Skip to content
Post Views: 1,861
நீங்காத நினைவு நீ
அத்தியாயம் – 6
Advertisement
Advertisement
Advertisement
ஆண்டவர் கனியின் வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர்.
Advertisement
வீட்டின் வெளியில் ஏதோ சத்தம் கேட்டு அனைவரும் மெல்ல எழுந்தனர்.
யோகா யாரோ நம்ம வீட்டின் வாசலில் கத்துவதை கேட்டவள். யார் என்று கதவை திறந்து பார்க்க. ஒரு 50 வயதுடைய பெண்மணி தன் வீட்டின் முன்பாக சத்தமிட்டு கொண்டு இருந்தவரை யார் நீங்க என்று கேட்கும் முன்.
என் பொண்ண வர சொல்லு . என் பொண்ணு எங்கே என்றார்.
ஓ… திவ்யாவின் அம்மாவா.. என்று வாங்க உள்ள வாங்க என்று வீட்டிற்கு அழைத்தார்.
நான் என்ன உன் வீட்டுல விருந்து சாப்பிடவா வந்துருக்கேன். கூப்பிடு என் பொண்ணை.
நீங்க வீட்டுக்குள்ள வாங்க எதுவுன்னாலும் பேசிக்கலாம் என்று அழைத்தார்.
நான் ஏன் உள்ள வரனும். என் பொண்ணை வெளியில அனுப்புங்க. நாங்க பெத்து 23 வருஷமா ஒரு பொண்ணா வளத்து வச்சுருந்த. எவனோ ஒருத்தன் என் பொண்ண கோவிலுல வச்சு தாலி கட்டி தூக்கிட்டு வந்து இருப்பான். கூப்பிடு அவனை இன்னைக்கு அவன போலிஸ்சில் பிடிச்சு கொடுக்கிறேன்.
இங்கே பாருங்க. காலையில் பத்து மணிக்கு ஊர் கூட்டம் கூட்டி இருக்கு. அங்க வந்து பேசுங்க. தேவையில்லாம இங்கே வந்து கத்தாதீங்க. இல்லன்னா வீட்டுக்குள்ள வந்து அமைதியா பேசுங்க. இப்படி வெளியில இருந்து பேசி அசிங்க படுத்தாதீங்க என்று இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.
அம்மாவின் சத்தம் கேட்டு திவ்யா அரியா நாச்சி வெளியில் வந்து மம்மி என்று அழைக்க.
அப்படி என்ன கூப்பிடாத என்றவர். மகள் பக்கத்தில் வரவும் ஓங்கி ஒரு அறை விட்டார் கன்னத்தில் அவர் விட்ட அறையில் கீழே விழ போனவளை, கீழே விழாமல் பிடித்துக்கொண்டான் ஆண்டவர் கனி.
அவளை பிடித்துக்கொண்டவன் நேராக நிற்க வைத்து அவளின் முகத்தை பார்க்க முகமும் , கன்னமும் வீங்கி சிவந்து இருந்தது.
மகளை ஆண்டவர் கனியிடம் இருந்து பிரித்தவர். நீதானா என் பொண்ணு கழுத்தில் தாலி கட்டியது.
ஆமாம் என்றான்.
நீயெல்லாம் ஒரு மனுஷனா.
23 வருஷமா வளத்தவங்களுக்கு அவள எப்படி கல்யாணம் பண்ணி குடுக்கனுமுன்னு தெரியாதா. யாரை கேட்டு என் பொண்ணு கழுத்துல தாலி கட்டுன என்று அவனை திட்டியவர்.
மகளை பார்த்து நீ என் பொண்ணாடி. யாரோ ஒருதன் தாலி கட்டின, நீ அவன் வீட்டுல வந்து இருப்பீயா. தாலி கட்டியவுடனே, கழட்டி எறிய வேண்டியது தானே.
கழட்டுடி, அந்த தாலியை..!.
கழட்டி எறி அவன் மூஞ்சியில என்று திவ்யாவின் கழுத்தில் இருந்த தாலியை பிடுங்க வந்தார்.
தன் அம்மாவின் கோபத்தை பார்த்து பயந்தவள், யோகாவின் பின் ஒழிய.
ஏய்.. வாடி என்று மகளை இழுத்தவர். கழட்டு என்று மகளின் கழுத்தில் கை வைத்து தாலி ஜெயினை இழுக்க.
மம்மி வேண்டாமா, மம்மி, மம்மி பிலிஸ் மம்மி என்று அழுதவளை.
ஆண்டவர் கனி இதற்கு மேல் பேசாமல் இருக்க முடியாது என்று திவ்யாவை தன்னை நோக்கி வேணியிடம் இருந்து இழுத்த தன்னிடம் வைத்து கொண்டான்.
மகளை ஆண்டவர் கனி இழுத்தவுடனே, டேய் என் பொண்ண விடுடா என்று அவனிடம் இருந்து மகளை இழுந்தார்.
அவர் இழுப்புக்கு அவளை விடாமல் , இது என் பொண்டாட்டி, நீங்க அவ அம்மாவாக இருந்தாலும் இவள அடிக்க உரிம்மை இல்லை என்றவன். திவ்யாவை தன் கைஅணைப்பில் வைத்திருந்தான்.
ஏய் என்.. பொண்ண விடு என்று கோபம் கொண்டவர். மகளை வாடி என்று அவளின் தோளில் தன் கைகொண்டு அடித்தார்.
வேணியின் கணவர் கர்ணன் போலிஸ் டேஷன் சென்று. தன் மகளை கட்டாய கல்யாணம் பண்ணி விட்டான் என்று ஆண்டவர் கனியின் மீது புகார் குடுத்து போலிசை கையோடு கூட்டி வந்தார்.
போலிஸ் காரர் எவ்வளவு சொல்லியும் கர்ணன் கேட்கவில்லை, என் பொண்ணை கல்யாணம் பண்ணவனை அரஸ் பண்ணியே ஆகனும் என்று கூடவே இருந்து போலிஸை அழைத்து வந்தார்.
போலிஸ் சீப் ஆண்டவர் கனியின் வீட்டு வாசலில் வந்து நிற்றது. ஆண்டவர் கனியின் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியாகி நிற்க.
போலிஸ் சீப்பில் இருந்து இறக்கிய போலிஸ் காரருக்கு ஆண்டவர் கனிக்கு ரொம்ப பழக்கம் என்பதால். ஆண்டவரிடம் வந்து சார், அவர் உங்க மேல கம்பிளைன்ட் குடுத்து இருக்காரு.
நீங்க கொஞ்சம் டேஷன் வர முடியுமா என்று அழைத்தார்.
தலையாட்டியவன் அங்கே நின்ற அனைவரையும் பார்த்து விட்டு தன் தந்தையை பார்க்க.
நீ போ ஆண்டவர் கனி நான் நம்ம லாயர கூட்டிட்டு வர்ரேன்.
தந்தை சொல்லிற்கு தலையாட்டியன் போலிஸ்சுடன் சீப்பில் சென்றான்.
ஆண்டவர் கனி சென்றவுடன். திவ்யாவை இழுத்துக் கொண்டு காரில் ஏறியிருந்தார் வேணி.
யோகா திவ்யாவை தடுத்தும். வேணி மகளை அழைத்து சென்று விட்டார் நளினியின் வீட்டிற்க்கு.
நளினி வீட்டின் முன் கார் வந்த நின்றது.
வேணி தான் வருகிறாள் என்று நினைத்து எதிர் பார்த்து இருக்க.
இவர்கள் இருவரும் ஆண்டவர் கனி வீட்டிற்க்கு சென்று திவ்யாவை அழைத்து வந்ததை பார்த்தவர், என்ன வேணி அங்கே போய் பிள்ளையை கூட்டிட்டு வந்தீயா.
ஆமா அண்ணி.
மகளை பார்த்தவர் முதல்ல அந்த தாலியை கழட்டி எறி என்று மகளிடம் வந்தார்.
கர்ணன் பொறுமையா இரு போலிஸ் டேஷனுல இருந்து வர சொல்லி கூப்பிடுவாங்க அங்க போய் கழட்டி கூடுத்து எல்லாத்தையும் முடிச்சுருலாம்.
நீங்க சும்மா இருங்க இவளை அந்த தாலியோட பார்க்க எனக்கு கோபமா வருது.
போலிஸ் டேஷனுக்கு லாயரோடு ராமாசுப்பு சென்றார் , மகனை டேஷனில் வைத்து பார்க்க முடியவில்லை அவரால்.
லாயர் டேஷனில் உள்ள போலிஸிடம், எப்படி கம்புளைன்ட் குடுத்து இருக்காங்க.
போலிஸ்காரர் லாயரிடம் விசயம் ரொம்ப சீரியஸ் பொண்ணோட அப்பா டெல்லியில உள்ள ஒரு பெரிய அதிகாரிகிட்ட சொல்லி இருப்பார் போல, ரொம்ப பிரஷ்சர் பண்ணுறாங்க ஆண்டவர் கனியா உள்ள தூக்கி வைக்க,
ஆண்டவர் கனியின் மீது சம்மதம் இல்லாம தாலி கட்டுனது, பொண்ண தூக்கிட்டு போனது, கடுத்தல் கேசுன்னு, நிறையா விசயத்தை பைல் பண்ணி கேஸ் போட்டு இருக்காங்க.
நம்ம ஒன்னும் பண்ண முடியாது. அந்த பொண்ணு வந்து, நான் விருப்பட்டு தான், அவர கல்யாணம் பண்ணேன்னு சொல்லனும் இல்லனா, ஆண்டவர்கனி ஜெயிலுக்கு போறது கன்பாம். நம்ம ஒன்னும் பண்ண முடியாது.
லாயர் ராமாசுப்புவிடம், கேஸ் ரொம்ப ஸ்டாங்கா போட்டு இருக்காங்க. நீங்க ஆண்டவர் கனி கல்யாணம் பண்ண பொண்ண வர சொல்லி , நான் அவர விருப்ப பட்டு தான் கல்யாணம் பண்ணேன்னு சொல்ல சொல்லுங்க இல்லானா கனியை உள்ள தூக்கி வச்சுருவாங்க, முதல்ல போயி அந்த பொண்ணுகிட்ட பேசி டேஷனுக்கு அழைச்சுட்டு வாங்க.
சரி என்ற ராமாசுப்பு. உடனே யோகாவை போனில் அழைத்து விசயத்தை சொல்ல.
பயந்து போன யோகா,சரி மாமா நான் உடனே திவ்யாவை பார்த்து பேசி போலிஸ் டேஷனுக்கு அழைச்சுட்டு வர்ரேன்.
தன் அக்கா லட்சுமியிடம் சென்றவர். பயபட ஒன்னும் இல்லைக்கா நான் போயி ஆண்டவரை அழைச்சுட்டு வர்ரேன். நீ வீட்ட பாத்துக்கோ.
மகனை போலிஸ் காரர்கள் அழைத்து சென்றதில் இருந்து வருத்தத்தில் இருந்தவர். தங்கை சொன்னவுடன் தான் நிம்மதி ஆனார்.
யோகா நளினியின் வீட்டுக்கு வந்து அவர்களின் வீட்டு காலிங் பெல்லை அடித்தார்.
ஸ்ரீ ஜெயம் காலிங் பெல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார்.
யோகா நின்று இருப்பதை பார்த்தவர் வாங்க என்று வீட்டினுள்ளே அழைத்தார்.
அங்கே நளினியின் வீட்டில் பெரிய சண்டை நடந்து கொண்டு இருந்தது.
யோகாவை பார்த்த நளினி வாங்க என்று தலையசைத்தார்.
வேணி யோகாவை பார்த்து , நீங்க ஏன் இங்க வந்தீங்க, வெளியே போங்க என்று சத்தமிட.
ஸ்ரீ ஜெயம் பார்த்து பேசு வேணி அவங்க உன் பொண்ணோட வீட்டு ஆளுங்க.
யாரு என் பொண்ணோட வீட்டு ஆளுங்க.
நான் சொல்லுறத கேளு வேணி, ஆண்டவர் கனி நல்ல பையன் தான். உன் பொண்ண நல்லா பாத்துப்பான். நல்லா யோசி, பொண்ணோட வாழ்க்கையை பாரு, கோவிலுல வச்சு தாலி கட்டி இருக்கான். எல்லாம் விதி மா புரிஞ்சுக்கோ பார்த்து பேசு.
யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன், என்று பிடிவாதமாக இருந்தார்.
error: Content is protected !!