Skip to content
Post Views: 10,909
அத்தியாயம் 19
“நான் யாரு மாமா? உங்க தாய்மாமா பொண்ணு! நான் உங்களை விரும்பினது தப்பா?” என்று ப்ரணித்தா நியாயம் பேச,
Advertisement
“நீ விரும்பின வரை எதுவும் தப்பில்ல ப்ரணி! ஆனா விரும்பினதை அடைய நீ எடுத்துகிட்ட வழி தான் ரொம்ப தப்பு!” கொஞ்சமும் கோபம் குறையவில்லை அனன்யாவிற்கு. இத்தனை நியாயம் பேச என்ன தகுதி இருக்கிறது இவளுக்கு என்று.
“உன்னை சொல்லணும் அர்ஜுன்! நீ குடுத்த இடம் தான் இதெல்லாம்!” என அர்ஜுனையுமே அனன்யா திட்டிட, இப்பொழுது தானே அவனுமே புரிந்து கொண்டான் தன் தவறை.
Advertisement
Advertisement
“சொல்லு டா! நீ விஜியை விரும்பினது உண்மையா?” என்ற அனன்யா,
“ஏன் டா என்கிட்ட கூட சொல்லல நீ? அய்யோ அய்யோ!” என அவள் தலையில் அடித்துக் கொள்ள,
Advertisement
“ஏய் அனு!”
“க்கா!” என விவேக் அர்ஜுன் இருவருமே அவளிடம் ஓடி வந்தனர்.
ப்ரணித்தாவின் அந்த ஒரு வார்த்தையில் மொத்தமாய் சுக்கு நூறாகி நின்றிருந்த விஜயலக்ஷ்மிக்கு வேறெந்த வார்த்தைகளும் காதில் விழவில்லை அனன்யா தன்னைத் தானே அடித்துக் கொள்ளும் வரை.
“அப்போ அவ்வளவு தானா நான்? இதுக்காகவா நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன்?” என ஆத்திரமாய் ப்ரணித்தா கேட்க, கோபமாய் அர்ஜுன் அவள் பக்கம் திரும்பினான்.
“கொஞ்சம் யோசிச்சு பாருங்க மாமா! எனக்குன்னு யார் இருக்கா? எனக்கு என்ன வேணுமோ அதுக்காக நான் தானே போராடனும்? ப்ளீஸ் மாமா! புரிஞ்சிக்கோங்க!” என்று உடனே கெஞ்சலுக்கு தாவிய ப்ரணித்தா,
“இவலாம் உங்களுக்கு தகுதியே இல்ல மாமா! இதோ இப்பவரை உங்களுக்காக அவ என்ன செஞ்சா? சொல்லுங்க? நான் இருந்தேன்! உங்க கூடவே இருந்தேன்! என்னால தான் உங்களை நல்லா பார்த்துக்க முடியும் மாமா! இவ விட்டுட்டு போய்டுவா!” ப்ரணித்தா சொல்ல, இரு கைகளாலும் தன் வாயை இறுக்கமாய் மூடிக் கொண்ட விஜயலக்ஷ்மி கண்களில் விடாமல் கண்ணீர் வடிந்தது.
“நீ எல்லாம் என் மாமா பக்கத்துல கூட நிக்க முடியாது டி! உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு? அன்னைக்கு உன்னை நகைகடையில பார்த்துட்டு மாமா என்கிட்ட என்ன சொன்னாங்க தெரியுமா? குழந்தை அடிச்சாலும் அவங்க அம்மாவை தேடுற மாதிரி உன்னை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டாலும் மனசு கேட்கலையாம். அவங்க அம்மாவும் நீயும் அவங்களுக்கு ஒண்ணாம்! அதெப்படி ஒண்ணாக முடியும்? நீ என்ன பண்ணிட்ட?” என்று மனதில் இருந்த வன்மத்தை எல்லாம் வார்த்தைகளால் ப்ரணித்தா கொட்ட, அவையனைத்தும் அர்ஜுனின் காதல் நினைவுகள் என்பதை மறந்து போனாள் ப்ரணித்தா அந்த நிமிடம்.
“ஹே! என்ன பேசிட்டு இருக்க நீ?” என ப்ரணித்தா முன் கோபமாய் விரல் நீட்டிய அர்ஜுன், கண்களை மூடி தன்னை சமன் செய்தான்.
“இப்பவும் சொல்றேன்! உன்னை மாதிரி மனசுல ஒன்னை வச்சுட்டு வெளில ஒண்ணுன்னு நான் இருக்கவே இல்ல! எனக்குன்னு ஒரு பிரண்ட்டா ஒரு வெல் விஷரா உன்னை நான் வச்சிருந்த இடம் ரொம்ப பெருசு ப்ரணித்தா! என் தனிப்பட்ட வாழ்க்கைல இருக்குற ரகசியத்தை கூட உன்கிட்ட ஷேர் பண்ணிருக்கேன்னா உனக்கு அதோட உன்னதம் புரியல! நான் என்னோட உறவுகளுக்கு உண்மையா மட்டும் தான் இருந்திருக்கேன். என்னை பேச வைக்காத ப்ரணி!” என நிறுத்தியவன்,
“என்னை மாதிரியே யாரும் இல்லாம தனியா தவிக்குற ஒரு பொண்ணா உன் மேல அவ்வளவு அக்கறை இருந்தது. பெரிய மாமாகிட்ட உன் கல்யாண விஷயமா பேசணும்னு நானும் நினைச்சுட்டு இருந்தேன்! ஆனா நீ எனக்கு என்ன பண்ணி வச்சிருக்க?” என்றவனுக்கு எந்த உறவுமே தனக்கு நிலை இல்லையா எனும் ஆதங்கம்.
“ஏன் மாமா இவ்வளவு நாள்ல ஒரு நாள் ஒரு நிமிஷம் கூடவா இவளை வச்ச இடத்துல என்னை வச்சு உங்களால பார்க்க முடியல?” என்று ப்ரணித்தா கேட்க, அந்த கேள்விக்கே முகம் சுழித்து கண்களை மூடி முகத்தை திருப்பிக் கொண்டான் அர்ஜுன்.
“அப்பவும் எப்பவும் என் காதல் அவ மட்டும் தான்னு என்கிட்டயே சொல்லும் போது எனக்கு எப்படி இருத்திருக்கும்? அப்படி என்ன காதல்? வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போனவ மேல? நீ இல்லாமலே போய்ட்டாலும் அவளை நினைச்ச மனசுலயும் இடத்துலயும் வேற யாரையும் வைக்க முடியாதுன்னு சொல்றீங்க!” என்ற ப்ரணித்தா,
“அவ்ளோ ஒர்த் இல்ல நீ! ஒரு செகண்ட் நீ மாமா வேணும்னு எப்பவாச்சும் நினைச்சியா? அது ஏன் மாமா உங்களுக்கு புரியல?” என அர்ஜுன் விஜயலக்ஷ்மி இருவரிடமும் மாறி மாறி ப்ரணித்தா பேச, உள்ளே இதயம் கொஞ்சம் கொஞ்சமாய் நொறுங்கி பலத்தை எல்லாம் இழந்து கொண்டிருந்தது விஜயலக்ஷ்மிக்கு.
“போதும் ப்ரணித்தா! திஸ் ஐஸ் தி லிமிட்! நீ சொல்ல வேண்டியதை சொல்லிட்ட! அவ்வளவு தானே? இவ்வளவு தானா நீ? உனக்கு கொஞ்சமும் மனசுன்னு ஒண்ணு இல்லையா? எப்படிப்பட்ட சிட்டுவேஷன்ல பேசினதை எல்லாம் நீ என்ன நினைப்போட கேட்டுட்டு இருந்திருக்க? ச்சே! அசிங்கமா இருக்கு என்னை நினச்சா எனக்கே!” அர்ஜுன் சொல்ல,
“அதே சிட்டுவேஷன் தான் மாமா எனக்கும்! அன்னைக்கு கேட்டேனே வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டிங்களானு? ஈஸியா ஆமானு சொல்லிட்டிங்க! அப்போ நான் வேற என்ன பண்ண முடியும்? யார்கிட்ட போய் கேட்க முடியும்? என் காதலுக்கு குறுக்க வந்தது இவ தானே! இவ தானே அப்போ என் காதலை என்கிட்ட குடுக்கணும்?” என ஆவேசம் கொண்டு பேசிய ப்ரணித்தா,
“எங்கேஜ்மென்ட் நின்னது நின்னது தானே? எப்படி அவளை உங்களால ஏத்துக்க முடியும்? எங்கேஜ்மென்ட் நடந்தா தானே அவகிட்ட உங்க காதலை சொல்லணும்னு நீங்க நினைச்சீங்க? சொல்லவே வேண்டாம் மாமா! நான் மட்டும் தான் எப்பவும் உங்க கூடவே இருப்பேன்!” என்று சொல்ல,
மடங்கி அமர்ந்த விஜயலக்ஷ்மி வாயை மூடி இருந்த தன் கைகளை எடுக்கவே இல்லை. அத்தனை பெரிய கேவல் வெளிவர காத்திருக்க, தன் முட்டாள்தனத்தின் மொத்தமும் என அங்கே தெரியப்படுத்தப்பட்டிருந்தது ப்ரணித்தாவின் வாயிலாக.
“போதும்! இன்னொரு வார்த்தை பேசின…” என்றவன்,
“உன்னை நான் எங்க வச்சிருந்தேன் தெரியுமா ப்ரணி? மொத்தமா என்னை அசிங்கப்படுத்திட்ட இல்ல நீ? நானே என் மேல சேத்தை வாரி இறைச்சுட்டு இத்தனை வருஷமும் வாழணுமேனு நான் வாழ்ந்தது எல்லாம் உன்னோட சுயநலத்துனால! என்னோட வாழ்க்கை மொத்தமா மாறி போனதுக்கு காரணமே நீ ஒருத்தி தான்னு நினச்சா உன் மேல எனக்கு கோபம் வர்ல ப்ரணி! உன்னை அந்த அளவு நம்பின என் மேல தான் எனக்கு முழு கோபமும்” அர்ஜுன் அத்தனை நிதானமாய் வார்த்தைகளை கூற,
“இவ்ளோ சொல்றேனே! என்னை புரியலையா மாமா உங்களுக்கு? நான் வேண்டாமா உங்களுக்கு? உங்களுக்காக தான் மாமா நான் எல்லாம் பண்ணினேன்!” ப்ரணித்தா கெஞ்சியவள்,
“யாருமே இல்லாத எனக்கு நீங்க மட்டும் தானே மாமா எல்லாம்?” என சாதுவாய் மாறி பாவமாய் கேட்க, அனன்யாவே பயந்து போனாள் ப்ரணித்தாவின் இத்தகைய பேச்சினில்.
‘நொடிக்கு நொடி முகம் மாற்றும் இவளை எப்படி இத்தனை நாள் காணாமல் விட்டோம்?’ என அனன்யாவும் அதிர்ந்து தான் அமர்ந்திருந்தாள்.
“இன்னும் என்ன மாமா உங்களுக்கு? அவ தான் உங்க வாழ்க்கைல இல்லைனு ஆகி போச்சே! எல்லாம் முடிஞ்சது தானே? அப்போ என்னை ஏத்துக்கலாம் தானே மாமா?” என்ற ப்ரணித்தாவை வாயடைத்து அதையும் விட பேச முடியாதபடி வயிற்றில் ஏற்பட்ட சிறு வலியுடன் பார்த்தபடி நின்ற அனன்யா அருகே சென்று,
“நீங்க சொல்லுங்க அண்ணி உங்க தம்பிகிட்ட! நீங்க நேத்து எனக்கும் மாமாக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் பேசினீங்க தானே? இப்ப பேசுங்க எனக்காக!” என விவேக்கிடமும் சொல்ல, காலை தரையில் உதைத்து கோபம் அடங்காமல் நின்றான் அர்ஜுன்.
“ப்ரணித்தா! நீ பண்றது பேசுறது தப்பு ப்ரணித்தா! அர்ஜுன்க்கு உன் மேல லவ் இல்லைனு சொல்லும் போது நீ எப்படி கம்பல் பண்ண முடியும்?” அனன்யா சொல்ல,
“ஏன் முடியாது? யாரையாவது கல்யாணம் பண்ணி தானே ஆகணும்? அது நானா இருந்துட்டு போறேன்!” சர்வ சாதாரணமாய் அவள் சொல்ல அனன்யாவின் பயம் அதிகமானது ப்ரணித்தாவை நினைத்து.
“விஜியை அவ்வளவு பேசின நீ அர்ஜுன்க்காக என்ன பண்ணிட்ட? அவன் நம்பிக்கைக்கு துரோகம் பண்ணினதை விட்டு வேற என்ன பண்ணிட்ட நீ? இத்தனை வருஷத்துல அவன் எத்தனை தவிச்சு போயிருப்பான்னு புரியாத நீ எல்லாம் ஒரு பொண்ணா? உனக்கு ஒண்ணு வேணும்னா எந்த எல்லைக்கும் போவியா? எடுத்து சொல்ல யாரும் இல்லையே! அதனால தான் இப்படி வளந்து நிக்குறனு இப்ப கூட ரெண்டு நிமிஷம் முன்னாடி நினச்சேன்! ஆனா முழு விஷம் நீ!” அனன்யா சொல்ல,
“ப்ரணித்தா! அவனுக்கு பிடிக்கலைனா எப்படி? அதுவும் நீ என்னவெல்லாம் பண்ணிருக்க? நீ பண்ணினதெல்லாம் என்ன சாதாரண விஷயமா? ஒருத்தன் தன்னோட மொத்தத்தையும் உன்னால உன் சுயநலத்தால இழந்துட்டு நிக்குறான்! நீ பண்ணினது கிரிமினல் அஃபன்ஸ்! நீ அவனை சீட் பண்ணிருக்க!” அவள் முகத்துக்கு நேராய் விவேக் சொல்ல,
“இப்ப என்ன தான் சொல்ல வர்றிங்க நீங்க எல்லாருமா?” என கத்திவிட்டிருந்தாள் ப்ரணித்தா.
“வெளில போ!” உடனே பதில் வந்தது அர்ஜுனிடம் இருந்து.
“உன்னை இவ்வளவு நேரம் பேச விட்டதே தப்பு! ஆனா நீ பேசினதுல உன்னை விட அர்ஜுனை நாங்க புரிஞ்சிகிட்டோம்! அதுக்காக சொல்றேன்! போய்டு! உனக்கு முடிஞ்சதை நீ பண்ணு! போ!” என்றாள் அனன்யாவும்.
அதில் அதிர்ந்தாலும் ப்ரணித்தா விஜயலக்ஷ்மி புறம் திரும்ப, இன்னும் அதிர்ச்சி குறையாமல் ப்ரணித்தாவின் முழு முகத்தையும் கண்டு வற்றா கண்ணீருடன் அமர்ந்திருந்த விஜயலக்ஷ்மியிடம்,
“விஜி!” என்று பாவமாய் அழைத்து ப்ரணித்தா நிற்க, அவள் முகம் பார்த்து எழுந்த விஜி எழுந்த வேகத்தில் அவள் கன்னத்தில் ஒரு அறை வைத்தாள். அதிர்ந்து ப்ரணித்தா நின்றுவிட,
அர்ஜுன் அனன்யா இருவரும் கவனித்தாலும் தடுக்கவில்லை. தடுக்க செல்ல இருந்த விவேக் கைகளையும் பற்றிக் கொண்டாள் அனன்யா.
“உனக்கு நல்லது பண்ண தானே நான் நினச்சேன்? உனக்குன்னு ஒரு குடும்பம் அமையனும். அவங்க கூட நீ சந்தோசமா இருக்கனும்னு மட்டும் தான் நான் நினச்சேன்! என்னையே ஏமாத்தி இருக்க இல்ல நீ?” என்று மீண்டும் மீண்டும் அவள் இரு கன்னத்திலும் அறைய,
“விடு அனு!” என விவேக் சொல்லி தான் சென்று விஜயலக்ஷ்மியைத் தடுத்தான்.
“ண்ணா!” என அண்ணனின் தோள் சாய்ந்து விஜயலக்ஷ்மி கதறி அழ,
“போய்டு! இங்க முறைச்சுட்டு நின்னு என்கிட்டயும் வாங்கிக்காத! உன்னை பார்க்க பார்க்க அவ்வளவு கோவம் வருது” அனன்யா ப்ரணித்தாவை சொல்ல, அங்கே இனி தன் பேச்சை யாரும் கேட்க போவதில்லை என புரிந்தது ப்ரணித்தாவிற்கு.
அதுவும் விஜயலக்ஷ்மி அடியை நினைக்கவே இல்லை ப்ரணித்தா! மீண்டும் அர்ஜுன் பக்கம் பாவமாய் அவள் திரும்ப,
“அனு!” என்று அர்ஜுன் அழைக்கவும்,
“ப்ரணித்தா! இப்படியே போய்ட்டா உனக்கு நல்லது! இல்ல இன்னும் அனுபவிக்கனும்! இப்பவும் உனக்காக சொல்றேன்! உன் கேரக்டரை மாத்திக்கோ! இன்னும் இதே மாதிரி நினைப்போட வேற எதாவது பண்ணலாம்னு நினச்சா நாங்க சும்மா இருக்க மாட்டோம்!” என்று அனன்யா சொல்ல, அர்ஜுன் முடிவே செய்திருந்தான் இதை இப்படியே விடுவதில்லை என்று.
ஆனால் அப்படியே செல்லவா அவள் இத்தனை வருடங்கள் காத்திருந்தது? எதாவது செய்ய நினைத்தாலும் இப்பொழுது எதுவுமே முடியாது என புரிய மீண்டும் பாவமாய் கலங்கிய கண்களுடன் அர்ஜுனைக் காண, அனன்யா அருகில் சென்று திரும்பி நின்று கொண்டான் அர்ஜுன் அவள் பார்வையை சுத்தமாய் வெறுத்து.
“ஓகே விஜி!” என தங்கையை விவேக் சமாதானம் செய்ய, எதுவும் செய்ய இயலாத ஆற்றாமையோடு அவமானத்தோடு மட்டுமே அங்கிருந்து அகன்றாள் ப்ரணித்தா.
சில நிமிடங்கள் பின்பும் அந்தந்த இடத்தில் இருந்து யாவரும் அசையாமல் இருக்க, கலங்கி சிவந்த கண்களுடன் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த தங்கையை சமாதானம் செய்யும் விவேக் குரல் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாக,
“சீராட்ட வேற எதாவது வேணுமா மாமா? பாப்பா பாவம்ல?” என்ற அனன்யா கோபத்தில், வாயில் விரல் வைத்து அமைதியாய் இரு என விவேக் சைகை செய்ய,
“அப்படியெல்லாம் இருக்க முடியாது மாமா!” என்றாள் அனன்யா.
“ப்ச் அனு!” என்று யாரையும் பார்க்காமலே சத்தத்தை மட்டும் அர்ஜுன் கொடுக்க,
“நீயும் பேசாத டா என்கிட்ட!” என்ற அனன்யா,
“பைத்தியம்! பைத்தியம்! நீயெல்லாம் என்னனு டி டாக்டரான? அமெரிக்கா ரிட்டர்ன்னு பெருமை வேற!” என ஏகத்திற்கும் அனன்யா திட்ட, வாய் மூடி நின்ற விஜயலக்ஷ்மி பார்வை முழுதும் அர்ஜுனிடம் மட்டுமே!
திரும்பவே இல்லை அவன் இவர்கள் பக்கம்! நினைக்கவும் இல்லையே இப்படி ஒரு சூழ்நிலை வருமென! விவேக் என்ன நினைப்பானோ என்பதை தவிர்த்து வேறு யாரைப் பற்றிய கவலையும் இல்லை இப்பொழுது அர்ஜுனிடம்.
“அர்ஜுன்!” அருகில் வந்து விவேக் அழைக்க, அவனையும் திரும்பிப் பார்க்கவே இல்லை அர்ஜுன்.
அவன் மனநிலை புரியாதவன் இல்லையே விவேக். “சரி டா ஒண்ணுமில்ல இங்க பாரு!” என்ற விவேக் சாதாரண வார்த்தைகளில் உடைந்தவன் உடனே விவேக்கை அணைத்துக் கொண்டான்.
‘இது போதுமே!’ என்று தான் நிம்மதி கொண்டது அர்ஜுனின் மனது.
மீண்டுமாய் கண்கள் உடைப்பெடுக்க கண்கள் அகலவே இல்லை அர்ஜுனைவிட்டு விஜயலக்ஷ்மிக்கு.
‘என்னவென்று அவன் முகம் பார்க்க? அந்த தகுதி தான் தனக்கிருக்கிறதா? ம்ம்ம்ஹும்ம்! தான் அவனுக்கு சரியானவளே இல்லை!’ என்ற என்னத்தில் இன்னும் இன்னும் அழுகை கூட, ப்ரணித்தாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் நினைவில் நின்றுவிட்டது அழியாமல்.
“அனு!” என விவேக் அணைப்பில் இருந்து வெளிவந்து அர்ஜுன் அழைக்க,
“பேசாதன்னு சொன்னேன்ல? உன் மாமாவையே கட்டிக்க!” என்றவள் வயிற்றைப் பிடித்தபடி சென்று தண்ணீரை எடுத்து குடிக்க,
“என்னாச்சு டி?” என அவளருகில் சென்றான் விவேக்.
“இதுங்களுக்காக இவ்வளவு நேரமும் கால் கடுக்க நின்னேன்ல? என் பிள்ளைக்கு வலிக்காது!” என வயிற்றை வருடிக் கொண்டு அவள் ஆசுவாசமாய் அமர, மிதமான புன்னகையோடு அனன்யாவைக் கண்ட அர்ஜுனின் பார்வை மெதுமெதுவாய் அவளிடம் இருந்து நகர்ந்து விஜயலக்ஷ்மியிடம் சென்று சேர, அவள் கலங்கிய விழிகளுமே அவனிடம் சென்று சரணடைந்திருந்தது.
தொடரும்..
error: Content is protected !!