வாழற வாழ்க்கையை பொறுத்து தான்..” என சந்தீப் வாதிட,

 

“பட், எங்க ரெண்டு பேருக்குமான உறவு தந்தை, மகள் ஸ்தானத்துல இருக்கு. 

 

நீ நினைக்கற மாதிரி அவளை என்னாலையோ.. என்னை அவளாலையோ கற்பனை பண்ணி கூட பார்க்க முடியாது..” என ரியான் சொன்ன நொடி திக்கென ஆனது சந்தீப்புக்கு.

 

‘இத்தன வருஷம் கழிச்சு, தம்பி வாழ்க்கையில ஒரு நல்லது நடக்க போகுது.. 

 

இனி அவனும் நம்மள மாதிரி சந்தோஷமா இருப்பான்னு இருந்தா.. இதென்னடா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டான்..!” என அதிர்ந்து பார்க்க,

 

“நீ நினைக்கற மாதிரி அந்த பொண்ணை என்னால பார்க்க முடியலடா. 

 

அவள பார்த்தா.. எனக்கு முகுந்த் மாதிரி தான் ஃபீல் ஆகுது. 

 

சோ, இப்படி‌ வேண்டாத கற்பனை பண்ணி.. என்கிட்ட கேட்ட மாதிரி அவகிட்ட கேட்காத..” என்றான் உறுதியான குரலில்.

 

“அப்போ கடைசி வரை இப்படியே இருக்க போறையா..?” என கோபமாக சந்தீப் கேட்க,

 

“எனக்கு என்னடா குறை..? 

 

எனக்கு என் பிள்ளை இருக்கான்டா. அவன் ஒருத்தன் போதும் மிச்சமிருக்கற என் வாழ்க்கையை நான் சந்தோஷமா வாழ. 

 

கூடவே இப்போ நீ. சம்யுக்தா மாதிரி அழகான குட்டி தேவதை. 

 

போதாதா எனக்கு..?” என சொன்னவனை கண்டு.. 

 

கோபம் கொள்வதா..? வருத்தம் கொள்வதா..? என்றே புரியவில்லை சந்தீப்புக்கு.

 

“ரியான்.. உனக்கு அப்படி ஒண்ணும் வயசாகலடா. 

 

இப்ப எல்லாம் முதல் கல்யாணமே தெர்ட்டி ப்ளஸ்ல தான் பண்ணறாங்க. 

 

நம்ம வீட்டுல தான் இருபத்தி அஞ்சுக்கு முன்னாடியே பண்ணியே ஆகனுமுன்னு வாண்ட்டேடா பாழுங்கிணத்துல புடுச்சு தள்ளிட்டாங்க..” என்றிட,

 

லேசான இதழ் சிரிப்போடு, “சாருக்கு அதுல ரொம்ப வருத்தம் போலவே..?” எனக்கேட்க,

 

“பின்ன என்னடா.. காலேஜ் முடுச்ச கையோட வேலைய தேடி சேர்ந்தா.. அடுத்து உடனே பொண்ணு ரெடி கட்டு தாலிய ன்னு சொல்லிட்டாங்க. 

 

கண்சிமிட்டரதுக்குள்ள வாரிசு. பேச்சுலர் ஃலைப் ன்னு ஒண்ணை வாழவே இல்லையேடா..” என சந்தீப் வருந்தமான குரலில் சொல்ல,

 

“ஓ.. அப்போ சாருக்கு பேச்சுலர் ஃலைப் வேணும்..?” என்றான் கிண்டலாக.

 

“இப்ப இருக்கற பசங்க எப்படியெல்லாம் என்ஜாய் பண்ணறாங்க..! நம்ம அப்படியா இருந்தோம்..? 

 

வீடு.. வீடு விட்டா ஆஃபீஸ். இடையில டைம் கிடைச்சாலும்.. பொண்டாட்டிய கூட்டிக்கிட்டு தான் ஊர் சுத்தனும். சுத்த போர்டா..” என சலித்துக்கொள்ள,

 

“மலரு கேட்டுச்சா.. உன் புருஷன் சொன்னது..?” என்றதும்,

 

“நல்லவே கேட்டது சின்னத்தான். 

 

வீட்டுக்கு தானே வரனும். வரட்டும் எப்படி என்ஜாய் பண்ணறதுன்னு பிராக்டிக்கலாவே காட்டறேன்..” என்ற மலரின் குரல் ரியானின் போனில் ஒலிக்க,

 

“ஏன்டா.. ஒரு அண்ணனோட வாழ்க்கையில விளையாடறோமேன்னு கில்ட் இல்ல..

 

உன் வாழ்க்கையில விளக்கேத்த முயற்சி பண்ணறானேன்னு ஒரு நன்றி உணர்வு இல்ல..

 

இப்படி என் வாழ்க்கையில விளையாடிட்டையே..?” என தலையில் கை வைத்த சந்தீப்.. 

 

‘நல்லா வருவீங்கடா..’ என நினைத்து கொண்டு, 

 

“டேய்.. நாளைக்கு எதுக்கும் உன் மகனுக்கு வாங்கியிருக்க அப்பாயின்மெண்ட்டோட இன்னொன்னும் போட்டு வை.. தேவைப்படும்..” என்று விட்டு அங்கிருந்து செல்ல, 

 

மனம்விட்டு சிரிக்க துவங்கினான் ரியான். 

 

*****

 

சம்யுக்தா தனது இருக்கைக்கு சென்றதும் மாலதி, “டிஎல் உங்கள வர சொன்னங்க சம்யுக்தா..” என்றிட,

 

தலையாட்டி உள்ளே சென்றவள் இங்கிருந்த வெங்கடேஷை கண்டதும், 

 

“அய்யோ மங்கீ.. ச்சே வெங்கீ..” என்றாள் அதிர்ந்து.

 

அவளின், ‘வெங்கீ..’ என்ற வார்த்தையில் நிமிர்ந்து பார்த்த வெங்கடேஷூம் சம்யுக்தாவை அங்கு எதிர்பார்க்காமல் இனிதாய் அதிர்ந்தவன்,

 

“ஹாய்.. என்னை விட்டு போக காலைல எவ்வளவு ஃபீல் பண்ணீங்க..! 

 

ஆண்டவன் இருக்கான் குமாரூங்கற மாதிரி.. எப்படி கரெக்ட்டா கொண்டு வந்து சேர்த்திருக்கார் பாருங்க..” என்றான் வாயெல்லாம் பல்லாக.

 

‘அய்யோ.. சிடுசிடுன்னு பேசின அந்த பக்கியே படுகேவலமான வேல பாத்துச்சு. 

 

இவன் ஓப்பனாவே வாட்டர் பால்ஸ் விடறானே.. எங்கிருந்துடா எனக்குன்னே வர்றீங்க..?’ என ஜர்க் ஆகி மனதோடு புலம்பினாள் சம்யுக்தா.

 

அவளின் திகைத்த முகம் காட்டிய பாவனையை கண்டு.. இன்னும் அவளை ரசித்து பார்த்திருந்த வெங்கடேஷை கண்டு கடுப்பானாலும், 

 

அவனின் பார்வை தன் முகத்தை தாண்டி போகாமல் இருப்பதை நன்றாக உணர்ந்த சம்யுக்தாவிற்கு நிம்மதியாக தான் இருந்தது.

 

எனவே, “வெங்கீ.. எதுக்கு வரச்சொன்னீங்கன்னு சொன்னா வேலைய பார்க்க போவேன்..” என அவனிடம் கேட்க,

 

‘வேலை..’ என்ற வார்த்தையில் ‘சின்சியர் சிகாமணி..’ மோடுக்கு மீண்ட வெங்கியும், அவளுக்கு கொடுக்கப்பட வேண்டிய சரியான ஃபைலை கொடுத்து, 

 

“இதை ஃபினிஸ் பண்ணிட்டு ரிப்போர்ட் பண்ணுங்க. 

 

எனி டவுட்ஸ் ஆஸ்க் மீ.. அட் எனி டைம்..” என்றான் அந்த பதிவிக்கே உண்டான அழுத்தத்துடன்.

 

‘இவன் என்ன ஸ்பிலிட் பர்சனாலிட்டியா..? 

 

சட்டுன்னு இப்படி மாறிட்டான்..!’ என நினைத்த போதும், 

 

‘சரி..’ என தலையசைத்துவிட்டு தனது வேலையை பார்க்க சென்றாள்.

 

வேலைக்கு நடுவே எழுந்த சந்தேகத்தை கேட்க சென்றவளுக்கு கேட்ட விசயத்தை அழகாக அவன் விளக்கி சொன்ன விதமே சொன்னது.. அவனின் புத்திசாலிதனத்தை.

 

“பார்ரா.. செம படிப்ஸ் தான் போல..!” என அவனை மனதார பாராட்டவும் தவறவில்லை தனக்குள்ளாக.

 

அன்றைய நாளின் முடிவில் தனக்கு என ஒதுக்கப்பட்ட வேலையை திருப்தியாக முடித்துவிட்ட நிறைவுடன் வீட்டுக்கு சென்றாள் சம்யுக்தா.

 

தினசரி வழக்கமாக.. வெண்பாவும், அப்போது தான் சாப்பிட்டுவிட்டு இனியாளுடன் வீட்டினுள் நுழைய.. எப்போது போல அவர்களின் சேட்டை ஆரம்பமானது.

 

இனியாளுக்கோ இன்று இருந்த வேலை பிஸியில்.. சம்யுக்தாவை போனில் கூட அழைக்க முடியாமல்.. அவளை காணும் வரை தவித்தவளுக்கு, 

 

காலையில் இருந்ததற்கு மாறாக.. இப்போது தெளிவாக இருந்த அவளின் முகம் கண்ட பிறகே  நிம்மதியாக இருந்தது.

 

எப்போதும் போல உறங்கும் முன் இனியாளின் மடியில் படுத்து.. நடந்ததை சொல்லும் வழக்கம் போல ஆரம்பித்தாலும், 

 

முகுந்தை காலையில் பார்த்தையும், ரியான் பற்றி பெருமையாகவும், மதியம் வெங்கடேஷ் வந்த பிறகான நிகழ்வையும் மட்டுமே பகிர்ந்து கொண்டாள் சம்யுக்தா.

 

ஏனெனில் ஏற்கனவே ஒருவனால் வஞ்சிக்கப்பட்டு.. வாழ்க்கை பாதையே திசை மாறி போயிருக்கும் இனியாளிடம், 

 

சபேசன் பற்றி சொன்னால்.. ‘எங்கே தன்னை வேலைக்கே போக வேண்டாம்.. என சொன்னாலும் சொல்லலாம்..’ என்பது தெரிந்ததால் தான் அதை மறைத்தாள்.

 

ஆனால் அவள் அறியவில்லை.. அவள் சபேசன் விசயத்தை பற்றி சொல்லாமல்.. அவனுக்கு ரியான் கொடுத்த தண்டனை பற்றி சொல்லாமல் விட்டதால், 

 

அவனின் நல்ல குணம் தெரியாது.. அவனை பற்றிய பெருமை பேச்சு கூட கசந்தே தெரிந்தது இனியாளுக்கு. 

 

அந்த கசப்பு நேரில் சந்திக்கும் போதும் நீடித்தால்… 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!