மாணிக்கை வெளியே கட்டி கோவிலின் முன் குதித்திறங்கிய இளந்திரையன் வீரனாட்டம் போட்டவாறு கோவிலுக்குள் சென்றான். கோவிலில் அவனை வைஷ்ணவி தேவி முன் அமர வைத்தனர். அவன் அமரவும் மதுரவீரன் சிலையை தூக்கி வந்து அவரை வைஷ்ணவி தேவியம்மன் முன் வைத்தனர்.
Advertisement
அக்சராவுடன் வந்து கொண்டிருந்த சுப்ரியாவை கத்தியால் ஒருவன் குத்த வந்தான். சறுக்கிக் கொண்டு வந்த மகேஷ் பாண்டியன் குத்த வந்தவன் கையை குத்த விடாமல் பிடித்தான். சுப்ரியா மூச்சை இழுத்து பிடித்து நின்றாள்.
“மகி” அவன் அண்ணன் சத்தமிட்ட, அவனை பின்னிருந்து ஒருவன் கட்டையால் அடிக்க வந்தான். சக்தி கொடுத்த உதையில் அவன் கீழே விழுந்தான்.
Advertisement
Advertisement
சுப்ரியாவை குத்த வந்தவன் கையில் ஓங்கி அடித்தான் சத்யா. வலியில் அவன் கத்த, கத்தி கீழே விழுந்தது. மகேஷ் பாண்டியன் கையை விட்டான். அவர்களை பதினொரு ஆட்கள் சுற்றி நின்றனர்.
எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ராதிகா, அக்சரா, சுப்ரியாவை சுற்றி கேடயமாக சத்யா, சக்தி, மகேஷ், ராஜபாண்டி, சக்தி ஆட்களில் இருவரும் நின்றனர். அனைவரும் எல்லாருடனும் சண்டையிட்டனர்.
Advertisement
கொலை செய்ய வந்தவர்களில் ஒருவன் பெண்களிடம் செல்ல, அக்சராவும் சுப்ரியாவும் பார்த்துக் கொண்டு அவர்களும் களத்தில் இறங்கினர். ராதிகா பெண்களை ஆச்சர்யமாக பார்த்தார். ஆனால் மனதில் சிரித்தவாறு, “இளா குடும்பத்து பெண்கள்ன்னா சும்மாவா?” எண்ணினார்.
செழியனும், அவ்வூரில் வசிக்கும் ராசு போன்றவர்களும் அங்கே வந்தனர். ராசு ஆட்கள் உதவ கொலை செய்ய வந்தவர்கள் ஓடி விட்டனர்.
“இங்க வரலையேப்பா” ராதிகா சொல்ல, “ஆன்ட்டி..இவங்கள பார்க்க தான் வர்றதா சொன்னா. இன்னுமா வரவில்லை” பதட்டமுடன் கேட்டான். எல்லாரும் வைஷ்ணவியை தேடத் தொடங்கினர்..
கோவிலில் தேவிக்கு பூஜை நடந்து கொண்டிருக்க, குதிரை மாணிக் காலை தூக்கி கனைத்துக் கொண்டே இருந்தது. மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
மாணிக்கை கவனித்துக் கொள்பவர் அங்கே வந்து அவனை அமைதிப்படுத்த முயன்றார். நேரம் ஆக ஆக அவனின் கனைப்பு அதிகமானது.
பிரச்சனை என்று தீரன் உணர்ந்து அதே மதுரைவீரன் வேடத்தில் எழுந்தான். அனைவரும் அதிர, “பூசாரியோ..வீரா இந்த நேரம் எங்கும் போகக் கூடாது. நம்ம தேவியை வீதிஉலா அழைத்து செல்லணும்” மதுரவீரனிடம் பேசுவது போல பேசினார்.
“அங்க யாரோ பிரச்சனையில இருக்காங்க. நான் போய் வருகிறேன். தேவி மக்களை காப்பாற்ற தான் செல்கிறேன் என்றால் சினம் கொள்ள மாட்டார். சீக்கிரம் வருகிறேன்” என்று இளந்திரையன் காலடி தரையில் இடியாய் இறங்கியது.
குதிரை அருகே வந்த மதுரவீரனை பார்த்ததும் அடங்கினான் மாணிக். காலை தூக்கி வணக்கம் கூறி பணிந்தான். அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.
“தீரா” அவன் தோளில் கை வைத்து, இளவேலன் சத்தமிட்டார்.
அவரை உக்கிரமாக பார்த்த பார்வையில் அவர் மிரண்டு கையை இழுத்துக் கொண்டார்..
“வீரன்…மதுரைவீரன்” மீசையை முறுக்கி விட்டு குதிரையில் தாவி ஏறினார் இளந்திரையன் மீது வந்த மதுரைவீரன்.
“மதுரைவீரா” அனைவரும் கோசமிட, “மதுரைவீரனே போற்றி போற்றி.. மதுரவீரனே போற்றி போற்றி..” பக்தியில் சத்தமிட்டனர். குதிரையில் ஏறி ஒரு கையால் கயிற்றை பிடித்து குதிரையை ஓட்ட, மாணிக் ஓடவில்லை. பறந்தான் என்றே சொல்லலாம்.
அதிர்ந்த நின்ற இளவேலனிடம் வந்த பூசாரி, “பிரச்சனையை வீரன் முடித்தவுடனே இந்த தீர்த்தத்தையும் விபூதியையும் பூசி விடுங்க” என்று அவர் கையில் கொடுத்தார். அவர் மாறனை பார்க்க, அவர்களிடம் வந்த இளைஞர்கள் பைக்கை செலுத்தி சிரமப்பட்டு வீரனை குதிரை கால்தடத்தை வைத்து பின் தொடர்ந்தனர்.
“மதுரவீரன் வர்றார். வழி விட்டு நில்லுங்க” பெரியவர் ஒருவர் மைக்கில் சொல்ல, மக்கள் வழிவிட்டு நின்றனர். குதிரையில் வரும் இளந்திரையனை பார்த்து செழியன் குருவிடம்..
“இப்பொழுது வீதி உலா தான நடக்கணும்”
“ஆமாப்பா” என்று அருகே இருந்த பெரியவர் இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட பூஜை நடக்கும் நேரம் ஊருக்குள் இவ்வளவு ஆக்ரோசமாக வீரன் சென்றதில்லை. இதை பார்க்க மதுரைவீரன் தன் இரண்டாம் மனைவியை கொள்ளைக்கார கும்பலிடமிருந்து காப்பாற்றியது தான் நினைவுக்கு வருகிறது என்றார்.
இரண்டாம் மனைவியா? அக்சரா அவரிடம் ஓடி வந்தாள்.
ஆமா, கொள்ளைக்கார கும்பலிடமிருந்து வீரன் தான் வெள்ளையம்மாவை காப்பாற்றினார். அதனால் வெள்ளையம்மாவுக்கு வீரன் மீது காதலுற்று வீரனை திருமணம் செய்து கொண்டாள்.
அக்காவும் இல்லை. “மாமா” செழியனை சுப்ரியா அழைக்க, பைக்கில் இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். மாறனும் பைக்கில் முன்னே வேகமாக செல்ல அவன் பின் இளவேலன் கையில் பொருட்கள் சிலதை வைத்திருந்தார்.
“நம்ம வைசு தான்னு நினைக்கிறேன்” செழியன் குருவிடம் சொல்லி ஓட, “நாங்களும் வாரோம்” என்று மற்றவர்களும் ஓடினார்கள். சத்யா புரியாமல் நின்று கொண்டிருந்தான்.
“சத்யா..போ..உன்னோட உதவி அவங்களுக்கு தேவைப்படலாம். வீரன் என்றும் இவ்வளவு ஆக்ரோசமாக ஊருக்குள் வந்ததில்லை. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகுது” ராதிகா தன் மகனை பார்த்தார்.
சக்தி இருவரையும் பார்த்தான். அவன் மனதில் “இவங்களுக்கு வீரனை பற்றி தெரியுமா?” எண்ணினான்.
சத்யாவை பார்க்க வந்த மோகன் கோவிலில் நடந்ததை கூறி, “எங்க குலசாமி மதுரவீரன் தான்டா அண்ணா மேல இருக்கார். அவர் இளவேலன் அய்யாவை பார்த்த பார்வை இருக்கே! அவர் அரண்டே போயிட்டார். இன்னிக்கு எவன் தலை மண்ணுல விழப் போகுதோ!” பதட்டமுடன் சொன்னான்.
இத்தனை வருடத்தில் நான் அவரை பார்த்ததேயில்லைடா. இன்று அண்ணா கண்ணில் இருந்த தெறிக்க விடும் பார்வை.. ஹப்பா..புல்லரிக்குது. அவர் தான் வந்திருக்கார். பிரச்சனை பெரியதாக தான் இருக்கணும். எல்லாரும் அப்படி தான் பேசிக்கிறாங்க.
எல்லாரும் கிளம்பினார்கள்.
ஊரார் பாதி ஆட்கள் அவர்கள் வீரனை தேடி சென்று கொண்டிருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் யாராலும் நகர முடியவில்லை. இளவேலன் கையிலிருந்த பொருட்களோடு நடக்க, அவரால் மட்டும் தான் நடக்க கூட முடிந்தது. எல்லார் காலிலும் பிசின் ஒட்டியது போல கால்கள் தரையோடு ஒட்டிக் கொண்டன. எல்லாரும் அங்கங்கு நின்று கொண்டிருந்தனர்.
சுப்ரியாவோ செழியனிடம், “வீரன் பிசின் பேக்டரி ஏதும் நடத்திட்டு இருக்காரோ!” விளையாட்டாக பேச, இளைஞர்கள் சத்தமிட்டனர். அவள் பயந்து பொத்தென கீழே விழுந்தாள்.
“குட்டி பொண்ணு, உனக்கு தேவையா?” ராஜ பாண்டி கேட்க, அனைவரும் அவனை முறைத்தனர்.
“போங்கடா” என்று அங்கிருந்த கல் ஒன்றில் கால் மீது கால் போட்டு அமர்ந்தான்.
“இந்த பசங்களை ஊருக்குள்ள விட்டதே தப்பு” ஒருவர் சொல்ல, மகி ஏதும் பேசாமல் அவன் அண்ணனை பார்த்தான்..
இளவேலன் வருவதை பார்த்த சத்யா, “உள்ளே அகில் கூட இருக்க வாய்ப்புள்ளது” என்று எண்ணி அவர் அருகே வரவும் அவர் கையிலிருந்து அப்பொருட்களை பறித்து அவன் நடக்க, “ஏலேய்” அவர் சத்தமிட்டார். ஆனால் அவரால் நகர முடியவில்லை.
செழியனிடம் பேசி விட்டு இளந்திரையனின் எண்ணத்துடன் அவனை பார்த்த நாளிலிருந்து நடந்ததை நினைவுபடுத்தியவாறு புன்னகையுடன் நடந்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி. அவன் எண்ணத்தில் வழி மாறி சென்று விட அங்கு ஆட்களே இல்லை என்பதை நேரம் கழித்து தான் உணர்ந்தாள்.
தன் தலையில் தட்டிக் கொண்டு சிரிப்புடன் திரும்பினாள். அவள் முன் ஒருவன் கையை கட்டிக் கொண்டு நின்றான். அவள் முகம் மாறியது. அவள் அவனை விட்டு தள்ளி நகர, அவன் அவளது பாதையில் நகர்ந்து நகர்ந்து நின்றான். அவனை முறைத்து விட்டு வைசு நகர எண்ணம் கொள்ள, அதற்குள் அவன் அவளது வாயை பொத்தி தூக்கினான்.
“அவளால் தான் பேச முடியாதே!” முணங்கினாள். அவனை அடித்தாள். ஏதும் அவனை செய்ய முடியவில்லை. அவன் ஒரு ஊர் எல்லையில் இருந்த குடிலுக்குள் அவளை தூக்கிச் சென்று கட்டிலில் பொத்தென போட்டான். அவள் பதறி எழுந்து ஓட முயன்றாள். அவன் வைசுவின் இடையை இழுத்து தூக்கி கட்டிலில் போட்டு, அக்குடிலை சாத்தினான்.
வைஷ்ணவி அழுதாள்.
ஷ்”..ஷ்…எதுக்கு இப்ப அழுற? உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன். ஆனால் இன்றிரவு மட்டும் என்னுடன் இரு போதும்”.
அவள் வாயசைப்பதை கூர்ந்து கவனித்துக் கொண்டே, சிகரெட்டை பற்ற வைத்து வாயில் வைத்து ஊதியவாறு அவளருகே வந்தான். அவள் பயந்து ஓடினாள். அவளது புடவையின் முந்தானையை கால்களால் மிதித்தான். அவள் அதனை கவனிக்கவில்லை.
வைஷ்ணவி ஓடவும் அவளது முந்தானை அவிழ்ந்து கீழே விழுந்தது. விறுவிறுவென அதை இழுத்து முகர்ந்தான் அவன். வைஷ்ணவி மார்ப்பை தன் கைகளால் மறைத்து கண்ணீருடன், “என்னை விட்ரு” சைகையில் கூறி அழுதாள்.
“விடணுமா? அதுக்கா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்தேன்? இன்றிரவு மட்டும் போதும்” சிகரெட்டை ஊதித் தள்ளினான்..
“நான் போகணும்” அவள் அழுதாள்.
பயங்கர சிரிப்புடன், “நீ போக முடியாது. யாருக்கும் இங்கு குடில் இருப்பதே தெரியாது. உன்னை தேடினாலும் யாராலும் கண்டறிய முடியாது. ஏன்னா நாம இருப்பது பெரிய புதரை தாண்டி. புதர் அருகே வந்தால் கூட பெரியதாக ஏதும் தெரியாது”.
“தீரன் வந்திருவாரு” அவள் உதட்டை அசைக்க, “வார்ரே வா, தீரன் வருவானா? அவனை பற்றி உனக்கு என்ன தெரியும்”? ஏளனமாக கேட்டான்.
அவர் என்னை தேடி வருவார். அவரிடம் தஞ்சம் புகுந்த யாருக்கும் எந்த தீங்கும் வர விடமாட்டார். அவர் பரிசுத்தமானவர்.
கலகலவென அவன் சிரிக்க, அவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.
அவன் பரிசுத்தமா, “நீ கேள்விப்படவில்லையா? அவனுக்கு இரண்டு தாரம்”..
வைஷ்ணவி மனம் பிசைந்தது. அதனை காட்டிக் கொள்ளாமல் “அதனால என்ன? யாராக இருந்தாலும் உதவ வருவார்”.
தீரன் ரொம்ப பிஸியாக இருப்பான். உனக்கு அவனை பற்றி தெரியவில்லை. அவன் காலை எழுந்து தினமும் கோவிலுக்கு வந்து மதுரவீரனையும் தேவி அம்மாவையும் வணங்காமல் எந்த காரியமும் செய்ய மாட்டான். ஏன்னா இரண்டும் அவனோட குல தெய்வங்கள்.
பின் வீட்டிற்கு சென்று உண்டு விட்டு, உடனே தன் வேலையை பார்க்க கிளம்பி விடுவான். மதியம் கூட வீட்டிற்கு செல்ல மாட்டான். இரவும் ஊரை பாதுகாக்கிறேன் என்று நடுஜாமத்துல்ல தான் வீட்டுக்கு செல்வான். பாவம் அவனது தம்பிகள். அவன் வளர்த்தான்னு அவனே ஊருக்குல்ல ஆட்களை வைத்து பெருமை பேச வச்சுப்பான். அவன் படிக்கலைன்னு சொன்னது அவனுக்கு படிப்பு வரவில்லை. அவன் என்னை விட மோசமானவன்..
அவர் மோசமானவர் இல்லை.
இல்லையா? இல்லையா? பயங்கரமாக கத்தினான் அகிலரசன்.
வைஷ்ணவிக்கு பயம் பிடிக்க, அவரு இப்ப சாமியா இருக்காரு. நீங்க ஏதாவது செய்தால் அந்த பாவம் உங்களுக்கு வந்திரும்.
“எது பாவம்? உன்னை…” அவன் சொல்லும் முன் கதறி அழுதாள்.
“ஷ்..ஹப்பா..அதெப்படி பொண்ணுங்க நடக்குறதுக்கு முன்னாடி இப்படி டிராமா பண்றீங்க?” என்றவன் விளக்கை அணைத்து அவளை கட்டியணைக்க வந்தான்.
அவள் கதற, அவளது சட்டை கிழியப்பட்டது.
வைஷ்ணவி சீற்றமுடன் அவன் கையை கடித்து விட, அவன் அலறினான். அப்பொழுது தான் மதுரவீரன் அப்புதர் அருகே வந்தார்.
சத்தம் கேட்டு நின்றார். சத்யா அவ்விடம் ஓடி வந்தான்.
“எவ்வளவு தைரியம் இருந்தா கடிப்ப?” கும் இருட்டில் அவளை இழுத்து ஓங்கி அறைந்தான். வைஷ்ணவி வாயிலிருந்து இரத்தம் வடிய கீழே விழுந்து அவளுக்கு தலையில் அடிபட்டது.
மீண்டும் அவள் மீது பாய்ந்து அவளை அடக்க முயன்றான். அவள் கத்த முயன்றாள்.
“உன்னால தான் பேசவே முடியாதே! அப்புறம் எதுக்கு கத்த முயற்சி செய்ற? கொஞ்ச நேரம் தான்”
இல்ல..இல்ல..தலையசைத்த வைஷ்ணவிக்கு இளந்திரையன் “குழந்தைக்காக பேச முயற்சி செய்” என்று கூறிய எண்ணம் வந்தது. “அம்மா” சொல்ல முயன்றாள். அவன் புன்னகைத்தான்.
மா..மா..சத்தம் மெலிதாக அவளுக்கு மட்டும் கேட்கும் படி இருந்தது..
அதே நேரம் சத்யா மதுரவீரன் பிரச்சனையை சரி செய்யும் முன்னே அவர் மீது தீர்த்தத்தை ஊற்றி, அவர் நெற்றியில் விபூதி பூசி விட்டான். அப்படியே நின்ற மதுரவீரன் சென்று இளந்திரையனாக மாறினான்.
புரியாமல் இளந்திரையன் அவன் நிற்கும் இடத்தை பார்க்க, அவன் முன் வந்த சத்யா நடந்ததை கூறினான்.
“சொன்னேன்ல்ல!” சத்யா லைட்டரை ஆன் செய்து, அச்செடி கொடிகள் படர்ந்த புதரின் வழியே வைத்துக் கொண்டே சென்றான். புதர் பற்றி எறிந்தது. இருவரும் எகிறி உள்ளே குதித்தனர்.
அவனோ வைசுவை அடையும் கடைசி நொடியில் மா..மா..மா..மா..திக்கிக் கொண்டிருந்த வைஷ்ணவி மாமா..மாமா..உரக்க கத்தினாள்.
இளந்திரையன் அதிர்ந்து நின்று விட, சத்யா சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான். குடிலை பார்த்தான். தீரன் தன் கையிலிருந்த அரிவாளை இறுக பற்றி, சீற்றமுடன் அக்குடிலை நெருங்கி தள்ளிக் கொண்டு உள்ளே விழுந்தான். அவ்வறையின் இருட்டை பார்த்து சத்யா சன்னல் திறந்தான்.
அங்கே யாருமில்லை. பெண்ணின் அழும் குரல் மட்டும் அதிகமாக கேட்டது.
இளந்திரையன் உள்ளே வந்து விழவும் அவன் பின் பக்கமாக ஓடி விட்டான். வைஷ்ணவி உடலை மறைத்தவாறு ஓர் மூலையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
“யாரு? வெளிய வாங்க. நாங்க தான். உங்களுக்கு ஏதுமில்லை” சத்யா கூற, விரைந்து எழுந்தான் இளந்திரையன்.
“சத்யா நில்லு..” இளந்திரையன் கத்தினான். அவன் குரல் கேட்டவுடன் தான் வைஷ்ணவி அழுது கொண்டே எழுந்தாள்.
சத்யா திரும்பிக் கொள்ள, தீரன் கண்ணை மூடினான். அவன் இருப்பது மதுரவீரனாக. வீரன் எந்நிலையிலும் அழக் கூடாதல்லவா?
வைஷ்ணவி அழுது கொண்டே இளந்திரையனை வந்து அணைத்துக் கொண்டாள். அவன் அதிர்ந்து அவளை நகர்த்தி பின் நகர்ந்தான்.
அவளது உள்ளாடை வெளியே தெரியுமாறு கிழிந்திருந்த சட்டையை பார்த்து அவளும் திரும்பிக் கொண்டாள். புடவையை எடுத்து எந்த உணர்வையும் காட்டாது இளந்திரையன் அவளிடம் கொடுத்தான். புடவையை வாங்கி அவளை சுற்றிக் கொண்டு இளந்திரையனை பார்த்தாள்.
அவளது தலை, உதட்டின் ஓரத்தில் இரத்தம் வழிந்திருப்பதை பார்த்து இளந்திரையன் மனம் கொதித்தது. அதை பார்த்த வைஷ்ணவி மீண்டும் அவனை நெருங்க, “அவரு இப்ப சாமியா உங்க முன்னாடி நிக்குறாரு” சத்யா கூறினான். வேகமாக பின்னே நகர்ந்தாள் கண்ணீருடன்.
இளந்திரையன் அவளை பார்த்துக் கொண்டு, “உங்களுக்கு ஒன்றுமில்லை. தாமதாக நான் வரவில்லைன்னு நம்புகிறேன்”.
ம்ம்..என்றாள்.
இளந்திரையனுக்கு அவள் மாமா என்றது நினைவிற்கு வரவும் சத்யா காதில் ஏதோ கூறி வெளியே வந்தான்.
வைஷ்ணவி அவன் பின் செல்ல, இடைமறித்த சத்யா, “நீங்க கொஞ்சம் நேரம் இருங்க. கார் வந்த பின் போகலாம். இப்ப உங்க தங்கைகள் மட்டும் வருவாங்க” வெளியே வந்தான்.
மதுரைவீரன் இளந்திரையன் உடலில் இருந்து செல்லவும் எல்லாம் பழைய நிலைக்கு திரும்பியது. இளந்திரையன் அக்குடிலை விட்டு வெளியே வரவும், இளவேலனும் மற்றவர்கள் வரவும் சரியாக இருந்தது.
“வீரா” அவர் அழைக்க, தீரன்…இளந்திரையன்.
“எப்போதும் காட்டிற்குள் குதிரையில் செல்லும் போது மட்டும் வரும் மதுரவீரன்” தன்னவளை காக்க இறங்கி வந்துட்டார்ன்னு அவனுக்குள் மகிழ்ச்சி.
நீங்க எல்லாரும் கோவிலுக்கு போங்க. எல்லா பிரச்சனையையும் மதுரவீரன் முடித்து வச்சிட்டார்.
“உள்ள யாரு இருக்கா தீரா?” இளவேலன் கேட்க, சத்யா வெளியே வந்தான்.
இளவேலன் சினமுடன் சத்யாவை அடித்து விட, கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ராதிகா தன் மகனுக்காக என்று எதையும் சிந்திக்காமல் வந்து சத்யா முன் நின்றார். இளவேலன் அதிர்ந்து அவரை பார்த்தார்.
அவரை பார்த்து பேச முடியாமல் தன் மகனை பார்த்தார் ராதிகா.
“சார், நான் அன்று சொன்னேன்ல்ல? உங்க பள்ளிக்கு ஆசிரியராக என்னோட அம்மா டிரான்ஸ்பர் ஆகி வர்றாங்கன்னு. இவங்க தான். ராதிகா”.
“ராது…உன் மகனா?” என்றவர் சிந்தனை அவர்களின் காலத்திற்குள் செல்ல நிகழ்காலத்திற்கு வந்தவர் “மகனா?” கலவரம் நடந்த போது பிறந்த மாறன் பள்ளிப்படிப்பையே முடிக்கவில்லை. இவன் போலீஸ்ன்னா.. “ராது எனக்கு துரோகம் செய்திருக்காளா?” அவர் சிந்தித்தார்.
“சித்தப்பூ” செழியனும் மாறனும் அவரிடம் வர, அக்சரா இருவரையும் பார்த்துக் கொண்டே வந்தாள்.
விரக்தியுடன் அவர் ராதிகாவை, ஏமாத்திட்டீயே!” என்பது போல பார்த்து வைத்தார். ராதிகா டீச்சரின் மனம் சுக்குநூறானது. சத்யாவிற்கோ சீற்றம் பிறந்தது.
மாறனிடம் வந்து இளந்திரையன் சொன்னதை கூறி விட்டு அவன் தன் தாய் கையை பிடித்து இழுத்து சென்றான்.
இளந்திரையன் மாணிக் மீது ஏறி அம்மனுக்கு காவலாக வீதிஉலா செல்ல புறப்பட்டான்.
“அண்ணா, நீ இவங்களோட இரு. நான் வீட்டிற்கு சென்று கார் எடுத்துட்டு வாரேன்” சொல்லி பைக்கை எடுத்தான் மாறன்.
“இங்க இருக்கணுமா? இங்க என்ன நடக்குது?” சுப்ரியா கேட்டுக் கொண்டே குடிலுக்குள் சென்றாள். வைஷ்ணவியை கிழிந்த ஆடையுடன் பார்க்கவும் கதறி விட்டாள். அவள் சத்தத்தில் இளவேலன், அக்சரா, செழியன் உள்ளே சென்று வைஷ்ணவியை பார்த்து அதிர்ந்தனர்.
கிழிந்த ஆடையுடன் தலைமுடிகள் கலைந்திருக்க, கண்கள் சிவப்பாகி அழுது வீங்கி இருந்தது.
“யாருக்கா?” அக்சரா அவளை கட்டிக் கொள்ள, தன் தங்கைகளை கட்டிக் கொண்டு கதறிவிட்டாள் வைஷ்ணவி.
“யாருன்னு சொல்லும்மா? இப்பவே அவன் தலையை மண்ணுல உருள விடலாம்” இளவேலன் இருந்த சினத்தில் மேலும் கர்ஜித்தார்.
தெரியல..அவன் யாருன்னு தெரியல.
அக்சராவிற்கு அகில் மீது தான் சந்தேகம் வந்தது.
“போதும்மா. நம்ம வீட்டுக்கு வந்திரும்மா” கண்கலங்க இளவேலன் அவளை அழைத்தார்.
“நாங்க வாரோம்” என்றாள் அக்சரா சினமுடன்.
“கொஞ்சம் யோசித்து பாரு வைசு. யாருன்னு சொல்லு?” செழியன் கேட்க, “அவளை விடுங்க” அக்சரா கூறி விட்டு வைஷ்ணவி அருகே அமர்ந்து கொண்டாள். அவள் மடியில் வைஷ்ணவி படுத்துக் கொண்டாள்.
மாறனிடம் சத்யா, வீட்டிலிருக்கும் குழந்தையை இங்கே அழைத்து வந்து அதனுடன் எல்லாரையும் கோவிலுக்கு அழைத்து வர சொல்லி விட்டு, வைஷ்ணவியும் குழந்தையும் மட்டும் கீழே இறங்கக் கூடாது என்றும், அவளது ஆடை ஒன்றையும் வீட்டிலிருந்து பொண்ணு உதவியால் எடுத்து வர சொல்லி சென்றிருந்தான். மாறன் வீட்டிற்கு தான் சென்று கொண்டிருந்தான்.
மாறன் பைக்கில் வீட்டிற்கு செல்லும் போதே, “ஒரு பொண்ணை கற்பழிக்க எவனோ முயன்றிருக்கான். நம்ம மதுரவீரனே வந்திருக்கார் அந்த பொண்ணை காக்க..”என்று பேசி செல்வதை கேட்டு அவனும் “யாராக இருக்கும்? வைஷ்ணவி ஆடை எதுக்கு அவங்க எடுத்து வரச் சொன்னாங்க?” சிந்தித்துக் கொண்டே வீட்டிற்கு சென்றான்.